Loading

என் உயிர் – 20 🧬

“நீ என்ன அவ்வளவு பெரிய லாடு லபக்கு தாஸா டா? ” வனஜா கேட்டவுடன், இம்முறை சஞ்சய்யின் பெற்றோர்கள் முறைக்க,

அதனைக் கண்ட செல்வியின் தந்தை சஞ்சய்யிடம் “எதுக்குப்பா இப்படி வாசல்ல இருந்து இவ்வளவு பேசுறீங்க ? உள்ள போக வேண்டிதான ? இல்லை கதவை அடச்சுட்டு பேசுங்க ! “

“மாமா ! உங்களுக்கு என்ன பத்தியோ என் குடும்பத்தை பத்தியோ எதுவும் தெரியாது பேர தவிர “

“இல்லை சொன்னாங்க ! ” தனது மகளைப் பார்த்துக் கொண்டே கூற,

“சம்மந்தி நான் பெரிய பிஸ்னஸ் பண்ணுறேன் ! காண்வென்ட் ஸ்கூல் நிறைய ப்ரான்ச் இருக்கு, இன்ஸ்டியூசன் , காலேஜ் இப்படி நிறைய வச்சுருக்கேன் . ஆனா , என் பையன் தனியா ஆரம்பிக்கனும்னு அவன் படிச்ச துறையான ஜெனிடிக்கல் துறைல ஒரு காலேஜ் ஆரம்பிச்சு இருக்கான். அங்க தான் தீரனும் பெரிய பதவில இருக்காரு “

“ஓஹோ இது தான் கதையா அப்போ ” வனஜா இப்பொழுது முன்னே வந்தவர் சஞ்சய்யின் அருகில் வந்தவர் “ஏன்டா உனக்கு இப்படி ஒரு அத்தை, அத்தை பொண்ணுனு ஒரு பொண்ணு இருக்கானு ஏண்டா சொல்லல ? “

” அது தெரிஞ்சு நீ என்ன பண்ண போற ? “

“உங்களுக்கு உறவுகள் பெரிசு இல்லை! நாங்க கிராமம் . எங்களுக்கு பிள்ளை வச்சு பாத்துக்கிற அளவு வசதி இருக்கா , பையன் திறமையா சூட்டிகையா இருக்கானானு தான் பார்ப்போம் ! முக்கியமா உன் சொந்தம் பந்தங்களை பத்தி தான் கேட்போம். ஆனா , இங்க சொந்தம்லாம் சரி இல்லையே “

“பாட்டி ” கவி அதிர,

“அம்மா ” ,” அத்தை “தீரனும் , திருமலையும் அதிர ,

“ச்சை…. வாயை மூடுங்க “எனக் கூறியவர், பரமேஸ்வரியின் அருகில் சென்று அவரை அமர வைத்தவர் , தானும் அருகில் அமர்ந்து சஞ்சய்யின் தந்தையையும் அமரச் சொன்னவர் ,

” இந்த சொத்துலாம் உங்க சம்பாத்தியமா , உங்க அப்பாவோடதா இல்லை உங்க சம்சாரத்தோடதா “

பரமேஸ்வரியின் முகம் இறுகியது . “எங்க அப்பா எங்க ரெண்டு பேருக்கும் இரண்டு வீடு வாங்கி கொடுத்தாரு! என்னை படிக்க வச்சாரு ! “

“உங்க தங்கச்சியை ? “

“அவளை படிக்க வைக்கல ! “

” ஆனா, அண்ணிக்கு படிப்பு நல்லா வரும்னு இவரு சொல்லுவாரு ! அதோட அவசரம் அவசரமா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க ” சஞ்சய்யின் தாய் முதன் முறையாக வாயை திறந்தார்.

” நீ சண்டை போடலையா உங்க அப்பாக்கிட்ட ? ” பரமேஸ்வரியிடம் திரும்பினார் வனஜா.

” அவ்ளோ தான் நான் …என்னை கொன்னுடாவாங்க ” ஏக்க பெருமூச்சு விட்டார் பரமேஸ்வரி.

“உன் புருஷன் எப்படி ? “

“என்ன சொல்லுறது ? அவரு நல்லவரு தான்! ஆனா , அதுதான் வினையா போச்சு. அவரோட நல்ல குணத்தை உபயோகப்படுத்தி அவங்க கூடப் பிறந்தவங்க அவர் பங்கு, அவர் தொழில வாங்கினதோட என் வீட்ல குடுத்த வீட்டையும் வாங்கிட்டாங்க ! அது கூட பரவாயில்லை ! அவர குடிக்க வச்சு இந்தோ நிக்கிறாலே என் மக அவன் இரண்டு வயசா இருக்கும் போதே போய்ட்டாரு ! அப்பா கிட்ட போனேன் அப்போ எனக்கு இருபத்தி அஞ்சு வயசு தான் ! என் வாழ்க்கை உணர்வு எத பத்தியும் யோசிக்கல இப்படி கோட்ட விட்டுட கோட்ட விட்டுடனு என்ன தான் திட்டுனாங்க ! வெளில வந்தேன் ! ஒருத்தனும் சரியில்லை அதான் என் சத்தத்தை ஆயுதமா எடுத்தேன் ! என் பிள்ளையும் அவர மாதிரியே குணத்துல இருக்கா! எங்க ஏமாத்திடுவாங்களோனு என் அண்ணன் வீட்ல கொடுக்கனு நினைச்சேன் ” எனக் கூறி நிமிர்ந்து தனது அண்ணனையும் அண்ணியையும் பார்த்தார்.

அவர்கள் முகத்தில் அதிர்வு இல்லை. எதிர்ப்பார்த்தது தான் என்பது போல் இருந்தனர். அதுவே அவருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. சீமாவும் , சஞ்சய்யும் தான் அதிர்ந்து பார்த்தனர் .

வனஜா அனைவரையும் தனது லேசர் கண்களால் அளவெடுத்தவர் சஞ்சய்யின் பெற்றோர்களைப் பார்த்து ” நான் உன்னை பெத்தவனு நினைச்சுக்கோ ! எனக்கு பொறுமையாலாம் பேச தெரியாது ! மனசுல பட்டத தான் சொல்லுவேன்! “

“அம்மா உங்கள நான் அப்படி தான் பாக்குறேன் ! செல்வியை அதனால தான் ஒத்துக்கிட்டேன் ” சஞ்சய்யின் தாய் கூறியவுடன்,

வனஜா சிரித்துக் கொண்டு “பரமேஸ்வரிக்கு தீரன் வீட்டுக்கு பக்கத்துல இந்த தளத்துல அவளுக்கு வீடு வாங்கி கொடுங்க ! உனக்கு தான் உன் புருஷன், பையனும் தனி தனியா சம்பாதிக்கிறாங்களே ! உன் மாமனார் கொடுத்த வீட்டை வித்து இங்க வாங்கு ! நான் என் இரண்டு பேத்தியையும் பாத்துகிட்டு இவளையும் பாத்துக்குவேன் ! ” எனக் கூறியவர்,

பரமேஸ்வரியிடம் திரும்பி ” உன் மக படிப்பை முடிச்சுட்டாலா ? “

” இல்லை படிப்பு தான் ஏற மாட்டேங்குதே ! ” நொந்துக் கொண்டு கூறினார்.

“இல்லை அம்மா ! அவளுக்கு தையல் மேல தான் இஷ்டம் இந்த படிப்புலாம் வரல ! அண்ணி பாத்து தான் இந்த ஆசை ! ” மோகினி (சஞ்சய்யின் தாய்) கூற,

“டேய் சஞ்சய், உன் பொண்டாட்டிக்கு பிடிச்ச படிப்பு என்னனு கேட்டீயா ? “

சஞ்சய் செல்வியை பார்க்க, “எனக்கு பேஷன் டிசைனிங் தான் படிக்க ஆசை “

சஞ்சய் அடுத்து சீமாவை பார்க்க , ” எனக்கு டெய்லரிங் தான் ஆசை “

“ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம் ? ” தீரன் வாயைத் திறக்க,

” பேஷன் டிசைனிங் புது புதுசா டிசைன் தயாரிக்கனும் ! எல்லாமே புது புதுசா ” செல்வி கூற,

“டெய்லரிங் அவங்க சொல்லுறத ஸ்டிச் பண்ணுறதோட நிறைய ஆல்டர் பண்ணுவோம் சேரில மேக்ஸி, ஸூட் மேக் பண்ணுறது அந்த மாதிரி நிறையா கிரேயேடிவ்வா பண்ணுறது ” சீமா ஒரு புறம் கூறினாள்.

தனது மகளின் அறிவை முதன் முறைக் கண்டு வியந்தார் பரமேஸ்வரி.

“சரி அப்போ அதுக்கு கோர்ஸ் என்னனு பாரு சஞ்சய் ” சஞ்சய்யின் தாய் கூற ,

” அதுக்கு டிப்ளமோ இன் டிரஸ் டிசைனிங் மற்றும் டெய்லரிங் படிக்கனும் “சீமா கூற,

“எங்கனு பாத்து வச்சியா? ” சஞ்சய்யின் தந்தை கேட்க,

சீமா முழித்தாள். “வெஸ்ட் பெங்கால் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் அகாடமி ” சஞ்சய் கூறினான்.

அதன் பின் எதற்கும் யோசிக்காமல் அவளுக்கு சீட் வாங்கி தருகிறேன் என்று உறுதி கூறினர் சந்திரன் மற்றும் மோகினி (சஞ்சய்யின் பெற்றோர்கள் ) . பரமேஸ்வரி இன்னும் சங்கடமாக நெளிய “இவளுக்கு தான் தைக்க தெரியுமே ! ஒரு மெஷின வாங்கி கொடுத்து எங்கையாச்சும் கத்துக்க அனுப்பு ! மகளும் ஊருக்கு போய்ட்டா இவளுக்கும்  போர் அடிக்கும்ல ” எனக் கூறிய வனஜா பரமேஸ்வரியிடம் திரும்பி “உன் மக படிச்சு முடிச்சுட்டு வரட்டும் அதுக்கு அப்புறம் அவ கல்யாணம் பத்தி பேசிக்குவோம் ” என கூறி அனைவரையும் சாந்த படித்தினார் அதோடு செல்வியின் தந்தையையும் பார்த்து அர்த்த பார்வை வீச, தனது அலைபேசி மூலம் கீழே கார்டனில் அமர்ந்திருந்த தனது மனைவியை மேலே வருமாறு அழைத்தார்.

அனைவரும் ஓரளவு கோபத்தை ஒதுக்கி சாந்தமாகி சந்தோஷம் அடைய, அனைவருக்கும் சாப்பாடை ஆர்டர் செய்து அங்கேயே அனைவரையும் சாப்பிடுமாறு கூறினான் சஞ்சய்.

செல்வியை அழைத்து கவி அறைக்கு சென்று அவளது கப்போர்டில் துணிகளை அடுக்கி வைக்க உதவ சென்று விட்டாள். சஞ்சய்யுடன் நிலவன் ஆர்டர் செய்துக் கொண்டிருந்தான். பரமேஸ்வரி வனஜாவின் அருகில் நெருங்கி அமர்ந்து அவளின் மனவோட்டத்தை முதன்முறையாக வெளிப்படுத்த வனஜா பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார்.

சீமா தனது தோழியான பூஜாவிடம் நடந்ததை மகிழ்வுடன் கூற, பூஜா அங்கு வெகுண்டு எழுந்து விட்டாள். தனது திட்டம் அனைத்தும் வீணாகி விட்டதே என்கின்ற கடுப்பில்  “அடச்சீ வாயை மூடு ! புல் சீட்! உன் ஸ்டேட்டஸ் தெரிஞ்சும் உன்னை ஃபிரண்ட்டா வச்சுக்கிட்டதே நிலவனை மேரேஜ் பண்ணி நிலவனுக்கு சஞ்சய்யுக்கும் சண்டை வர வைக்க தான். அந்த இடியட் தான் கல்யாணம் பண்ணிட்டான். நீயாச்சும் சஞ்சய்யை கல்யாணம் பண்ணுவ , அப்படியாச்சும் ரெண்டு பேரையும் பிரிக்கலாம்னு பாத்தேன் ! அதுவும் இல்லை ! உங்க அம்மா சொல்லுற மாதிரி நீ எதுக்குமே லாயுக்கு இல்லை! அது தான் உண்மை ! நீ ஒரு வேஸ்ட் ! ச்சை….. “என  இன்னும் சில திட்டுகளை வழங்கி விட்டுத்தான் பூஜா அலைபேசியை வைத்தாள்.

சீமா அதற்கு சிறிதும் உடையவில்லை . அவள் அப்படி தான் என தெரிந்ததால் அமைதியாக தனது அலைபேசியை அரை நொடிக்கும் மேலாக  பார்த்தவள் வீட்டின் உள்ளே நுழைய திரும்பும் பொழுது கவி பதைபதைப்புடன் “அம்மா , அம்மா ” என்று அழைத்துக் கொண்டே வெளியில் வந்தாள்.

பின்னால் அனைவரும் வெளியில் ஓடி வந்தனர்.

❤️❤️❤️❤️❤️

“மகி இதலாம் தப்பு ! எதுக்கு இப்போ என்னை கடத்துன ? திரும்ப திரும்ப தப்பு பண்ணிக்கிட்டே இருக்க ? “

” எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அத்தை ! என் மாமாவையும் பிடிக்கும் ! என் அப்பா அம்மாவுக்கும் மேல பிடிக்கும்! ஆனா, நீங்க என் குடும்பத்தை  என்ன நிலைமைக்கு ஆளாக்கிட்டீங்கனு தெரியுமா ? ரெண்டு நாளுல என் வாழ்க்கையே நரகமா ஆயிடுச்சு ! ஊர்ல தல காட்ட முடியல ! உன் அப்பன் இன்னொருத்தி கூட போய்ட்டான்னு சொல்லுறாங்க ! உன் அம்மா பைத்தியம் ஆகிட்டானு சொல்லுறாங்க! நீ ரெளடி தொழில் பண்ணுறீயானு கேட்குறாங்க ? “

“ஆமாடா நீ அதுதான பண்ணுற ? “

“ஆமா அத்தை எனக்கு என்ன வருதோ அத பண்ணுறேன் ! சம்பாதிக்கிறேன்ல அப்புறம் என்ன? “

“நீ சொல்லுற மாதிரியே வச்சுக்குவோம் ! உங்க அம்மா பொய் சொன்னாங்க ! நீ பண்ணுற தொழிலையே மாத்தி சொன்னாங்க “

“ஏன்னா நானே எங்கம்மாக்கிட்ட சொல்லையே ! “

“சரி !  அப்போ ஏன் கல்யாணத்தை விட்டு போன? “

” ஏன்னா ! நான் கடைசியா பண்ணுற ப்ராஜெக்ட் ஒரு பொண்ணை தூக்கிறது. அது யாரு தெரியுமா ? அது உன் பொண்ணு தான் “

“கவியா எதுக்கு ஏன் ? “

“அவ எழுதின எதோ தியரி பெரிய சைன்ட்டிஸ்னாலயே கண்டுபிடிக்க முடியலனு அவள தூக்க சொல்லிருக்காங்க ! அதுவும் தூக்க சொன்னது யாரு தெரியுமா ?  உன் அண்ணன் ! “

“தீரன பத்தி தப்பா பேசாத ! “

“தீரன் அப்பா இல்லை செழியன் “

“என்ன ? அவன் உயிரோட இருக்கானா ? “

“ஆமா ப்ளாஸ்டிக் சர்ஜரிலாம் பண்ணி தீரனும் இவரும் டிவின்ஸூனும் தெரியாத மாதிரி மாறிக்கிட்டாரு ”

கீர்த்தி☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்