518 views

சுடர் 17

அஷ்வினி அங்கிருந்த சுவர் தொங்கல்களையும் புகைப்படங்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போது அந்த புகைப்படத்தை கண்டதும் திகைத்து போய் நின்றாள்.

அந்த புகைப்படத்தில் கலைவாணியை தோளோடு அணைத்தபடி நின்றிருந்தது நிரஞ்சனே.

அவனைக் கண்டு அதிர்ந்தவள், “ஆண்ட்டி…” என்று அழைத்துக்கொண்டே சமையலறைக்கு சென்றாள்.

அஷ்வினி கத்திக் கொண்டே வந்ததைக் கண்ட கலைவாணி பதறிப்போய், “என்னமா ஆச்சு?” என்று வினவ, “அந்த போட்டோல இருக்குறது யாரு?” என்று வினவினாள்.

கலைவாணி அவள் காட்டிய திசையிலிருந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு, “அது தான் மா என் பையன்…” என்று ஏதோ கூற வந்தவரை தடுத்து, “போச்சு, இந்த ரோபோ வீடுன்னு தெரியாம வந்துட்டேனே!” என்று புலம்ப ஆரம்பித்தாள்.

அஷ்வினி பேசியவை காதில் விழுந்தாலும், புரியாத காரணத்தினால், “என்னமா ஆச்சு?” என்று கலைவாணி வினவ, சட்டென்று அவளிற்கு அந்த யோசனை தோன்றியது.

கலைவாணியை நோக்கி திரும்பியவள், “என்ன இருந்தாலும், நீங்க மயக்கம் போட்ட விஷயத்தை உங்க பையனுக்கு சொல்லாம மறைக்குறது தப்பில்லையா ஆண்ட்டி?” என்று வினவ, அவளை ஆச்சரியமாக பார்த்திருந்தார் கலைவாணி.

இந்த பொண்ணு எதுக்கு திடீர்னு பல்டியடிக்குது?’ என்று அவர் யோசிக்க, “நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, உங்களுக்கு பாஸ் கிட்ட சொல்ல கஷ்டமா இருந்தா, நானே சொல்லிடுறேன்! உங்களுக்கு இந்த ஹெல்ப் கூட செய்ய மாட்டேனா?” என்று அஷ்வினி தேன்குரலில் கூற, அவளின் பாஸ்ஸில் சுதாரித்த கலைவாணி, “இருந்தாலும், எனக்கு அவன்கிட்ட சொல்லத்தோணலையே.” என்று இழுத்தார்.

என்னது, தோணலையா? இதெல்லாம் தப்பு ஆண்ட்டி! கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன்.” என்றாள் அஷ்வினி பாவமாக.

நீ உண்மையை சொன்னா வேணா, கன்சிடர் பண்ணலாம்.” என்று கலைவாணி கூற, “ஹிஹி, கண்டுபிடிச்சுட்டீங்களா ஆண்ட்டி?” என்று சமாளித்தாள் அஷ்வினி.

அப்போ அந்த ரோபோ என் பையன் தானா?” என்று கலைவாணி விளையாட்டாக கோபம் கொள்ள, “அது ஆண்ட்டி, நீங்க எவ்ளோ ஸ்வீட்டா இருக்கீங்க. ஆனா, உங்க பையன் என்னமோ ஆஃபிசே அவரு தலையில தான் கட்டியிருக்க மாதிரி எப்பவும் விரைப்பா இருப்பாரு தெரியுமா?” என்றாள் அஷ்வினி.

அவளின் பேச்சை ரசித்த கலைவாணி, “அப்படியா சொல்ற? நான் நம்பமாட்டேன், எதுக்கும் ஃபோட்டோ எடுத்து அனுப்பிவிடு.” என்று கெத்தாக கூற, ‘ஃபோட்டோவா! இது மட்டும் அந்த ரோபோக்கு தெரிஞ்சுது, அவ்ளோ தான்.’ என்று மனதிற்குள் நினைத்தவள், வெளியே சமாளிப்பாக தலையசைத்தாள்.

ஆண்ட்டி, அப்போ நீங்க மயக்கம் போட்டதை உங்க மகன் கிட்ட சொல்லிடுவீங்க தான? தெய்வமே, இன்னைக்கு நான் திட்டு வங்காம தப்பிக்கிறது உங்க கையில தான் இருக்கு!” என்று மீண்டும் உறுதிபடுத்திக்கொள்ள, கலைவாணியும் சிரிப்புடனே சம்மதம் தெரிவித்தார்.

பின்னர், இருவரும் தேநீரை அருந்தியபடி பேசிக்கொண்டிருந்தனர்.

திடீரென்று கலைவாணி, “எனக்கென்னமோ, நீ அவன்கிட்ட திட்டு வாங்க கூடாதுன்னு வாலண்டியரா என்னை காப்பாத்துன மாதிரி தோணுதே! உண்மையை சொல்லு, நான் முன்னாடி போறப்போ, நீதான பின்னாடி வண்டி வச்சு மோதி என்னை மயக்கமாக்கிட்டு, திரும்ப காப்பாத்துற மாதிரி நடிச்ச?” என்று வேண்டுமென்றே சிரிப்பை அடக்கிக்கொண்டு வினவினார்.

அவர் முகத்திலிருந்தே சிரிப்பைக் கண்டுகொண்ட அஷ்வினி, “நானு உங்களை பின்னாடி இடிச்சு மயக்கமாக்குனேன்! ஆனாலும், இந்த ஐடியா நல்லா தான் இருக்கு. நெக்ஸ்ட் டைம் லேட்டாகும் போது யூஸ் பண்ணிக்கலாம்.” என்று கண்ணடித்தாள்.

சில நிமிடங்களில், “ஓகே ஆண்ட்டி, நான் கிளம்புறேன். இதுக்கு மேல லேட்டா போனா, உங்க பையன்அதான் என் பாஸ், என்னை வேலையை விட்டே தூக்கிடுவாரு.” என்றவள், உடல்நிலையில் கவனம் கொள்ளுமாறு பல அறிவுரைகளை வழங்கிவிட்டே சென்றாள்.

நிரஞ்சனின் புகைப்படத்தை கண்டவள், அருகில் சிறிதாக மாட்டப்பட்டிருந்த அவர்களின் குடும்ப புகைப்படத்தை காணாமல் சென்றதும், அதை சொல்ல வந்த கலைவாணியை பேச விடாமல் தடுத்ததும் விதி செய்த சதியோ..!

*****

அலுவலகத்தில் ஜெனியும் அக்ஷயும் மாறி மாறி வாசலுக்கும் தங்களின் இடத்திற்கும் நடந்தனர்.

இந்த லூசுக்கு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா? போன் பண்ணியும் எவ்ளோ நேரமாகுது. திரும்ப போன் பண்ணாலும் எடுக்க மாட்டிங்குறா?” என்று ஜெனி புலம்ப, அவளிற்கு சற்றும் குறையாமல், “அவ அண்ணனை கேட்கலாம்னா, என்னைக்கும் இல்லாத அதிசயமா, இன்னைக்கு பெர்மிஷன் வேற கேட்டுருக்கானாம்.” என்றான் அக்ஷய்.

சக பணியாளர்களே, ‘எங்கம்மா போன நீ?’ என்று மனதிற்குள் புலம்பும் அளவிற்கு ஜெனியும் அக்ஷயும் புலம்பித்தள்ள, அவர்களின் புலம்பலிலிருந்து மற்றவர்களை காப்பதற்கென அங்கு வந்து சேர்ந்தாள், புலம்பலின் காரணகர்த்தா.

அஷ்வினி வெகு சாதாரணமாக அலுவலகத்திற்குள் நுழைய, “அடியேய், என்ன ஃபேஷன் ஷோல ரேம்ப் வாக் பண்ற மாதிரி ஆடி அசைஞ்சு வர! உனக்கு கொஞ்சம் கூட பயமாவே இல்லையா? ஒன்றரை மணி நேரம் லேட்டா வந்துருக்கடி லூசு.” என்று ஜெனி தான் பதறினாள்.

அஷ்வினியோ அவளின் பதற்றத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல், “எதுக்கு இவ்ளோ டென்ஷன்? ஏற்கனவே, ரீசனை ரெடி பண்ணிட்டு தான் வந்தேன். ஆமா, கால் பண்ணப்போ பாஸ் என்னைக் கூப்பிட்டதா சொன்னேல, உள்ள போய் ஒரு பெர்ஃபார்மன்ஸை போட்டுட்டு வரேன்.” என்று சிரித்துக்கொண்டே நிரஞ்சனின் அறைக்குள் சென்றாள்.

அறையை விட்டு வெளியே வரும்போது அந்த சிரிப்பு இருக்குமா?

*****

நிரஞ்சன் அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன், அவன் கண்கள் முதலில் தேடியது அஷ்வினியை தான்.

அவள் இருக்கையில் இல்லை என்பதை கண்டதும், ‘வாரம் ஒருமுறை திட்டு வாங்குனா தான் ஒழுங்கா இருப்பா போல. சேட்டைக்காரி!’ என்று மனத்திற்குள் நினைத்தவன், அவளின் இடத்தை கடக்கும்போது, “அஷ்வினி எங்க?” என்று ஜெனியிடம் வினவினான்.

ஜெனி ஏதோ சொல்லி சமாளிக்க, “அவங்க வந்ததும் என்னை பார்க்க சொல்லுங்க.” என்று கோபமாக கூறிவிட்டு அறைக்குள் வந்தான்.

வாரயிறுதியில் ஊருக்கு சென்று, சிறிது கூட ஓய்வென்பது கிடைக்காமல், மீண்டும் முந்தைய நாள் வீடு வந்து சேர்ந்தது நிரஞ்சனிற்கு அலுப்பாக இருந்தது.

மேலும், இம்முறை சித்தியையும் உடன் அழைத்து வந்திருந்தான். நாராயணனிற்கு, அவரின் நண்பர்களுடன் வடஇந்தியாவை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்க, அவரோ கலைவாணி தனியே இருப்பாரென்று அதை மறுத்தார்.

இந்த விஷயம் நிரஞ்சனிற்கு தெரிய வர, கலைவாணியை தன்னுடன் அழைத்துக்கொள்வதாக கூறி தாத்தாவை அவரின் நண்பர்களுடன் அனுப்பிவைத்தான். வெகு காலமாக இழப்புகளையும் சோகங்களையும் மட்டுமே சந்தித்து வந்த மனிதருக்கு, நண்பர்களுடன் செல்லும் இந்த சுற்றுலா சிறிது நிம்மதியை தரட்டும் என்று எண்ணினான் நிரஞ்சன்.

தன் சித்தியும் வீட்டில் இருந்ததால், தனது அலுப்பை வீட்டிலும் அவனால் வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை. அவனை ஏதாவது காரணம் சொல்லி வீட்டில் இருத்தி வைக்க முயன்று கொண்டிருந்த கலைவாணியிடம் தானே காரணத்தை கொடுத்து விடக்கூடாதே.

அந்த அலுப்பில் நாற்காலியில் சாய, சரியாக அதே சமயம் அவனின் அலைபேசி ஒலியெழுப்பியது.

சிறு முனகலுடன் அதை உயிர்ப்பிக்க, எதிர்முனையிலிருந்து சாரதி, “ஹலோ மச்சான். அந்த பலியாட்டை இங்க தூக்கிட்டு வந்தாச்சு.” என்றான்.

மயக்கத்தின் பிடியில் சென்று கொண்டிருந்தவனை திடீரென்று எழுப்பி சொல்லியவுடன், முதலில் புரியாமல் விழித்தவன் பின்னர் தான் சாரதி கூறுவது அந்த போலிச்சாமியாரை என்பதை புரிந்து கொண்டான்.

சாரதியோ நிரஞ்சனின் மறுமொழிக்கு எல்லாம் காத்திருக்காமல், “அந்த சாமியார் சரியான கேடியா இருப்பான் போல. அவனை அடிச்சு விசாரிச்சதுல பல மேட்டர் சிக்கியிருக்கு. ஏற்கனவே, அவனுக்கு பல பெரிய பிசினஸ் மேக்னட்ஸ், அரசியல் தலைவர்களோட சம்பந்தம் இருக்குன்னு தகவல் கிடைச்சது. இப்போ அவன் சொல்றதை பார்த்தா, இந்த பெரிய ஆளுங்க தங்களுக்கு தொல்லை தரவங்களை, இவங்கிட்ட கோர்த்து விட்டு, பரிகாரம், பூஜை, நரபலிங்குற பேர்ல போட்டுத் தள்ளியிருக்காங்கன்னு தெரியுது. நீ சொன்ன மாதிரி இவனுக்கு பின்னாடி ஒரு ஆள் இல்ல ஒரு கூட்டமே இருக்கும் போல. விஷயம் சீரியஸ் தான் போல மச்சான். எனக்கென்னமோ இதை லீகலா மூவ் பண்ணலாம்னு தோணுது.” என்றான்.

சாரதி கூறியதை கேட்ட நிரஞ்சன் தீவிர பாவத்துடன், “அவசரப்படாத சாரதி. நீ சொல்ற மாதிரி நிறைய பெரிய பெயர்கள் இதுல அடிபடுதுனா கண்டிப்பா அதை மறைக்க தான் பார்ப்பாங்க. இந்த பிரச்னையோட ஆணி வேர் எதுன்னு கண்டுபிடிச்சுட்டு, மறைக்கவே முடியாத மாதிரி அவங்களை எக்ஸ்போஸ் பண்ணனும்.” என்றான்.

சரிடா, இப்போ என்ன பண்றது? தோண்ட தோண்ட வந்துட்டே இருப்பானுங்க போலயே.” என்று சலித்துக்கொண்டான் சாரதி.

அவன் பேசுனதை ரெக்கார்ட் பண்ணியிருக்க தான?” என்று உறுதிபடுத்திவிட்டு, “அவன் சொன்னதுல யாராச்சும் மாயாவோட ஊரோட சம்பந்தப்பட்டுருகாங்களான்னு விசாரி. ஏதாவது லீட் கிடைக்கும்.” என்று நிரஞ்சன் கூற, “சரிடா.” என்று அழைப்பை துண்டித்தான் சாரதி.

இந்த கேஸ் பெருசா இழுக்கும் போலவே!’ என்று நினைத்துக்கொண்டே வேலையில் ஆழ்ந்தான் நிரஞ்சன்.

*****

நண்பர்களிடம் கெத்தாக கூறிவிட்டு நிரஞ்சனின் அறைக்கு சென்றாலும், அஷ்வினியின் மனதிற்குள் சிறிது பயம் எட்டிப்பார்க்கவே செய்தது.

அந்த ஆண்ட்டி கால் பண்ணி சொல்லியிருப்பாங்களா? இல்ல நானே சொல்லனுமா? ‘உங்க அம்மாவை காப்பாத்தி வீட்டுல விட்டுட்டு வந்தேன்னு சொன்னா இந்த ரோபோ நம்புவாரா?’ என்று எக்கச்சக்க கேள்விகளுடனே சென்றாள் அஷ்வினி.

கதவை தட்டிவிட்டு அவனின் அழைப்பிற்காக காத்திருக்க, அலைபேசியை கையில் வைத்து யோசித்துக்கொண்டிருந்தவன் அனிச்சை செயலாக அவளை உள்ளே வர பணித்தான்.

உள்ளே வந்த அஷ்வினியும், முதலில் கண்டது நிரஞ்சனின் கைகளில் இருந்த அலைபேசியை தான்.

ஓஹ், ஆண்ட்டி தான் கால் பண்ணியிருக்காங்க போல.. சரியான டைமுக்கு தான் வந்துருக்கேன்.’ என்ற மகிழ்வுடனே அவனின் முன்பு அமைதியாக நின்றிருந்தாள்.

மிஸ். அஷ்வினி, உங்களுக்கு தான் வேலை இல்லைன்னா, எனக்கும் வேலை இல்லைன்னு நினைச்சுட்டீங்களா? எதுக்கு இப்படி என் முன்னாடி வந்து சும்மா நின்னுட்டு இருக்கீங்க?” என்று நிரஞ்சன் வினவ, ‘ஆரம்பிச்சுட்டான், இனி விதவிதமா கடுப்பேத்துவான்!’ என்று மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டே, “நான் வந்ததும் உங்களை பார்க்க வர சொன்னதா ஜெனி சொன்னா.” என்றாள்.

ஓஹ், அப்போ இப்போ தான் ஆஃபிஸூக்கே வரீங்களா?” என்று தெரியாததை போல நிரஞ்சன் வினவினான்.

தேவையில்லாம இவன்கிட்ட சிக்கிட்டோமோ?’ என்று அஷ்வினியையே குழப்பிவிட்ட பெருமை நிரஞ்சனையே சேரும்.

இதுக்கும் அமைதி தானா? வழக்கமா ஏதாவது ஒரு ரீசன் வச்சுருப்பீங்களே, அதையும் சொல்லுங்க கேட்போம்.” என்று நக்கலாக அவன் வினவ, ‘அடியேய் வினி, இவ்ளோ நேரம் வாயில என்ன கொழுக்கட்டையா வச்சுருந்த? வந்ததும் காரணத்தை சொல்லியிருந்தா ஏதாவது பெர்ஃபார்மன்ஸ் போட்டாச்சும் தப்பிச்சுருக்கலாம். இப்போ உண்மையை சொன்னா கூட இவன் நம்பமாட்டானே.’ என்று மனதிற்குள் புலம்பினாள் அஷ்வினி.

அவளின் முகபாவனைகளே அவளின் மனக்குமுறலை எடுத்துக்கூற, வெகு சிரமப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு அவளை பார்த்துக்கொண்டிருந்தான் நிரஞ்சன்.

நிமிடங்கள் கழிய, இப்போது பேச்சில்லாமல் வெறும் செருமலில் தன்னைக் காண வைத்தவன், கண்களால் என்னவென்று வினவ, அவளோ உதட்டை பிதுக்கியவாறு, “உங்க வீட்டுலயிருந்து யாரும் கால் பண்ணலையா?” என்று சம்பந்தமே இல்லாமல் வினவினாள்.

நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே மிஸ். அஷ்வினி?” என்று நிரஞ்சன் மீண்டும் நக்கலாக கூற, ‘அச்சோ, அப்போ ஆண்ட்டி இன்னும் சொல்லல போல!’ என்று நினைத்தாள் அஷ்வினி.

அது வந்து, வர வழியில உங்க அம்மாக்கு மயக்கம் வந்து, நான் அவங்களை காப்பாத்தி, உங்க வீட்டுல டிராப் பண்ணி…” என்று கொஞ்சம் கொஞ்சமாக தயங்கியபடி அஷ்வினி கூற, அது அவனிற்கு புரிந்தாலும் வேண்டுமென்றே அவளை சீண்டும் பொருட்டு, “என்ன தான் சொல்ல வரீங்க அஷ்வினி? கொஞ்சம் தெளிவா தான் சொல்லுங்களேன்.” என்றான்.

ஒரு பெருமூச்சுடன், நடந்தவை அனைத்தையும் கூற, அவனோ கன்னத்தில் கைவைத்து ஏதோ கதை கேட்பதை போல கேட்டுக்கொண்டிருந்தான்.

அவங்க அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கன்னு சொல்றேன், இவன் என்னடான்னா கூலா கதை கேட்டுட்டு இருக்கான்?’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள்.

ஓஹ், அப்போ அவங்க சொன்ன பொண்ணு நீங்க தான? நான் கூட வேற அஷ்வினின்னு நினைச்சேன்.” என்று அவன் தோளை குலுக்கியபடி கூற, ‘அடப்பாவி, எத்தனை அஷ்வினி இந்த டீம்ல இருக்காங்களாம்?’ என்று மனதிற்குள் அவனைத் திட்டித்தீர்த்தவளால் வெளியே புசுபுசுவென்று மூச்சுவிடத்தான் முடிந்தது.

அவனோ அதை கண்டுகொள்ளாமல், “ஆனாலும், ஆஃபிஸுக்கு இவ்ளோ லேட்டா வரது தப்புன்னு உங்களுக்கே தெரிஞ்சுருக்கணுமே அஷ்வினி. திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங். நெக்ஸ்ட் டைம் இதையே ரிப்பீட் பண்ண மாட்டீங்கன்னு நினைக்குறேன்.” என்றான்.

அஷ்வினி எப்போதும் போல தலையை உருட்டிவிட்டு வெளியே நடக்க முற்பட, “சரியான சேட்டைக்காரி!” என்று அவன் முணுமுணுத்தது அவளிடம் ஏதோ கூறியதை போல இருந்தது.

அதில் அவள் திரும்பிப் பார்க்க, நிரஞ்சனோ, “இன்னும் போகலையா?” என்று வினவ, ‘விட்டா போதும்டா சாமிஎன்று நினைத்துக்கொண்டு வெளியே ஓடினாள்.

அவள் சென்றதும் அடக்கி வைத்திருந்த சிரிப்பை எல்லாம் மொத்தமாக கொட்டியவனின் நினைவு, அஷ்வினி உள்ளே நுழைவதற்கு முன் சென்றது.

*****

சாரதியிடம் பேசிவிட்டு ஏதோ யோசனையிலேயே வேலை செய்தவனை கலைத்தது அலைபேசி சத்தம்.

அழைத்தது சித்தி என்று தெரிந்ததும், அவசரமாக அதை உயிர்ப்பித்தவன், “என்னாச்சு சித்தி?” என்று பதற்றமாக வினவினான்.

நான் சொல்றதுக்கு முன்னாடியே எதுக்கு இவ்ளோ டென்ஷன்?” என்று கலைவாணி கூற, “அப்போ என்னை டென்ஷன் படுத்துற மாதிரி ஏதோ சொல்லப்போறீங்க, அப்படி தான?” என்று அழுத்தமாக வினவினான் நிரஞ்சன்.

ஷ், அந்த பொண்ணு சொன்னது மாதிரி நீ ரோபோ தான்டா.” என்று சலித்துக் கொண்டார் கலைவாணி.

யாரு? அஷ்வினியையா சொல்றீங்க?” என்று அவன் சரியாக யூகிக்க, “டேய், அவ உன்னை அப்படி சொன்னது உனக்கு தெரியுமா?” என்று சிரிப்புடன் வினவினார் கலைவாணி.

அது தான் ஆஃபிஸுக்கே தெரியுமே!” என்று முணுமுணுத்தவன், “இப்படி பேசி டாப்பிக்கை மாத்தாதீங்க. என்னாச்சு உங்களுக்கு? அஷ்வினியை எப்படி தெரியும்?” என்று கேள்விகளை அடுக்கினான்.

கலைவாணியும் நடந்ததை கூற, தன் உடல்நலனில் அக்கறை காட்டாத சித்தியை கடிந்து கொண்டான்.

அவனை ஒருவழியாக சமாளித்தவர், “டேய் அந்த பொண்ணு உனக்கு ரொம்ப பயப்படுதுடா. இன்னைக்கு கூட என்னால தான் லேட்டு. அவளை எதுவும் சொல்லாத.” என்று கூறிவிட்டே அலைபேசியை துண்டித்தார்.

அவ எனக்கு பயப்படுறான்னு நீங்க தான் சொல்லிக்கணும் சித்தி!’ என்று நினைத்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.

என் ஃபோட்டோவை வீட்டுல பார்த்திருந்தா, சாகர் ஃபோட்டோவையும் பார்த்திருக்கணுமே. அதைப் பார்த்தும் எந்த ரியாக்ஷனும் இல்லையா? இல்ல பார்க்கவே இல்லையா?’ என்பதே அவனின் சிந்தனை.

அஷ்வினி உள்ளே நுழைந்தபோது கூட இதே சிந்தனையில் தான் இருந்தான். அவளின் பாவனைகளே, அவள் சாகர் புகைப்படத்தை காணவில்லை என்பதை எடுத்துக்கூறியது.

*****

தனது அறையில், ஏதோ யோசித்தவாறு சுழல்நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்தவனின் அலைபேசி ஒலியெழுப்ப, அதை அலட்சியமாக எடுத்தவனின் கடுங்குரல் ஹலோ.” என்று முழங்கியது.

எதிர்முனையில் இருந்தவன் பயந்து கொண்டே, “சார், நம்ம சாமியாரை யாரோ கடத்திட்டாங்க.” என்றான்.

“’யாரோ கடத்திட்டாங்கன்னு சொல்றதுக்கா உன்னை வேலைக்கு வச்சிருக்கேன், இடியட்? இன்னும் ஒரு மணி நேரத்துல, எனக்கு டீடெயில்ஸ் வந்துருக்கணும். அப்படி கண்டுபிடிக்க முடியலைன்னா, அடுத்த நிமிஷம் நீயே தற்கொலை பண்ணிக்கோ. அப்படி இல்லாம என் கையில மாட்டுன, உன்னோட கொடூரமான சாவை யாராலையும் தடுக்க முடியாது.” என்று பல்லைக்கடித்தவன் அழைப்பை துண்டிக்க, மறுமுனையில் இருந்தவனோ சாவு தன்னை துரத்துவதை போல வேகவேகமாக செயல்பட்டான்.

இங்கு அந்த ராட்சசனோ, “இவ்ளோ சீக்கிரம் என்னை தேடி வருவன்னு நான் எதிர்ப்பார்க்கல. குட், வெரி குட்! எவ்ளோ நாள் தான், நானும் முகத்தை மறைச்சு எல்லாம் பண்றது? இனி, எல்லாமே டெரக்ட் டீலிங் தான்.” என்று வில்லத்தனமாக சிரித்தான்.

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 மூணு நாள் தொடர்ந்து எபி கொடுத்த அசதில, இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு திரும்பவும் வந்துட்டேன்…😊😊😊 கதையை படிச்சுட்டு உங்க கருத்துக்களை ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ பகிர்ந்துக்கோங்க…

(பிகு… நிரஞ்சன் – அஷ்வினி ரொம்ப எபிக்கு அப்பறம் மீட் பண்ணதால, அஷ்வின் கிட்ட இன்வெஸ்டிகேட் பண்ண முடியல…😜😜😜)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
11
+1
1
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  10 Comments

  1. Archana

   எங்க அஷ்வினியே போட்டு இப்படி டார்ச்சர் பண்ணுறீயே மேன் இது நியாயமா🥺🥺🥺🥺

   1. vaanavil rocket
    Author

    Haha ava mathavangala torture panna, avan ivala torture panran… Kanakku sariya pochu la…😂🤣😂

  2. Janu Croos

   அப்போ அஷ்வினிக்கு சாகர தெரியும்னு நிரஞ்சனுக்கு தெரியுமா… தெரகஞ்சும் ஏன் அத பத்தி தேக்காம இருக்கான்…
   யார் அந்த மெயின் வில்லன்…. அவன் பேசாறத பாத்தா நிரஞ்சன் அஷ்வினி அஷ்வின் மாயாஎல்லாருக்கும் தெரிஞ்சவன் மாதிரி தான் இருக்கு….அவங்க கூடவே இருந்து எல்லாருக்கும் பிரச்சினை குடுக்குற மாதிரி தான் இருக்கு…..
   சாகர் மலையில இருந்லு விழுந்தான்னு சொல்றாங்க அதுக்கு அப்புறம் அவன தேடினாங்களா….அவன் உயிரோட இருக்க வாய்ப்பு இருக்குல….
   அவன் யாருனு.எப்போ தெரிஞ்சு…இவங்க எல்லா பினச்சினையும் முடியபோகுதோ….

   1. vaanavil rocket
    Author

    Aama ashwini – sagar friend nu therinjum yen kekama irukan🤔🤔🤔
    Main villain ah secret ah dhan vachurpomam😜😜😜
    Sagar ah theda solluvom sis😂😂😂

  3. Interesting ud sis nce ud super

  4. Sangusakkara vedi

   Niru pavam da ashwini…. Rmba naal kaluchu pakuriye knjm nalla pesa kudathu….yen thn ipdi panriyo.. poda doo….

   1. vaanavil rocket
    Author

    Haha avala pavam😂😂😂 Sariyana kedi fellow mathavangala evlo kalaikura adhan tit for tat😂😜😂
    Sry for the late reply sis😊😊😊