517 views

சுடர் 16

இரவு நேரம், அஷ்வினியின் அறையில் மின்விசிறி சுழன்று கொண்டிருந்த சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் இல்லை.

அஷ்வினி நன்கு உறங்கியிருக்க, அவளருகே படுத்திருந்த மாயாவுக்கோ கனவின் தாக்கத்தில் வியர்த்து வழிந்தது.

இது கடந்த ஒன்றரை வருடங்களாக அவள் அனுபவிக்கும் வலி தான். சாகர் இறந்ததற்கு காரணம் தான் தான் என்ற குற்றவுணர்வு எப்போது ஏற்பட ஆரம்பித்ததோ, அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் கொடுங்கனவு இது.

தன்னை விரும்பியவன் தன் கண்முன்னே மலையிலிருந்து விழும் காட்சி எத்தனை கொடியதோ, அது மீண்டும் மீண்டும் கனவாக வந்து அவளை வாட்டுவது அதனினும் கொடியது!

போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ்எனப்படும் இதை மருத்துவத்தின் உதவியால் சரிப்படுத்த முடியும். ஆனால், மருத்துவ உதவியை நாடாமல், அதை தன் தண்டனையாக ஏற்றுக் கொண்டாள் மாயா. தன் குற்றவணர்விற்கு வடிகாலாக இருக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவோ!

இத்தனை நாட்களாக, தனியறையில் மற்றவர்களின் ஒதுக்கத்தில் இருந்ததால், அவளின் வீட்டினருக்கு கூட இது தெரிய வாய்ப்பில்லை தான்.

கனவின் தாக்கத்தால், மாயாவின் அனத்தல் அதிகமாகவே, அப்போது தான் நல்ல உறக்கத்தில் இருந்த அஷ்வினியின் செவிகளில், மாயாவின் முனகல் சத்தம் கேட்க ஆரம்பித்தது.

முதலில் அலட்சியமாக இருந்த அஷ்வினி, “சாகர்…” என்று மாயா கத்தவும் அடித்துப்பிடித்து எழுந்தாள்.

தன் சுயநினைவில் இல்லாத மாயா அழுதுக் கொண்டே ஏதோ புலம்ப, அதைக் கண்டு பயந்த அஷ்வினி, நொடியில் சுதாரித்து அவளை சுயநினைவிற்கு அழைத்து வர முயன்றாள். ஆனால், அவளின் முயற்சி எல்லாம் வீணானது.

மாயாவின் அழுகை ஓய்ந்த பாடில்லை என்பதால், என்ன செய்வது என்று தெரியாமல் அஷ்வினை அழைத்து வருவதற்காக அவளின் அறைக்கதவை திறக்க, அங்கு கதவை தட்டுவதற்காக கைகளை தூக்கியபடி நின்றிருந்த அஷ்வினை கண்டு அதிர்ந்தாள்.

அஷ்வினியின் அதிர்ச்சியை எல்லாம் கணக்கில் எடுக்காமல், “வினி, மாயாக்கு என்னாச்சு? ஏன் இப்படி கத்துறா?” என்று வினவினான் அஷ்வின்.

அவளோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து விலகாமல் இருக்க, அவளை உலுக்கியவன், அப்படியே அவளை நகர்த்திக்கொண்டு அறைக்குள் வந்திருந்தான்.

அங்கு மாயா இருக்கும் நிலையை கண்டவன், நெற்றியை தேய்த்து ஒருநொடி யோசித்து, சட்டென்று மாயாவை அறைந்திருந்தான்.

அதில் திகைத்து விழித்தவள் மாயா மட்டுமல்ல அஷ்வினியும் தான்.

என்ன பொசுக்குன்னு அடிச்சுட்டான்?’ என்று அஷ்வினி மனதிற்குள் கேட்டுக்கொண்டாள்.

சுயநினைவை அடைந்த மாயாவிற்கு, என்ன நடந்ததென்றே புரியவில்லை. அவளிற்கு தெரிந்ததெல்லாம் கன்னத்து வலி மட்டும் தான்.

மாயா விழிப்பதை கண்ட அஷ்வின், “சாரி மாயா, நீ உன் கான்ஷியஸ்லேயே இல்ல. அதான் உன்னை அடிக்க வேண்டியதாகிடுச்சு!” என்று மன்னிப்பு கோர, ‘என்னது அடிச்சானா?’ என்றவாறு அவனை கண்டாள் மாயா.

அந்த பார்வை எல்லாம் நொடிக்கும் குறைவு தான். அவளிற்கு தான் அவளின் இரவு நேர கனவை பற்றி ஓரளவு தெரியுமே. அதனால் மௌனமாக தலை குனிந்தாள்.

எத்தனை நாளா உனக்கு இந்த பிரச்சனை இருக்கு மாயா?” என்று அஷ்வின் வினவ, முதலில் பதில் கூறாமல் சமாளிக்க முயன்ற மாயாவை, அஷ்வினின் அழுத்தமான குரல் பதில் சொல்ல வைத்தது.

சாகர் இறந்ததுல இருந்து.” என்று மென்குரலில் மாயா கூற, “வாட்? ஒன்றரை வருஷமா இதை சரிப்படுத்த முயற்சிக்கலையா?” என்று அதிர்ச்சியுடன் வினவினான் அஷ்வின்.

மாயா அமைதியாக அமர்ந்திருக்க, “உன் குடும்பத்துல ஒருத்தருக்கு கூடவா உன்மேல அக்கறை இல்ல!” என்று கேட்டான் அஷ்வின்.

அவங்க யாருக்கும் இதைப்பத்தி தெரியாது.” என்றவள், தான் இந்த பிரச்னையை தீர்ப்பதற்கான மருத்துவத்தை நாடாததன் காரணத்தையும் கூறினாள்.

அதைக்கேட்ட அஷ்வினோ, “பைத்தியமா மாயா நீ?” என்று உச்சபட்ச கோபத்தில் கத்த, அது மாயாவிற்கு வித்தியாசமாக தோன்றவில்லை போலும். ஆனால், அஷ்வினியின் மனதில் அஷ்வின் மீதான சந்தேக விதையை தூவியது.

அஷ்வினோ உடன்பிறந்தவளின் பார்வை மாற்றத்தை கண்டுகொள்ளாமல், “இப்படி நீ கஷ்டப்படுறதால என்ன யூஸ் இருக்கு மாயா? இல்ல, சாகர் தான் இப்படி நீ கஷ்டப்படனும்னு நினைச்சுருப்பானா?” என்று பேசி மாயாவின் தவறை அவள் உணர்ந்து கொள்ளுமாறு செய்தான்.

நாளைக்கே உன்னோட பிரச்சனைக்காக ஹாஸ்பிடல் போறோம்.” என்று முடிவாக கூறியவனை நிமிர்ந்து பார்த்த மாயா, “சாரி, என்னால உங்களுக்கு தான் ரொம்ப தொல்லை.” என்று கூற, ‘உசுரைக் கொடுத்து பேசியிருக்கேன், அதுக்கு எதுவும் பதில் சொல்லாம, இப்பவும் பழைய பாட்டையே பாடிட்டு இருக்காளே!’ என்று மனதிற்குள் நொந்தான் அஷ்வின்.

அவன் மனக்குரலை உணர்ந்ததைப் போல, “ச்சேச்சே, உன்னால என்ன தொல்லை? அதுவும் சாருக்கு இல்லவே இல்ல தான்!” என்று மாயாவிடம் கூறிய அஷ்வினி, அஷ்வினிடம் திரும்பி, “இல்லடா அண்ணா?” என்று அவனை குறுகுறுவென்று பார்க்க, ‘இவ பார்வையே சரியில்லையே!’ என்று யோசிக்க ஆரம்பித்தான் அஷ்வின்.

சரி மாயா, நீ தூங்கு, குட் நைட்.” என்று அவளிடம் விடைபெற்று, தன் உடன்பிறப்பை கவனமாக தவிர்த்துவிட்டு அறையை விட்டு அஷ்வின் வெளியேற, பாதி காலியாக இருந்த தண்ணீர் போத்தலை எடுத்துக்கொண்ட அஷ்வினி, “நான் போய் தண்ணி பிடிச்சுட்டு வந்துடுறேன்.” என்று வேகமாக மாயாவிடம் கூறிவிட்டு வெளியே வந்தாள்.

அஷ்வின் அவனின் அறைக்கதவை அடைக்கும் கடைசி நிமிடத்தில் அதை தடுத்து, “உன்னோட பேசணும்.” என்றாள் அஷ்வினி.

எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்.” என்று அஷ்வின் கூற, “காலையிலன்னா அம்மா அப்பாக்கு முன்னாடி தான் பேசுவேன். உனக்கு ஓகேவா?” என்று கறாராக கூறினாள் அஷ்வினி.

ஸ்ஸ்ஸ், இப்போ என்னடி வேணும் உனக்கு? நவீன் வேற தூங்கிட்டு இருக்கான்.” என்று சமாளிக்க பார்க்க, “சரி, இதுக்கு மட்டும் பதில் சொல்லு, இன்னைக்கு மாயா மேல அக்கறை ஓவர்ஃபிலோ ஆகுதே! அதுக்கு என்ன காரணம்?” என்றாள் அஷ்வினி.

ஒருநொடி யோசித்தவன், “அவளை லவ் பண்ணி தொலைச்சுட்டேன்! அதான் காரணம்.” என்று கூறிவிட்டான் அஷ்வின்.

அதைக்கேட்ட அஷ்வினி திகைத்து நிற்க, அதை பயன்படுத்திக்கொண்ட அஷ்வின் கதவை மூடிக்கொண்டான்.

என்ன தான், அந்த பதிலை சிறிது எதிர்பார்த்திருந்தாலும், சட்டென்று அவன் அப்படி கூறுவான் என்று எதிர்பார்க்கவில்லை தான். அதனாலேயே அந்த அதிர்ச்சி.

தன் திகைப்பிலிருந்து மீண்ட அஷ்வினி அவனை தேட, மூடியிருந்த கதவே அவளின் கண்களுக்கு புலப்பட்டது.

ச்சே மிஸ்ஸாகிட்டான், நாளைக்கு இருக்குடா இன்வெஸ்டிகேஷன்!” என்று முணுமுணுத்துவிட்டு தன்னறைக்கு சென்றாள்.

சம்பந்தப்பட்ட இருவரும் நன்கு உறங்கியிருந்தனர். அந்த செய்தியைக் கேட்ட அஷ்வினி தான்கொட்ட கொட்டவிழித்திருந்தாள். அவளின் மனதிலோ பல கேள்விகள் தோன்றி அவளை பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தன.

எப்போ இவன் லவ் பண்ண ஆரம்பிச்சுருப்பான்?’

நம்ம கிட்ட எதுவும் சொல்லல?’

அது சரி, இவன் என்னைக்கு வாயை திறந்து வெளிய சொல்லியிருக்கான்?’

இப்படி அவளே மனதிற்குள் பேசிக்கொண்டிருக்க, இடையில் சாகர் பற்றிய எண்ணமும் அவளை சுழன்றடித்தது.

இதன் காரணமாக அவளின் இரவு நேர தூக்கம் மொத்தமாக பறிபோக, அதிகாலையில் தான் கண்ணயர்ந்தாள்.

நன்றாக தூங்கினாலே, தாமதமாக எழுபவள், அன்று மட்டும் வேகமாகவா எழப்போகிறாள்?

அவள் சாவதானமாக எழுந்தமர, கடிகார முள் ஒன்பதை கடந்து சென்று கொண்டிருந்தது.

ஐயையோ!” என்று புலம்பியபடி வேகவேகமாக கிளம்பினாள். அலுவலகத்திற்கு என்று நினைத்தால், அது தான் தவறான விஷயம்!

இரவிலிருந்து மண்டையை பிய்த்துக்கொண்டிருந்த விஷயத்தை அஷ்வினிடம் காலையிலேயே கேட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு தான் அவள் கண்ணயர்ந்ததே! அதற்காக தான், இப்போது அவள் அரக்கப்பறக்க கிளம்பிக்கொண்டிருந்தாள்.

இருபதே நிமிடத்தில் தயாரானவள், கீழே செல்லும்போதேடேய் அண்ணா.” என்று கத்திக் கொண்டே செல்ல, அவளை முறைத்த சித்ரா, “அவன் அப்போவே கிளம்பிட்டான்.” என்று கூறிவிட்டு சாப்பிட அமர்ந்திருந்த நவீன் மற்றும் சம்பூர்ணாவிற்கு பரிமாறினார்.

சித்ரா கூறியதைக் கேட்ட அஷ்வினி தலையில் கைவைத்தபடி, “ப்ச் இப்பவும் தப்பிச்சுட்டானே!” என்று முணுமுணுக்க, அது அஷ்வினை திட்டியதை போல சித்ராவின் காதில் விழுந்திருக்க வேண்டும்.

அவரோ, “நீ சீக்கிரமா எழுந்து கிளம்பாம, அவனை எதுக்கு திட்டிட்டு இருக்க? அவனே மாயாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு அப்படியே வேலைக்கு போகணும்னு இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டான்.” என்றார்.

ஐயோ அம்மா, தேவையில்லாம உங்க பிள்ளைக்கு வாக்காலத்து வாங்காதீங்க. சரியான ஃபிராடு பையனா இருக்கானே!’ என்று மனதிற்குள் புலம்பியபடி சாப்பிட அமர்ந்தாள்.

இவர்களின் சம்பாஷனைகளை கேட்ட சம்பூர்ணா நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, “ஓய் குட்டிவில்லி, என்ன சிரிப்பு?” என்று தன் தட்டை நிரப்பியபடி அஷ்வினி வினவ, “சாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு உங்களுக்கு சொல்லி தரலையா?” என்று நேரம் காலம் தெரியாமல் அவளின் காலை வாரினாள் சம்பூர்ணா.

ஐயோ, இதுங்களும் சேர்ந்து சதி பண்ணுதே!’ என்று பெருமூச்சு விட்டு உணவை காலி செய்து, வாகனத்தை நோக்கி நடைபோட்டாள்.

அப்போது தான், அலுவலகம் என்று ஒன்று இருப்பதும், அங்கு அவளிற்காக காத்திருக்கும் வேலைகளும், முக்கியமாக நிரஞ்சனும் நினைவிற்கு வந்தன(ர்).

இன்னைக்கு நாள் எப்படி இருக்கப்போகுதுன்னு இப்பவே நல்லா தெரிஞ்சுடுச்சு. அடேய் அண்ணா இதுக்கெல்லாம் காரணம் நீதான்டா! பெருசா இருக்குடா உனக்கு.’ என்று மைண்ட் வாய்ஸில் வீரவசனம் பேச, ‘உனக்குமே ஆஃபிஸ்ல பெருசா இருக்கு, வாயை மூடிட்டு கிளம்புறியா?’ என்று அவளின் மனசாட்சி தான் அவளை அடக்கியது.

அவள் வாகனத்தை கிளப்பி சிறிது தூரமே சென்றிருப்பாள், அவளின் அலைபேசி ஒலியெழுப்ப, அந்த பிரத்யேகரிங்டோன்னை கொண்டே அழைத்தது ஜெனி என்று கண்டுகொண்டாள்.

அலுவலகம் தானே செல்கிறோம் என்று அவளின் அழைப்பை ஏற்காமல் இருக்க, மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருந்தாள் ஜெனி.

இவ ஒருத்தி, கால் அட்டெண்ட் பண்ற வரைக்கும் பண்ணிட்டே இருப்பா!’ என்று ஜெனியை திட்டிவிட்டு, வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு, அழைப்பை ஏற்று, “எதுக்குடி சும்மா சும்மா போன் போட்டுட்டு இருக்க? ஆஃபிஸ் தான வந்துட்டு இருக்கேன். என்று கத்தினாள்.

ச்சை நம்ம பிரெண்டு திட்டு வாங்க கூடாதுன்னு கால் பண்ணேன்ல என்னை சொல்லணும்! இதோ இந்த அரைவேக்காடு அக்ஷய் கூட சொன்னான், அவகிட்ட எதுக்கு கால் பண்ணி சொல்றன்னு? ஆனா, நான் தான் அதை கேட்காம உனக்கு கால் பண்ணேன்.” என்று ஜெனி கூற, “இப்போ நான் சொன்னதை எல்லாம் டீடெயில்லா அவளுக்கு எக்ஸ்ப்ளேயின் பண்ணியே ஆகணுமா?” என்று அக்ஷய் ஜெனியை திட்டுவதும் அஷ்வினிக்கு நன்றாக கேட்டது.

அதற்கு ஜெனி ஏதோ கூற, “அட அவசரத்துக்கு பிறந்த அவதார் குட்டிங்களா, எனக்கு போன் போட்டுட்டு நீங்க எதுக்கு சண்டை போட்டுட்டு இருக்கீங்க? அடியேய் ஜெனி, ஓவர் பெர்ஃபார்மன்ஸை குறைச்சுக்கிட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லித்தொலை.” என்றாள் அஷ்வினி.

ஏன்டி இன்னும் வரல? நிரஞ்சன் அப்போவே வந்துட்டாரு. உன் பிளேஸ் பார்த்துட்டு, நீ எங்கன்னு வேற விசாரிச்சாரு. நீ வந்ததும் அவரை பார்க்க வர சொன்னாரு.” என்று நடந்ததை ஜெனி ஒப்பிக்க, “அவர்ர்ரு சீக்கிரமா வரலைன்னா தான் ஆச்சரியம்! ஹ்ம்ம் வாரத்துல முதல் நாளே அந்த ரோபோகிட்ட திட்டு வாங்கணும்னுகாட் ரைட்டிங் இன் மை ஹெட்போல. சரி சரி, நான் வரேன்.” என்று அஸ்ஹவினி கூறியபடி அழைப்பை துண்டித்த வேளையில், அவளின் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்மணி மயக்கமாகி கீழே சரிந்தார்.

அவர் கீழே சரிவதை கண்டதும், வேகமாக செயல்பட்ட அஷ்வினி, அவரை தாங்கிக்கொள்ள முயன்றாள். ஏற்கனவே, வாகனத்தை நிறுத்தியிருந்ததால், அவளால் வேகமாக செயல்பட முடிந்தது. அதற்குள் அவர்களை சுற்றி கூட்டமும் சேர்ந்து விட்டது.

அவர் மயக்க நிலையில் இருப்பதை உணர்ந்த அஷ்வினி, தன் தண்ணீர் போத்தலிலிருந்த தண்ணீரை அவரின் முகத்தில் தெளிக்க, சில நொடிகளில் அவர் கண் விழித்தார்.

அதற்காகவே காத்திருந்ததைப் போல அந்த கூட்டமும் விலகியது.

தன்னை எழுப்பிய பெண்ணை கண்டவருக்கு எங்கோ பார்த்த நினைவு தோன்றினாலும், அதைப் பற்றி அப்போது எதுவும் பேசாமல், “ரொம்ப தேங்க்ஸ் மா.” என்றார்.

பரவால ஆண்ட்டி, யாராவது துணையோட வந்துருக்கலாம்ல.” என்று அஷ்வினி வினவ, அவளின் துறுதுறு சுபாவத்தை கண்டவருக்கு என்ன தோன்றியதோ, “என்னை பார்த்தா வயசானவ மாதிரியா தெரியுது? ஏதோ இன்னைக்கு கொஞ்சம் வெயிலா இருக்கு, அதான் லேசா மயக்கம் வந்துருச்சு.” என்று சமாளித்தார்.

அதைக் கேட்டு கலகலவென்று சிரித்தவள், “செம ஆண்ட்டி. சரி, நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க, நானே டிராப் பண்ணிடுறேன்.” என்றாள் அஷ்வினி.

அவரின் கலாட்டா பேச்சு அஷ்வினிக்கும் பிடித்திருக்க வேண்டும். அதனால் தான், தானே முன்வந்து அவரை அழைத்துச்செல்வதாக கூறினாள்.

உனக்கு எதுக்கு மா சிரமம்? உன்னைப் பார்த்தா வேலைக்கு போற மாதிரி தெரியுது, இதனால, லேட்டாகிடப் போகுது.” என்று அவர் கூற, “ஏற்கனவே அரை மணி நேரம் லேட்டு தான் ஆண்ட்டி. எப்படியும் திட்டு தான் வாங்க போறேன். உங்களை டிராப் பண்ணிட்டு போனாலும் அதே திட்டு தான் கிடைக்கப்போகுது.” என்று அவள் கூற, அவரும் அவளுடன் வர சம்மதித்து அவளின் வாகனத்தில் ஏறினார்.

உன்னை நம்பி ஏறியிருக்கேன் மா, நல்லா ஓட்டுவியா, இல்ல எதாவது மரத்துல மோதிடுவியா?” என்று பயந்ததை போல அவர் வினவ, “என்ன ஆண்ட்டி இப்படி கேட்டுட்டீங்க? என்கூட வரதுக்கு பயந்து இதுவரை என் அம்மாவே வந்தது இல்லைன்னா பார்த்துக்கோங்க.” என்று அஷ்வினியும் சரிக்கு சரி வார்த்தையாடினாள்.

செல்லும் வழியிலெல்லாம் ஓயாமல் அவர்கள் பேசியபடி செல்ல, அவர்கள் பேசியதெல்லாம் தங்களை பற்றியதல்லாமல் பொதுவான கருத்துகளாக இருந்தன.

அதற்குள் அவரின் வீடும் வந்திருக்க, “ஓகே ஆண்ட்டி, இனிமே கவனமா இருங்க.” என்று அஷ்வினி கிளம்ப பார்க்க, அவளைத் தடுத்தவர், “எங்க வாசலோட ஓடப் பார்க்குற? வீட்டுக்குள்ள வந்துட்டு போ.” என்றார்.

இல்ல ஆண்ட்டி, இன்னொரு நாள் வரேன். ஆஃபிஸ் போகணும்.” என்று அஷ்வினி கூற, “எப்படியும் லேட்டா தான போகப் போற, உள்ள வந்து ஒரு காஃபி குடிக்கிறதால தனியா திட்டு வாங்கப்போறியா என்ன?” என்று அவர் சிரிப்புடன் கூற, அவரின் வேண்டுதலை தட்ட முடியாமல் வீட்டிற்கு வர சம்மதித்தாள் அஷ்வினி.

அவர்கள் வந்திருந்தது ஒரு குடியிருப்பு பகுதிக்குள். அங்குபி பிளாக்நான்காம் தளத்தில் தங்களின் வீட்டிருப்பதாக கூறிவிட்டு அஷ்வினியையும் அழைத்துச் சென்றார் அவர்.

மின்தூக்கியில் செல்லும்போது தான், “நான் நேத்து தான் இங்க வந்தேன் மா. என் பையன் கூட சொன்னான், தனியா எங்கயும் போகாதன்னு. நான் தான் அவன் சொன்னதை மீறி கோவிலுக்கு போகணும்னு தனியா போய், மயக்கம் போட்டும் விழுந்தாச்சு. இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சுது அவ்ளோ தான்! சாமியாடிடுவான்.” என்றார்.

அப்போ அவருக்கிட்ட சொல்லாதீங்க ஆண்ட்டி. சோ சிம்பிள்!” என்று தோளைக் குலுக்கியவாறு அவள் கூற, அந்த செய்கை அவருக்கு வேறு யாரையோ நினைவுபடுத்த சில நொடிகள் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரின் பார்வையைக் கண்ட அஷ்வினி, “என்னாச்சு ஆண்ட்டி?” என்று வினவ, “ஒன்னுமில்ல மா, உன் சாயல் எனக்கு ரொம்ப பரிச்சயமா இருக்கு. அதான் உன்னை எங்கயாவது பார்த்துருக்கேனான்னு யோசிக்குறேன்!” என்றார் அவர்.

எனக்கும் கூட உங்களை எங்கயோ பார்த்திருக்க ஃபீலிங் இருக்கு ஆண்ட்டி.” என்று கூற, அப்போது அவரின் வீடும் வந்திருக்க, அந்த பேச்சு அத்துடன் முடிந்தது.

அஷ்வினியை உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தவர், அவளுக்காக தேநீர் தயாரிக்க சமையலறைக்கு சென்றார். அங்கு அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாததால், அஷ்வினியும் சமையலறைக்கு செல்ல, “இங்க எதுக்கு வர? ஓடிப்போய் ஹால்ல உட்காரு, நான் உனக்கு காஃபி எடுத்துட்டு வரேன்.” என்றார் அவர்.

ஹான் ஆண்ட்டி, சும்மா அங்க எப்படி உட்கார? எங்க அம்மா, என்னை கிச்சனுக்கு வாவான்னு கூப்பிட்டாலும் எஸ்கேப்பாகிடுவேன். அப்படிப்பட்டவ இன்னைக்கு உங்க கிச்சனுக்கு வந்துருக்கேன்னா, அது உங்க கிச்சன் செஞ்ச புண்ணியம்!” என்று அஷ்வினி கூற, அதைக்கேட்டு சிரித்தவர், “என்னோட கிச்சன் இல்ல மா, என் பையனோட கிச்சன்.” என்றவர், “என் பையன் கிச்சன் செஞ்ச புண்ணியத்துக்கு இவ்ளோ நேரம் நீ இங்கயிருந்தது போதும். போய் ஹால்ல இருக்க வால் ஹேங்கிங்ஸ், ஃபோட்டோஸ் பார்த்துட்டே இரு. ரெண்டே நிமிஷத்துல வந்துடுவேன்.” என்று அவளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார் அவர்.

அஷ்வினி மீண்டும் கூடத்திற்கு வந்து அவர் கூறியதைப் போல அங்கிருந்த சுவர் தொங்கல்களை பார்த்துக்கொண்டிருக்க, எதேச்சையாக அவளின் கண்கள் அங்கிருந்த புகைப்படத்தில் பட, அந்த புகைப்படத்தை வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாள்.

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 லேட்டா வந்தாலும், தொடர்ந்து மூனாவது நாள் எபி போட்ட உங்க 🌈🔥க்காக ஜோரா கைதட்டுங்க…😜😜😜 

அஷ்வின் பாவம் மக்களே… அவனைக் குட்டி வில்லன் ரேஞ்சுக்கு நினைச்சுட்டீங்க…😂😂😂

கதையை படிச்சுட்டு உங்க கருத்துக்களை ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ என்னோட பகிர்ந்துக்கோங்க…😊😊😊

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
0
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  10 Comments

  1. Kai dhana thattiduvom 👏👏👏👏👏👏👏👏Interesting ud sis ashwin enna posukkunu lov pannadha wini kita sollita super apdi yar photo pathu vaiya polandhutu iruka indha vini waiting for nxt ud sis

   1. vaanavil rocket
    Author

    Nanri sis 😁😁😁
    Haha adhana ena da posukunu sollita… 😂🤣😂
    Yaru photo nu next epi la therinjudum sis😊😊😊
    Tq so much sis😍😍😍

  2. Sangusakkara vedi

   Ashwin confess pannunatha Partha Sagar uyiroda ila .. intha Amma kalaivani Thane….. Antha photo niru Thane …. Niru mattum irukanga Sagar um irukana teriyalaye …

   1. vaanavil rocket
    Author

    Aama dhan polave😑😑😑
    Andha photo la irukiradhu yaru nu next epi la therinjudum sis😊😊😊

  3. Archana

   👏👏👏👏👏அஷ்வினே வில்லன் ரேஞ்சுக்கு எல்லா நினைக்கல🤣🤣🤣🤣🤣🤣 நிரஞ்சன் வீட்டுக்கு தான் வந்திருப்பாளோ இருக்கும் இருக்கும்.

   1. vaanavil rocket
    Author

    Nanri nanri nanri 😊😊😊
    Haha sila peru comments la poturundhanga sis… Aana ashwin ah poi negative role nu sollitanga… Avane pavam Ashwini kita sikkitan😂😂😂
    Irukumo🤔🤔🤔

  4. Janu Croos

   டேய் அஷ்வினு…என்னடா பொசுக்குனு லவ் பண்ணிதொலைச்சுட்டேன்னு சொல்ற…..மெய்யாலுமேவா…..
   இது எப்போல இருந்து டா….சாகருக்கு அந்த சம்பவம் நடந்து ஒருழருஷம் தான் ஆகுது….அந்த சம்பவத்துக்கு அப்புறம் மாயாவ நீ இப்போ தான் பாக்குற….அப்புறம் இது எப்படிடா நடந்திச்சு…..

   ஒருவேளை மயங்கி விழ பாத்தது கலைவாணி அம்மா தானா….அப்போ அஷ்வினி வந்திருக்கது நிரஞ்சன் வீட்டுக்கு தானா…..

   1. vaanavil rocket
    Author

    Adhana ivan unmaiya sonnana ila ava kitta irundhu thappikka sonnana🤔🤔🤔
    Yaru veetuku ashwini vandhuruka nu next epi la therinjudum sis😁😁😁