588 views

சுடர் 11

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளிற்கு, திடீரென்று ஏற்பட்ட புழுக்கம் அவளை விழிப்படைய செய்தது. மேலும், அங்கு கேட்ட தன் தம்பி மற்றும் தங்கையின் சத்தம், அவர்களும் அதே அறையில் தான் இருக்கின்றனர் என்பதை உணர்த்தியது.

இவங்க ரெண்டு பேரும் என் ரூம்ல எப்படி? சித்தி எப்படி அனுப்புனாங்க?” என்று குழப்பத்துடனே கண்களை திறந்தவளிற்கு, அந்த அறையே வித்தியாசமாக தான் தெரிந்தது.

எப்போதும் ஒளிரும் விடிவிளக்கு கூட இல்லாமல் அந்த அறையை இருள் சூழ்ந்து பயமுறுத்த, அதை அதிகரித்தது அவளின் தம்பி மற்றும் தங்கையின் அழுகுரல்.

அவர்களின் அழுகை, அங்கு நிலவும் சூழல் சரியில்லை என்பதை உணர்த்த, வேகமாக அவளின் மூளை என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்தது.

ஒருபுறம், தம்பி தங்கையை சமாதானப்படுத்தியவள், மறுபுறம் அவளின் கால்சராய் பையிலிருந்த அலைபேசியை எடுத்து சோதித்து பார்த்தாள்.

அதிர்ஷ்டவசமாக, அவளின் அலைபேசி உயிரோடு தான் இருந்தது. அதில் சேமித்த எண்களில் இருந்து ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

அழைப்பு சென்று கொண்டிருந்த அதே சமயம், அவர்கள் இருக்கும் இடத்தை மீண்டும் பார்வையிட்டாள். அந்த அறை, தங்களின் வீட்டின் ஒருபகுதி தான் என்பது இப்போது தான் அவளிற்கு விளங்கியது.

ஆனால், அந்த அறையிலிருந்து வெளியே தொடர்பு கொள்வதற்கு எந்த மார்க்கமும் இல்லாதவாறு அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது அவளை பதற்றமடையச் செய்தது.

அவளின் பதற்றத்தை அதிகரிக்க செய்வதைப் போல, அவள் நம்பிக்கொண்டிருந்த அஷ்வினியும் அவளின் அழைப்பை ஏற்கவில்லை. அவள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய, மறுபுறம் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி தான் கிட்டியது.

இப்போ கூட நீ என்னை மன்னிக்க மாட்டியா?” என்று முணுமுணுத்தவளின் கண்களிலிருந்து ஒருதுளி கண்ணீர் நிலத்தில் சிதறியது.

சில நொடிகளிலேயே தன்னை மீட்டுக்கொண்டவளிற்கு, வெளியே யாருடைய சத்தமோ கேட்க, தன்னருகே இருந்த தம்பி தங்கையை அமைதியாக இருக்கும்படி சொன்னவள், வெளியே கேட்ட குரலை கிரகிக்க முயன்றாள்.

அது ராஜேஷின் குரல் என்பதை விரைவிலேயே அறிந்து கொண்டாள். வீட்டிற்கு வரும்போதும் போகும்போதும் அத்தை மகன் என்ற சாக்கில் குலைவதும் வம்பிழுப்பதும் என்று நாராசமாக ஒலிக்கும் குரலாகிற்றேஅத்தனை எளிதில் மறந்து போகக் கூடிய குரலா அது!

இவன் தான் கடத்தி வச்சுருக்கானோ?’ என்று நினைக்கும்போதே, ‘எதுக்கு இவங்க ரெண்டு பேரையும் கடத்தனும்?’ என்ற கேள்வியும் மூளைக்குள் உதித்தது.

அது தன்னிடம் கேட்கப்பட்டதைப் போல அதற்கான விடையை ராஜேஷே கூறிக்கொண்டிருந்தான்.

ம்மா, இங்க மாயா மட்டும் இல்ல. அந்த ரெண்டு குட்டிப் பிஸாசுங்களையும் அதே ரூம்ல தான் படுக்க வச்சிருக்கேன். ச்சே, எப்போ பார்த்தாலும் மாயாக்கா மாயாக்கான்னு அவ பின்னாடியே திரிய வேண்டியது!” என்று கத்தினான்.

எப்போதும் உள்ள குரல் தான் என்றாலும் இப்படி கத்தி பேசுபவன் அல்ல. வீட்டில் வேறு யாரும் இல்லை என்ற தைரியத்தில் பேசினானோ.

மறுமுனையில் அவனின் தாய் என்ன கூறினாரோ, “அதெல்லாம் உன் தம்பியை நீயே சமாளிச்சுக்கோ. மூணு பேரும் போய் சேர்ந்துட்டா, சொத்து முழுசும் எனக்கு தான். உனக்கும் பங்கு வேணும்னா, நீ தான் உன் தம்பியை சமாளிக்கணும்.” என்று அவன் அன்னையிடமே டீலிங் பேச, கேட்டுக்கொண்டிருந்த மாயாவிற்கு தான், ‘இப்படியும் ஒரு பிறவியாஎன்ற எண்ணம் தோன்றியது.

தான் தான் அவர்களின் முதல் இலக்கு என்பதோ, தன்னை இலக்காக்கியதில் தன் சித்தப்பா, சித்திக்கும் தொடர்பு இருப்பதோ இன்னும் மாயாவிற்கு தெரியவில்லை. தெரிய வந்தால்?

அவளின் சிந்தனையில் மூழ்கியிருந்தவளிற்கு, ‘இது யோசிக்கிறதுக்கான நேரம் இல்ல. சீக்கிரம் இங்கயிருந்து தப்பிக்க வழியைக் கண்டுபிடி!’ என்று அவளின் மனம் அறிவுறுத்த, மாயாவும் விரைந்து செயல்பட ஆரம்பித்தாள்.

சுற்றிலும் பார்த்தவளிற்கு தப்பிக்கும் மார்க்கம் ஒன்றும் கிடைக்காமல் போக, அந்த அறையின் கதவை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அது ஒன்றே வெளியே செல்வதற்கான வழி என்பதை அறிந்து அது திறப்பதற்காக காத்திருந்தாள்.

அப்படி காத்திருக்கும் சமயம் தான், அவ்வறையின் ஒரு மூலையில் கிடந்த பொருட்களின் புறம் அவளின் கவனம் சென்றது.

சில பூஜை பொருட்களும், ஹோமம் வளர்ப்பதற்கு தேவையான பொருட்களும் அங்கிருக்க, லேசாக யோசித்தவளின் மூளை கண்டுபிடித்ததை நம்பவும் முடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் தவித்தாள் பெண்ணவள்.

ஜாதகம், ஜோசியம் போன்றவற்றில் பெரிதும் நம்பிக்கையுடையது அவளின் குடும்பம். தாங்கள் செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த பரிகாரங்களும் பூஜைகளும் எண்ணிலடங்காதவை.

மாயாவே இவற்றை பார்த்து வெறுத்து போயிருக்கிறாள். ஒருமுறை அதை சொல்லவும் செய்ய, மாயாவிற்கு தான் திட்டு கிடைத்தது. அதன்பின்னர், வாயே திறக்கவில்லை.

ஆனால், இப்போது அவர்கள் செய்ய துணிந்த காரியம், மாயா கனவிலும் எதிர்பாராதது. பணத்திற்காக இப்படியெல்லாம் செய்ய துணிவார்களா என்று நடுங்கிப் போனாள் அவள்.

நான் உங்களை மதிக்கல, என்னால சமூகத்துல நீங்க சேர்த்து வச்ச மானம் மரியாதை போயிடுச்சுன்னு சொல்லி என்னை கொலை செய்றதா இருந்தா கூட ஏதோ உங்க எண்ணம் அப்படின்னு நினைச்சுருப்பேன். ஆனா, இந்த ரெண்டு பிள்ளைங்க என்ன தப்பு செஞ்சாகன்னு கொலை செய்யற அளவுக்கு கொண்டு வந்துருக்கீங்க!’ என்று மானசீகமா மனதிற்குள் வினவினாள்.

அவள் மனதின் குரல் கோபத்தில் ஒலித்ததா, இல்லை விரக்தியில் ஒலித்ததா என்று அவளிற்கே தெரியவில்லை.

வெளியில் கேட்டாலே, பதில் வராத கேள்விக்கு மனதிற்குள் கேட்டால் மட்டும் பதில் வந்துவிடுமா என்ன?

ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்தவள் தம்பி தங்கையின் முகம் காண, எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்ற எண்ணம் தீவிரமானது.

அங்கு ஹோமம் வளர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டைகளில் சற்று பெரிதாக கனமாக இருந்ததை கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். எப்படியும் அந்த அறையின் கதவு திறந்தால் தான் வெளியில் செல்ல முடியும் என்பதால், கதவு திறக்கும் சமயத்திற்காக காத்திருந்தாள்.

சில நிமிடங்களில் அவள் காத்திருப்பின் பலனாக கதவும் திறக்க, உள்ளே வந்தவனின் முகத்தைக் கூட பார்க்காமல் கைக்கு அகப்பட்ட இடத்தில் கட்டையை வீசி அவனை தாக்கினாள்.

அந்த எதிர்பாராத அடியில் முன்னே வந்தவன் தடுமாறினாலும், அவன் பின்னே நின்றவன் சற்று சுதாரித்துக்கொண்டு மாயாவின் கையிலிருந்த கட்டையை பறித்தான்.

கதவு திறந்ததும் ஒருவன் தான் உள்ளே வருவான் என்று எண்ணியது மாயாவின் தவறு தான். அவள் ஒன்றும் அத்தனை பலசாலி அல்லவே. இரண்டாமவன் லேசாக பிடித்து இழுத்ததிலேயே, கட்டை அவன் கைக்கு மாறியது.

என்ன செய்வது என்று மாயா திகைத்து விழிக்கையில், அவளிடம் அடிவாங்கிய முதலாமாவன் அவளின் முன்னே வர, அவனை எதிர்பார்த்திருந்தாலும், அந்த நேரத்தில் சிறிது அதிரத்தான் செய்தாள்.

ராஜேஷ்…” என்று அவள் முணுமுணுக்க, “ஆமாடி ராஜேஷ் தான். என்ன சொன்ன? நான் உனக்கு பொருத்தமில்லாதவனா? எவ்ளோ தைரியம் இருந்தா, என்னையே வேண்டாம்னு ரிஜக்ட் பண்ணுவ? எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கவே கூடாது!” என்றவன் கோணல் சிரிப்புடன் அவளருகே வந்து காதில் ஏதோ கூற, அதைக் கேட்டவளின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.

ஏன்டா இப்படி பண்ண? உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே கிடையாதா? ஒரு பொண்ணு உன்னை வேண்டாம்னு சொல்லிட்டா என்ன வேணும்னாலும் செய்வியா. நீயெல்லாம் மனுஷப்பிறவியே இல்ல!” என்று கதறியவள், “என்னைக் கொன்னுடுடா, அதுக்காக தான இவ்வளவும் பண்ண?” என்று தரையில் மடிந்து அமர்ந்து விரக்தியுடன் கூறினாள்.

த்சு, சாக அவ்ளோ ஆசையா? உன்னோட இந்த ஆசையையாவது நிறைவேத்துறேன் செல்லோ! செத்து போறதுன்னு முடிவாகிடுச்சு, எங்களுக்கு உதவி பண்ணிட்டு செத்துப்போயேன்.” என்று ராஜேஷ் நக்கலாக கூற, எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் தரையை வெறித்துக்கொண்டிருந்தாள் மாயா.

அப்படியே நீ மேல போறப்போ இதுங்களையும் கூட்டிட்டு போயிட்டா எனக்கு ரொம்ப வசதியா இருக்கும்.” என்று அந்த அறையின் ஓரத்தில் பயந்துபோய் அமர்ந்திருந்த நவீனையும் சம்பூர்ணாவையும் சுட்டிக்காட்டி கூற, அத்தனை நேரமிருந்து விரக்தி மனநிலை மாறி, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மாயாவை ஆக்கிரமித்தது.

உடனே திட்டம் வகுக்க ஆரம்பித்தாள். நடந்த களேபரத்தில் கீழே சிதறியிருந்த மஞ்சள் மற்றும் குங்கும கலவையை பார்த்தவள், யோசிக்காமல் அதை எடுத்து ராஜேஷின் கண்களில் தூவ, அதை எதிர்பார்க்காத ராஜேஷ் கண்களை கசக்கிக்கொண்டிருந்தான்.

அந்த சமயத்தில் தப்பிக்கலாம் என்று எண்ணியவள், மீண்டும் இரண்டாமவனை மறந்து விட்டாள் போலும்!

அந்த இரண்டாமவன் மாயாவிடமிருந்து கைப்பற்றிய அதே கட்டையை வைத்து அடிக்க வர, அந்த இரு பிள்ளைகளுக்கும் என்ன புரிந்ததோ, கீழே இருந்த கலவையை எடுத்து இரண்டாமவனின் மீது தூவினர்.

அந்த சில நொடிகளில் சுதாரித்த மாயாவும், அவனிடமிருந்து கட்டையை மீண்டும் பறித்து அவனை உள்ளே தள்ளிவிட்டு, மற்ற இருவரையும் அறைக்கு வெளியே கூட்டி வந்து, வேகமாக அந்த அறையின் கதவை அடைத்தாள்.

அவர்களுக்கு அப்போதிருந்து நல்ல நேரம் ஆரம்பித்ததோ என்னவோ, அந்த வீட்டில் அவர்களை தவிர வேறு ஆட்கள் இல்லை.

அங்கு சிறிதும் தாமதிக்காமல், தன் தம்பியையும் தங்கையையும் கூட்டிக்கொண்டு வெளியே ஓடினாள்.

எந்தப் பக்கம் செல்கிறாள் என்று கூட யோசியாமல் ஓட, எதிரில் வந்த காவலர் ஊர்தியில் மோதிக்கொள்ள, திடுக்கிட்டு கண் விழித்தாள் மாயா!

*****

அந்த அறைக்குள் நுழைந்த அஷ்வினி கண்டது, கட்டிலில் வாடி வதங்கிய நிலையில் அமைதியாக கண்களை மூடி படுத்திருந்த மாயாவை தான்..!

ஹே சகு, அங்க பாரேன் அந்த பொண்ணை, அவங்க வீட்டுல டைரி ப்ராடெக்ட்ஸா ஊட்டி வளர்த்துருப்பாங்களோ? நல்லா வெள்ளையா, சப்பியா, அழகா இருக்காள! முதன்முதலில் மாயாவை கண்ட அஷ்வினியின் எதிர்வினை இது தான்.

இப்போது அந்த உரையாடல் நினைவிற்கு வர, அப்போதைய மாயாவிற்கும் இப்போதைய மாயாவிற்குமான வித்தியாசத்தை எண்ணி அவளின் மனம் வருந்தியது.

காதல்என்ற உணர்வு இத்தனை மாற்றங்களை உண்டாக்குமா? உண்டாக்கி இருக்கிறதே. எத்தனை இழப்புகள், எத்தனை விரிசல்கள் என்று எண்ணும்போதே பெருமூச்சும் சேர்ந்து எழ, அந்த நேரத்தில் தான் மாயா திடுக்கிட்டு விழித்தாள்.

பழைய நினைவுகள் கனவாக வந்ததை எண்ணி தன்னைத்தானே சமன்படுத்திக்கொண்டாள். அவளின் நொடி நேர திடுக்கிடலை அந்த அறையில் இருந்த ஒருவர் கண்டுகொண்டாலும், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

சற்று சுதாரித்த மாயா அப்போது தான் எதிரிலிருந்த அஷ்வினியை கண்டாள். புருவம் சுருக்கி உண்மை நிலையை கிரகிக்க முயன்றாள். இதுவும் கனவோ என்று எண்ணினாளோ!

கண்களை சிமிட்டிய பின்பும் மறையாமல் நிற்கும் அஷ்வினியை கண்டவளிற்கு, அவள் கனவல்ல நிஜம் என்பது புரிய, சோர்ந்திருந்த கண்களின் ஓரம் கண்ணீரும், காய்ந்திருந்த உதடுகளின் ஓரம் மென்சிரிப்பும் ஒருங்கே உண்டானது.

அந்த கண்ணீரும் சிரிப்பும் சொல்லும் செய்தி அஷ்வினியை மேலும் குற்றவுணர்வில் தள்ள, மாயாவின் முகம் காண முடியாமல் தயங்கி நின்றாள்.

மாயா தான் அஷ்வினியை கண்டு லேசாக புன்னகைத்தவாறு, “என்னை மன்னிச்சுட்டியா?” என்று வினவினாள்.

மன்னிக்கிறதுக்கு நீ என்ன தப்பு பண்ண மாயா? காதலிக்குறது ஒன்னும் தப்பான விஷயமில்லையே.” என்று கூறினாள் அஷ்வினி.

சில நொடிகளுக்கு முன்னர் தான், காதலித்ததாலேயே இத்தனை இழப்புகள் என்ற ரீதியில் சென்ற அஷ்வினியின் சிந்தனை, இப்போது அப்படியே மாறியிருக்கிறது. இதைத்தான் மனம் ஒரு குரங்கு என்று சொல்வார்களோ!

அங்கு சற்று நேரம் மௌனம் நிலவ, அதைக் கலைத்த அஷ்வினி, “நான் தான் உன்கிட்ட சாரி கேட்கணும் மாயா. நீ கால் பண்ணப்போ அட்டெண்ட் பண்ணாம, வேணும்னே உன்னை அவாயிட் பண்ணதுக்கு ரொம்ப சாரி. எனக்குநீஇப்படி ஒரு சிஷுவேஷன்ல மாட்டியிருப்பன்னு சத்தியமா தெரியாது.” என்று கலங்கிய குரலில் கூறினாள் அஷ்வினி.

விடு வினி. எனக்கும் தெரியும் நீ வேணும்னே இப்படி பண்ணியிருக்க மாட்டன்னு. அதுவும் சாகர் உனக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்கு தெரியாதா? அவங்க இறப்புக்கு நான் காரணம்னு தான் என்கிட்ட நீ பேசாம அவாய்ட் பண்ணன்னு எனக்கு புரிஞ்சு தான் இருந்துச்சு. இருந்தாலும், மனசு ஓரத்துல எப்படியாச்சும் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுடனும்னு நினைப்பு இருந்துட்டே இருந்துச்சு. அதான், ஆபத்தப்போ கூட உனக்கு கால் பண்ணேன் போல.” என்று அஷ்வினியின் மறுமொழியைக்கூட எதிர்பார்க்காமல் மாயா பேசிக்கொண்டிருக்க, அவள் மனதில் இத்தனை நாட்களாக தேக்கி வைத்த பாரத்தை இறக்கி வைப்பதை புரிந்து கொண்ட அஷ்வினியும் கட்டிலில் அவளருகே அமர்ந்து கொண்டு அவளின் கைகளை ஆறுதலாக பற்றிக்கொண்டாள்.

அப்போது நவீனுடன் உள்ளே நுழைந்த சம்பூர்ணா, “மாயாக்கா, இவங்க உங்க பிரெண்டு தான? நான் தான் இவங்க கூட பேசிட்டு இருந்தேன். அப்பறம் நான் தான் நீங்க இங்க இருக்குறதை சொல்லி இவங்களை இங்க கூட்டிட்டு வந்தேன்.” என்று பெருமையாக கூற, இரு பெண்களும் சிறு சிரிப்புடன் அவளை பார்த்தனர்.

ஹே குட்டீஸ்!” என்ற குரல் கேட்க, அப்போது தான் அந்த அறையில் இன்னொருவன் இருக்கிறான் என்பதை கண்டாள் மாயா.

அப்போது அஷ்வினும் மாயாவை பார்க்க, ஒரு வரவேற்பு புன்னகையை அவனை நோக்கி செலுத்தினாள். இதற்கு முன்னர் வெகு சில சமயங்களில் அவனை அஷ்வினியுடன் பார்த்திருக்கிறாள். ஆனால், இதுவரை அவனுடன் பேசியதில்லை. அதனாலேயே, ஒரு புன்னகையுடன் நிறுத்திக்கொண்டாள்.

அஷ்வினின் பார்வையும் ஒரு நொடி தான் அவளின் மீது ஆராய்ச்சியாக படிந்தது. மறுநொடியே, தன் குரலுக்கு செவி சாய்த்து தன்னை நோக்கிய அந்த இருவரிடம் சென்றது.

வரீங்களா நம்ம ஜூஸ் குடிச்சுட்டு அப்படியே இவங்களுக்கும் ஜூஸ் வாங்கிட்டு வரலாம்?” என்று அவர்கள் இருவரையும் அழைத்தான்.

அஷ்வினிக்கு அஷ்வினின் திட்டம் புரிந்து தான் இருந்தது. மாயா, இன்னும் அவளின் மனதிற்குள் ஏதாவது தேக்கி வைத்திருந்தால், அதை பேசவே இருவருக்கும் தனிமையை கொடுக்க விரும்பினான் அஷ்வின். புரிந்ததற்கு அடையாளமாக அவனை நோக்கி அர்த்தப்பார்வை ஒன்றை வீசினாள் அஷ்வினி.

அஷ்வின் கேட்டதும் சம்பூர்ணா மாயாவின் முகம் காண, சிறுமியின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைக் கண்ட மாயாவும் சம்மதமாக தலையசைக்க, சம்பூர்ணா துள்ளியபடி அஷ்வினின் கையைப் பற்றிக்கொண்டாள்.

எங்கு தான் மற்றும் செல்வதாக இருந்தால் தடுத்துவிடுவார்களோ என்று எண்ணியவள் தன் தமையனையும் அழைக்க, “மாயாக்கா, உங்களுக்கு ஜூஸ் வாங்கிட்டு வரேன்.” என்று பெரிய மனித தோரணையில் கிளம்பினான் நவீன்.

அதைக் கண்ட மற்ற மூவருக்கும் சிரிப்பே வந்தது.

மூவரும் வெளியே செல்லும் வரை காத்திருந்த அஷ்வினி, “இப்போ சொல்லு மாயா, என்ன தான் ஆச்சு? நீ எப்படி இதுல மாட்டுன? வெளிய விசாரிச்சதுல நீ சித்தப்பா வீட்டுல இருக்குறதா சொன்னாங்க, அப்போ உங்க அப்பா எங்க?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினாள்.

மாயா, அவளின் கடைசி கேள்வியிலிருந்து பதில் சொல்ல விழைந்தாள் போலும்!

அப்பா இப்போ ஜெயில்ல இருக்காரு.” என்று மாயா கூற, அதைக்கேட்ட அஷ்வினியோ அதிர்ந்து தான் போனாள்.

(ஷப்பா ஒரு வழியா ட்விஸ்ட்டோட  முடிச்சுட்டேன்…😜😜😜)

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்… வந்துட்டேன் வந்துட்டேன்… ட்விஸ்ட் எபியோட வந்துட்டேன்… (நீங்க நம்பலைன்னாலும் இது ட்விஸ்ட் தான் மக்களே…😜😜😜) கதையைப் படிச்சுட்டு உங்க கருத்துக்களை காயின்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ பகிர்ந்துக்கோங்க…😊😊😊

இப்படிக்கு,

உங்க 🌈🔥

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  7 Comments

  1. Archana

   மாயா அப்பா அப்போ சாகலையா😳😳😳 குலதெய்வம் கோவில் போய் ஒரு ஜோசியர் கிட்ட பரிகிரம் கேட்டு, அவ அப்பா திரும்ப வரனும் அதனாலே தான் இந்த பூஜைன்னு சொன்னது எல்லாம் உசுறோட இருக்கிற மனுஷனுக்கு தானா😶😶😶😶 ஒருவேலை அவர் தான் சாகரே க்ளோஸ் பண்ணிருப்பாரோ

   1. vaanavil rocket
    Author

    ஓ செத்துட்டாருன்னு நினைச்சுட்டீங்களா😂😜😂 ஹாஹா ஆமா, ஜெயில்ல இருக்குறவருக்கு தான் இத்தனை பூஜை… வாய்ப்பிருக்கு..🤔🤔🤔

  2. Interesting ud sis nice semmma sagar niranjan bro va irupano maya appa jail ah dha irukaru senja thapu ku jail ah iruparu narabali kudutha thiruppi vandhuduvangala lusu pasanga

   1. vaanavil rocket
    Author

    Tq so much sis 😍😍😍 Irupano 🤔🤔🤔 Adhana jail la irukuravaruku edhuku narabali 🤦🤦🤦

  3. Janu Croos

   அட எடுபட்ட பயலுகளா….ஏதோ அண்ணன காப்பாத்தனும்…அதுக்கு பூஜை பண்ணனும்னு சொன்னத வச்சு ஏதோ அந்தாள் முடியாம படுத்த படுக்கையா இருக்கு…அதுக்கு தான் பண்றாங்கனு நினைச்சா….அந்த கேப்மாரி ஏதோ பிராடுத்தனம் பண்ணிட்டு ஜெயில்ல இருக்கதுக்காக பெத்த புள்ளைங்களயே கொல்ல துணிஞ்சிடிச்சுங்களே…..அத சாக்கா வச்சு சொத்து மொத்தத்தையும் தங்க பேருல எடுக்க குழந்தைங்கனு கூட பாக்காம கொல்ல துணிஞ்சிருக்காங்களே….இதுங்க எல்லாம் என்ன ஜென்மமோ…..
   அப்போ சாகர் இப்போ இல்லையா….அவன் எங்கயாவது இவங்களுக்கு தெரியாம உயிரோட இருப்பான்னு நினைச்சா…அவன உண்மையாவே கொண்ணுட்டாங்களா…
   எத்தனை பேரோட அன்பை சம்பாதிச்சழன் அவன்….அவனுக்கு இப்படி ஒனு நிலமை வரனுமா….
   நினஞ்சன் அந்த குடும்பத்தை தன்னோட கஸ்டடில வச்பிருக்கது தப்பெ இல்லை…சொல்லப்போனா அதுங்க எல்லாருக்கும் கும்பிபாகம் தான் சரி….பிறந்தோன கள்ளிப்பால் குடுத்து கொண்ணிருக்க வேண்டிய பீஸுங்க தான் அதுங்க…அத பண்ணாததால இப்போ அதுங்க மாயாவையும் அந்த பசஙக்ளையும் கொல்ல பாக்குதுங்க..பிசாசுங்க…

   1. vaanavil rocket
    Author

    Aama epdi pogudhu parunga buthi 🤦🤦🤦 Sagar pavam 😑😑😑
    Kumbibagam, Kallipaal – nalla ideas apdiye pannirukalam…😏😏😏

  4. Sangusakkara vedi

   Ennada ithu jail kali thingiravana kappatha thn onnuku moonu pera pazhi kudukka pathangala….. Aven ethuku jail ku ponan … Oru vela sagar ra kola pannunathukka irukumo …