Loading

என் உயிர் – 17 🧬

“ரகுவேந்தருக்கு அதலாம் போகாது சார்….. “

“சார் வாய்ல சொல்லுறத நான் எதிர்ப்பாக்கல…. உங்க அப்பா இறந்து இருக்காரு அதனால கொஞ்சம் அப்செட்டா ( வருத்தமா ) இருக்கீங்கனு விட்டா , இப்படி இரண்டு வாராமா இதையா சாக்கா சொன்னா என்ன அர்த்தம் “

“சார்….. “

“சார் நீங்க தான் டீம் வேணாம்னு சொன்னீங்க .எனக்கு இன்னும் ஒரே வாரத்தில நீங்க கொடுத்த தியரி ப்ராடிக்கல்லா  ப்ரோசிட் (நடைமுறை படுத்த ) பண்ண முடியும்னு எனக்கு ரிப்போர்ட் கொடுங்க . இல்லைனா நாங்க உங்கக்கூட வச்சிருந்த பாண்டிங்க ( ஒப்பந்தம்) கேன்சல் பண்ணிடுவோம் . நீங்க இவ்வளவு நாள் செலவு பண்ணதுக்குரிய ரூபா அப்புறம் பெனால்டியும் கட்டணும் . இதுதான் எங்க முடிவு ” என்று கூறி எழுந்து சென்றவரை கொன்று விடும் அளவிற்கு கோபம் வந்தது அவனுக்கு .

ஆனால், தாம் கையாலாகத நிலையில் உள்ளோம் என்று நினைத்து அவனுக்கே பிரத்தேயகமான கிரிமினல் மூளையை உபயோகப்படுத்தினான். சட்டென்று சிரித்துக் கொண்டே கூலர்லை மாட்டிக் கொண்டு சென்று விட்டான்.

❤️❤️❤️❤️❤️

தீரனும் சஞ்சய்யும் வெகு நேர பயணத்தின் முடிவில் இறங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தததில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அதில் உள்ள ஒரு சிறிய குடிலுக்குள் நுழைந்தனர் . அங்கு குப்புற படுத்து துயில் கொண்டிருந்தான் நம் நாயகன்.

“இவனுக்குலாம் எப்போ அப்பா பொறுப்பு வரும்! ஒரு டெடிகேசனே இல்லை ! நம்ம வரோம்னு சொல்லியும் எப்படி தூங்குறான் பாத்திங்களா ? ” சஞ்சய் முந்திக் கொண்டு கூற ,

தீரன் அவனை ஏற இறங்க பார்த்து விட்டு, உள்ளே நுழைந்து கதிரையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து தனது அலைபேசியில் அயானா சிரித்து விளையாடிய பதிவை அதிக ஒலி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதில் அயானாவின் குரலோடு கவியின் குரலும் கேட்டது. அதில் மெல்லமாக அசைந்தான். அவன் அசைந்தவுடன் அதிலேயே தனிப் பிரிவுடன் இருக்கும் சமையல் அறைக்கு சஞ்சய் சென்று விட்டான். இவ்விருவர் சம்பாஷணைகளை கேட்பதற்கு மனதிற்கும் உடலிற்கும் மூளைக்கும் தெம்பு வேண்டும் என நினைத்து தேநீரை தயார் செய்ய சென்று விட்டான்.

அதற்குள் மெல்லாக எழுந்தவன் நிமிர்ந்து தீரனை முறைக்க, அவன் முறைப்பதைக் கண்டு கொள்ளாமல் வீடியோ கால் கவிக்கு செய்து மருமகளையும் பேத்தியையும் கண்டு சிரித்து மகிழ்ந்தார்.

” என்ன மாமா ! ஊருக்கு போய்ட்டியா ? “

“ம்ம்… போய்ட்டேன் ! உன் புருஷன் நான் வரேன்னு தெரிஞ்சும் குப்புற அடிச்சு தூங்கிட்டு இருக்கான் ! அதான் அவன் எந்திரிக்கிற வரைக்கும் போர் அடிக்குமேனு உங்க ரெண்டு பேர்க்கிட்டையும் பேசணும்னு போன் பண்ணேன் ! பாப்பா என்ன பண்ணுது? தூங்குறாளா ? “

“மாமா உன் கேள்விக்கு பதில் எல்லாரும் நல்லா இருக்காங்க ! இன்னொரு முறை இந்த மாதிரி பண்ணாத ! ” கண்டிப்புடன் கவி கூறியவுடன், நிலவன் நக்கல் சிரிப்பு சிரித்தான்.

அவனை புரிந்துக் கொண்டாதாலோ என்னவோ அவனின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் எனப் புரிந்து “அதுக்கு என்கிட்ட பேசாம இருக்காத . எப்போ வேணாலும் எங்கிருந்து வேணாலும் பேசு . ஆனா அங்க இருந்து மட்டும் பேசாத ! அதுவும் பாப்பா முழிச்சுக்கிட்டு இருக்கும் போது முக்கியமா ” தனது மாமனை விட்டுக் கொடுக்காமல் பேச,

தீரனு இப்பொழுது நக்கல் சிரிப்பு சிரிக்கும்படி ஆகிவிட்டது. நிலவனோ சட்டென்று அவரது அலைபேசியை வாங்கி ” என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசிக்கிட்டே போற ? எல்லாத்துக்கும் ஓர் அளவு தான் லிமிட்டு ! நீ தானடி வராதனு சொன்ன ? நானா வராம இருக்கேன்? “

“நான் சொன்னா நீ வராம இருப்பியா ? “

“இதுக்கு தான் பொண்ணுங்களை தூரமா வைக்கிறது! புரியுற மாதிரி பேசுறாளுனு பாரு உன் மருமக ! ” தலையைக் பிடித்து தீரனிடம் பாய்ந்தான்.

“உனக்கு புரியவும் வேணாம் ஒன்னும் வேணாம் விடு ” எனக் கூறி பட்டென்று வைத்தாள்.

தீரனை மறுபடியும் முறைத்து விட்டு வெளியில் செல்ல , “ஏன்ப்பா இத இப்ப பெரிசாக்குற ?  ” சஞ்சய் மூவருக்கும் டீயை எடுத்துக் கொண்டு வந்தான்.

“அப்படியாச்சும் ரெண்டும் பேசட்டும் ! எவ்ளோ நாளைக்கு தான் இப்டியே இருப்பாங்க ” போகும் நிலவனை பார்த்துக் கொண்டே கூறினார்.

” அதுவும் உண்மை தான் “எனக் கூறி ரசித்து தேநீரை நுகர்ந்து அதனின் வாயில் கொண்டு போக, “அம்மே….. “

தலையில் அடித்து சஞ்சய்யின் தேநீரை வாங்கி கொண்டு இவனும் அவர்கள் முன் அமர்ந்தான். அந்த சிமெண்ட் தரையில் மூவரும் அமர, சில டாக்குமெண்டுகளை தீரன் நிலவனிடம் ஒப்படைத்தார்.

அவன் சில தாள்களை அவர்களிடம் கொடுத்தான். சஞ்சய் ஒரு பதிவை ஓடவிட்டான். அதனைக் கண்டவர்கள் சஞ்சய்யை வெட்டவா குத்தவா என்கின்ற ரீதியில் பார்த்தனர்.

“ஏன்டா இதுதான் தெரிஞ்சதே ?   “

“முத பாருடா …. ” எனக் கூற இருவரும் அதை உன்னிப்பாக கவனித்தனர்.

அக்காணொலியில் செழியன் ஆங்காரித்துக் கொண்டிருந்தார். அவரை பிடித்து அமுக்கி , அவரின் கதறல்கள் செவியை கிழிப்பதற்குள் அவருக்கு ஒரு ஊசியை போட்டார் ஆதவ்வின் தாயார். அதில் மயங்காமல் கண்களை
மூடித் திறந்து மூடித் திறந்து என இரு நிமிடம் செய்தவர் “சொல்லு மா ! என்ன வேணும் ? எதுக்கு இப்படி நிக்கிற ? ” என மிக பண்பாக கேட்டார்.

அதில் புன்னகை சிந்தியவர் தனது மகனைக் காண , கூலர்ஸை மாட்டிக் கொண்டே மர்ம புன்னகை வீசியவன் அவரின் முன் சில தாள்களை வைத்தான். அதனை கூர்ந்து நோக்கியவர் ஒரு தாளில் எதுவோ எழுதினார். அதனை எடுத்துக் கொண்டு ஆதவ் நகர , ஆதவ்வின் தாயார் சீதா ” எத்தனை நாளைக்கு உள்ள வேணும் ? “

“அரை மணி நேரத்தில கிடைச்சா நல்லா இருக்கும் “என கூறியவுடன் , செழியனின் வெளியாட்கள் அனுமதி இல்லை என்று பெயர் இடப்பட்ட அறைக்கு சென்று வெளியில் வந்தார். பின்னாலேயே ஒரு உருவம். உற்று நோக்கியவர்கள் அதிர்ந்தே விட்டனர். இருவரும் நிமிர்ந்து சஞ்சய்யைக் காண , “முழுசா பாருங்க “

அவர்களும் பார்க்க, “நீ போய் இந்த லேப்ல இதுலாம் வாங்கிட்டு வந்துரு ….. “

” ஓகே சார் ….. ” எனக் கூறி வெளியில் சென்றார்.

தீரனுக்கும் , நிலவனுக்கும் கண்கள் சிவக்க, அதே நேரம் ஆதவ் செழியன் சிரித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கு தெரியும் அவர்களுக்கு இந்த காணொலி கிடைக்கும் என்று . வெற்றிப் புன்னகை வீசிக் கொண்டான்.

❤️❤️❤️❤️❤️

“சார் …… அவன் நமக்கு சரிப்பட்டு வர மாட்டான் சார்? “

“ஏன்டா ? “

” அண்ணே அத எப்படி சொல்லுறது? “

“கத்துறானா ? “

” இல்லை “

” அதிகாரம் பண்ணுறானா ? “

“இல்…..லை “

“பணம் நிறையா கேக்குறானா ? “

“அண்ணே எப்ப…..டி சொல்லுறதுனு தெரில…. ஆனா, அவன் சரி இல்லை ! “

“யாருடா சொன்னது அப்படி ? அவன் தான் நம்ம பகடைக்காயே ? முட்டாள் ! அவனுக்கு வேணும்ங்கிறத பாத்து பண்ணு ? “

“அண்ணே நம்ம தான் அவன்கிட்ட மாட்டிருக்கோமோனு தோணுது ? “

“அதெல்லாம் இல்லைடா …. போடா ….. ” என வெளியில் கூறினாலும் மனதில் ஒரு அச்சம். அவனை இன்னும் கவனிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

அதே சமயம்  ” எனக்கு அவன் தான் பகடைக்காய் அவங்கள அடிக்க இவங்க தான் சரி…… முடிச்சு காமிக்கிறேன் “என சபதம் செய்து கொண்டிருந்தான் அக்கயவன்.

❤️❤️❤️❤️❤️

“மகி …. எப்போ தான் உங்க மாமா கிட்ட சொல்லுவீங்க ? இன்னும் எவ்ளோ நாள் தான் மறைக்கிறது ? “

” நான் என்ன வேணும்னா பண்ணுறேன் ?   ஏற்கனவே அந்த வீட்டில ரொம்ப பிரச்சனை பண்ணிட்டேன் ! இப்போ முகத்தை காமிக்கவே ஏதோ மாதிரி இருக்கு! இப்போ போய் உன்ன காமிச்சா இன்னும் பிரச்சனை தான் ? “

“அதுக்கு இப்படியே இருக்க சொல்லுறீங்களா? “

“இல்லை ….. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் பாப்பாவை தூக்கிட்டு போவோமே ? “

“என்ன …… என்ன உளறுறீங்க? அதுக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு ? “

“அதனால என்ன? என்னையும் புரிஞ்சுகோயே மா ? “என தன் மனைவியை கட்டி அணைத்தவன் கொஞ்சி கெஞ்சி சம்மதிக்க வைத்த நிம்மதியோடு இருவரும் கட்டி அணைத்து உறங்கினர்.

❤️❤️❤️❤️❤️

அயானாவும் கவியும் கட்டிக் கொண்டு தூங்க , அவர்களை ஒரு கதிரையில் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதவ் செழியன்.

அந்நேரம் கதவைத் திறந்து உள்ளே வந்தான் நிலவன் இனியின் நிலவன்!

அனுநிலவன் VS ஆதவ் செழியன்

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்