499 views

சுடர் 18

 

அஷ்வின் முதல் நாள் இரவில் கூறியதை போல மாயாவை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்காக காலையிலேயே கிளம்பி விட்டான்.

இதுவும் ஒரு காரணமாக இருந்தாலும், முக்கிய காரணம் என்னவோ அஷ்வினியிடம் இருந்து தப்பிப்பது தான்.

எதோவொரு நினைவில் முதல் நாள் மாயாவை காதலித்ததை உளறியிருந்தான். இப்போது அஷ்வினிக்கு தன்னிடம் வினவ எக்கச்சக்க கேள்விகள் இருக்கும் என்று நன்கறிவான் அஷ்வின். காலையிலேயே அவளை சமாளிக்கும் தெம்பு அவனிடம் இல்லை என்பதாலும், அவளின் கேள்விகளுக்கான பதிலை யோசிக்கவும் காலவகாசம் வேண்டுமென்பதாலும் தான் சீக்கிரம் கிளம்பியிருந்தான்.

அவனின் உடன்பிறந்தவள் எழுவதற்கு முன்பே மாயா எழுந்திருந்தது அவனிற்கு சாதகமாக அமைந்தது.

தன் தாய் தந்தையிடம் முழுதாக கூறாமல், அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதாகவும், மாலையில் வந்து விரிவாக பேசுவதாகவும் சமாளித்துவிட்டு கிளம்பியிருந்தனர் மாயா மற்றும் அஷ்வின்.

மாயாவுடன் செல்வதால் தந்தையின் மகிழுந்தையே எடுத்திருந்தான். மாயா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருக்க, அஷ்வினிற்கு தான் பழைய நினைவுகள் மனக்கண்ணில் வந்து அவனின் ரணத்தை கீறிக்கொண்டிருந்தன.

அதற்கு காரணமான உடன்பிறந்தவளை மனதிற்குள் திட்டவும் மறக்கவில்லை!

அஷ்வினின் தோழன் வேலை செய்யும் மருத்துவமனையில் தான் மாயாவிற்காக முன்பதிவு செய்திருந்தான்.

அந்த மருத்துவமனைக்குள் சென்றதும், அஷ்வினின் நண்பனிடம் தகவல் பகிர, அவனே வந்து இருவரையும் அந்த மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்றான்.

மாயா, அந்த அறைக்குள் செல்ல தயங்க, அஷ்வின் தான் அவளை சமாதானப்படுத்தி அறைக்குள் அனுப்பி வைத்து, அவன் வெளியிலேயே நின்று கொண்டான்.

அப்போது அவனருகே வந்த மருத்துவ நண்பனான ரோஹித், “அஷு, இவங்க தான் நீ சொன்ன மாயாவா?” என்று வினவினான்.

இந்த ரோஹித்திற்கு மட்டும் தான், அஷ்வின் மாயாவை காதலித்த விஷயம் தெரியும். அதுவும், சாகர் மாயா காதல் விஷயம் அறிந்த பின்னர், அஷ்வின் சோகமே உருவாய் இறுகிப்போயிருக்க, அதன்பின்னர் ரோஹித் தான் தோண்டி துருவி அதற்கான காரணத்தை அறிந்து கொண்டு, அஷ்வின் அதிலிருந்து மீள உதவினான்.

அஷ்வினின் மௌனத்திலேயே புரிந்து கொண்ட ரோஹித் ஆறுதலாக அவனின் தோளை தட்ட, “என்கிட்ட மட்டும் இந்த வாழ்க்கை ஏன் இப்படி கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்குன்னு தெரியல டா!” என்று கூறி வருந்தினான்.

விடு மச்சான், எது நடக்கணும்னு இருக்கோ அது தான் நடக்கும். வீணா மனசை போட்டுக் குழப்பிக்காத. வாழ்க்கையை அதன் போக்கில வாழு.” என்று ஆறுதல் கூறியவனிற்கு வேலை அழைப்பு வந்துவிட, அவனும் கிளம்பினான்.

மாயா அந்த அறையிலிருந்து வெளியே வர, அவளை பரிசோதித்த மருத்துவரும் அவளின் பின்னே வந்தார்.

இன்னும் ரெண்டு செஷன் வச்சுக்கலாம்.” என்று அடுத்து வரவேண்டிய தேதிகளைக் கூறியவர், “உங்க வொய்ஃப் உடல் அளவுலயும் ரொம்ப வீக்கா இருக்காங்க, சோ அவங்க உடல்நிலையிலையும் கவனம் செலுத்த சொல்லுங்க.” என்று எதார்த்தமாக அவர் கூற, அதை கேட்டுக்கொண்டிருந்த இருவரும் தான் திகைத்து நின்றனர்.

அடுத்த நொடியே தன் திகைப்பிலிருந்து மீண்ட அஷ்வின், “ஓகே மேம்.” என்று அவரிடம் விடைபெற்று வெளியே வர, மாயாவும் அவனை பின்தொடர்ந்தாள்.

அதன்பின்னர் மாயா எதுவும் பேசாததால், அவளை தன் மனைவி என்று அந்த மருத்துவர் கூறியதில் கோபம் கொண்டுள்ளாலோ என்று எண்ணியவன், “மாயா, அவங்க அப்படி சொன்னதுக்கு நான் மறுத்து சொல்லாம, அப்படியே வந்தது உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா சாரி. அவங்க தெரியாம சொன்னதுக்கு நாம ஏன் ரியாக்ட் பண்ணனும்னு தான், நான் எதுவும் சொல்லாம வந்துட்டேன்.” என்று தன்னிலை விளக்கம் அளிக்க, மாயா வாய் திறந்து எதுவும் கூறாமல், தலையை மட்டும் அசைத்தாள்.

மருத்துவமனைக்கு வரும்போதும் அவள் அமைதியாக தான் இருந்தாள். ஆனால், அதற்கும் இப்போது இறுகிப்போய் அமைதியாக இருப்பதற்கும் பல வித்தியாசங்கள் இருந்தன.

என்ன சொல்லி அவளை தேற்றுவது என்று தெரியாமல் குழம்பியபடி வீட்டினில் வண்டியை நிறுத்த, மாயா ஒரு தலையசைவுடன் அவனிடமிருந்து விடைபெற்று வீட்டிற்குள் சென்று மறைந்தாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு பெருமூச்சுடன் அலுவலகத்திற்கு கிளம்பினான்.

*****

நிரஞ்சனின் அறைக்குள்ளிருந்து வெளிவந்த அஷ்வினியையே அனைவரும் பார்க்க, தூரத்திலேயே அதை கண்டுகொண்டாள் அவள்.

அச்சோ இவங்க கிட்ட வேற வீராப்பா பேசிட்டு உள்ள போனேனே, இப்போ என்ன சொல்லி சமாளிக்க போறேனோ!’ என்று மனதிற்குள் புலம்பினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகபாவனைகளை மாற்றிக்கொண்டாள்.

அவளின் இடத்தில் குழுமியிருந்த சிலர் உள்ளே நடந்தது என்று கேட்க, ‘மொட்டை மாடி கல்பனாஅளவிற்கு கதையை அளந்து விட்டுக்கொண்டிருந்தாள்.

நான் ஆஃபிஸுக்கு வந்துட்டு இருந்தப்போ, ரோட்டுல நடந்துட்டு இருந்த ஒரு ஆண்ட்டி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அவங்க மயக்கம் தெளியவச்சு பாதுகாப்பா அவங்க வீட்டுல விட்டுட்டு வர லேட்டாகிடுச்சுன்னு பாஸ்கிட்ட சொன்னேனா, அவரும், ‘நல்ல வேலை செஞ்சுருக்கீங்க. யாருக்கோ என்னவோன்னு விட்டுட்டு வராம, அவங்களை காப்பாத்தி பெரிய விஷயம் பண்ணியிருக்கீங்கன்னு ஒரே பாராட்டு தான்!” என்று அஷ்வினி கூறினாள்.

பலர் அவளை நம்பாத பார்வை பார்த்துவிட்டு சென்றாலும், சிலர், “ஹ்ம்ம், அது என்ன நீ வரலைன்னா மட்டும் ஸ்பெஷலா ரூமுக்குள்ள கூப்பிட்டு பேசணும்?” என்று பொறாமையில் பொங்கிவிட்டு சென்றனர்.

அவர்களை மதிக்காமல், தன் இடத்தில் அமர்ந்தவளை ஜெனியும் அக்ஷயும் கேவலமாக பார்த்தனர்.

அவர்களின் பார்வையை கண்டு அஷ்வினி இளிக்க, “சொல்றது தான் சொல்ற, இப்படியா ஒருத்தனும் நம்பாத மாதிரி சொல்லுவ? நிரஞ்சனுக்கும் உனக்கும் எப்படி முட்டிக்கும்னு இங்க இருக்க எல்லாருக்குமே தெரியும். அப்படி இருக்கப்போ, மேடம் ஏதோ ஒரு மொக்கை ரீசன் சொல்லுவாங்களாம், அதுக்கு அவரு பாராட்டு பத்திரம் வாசிச்சு அனுப்புவாராம். இதுல உள்ள போறதுக்கு முன்னாடியே அவ்ளோ சீன்னு! கொஞ்ச நேரத்துல எனக்கே விபூதி அடிக்க பார்த்தேல?” என்று அக்ஷய் கூற, ஜெனியும் அவன் கூறும் ஒவ்வொன்றுக்கும் ஆமோதிப்பாக தலையசைத்துக் கொண்டிருந்தாள்.

அடேய் அரைவேக்காடு என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாத. உண்மைலேயே அந்த ஆண்ட்டிக்கு மயக்கம் வந்து, நான் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போனதெல்லாம் நடந்துச்சு தான். ஆனா, நானே எக்ஸ்பெக்ட் பண்ணாதது, நான் போனது நம்ம பாஸோட வீடு!” என்று அஷ்வினி கூற, மற்ற இருவரும் அதிர்ந்தனர்.

ஹே வினி, என்ன சொல்ற நிரஞ்சன் வீட்டுக்கு போனியா? உனக்கு எப்படி அவரு வீடு தெரியும்?” என்று அக்ஷய் வினவ, அவனின் தலையில் தட்டிய ஜெனி, “ஹே லூசு, அவ என்ன சொல்றான்னு முழுசா கேட்டுப் பேசுடா. அந்த ஆண்ட்டி நம்ம நிரஞ்சன் சாருக்கு சொந்தம் போல, அதான் அவங்க வீடுன்னு அங்க கூட்டிட்டு போயிருக்காங்க.” என்று விளக்கினாள்.

ஓஹ், சரி அப்பறம் என்னாச்சு?” என்று ஆர்வமாக கதை கேட்க, அஷ்வினியும் நிரஞ்சனின் வீட்டில் நடந்தவை, அவளிற்கும் கலைவாணிக்கும் ஏற்பட்ட உடன்படிக்கை, அதை நிரஞ்சனிடம் கூறி அசிங்கப்பட்டது என்று அனைத்தையும் கூறினாள்.

அதைக் கேட்ட அக்ஷய்க்கும் ஜெனிக்கும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஹாஹா, என்ன இருந்தாலும் உன்னை இவ்ளோ அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம்.” என்று சிரித்துக்கொண்டிருந்த அக்ஷயை கொலைவெறியுடன் முறைத்தாள் அஷ்வினி.

உஷ்ணப்பார்வையால இருக்கு!’ என்று மனதிற்குள் பயந்தவன், பேச்சை மாற்றும் பொருட்டு, “ஆமா, ரீசன்ட்டா உனக்கும் நிரஞ்சனுக்கும் ரொம்ப சிங்க்காகுதே, என்னவா இருக்கும்?” என்று கொளுத்திப்போட, அது சரியாக அதன் வேலையை துவங்கியது.

அப்போது அஷ்வினி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிடினும், சற்று முன்னர் மற்றவர்கள் கூறிய ஸ்பெஷல்லும், இப்போது அக்ஷய் கூறிய சிங்க்கும் அவளின் மனதின் ஒரு மூலையை ஆக்கிரமித்தது என்னவோ உண்மை தான்.

ஆனால், அதற்கு மேல் அதைப்பற்றி சிந்திக்க விடாமல், நிறைய வேலைகள் குவிய ஆரம்பித்தன.

*****

மதிய உணவிற்கு பின்னர் அவர்களின் குழுவை கலந்துரையாடலுக்கு அழைத்தான் நிரஞ்சன்.

ஹாய் கைஸ். நீங்க எல்லாரும் மெயில் பார்த்துருப்பீங்க, இந்த மீட்டிங் கூட எதுக்குன்னு உங்களுக்கே தெரிஞ்சுருக்கும். எனிவே, நானும் ஒருமுறை சொல்லிடுறேன். ***** க்ளையண்ட் அவங்களோட ரெக்வயர்மெண்ட்ஸ் அனுப்பியிருக்காங்கஅண்ட் இன்னும் ஒரே வாரத்துல ப்ராஜெக்ட்டோட பேசிக் கோட் ரிலீஸ் கேட்டுருக்காங்க.” என்று நிரஞ்சன் பேசிக்கொண்டிருக்க, அனைவரின் முகமும் பீதியில் உரைந்திருந்தது.

அவர்களின் முகபாவனைகளை பார்த்திருந்தவன், “என்னாச்சு? ஏன் இவ்ளோ டென்ஷனாகுறீங்க?” என்று வினவினான் நிரஞ்சன்.

ஒரு வாரத்துல ரிலீஸ் எப்படி நிரஞ்சன்?” என்று அக்ஷய் வினவ, அனைவரும் அவனின் கேள்வியை ஆமோதித்தவாறு அமைதியாக இருந்தனர்.

முதல்லயே எப்படின்னு மலைக்காதீங்க. நம்மளால எவ்ளோ முடியுமோ அவ்ளோ பண்ணலாம். அதுக்கும் மேல முடியலைன்னா, லெட்ஸ் கன்வே இட் டூ தி க்ளையண்ட். ஆனா, ஒரே வாரத்துல நம்ம முடிச்சுடுவோம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு கைஸ்.” என்று ஊக்குவிக்கும் முறையில் பேசினான் நிரஞ்சன்.

அதைக் கேட்டவர்களுக்கும் சிறிது நம்பிக்கை பிறந்தது. ஆனால், மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டு, முதலிலிருந்தே எந்த பதற்றமும் இல்லாமல் நிர்மலமான முகபாவத்துடன் இருந்தது அஷ்வினி மட்டும் தான். அதை நிரஞ்சனும் குறித்துக்கொண்டான்.

இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க சீக்கிரம் வந்து லேட்டா போற மாதிரி இருக்கும். அதுக்கு அரேஞ்சமெண்ட்ஸ் பண்ணிக்கோங்க.= இந்த ஒன் வீக் சக்ஸஸ்ஃபுல்லா போயிடுச்சுனா, மேனேஜ்மெண்ட் கிட்ட வேற அல்லோவன்சஸ் பத்தி பேசுறேன்.” என்று பொதுவாக கூறினான்.

ஓகே கைஸ், இப்போ இந்த ப்ராஜெக்ட் ஒர்க் அசைன்மெண்ட் பத்தி பேசலாம். ஓவரால் ப்ராஜெக்ட் ஒருத்தருக்கு அசைன் பண்றேன். அவங்க தான் அதுல இருக்க ஒர்க்ஸ் மத்தவங்களுக்கு பிரிச்சு கொடுப்பாங்க. அதே மாதிரி, அவங்க தான் மத்தவங்களுக்கும் எனக்கும் இடையில இருக்க பாயிண்ட் ஆஃப் கான்டேக்ட். சோ இந்த பெரிய பொறுப்பை யாருக்கிட்ட ஒப்படைக்கலாம்?” என்று நிரஞ்சன் யோசிக்க, அனைவரும் ஒவ்வொரு பெயரை பரிந்துரைத்தனர்.

இது எதிலும் பங்குகொள்ளாமல் அமைதியாக இருந்த அஷ்வினியை பார்த்தவன், “மிஸ். அஷ்வினி, வொய் டோன்ட் யூ ஹேண்டில் திஸ் ப்ராஜெட்?” என்று வினவ, அங்கிருந்த மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அஷ்வினிக்கே அது அதிர்ச்சி தான்.

ஏனென்றால், இதுவரை எந்தவொரு க்ளையண்ட் ப்ராஜெக்ட்டையும் தனியாக கையாண்டிராதவளிற்கு இத்தனை முக்கியமான பொறுப்பை அளித்தால் அவள் அதிர்ச்சியடையாமல் என்ன செய்வாள்?

அதை அவனிடம் கூறவும் செய்தாள். மேலும், “இத்தனை நாள், என்னை நம்பி எதுவும் தரல, இப்போ மட்டும் எதுக்கு என்கிட்ட தரீங்க?” என்றும் அவள் வினவியிருந்தாள்.

இதற்கு முன்னர் தன்னிடத்தில் இருந்த ரஞ்சித் பாரபட்சம் பார்த்து ப்ராஜெக்ட்களை தரும் தகவல் நிரஞ்சனின் காதிற்கும் வந்திருந்தது. ஒரு வகையில், நிரஞ்சன் இங்கு வருவதற்கு காரணமும் அது தான் ஆனால், அதில் அஷ்வினி பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பது அவனிற்கு தெரியாது.

இப்போது அஷ்வினி கூறியதற்கும் நிரஞ்சனிற்கும் சம்பந்தம் இல்லை என்பது அஷ்வினிக்கும் தெரியும். அவளும் வேண்டுமென்று அதை கூறவில்லை. இத்தனை நாட்கள் இல்லாத நம்பிக்கை இப்போது எதற்கு என்ற ஆதங்கத்தில் கொட்டி விட்டாள்.

அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவன், “ப்ரூவ் மீ ரைட் அஷ்வினி. அண்ட் மேனேஜ்மெண்டுக்கு உங்க டேலண்ட்டை தெரியப்படுத்த வேண்டாமா?” என்று கூறி அவளை சம்மதிக்கவும் வைத்துவிட்டான்.

ஓகே கைஸ், எல்லாரும் அவங்கவங்க வேலைகளை பாருங்க. உங்களுக்குன்னு அல்லாட் பண்ண வேலைகள் உங்க மெயிலுக்கு வரும். அதை முடிச்சு டெயிலி, என்கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டு நீங்க கிளம்பலாம்.” என்று மற்றவர்களிடம் கூறியவன், “அஷ்வினி, ஹாஃப் ஆன் அவர் எடுத்து க்ளையண்ட் மெயில் பார்த்துட்டு இங்க வாங்க. ரிசோர்ஸ் அண்ட் ஒர்க் அல்லோகேஷன் முடிச்சுடலாம்.” என்று அவளை அனுப்பிவைத்தான்.

நிரஞ்சன் அறைக்குள் இருந்தவரை நம்பிக்கையுடன் இருந்தவளிற்கு, அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் அவளின் நம்பிக்கை ஆட்டம் காணத்துவங்கியது.

அதற்கு முக்கிய காரணம், ‘பாரேன், எவ்ளோ க்ரிட்டிகல் ப்ராஜெட் அவளுக்கு கொடுத்திருக்காங்க!’, ‘அதை முடிச்சுடுவாளா?’, ‘நிரஞ்சன் இவளுக்கு தான் கொடுப்பாருன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்!’ போன்ற பேச்சுக்கள் தான்.

தலையில் கைவைத்து தன்னிடத்தில் அமர்ந்தவளை சமாதானப்படுத்தினர் அக்ஷய் மற்றும் ஜெனி. நிரஞ்சன் கூறியது போல அவளிற்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூற, அவளும் வடிய துவங்கிய நம்பிக்கையை இழுத்துப்பிடித்து தன் வேலையில் மூழ்க ஆரம்பித்தாள்.

*****

மிகுந்த ஈடுபாடுடன் வேலையில் மூழ்கியிருந்தவளை கலைத்தது அவளின் அலைபேசி ஒலி. அஷ்வின் தான் அழைத்திருந்தான்.

வினி, மணி என்னாச்சுன்னு பார்த்தியா? எங்க இருக்க? கேஃபேலயா?” என்று அவன் வினவ, அப்போது தான் இந்த விஷயத்தை அவனிடம் கூறவில்லை என்பதே அவளிற்கு உரைத்தது. மேலும், மணி இரவு ஏழரை என்று காட்டியது.

ப்ராஜெக்ட் விஷயத்தை கூறி, இனி ஒரு வாரத்திற்கு அவள் வீடு திரும்புவதற்கு தாமதமாகும் என்றும் கூறினாள்.

ஓஹ் சரி, போறப்போ சொல்லு. ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்.” என்று கூறியவனை இடைவெட்டியவள், “இல்லடா அண்ணா, நீ கிளம்பு. எனக்கு லேட்டாகும். அக்ஷய், ஜெனி எல்லாம் இங்க தான் இருக்காங்க. அவங்க கூட நான் வந்துப்பேன்.” என்றாள்.

முதலில் மறுத்தவன், அவள் மீண்டும் சொல்லவும், பல அறிவுரைகளை கூறிய பின்னர் தான் ஒப்புக்கொண்டான்.

அஷ்வினை சமாளித்தவள் அதை அக்ஷயிடமோ ஜெனியிடமோ கூறாமல் விட்டது தான் தவறு.

அதற்குள் அவளிற்கு நிரஞ்சனிடம் மீண்டும் ஒரு கலந்துரையாடல் இருப்பது நினைவிற்கு வர, அதற்காக நிரஞ்சனின் அறைக்குள் சென்றுவிட்டாள்.

இது தெரியாத அக்ஷய் ஜெனியிடம், “ஹே ஜெனி, இன்னைக்கு அம்மா ஊர்ல இருந்து வந்துருக்காங்கங்கிறதையே மறந்துட்டேன்.” என்று கூற, “அடப்பாவி, இப்போயாச்சும் ஞாபகம் வந்துச்சே. சரி, நீ இன்னைக்கு டாஸ்க் முடிச்சுட்டா கிளம்பு. நானும் வினியும் அஷ்வினோட கிளம்பிடுறோம்.” என்றாள்.

அப்போதும் அக்ஷய் அஷ்வினியிடம் சொல்லிவிட்டு செல்வதற்காக காத்திருக்க, “அவ டிஸ்கஷன்ல இருக்காடா. நீ கிளம்பு, நான் சொல்லிக்கிறேன்.” என்று ஜெனி தான் அவனை அனுப்பி வைத்தாள்.

கால் மணி நேரம் கழித்தே வெளியே வந்த அஷ்வினியை கண்ட ஜெனி, “இன்னும் எவ்ளோ நேரம்டி ஆகும்?” என்று வினவ, “நைன் தேர்ட்டிகுள்ள கிளம்பிடலாம். நீ நல்ல பிள்ளையா நமக்கு ஃபுட் ஆர்டர் பண்ணி வை. அதுக்குள்ள ஒரு டாக்குமெண்ட் மட்டும் டைப் பண்ணி பாஸுக்கு சென்ட் பண்ணிட்டு வரேன்.” என்று வேலையில் மூழ்கி விட்டாள்.

அவளும் அங்கில்லாத அக்ஷயை பற்றி வினவவில்லை, ஜெனியும் அவனை பற்றி கூற மறந்திருந்தாள்.

வந்த உணவை உண்டு மீண்டும் வேலை பார்த்தவள், சொன்ன நேரத்திற்கு அரை மணி நேரம் கழித்து தான் கிளம்பலாம் என்று ஜெனியிடம் வந்தாள்.

அவளின் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டே, “ஜெனி, அக்ஷய் எங்க ஆளே காணோம்?” என்று அஷ்வினி வினவ, “அச்சோ சொல்ல மறந்துட்டேன் வினி. அந்த லூசுக்கு அவங்க அம்மா வீட்டுக்கு வந்ததே மறந்துருச்சாம். அதான் நினைப்பு வந்ததும் பக்கி கிளம்பிடுச்சு. உன்கிட்ட சொல்லிட்டு போகணும்னு வெயிட் பண்ணான். நான் தான் சொல்லிக்கிறேன்னு அனுப்பி வச்சேன். ஆனா, உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.” என்றாள்.

என்னாது?! அவன் கிளம்பிட்டானா?” என்று அஷ்வினி அதிர, “நீ எதுக்கு இவ்ளோ ஷாக்காகுற?” என்றாள் ஜெனி குழப்பமாக.

அஷ்வினி அஷ்வின் இடையே நடந்த பேச்சுவார்த்தையை ஜெனியிடம் கூற, இப்போது அதிர்வது ஜெனியின் முறையாயிற்று.

இருவரும் மற்றவர் ஏன் கூறவில்லை என்று சண்டை போட்டுக்கொண்டிருக்க, அலுவலகத்திலிருந்து கிளம்பலாம் என்று தன்னறையில் இருந்து வெளிவந்த நிரஞ்சன் கண்டது இவர்களின் சண்டையை தான்.

இன்னும் நீங்க கிளம்பலையா?” என்ற நிரஞ்சனின் குரலில் தான், தங்களின் சண்டையை நிறுத்தி நிகழ்விற்கு வந்திருந்தனர் தோழிகள்.

நிரஞ்சனிடம் நடந்ததை கூற, அவன் பங்கிற்கு இருவரையும் திட்டியவன் தானே அழைத்து செல்வதாகக் கூறினான்.

தங்களின் வாகனத்திலேயே வருவதாக அடம்பிடித்தவர்களை அதட்டி உருட்டி தன் வாகனத்தில் ஏற்றி இருந்தான் நிரஞ்சன்.

ஸ்ஸ்ஸ், இதுக்கே இவ்ளோ ஸ்டேமினா தேவைப்படுது. இவங்களை எல்லாம் இவங்க வீட்டுல எப்படி தான் சமாளிக்கிறாங்களோ!’ என்று மனதிற்குள் அவன் புலம்பியது தனி கதை.

முதலில் ஜெனியை அவளின் இல்லத்தில் பாதுகாப்பாக இறக்கிவிட்டு, அஷ்வினியின் வீடு நோக்கி தன் வாகனத்தை செலுத்தினான்.

அஷ்வினி வீட்டுல ரொம்ப செல்லமோ?” என்று பேச்சை நிரஞ்சனே ஆரம்பிக்க, அவனை நோக்கி குழப்பமான பார்வையை செலுத்தியவள், “ஹ்ம்ம் ஆமா, அப்பா செல்லம்.” என்றாள்.

அவளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தவன், நக்கல் சிரிப்புடன், “பார்த்தாலே தெரியுது.” என்றான்.

அவனின் நக்கல் சிரிப்பே அவளின் கோபத்தை கிளற போதுமாக இருக்க, “என்ன தெரியுது?” என்று வினவ, “ம்ம்ம், நீ டேட்ஸ் லிட்டில் பிரின்சஸ்னு தெரியுது.” என்று தோளை குலுக்கியபடி அவன் கூறினான்.

இவன் நம்மள கலாய்க்கிறானோ!’ என்று யோசித்தவள், எதுவும் பேசாமல் திரும்பிக்கொண்டாள்.

அப்போதும் நிரஞ்சனே ஏதோ பேச ஆரம்பிக்க, “பாஸ், நீங்க கார்ல தனியா வரப்போ என்ன பண்ணுவீங்க?” என்று அவள் வினவ, அவள் எதற்காக கேட்கிறாள் என்பதை அறிந்தவனாக, “தனியா வரப்போ எஃப்.எம்ல பாட்டு கேட்டுட்டே வருவேன். இப்போ தான் நீ இருக்கேல, நீயே ஒரு ரேடியோ பெட்டி தான? அதான் உன்னை பேச சொல்றேன்.” என்றான்.

அப்போ நான் லொடலொடன்னு பேசிட்டே இருக்கேன்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா?” என்று அவள் கோபத்துடன் வினவ, “ஹுஹும், சிம்பாலிக்கா எல்லாம் சொல்லல, நேரடியாவே சொல்றேன்.” என்று மீண்டும் அவளை அசிங்கப்படுத்தினான்.

அதற்கு ஏதோ சொல்ல வர, அதற்குள் அவளின் வீடு வந்திருந்தது.

நடந்த களேபரத்தில், அவளின் வீட்டிற்கான வழி எப்படி நிரஞ்சனிற்கு தெரியும் என்று அவள் யோசிக்கவில்லை. அவனும் கூறவில்லை.

அவனை முறைத்துக்கொண்டே அவள் வாகனத்திலிருந்து இறங்க, “அஷ்வினி, மார்னிங் சித்தியை காப்பாத்தியதுக்கு தேங்க்ஸ்.” என்றான்.

சித்தியா?’ என்று நினைத்தாலும், அதைக் கேட்காமல், தலையை அசைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அவள் வீட்டிற்குள் செல்லும் வரை பார்த்துக்கொண்டிருந்தவன் சிரிப்புடன் வாகனத்தை தன் வீட்டை நோக்கி திருப்பினான்.

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…😁😁😁 நேத்து சொல்ல வேண்டியது, கொஞ்சம் தாமதமாகிடுச்சு…😜😜😜 கதையை படிச்சுட்டு உங்க கருத்துக்களை ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ சொல்லுங்க…

இப்படிக்கு,

உங்க 🌈🔥

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  8 Comments

  1. Archana

   மீ- நிரஞ்சன், இருந்தாலும் உனக்கு இவ்வளவு… இவ்வளவு ஆகாது😂🤣🤣🤣

  2. Interesting ud sis nice semmmma ponga vini un talent proof panna oru chance dhan idhu apa niranjan ashwin ellam erkanave frnds ah super waiting for nxt ud sis

   1. vaanavil rocket
    Author

    Tq so much sis😍😍😍
    Aama theeya velai senju prove pannvua💪💪💪
    Niranjan Ashwin friends ah🤔🤔🤔
    Sry for the late reply sis😊😊😊

  3. Janu Croos

   அடேய் நிரஞ்சா….நீ என்னடா எங்க தான தலைவி அஷ்வினியயே இப்படி.கலாய்க்குற….
   ஏன் அஷ்வினு…அப்போ நீ மாயாவ காலேஜ்லமே லவ் பண்ணியா…சாகர் மாயா லவ் பண்ணது அஷ்வினிக்கு தெரியும் போது உனக்கு எப்படி தெரியாம போச்சு…
   நிரஞ்சா அப்போ உனக்கு அஷ்வினி பத்தி தெரியுமா… தெரிஞ்சும் ஏன் தெரியாத மாதிரி நடந்துக்குற….

   1. vaanavil rocket
    Author

    😂😂😂 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்…😜😜😜
    ஆமா பாவம் அஷ்வினு…💔💔💔
    நிரஞ்சனை என்னாலேயே புரிஞ்சுக்க முடியலையே… கேட்டு சொல்றேன் சிஸ்…🤭🤭🤭