என் உயிர் – 18 🧬
கவிதாயினியை கண்கள் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவ் செழியன் . அவனுக்கு அவள் மேல் ஈர்ப்பு ஆனால் அதில் காதல் இல்லை, காமம் இல்லை, மோகம், தாபம் இது எதுவும் இல்லை. அதே போல் கோபம், வெறுப்பு என்று எதுவுமே இல்லை. ஆனால், அவனுக்கு அவளை அடைய வேண்டும் அவனின் எடுபிடியாக . அவளின் பால் வந்த காதல், ஆக்கிரமிப்பு, வெறி இவை அனைத்தும் இவளின் மனதை களவாட அல்ல மூளையை களவாட .
இவன் எப்படி யாருக்கும் தெரியாமல் உள்ளே வந்தான் என்று எவருக்கும் தெரியவில்லை. அதே நேரம் வெளிக் கதவைத் திறந்து கள்ளத் தனமாக உள்ளே நுழைந்தான் நிலவன்.
வரும் பொழுதே தனது அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டு விட்டு வந்தவன் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் வனஜாவையும், மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் திருமலையையும் கண்டவன், தனது தந்தை வேறு வீட்டில் இருக்கிறார் எனப் புரிந்து நண்பனையும் அழைக்கவில்லை. அவனும் எப்பொழுதாவது தான் தனது மனைவியுடன் நேரம் செலவிட முடிகிறது. அதனால், அவனையும் தொந்தரவு செய்யாமல் தனது மனைவி மகளை காண கவியின் அறைக் கதவை திறந்தான்.
அவன் அங்குள்ள டேபிள் லேம்பை படர விட, பளிச்சென்று கதிரையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் ஆதவ் செழியனைக் காண கோபம் கொப்பளித்தது.
“வாங்க தம்பி…. வாங்க….. என்ன இந்த பக்கம் “
“டேய் “நிலவன் பல்லிடுக்கில் கத்தினான். அதில் லேசாக அயானா சினுங்க, “என்ன தம்பி இப்படி பொண்டாட்டி பிள்ளைங்களையே இப்படி அர்த்த ராத்திரல பாக்குறீங்க ? என்ன பழக்கம் இது? ஒருவேளை இப்படி தான் குடும்பம் நடத்தி அந்த குட்டி சாத்தானும் பிறந்துச்சா ? “
“டேய் “இம்முறை கத்தியே விட்டான் நிலவன். அதில் கவி கண் விழிக்க, தனது அறையில் இரு ஆடவர்கள் நிற்பதைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டாள். அதில் ஒருவன் தன் கணவன் அதுவும் நான்கு வருடம் கழித்து பார்க்கிறாள் . அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றாள்.
அவள் எழுந்ததை உணர்ந்தாலும் ஆதவ்வை தாக்க முற்படுவதை மட்டும் விடவில்லை. இவள் தான் சுதாரித்து அவனை விலக்க, சட்டையை உதறி விட்டு வெளியே சென்றவனை ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் நின்றாள் கவிதாயினி .
“அந்த நாயி உள்ள வரது கூட தெரியாம இப்படி தான் தூங்குவியா ? ” இவளிடம் பாய்ந்தான் நிலவன்.
அவனை சலனமே இல்லாமல் பார்த்தவள் “இப்போ இவன் வந்தது தான் உனக்கு பிரச்சனையா மாமா? இந்த மாதிரி நான் ஆயிரம் பேர சமாளிச்சுருக்கேன் ! ஏன் என் மாமா பசங்க பூரா எனக்கு பிரச்சனையாவே வர்றாங்கனு தெரில ? கூடப் பிறந்தவங்களும் இல்லை, எனக்கு என்ன வேணும்னு கேட்க இந்த அம்மாவும் இல்லை , பாட்டியும் இந்த நிலைமை. செல்வியையும் எப்போவுமே கூப்பிட முடியல”
“இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம பேசுற ? “
“கட்டினவன் துணைக்கு இல்லாம இப்படி யாரு இருந்தாலும் யாருமே இல்லாத மாதிரி தான் இருக்கு ! நான் என்ன பண்ணட்டும் ” என கொஞ்சம் குரலை உசத்த, அயானா அசைந்தாள். அதில் இருவரும் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அறையை விட்டு வெளியே வந்தனர்.
வந்த நொடி அவளின் கையை இறுக்கிப் பிடித்து , “அன்னைக்கும் இதே தான் சொல்லுற ? இன்னைக்கும் இதையே சொல்லுற ? நீ தான போ போ னு சொன்ன ? “
“ஆமா சொன்னேன் ! என் நிலைமை அப்படி மாமா ! “
“எந்த நிலைமையா இருந்தாலும் நான் உன் கூட இருப்பேனு நினைச்சு இருந்தா இப்படி இருந்துருப்போமா ? “
அவளுக்கும் அவனின் ஆதங்கம் புரிந்தது . அதில் உள்ள நிதர்சனமும் புரிந்தது. இருந்தும் “எல்லாம் புரியுது. இப்போ நீ இல்லாதததால வந்த தைரியமா , இல்லை நீ என் பின்னாடி இருக்குற தைரியமா, இல்லை என் படிப்புனால வந்த தைரியமானு தெரில. அப்போ எனக்கு நீ வேணும்னு சொல்லவே தைரியம் இல்லாத அப்போ எப்படி என் பிரச்சனையை சொல்லி இருப்பேன் “
அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது. கண்கள் சுருக்கி “இப்ப வரைக்கும் என்கிட்ட பேசவே இல்லை ! “
அதன் பின்பே அவளை சம்மட்டியால் தலையில் அடித்தது போன்று இருந்தது. சட்டென்று எதை பற்றியும் யோசிக்காமல் அவனை கட்டியணைத்து ” ஹீரா ( புருஷா (தெலுங்கில் ) ) நிஜான் நின்னே சிநேகிக்கனு (நான் உன்னை விரும்புகிறேன் (மலையாளம்) ) “
“தமிழ்ல சொன்னாலே என்ன பண்ணுவானு தெரியாது ! இதுல நீ இத்தனை மொழில சொல்லுற ! வளைகாப்புக்கு மண்டபம் தான் புக் பண்ணனும் ” பின்னிருந்து போர்வையால் முக்காடு இட்டுக் கொண்டு சஞ்சய் கூற, அவளை விலக்கிய நிலவன் சலனமே இல்லாமல் கதிரையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு அவளையே ஊடுருவும் பார்வை பார்த்தான்.
அதனின் அர்த்தம் புரிந்து கவி அவனுக்கு அருகிலேயே ஒரு கதிரையில் அமர, சஞ்சய்யும் சோபாவை இழுத்து இருவருக்கும் நடுவில் அமர்ந்து கன்னத்தில் இரு கைகளை வைத்து , மடியில் முட்டு கொடுத்து அவர்களையே பார்த்தான் .
அதில் எரிச்சலுற்று ” இங்க என்ன படமா காமிக்கிறாங்க ? ” நிலவன் கேட்க,
“இங்க என்ன ரொமான்ஸா பண்ண போற? கதை தான கேட்க போற? நானும் கேட்பேன் ! ” சஞ்சய்யும் பதிலடி கொடுக்க,
தலையில் அடித்த கவி எழும்ப “இங்க பாரு ! நீ ரிசல்ட் வரதுல இருந்து சொல்லனும் ! நீ சம்மந்தமே இல்லாம ஆரம்பிக்க கூடாது “
“அது தான் உங்களுக்கே தெரியுமே அண்ணா ” கவி கேட்க,
“ஹான்…. நிலவனுக்கு தெரியனும் முக்கியமா ரீடர்ஸ்க்கு தெரியனும் “
இவள் நொந்து போய் அறையின் உள்ளே சென்று ஒரு ஃபைலை எடுத்து வந்தாள். அவள் அவர்களின் முன்பு அந்த ஃபைலில் உள்ள தாள்களை எடுத்து வெளியில் வைக்க, சாதாரண பேப்பரில் கலர் பேனாவில் பள்ளி பருவத்தில் எழுதி இருக்கும் படைப்புகளாக இருந்தது. அதில் பெரிய எழுத்தாக ” க்ரோமோசோம்ஸ் ” என்று எழுதி அதனின் கீழ் தமிழில் அதனை பற்றிய பெரிய கட்டுரையே எழுதி இருந்தது.
இதுதான் தெரியுமே என்று இருவரும் ஒரு சேரக் கூற, ” இந்த தியரி (கட்டுரை) என்னுடைய ஐடியா (யோசனை) ” என்று கூறியவுடன், சஞ்சய் அதனை ஏனோ தானோவென வாங்கி படித்தவன் ஐந்து நிமிடத்தில் கண்கள் விரிந்து அதன் பின் ஐந்து நிமிடம் அக்கட்டுரை முழுவதையும் படித்து விட்டு நிமிர்ந்து பார்த்தவன் “நீ க்ரோமோசோம்ஸ்ன்னு சொன்னவுடனே இப்போ போகிற ப்ராஜெக்ட் நீ ராகவேந்தர் குரூப்ல இருக்கிறதால உனக்கு தர்றாங்கனு நினைச்சேன் . பட் நீ தான் அந்த ஸ்டுடண்ட்னு எனக்கு தெரியாது. எப்படி இதை எழுதுன “
” என் டுவல்த் ( பன்னிரெண்டாம் வகுப்பு) ரிசல்ட் நீங்க பாத்தீங்களா? ” கேள்வி சஞ்சய்யிடம் கேட்டாளும் கண்கள் நிலவனை தான் கண்டது. மூவருமே அந்நாளை நினைத்தனர்.
😾❤️😻
“நாளைக்கு எக்ஸாம் ரிசல்ட் ” என சஞ்சய் கூறிய நொடி , செல்வியின் முகம் பீதியானது. வேகமாக அருகில் இருந்த தனது அலைபேசியை எடுத்து முதல் வேலையாக கவி மற்றும் செல்வியின் மதிப்பெண் பார்த்துக் கூறுவதற்கு தனது தோழிக்கு அடித்து பதட்டத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.
சஞ்சய் அவளது அலைபேசியை வாங்கி அணைத்து விட்டு, “நாமளே இங்க பாக்கலாம் ” எனக் கூறியவுடன் ,
” நீ பாஸ் பண்ணும்னா நான் பாஸ் பண்ணணும் இல்லை “
சஞ்சய் ஒரு நிமிடம் புரியாமல் முழித்து விட்டு , சட்டென்று அவளை கட்டியணைத்து கொண்டான். அவளின் கண்ணீர் அவனின் தோளை நனைப்பதற்கு முன் அவனின் கண்ணீர் அவளின் தோளை நனைத்தது.
அதில் அவள் ஒரு நிமிடம் அதிர்ந்தே விட்டவள், அவனின் முகத்தைக் காண அவனை தன்னிடம் இருந்து பிரிக்க முயல, அவன் இன்னும் இன்னும் அவளுள் புதைந்து கொண்டான். அதையும் மீறி அவள் அவனின் கைகளைக் கிள்ள, சுள்ளென்று ஏற்பட்ட வலியில் அவனை நிமிர்ந்து பார்த்தான். அவனின் கண்கள் சிவந்து இருந்தது. அது தனக்காக என்று நினைக்கும் பொழுது ஆகாசத்தில் பறப்பது போன்ற ஒரு உணர்வு. அதே உணர்வுடன் இருவரின் இளமை பருவம் , எதிர்பாலரின் அதரங்களை அடைய தூண்ட, இருவரும் நெருங்கும் சமயம் “அய்யய்யோ , இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா ” என்று நிலவன் கூப்பாடு போட, வாயைத் திறந்து அசையாமல் பார்த்து கொண்டிருந்தாள் கவி.
“டேய் டேய் ஏன் கத்துற ? ” சஞ்சய் அலட்டிக் கொள்ளாமல் கேட்க, செல்வி தான் பதறி விட்டாள்.
“ஏன்டா சின்ன புள்ளைய என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? ” நிலவன் வெகுண்டு எழ ,
“வாயில அசிங்கமா வரும்! நீ கல்யாணம் பண்ணலாம் நான் லவ் பண்ணக் கூடாதா ? “
“டேய் கல்யாணம் பண்ணவனுக்கே இங்க ஒன்னும் நடக்கல ” ஓரக்கண்ணால் கவியை பார்த்துக் கொண்டே கூற,
” அப்புறம் எதுக்கு இப்போ ரூம்க்குள்ள கட்டிப்பிடிச்சுட்டு உக்காந்து இருந்த ? “
“சரி…. விடு… நாளைக்கு இவங்களுக்கு ரிசல்ட்டாமே! “
” ஆமா அண்ணா ” என சோகமாக கூற செல்வியை பார்த்த நிலவன்,
“என்ன லாஸ்ட் பெஞ்ச்சா ? “
“ஆமா அண்ணா …. இந்த சயின்ஸ் எழவு மட்டும் வராது அண்ணா … அதுல போய் நாலு சப்ஜெக்ட் பிரிச்சு வச்சிருக்காங்க “
“நீ பையாலஜியா ? “
“எல்லாம் உங்க பொண்டாட்டினால வந்தது ! அவ அங்க படிச்சதுனால நானும் அங்க போக வேண்டியதா போச்சு “
இம்முறை சஞ்சய்யே குழம்பி “உனக்கு என்ன பிடிக்குமோ அது போக வேண்டித்தான ? “
கவி ” சரியான கேள்வி “
“ஹான் …… அ போட ஆரம்பிச்சதுல இருந்து இவ கூட தான் சுத்துறேன் …. இப்போ தனியா படினு சொன்னா ….. நோ…. நெவர் …….. ” என இடவலமாக தலையாட்டியவளின் தலையில் இரண்டு கொட்டு வைத்து சில பல திட்டுகளை வழங்கிய நிலவன் தைரியமும் கொடுத்தான்.
அந்த இரவு நால்வருக்கும் இனிமையாக சென்றது. மறுநாள் விடியல் எவ்வாறு இருக்கும் என்று தெரியாததால் நால்வரோடு நட்சத்திரங்களும் கும்மாளமிட்டு கொண்டது.
காலை ஆரியன் ஆறு மணி அளவில் மெதுவாக எழுந்து தனது வேலைக்கு தயாராகி வரும் நிலையில்,
விநாயகனே
வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்…..
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம் !
ஸ்பீக்கரில் அதிர , ஆரியனுடன் அவ்வீட்டில் அனைவரும் எழுந்து வர,
“ஆஆஆஆ………. ” என சுருதியை அழுத்தி பாடிக் கொண்டிருந்தாள் செல்வி. அருகில் கவி பூக்களை அர்ச்சனை செய்ய , செல்வி தீபராதனை தட்டுடன் மணியையும் வைத்து கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.
இதை தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த வனஜா ” நீ எவ்வளவு கும்புட்டு கும்புட்டு கேட்டாலும் நீ எழுதுனதுக்கு தாண்டி மார்க் வரும் “
” அது என்னவோ உண்மை தான் ” என கூறி வனஜாவின் அருகில் அமர்ந்தார் தீரன்.
போனில் வந்த நோட்டிஃபிகேஷன் சத்தத்தில் திரும்பி பார்த்தவர் “ரிசல்ட் வந்துருச்சு ” என கூறிய நொடி, செல்வியின் தாய் அழைப்பதாக திருமலை கூறிக் கொண்டே வந்தார் .
நெஞ்சில் கை வைத்து நின்றாள் செல்வி !
கீர்த்தி ☘️