540 views

சுடர் 13

ஹலோ அண்ணா.”

ஹே சகு, என்னடா காலைலயே போன் பண்ணியிருக்க?”

இன்னைக்கோட செமஸ்டர் முடியுது ண்ணா.”

ஓ சரி சரி, வழக்கம் போல இன்னைக்கு உன் பிரெண்டு வீட்டுக்கு போயிட்டு, நாளைக்கு தான் வீட்டுக்கு போறியா?”

ஆமா ண்ணா, அதுல ஏதாவது சேஞ் ஆனா, மேடம் பத்ரகாளியா மாறிடுவாங்க. அப்பறம் இந்த முறை, வினியையும் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் ண்ணா. இத்தனை வருஷம் ஆச்சு, இன்னும் கூட்டிட்டு வரலன்னு அம்மா வேற போன் போட்டு திட்டுறாங்க. என்னமோ, நான் தான் இவளை வர வேண்டாம்னு சொன்ன மாதிரி.”

ஹாஹா, ஒரு பழமொழி சொல்லுவாங்கள, கொரங்குக்கு வாக்கப்பட்டா…”

ஹாஹ்ஹா, ண்ணா நீங்க அவளை கொரங்குன்னு சொன்னது மட்டும் அவளுக்கு தெரிஞ்சது, உண்மைலேயே பிராண்டி வச்சுடுவா! ஹாஹா…”

சரி, ஜோக்ஸ் அபார்ட் சகு, சேஃபா போயிட்டு நல்லா என்ஜாய் பண்ணுங்க. போயிட்டு எனக்கு மெசேஜ் பண்ணு. நாளைக்கு வேலை விஷயமா ஜெர்மனி போறேன். சோ, உனக்கு கால் பண்ண முடியாதுன்னு நினைக்குறேன். ஹவ் அ சேஃப் ஜர்னி.”

ஸ்யூர் அண்ணா, வேலைன்னு ஜெர்மனிலாம் போறீங்க, இங்க இந்தியா எட்டிப்பார்க்க மட்டும் கசக்குதா ண்ணா? அம்மா தான் புலம்பிட்டே இருக்காங்க. சீக்கிரம் இங்க வரவழியைப் பாருங்க ண்ணா.”

வழி தான, அதை நீ தான் ஏற்படுத்தணும்னு நினைக்குறேன்.”

ஏற்படுத்திட்டா போச்சு. நாளைக்கே, எனக்கு அவசர கல்யாணம்னு ஒரு போனை போட்டு உங்களை பதறடிச்சு இங்க வர வைக்குறேன்!”

ஆஹான், முதல்ல போன் வரட்டும், அப்பறம் நான் பதறியடிச்சு வரதை பத்தி யோசிக்கலாம். சரி சகு, லேட்டாச்சு. அநேகமா நெக்ஸ்ட் நீ ஊர்ல இருக்கும்போது தான் கால் பண்ணுவேன்னு நினைக்குறேன். பை டேக் கேர்.”

பை அண்ணா. வில் மிஸ் யூ!”

வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த நிரஞ்சனின் நினைவுகளை ஆக்கிரமித்தது இந்த உரையாடல்களே.

நிரஞ்சனின் ‘சகு’ கூறியது போல, அவனிற்கு அழைப்பு வந்தது. ஆனால், அதில் சொல்லப்பட்ட தகவலை நினைத்தால் இப்போதும் கலங்கும் கண்களை கட்டுப்படுத்த முடியாது நிரஞ்சனால்.

“டேய் நிரஞ்சா, நம்ம சாகர் நம்மளை விட்டு போயிட்டதா என்னவோ சொல்றாங்கடா. எனக்கு ஒண்ணுமே புரியலடா!” என்ற சித்தியின் கதறலை தொடர்ந்து, “சீக்கிரம் கிளம்பி வா நிரஞ்சா.” என்ற தாத்தாவின் சுரத்தே இல்லாத குரலும் தான் நிரஞ்சனை வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டிற்கு கிளம்பி வரச்செய்தது.

*****

அந்த பிற்காலை வேளையிலும் கூட தலைவலியின் காரணமாக தேநீர்க் கடையில் நின்றிருந்தான் சாரதி. யாருமற்ற கடையில் தனியே நின்று தேநீரை பருகிக் கொண்டிருந்தவனின் அலைபேசி ஒலித்தது.

“ச்சே, நிம்மதியா டீ கூட குடிக்க விட மாட்டிங்குறாங்க!” என்று புலம்பியபடி அலைபேசியை நோக்கியவன், மாயா குடும்பத்தினரை கடத்தி வைத்திருக்கும் இடத்திலுள்ள அவனின் ஆள் அழைப்பதாக காட்டியதும் சிறிது பதற்றமானான்.

அழைப்பை ஏற்று காதில் வைத்ததும், ‘ஹலோ’ என்று கூட சொல்லாமல், “என்னாச்சு ரவி?” என்று பரபரப்பாக வினவினான் சாரதி.

“சார், உங்க பிரெண்டு இங்க வர்றாராம்.” என்று மறுமுனையில் இருந்தவனும் சற்று பதற்றமாகவே கூற, “ஊருக்கு போறேன்னு தான சொன்னான், இப்போ என்ன திடீர்னு இங்க வரான்?” என்று சாரதி முணுமுணுப்பதைக் கேட்ட மறுபுறத்தில் இருந்தவன், “சார், அவரு கோபமா வர்றாராம்!” என்று கூறினான்.

குடித்துக்கொண்டிருந்த சூடான தேநீர் வாயை பதம்பார்க்க, அதே நேரத்தில் அந்த ரவி சொன்ன செய்தி காதின் வழியாக மூளையை பதம்பார்த்தது போலும்!

“எது, கோபமா வர்றானா? நீ… நீ என்ன பண்ணு, அவனை எப்படியாவது அந்த அஞ்சு பேர் இருக்க ரூமுக்குள்ள அனுப்பாம சமாளி, நான் வந்துட்டே இருக்கேன்.” என்று கூறிக்கொண்டே, அவனின் வாகனத்தை கிளப்பினான்.

“யோவ், டீக்கு காசு கொடுத்துட்டு போய்யா.” என்று அந்த தேநீர்க் கடை உரிமையாளரின் குரல் கேட்டதும், “அக்கவுண்ட்ல வச்சுக்கோ. இனி, கொஞ்ச நாள் இங்க தான் இருப்பேன். மொத்தமா செட்டில் பண்ணிடுறேன்.” என்று கூறியபடி, வாகனத்தை செலுத்தினான்.

“ஹ்ம்ம், டெயிலி இப்படி ஒருத்தன் வந்துடுறான்!” என்று புலம்பியபடியே யாருமில்லாத கடையில் தேநீர் ஆற்ற சென்றார் அந்த கடையின் உரிமையாளர்.

வாகனத்தில் பயணிக்கும்போதும் கூட ஊடலையின் வழியாக, “என்னாச்சு? அவன் வந்துட்டானா?” என்று பலமுறை கேட்டு உறுதிபடுத்திக்கொண்டே சென்றான் சாரதி.

சில நிமிடங்களிலேயே, எதிரில் உள்ளவற்றை அடித்து நொறுக்கும் கோபத்துடன், அந்த கட்டிடத்தின் உள்ளே நுழைந்தான் நிரஞ்சன்.

அவனைக் கண்ட ரவி, “சார், உங்க பிரெண்டு வந்துட்டாரு.” என்று சாரதிக்கு தகவல் சொல்ல, “அடேய், எப்படியாவது அவனை உள்ள போக விடாம தடுங்க டா, இல்ல கொலை கேஸ்ல உள்ள போயிடுவோம்!” என்று அலறினான் சாரதி.

சரியாக அதே சமயம், சாரதியிடம் பேசிக்கொண்டிருந்த ரவியிடம் வந்த நிரஞ்சன், “அந்த ***** ராஜேஷ் எங்க?” என்று வினவினான்.

ரவி அவர்கள் இருந்த அறை பக்கம் கைகாட்ட, நிரஞ்சன் அந்த அறைக்குள் நுழைய முயன்றான்.

அப்போது வேகமாக வந்த சாரதி, “டேய் நிரஞ்சா, நீ இங்க என்னடா பண்ற?” ஊருக்கு போலயா?” என்று வினவியபடி வந்தான்.

நிரஞ்சன் கோபத்தை வெகு சிரமப்பட்டு அடக்குவது அவன் முகபாவனையை வைத்தே சாரதிக்கு நன்கு தெரிந்தது. அவனை அங்கிருந்து வேறு அறைக்கு அழைத்து வந்திருந்தான்.

“அந்த ***** ராஜேஷை பார்க்க வந்தேன்.” என்று பல்லைக் கடித்துக்கொண்டு நிரஞ்சன் கூற, “உன்னைப் பார்த்தா, பார்க்க வந்த மாதிரி தெரியலையே.” என்று முணுமுணுத்த சாரதி, “எதுக்குடா இவ்ளோ கோபம்?” என்றான்.

“இவ்ளோ நாளா, தப்பு பண்ண சந்தானமூர்த்தி ஜெயில்ல இருக்காருன்னு நினைச்சு, உண்மையை விசாரிக்காம விட்டது என்னோட தப்பு தான். அதுக்கு தான் என்மேலேயே எனக்கு கோபம்.” என்று கூறிய நிரஞ்சனை குழப்பமாக பார்த்தான் சாரதி.

சாரதிக்கு விளக்க வேண்டி தனக்கு கிடைத்த தகவலை அவனிடம் பகிர்ந்தான் நிரஞ்சன்.

“நிரஞ்சா, இந்த சுமார் மூஞ்சி குமார் தான் சாகரை கொன்னுறுப்பான்னு இன்னும் என்னால நம்ப முடியல.” என்று சாரதி அதிர்ச்சியடைய, “இப்படி தான் பலர் தங்களோட உருவத்தை வச்சு ஏமாத்திட்டு இருக்காங்க.” என்றவன், “இப்போ எதுக்கு தேவையில்லாத பேச்சு? அந்த *****யை அடிச்சு துவைச்சா தான் என் ஆத்திரம் அடங்கும்!” என்று திமிறிக்கொண்டு சென்றவனை அடக்கினான் சாரதி.

சாரதியின் செயலால் உண்டான அதிருப்தியை முகத்தில் தாராளமாக காட்டியவாறே, “அன்னைக்கும் என்னை இப்படி தடுத்ததால தான் என்னால அந்த ஆளை எதுவும் செய்ய முடியல. அவருக்கு ஜெயில் தண்டனையும் கிடைச்சுருச்சு. ஆனா, இப்போ என்னால சும்மா இருக்க முடியாது சாரதி. ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம, அவளைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்குறதே தப்பு. இதுல, அவளோட காதலனை ‘ஜாதி’ங்கிற பேர்ல கொலை செய்ய தூண்டுறதும் இல்லாம, அதை பெருமையா சொல்லிட்டு திரியிற இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் வெட்டிப்போடணுங்கிற அளவுக்கு வெறி வருது.” என்றான் நிரஞ்சன்.

“எனக்கு உன் கோபம் புரியுது நிரஞ்சா.” என்ற சாரதியை இடைவெட்டியவன், “என்னோட ஒன்னா சாப்பிட்டு, ஒன்னா தூங்கி வளர்ந்த என்னோட தம்பியை, இந்த வறட்டு கௌரவம் பார்க்குற பிசாசுங்க கிட்ட இழந்துட்டு நிற்குறேன் சாரதி. இன்னைக்கு எங்க ரூமுக்குள்ள போறப்போ தான், அவனை எவ்ளோ மிஸ் பண்றேன்னு புரிஞ்சுகிட்டேன். அந்த வீடும் சரி, அங்க இருக்க ரெண்டு பேரும் சரி, எந்தவித உயிர்ப்பும் இல்லாம இருக்காங்க. இதுக்கெல்லாம் காரணம் அந்த ஜாதிவெறி கூட்டம்னு நினைக்கும்போதும், அவங்களை என் கையால எதுவும் பண்ணலைன்னு நினைக்கும்போதும், எனக்கு என் மேலேயே ரொம்ப கோபம் வருது!” என்றான்.

“ரிலாக்ஸ் நிரஞ்சா, நான் ஒன்னும் உன்னை தடுக்கல. ஆனா, இப்போ நீ செய்ய நினைக்குறது என்ன? உன் தம்பியை கொன்னுட்டாங்கன்னு அவங்களை நீ கொல்லப்போற. ஆனா, அதனால உனக்கு என்ன லாபம்?” என்று சாரதி வினவியதும் பதில் சொல்ல வந்தவனை தடுத்த சாரதி மீண்டும் தொடர்ந்தான்.

“’நிம்மதி கிடைக்கும்’னு தான நீ சொல்லப்போற. ஆனா, கொஞ்சம் யோசிச்சு பாரு, இந்த விஷயம் வெளியுலகத்துக்கு தெரியவே தெரியாது. இப்படி வெளியுலகத்துக்கு தெரியாம மறைக்கப்பட்ட குற்றங்கள் ஏராளம். இதோ இந்த லூசு குடும்பம் ஒரு போலிச்சாமியாரை நம்பி, தங்களோட வாரிசுங்களையே பலிகொடுக்க திட்டம் போட்டாங்களே, இது மாதிரி இங்க நிறைய கொடுமைகள் நடந்துட்டு தான் இருக்கு. இதெல்லாம் மக்களுக்கு தெரிய வேண்டாமா நிரஞ்சா? அட்லீஸ்ட் இப்படி நடக்குதுன்னு தெரிஞ்சாலாவது கொஞ்சம் உஷாரா இருப்பாங்கள.” என்றான் சாரதி.

அவனை பார்த்து விரக்தி புன்னகை புரிந்த நிரஞ்சன், “இப்போ என்ன பண்ண சொல்ற சாரதி? இந்த விஷயத்தை மீடியா கிட்ட எடுத்துட்டு போய் மக்கள் கிட்ட சேர்க்கணுமா? ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரேம்னு சோசியல் மீடியாவுல பரப்பனுமா? இப்படி செய்றதால, மக்களுக்கு அவேர்னெஸ் கிடைச்சுடும்னு நம்புறியா? இப்படிப்பட்ட நியூஸ் கிடைச்சா, ஒரு நாள், ஒரே ஒரு நாள் ‘அச்சோ பாவம்!’, ‘என்ன மனுஷங்க இவங்க?’, ‘இவங்களை எல்லாம் தூக்குல போடணும்!’னு விதவிதமா கமென்ட்ஸ் போட்டுட்டு ட்ரெண்டிங்ல வச்சுட்டு, அடுத்த நாளே புது ட்ரெண்டுக்கு பின்னாடி போயிடுவாங்க. இதுவரை இப்படி எத்தனையோ சென்சேஷனல் நியூஸ் மீடியால வந்துச்சே, அதெல்லாம் இப்போ என்ன ஆச்சுன்னு தெரியுமா?” என்று வினவியவனை பார்த்து விழித்த சாரதியிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காதவனாக, “நமக்கு தான் நேத்து வந்த நியூஸே மறந்து போற அளவுக்கு புது நியூஸை அள்ளி கொடுத்துட்டு இருக்காங்களே, அப்பறம் எப்படி எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்குறது? அவங்களை பொறுத்தவரை இது ‘பத்தோட பதினொன்னு’. ஆனா, பாதிக்கப்பட்டது என்னோட குடும்பம்!” என்றான் நிரஞ்சன் அழுத்தமாக.

அவனை அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாதவனாக, “சரிடா, எதுனாலும் பார்த்து பண்ணு.” என்றான் சாரதி.

“உன்னோட ஆளுங்களை கூப்பிட்டு அவனை இங்க கூட்டிட்டு வர சொல்லு. தேவையில்லாம, அந்த குடும்பத்துக்கு முன்னாடி நான் போக விரும்பலை.” என்று நிரஞ்சன் கூற, சாரதியும் அவன் கோரிக்கையை நிறைவேற்ற சென்றான்

அடுத்த சில நொடிகளில், ராஜேஷை இருவர் அழைத்து வர, அவர்களின் பின்னே வந்தான் சாரதி.

ஒரு கொலையை செய்து அதன் மூலம் ஒரு பெண்ணை மிரட்டியவனா என்று எண்ண தோன்றும் வகையில் இருந்தது ராஜேஷின் முகம். அப்பாவி போல இல்லாமல் இருந்தாலும், மிருகத்தனமாகவும் அவன் முகம் இல்லை.

அவனை கண்டதும் சற்று அடக்கி வைத்திருந்த நிரஞ்சனின் கோபம் சுர்ரென்று ஏற, ஒரு அடியில் ராஜேஷை கீழே தள்ளியிருந்தான் நிரஞ்சன்.

அதைக்கண்ட மற்றவர்கள் அதிர்ந்து நிற்க, சாரதி தான் அவனருகே வந்து, “கண்ட்ரோல் டா, முதல்ல விசாரிப்போம்.” என்று முணுமுணுத்தான்.

அதற்குள் கீழே விழுந்திருந்தவன் எழ, நிரஞ்சனின் அடியில் அவன் வாயின் ஓரம் கிழிந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

“எதுக்கு சார் என்னை அடிக்கிறீங்க?” என்று சற்று கோபத்துடனே கேட்டான் ராஜேஷ்.

“கொலையை பண்ணிட்டு அசால்ட்டா சுத்திட்டு இருக்க உன்னை அடிக்காம கொஞ்சுவாங்களா?” என்று உறுமினான் நிரஞ்சன்.

‘கொலை’ என்று நிரஞ்சன் கூறியதும் அதிர்ந்த ராஜேஷ், அடுத்த நொடியே தன் முகபாவனைகளை சாமர்த்தியமாக மாற்றிவிட்டான். ஆனால், அதற்குள் அவனை கண்டுகொண்டனர் நிரஞ்சன் மற்றும் சாரதி.

“சார், எதுக்கு வீணா என்மேல பழி போடுறீங்க. நான் யாரை கொலை செஞ்சேன்? அதுக்கு என்ன ஆதாரம்?” என்று வினவினான்.

அவன் முதல் இரண்டு கேள்விகளுடன் நிறுத்தியிருந்தால் கூட, அவன் மேல் உண்டான சந்தேகம் சிறிது குறைந்திருக்குமோ! அவன் கடைசி கேள்வி, அவன் தான் சாகரை மலையிலிருந்து தள்ளியவன் என்பதை ஊர்ஜிதப்படுத்தியது.

“ஆதாரம் வேணுமா உனக்கு? கண்ணால பார்த்த ஆதாரம் இப்போ ஜெயில்ல இருக்கு, அந்த ஆதாரம் போதுமா?” என்று நிரஞ்சன் பல்லைக்கடித்தான்.

என்ன தான் சந்தானமூர்த்தி இதைப்பற்றி வெளியே சொல்ல மாட்டார் என்று தெரிந்தாலும், ஏதோ ஒரு சூழலில், மகளின் மேல் திடீர் பாசம் ஏற்பட்டு, அதை சொல்லிவிடுவாரோ என்ற எண்ணம் அவ்வப்போது ராஜேஷை கலவரப்படுத்தியது உண்மை. அதே எண்ணம் இப்போதும் தோன்ற, தலையை உலுக்கி அதிலிருந்து மீண்டான் ராஜேஷ்.

“யார் சார் நீங்க? போலீஸா? போலீஸே அந்த கேஸ் க்ளோஸ் பண்ணி ஒரு வருஷம் ஆகுது. உங்களுக்கு என்ன அக்கறை?” என்று வாயை விட, அத்தனை நேரம் நிரஞ்சனை கட்டுப்படுத்திய சாரதி, ‘இன்னைக்கு இவன் கையால நீ வாங்கிக் கட்டிக்கணும்னு இருந்தா, அதை யாரால மாத்த முடியும்?’ என்று மனதிற்குள் கூறிக்கொண்டான்.

சாரதியின் எண்ணப்படியே, ராஜேஷின் கேள்விக்கான பதிலை கைகளின் மூலம் கொடுத்துக்கொண்டிருந்தான் நிரஞ்சன்.

ராஜேஷின் வீரம் எல்லாம் மாயாவிடம் தான் போலும்! நிரஞ்சனின் முதல் இரண்டு அடிகளைக்கூட தாங்க முடியாமல் சுருண்டவன் தான், அதன்பின்னர் இத்தனை நாட்களாக நிரஞ்சனின் மனதில் அடைத்து வைத்திருந்த அழுத்தங்களுக்கு வடிகாலாக மாறியிருந்தான் ராஜேஷ்.

வெளிகாயங்கள் சிலவும், உள்காயங்கள் பலவும் என மயக்கமாகியிருந்தவனை அருகிலிருக்கும் சிறிய மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லுமாறு அங்கிருந்தவர்களை பணித்தான் நிரஞ்சன்.

அவர்கள் சென்றதும், அவன் சக்தியெல்லாம் வடிந்ததை போல, அங்கிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தான். சிறிது நேரம் அவனிற்கு தனிமை கொடுக்க வேண்டி விலகியிருந்தான் சாரதி.

வெகு நேரமாகியும் நிரஞ்சன் தெளியவில்லை எனவும், மெல்ல அவன் தோள் தொட்டு எழுப்பினான் சாரதி. அவன் கண்களில் கண்ணீரைக் கண்டதும், “டேய் நிரஞ்சா, என்ன டா இது?” என்று பதறினான் சாரதி.

“என்னால இதை ஹேண்டில் பண்ண முடியல சாரதி. இதுக்கு தான் இத்தனை நாளா வீட்டு பக்கம் போகாம இருந்தேன். இன்னைக்கு அந்த ரூமுக்குள்ள நுழைஞ்சதும், பழைய நினைவுகள் மனசை போட்டு அழுத்துது. பத்தாததுக்கு, இந்த ராஜேஷ் விஷயமும் தெரியவர, ரொம்ப கில்டியா இருக்கு. அன்னைக்கு நான் சாகரை தடுத்திருந்தா, இன்னைக்கு இந்த நிலைமை வேற மாதிரி இருந்துருக்குமோங்கிற யோசனையை என்னால தடுக்கவே முடியல.” என்று புலம்பியவனை அடக்கும் வழி புரியவில்லை சாரதிக்கு.

நிரஞ்சனின் புலம்பலை நிறுத்தவென்றே அவன் அலைபேசி ஒலியெழுப்பியது. மாயா இருக்கும் மருத்துவமனையிலிருந்து தனது ஆள் தான் அழைப்பது என்பதை கண்டவன், தன்னைத்தானே நொடியில் சமன்படுத்திக்கொண்டு, அந்த அழைப்பை ஏற்றிருந்தான்.

மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ, சிறிது யோசித்தவன், “சரி, அவங்க கூட்டிட்டு போகட்டும். போலீஸ் ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் அவங்களுக்கு தெரியாம மறைமுகமா ஹெல்ப் பண்ணுங்க. அவங்க கிளம்புனதும், எனக்கு தகவல் சொல்லிட்டு, நீங்களும் அவங்களை ஃபாலோ பண்ணிக்கோங்க.” என்றான் நிரஞ்சன்.

அழைப்பை துண்டித்த பின்னரும் யோசனையில் இருந்தவனை கலைத்தது சாரதி தான்.

“நீ இப்படி யோசிக்கிற அளவுக்கு, என்னடா சொன்னாங்க போன்ல?” என்று விசாரித்தான் சாரதி.

“மாயாவை அவங்க பிரெண்ட்ஸ் வந்து பார்த்துருக்காங்க. இப்போ அவளோட நிலைமை தெரிஞ்சதும், அவளை கூட்டிட்டு போகப் போறதா பேசுறாங்கன்னு தகவல் சொல்றாரு நம்ம இன்ஃபார்மர்.” என்றான் நிரஞ்சன்.

“இது நல்ல விஷயம் தான? இத்தனை நாள் அந்த பொண்ணு இந்த ஜந்துக்கள் கூட வாழ்ந்ததுக்கு, இனிமேலாவது சுதந்திரமா, நிம்மதியா வாழட்டும்.” என்றான் சாரதி.

“அது சரி தான். ஆனா, அவளுக்கு ஏதாவது ஆபத்து வருமான்னு தான் யோசிக்கிறேன்.” என்று நிரஞ்சன் கூற, “அதான், அந்த பொண்ணோட குடும்பத்தை நாம பிடிச்சு வச்சுருக்கோமே… இனி, என்ன ஆபத்து வரும்னு நீ எக்ஸ்பெக்ட் பண்ற?” என்று குழப்பத்துடன் வினவினான் சாரதி.

“நாம இன்னும் சரியான ரூட்ல போகலையோன்னு தோணுது சாரதி.” என்று நிரஞ்சன் கூற, சாரதியோ முழித்தான்.

“இந்த ராஜேஷுக்கு மேல எவனோ இருக்கானோன்னு இப்போ சந்தேகமா இருக்கு.” என்ற நிரஞ்சனை சிறிது அதிர்ச்சியாகவே பார்த்தான் சாரதி.

*****

அஷ்வினும் அஷ்வினியும் மாயாவை கவனிக்கும் மருத்துவரிடம், அவளின்  உடல்நிலையை பற்றி விசாரித்துவிட்டு, அவளை எப்போது மருத்துவமனையிலிருந்து வெளியேற்றலாம் என்றும் கேட்டுக்கொண்டனர். மாயாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதால், அன்றே அவளை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று அந்த மருத்துவர் கூறினார்.

அதன்பின்னர், மாயாவை தங்களுடன் அழைத்து செல்வதை பற்றி இன்ஸ்பெக்டரிடம் பேச சென்றனர்.

“சார், மாயாவோட பிசிக்கல் ஹெல்த் விட மென்டல் ஹெல்த் இப்போ மோசமா இருக்கு. அதோட, அந்த ரெண்டு பிள்ளைகளும் ரொம்பவே பயந்து போயிருக்காங்க. சோ, அவங்க கொஞ்ச நாள் வேற சூழல்ல இருந்தா பெட்டரா இருக்கும்னு ஃபீல் பண்றோம். அதான், அவங்களை எங்களோட கூட்டிட்டு போலாம்னு பிளான் பண்ணிருக்கோம்.” என்று மெதுவாக விளக்கினான் அஷ்வின்.

“இந்த கேஸ் நாங்க விசாரிச்சுட்டு இருக்குறப்போ, எப்படி உங்க கூட அவங்களை அனுப்புறது?” என்று அந்த இன்ஸ்பெக்டர் வினவ, “சார், அந்த குடும்பத்தை நம்பி, எப்படி சார் இவங்களை அந்த வீட்டுக்கு அனுப்புறது? ஏற்கனவே, அவங்க அங்க நடந்ததை நினைச்சு பயப்படுறாங்க சார். கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க.” என்றாள் அஷ்வினி.

“ஹ்ம்ம், அந்த குடும்பத்தை தான் நாங்களும் தேடிட்டு இருக்கோம். எங்கயோ தலைமறைவாகிட்டாங்கன்னு நினைக்குறேன்.” என்று யோசனையாக முணுமுணுத்தவரிடம், மாயாவை பரிசோதித்த மருத்துவரை பேச சொல்லி சமாளித்தனர்.

ஒருவழியாக, மாயா, நவீன், சம்பூர்ணாவை தங்களுடன் அழைத்து செல்வதை உறுதிபடுத்திவிட்டு, மாயாவின் அறைக்குள் நுழைய, “நாங்க இங்கயே இருந்துடுறோமே.” என்று மாயா மீண்டும் ஆரம்பித்தாள்.

“எம்மா தாயே! இப்போ தான் எல்லாரையும் சமாளிச்சுட்டு வரோம், ரொம்ப டையர்ட்டா வேற இருக்கு, நீ திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத.” என்று அஷ்வினி பாவமாக கூற, அவளின் முகபாவனைகளை கண்டு சிரித்து விட்டாள் மாயா.

அவர்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டிருக்க, அஷ்வினை தனியே அழைத்த அஷ்வினி, “டேய் அண்ணா, வீட்டுல சொல்லிட்டியா?” என்று வினவினாள்.

“அப்பா கிட்ட மட்டும் சொல்லிருக்கேன். அதுவும், பிரெண்டுக்கு அடிப்பட்டிருக்கு. சோ, நம்ம வீட்டுல இருப்பான்னு மட்டும் தான் சொல்லிருக்கேன். மத்ததெல்லாம் போன்ல சொல்றது சரியா படல.” என்றான் அஷ்வின்.

“ம்ம்ம் சரி தான், இந்த ஹிட்லர் மம்மி தான் கேள்வியா கேட்டு குடைய போறாங்கன்னு நினைக்குறேன்.” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டாள் அஷ்வினி.

அவளின் தோளில் கைவைத்து ஆதரவாக தட்டிய அஷ்வின், “அது பார்த்துக்கலாம். அப்பறம் சொல்ல மறந்துட்டேன், மாயா – சாகர் விஷயம் வீட்டுல சொல்ல வேண்டாம்.” என்றான்.

அஷ்வினி புருவம் சுருக்கி, “ஏன்?” என்று வினவ, “சாகரை பத்தி பேசுனாலே, நீ அப்செட் ஆகிடுறியோன்னு அப்பாவும் அம்மாவும் கவலைப்படுறாங்க வினி. இப்போவே உன்னை அவங்க ரொம்ப கேர்ஃபுல்லா கவனிச்சிட்டு இருக்காங்க. இது உனக்கு தெரியுதான்னு எனக்கு தெரியல.” என்று அஷ்வின் கூறவும் தான், இப்படியெல்லாம் நடக்கிறதா என்று யோசிக்க ஆரம்பித்தாள் அஷ்வினி.

“இப்போ சாகர் மாயாவை லவ் பண்ண விஷயம் தெரிய வந்தா, இன்னும் உன்மேல இருக்க கவனம் அதிகமாகலாம். உனக்காக தான் சொல்றேன்.” என்று அஷ்வின் கூற, “புரியுதுடா, நீ சொன்ன மாதிரியே, இப்போதைக்கு அப்பா – அம்மாக்கு தெரிய வேண்டாம்.” என்றாள் அஷ்வினி.

அப்போது மாயா அஷ்வினியை கூப்பிட, அங்கிருந்து அவள் நகர்ந்து சென்றதும், ‘எனக்காகவும் தான் சொன்னேன்!’ என்று மனதிற்குள் கூறிக்கொண்டான் அஷ்வின்.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  12 Comments

  1. kanmani raj

   ராஜேஷ் கொலை பண்ணும்போது இருந்தான் தில்லா, இப்ப நிரஞ்சன் அடிக்கப் போற அடியில உடைய போறான் சில்லு சில்லா…

  2. Janu Croos

   அஷ்வினு…உன் போக்கு சரியில்லையே ராசா…..நீ என்ன பிளான்ல தான் இருக்க….
   அடேய் ராஜேஷு….என்னென்ன வேலை எல்லாம் பாத்த….மாயாவ சாகர அவங்க குடும்பத்தைனு எத்தனை பேர கதற வச்ச…அந்த பாவம்.சும்மா விடுமா…நல்லா வாங்குடா.நிரஞ்சன் கிட்ட….
   என்ன நிரஞ்சா புதுசா ஏதோ சொல்ற….இவனுக்கு மேல இன்னொருத்தனா அது யாரு….

   1. vaanavil rocket
    Author

    அஷ்வின் ஏதோ தனி பிளான்ல தான் இருக்கான் போல😜😜😜
    அதனா, வில்லாதி வில்லனே ஹீரோ கிட்ட அடி வாங்க காத்திருக்க, இவன் குட்டி வில்லன் தான… நல்லா வாங்குவான்…😊😁😊
    ஆமா ஆமா இன்னொருத்தன் இருக்கான்…😊😊😊

  3. Interesting sis nice ud niranjan bro sagar nu therinjidichu ashwini sagar frnd nu theriyadha niranjan ku waiting for nxt ud sis

   1. vaanavil rocket
    Author

    Tq so much sis😍😍😍 Ashwini Sagar friend nu Niranjan ku theriyama ya irukum…🤔🤔🤔

  4. Archana

   Ivan ethuku avanukaga sollikanum🤔🤔😜😜😜 sari illa ivan

  5. Sangusakkara vedi

   Intha Rajesh avlo scene potan maya kitta….. Niru voda rendu adiya kuda thanga mudiyala… Sagar knjm try panniruntha kuda escape aairupan pola … Apo enna situation irunthatho teriyala…. Ashu ipdi open ah irukatha…

   1. vaanavil rocket
    Author

    Ponnunga kita matum dhan scene poduvanga indha Rajesh 😜😜😜 Aama Sagar ku ena prechanaiyo apo😑😑😑 Haha pavam payirchi pathala namma Ashwin ku😜😜😜