507 views

சுடர் 14

இந்த ராஜேஷுக்கு மேல எவனோ இருக்கானோன்னு இப்போ சந்தேகமா இருக்கு!” என்ற நிரஞ்சனை அதிர்ச்சியாக பார்த்த சாரதி, “எப்படி டா சொல்ற?” என்று வினவினான்.

அந்த ராஜேஷோட ஃபேஸ் ரியாக்ஷன், பேசுற விதம் எல்லாத்தையும் வச்சு பார்க்கும்போது அப்படி தான் தோணுது. நீயே சொல்லு, அவனை பார்த்தா, அவங்க மாமாவை ஏமாத்தி சாகரை கொல்ல பிளான் பண்ண மாதிரியா இருக்கு? பட் இட் இஸ் ஜஸ்ட் அ வைல்ட் கெஸ். இவனே பிளான் பண்ணதாகவும் இருக்கலாம்.” என்று தோளைக் குலுக்கினான் நிரஞ்சன்.

வெயிட் வெயிட், இப்போ நீ யாரை தான் கல்ப்ரிட்னு சொல்ற?” என்று குழம்பினான் சாரதி. ‘இப்படி ஒரு டிடக்டிவையே புலம்ப வச்சுட்டானே!’ என்று அவன் மனதிற்குள் புலம்பியது தனி கதை.

ஹ்ம்ம், எனக்கும் சரியா தெரியலை. சரி, அந்த போலிச்சாமியார் விஷயம் என்னாச்சு?” என்று கேட்டான் நிரஞ்சன்.

அந்த ஆளு ரொம்ப விவரம் தான். இங்க இந்த பரிகாரத்தை சொன்ன கையோட, ஏதாவது பிரச்சனை வந்தா தப்பிச்சுடலாம்னு நார்த் பக்கம் போயிட்டானாம். அங்க அந்த ஆளுக்கு கொஞ்சம் பொலிட்டிகல் சப்போர்ட் இருக்கும் போல. நம்ம ஆளுங்க அவனை நெருங்கிட்டாங்கன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இன்ஃபார்ம் பண்ணாங்க. நடந்த கூத்துல, உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். எப்படியும் இன்னைக்கு நைட் ஆளை தூக்கிடுவாங்க.” என்று சாரதி கூறிக்கொண்டிருக்க, நிரஞ்சனோ, “இப்போ கூட எனக்கு இவங்களுக்கு பின்னாடி யாரோ இருக்காங்கன்னு தோணுது.” என்றான்.

*****

அஷ்வினும் அஷ்வினியும், மாயா, நவீன் மற்றும் சம்பூர்ணாவை அழைத்துக்கொண்டு தங்களின் வீட்டிற்கு சென்றனர்.

அந்த வாகனத்தில் அமர்ந்திருந்த அனைவரும் தங்களின் சிந்தனையில் மூழ்கிப்போக, இளையவர்கள் இருவரும் தங்களை மறந்த உறக்கத்திற்கு சென்றனர்.

அஷ்வினி மற்றும் மாயாவின் சோர்ந்த முகத்தை கண்ட அஷ்வின், இடையில் இருந்த கடையில் வாகனத்தை நிறுத்தி, “ரெஃப்ரெஷ் பண்ணிக்கோங்க.” என்று இருவரிடமும் பொதுவாக சொன்னவன், அஷ்வினியிடம், “ஒரு காஃபி வாங்கி வை வினி. கால் பேசிட்டு வந்துடுறேன்.” என்றான்.

அஷ்வினி அவனை புருவம் சுருக்கி பார்க்க, அவனோ மாயா பார்க்காத நேரம், “வீட்டுக்கு.” என்று வாயசைத்தான்.

அதில் சமாதானமான அஷ்வினி மாயாவையும், தூங்கி எழுந்த நவீன் மற்றும் சம்பூர்ணாவையும் கடைக்குள் அழைத்துச்சென்றாள்.

வெகு நேரமாக வைப்ரேஷனின் இருந்த அலைபேசியை எடுத்த அஷ்வின் அதில் தெரிந்த பெயரைக் கண்டு ஒரு பெருமூச்சுடன் அந்த அழைப்பை ஏற்றான்.

அழைப்பை ஏற்றதும் மறுமுனையிலிருந்தவனை பேசவே விடாமல், “எதுக்கு இவ்ளோ கால்ஸ்? நான் ட்ராவல்ல இருப்பேன்னு முன்னாடியே சொன்னேன் தான.” என்றான் அஷ்வின்.

“…”

ஹ்ம்ம், ஆமா அவங்களோட தான் போயிட்டு இருக்கேன். எங்க வீட்டுக்கு தான் கூட்டிட்டு போறேன். நம்ம பிளான் எப்படி போயிட்டு இருக்கு?”

“…”

ஹான், அஷ்வினியும் நான் சொன்னதை நம்பிட்டா.”

“…”

ஓகே, நான் பார்த்துக்குறேன்.” என்றதோடு அந்த அழைப்பை துண்டித்தான் அஷ்வின்.

அப்போது பின்னிலிருந்து, “என்ன பேசிட்டியா?” என்று வினவினாள் அஷ்வினி.

அவளை அங்கு எதிர்பார்க்காத அஷ்வினோ திகைத்து தான் போனான். அதிர்ச்சியிலிருந்து மீண்ட நொடி, தான் பேசியதை கேட்டிருப்பாளோ என்ற சந்தேகம் ஏற்பட, அவளின் முகத்தை ஆராய்ந்தான். அது நிர்மலமாகவே இருக்க, சற்று ஆசுவாசமானான்.

ஹே, என் முகத்தையே ஏன் புதுசா பார்க்குற மாதிரி பார்த்துட்டு இருக்க? என்னாச்சு வீட்டுல பேசுனியா?” என்றாள் அஷ்வினி.

அவளின் முகம் காணாமல், “லைன் போகல, பிஸின்னு வந்துச்சு.” என்றவாறே அவளிடமிருந்து தப்பிக்க கடைக்குள் சென்றான்.

பேசுன சத்தம் கேட்டுச்சே?’ என்று யோசித்தவாறு பின்தொடர்ந்தவளை சம்பூர்ணா தன் பேச்சிற்குள் இழுக்க, தன் சந்தேகத்தை கேட்க மறந்தாள் அஷ்வினி.

மீண்டும் அவர்களின் பயணம் துவங்க, சென்ற முறை போல் அல்லாது சற்று கலகலப்பாகவே இருந்தது அந்த பயணம்.

சில நிமிடங்களிலேயே அந்த வாகனம் இரட்டையர்களின் வீட்டை அடைந்தது. அத்தனை நேரமிருந்த பேச்சு சத்தம் சட்டென்று நின்று போக, அஷ்வினி இளையவர்களின் புறம் திரும்பிப் பார்த்தாள்.

புதிய வீட்டைக் கண்டவர்களின் முகம் பயத்தை தத்தெடுத்திருப்பதை கண்டவள், அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டே மாயாவை பார்க்க, அவளின் முகமும் அதே பாவனையில் இருப்பதை கண்டாள்.

அந்த வீட்டையே பார்த்துக்கொண்டிருந்த மாயாவின் கவனத்தை தன் புறம் திருப்பி, அவளை கண்களாலேயே வெளியேற சொல்லியவள், அவளும் வெளியேறினாள்.

இவளே ஸ்டான்னாகி இருக்கா! இதுல அவங்களை எப்படி சமாதானப்படுத்த சொல்றது?’ என்று எண்ணியவள், அந்த வேலையை தானே செய்ய நினைத்து, மாயா உட்கார்ந்திருந்த பின்பக்க இருக்கையில் அமர்ந்து சிறியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாள்.

அப்போது, வாகன சத்தத்தை கேட்டு வெளிவந்தனர் சரவணன் சித்ரா தம்பதியர்.

காலையில், அஷ்வினியின் செய்கைகளை பற்றி கணவன் கூறியபோதிலிருந்தே சித்ராவிற்கு உள்ளுக்குள் படபடப்பாகவே இருந்தது. இதில், அவ்வபோது அலைபேசியில் யாரிடமோ உரையாட, ஏதோ பிரச்சனை என்று முடிவே செய்து விட்டார்.

அவரும் பல கேள்விகளால் கணவனை குடைய, எதற்கும் உருப்படியான பதில் கிட்டவில்லை. ஒருவித பதற்றத்துடன் நடமாடியவருக்கு, அந்த வாகன சத்தம் கேட்க, வேகமாக வெளியே வந்தார்.

மகளின் நிலையறிய வெளியே வந்தவருக்கு முதலில் காட்சியளித்தது அஷ்வினும், அவனருகே நின்றிருந்த பெண்ணும் தான்.

மகளை பற்றிய பதற்றம் இல்லையென்றால் அங்கு நிலவும் சூழலை சரியாக கணித்திருப்பாரோ! ஆனால், இப்போது பதற்றத்துடன் காலையில் மழுப்பலாக விடை கூறிவிட்டு சென்ற மகனின் முகமும் நினைவு வர, சரியான முறையில் தவறாக யூகித்தார்.

என்னடா இது? இதுக்கு தான் காலைல அவ்ளோ சீக்கிரமா கிளம்புனியா?” என்றவருக்கு நேரம் காலம் தெரியாமல் அஷ்வினி கூறியது நினைவிற்கு வந்தது.

ம்மா, நீங்க ரொம்ப ஓவரா தான் அவனுக்கு செல்லம் கொடுக்குறீங்க. பார்த்துட்டே இருங்க, என்னைக்காவது ஒருநாள் திருட்டுக்கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்க போறான். அன்னைக்கு பார்த்துக்குறேன் உங்களை.” என்று மகள் அன்று வழக்காடிய பொழுது கூட, “அவனெல்லாம் அப்படி பண்ணமாட்டான்டி. இவ்ளோ வாய் பேசுறியே, எனக்கு பயமெல்லாம் உன்னைப் பத்தி தான்!” என்று மகனிற்கு ஆதரவாக அன்று பேசியதெல்லாம் நினைவிற்கு வந்தது.

சித்ரா மலரும் நினைவுகளுக்குள் செல்ல, அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட அஷ்வினிற்கு அன்னை கூறியது அப்போது தான் விளங்கியது.

அவன் அதற்கு மறுப்பு கூறப்போகும் சமயம், சரியாக அஷ்வினி பின்பக்க கதவை திறந்து கொண்டு இறங்க, “நீயுமாடி இதுக்கு உடந்தை?” என்று சித்ரா வினவினார்.

சித்ராவின் முகபாவனைகளை கவனித்திருந்தால் சற்று சுதாரித்திருப்பாளோ! அவள் நினைத்ததெல்லாம், தாய் மாயாவை அழைத்துக்கொண்டு வந்ததை பற்றி கேட்கிறார் என்பது தான்.

ஆமா.” என்றுவிட்டு அஷ்வினை காண, அவனோ வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டான்.

அவனின் செயலை குழப்பமாக அஷ்வினி பார்த்துக்கொண்டிருக்க, சூழ்நிலையைக் கையாள வேண்டி சரவணன் முன்வந்தார்.

சித்ரா, எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம்.” என்று கூற, அதுவரையில் சற்று சாந்தமாக இருந்தவர் எகிற ஆரம்பித்துவிட்டார்.

என்ன பேசுறீங்க? இவன் நமக்கு தெரியாம திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணிட்டு வருவான். அதை ஏத்துகிட்டு, உள்ள வர சொல்லனுமா?” என்று சரவணனிடம் கத்திக்கொண்டிருந்தார் சித்ரா.

எதே! திருட்டுக்கல்யாணமா? இது எப்போ நடந்துச்சு?’ என்று நினைத்தவாறே அஷ்வினை ஏறிட்டு பார்க்க, அவனோ நடக்கும் நிகழ்வுகளை பாவமாக பார்த்துக்கொண்டிருந்தான். அவனருகே இன்னும் பாவமாக நின்றிருந்தாள் மாயா!

அங்கிருப்பவர்களின் பாவனைகளை கண்டவளிற்கு சிரிப்பு பீறிட்டு எழ, முயன்று அதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

சரவணன் அவரின் மனைவியை எப்படியோ சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றார். செல்லும் முன்னே மகனிடம் உள்ளே வருமாறு சைகை செய்ய தவறவில்லை.

அவர்கள் உள்ளே சென்றதும், நீண்ட பெருமூச்சை விட்டது அஷ்வினாக அன்றி வேறு யாராக இருக்க முடியும்!

நடந்த களேபரத்தில், வாகனத்தை விட்டு வெளியே இறங்க முயன்ற இருவரும், கேட்ட சத்தத்தில் பயந்து மீண்டும் உள்ளேயே இருந்து கொண்டனர்.

அஷ்வினிக்கும் இப்போது தான் அவர்களின் நினைவு வர, ‘ஐயோ, இப்போ தான் அவங்களை சமாதானப்படுத்தி வெளியே வர சொன்னேன். இந்த அம்மா கத்துனதுல திரும்ப உள்ளேயே போயிட்டாங்க போல.’ என்று மனதிற்குள் புலம்பியவாறு, மீண்டும் அவர்களை சமாதானப்படுத்த சென்றாள்.

இருவரையும் வாகனத்தை விட்டு வெளியே அழைத்து வந்தவள், அங்கு தயங்கிக்கொண்டே நின்ற மாயாவிடம் பார்வையை வீசிவிட்டு, அஷ்வினின் அருகே சென்றவள், “நல்ல வேளை, அம்மா இந்த சிறுசுங்களை பார்க்கல. பார்த்திருந்தா, பிள்ளைங்களே பிறந்துடுச்சான்னு இன்னும் ஷாக்காகியிருப்பாங்க! ஹாஹா.” என்று முணுமுணுத்துவிட்டு சிரிக்க, அவளை முறைத்தான் அஷ்வின்.

ப்ச் வினி, என்ன பேச்சு இது? மாயா இருக்க நிலைமைல இப்படியெல்லாம் பேசுனா ஹர்ட் ஆக மாட்டாளா?” என்று அவனும் மெல்லிய குரலில் கண்டனத்தை தெரிவிக்க, “ஷப்பா, இது ஜஸ்ட் அ ஜோக்இதுக்கு எதுக்கு இவ்ளோ ரியாக்ட் பண்ற? யாருக்கிட்ட எப்போ எப்படி பேசணும்னு எனக்கு தெரியாதா? இதுக்கு தான் ஓல்டிஸ் கூட சேராதன்னு சொல்றது!” என்று இறுதி வரியை மட்டும் முணுமுணுத்தாள்.

இவர்கள் இருவரும் மெல்லிய குரலில் பேசுவதை கண்ட மாயாவிற்கு தான் சங்கடமாக இருந்தது. முதலில் இங்கு வரவே தயங்கியவளிற்கு, இப்போது இங்கு நிலவும் சூழல் சங்கடத்தை தராவிட்டால் தான் ஆச்சரியம்.

வினி…” என்று மென்குரலில் அவள் அழைக்க, அவள் அழைப்பிற்கான காரணத்தை சரியாக யூகித்தபடி, அவளிற்கு பேசுவதற்கான அவகாசத்தை தராமல், “வாங்க வாங்க உள்ள போவோம்.” என்று அவர்களை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் அஷ்வினி.

உள்ளே நுழைந்ததும் அவர்கள் கண்டது, சரவணன் சித்ராவிற்கு நடந்ததை விளக்கும் காட்சியை தான். விளக்க காட்சியின் இறுதி கட்டத்தில் வந்திருப்பர் போலும், வந்தவர்களை நோக்கி சமாளிப்பு புன்னகையை செலுத்தினார் சித்ரா.

என்ன மிசஸ். சித்ரா, உங்க ஹஸ்பண்ட் எல்லாத்தையும் விளக்கிட்டாரு போல. ஆனாலும், உங்க பிள்ளை மேல இவ்ளோ நம்பிக்கை இருக்கக்கூடாது. நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல, திருட்டுக்கல்யாணம்! ஹ்ம்ம் அன்னைக்கு மட்டும் உங்க பிள்ளைக்கு கொடி பிடிச்சீங்க?” என்று வேண்டுமென்றே அன்னையை வம்பிழுத்தாள் அஷ்வினி.

சும்மா இருடி!” என்று அவளைத் திட்டியவர், நேரே சென்றது மாயாவிடம் தான்.

சாரி மா, ஏதோ தெரியாம, டென்ஷன்ல பேசிட்டேன். தப்பா எடுத்துக்காத. இந்த அஷ்வின் பையனும் அவங்க அப்பாவும் என்கிட்ட எதுவும் சொல்லாம மறைச்சுட்டாங்க.” என்று கூறியவர், ஓரக்கண்ணில் அஷ்வினையும் சரவணனையும் முறைக்க தவறவில்லை.

அவரை சமாதானப்படுத்த அருகில் வந்த அஷ்வினை தோளில் அடித்தவர், “அதென்ன உங்க அப்பா கிட்ட மட்டும் ரகசியம் பேசுறது! ஏன், என்னையெல்லாம் பார்த்தா ஆளா தெரியலையா?” என்று கேள்வியெழுப்ப, அஷ்வின் பதிலளிப்பதற்குள், “சரியான கேள்வி மம்மி! அவனை சும்மா விடாதீங்க.” என்று எடுத்துக் கொடுத்த அஷ்வினி, நின்று கொண்டிருந்தவர்களை அங்கிருந்த நீள்சாய்விருக்கையில் அமரச்செய்து, “எல்லாரும் கம்ஃபர்டேபிளா உட்கார்ந்து இந்த டிரமாவைப் பாருங்க.” என்று அவர்களிடம் கிசுகிசுத்தாள்.

ம்மா, பாருங்க இப்போவே எவ்ளோ டென்ஷனாகிட்டீங்க! இதுல முன்னாடியே சொல்லியிருந்தா, நாங்க வரவரைக்கும் இப்படி தான் சுத்திட்டு இருந்துருப்பீங்க. அப்பறம் பிபி அதிகமாகி போன முறை மாதிரி மயக்கம் போட்டு ஹாஸ்பிடல் தூக்கிட்டு ஓடியிருக்கணும். இதெல்லாம் தேவையா மா? இப்போயாச்சும் புரிஞ்சுதா, எல்லாம் உங்களுக்காக தான் ம்மா.” என்று கூறி அவரை அணைக்க, மகனின் இறுதி வார்த்தைகளில் வீழ்ந்து தான் போனார் சித்ரா.

ஒத்த வார்த்தையில கவுத்துட்டான்!” என்று அஷ்வினி கமென்டரி கொடுக்க, அதற்கு மற்றவர்கள் சிரிக்க என்று கலகலப்பாக கழிந்தன அந்த நிமிடங்கள்.

சரவணனின் முன்னெச்சரிக்கையின் காரணமாக, மாயாவின் குடும்பத்தை பற்றி விசாரிக்காமல், மூவரின் படிப்பு, பிடிப்பு என்று போனது அங்கு நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள்.

டிராவல் பண்ணது டையர்ட்டா இருக்கும், வினி மா, இவங்களுக்கு மேல இருக்க உன் ரூமுக்கு கூட்டிட்டு போ. ஃப்ரெஷ்ஷப்பாகட்டும்.” என்று சரவணன் கூற, அவர்களை அழைத்துச் சென்றாள் அஷ்வினி.

சற்று நேரத்திற்கு முன்பிருந்த பயம் விலகியிருந்தது மூவருக்கும். அது அஷ்வினி குடும்பத்தின் கலகலப்பான பேச்சினால் தான் என்பதில் ஐயமில்லை.

பணம், பரிகாரம் என்று அலைந்து கொண்டிருக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கு, இந்த குடும்பத்தினரிடையே இருந்த அன்யோனியம், அன்பு, பாசம் எல்லாம் ஆச்சரியத்தையே கொடுத்தது. அதிலிருந்து மீளாமலேயே அஷ்வினியின் அறைக்கு சென்றனர் மூவரும்.

இது தான் என்னோட ரூம், எப்படி இருக்கு?” என்று ஆர்வத்துடன் அஷ்வினி வினவ, அவளின் கேள்விக்கு தான் பதில் வரவில்லை.

என்னவென்று திரும்பிப்பார்த்த அஷ்வினி கண்டது, இன்னமும் வியப்பிலிருந்து வெளிவராதவர்களை தான்.

ஹே என்னாச்சு எல்லாருக்கும்? ஏன் இப்படி ஷாக் ரியாக்ஷன் கொடுக்குறீங்க?” என்று அவள் வினவ, “உங்க வீட்டுல இப்படி தான் எல்லாரும் ஜாலியா இருப்பீங்களா? எங்க வீட்டுல எல்லாம் இப்படி இருக்க மாட்டாங்க தெரியுமா.” என்றாள் சம்பூர்ணா.

அவளின் குரலிலிருந்தே அவளின் வருத்தத்தை அறிந்த அஷ்வினி, ஆதரவாக அவளை வருடியபடி, “இனிமே நம்ம எல்லாரும் ஜாலியா இருக்காலம்.” என்று கூறி அவளை சமாதனாப்படுத்தினாள்.

மற்ற இருவரையும் கண்டவள், “என்ன உங்களையும் இப்படி சமாதானப்படுத்தனுமா?” என்று கேட்டுக்கொண்டே நவீன் அருகே செல்ல, அவன் அங்கிருந்த குளியலறைக்குள் சென்று மறைந்தான். அதைக் கண்டு மற்றவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.

*****

சரிடா நான் கிளம்புறேன். அந்த போலிச்சாமியாரை இங்கயே கொண்டு வந்துட சொல்லு. நான் மண்டே வந்து பார்த்துக்குறேன்.” என்று கிளம்பினான் நிரஞ்சன்.

டேய், சித்தி எப்படி இருக்காங்க?” என்று சாரதி தயக்கமாக வினவ, “ஹ்ம்ம் இருக்காங்க டா. எங்களுக்காக வெளிய சிரிச்சுட்டு இருக்க மாதிரி காட்டிக்கிட்டாலும், உள்ளுக்குள்ள அவங்க வேதனையில தான் இருக்காங்க.” என்ற நிரஞ்சன் அவனின் வாகனத்தை கிளப்ப, அவர்களின் குடும்பத்தைப் பற்றி நன்கறிந்த சாரதி பெருமூச்சுடன் அவன் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான்.

*****

கலைவாணி, கல்யாணம் முடிந்து குழந்தை பிறந்த இரண்டு மாதங்களிலேயே, கணவன் தவறானவன் என்று தெரிந்ததும், கணவனை விட்டு பிரிய முடிவெடுத்தவர்.

அவரின் காலத்தில், அது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அவரின் உறுதியான முடிவிற்கு அவரின் குடும்பமும் துணையாக இருந்தது உண்மை.

ஆனால், பிரிந்ததற்கு பின்னர், அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ளவர்கள் அவர் காதுபடவே தவறாக பேசினர். அவர் வீதியில் நடந்தால், அவரின் மீது விழும் வக்கிர பார்வையும், ஆசூசை பார்வையும் பல நாட்கள், அவரின் முடிவு தவறோ என்று கூட எண்ண வைத்திருக்கிறது.

அந்த எண்ணங்கள் எல்லாம் மழலைகளான சாகரையும், அவனின் விரல் பிடித்து கொஞ்சியபடி இருக்கும் நிரஞ்சனையும் காணும் வரையில் தான்.

கலைவாணி அவரின் கணவனிடமிருந்து பிரிந்த சில நாட்களிலேயே நிரஞ்சனின் பெற்றோர் இறந்துவிட, அக்கா மகனை பார்க்கும் பொறுப்பையும் கலைவாணியே எடுத்துக்கொண்டார்.

தன் வாழ்வின் இலட்சியம், அந்த இரு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது தான் என்பதில் பிடிவாதமாக இருந்தவர், அதை நடத்தியும் காட்டினார்.

பல இழப்புகளை அந்த குடும்பம் சந்தித்திருந்தாலும், அதிலிருந்து மீண்டுவர காரணமாக இருந்தவர் கலைவாணி என்று கூறினால், அது மிகையில்லை.

நிரஞ்சன் பொறுப்பாக இருந்து அவரின் சுமையை குறைத்து மனதை குளிர்விப்பவன் என்றால், சாகரோ தாயின் பின்னாடியே சுற்றி பாசத்தினால் அவரை கட்டிப்போடுபவன்.

அப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்வின் கருப்பு தினமாக வந்தது அந்த நாள். சாகர் மலையிலிருந்து கீழே விழுந்து விட்டான் என்ற செய்தி கிட்டிய நாள். ஆறுதலாக தோள் சாய நிரஞ்சனும் அருகில் இல்லாமால் போன நாள். எத்தனை துன்பம் வந்திருந்தாலும், எதிர்த்து நின்ற கலைவாணியை, மொத்தமாக கலங்கச்செய்த நாள்!

அன்றைய நிகழ்வை நினைத்துக்கொண்டே பயணித்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன். அத்தகைய சூழலில், சித்தியின் அருகில் இல்லாமல் போய் விட்டோமே என்ற குற்றவுணர்ச்சி நிரஞ்சனை இப்போதும் கூட வாட்டத்தான் செய்தது.

*****

அதே நேரம், நிரஞ்சன் சந்தேகப்பட்ட அவன்’, பட்டப்பகலில் அவனின் வீட்டிலிருந்த நீச்சல் குளத்தில் கண்களை மூடியபடி மிதந்து கொண்டிருந்தான்.

மனதின் வெம்மையை நீரில் மூழ்கி நீக்க முயன்றானோ. எத்தனை குளிர்ச்சியாக இருந்தாலும் அந்த நீரினால், அவனின் மனவெம்மையை போக்க முடியாது என்பதை நன்கறிந்திருந்தான்.

இன்னும் உங்களை கதற விடுறேன்டா! அப்போ தான் ரொம்ப நாளா என் மனசுக்குள்ள கொழுந்துவிட்டு எரியுற தீ அடங்கும்.” என்று கர்ஜித்தான் அவன்.

யார் அவன்?

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 “என் காதல் சுடர் நீயடா(டி)” கதையோட அடுத்த அத்தியாயம் போட்டாச்சு… கதையைப் படிச்சுட்டு உங்க கருத்துக்களை காயின்ஸ் மூலமாவோ, ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ சொல்லுங்க…

இப்படிக்கு,

உங்க 🌈🔥

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  11 Comments

  1. Archana

   யார் டா அவன் ஒரு வேலை சாகர் அப்பாவா இருக்குமோ🤔🤔🤔

  2. Janu Croos

   எவன்டா அந்த புது கோமாளி…என்ன காரணத்துக்காக சாகர கொல்ல சொல்லி அந்த ராஜேஷ தூண்டி விட்டான்….நிரஞ்சனோட கெஸ்ஸிங் அவன் தான்னா அவன நிரஞ்சனுக்கு தெரியுமா?
   அஷ்வின் யாருகூட ஃபோன்ல பேசினான்…அவனோட பிளான் என்ன….ஒவ்வொருத்தனும் எவ்வொரு ரகமாவே இருக்கானுகளே…..

   1. vaanavil rocket
    Author

    Haha andha pudhu komali ya ini vara episode la pakalam 😁😁😁
    Niranjanuku theriyuma nu enaku theriyalaiye ketu solren sis😜😜😜
    Haha aama ovvonum mathahduku salaichadhu ila🤣🤣🤣

  3. Interesting ud sis nice niranjan sandhega padura mari oruthan irukan yara irukum semmma ah pogudhu stry

  4. Sangusakkara vedi

   Oru vela sagar uyiroda irukano…. Avanum ashwinum kootu kalavani thanam panrangalo…. Yar da antha villan ….

   1. vaanavil rocket
    Author

    Aww idhu kooda nalla iruke… Sagar – Ashwin combo nalla dhan irukum polaye😁😁😁

  5. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.