599 views

சுடர் 12

அஷ்வினுடன் நவீனும் சம்பூர்ணாவும் வெளியே சென்றதும் அஷ்வினி மாயாவிடம் விசாரிக்க ஆரம்பித்தாள்.

“சாகர்… க்கும்… அதுக்கப்பறம் என்ன தான் ஆச்சு மாயா? இது என்ன இப்படி ஒரு மூடநம்பிக்கை? இதுல நீ எப்படி மாட்டுன? வெளிய விசாரிச்சப்போ, நீ உங்க சித்தப்பா வீட்டுல இருக்குறதா சொன்னாங்க, அப்போ உங்க அப்பா எங்க?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினாள் அஷ்வினி.

மாயாவோ அஷ்வினியின் கடைசி கேள்விக்கு மட்டும், “அப்பா இப்போ ஜெயில்ல இருக்காரு.” என்று கூறிவிட்டு அமைதியானாள்.

மாயா கூறியதைக் கேட்ட அஷ்வினி தான், “வாட்? ஜெயில்லயா? ஏன்? சாகர் விஷயத்துல கூட உங்க அப்பா மேல கம்ப்ளைன்ட் கொடுத்தப்போ, உங்க அப்பா அவருக்கு தெரிஞ்சவரோட செல்வாக்கை பயன்படுத்தி, அந்த கேஸ்ல இருந்து தப்பிச்சவராச்சே!” என்று வினவிய அஷ்வினியின் குரலில் ஏகத்திற்கும் ஏளனம் நிரம்பி வழிந்தது.

சாகர் இறந்ததற்கு மாயாவின் தந்தை தான் காரணம் என்று அஷ்வினி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்க, மாயாவின் தந்தை சந்தானமூர்த்தியோ அவருக்கு தெரிந்த பிரமுகர் ஒருவரின் உதவியோடு அதிலிருந்து வெளிவந்து விட்டார்.

அந்த கோபமே அஷ்வினியின் குரலில் தெரிந்தது.

மாயா அமைதியாக இருக்க, அஷ்வினி அப்போது தான் அவள் பேசியவற்றை மீண்டும் நினைத்து பார்த்தாள்.

‘ச்சே என்ன வினி, அவ இருக்க நிலைமைல இந்த பேச்சு தேவையா?’ என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவள், “என்ன விஷயம் உங்க அப்பா ஜெயில்ல…” என்று இழுத்தாள். மீண்டும் அவளின் தந்தையைப் பற்றியே விசாரிப்பது அஷ்வினிக்கே ஒரு மாதிரியாக இருந்தது.

மாயாவோ ஒரு விரக்தி சிரிப்புடன், “ஜாதிங்கிற பேர்ல ஊருக்குள்ள நிறைய பிரச்சனைகள் இவரால உருவானப்போ எல்லாம் தண்டனை அனுபவிக்கல. இப்போ அவரு செய்யாத தப்புக்காக ஜெயில் தண்டனை அனுபவிக்கிறாரு. நீ சொன்னேல அந்த செல்வாக்கானவர், அவரோட பொண்ணு ஏதோ பையனை காதலிக்க, வழக்கம் போல ஜாதின்னு பேசி அந்த பையனை கொன்னுருக்காங்க. ஆனா, இந்த முறை எங்க அப்பா அந்த கொலை விஷயத்துல சம்பந்தப்படலை. அந்த பையனோட அப்பா ஆளுங்கட்சி ஆளாம். அதனால பெரிய பிரச்சனை ஆகிட, அந்த செல்வாக்கானவர் அப்பாவை மாட்டிவிட்டுட்டாரு.” என்று கூறினாள்.

“ஹ்ம்ம், அட்லீஸ்ட் இப்போயாச்சும் தண்டனை கிடைச்சுதே!” என்று அஷ்வினி கூற, “ம்ம்ம், ஆனா, சாகரை கொன்னவனுக்கு இன்னும் தண்டனை கிடைக்கலையே!” என்று மாயா கூற, அஷ்வினிக்கு அடுத்த அதிர்ச்சியாக அமைந்தது அந்த செய்தி.

*****

காலையில் நிதானமாக வாய் முணுமுணுக்கும் பாடலில் லயித்தபடி தனக்கு அப்போதைய தேவையான குளம்பியை தயாரித்துக் கொண்டிருந்தார் கலைவாணி. அவரின் தந்தை நாராயணன், தன் சமவயதுடையவர்களுடன் நடைபயிற்சிக்கு சென்று விடுவதால், அந்த காலை நேரம் அவருக்கு மட்டுமே உரியதாகிப்போனது.

அப்போது அவருக்கே உண்டான அவரின் காலை வேளையை இடையூறு செய்தது, வாசலில் ஒலித்த அழைப்பு மணி சத்தம்.

“ப்ச், இந்த நேரத்துல யாரா இருக்கும்? அப்பா அதுக்குள்ளயா வந்துட்டாங்க?” என்று முணுமுணுத்தபடி வாசல் கதவை திறக்க, அங்கு கண்களில் சோர்வுடனும், அதற்கு நேர்மாறாக இதழ் விரிந்த சிரிப்புடனும் நின்றிருந்தான் நிரஞ்சன்.

நிரஞ்சனைக் கண்ட கலைவாணிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவனையே பார்த்தபடி இருந்தவரை, சிறு சிரிப்புடன் உள்ளே நகர்த்தி வந்தவன், “என்ன சித்தி, என்னைப் பார்த்ததும் சந்தோஷத்துல கண் கலங்கி நிற்பீங்கன்னு நினைச்சா இப்படி ஷாக்காகி நிற்குறீங்க? அப்போ போன்ல ‘எப்போ இங்க வருவ?’ன்னு கேட்டதெல்லாம் பொய்யா சித்தி?” என்று வினவினான்.

அவனை எதிர்பாராமல் கண்டவருக்கு முதலில் அதிர்ச்சி தான் என்றாலும், அவன் உள்ளே நகர்த்திக்கொண்டு வரும்போதே சுதாரித்துவிட்டார்.

“அட நிரஞ்சா, பொண்ணு பார்க்க போறதுல இவ்ளோ ஆர்வமா இருப்பன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலையே! இத்தனை நாள், கூப்பிட்டும் வராதவன் இப்போ திடீர்னு வந்து நின்னா ஷாக்கா தான இருக்கும். ஹ்ம்ம், எல்லாம் அந்த பொண்ணு ஃபோட்டோ செஞ்ச மாயமோ?” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே சிரிப்பு வந்துவிட்டது கலைவாணிக்கு.

“சித்தி பேக் டூ ஃபார்மா?” என்று நிரஞ்சனும் சிரிப்புடனே பேசினான்.

அவன் கண்களிலிருந்த சோர்வை கவனித்த கலைவாணி, “என்ன நிரஞ்சா ரொம்ப டையர்டா தெரியுற?” என்றார்.

“நைட் ஒர்க் முடிச்சு வீட்டுக்கு வந்து, வீட்டுலயும் கொஞ்சம் வேலையை பார்த்துட்டு, அப்படியே கிளம்பிட்டேன். நானே ட்ரைவ் பண்ணிட்டும் வந்ததால கொஞ்சம் டையர்ட்டா இருக்கு.” என்று நெட்டி முறித்தபடி கூறினான் நிரஞ்சன்.

“நீயே எதுக்கு ட்ரைவ் பண்ற? ட்ரைவர் யாரையாவது வச்சுக்கலாம்ல. சரி சரி, போய் ஃப்ரெஷ்ஷாகிட்டு வா, சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு.” என்று பரபரப்பானார் கலைவாணி.

அவரின் செயல்களை நின்று ரசித்துவிட்டே தன்னறைக்கு சென்றான் நிரஞ்சன்.

அந்த அறைக்குள் நுழைந்ததும், பழைய நினைவுகள் அவனின் மனதில் காட்சிகளாக விரிந்தன. மிகவும் முயன்று அதை அடக்கினான். ஆனால், அந்த சுவரை அலங்கரித்திருந்த படங்கள் யாவும் அந்த அறையின் மற்றுமொறு உரிமையாளனை பற்றிய நினைவுகளை அவன் மூளைக்குள் கடத்திச்செல்ல, அதை ஏற்க முடியாமல் தவித்தது அவன் மனம்.

அங்கிருந்த ஒவ்வொரு படமாக பார்த்துக்கொண்டே வந்தவனின் கவனத்தை ஈர்த்தது, அந்த கட்டிலின் இடப்புற ஓரத்தில் சிறிதாக இருந்த அந்த புகைப்படம். அந்த அறைக்கு சொந்தமான மற்றொருவனும், அவனுடன் மல்லுகட்டியபடி நின்றிருந்த குட்டிப்பெண்ணும் சேர்ந்து எடுத்திருந்த புகைப்படம்.

இதற்கு முன்னரும் அதே அறையில் அந்த படமும் அவனும் இருந்திருந்தாலும், இத்தனை உன்னிப்பாக அந்த படங்களை கவனிக்காததால், அந்த படம் அவன் மூளையின் அடுக்குகளில் எங்கு தேடிப்பார்த்தும் கிடைக்காமல் போனது.

அதே இடத்தில் சிந்தனையில் மூழ்கி விட்டவனை உலுக்கி வெளியே கொண்டு வந்தது கலைவாணியின் குரல்.

“இன்னும் எவ்ளோ நேரம் நிரஞ்சா? சீக்கிரம் சாப்பிட வா.” என்று கலைவாணி கூற, நிரஞ்சனின் மனமோ சில வருடங்கள் பின்னோக்கி சென்று, கலைவாணியின் புலம்பல்களையும் அசைபோட துவங்கியது.

அண்ணனுக்கும் தம்பிக்கும் இதே வேலை! குளிக்க போனா அவ்ளோ சீக்கிரத்துல வெளிய வரது இல்ல.” என்று கலைவாணி திட்ட, “அண்ணா, உன்னால என் மானத்தையும் கப்பல் ஏத்திட்டு இருக்காங்க உங்க சித்திஉள்ள போயிட்டு ஒரு காக்கா குளியலை போட்டுட்டு சீக்கிரம் வெளிய வாங்க.” என்று தம்பி கூறினான்.

அப்போ டெயிலி நீ இதைத் தான் ஃபாலோ பண்றீயா?” என்று நிரஞ்சன் வினவ, “அஃப்கோர்ஸ் ண்ணா.” என்று கண்ணடித்துக் கூறினான் நிரஞ்சனின் தம்பி.

பழைய நினைவுகளை ஒதுக்கி வைத்து குளிக்கச்சென்றான் நிரஞ்சன். ஒதுக்கி வைக்க முயன்றாலும், அதை நினைவுபடுத்த என்றே அவனிற்கு கிடைத்தது அந்த தகவல்.

*****

“என்ன சொல்ற மாயா? சாகரை கொன்னது உங்க அப்பா தான?” என்று அஷ்வினி அதிர்ச்சியாக வினவ, மாயாவோ ‘இல்லை’ என்று தலையசைத்தாள்.

“அப்போ யாரு கொன்னதுன்னு உனக்கு தெரியுமா?” என்று அஷ்வினி வினவ, “ராஜேஷ்.” என்று பதிலளித்தவளின் குரலிலிருந்தது கோபமா, வருத்தமா, ஏமாற்றமா என்று பிரித்தறிய முடியவில்லை.

“ராஜேஷா?” என்று வினவிய அஷ்வினிக்கு அவன் யாரென்று தெரியவில்லை. எனினும், “ஆனா, அன்னைக்கு உங்க அப்பா அவரு தான் சாகரை கொன்னதா சொன்னாரே?” என்று குழம்பினாள் அஷ்வினி.

“அதுக்கு காரணம் அந்த ராஜேஷ் தான்.” என்று அந்த அறையின் மூலையை வெறித்தபடி கூறிய மாயாவிற்கு அன்று ராஜேஷ் அவளின் காதில் முணுமுணுத்தது நினைவிற்கு வந்தது.

அன்னைக்கு உன் ஆருயிர் காதலன் பரிதாபமா மலையிலிருந்து கீழ விழுந்து இறந்தானே, அவனைக் கொன்னது உங்க அப்பான்னு நினைச்சுட்டு இருக்கியா? த்சு, அவனைக் கொன்னது உங்க அப்பா இல்ல நான்னு தெரிய வந்தா என்ன செய்வியோ? ஆமாடி, அந்த மலையிலயிருந்து அந்த ****யை தள்ளி விட்டது நான் தான். உங்க அப்பா தான் ஜாதின்னு கொடி பிடிச்சு சுத்துவாறே, அவருக்கிட்ட ஜாதிங்கிற கேரட்டை மட்டும் தான் காட்டுனேன், பின்னாடியே வர கழுதை மாதிரி, ‘நான் தான் கொலை செஞ்சேன்னு சொல்லிட்டாரு உங்க அப்பா. இதுல கழுதைக்கு பெருமை வேற!”

‘மாமா’ என்று மரியாதையாக விளிக்கும் ராஜேஷிடம் இத்தனை வஞ்சத்தை பெண்ணவள் எதிர்பார்க்கவில்லை தான். இவனின் சூழ்ச்சியை அறியாமல், தன் தந்தை ஜாதி பெருமையை பேசித்திரிந்ததை எண்ணி விரக்தியடைய மட்டுமே முடிந்தது மாயாவினால்.

மாயா சிந்தனையில் இருப்பதைக் கண்ட அஷ்வினி, “சாரி மாயா, நீ மறக்க நினைக்குறதை நான் ஞாபகப்படுத்திட்டே இருக்கேன்னு நினைக்குறேன்.” என்று கூற, “அதை மறக்கணும்னு நான் நினைச்சதே இல்ல வினி. என்னால ஒரு உயிர் போயிருக்குங்கிறது நான் உயிரோட இருக்குற வரை என் நினைவுல இருந்து அழியாது.” என்று மாயா கூற, அதை அந்த அறைக்கதவை திறந்து உள்ளே வந்த அஷ்வின் கேட்டு, யாரும் அறிந்திடாத வகையில் பெருமூச்சை வெளியிட்டான்.

அப்போது உள்ளே வந்த சம்பூர்ணா, “மாயாக்கா இதோ உங்களுக்கு பிடிச்ச மஸ்… மஸ்…” என்று அதன் பெயரை கூறத்தெரியாமல் தடுமாறியபடி அஷ்வினை காண, அவனோ லேசான புன்னகையுடன், “மஸ்க்மெலன் ஜூஸ்.” என்று எடுத்துக் கொடுக்க, “ஹான் அதே தான் மஸ்க்மெலன் ஜூஸ்.” என்றாள் சம்பூர்ணா.

அத்தனை நேரமிருந்த இறுக்கமான சூழல், அந்த மழலைக்குரலில் காணாமல் போக, “எனக்கு மஸ்க்மெலன் ஜூஸ் பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும் சம்மு?” என்றாள் மாயா.

“இந்த அங்கிள் தான் சொன்னாரு.” என்று சம்பூர்ணா கூற, மாயா இயல்பாக அஷ்வினை நோக்கி அதே புன்னகையை பரிசளிக்க, மற்றவள் தான் ஏதோ யோசனையுடன் உடன்பிறந்தவனை கண்டாள்.

அதற்குள் அந்த சூழலை மாற்ற நினைத்தவன், “எதே அங்கிளா?” என்று அதிர்ந்தவனாக அஷ்வின் நடிக்க, மற்ற எண்ணங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிய அஷ்வினி, “பின்ன என்ன தாத்தாவா? வயசாகிடுச்சுன்னு ஒத்துக்கோங்க அண்ணா!” என்று சம்பூர்ணாவுடன் ‘ஹை-ஃபை’ அடித்துக்கொண்டாள்.

சிறியவளிற்கு முழுவதுமாக புரியவில்லை என்றாலும், தன்னிடம் குதூகலமாக பேசிய அஷ்வினியை பிடித்து தான் இருந்தது. அதனாலேயே அவள் புறம் சாய்ந்து விட்டாள்.

“ஹலோ மேடம், நீ புதுசா ‘ங்க’ போட்டு பேசுறதால மட்டும் உன் வயசு  ரிவர்ஸ்ல போயிடாது. எனக்கு ரெண்டு நிமிஷம் பின்னாடி பிறந்துட்டு என்னமோ இருபது வருஷம் கேப்ங்கிற மாதிரி பேசிட்டு இருக்க?” என்று அஷ்வின் அஷ்வினியின் காலை வாரினான்.

“ஆஹான், நீயே சம்மு கிட்ட கேளேன், என்னை அக்கான்னு தான் சொல்லுவா.” என்று சவால் விட்டவள், சம்பூர்ணாவிடம் கண்களால் சைகை செய்ய, அவளின் கெ(கொ)ஞ்சலை புரிந்து கொண்ட சம்பூர்ணா மெல்ல அவள் புறம் நகர்ந்து, “எனக்கு சாக்லேட் வாங்கி தருவீங்களா?” என்று பேரம் பேசினாள்.

அது அனைவருக்கும் கேட்டே இருந்தாலும், மெல்லிய சிரிப்புடன் அதை ரசித்துக்கொண்டிருந்தனர்.

‘பார்றா, சிறுசு இதுல எல்லாம் கரெக்ட்டா இருக்கு!”’ என்று மனதிற்குள் வியந்த அஷ்வினி, “சரி சரி வாங்கி தரேன். இப்போ அக்கா மானத்தை காப்பாத்து.” என்று சிறியவளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள, அங்கு அமைதியாக ஒரு உடன்படிக்கை ஏற்பாடானது.

“ம்ம்ம்.” என்று சிறிது நேரம் சிந்திப்பதைப் போல பாவனை காட்டியவள், “ஆமா, இவங்களைப் பார்த்தா அக்கா மாதிரி தான் இருக்கு.” என்று கூறி அஷ்வினியின் மனதை குளிர்வித்ததோடு மட்டுமல்லாது, தன் அண்ணனையும் கூட்டு சேர்க்க முயற்சித்தாள்.

அந்தோ பரிதாபம்! அஷ்வினி – நவீனிற்கு இடையே எவ்வித உடன்படிக்கையும் கையெழுத்தாகவில்லையே. அதை எதிர்பார்த்தானோ அவன்?

“இல்ல டா அண்ணா?” என்று தங்கை வினவ, “இவங்களை பார்த்தா அக்கா மாதிரி இருக்கலாம். ஆனா, பேசுறதை கேட்குறப்போ பாட்டி மாதிரி இருக்கு. நம்ம ஸ்கூலுக்கு வெளிய வடை கடை வச்சுருக்காங்கள, அந்த கமலா பாட்டி கூட இப்படி தான் நான்-ஸ்டாப்பா பேசிட்டே இருப்பாங்க.” என்று கூடுதல் தகவலுடன் தங்கை காப்பாற்றிய அஷ்வினியின் மானத்தை தன் ஒற்றை வாக்கியத்தில் கப்பலேற்றி விட்டான்.

“அடப்பாவி, உனக்கு என்னடா என்மேல இப்படி ஒரு காண்டு?” என்று வாய்விட்டு புலம்பிய அஷ்வினியை கண்டு நீண்ட நாட்கள் கழித்து, வாய்விட்டு சிரித்தாள் மாயா.

அவளின் சிரிப்பை ஆதுரத்துடன் பார்த்தனர் அந்த இரட்டையர்கள்.

அப்போது சம்பூர்ணா, “அண்ணா, நம்ம இனிமே அந்த ஸ்கூல் போக வேண்டாம். அந்த வீடும் வேண்டாம்.” என்று கூற, அங்கிருந்தவர்களின் கவனம் அவளில் பதிந்தது.

அத்தனை நேரமிருந்த சிரிப்பிற்கு பஞ்சமாகியதை போல வாடியிருந்தது சம்பூர்ணாவின் முகம்.

“சம்மு என்னாச்சு?” என்று மாயா வினவ, “மாயாக்கா…” என்று அழைத்தவாறு அவளின் மீது சாய்ந்து கொண்டவள், “அந்த வீடு வேண்டாம் மாயாக்கா. டார்க் ரூம்ல பூட்டி வச்சுடுவாங்க.” என்று முன்பு கூறியதையே கூற, அந்த சம்பவத்தினால் அவளின் மனம் பாதிப்படைந்திருக்கிறது என்பது அங்கிருந்தவர்களுக்கு நன்கு புரிந்தது.

மாயாவிற்கு தான் சங்கடமாக இருந்தது. முன்பு யோசித்ததைப் போலவே,  வீட்டைவிட்டு தனியே இரு பிள்ளைகளை வைத்துக் கொண்டு எங்கிருப்பது, அவர்களின் செலவிற்கு என்ன செய்வது என்பன போன்ற பல கேள்விகள் அவளின் மூளைக்குள் அணிவகுத்து நிற்க, திகைத்து தான் போனாள் மாயா.

‘ஹாஸ்பிடல் பில்லை கட்டுறதுக்கே வழியில்ல, இதுல அடுத்தடுத்த செலவுகளை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாச்சு!’ என்று அவளின் மனசாட்சி நிதர்சனத்தை விளக்க, மாயாவின் முகம் மேலும் சுருங்கிப்போனது.

அவளின் முகம் காட்டும் பாவனைகளை இரட்டையர்கள் இருவருமே பார்த்துக்கொண்டு தான் இருந்தனர். அவர்களால் மாயாவின் குழப்பங்களையும் பயத்தையும் நன்கு உணர முடிந்தது.

அவளை அதிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டி, “ஓய், நாங்க எதுக்கு இங்க வந்துருக்கோம்னு நினைக்குற, உங்க மூணு பேரையும் எங்க ஊருக்கு கடத்திட்டு போக தான் இங்க வந்துருக்கோமாம்.” என்று சிறியவளிற்கு இணையாக பேசினான் அஷ்வின்.

அதைக் கேட்டதும் புது ஊருக்கு செல்லவிருக்கும் ஆர்வத்தினால் அந்த சம்பவங்களை தற்காலிகமாக மறந்த சம்பூர்ணா, “ஹே, புது ஊருக்கு போக போறோம். அங்க என்னென்ன இருக்கும்? பார்க் இருக்குமா?” என்று ஆர்பரிக்க ஆரம்பித்தாள்.

அஷ்வினின் பேச்சு மாயாவிற்கு அத்தனை மகிழ்ச்சியை தரவில்லை என்பது அவளின் இறுகிய முகத்திலேயே தெரிந்தது.

“இல்ல வேண்டாம், உங்களுக்கு எதுக்கு சிரமம்? நாங்க பார்த்துக்குறோம்.” என்று அஷ்வினின் முகத்தை நோக்காமல் கூறினாள் மாயா.

அத்தனை நேரம் அஷ்வினையே அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்த அஷ்வினி அப்போது தான் தன் சிந்தனையிலிருந்து வெளிவந்தாள்.

அவள் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தது, அஷ்வினின் பேச்சை பற்றி தான்.

‘இவன் என்ன என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஓவரா பெர்ஃபார்ம் பண்றானே! இல்ல எனக்கு தான் அப்படி தோணுதா?’ என்று மனதோடு உரையாடிக் கொண்டிருந்தவளை உலுக்கி அவளின் நினைவுகளிலிருந்து அவளை மீட்டுக்கொண்டு வந்தது அஷ்வின் தான்.

“உன் பிரெண்டு சொன்னதை கவனிச்சியா?” என்று கேட்க, அஷ்வினி தான் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடி போட்டது போல விழித்தாள்.

“என்ன சொன்னா?” என்று அப்பாவியாக அவள் வினவ, “அவங்க நம்ம கூட ஊருக்கு வர மாட்டாங்களாம்… இனி என்ன செய்யணும்னு அவங்களே பார்த்துப்பாங்களாம். நம்ம அதுல தலையிட தேவையில்லயாம்!” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்திக்கூறி, அதில் ‘அவளை எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்ற தகவலை தன் உடன்பிறப்புக்கு கடத்தினான் அஷ்வின்.

‘என்னங்கடா நடக்குது இங்க?’ என்று திருதிருவென்று விழித்தவள், அரை நொடியில் சுதாரித்துக்கொண்டு, “இதே சாகர் கூப்பிட்டிருந்தா போயிருப்பேல. ஓஹ் புரிஞ்சுடுச்சு, நாங்க ஒன்னும் உன்னோட பிரெண்ட்ஸ் இல்லல!” என்று முகம் திருப்பிக்கொண்டாள் அஷ்வினி.

“அப்படியெல்லாம் இல்ல வினி.” என்று அஷ்வினியை சமாளிக்க முயன்றாள் மாயா.

அது என்ன அவ்வளவு எளிதா! அவளை சமாளிக்க முடியாமல், மாயா தான் இறுதியில் வருவதாக ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.

மாயா வருவதாக கூறியதும், அஷ்வினி முதலில் கண்டது அஷ்வினின் முகத்தை தான். அதுவோ நிர்மலமாக இருக்க, ‘என்ன எந்த ரியாக்ஷனும் இல்லாம இருக்கு! நானே ஏதோ நினைச்சுக்குறேனோ!’ என்று மீண்டும் மனதிற்குள் குழம்பினாள் அஷ்வினி.

*****

சாப்பிட அமர்ந்த நிரஞ்சனின் முகம் எப்போதும் போலவே இருந்தாலும், அதில் சிறு இறுக்கத்தை கலைவாணியால் உணர முடிந்தது.

அதற்கான காரணத்தை அவரே யூகித்து விட்டாலும், அதைப்பற்றி எதுவும் கேட்கவில்லை. கேட்டால் தானே, இருவரின் மன அமைதி குலையும் என்பதைக் கருத்தில் கொண்டு எடுத்து முடிவோ!

அதை நிரஞ்சனும் உணர்ந்ததால், எதுவும் கூறாமல் சாப்பிட்டதும் வெளியே கிளம்ப ஆயத்தமாக, “நிரஞ்சா, நைட் ட்ராவல் பண்ணி வந்துருக்க, இப்போ கூட ரெஸ்ட் எடுக்காம, இவ்ளோ வேகமா எங்க கிளம்புற?” என்று கலைவாணி வினவ, காலணி மாட்டும் சாக்கில் அவரின் முகத்தை காணாமல், “ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு சித்தி. போய் கையோட முடிச்சுட்டு வந்தா தான் நிம்மதியா இருக்கும்.” என்றவாறு வெளியேறினான்.

“ஹ்ம்ம், இந்த பசங்களுக்கு இதே வேலையா போச்சு. ரெஸ்ட் எடுக்கணும்னு லீவுக்கு ஊருக்கு வர வேண்டியது. அப்பறம் வேலை வந்துருச்சுன்னு ரெஸ்ட் கூட எடுக்காம வெளிய போயிட வேண்டியது. மதியம் சாப்பாட்டுக்காகவாவது வருவானான்னு தெரியலையே!” என்று புலம்பியபடி தன் வேலைகளை கவனிக்க சென்றார் கலைவாணி.

ஒருவேளை, நிரஞ்சனின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தை கண்டிருந்தால் அவன் ஆற்றப்போகும் காரியத்தை யூகித்திருப்பாரோ!

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்😍😍😍 என்னை யாரும் தேடலையா…🙄🙄🙄 கிட்டத்தட்ட ஒரு வாரமா எழுதுன எபியை போட்டுட்டேன்… படிச்சுட்டு உங்க கருத்துக்களை ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ சொல்லுங்க…😁😁😁

இதுவரை உங்க கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி… உங்க கமென்ட்ஸ் படிச்சுட்டேன்… சீக்கிரமா ரிப்ளையும் பண்ணிடுறேன்…😊😊😊

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
14
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  10 Comments

  1. Janu Croos

   இந்த அஷ்வின் போக்கு சரியில்லையே…என்ன ஓடுது அவன் மண்டைக்குள்ள…அப்பப்போ பெருமூச்சு விடுறான்…மாயாவ அவன் பாக்குற பார்வையில ஒரு வித்தியாசம் தெரியுதே….இப்போ அஷ்வினிக்கிட்ட கேக்காமயே அவங்கள அவங்க கூய கூட்டிட்டு போக ரெடியாகுறான்…என்ன நினைப்புல இருக்கான் இவன்…

   சாகர மலையில இருந்து தள்ளி விட்டதா சொல்றாங்க…அவன் தப்ழகச்சிருக்கவும் வாய்ப்பு இருக்குல… அவன அதுக்கு அப்புறம் யாருமே தேடலயா….கீழ விழுந்ததும் அவன் செத்துட்டான்னே நினைச்சுட்டாங்களா? நிரஞ்சன் கூட அவன தேடலயா?

   நிரஞ்சன் இப்போ எங்க கெளம்பிட்டான்…மாயாவ பாக்கவா…அவனோட ஆளு யாரோ மாயாவ பாக்க அஷ்வின் அஷ்வினி வந்தத சொன்னாங்களே…அவந்கள பாக்க தான் போறானா….ஆனா ஏன் கோவமா இருக்கான்….
   ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ரகமா இருக்கானுகளே…..

   1. vaanavil rocket
    Author

    Ashwin panradhellam oru manidhabimanathula nu sonan nambava poringa😜😜😜 Niranjan sagara thedalaiya aama la avan yen thedala 🤔🤔🤔 Adhana maya va paaka yen kobama kelambanum 🤔🤔🤔 Haha last line sema 🤣🤣🤣

  2. Archana

   அஷ்வின் சரி இல்லையே😝😝😝😝 என்னடா நடக்குது சரி போக போக பார்ப்போம் என்ன நடக்கும்ன்னு

   1. vaanavil rocket
    Author

    Ashwin pavam sis edho udhavi pananum nu nenachu senjurupan 😜😜😜 Aama poga poga papom 😁😁😁

  3. Interesting ud sis nice maya mela ashwin ku crush iruko erkanave sagar pathi pesumbodhu avan mind la oru uruvam vandhu ponucje adhu maya va irukumo vini ipa vadhu konjam thelinjiya un anna erkanve mugathula edhayum katta mattan ipa maya vishaythula kandu pidicgiduviya ne sagar dha niranjan bro va irukumo sagar apa maya frnd ah

   1. vaanavil rocket
    Author

    Tq so much sis😍😍😍 Irukumo🤔🤔🤔 Nalla guess👍👍👍Adhana Vini ini kandupidicha dhan theriyum 😂😂😂 Sagar Maya friend ah…🤔🤔🤔 Pudhu guess ah iruke🤔🤔🤔

  4. Oosi Pattaasu

   அஷ்வினி, நவீன், சம்பு எல்லாம் ஒரே க்ரூப்பு, ஒன்னு கூடுனா ஒரேயடியா வைப்பாங்க ஆப்பு…

  5. Sangusakkara vedi

   Ashwin sari ilaye….. Ashwini k teriyumo teriyathu nee poi muskmelon juice vankittu varra…. Pathu pakuvama irunthukko pa…. Ashwini mattum confirm pannuna unna ootiye thalliruva …. Niru nee enga raja ivlo kvm ah pora…