399 views

என் காதல் சுடர் நீயடா(டி)

டீசர் 2

“இந்த லூசு பண்ண வேலையால நான் இவன்கிட்டலாம் பேச வேண்டியதா இருக்கே…” என்று புலம்பிக் கொண்டே அஷ்வினின் அறைக்கு சென்றான் அக்ஷய்.

அவன் வந்ததை சற்றும் கண்டுகொள்ளாமல், அஷ்வின் அவனின் வேலையில் மூழ்கியிருக்க, ‘அந்த லூசோட பிறந்தவன் மாதிரியா இருக்கான்…’ என்று அக்ஷய் சலித்துக் கொள்ள, அவனின் மனமோ, ‘அதையே அப்படியே மாத்தி, ‘அந்த லூசு மட்டும் அஷ்வின் மாதிரியா இருக்கா…’ன்னு கூட நினைக்கலாம்..!’ என்று நேரம் காலம் தெரியாமல் காலை வாரியது.

“க்கும்… க்கும்…” என்ற அவனின் செருமலுக்கும் எவ்வித எதிர்வினையும் இல்லாததால், வேறு வழியில்லாமல், “மச்சான்…” என்று அவனின் தோளில். கை வைத்தான்.

அதற்கு, “ம்ம்ம்…” என்ற மறுமொழி மட்டுமே அஷ்வினிடமிருந்து வந்தது. இத்தனைக்கும் அக்ஷயை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

‘ஐயோ, இவன் நார்மலா இருந்தாலும் இப்படி தான் இருப்பான்… டென்ஷனா இருந்தாலும் இப்படி தான இருப்பான்… இன்னைக்கு இவன் கிட்ட வாங்கி கட்டிக்காம கிளம்பிடனும் சாமி..!’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே, தான் வந்ததற்கான காரணத்தை கூற ஆரம்பித்தான் அக்ஷய்.

*****

அஷ்வினியின் திட்டப்படியே, அஷ்வினின் செலவில் அந்த ‘ட்ரீட்’ வெகு உற்சாகமாக சென்று கொண்டிருந்தது. ‘ஸ்டார்டர்’ முதல் ‘டெஸர்ட்’ வரை அனைவரும் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்க, அஷ்வினோ, ‘இதுங்க தேறாத கேஸ்…’ என்னும் விதமாக பார்த்துவிட்டு அவனின் உணவில் கவனம் செலுத்தினான்.

ஒருவழியாக அவர்கள் சாப்பிட்டு முடிக்க, அஷ்வின் அதற்கான தொகையை செலுத்த சென்றிருந்தான்.

அப்போது ஜெனி, “ச்சே, இப்போ சாகர் இங்க இருந்துருந்தா செமையா இருந்துருக்கும்ல… ஐ மிஸ் ஹிம்…” என்று சொல்ல, அத்தனை நேரம் இதழ்களில் மட்டுமாவது சிரிப்பை தேக்கி வைத்திருந்த அஷ்வினியின் முகத்தில், அந்த சிரிப்பும் கூட மறைந்து போனது.

இன்னும் என்னென்ன பேசியிருப்பாளோ, அக்ஷய் அஷ்வினியின் முகத்தைப் பார்த்து, கண்டனமாக ஜெனியை நோக்க, அவளும் கூட அப்போது தான் அவள் பேசியதை உணர்ந்திருந்தாள்.

அவள் மன்னிப்பு கோரும் பாவனையுடன் அக்ஷயை நோக்க, அவர்களின் மௌன சைகைகளை எல்லாம் கவனிக்காத அஷ்வினி, “சாரி கைஸ், நீங்க பேசி முடிச்சுட்டு வாங்க… நான் கிளம்புறேன்…” என்று இறுக்கத்துடன் கூறியவள், அங்கிருந்து வெளியே சென்று விட்டாள்.

அவள் செல்வதைக் கண்ட அஷ்வின், அவளின் நண்பர்களிடம் விசாரிக்க, அக்ஷய் நடந்ததைக் கூறினான்.

“சாரி அஷ்வின்… நான் இன்டென்ஷனலா சாகரை ஞாபகப்படுத்தல… ஏதோ பேசுறப்போ சட்டுன்னு வந்துடுச்சு…” என்று ஜெனி கூற, “நோ இஸ்யூஸ் ஜெனி… லீவ் ஹெர் அலோன் ஃபார் சம்டைம்… அவளே சரியாகிடுவா…” என்றான்.

அவர்களை சமாதானப்படுத்த அப்படி சொன்னாலும், இன்னும் சாகரின் நினைவுகள் அஷ்வினியை பலவீனப்படுத்துகிறது என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மேலும், அவளை எப்படி அதிலிருந்து மீட்கலாம் என்றும் சிந்திக்க ஆரம்பித்தான்.

அதே நேரம், அஷ்வினின் எண்ணத்தில் மின்னி மறைந்தது அந்த முகம். இன்னும் கூட, அப்பாவையின் முகம் அவன் மனதில் ஆணியடித்தது போல பதிந்திருந்தது அவனிற்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது..!

*****

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவளை அலைபேசி கலைக்க, அதில் ஒளிர்ந்த அஷ்வினின் பெயரைக் கண்டே, அவன் எதற்காக அழைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் அஷ்வினி.
அலைபேசியை உயிர்ப்பித்து மறுபுறத்தில் இருந்தவனிற்கு பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்காமல், “டூ மினிட்ஸ்ல வந்துடுவேன்…” என்று கூறிவிட்டு அதை துண்டித்து விட்டாள்.

பின்னர் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், “ஏன் டா என்னை விட்டுட்டு போன..?” என்று அடிக்குரலில் முணுமுணுத்தாள்.
துடைத்த இடத்தை, புதிதாக சுரந்த கண்ணீர் மீண்டும் ஈரப்படுத்திவிட்டு கீழே சிந்தியது.

*****

அந்த அறைக்குள் நுழைந்தவனைக் கண்டதும் அவளிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘இவனா அவன். அப்போ கார் பார்க்கிங்க்ல நடந்த சம்பவம் உண்மை தானா..! ஐயோ, ப்ராஜெக்ட் மேனேஜர்னு தெரியாம வார்த்தையாடிட்டு வந்துருக்கேனே..!’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

அடுத்த நொடியே, ‘அப்படியென்ன பெருசா பேசிட்டேன்… அவன் வந்து இடிச்சதுனால லேசா திட்டுனேன். அதுக்கு அவன் தான் ஏதோ பேசுனான்… ஹ்ம்ம்… ஏதாவது கேட்கட்டும் அப்பறம் இருக்கு அவனுக்கு..!’ என்று இடித்ததற்கான முழு பொறுப்பையும் அவன் தலையில் கட்டி விட்டாள்.

ஆனால், அவள் எதிர்பார்த்ததைப் போல, அங்கு எந்த நிகழ்வும் நடக்கவேயில்லை. அவன் அவளைக் கண்டுகொள்ள கூட இல்லை.

அதற்கும், ‘எப்படி இவன் என்னை தெரியாத மாதிரி போகலாம்..?’ என்று மனதிற்குள் அவனுடன் சண்டை பிடித்தாள்.

மோதலில் ஆரம்பித்த இவர்களின் சந்திப்பு காதலில் முடியுமா..?

 

டீசர் தொடரும்…😜😜😜

 

*****

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 உங்க வாரா (வானவில் ராக்கெட்டோட ஷார்ட் ஃபார்ம்…😜😜😜) டீசரோட வந்துட்டேன்…😁😁😁 போன டீசர்ல யாரோட பெயரையும் குறிப்பிடல… இந்த டீசர்ல யாருயாருன்னு பெயர் சொல்லியாச்சு… எங்க மேட்ச் பண்ணுங்க பார்ப்போம்…😉😉😉

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  2 Comments

  1. Archana

   மோதலில் ஆரம்பிச்ச சண்டை ஃபர்ஸ்ட் மோதலிலே தான் முடியும்🤣🤣🤣🤣