என் உயிர் – 19 🧬
“ரிசல்ட் வந்தருச்சு”
” செல்வி உங்க அம்மா போன் பண்ணுது ” திருமலை கூறிக் கொண்டே வர, திக்திக் நொடிகளாக இருந்தது.
திருமலை செல்வியிடம் கொடுக்கும் நொடி சத்தமில்லாமல் சஞ்சய் ஸ்பீக்கரை ஆன் செய்ய, அடுத்த நொடி
” அடி பொசக்கெட்ட சிறுக்கி ! இதுக்கு தான் அங்க போனீயா டி நீ ! இங்க மட்டும் நீ இருந்து இருக்கனும் வெளக்கமாத்த பிச்சிருப்பேன் ! என்னடி நாயே வாயவே திறக்க மாட்டேங்குற ? ” அவர் பாட்டிற்கு கத்திக் கொண்டே இருக்க,
“கவி மா சூப்பர் டா 1129 மார்க் வாங்கி இருக்கடா ! பையலாஜில சென்டம், பிசிக்ஸ்ல சென்டம், கெமிஸ்டிரில …. “
“அட அறிவு மாமா! என்ன ஏன் ஆத்தா கிழிச்சுக்கிட்டு இருக்கு ! நீ இப்ப தான் பெருமையாவும் பொறுமையாவும் பேசிக்கிட்டு இருக்க ? என் மார்க்க பாத்து சொல்லுங்க ? “
தீரனும் பார்த்து விட்டு புருவம் சுருக்கி பார்க்க, “எந்த சப்ஜெக்ட் புட்டுகிருச்சு? “
தீரனும் நிமிர்ந்து முறைத்து “எல்லாமே பாஸு தான் “
“என்னது “என அதிர்ந்த செல்வி, தலையை அள்ளி கொண்டை போட்டவள் பேசிக் கொண்டிருந்த தாயின் அழைப்பை துண்டித்தவள் வேகமாக வீடியோ கால் செய்து ஷோபாவில் சம்மணம் இட்டு கொண்டாள்.
திரையில் தன் அன்னையை பார்த்த நொடி “இந்தா இப்போ எதுக்கு கத்துற ? அதான் எல்லாத்துலையும் பாஸ் ஆகிட்டேன்ல ! அப்புறம் என்னத்துக்கு கத்துற ? “
“என்னது பாஸ் ஆகிட்டியா ? ரிசல்ட்டா இன்னைக்கு “
“என்னது ரிசல்ட்டாவா ? இப்போ எதுக்கு என்ன கத்துற ? அதுவும் காலங்காத்தால ? “
“ஏன்டி நான் மளிகை கடைல அரிசி வாங்க சொல்லி ரூபா கொடுத்தேன். ஆனா , நீ அதுக்கு பதிலா வாங்கி தின்னுட்டு அரிசி இல்லைனு சொல்லிருக்க ! என்ன திண்ணக்கம் உனக்கு “
அவள் திட்டு வாங்குவதை விட, திட்டு வாங்கும் காரணம் தான் அனைவருக்கும் சிரிப்பை உண்டு பண்ணியது. அனைவரும் கேலியாக பார்ப்பதை விட சஞ்சய் பார்ப்பதே அவமானமாக இருக்க, வேகமாக எழுந்து அறைக்கு செல்ல முயன்றவளை இரு பக்கமும் அவளின் அன்னைக்கு தெரியாதவாறு அமர்ந்து அமுக்கி கொண்டனர் நிலவன் மற்றும் சஞ்சய்.
வேடிக்கை பார்த்த கண்மணி தான் பொறுக்க மாட்டாமல் அவளிடம் இருந்து அலைபேசியை வாங்கி “வணக்கம் அக்கா! ஏன் அக்கா இதுலாம் ஒரு விஷயமுன்னு அவளை இவ்ளோ பாடா படுத்துறீங்க! அதுவும் காலங்காத்தல “
“இல்லை மணி உனக்கு தெரியாது ! அவ பொறுப்பே இல்லாம இருக்கா ! “
” அதுக்கு இப்படி கத்தனும்னு இருக்காடி ” வனஜா அமர்ந்த இடத்தில் இருந்தே கேட்க , அதை காதில் வாங்கிய செல்வியின் தாய் ” ஆமா ஆத்தா ! பொறுப்பா இருக்கனும்னு இவ்ளோ கண்டிச்சுமே இன்னும் சின்ன பிள்ளைத்தனமா இருக்கா! கல்யாணம் பண்ணும் போது இப்படி இருந்தா நல்லாவா இருக்கும் “
” அது கல்யாணத்து அப்போ நான் மாறிடுவேன் ” செல்விக்கு இம்முறை கண்கள் கலங்கி குரல் நடுங்கியது. சஞ்சய் அவளை ஆசுவாசப்படுத்தினான் அவளின் கைகளை தன் கைக்குள் வைத்து .
“அதான் கல்யாணம் பண்ணி வைக்க போறோமே இன்னும் திருந்தாம தான இருக்க ? “
அவளின் தாயைப் பற்றி செல்வியுடன் கண்மணி, வனஜா , கவியுடன் திருமலைக்கும் தெரியும். அவளை பன்னிரெண்டாம் வகுப்பு படிக்க வைத்ததே பெரிய விஷயம். அவர்களின் தகுதி பொறுத்து ஒரு நல்ல இடத்தை பார்த்து வைத்து இருக்கிறார்கள் எப்போதடா இவளின் ரிசல்ட் வரும் என்று.
அதே போல் இவள் கூறிய நொடி கணக்கு போட்ட அவர் இப்பொழுது கூற, ” மாப்பிள்ளை பாத்துட்டியோ ” வனஜாவே தொடங்கினார். ஏனென்றால் சஞ்சய் கண்களாலேயே இறைஞ்சினான்.
“அதான் ஆத்தா கள்ளக்குளம்ல என் ஒன்னு விட்ட அண்ணன் இருக்கான்ல ! அவர் மச்சினிச்சி மகன் ஏதோ கோயம்புத்தூல மெக்கானிக் கடை வச்சிருக்கானு சொன்னாங்க ! விசாரிச்சோம் திருப்தி தான் “
“அவங்கள்ட்ட சொல்லிட்டியா ? ” வனஜா சட்டென்று கேட்க,
“இன்னும் நல்லா விசாரிக்கனும்னு செல்வி அப்பா சொல்லி இருக்காரு ! எங்க வீட்டு ஆளுங்க இல்லையா அதனால பொறுமையா நல்லா விசாரிச்சு தான் சொல்லுவாங்களாம் ” கிடைத்த சாக்கில் கணவனையும் சாடி விட்டார்.
“ஓஹோ அப்போ உன் புருஷனையும் கேட்க ஸீக்காயில போ …… “
“என்னது ” சஞ்சய் அதிர்ந்து கேட்க, கவி தலையில் அடித்துக் கொண்டாள்.
“என்ன எழவு டி இது? இதுக்குலாம் எங்களுக்கு அர்த்தம் நோய்வாய்ப்பட்டு போனு சொல்லுறது “
” நீ அப்படி சொன்னா அதான் அர்த்தம் . ஸ்பீக்கர்ல போடுனு சொல்லனும் ” கவி பாய்ந்து கொண்டு கூற, அதன் பின்பே அனைவருக்கும் புரிந்தது செல்வியின் பெற்றோர்கள் உட்பட .
அவர்கள் ஸ்பீக்கரில் போட்டவுடன் “ஹக்கும் …. இந்தா நான் செல்விக்கு மாப்பிள்ளை பாத்து இருக்கேன் . அவன் நீ சொல்லுறத விட எல்லாதலையும் உசத்தி. படிச்சவன். பெரிய தொழில் பண்ணுறான். வசதி வாய்ப்பு கூட, நீ எதிர்ப்பார்க்குற மாதிரி நல்ல ஊர்லையும் இருக்காப்ல “
” அப்படியா பேரு, ஊருலாம் என்ன ? நம்ம வசதி சரிபட்டு வருமா? “
“பேரு சஞ்சய்! கல்லூரி வச்சு நடத்துறான் . ஊரு வேலூர். அவன் ஒரே பையன். சீர் சினத்திலாம் எதிர்ப்பாக்க மாட்டாங்க . கல்யாணம் முடிச்சு அவங்களே படிக்க வைக்கிறேனு சொல்லிட்டாங்க “
“அந்த கழுதைக்கு படிப்பே வராது ! அதுலாம் தேவை இல்லை ஆத்தா ” செல்வியின் தாய் கூறியதற்கு செல்வி எதுவும் கூற முடியாத நிலையில் இருந்தாள்.
செல்வியின் தந்தை தான் சிறிது யோசித்து “மாப்பிள்ளை வேலூர்லையே இருக்காரா ? ” சரியான கேள்வியைக் கேட்டார்.
“இல்லை தில்லில வச்சுருக்கான் ” செல்வியைப் பார்த்துக் கொண்டே வனஜா கூற,
“ஓ….. அப்போ பெத்தவங்க எதுக்கும் லாயக்கு இல்லை. நம்மளே நல்ல இடம் பாப்போம்னு பாத்துக்கிருச்சா உன் பேத்தி ”
அவர் கூறியவுடன் ஒரே அமைதி. செல்வியின் தாய்க்கு ஒரு சில நொடிகளுக்கு பின்னரே புரிந்து “அடிங் கழுதை ! மொளச்சு மூணு எல விடல ! இதலாம் கேட்குதா ! நீ மொத ஊருக்கு வர ! ஏங்க வாங்க போவோம் “என அவரே பேசி பட்டென்று போனை வைத்தார்.
சஞ்சய் புரியாமல் பார்க்க, தீரனைப் பார்த்து வனஜா ” இவங்க ரெண்டு பேத்துக்கும் நாளைக்கு கண்ணாலம் பண்ணிடலாம் “
“அய்யோ அம்மா அப்பா ” செல்வி பதற , ” என்னதான் இருந்தாலும் பெத்தவங்கள விட கூடாது மா ” திருமலையும் கூற, செல்வி முன் நின்று “அவன் வேணும்மா வேணுமா ? கொஞ்ச நாளுல ரெண்டு பேரும் பேசிடுவாங்க ! ஆனா இவன் வர மாட்டான் “
சஞ்சய்யும் அவளின் பதிலுக்கு காக்க, அவனைப் பார்த்துக் கொண்டே தலையை ஆட்டினாள்.
மறுநாள் அனைவரும் கிளம்பி கெளரி சங்கர் கோவிலுக்கு சென்று இருவரின் திருமணத்தை முடித்து வீட்டுக்கு வர, வாசலிலேயே செல்வியின் பெற்றோர்கள் நின்று கொண்டிருந்தனர்.
இவர்களின் கோலத்தைக் கண்டு அவர்கள் துள்ளிக் குதிக்க, அவர்களை ஆசுவாசப்படுத்தி உள்ளே இழுத்துச் சென்றனர். அப்பொழுதும் செல்வியின் தாய் வாய் ஓயவில்லை. வராத கண்ணீரை வம்படியாக வர வைத்தார். ஏனென்றால் , முதலில் கோபம் இருந்தாலும் அரை நிமிடத்தில் சஞ்சய், சஞ்சய்யின் பெற்றோர்கள், வீடு இதை எல்லாம் ஆராய்ந்து தன் மகள் நல்ல இடத்திற்கு தான் வாக்கப்பட்டு உள்ளாள் என்று நிம்மதியாக நினைத்துக் கொண்டார்.
இருந்தும் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்தார். செல்வியின் தகப்பனுக்கு மனம் கொஞ்சமே கொஞ்சம் இறங்கி வந்தும் செல்வியின் தாய் பேச பேச, அமைதியாகவே இருந்தவர் இறுதியாக எழுந்து மகளைப் பார்த்து “ந…ல்…..லா…. இ…..ரு…..மா……. ” கூறிவிட்டு விருவிருவென இறங்கி விட்டார்.
செல்வியின் கண்கள் பனித்து விட்டது. கவியை கட்டி ஓவென்று கத்தி அழுதே விட்டாள். எப்பொழுதும் துறுதுறுவென சிரித்து கொண்டே இருப்பவள் இவ்வாறு நடந்து கொள்வது ஒரு மாதிரியாக இருந்ததால் சஞ்சய்க்கோ தாங்கவே முடியாமல் அவளை சமாதானம் செய்ய முற்படும் நேரம்,
“என்ன கன்றாவி இதெல்லாம் ? நாங்களாம் யாரோ எவரோவா இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிருக்கீங்க ? என் பொண்ணுக்கு என்ன பதில் சொல்லுவீங்க ? “
“அடுத்து யாரு ? ” வனஜா பொறுமை இழந்து கேட்டார்.
” என்ன அம்மா வயசு வந்துருச்சுல இப்படி தான் பேசுவீங்களா ? ” பரமேஸ்வரி சஞ்சய் குடும்பத்தின் மேல் உள்ள கோபத்தை இவரிடம் காண்பித்தார்.
“ஓ….. நல்லா …. அதனால தான் உன்னை மாதிரி ஜிங்கு ஜிங்குனு குதிக்காம பிள்ளைங்க ஆசைக்கு ஒத்து ஓதுறேன்”
“ஹேய் என்ன ….. ” பரமேஸ்வரி பாய்ந்து கொண்டு வர, சஞ்சய் நடுவில் வந்தான். அவனின் வேகத்தை உணர்ந்த சீமா பரமேஸ்வரியை பின்னால் இழுத்தாள்.
அதில் இருவரும் தடுமாறி கீழே விழும் சமயம் , வெளியில் சென்ற செல்வியின் தகப்பன் அவர்களை தாங்கி பிடித்து நிற்க வைத்தார். ஒன்றும் கூறாமல் உள்ளே நுழைந்து அவரது அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் சமயம் , பரமேஸ்வரி ” இப்போ என் பொண்ணுக்கு என்ன தான் நிலைமை ? “
“என்ன நிலைமை ? அவ என்ன நல்லா தான இருக்கா? படிக்கிறா கல்யாணம் பண்ணி வைங்க வயசு வந்தவுடனே மாப்பிள்ளை வந்தவுடனே பண்ணி வைங்க! ” நிலவன் பின்னிருந்து கூற, அவனை திரும்பி முறைத்து விட்டு பரமேஸ்வரி திரும்பவும் புலம்ப ஆரம்பிக்க,
“உங்களுக்கு நல்ல வசதியான வாழ்க்கை வேணும் ! அதுக்கு வசதியா , ஒரே பையனா, ஏமாளி பெத்தவங்களா இருக்கனும் ” சஞ்சய் முறைத்து கொண்டு பல்லிடுக்கில் வார்த்தைகளை துப்ப,
பரமேஸ்வரி அனைவர் முன்பும் தன் திட்டத்தை உடைக்கிறான் என்று மீண்டும் படபடவென பொறிய ,
” நீ என்ன லாடு லபக்கு தாஸா டா ? “
கீர்த்தி ☘️