621 views

சுடர் 10

முதல் நாள் குழப்பத்துடனே தூங்கியதால், சீக்கிரமாக விழிப்பு தட்டியது அஷ்வினிக்கு. விழிகளை சிரமப்பட்டு திறந்து பார்த்தவள் முதலில் கண்டது கீழே உறங்கும் அஷ்வினை தான்.

இவன் எதுக்கு இங்க தூங்குறான்?’ என்று யோசித்தபோது தான், முதல் நாள் நிகழ்வுகள் யாவும் நினைவிற்கு வந்தன.

தூங்கும் இடைவெளியில் இல்லாமல் போன குழப்பம் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ள, எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்று அவளிற்கே தெரியாமல் போனது.

அவளின் சிந்தனையோட்டம் அஷ்வினை தொற்றிக்கொண்டது போலும்! சிறிது நேரத்திலேயே அவனும் எழுந்து, யோசனையில் அமர்ந்திருந்த அஷ்வினியை கண்டான்.

முந்தினம் போல இல்லாமல் சற்று தெளிவாக இருந்தவளை கண்டவன், ‘இவளை ரொம்ப யோசிக்க விடாம பார்த்துக்கணும்.’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.

அதன்படியே, “ஹே, குட்டிச்சாத்தான் என்ன இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட?” என்றபடியே அவனும் எழுந்தான்.

அதற்கு எதிர்வினையாக, “ம்ம்ம்என்ற முனகல் மட்டுமே அவளிடமிருந்து வெளிப்பட்டது.

என்னாச்சுடா?” என்று கட்டிலில் அவளருகே அமர்ந்து வினவ, “நான் தப்பு பண்ணிட்டேன்டா அண்ணா.” என்று மாயாவின் அழைப்புகளை தவிர்த்த கதையை கூறினாள்.

அஷ்வின் ஒரு பெருமூச்சுடன், “எனக்கு தெரியும் வினி. ஜெனி நேத்தே என்கிட்ட சொன்னா. இன்ஃபேக்ட் அதைப் பத்தி தான் உன்கிட்ட பேச நினைச்சேன்.” என்று பேச்சில் சிறிது இடைவெளி விட்டான்.

அந்த இடைவெளி எதற்காக என்பதை புரிந்து கொண்ட அஷ்வினி, “நான் ஏன் இவ்ளோ க்ருயல்லா மாறிட்டேன்னு தெரியலடா?! ச்சே, அந்த இக்கட்டான சூழ்நிலையில, நான் ஏதாவது சொல்யூஷன் சொல்லுவேன்னு, என்மேல நம்பிக்கை வச்சு கால் பண்ணியிருப்பால, நான் அதை காப்பாத்தவே இல்ல.” என்று புலம்பியவள், அஷ்வினின் தோளில் சாய்ந்து கொள்ள, அவனும் அவளை ஆறுதலாக தட்டிக்கொடுத்தான்.

எனக்கு சத்தியமா, அவ இப்படியொரு சிஸுவேஷன்ல மாட்டியிருப்பான்னு தெரியாது டா.” என்று கூறியவள், ‘என்னை நீ நம்புற தானேஎன்ற கேள்வியுடன் கூடிய பார்வையை அஷ்வினை நோக்கி வீச, அதை சரியாக புரிந்து கொண்டவனாக, “நீ அப்படியெல்லாம் யோசிச்சுருக்கக்கூட மாட்டேன்னு தெரியும் வினி, தேவையில்லாம குழம்பாத.” என்று கூறினான்.

இல்ல டா, அவ என்னை தப்பா தான நினைச்சுருப்பா. ஜெனி கூட சொன்னா, நான் தேவையில்லாம மாயாவை அவாயிட் பண்றேன்னு. அட்லீஸ்ட் அப்போயாச்சும் கால் பண்ணியிருக்கணும். அடுத்த முறை கால் வந்தா அட்டெண்ட் பண்ணலாம்னு விட்டுட்டேன். இப்போ மட்டும் சாகர் இருந்துருந்தா, அவனும் என்னை தப்பா நினைச்சுருப்பானோ? ப்ச் எல்லாம் என்னால தான்!” என்று அஷ்வினியின் புலம்பல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

இங்க பாரு வினி, மொத்தமா உன்மேல் பழியை தூக்கி போட்டுக்கிறதுல நியாயமே இல்ல. கொஞ்சம் யோசிச்சு பாரு, நீ அப்போ கால் அட்டெண்ட் பண்ணியிருந்தாலும் உன்னால அவங்க எப்படி தப்பிக்கலாம்னு சொல்யூஷன் தான் கொடுத்திருக்க முடியுமே தவிர, அந்த பிரச்சனையை தவிர்த்திருக்க முடிஞ்சுருக்காது. தேங்க் காட் அவங்க அந்த பிரிச்சனையில இருந்து தப்பிச்சுருக்காங்க. சோ, இப்போ என்ன பண்றதுன்னு கொஞ்சம் நிதானமா யோசி.” என்ற கூற்று அஷ்வினியிடத்தில் சற்று வேலை செய்தது.

சிறிது நேர யோசனைக்கு பின்னர், “மாயாவை பார்க்க போலாமா?” என்று கேட்டாள் அஷ்வினி. அஷ்வினும் சிறிது யோசித்துவிட்டு, “சரி போலாம்.” என்றான்.

அவன்சரிஎன்றதும் கீழே செல்ல கிளம்பியவளை தடுத்தவன், “இப்படியே போனா, கண்டிப்பா மாயாக்கு உன்னை அடையாளம் தெரியாது. சோ, முதல்ல ஃப்ரெஷ்ஷப்பாகிட்டு வா.” என்று கேலியாக கூறினான் அஷ்வின்.

வழக்கமாக இப்படி வரும் கேலியை திருப்பிவிட்டு தான் மறுவேலை பார்ப்பவள், இன்று அதற்கான எவ்வித பிரதிபலிப்பும் இல்லாமல் அமைதியாக கிளம்ப, அதைக் கண்ட அஷ்வினிற்கு தான் மலைப்பாக இருந்தது.

இருவரும் கிளம்பி கீழே இறங்கும் சமயம், “வினி, இந்த பிரச்சனை எல்லாம் அப்பா அம்மாக்கு இப்போ தெரிய வேண்டாம். இப்போதைக்கு பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங்னு சொல்லிப்போம்.” என்று அஷ்வின் கூற, உடனே தலையை ஆட்டினாள். அது அவள் மூளைக்குள் சென்று சேர்ந்ததா என்று அஷ்வினிற்கு தான் தெரியவில்லை.

இருவரும் ஒன்றாக இறங்கி வருவதை கண்ட சரவணன்சித்ரா தம்பதியருக்கு ஆச்சரியமாக இருக்க, சித்ராவோ அஷ்வினியை நோக்கி, “இவளுக்கு என்னாச்சு? இன்னைக்கு இவ்ளோ சீக்கிரமா எழுந்து கிளம்பியிருக்கா? அதுவும் லீவு நாள்னா இவளுக்கு விடியிறதே மதியம் போல தான?” என்று வினவினார்.

அவர் சொன்ன, ‘சீக்கிரம்என்ற சொல் மட்டும் அவளின் செவிவழி சென்றிருக்க வேண்டும். “ஆமா ம்மா, சீக்கிரம் எழுந்துட்டேன்.” என்று கேள்விக்கு சம்பந்தமில்லாத பதிலை கூறினாள் அஷ்வினி.

அதில் பெற்றோர் இருவருக்கும் சந்தேகம் வர, அதை அதற்கு மேல் வளரவிடாமல், “பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் ம்மா. அதான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பியிருக்கோம். அவ தூக்க கலக்கத்துல உளறிட்டு இருக்கா.” என்று கூறினான் அஷ்வின்.

உடனே, பிள்ளைகளின் வயிற்றை கவனிக்கும் அன்னையாக, “நேத்தே சொல்லியிருந்தா காலைல டிஃபன் சீக்கிரமா பண்ணியிருப்பேன்ல?” என்று சித்ரா கூற, “நேத்து நைட் திடீர் பிளான் ம்மா.” என்று அஷ்வினே மீண்டும் சமாளித்தான்.

என்ன பிள்ளைங்களோ போங்க. இப்போ டிஃபனுக்கு என்ன பண்ண போறீங்க?” என்று சித்ரா கேட்கவும், “அதெல்லாம் வெளிய பார்த்துக்குறோம் ம்மா.” என்று கூறிவிட்டு, அங்கிருந்தால் இன்னும் எத்தனை கேள்விகளுக்கு மழுப்பலான விடை சொல்ல வேண்டியதிருக்குமோ என்று எண்ணியவனாக, “ம்மா லேட்டாகிடுச்சு நாங்க கிளம்புறோம்.” என்று அவளருகே சிந்தனை வயப்பட்டவளாக நின்று கொண்டிருந்தவளை இழுத்துக்கொண்டு வெளியேறினான்.

செல்லும்முன், “அப்பா, உங்களுக்கு இன்னைக்கு லீவு தான? கார் நாங்க எடுத்துட்டு போறோம்.” என்று தகவலாக கூறியவன், அவரின் தலையசைப்புக்கு கூட காத்திராமல் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

ஹ்ம்ம் முன்னாடியே சொல்லியிருந்தா நானே சமைச்சு வச்சுருப்பேன்.” என்று இன்னும் அதே கவலையில் இருந்த சித்ரா கணவனிடம் கூற, அதற்கு எவ்வித மறுமொழியும் இல்லாததால் சரவணனை பார்த்தார்.

சரவணனோ தீவிர யோசனையில் இருக்க, “உங்களுக்கு என்னாச்சு?” என்றார் சித்ரா.

வினியை கவனிச்சியா, அவ கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருந்த மாதிரி இருந்துச்சு.” என்று சரவணன் கூறியதும், “இதை ஏன் முன்னாடியே சொல்லல? அவங்களுக்கு போன் போட்டு திரும்ப வரச்சொல்லுங்க.” என்று சித்ரா படபடக்க, “விடு சித்ரா, அதான் அஷ்வின் கூட போயிருக்கான்ல. அவன் சொன்ன மாதிரி சரியான தூக்கமில்லாதது கூட காரணமா இருக்கலாம்.” என்று கூறினார்.

சரவணனின் கூற்றில் முற்றிலுமாக சமாதானமாக விடினும் ஏதோ முணுமுணுப்புடன் தன் வேலையை கவனிக்கச்சென்றார் சித்ரா.

மனைவி சமையலறைக்கு செல்லும்வரை காத்திருந்த சரவணன், ‘டேக் கேர்என்ற செய்தியை மட்டும் மகனிற்கு அனுப்பிவிட்டு யோசனையுடன் தன்னறைக்கு சென்றார்.

*****

அந்த காலை வேளையில் வாகன நெரிசல் அவ்வளவாக இல்லாத காரணத்தினால், சற்று இலகுவாகவே இருந்தது அந்த பயணம்.

அந்த பயணம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் வரை மௌனமாக அலைபேசியை பார்த்துக்கொண்டு வந்தவள் திடீரென்று, “தன்னோட குடும்பத்தை சேர்ந்தவங்களை இப்படி செய்ய எப்படி மனசு வந்துச்சு? மாயாவை தவிர மத்த ரெண்டு பேரும் சின்ன பசங்க. ச்சே, என்ன தான் படிச்சவங்களா இருந்தாலும், இந்த மூடநம்பிக்கை மட்டும் குறையவே மாட்டிங்குது!” என்று பேசினாள்.

அப்போது தான் அவள் வலையொளியில் அந்த செய்தியைப் பற்றி விரிவாக பார்த்துக்கொண்டிருந்தது அஷ்வினிற்கு தெரிந்தது.

இவ சும்மாவே இருக்க மாட்டாளா! ஆமா, இவ எப்போ இதைப் பார்க்க ஆரம்பிச்சா, சத்தமே கேட்கல?’ என்று நினைத்தபடி அவளை ஆராய, அப்போது தான் அவள் ஊடலையின் வாயிலாக அதைக் கேட்டுக்கொண்டிருப்பதை கண்டான் அஷ்வின்.

உஃப், இப்போ இதைப் பார்க்காதன்னு சொன்னாலும் கேட்க மாட்டா. எதையாவது பார்த்துட்டுநான் தான் காரணம்னு திரும்ப புலம்ப ஆரம்பிக்குறதுக்குள்ள அங்க போயிடனும்.’ என்று முடிவெடுத்தவன் வேகத்தை சற்று அதிகரித்தான்.

அதை எல்லாம் அறியாதவளாக, கண்களை மூடி மனதை பழைய நினைவுகளுக்கு கூட்டிக்கொண்டு சென்றாள் அஷ்வினி.

*****

ஹே சகு, உங்க ஊரு இவ்ளோ நல்லா இருக்குமாடா?” என்று ஜன்னல் வழியே வெளியே தெரிந்த பசுமையை ரசித்துக்கொண்டே அஷ்வினி வினவ, “இதை விட நல்லா இருக்கும். ஆனா, இப்போ நாம போறது என் ஊருக்கு இல்ல. மாயாவோட ஊருக்கு.” என்று சாகர் கூற, அதே நேரம் அவர்களின் வாகனம், ‘மயிலக்குறிச்சி தங்களை அன்புடன் வரவேற்கிறதுஎன்ற பலகையை கடந்து சென்றது.

டேய் என்னடா சொல்ற? மாயாவோட ஊரா? அங்க எதுக்கு போறோம்?” என்று குழப்பமும் பதற்றமுமாக அஷ்வினி வினவ, “மாயா நேத்து கால் பண்ணா வினி. அவளுக்கு ஏதோ பிரச்சனைன்னு அவ வாய்ஸ்லயிருந்தே தெரிஞ்சுது. ஆனா, என்ன பிரச்சனைன்னு நானே கேட்டும் கூட அவ சொல்லல. அதான், மனசு கேட்கல, வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு முறை அவளை பார்த்துட்டு போயிடலாம்னு வந்துட்டேன்.” என்றான் சாகர்.

பிரச்சனைஎன்று சாகர் கூறியதை கேட்டவுடனே அஷ்வினிக்கு லேசாக இருந்த பதற்றம் ஜெட் வேகத்தில் உயர, “லூசா டா நீ? இதை ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லல? அஷ்வின் கிட்ட சொல்லி, வேற ஏதாவது பிளான் போட்டுருக்கலாம்ல.” என்று கத்தினாள்.

வினி, நான் சொல்றதை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. எனக்கு மாயா வாய்ஸ் கேட்டதும், அடுத்து என்னன்னு யோசிக்க கூட தோணல. இதுல எங்க பிளான் போட்டு வரது?” என்று சலித்துக்கொண்டான் சாகர்.

ப்ச், அப்படி என்னடா தன்னையே மறக்க வைக்கிற அளவுக்கு லவ்வு?” என்று அதற்கு காரணமே தான் தான் என்பதை வசதியாக மறந்துவிட்டு கூற, “அதெல்லாம் அனுபவிச்சா தான் தெரியும்!” என்று சிறு சிரிப்புடன் கூறினான் சாகர்.

சிரிக்காதடா பக்கி. இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்குற அனுபவம் எனக்கு வேண்டவே வேண்டாம். நானெல்லாம் சித்து பார்க்குற பையனுக்கு கழுத்தை நீட்டிட்டு போயிடுவேன்.” என்று சிலுப்பிக்கொண்டு கூறினாள் அஷ்வினி.

சாரி வினி, தேவையில்லாம உன்னையும் இதுல இழுத்துவிட்டு…” என்று சாகர் இழுக்க, “போதும் போதும் உன் சென்டி சீனெல்லாம் பார்க்குற அளவுக்கு பாப்பாக்கு பொறுமை இல்ல. அதை விட ரொம்ப பசிக்குது! எங்கயாவது நல்ல இடமா பார்த்து நிறுத்து.” என்று கட்டளையிட, “என்னடா உன் வாயிலயிருந்து சோறுன்னு வார்த்தை வரலையேன்னு பார்த்தேன்.” என்று கிண்டல் செய்தாலும் அவளிற்காக தேநீர்க்கடையில் நிறுத்தினான்.

மீண்டும் அவர்களின் பயணம் ஆரம்பிக்கும் நேரத்தில், “வினி, இப்போ நான் பண்ணது நினைச்சா, எனக்கே கொஞ்சம் அதிகப்படியா தான் தோணுது. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அண்ணாவை வரச்சொல்லி பேசலாம்னு தான் நினைச்சேன். ஆனா, அவ வாய்ஸ் கேட்டதும்.” என்று கூறியவனை இடைவெட்டியவள், “எப்பா சாமி! இதையே பத்து தடவை சொல்லிட்ட. தயவு செஞ்சு டைலாக்கை மாத்து.” என்றாள் அஷ்வினி.

இல்ல வினி, உனக்கே தெரியும், அவ அவங்க குடும்பத்துக்கு பயந்து தள்ளியிருந்தது, அப்பறம் நான் ரொம்ப கன்வின்ஸ் பண்ணி அவளோட கூட்டுலயிருந்து வெளிய கொண்டு வந்தது. அப்படி இருக்கும்போது, அவளுக்கு ஒரு பிரச்சனைன்னு தெரிஞ்சதும், அவ பக்கத்துல இல்லாதது கொஞ்சம் கில்டியா இருந்துச்சு!” என்று பாவமாக சாகர் கூறினான்.

இப்போ என்ன நீ செஞ்சது சரின்னு சொல்லனுமா?” என்று முறைத்தபடி அஷ்வினி வினவ, “அப்படியெல்லாம் சொல்லல, நீ வேண்டாம்னு சொன்னா, இப்படியே வண்டியை திருப்பிடுவேன்.” என்று சாகர் கூறினான்.

அவனை உற்று நோக்கிய அஷ்வினி, “மூஞ்சியை இப்படி வைக்காத! பார்க்க சகிக்கல. அதான் பாதி வழி வந்தாச்சே, இனி எதுக்கு திரும்பிட்டு? உன் ஆளை பார்த்துட்டே போவோம்.” என்று கூற, அதைக்கேட்ட சாகரோ தன் பாவமான பாவனையை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக வண்டியை செலுத்தினான்.

அதை ஓரக்கண்ணில் பார்த்த அஷ்வினிக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியே! ஆயினும், ஏதோ தவறாக நடக்கப்போவதாக அவளின் உள்ளுணர்வு கூற, அதை அலட்சியப்படுத்தி சாகருடன் கதை பேசிக்கொண்டே அந்த பயணத்தை ரசித்தாள்.

அது தான் அவனுடன் ரசிக்கும் கடைசி பயணம் என்று அறிந்திருந்தால், உள்ளுணர்வினை அலட்சியப்படுத்தாமல், அப்போதே பாதையை மாற்ற சொல்லியிருப்பாளோ!

*****

அந்த வாகனம் குலுங்கி நிற்க, தன் நினைவிலிருந்து மீண்டாள் அஷ்வினி.

சரியாக அதே நேரம், “வினி, ஹாஸ்பிடல் வந்துடுச்சு.” என்றான் அஷ்வின். அவளிருந்த குழப்ப மனநிலையில், அஷ்வினிற்கு எப்படி மாயா இந்த மருத்துவமனையில் இருக்கிறாள் என்பது தெரியும் என்றெல்லாம் கேட்க தோன்றவில்லை.

சற்று தயக்கத்துடனே அந்த மருத்துவமனைக்குள் சென்றாள். அஷ்வின் வரவேற்பில் மாயாவை பற்றி விசாரிக்கும் வேளையில், அஷ்வினி சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அஷ்வின் வரவேற்பில் விசாரிப்பதைக் கண்ட சாரதியின் ஆள் நிரஞ்சனிற்கு அழைத்து, மாயாவை பார்க்க யாரோ வந்திருப்பதாக சொல்ல, மறுமுனையில் என்ன கூறினானோ, சாரதியின் ஆள் தலையசைத்து இருவரையும் கண்காணிக்க ஆரம்பித்தான்.

இருவரும் மாயாவின் அறை நோக்கி செல்ல, அறைக்கு வெளியே இருத்த காவலாளி அவர்கள் யாரென்று விசாரித்தார்.

சார், நாங்க மாயாவோட பிரெண்ட்ஸ். அவளுக்கு நடந்ததை நியூஸ்ல பார்த்தோம். அதான் அவளைப் பார்க்க வந்துருக்கோம்.” என்று அஷ்வின் தங்களைப் பற்றி கூறினான்.

ஓஹ், ஆனா இப்போ நீங்க அவங்களை பார்க்க முடியாது. இன்ஸ்பெக்டர் வந்து சொன்னா தான் பார்க்க விடுவோம்.” என்று அவர் கறாராக கூற, முதலில் அவரிடம் பேசிப்பார்த்த அஷ்வின், அது சரி வராததால், அந்த இன்ஸ்பெக்டரிமே பேசலாம் என்று நினைத்து அவர் எங்கிருப்பார் என்று அதே காவலாளியிடம் கேட்டு தெரிந்து கொண்டான்.

பின்னர், “வினி, நான் போய் அந்த இன்ஸ்பெக்டரை பார்த்து பேசிட்டு வரேன். அதுவரைக்கும் இங்கயே இரு. நீயும் தேவையில்லாம அலைய வேண்டாம்.” என்று கூற, அவளும் மௌனமாக தலையசைத்துவிட்டு மாயாவின் அறைக்கு வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்து, பின்னே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

அஷ்வின் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினான்.

சற்று நேரத்திலேயே, அஷ்வினி தன்னருகே யாரோ அமர்வதை உணர்ந்தாள். ஆயினும், கண்களை திறக்க அவசரம் காட்டவில்லை.

அப்போது அவளருகே மெல்லிய முணுமுணுப்பு சத்தம் கேட்க, புருவ சுழிப்புடன் கண்களை திறந்து பார்த்தாள் அஷ்வினி.

அங்கு அவளிற்கு அருகே உள்ளே நாற்காலியில், அமர்ந்திருந்த சிறு பெண்ணோ, அவளை விட வயதில் மூத்தவனாக தெரிந்தவனுடன் மென்குரலில் பேசிக்கொண்டிருந்தாள். இல்லை, சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.

இருவரும் பேசிக் கொள்வது கேட்கவில்லை எனினும், அவளை பற்றி தான் பேசுகின்றனர் என்பது அஷ்வினிக்கு புரிந்தே இருந்தது.

அவர்களின் கவனத்தை ஈர்க்காமல் அவர்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் அஷ்வினி. சற்று முன் வரை, குழப்பமாக இருந்ததால் சுருங்கிப்போன அவளின் முகம் தற்காலிகமாக தெளிந்து காணப்பட்டது. உபயம், அந்த இரு பிள்ளைகள்!

பேசிக்கொண்டே இருந்தவர்கள் சட்டென்று அஷ்வினி புறம் திரும்ப, அவளோ இருவரையும் குறுகுறுவென்று பார்த்தாள். அதை கண்ட இருவரும், ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சைகையில் ஏதோ பேசியவாறே அங்கிருந்து கிளம்ப முற்பட, அவர்களை தடுத்தாள் அஷ்வினி.

எங்க போறீங்க ரெண்டு பேரும்?” என்று அவள் வினவ, இருவரும் பதில் கூறாமல் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்தனர்.

உங்களை தான் கேட்குறேன், இவ்ளோ நேரம் என்னைப் பத்தி தான ஏதோ சீக்ரெட்டா பேசிட்டு இருந்தீங்க?” என்று மீண்டும் அதட்டலாக வினவ, அந்த சிறுவன்இல்லைஎன்று தலையசைக்க, சிறுமியோ அஷ்வினி கண்களை உருட்டி பேசியதில் பயம் கொண்டவளாகஆம்என்று தலையசைத்தாள்.

இருவரின் பாவனைகளைக் கண்ட அஷ்வினிக்கு சிரிப்பு வந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், “ஹ்ம்ம், என்னைப் பத்தி என்ன பேசுனீங்கன்னு சொல்லுங்க, உங்களை விட்டுடுறேன்.” என்று ஏதோ கடத்தி வைத்ததை போல கூறினாள்.

அந்த சிறுவன் தன் தங்கையின் கைகளைப் பிடித்து அழுத்த, ஏதோ சொல்ல வந்தவளும் வாய் மூடிக்கொண்டாள்.

இந்த ரகசிய செய்கைகளை எல்லாம் அஷ்வினியும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.

பார்றா, இந்த பொடிப்பையன் கையை அழுத்தி சிக்னல் கொடுக்குறதும், அதுக்கு ரெஸ்பான்ஸா இந்த மேடம் கண்ணால பதில் சொல்றதும்!’ என்று மனதிற்குள் வியந்தாலும், அந்த சிறுவனை எங்கோ பார்த்த நினைவு வேறு அவ்வப்போது வந்து சென்றது.

அந்நினைவை விரட்டியவள், “ரெண்டு பேரும் இங்கயே இருக்குறதா உத்தேசமா? இப்போ சொல்வீங்களா இல்லையா?” என்று மேலும் வினவ, “அதுபாப்பாஉங்களை வேற யாரோன்னு நினைச்சு பேச வந்தா, அதான் நீங்க அவங்க இல்லன்னு சொல்லிட்டு இருந்தேன்.” என்று அந்த சிறுவன் கூறி, அதை ஆமோதிக்குமாறு அவனின்பாப்பாவிடம் கூற, அந்த குட்டியோ எவ்வித எதிர்வினையைப் புரிவது என்று தெரியாமல் முழித்தது.

க்யூட்!’ என்று மனதிற்குள் சொல்லியவளோ, “ஓஹ், யாரு மாதிரி நான் இருக்கேன்?” என்று இம்முறை கேள்வியை சிறுமியிடம் வினவ, அவளோ மேலும் விழித்து பின்னர், “அதுஅக்கா போன்ல, உங்க ஃபோட்டோ…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மாயாவின் அறைக்கதவு திறந்து உள்ளுக்குளிருந்து ஒரு செவிலி வெளியே வந்தார்.

இப்போது அஷ்வினியின் கவனம் மீண்டும் மாயா பக்கம் திரும்ப, அந்த இருவரையும் விட்டுவிட்டு அந்த செவிலி பின்னே சென்றாள்.

சிஸ்டர் கொஞ்சம் நில்லுங்க.” என்றவளின் அழைப்பில் அவரும் நிற்க, “மாயாமாயாக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று வினவ, அவரோ புருவம் சுருக்கி, ‘நீ யார்?’ என்ற கேள்வியை அவரின் பார்வை வழியே கடத்தினார்.

அதைப் புரிந்து கொண்ட அஷ்வினி, “நான் அவஅவங்க பிரெண்டு.” என்று கூற, அவரும் சிறு தோள் குலுக்கலுடன், “வைட்டல்ஸ் எல்லாம் நார்மலா தான் இருக்கு. நாங்க கொடுக்குற மாத்திரையின் வீரியத்துல அவங்க இப்போ தூக்கத்துல இருக்காங்க.” என்று கூறிவிட்டு சென்றுவிட, அஷ்வினி மீண்டும் அவளின் இடத்திற்கே வந்து அமர்ந்தாள்.

நீங்க மாயாக்காக்கு தெரிஞ்சவங்க தான? நவி அண்ணா நான் சொன்னேன்ல.” என்று சிறிது உற்சாகத்துடன் கூறினாள் அந்த சிறுமி, சம்பூர்ணா.

மாயாக்கா?” என்ற முணுமுணுப்புடன் திரும்பி இருவரையும் பார்க்க, சம்பூர்ணா ஆவலுடன் அஷ்வினியின் முகத்தை பார்த்திருக்க, நவீன் அவளைப் பார்க்காமல் திரும்பிக்கொண்டான்.

இப்போது நவீனை எங்கு கண்டிருக்கிறாள் என்பது அஷ்வினிக்கு தெரிந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன், மாயாவின் ஊரில் அவனை பார்த்திருந்தாள், இன்னும் வயது குறைந்தவனாக

மாயா உங்க அக்காவா?” என்று உறுதிபடுத்திக்கொள்ள மீண்டும் வினவ, “ஆமா, இதோ உள்ள தான் இருக்காங்க. பாவம் மாயாக்காக்கு நல்ல அடிப்பட்டுடுச்சு. எங்களுக்கும் தான், இதோ…” என்று சம்பூர்ணா அவள் கைகளிலிருந்த காயங்களை காட்ட, அப்பிஞ்சு கரங்களில் ஆங்காங்கு போடப்பட்டிருந்த வெள்ளை நிற பிளாஸ்டர்களின் நடுவில் லேசாக கசிந்திருந்தது ரத்தம்.

அதை தடவிப்பார்த்தவளிற்கு, மாயாவுடன் தப்பி வந்த மற்ற இருவர் இவர்கள் தான் என்பது புரிந்தது.

ச்சே இவ்ளோ சின்ன பசங்களை போய்! இவனுங்களுக்கு எல்லாம் எதுக்கு குடும்பம், குழந்தை?’ என்று மனதிற்குள் காட்டமாக நினைத்தவளின் கண்களில் அவளை அறியாமலேயே கண்ணீர் சுரந்தது.

சிலருக்கு அதிகபட்ச கோபத்தில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சுரக்கும். அப்படியே அஷ்வினிக்கும் வழிய, அவளால் அதைக் கட்டுப்படுத்த தான் முடியவில்லை.

அஷ்வினியிடம் கைகளை கொடுத்துவிட்டு அமர்ந்திருந்த சம்பூர்ணா, அவள் அழுகவும், “எதுக்கு அழறீங்க? எனக்கு வலிக்கவே இல்ல. நீங்க அழுகாதீங்க.” என்று முந்தினம் தன் காயங்களைப் பார்த்து கண்ணீர் சிந்திய மாயாவை சமாதானப்படுத்தியது போல அஷ்வினியையும் சமாதானப்படுத்தினாள்.

சிறியவள் கூறிய சமாதானங்களுக்கு பெரியவளின் கண்ணீர் கட்டுப்பட்டதோ! சில நொடிகளிலேயே கண்ணீர் நிற்க, “என்னை எப்படி தெரியும்?” என்று அவளிடம் வினவினாள் அஷ்வினி.

நேத்து மாயாக்கா போன்ல உங்க ஃபோட்டோ பார்த்தேன்.” என்று அவள் கூற, அது எப்போது என்பது அஷ்வினிக்கு புரிந்து தான் இருந்தது.

நேத்தே போன் அட்டெண்ட் பண்ணியிருக்கலாம்!” என்று நவீனின் முணுமுணுப்பும் அவளிற்கு கேட்டது. இப்போது அந்த சிறுவனின் முகத்திருப்பலுக்கான காரணம் விளங்க, தற்காலிகமாக அவளை விட்டுச்சென்றிருந்த குற்றவுணர்வு மீண்டும் அவளை சூழ்ந்து கொண்டது.

சரியாக அதே நேரம் இன்ஸ்பெக்டருடன் உள்ளே நுழைந்தான் அஷ்வின்.

நேராக அஷ்வினியிடம் வந்து அவளின் நலனை அறிந்து கொண்டவன், அருகிலிருந்தவர்களையும் பார்த்தான். அஷ்வினி போல் அல்லாது, பார்த்தவுடன் யாரென்று அவனால் யூகிக்க முடிந்தது.

அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர், “நீ தான் அஷ்வினியா மா? உனக்கு எத்தனை முறை கால் பண்றது? அந்த பொண்ணோட லாஸ்ட் கான்டேக்ட் நீ தான்.” என்று கூற, அஷ்வினி அஷ்வினை கண்டாள்.

சார், அவளுக்கு நேத்து ஆஃபிஸ்ல ஒர்க் நிறைய இருந்துச்சு. அந்த டென்ஷன்ல போன்ல சார்ஜ் கம்மியாகி ஸ்விட்ச் ஆஃப்பானதை கவனிக்கல.” என்று அஷ்வினிக்கு பதில் அவனே விடை கூற, ஒரு பெருமூச்சுடன், “ஹ்ம்ம், உள்ள போய் பாருங்க.” என்று நகர்ந்தார் அந்த இன்ஸ்பெக்டர்.

அறைக்குள் தயங்கியபடியே சென்ற அஷ்வினி கண்டது, கட்டிலில் வாடி வதங்கிய நிலையில் அமைதியாக கண்களை மூடி படுத்திருந்த மாயாவை தான்!

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 போன எபி குட்டியா இருக்குன்னு ஃபீல் பண்ணவங்களுக்காக, இதோ பெரிய எபியோட வந்துட்டேன்… படிச்சுட்டு உங்க கருத்துக்களை மீம்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ சொல்லுங்க…😊😊😊

இப்படிக்கு,

உங்க 🌈🔥

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
13
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  12 Comments

  1. Archana

   அடச்சே அப்போ என்னோட கெஸூ புஸ்ஸா🤣🤣🤣🤣🤣🤣 இதே நான் எதிர்ப்பார்க்கலே அப்போ ஜோடியே மாத்திட்டீங்களா😝😝😝😝

   1. vaanavil rocket
    Author

    😁😁😁 Aana adhu vera level guess ah irundhuchu… Next story la use pannipom😉😉😉 Ivanga dhan nan first fix panna jodi😊😊😊

    1. Archana

     😅😅😅😅sure ah use pannunga unga name ah reveal pannitu🙈🙈🙈

  2. Janu Croos

   சாகர் கூட அஷ்வினியும் மாயா.ஊருக்கு போயிருக்காள்னா…அப்போ சாகருக்கு நடந்தத அஷ்வினியும்.பக்கத்துல இருந்து பாத்திருக்காளா!!! அதான் அவள் அப்செட்டா இருக்க காரணமா…அப்போ சாகருக்கு அப்படி நடக்க காரணம் மாயா அழன அவளோட ஊருக்கு கூப்டது தான்னு தான் அவள் மாயா ஃபோன் பண்ணும் போது அவள் பேசலயா….
   சாகரோட ஃபிரண்ட் அஷ்வினினா …அப்போ நிரஞ்சனோய சித்திக்கு அஷ்வினிய தெரிஞ்சிருக்கனுமே….
   இப்போ நிரஞ்சனுக்கு இவங்க மாயாவ பாக்க வந்த நியூஸ் போயிடிச்சு… அவனும் வந்துட்டானா…சாகருக்கும் நினஞ்சனுக்குள் இருக்க உறவு அஷ்வினிக்கு தெரிஞ்சிடும்…. அப்போ என்ன ஆச்சு…சாகருக்கு என்ன நடந்துச்சுனு எல்லாம் தெரிஞ்சிடும்…..

   1. vaanavil rocket
    Author

    Aama sagar ku ena nadanthuchu nu ashwini ku theriyum… Idhanala dhan ashwini kobama irukalo…🤔🤔🤔
    Niranjanoda chithi ku ashwini pathi theriyavum chance iruku aana theriyama iruakvum chance iruke… Ava dhan inum sagar ooruku polaye…😊😊😊
    Niranjan – Sagar uravu theriya chance iruku dhan… Aana Ashwini iruka confusion state la adha yosipala🤔🤔🤔
    Unga comment padikumbodhu en kadhaiyum ipdi akkuvera aanivera pichu udharurangale nu romba happy ah iruku…😍😍😍

  3. Interesting ud sis nice semmmma super vini dha pavam ellathulayum apset agura

  4. hani hani

   சூப்பர்… உங்க கதையில ப்ளஸ் சொல்லிட்டே போகலாம். மைனஸ் பூதக்கண்ணாடி வச்சு தான் தேடனும். அவ்வளவு நேர்த்தியா எழுதுறீங்க. ரியலி நைஸ். என்ன அங்க அங்க அஸ்வின அஸ்வினினு படிச்சு வச்சுடுறேன். ரெண்டும் ஒரே பேரா இருக்கு. அதான் குழம்பி போயிடுறேன். கதையும் அத கொண்டு போற விதமும் அருமை. அழகான நடையில எழுதுறீங்க. வாழ்த்துக்கள் ❤️

   1. vaanavil rocket
    Author

    நன்றி சிஸ்😍😍😍 கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி😊😊😊 ஹாஹா ரெண்டு பேரையும் எழுதும்போது நானே குழம்பி போயிடுறேன் சிஸ்..😂😂😂

  5. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  6. Sangusakkara vedi

   So sweet…. Ashwin azhaga care panran…. Sagar ashwini frndship pakkum pothu cute ah iruku… Ithukagave aven uyiroda irukanum nu thonuthu…. Aana nadakathe…. Niranjan um varran….. Ashwini niru meet panna epdi irukum …. Super ud sis…..