என் உயிர் – 13 🧬
அதிகாலை குயிலின் சத்தமும், சேவலின் சத்தமும் கேட்டு எழும்பி பழக்கப்பட்டவர்களுக்கு இங்கு வண்டி சத்தங்களின் இடையில் எழும்பினர்.
அதில் புருவம் சுருக்கி சஞ்சய் குப்புற படுக்க, வனஜா இழுத்த விட்ட சன்னலின் திரையை நன்றாக திறந்து விட்டதோடு சன்னலையும் நன்றாக திறந்து விட்டு, டிவியை ஆன் செய்து ஜெயா சேனலில் ஓடும் சுப்ரபாதத்தை நன்றாக ஒலி ஏற்றி விட்டு காலை கடன்களை முடிக்க அறைக்கு சென்று விட்டார்.
வண்டி சத்தத்திலும் பாட்டு சத்தத்தில் உறக்கம் கலைய, அதில் எரிச்சலுற்று கண்களை திறக்க முடியாமல் திறந்து, போர்வையை உடல் முழுவதும் சுற்றி கொண்டு தள்ளாடி கொண்டே , கண்களை கசக்கி திறந்து டிவியை ஆஃப் செய்தான்.
பின்பு, கொட்டாவி விட்டுக் கொண்டே அரைத் தூக்கத்தில் ஜன்னலை அடைய மூன்று அங்குலங்கள் இருக்க, யாரோ அவனின் தோளைத் தட்டினர்.
அத்தூக்கத்திலேயே பின்னால் திரும்பி அவரை கட்டியணைத்து தோளில் முகத்தை பொத்தி வைத்துக் கொண்டு “ம்மா….. அப்பா ஏன் மா இப்படி பண்ணுறாரு? ” எனக் கூறி கண்களை நன்கு திறந்து சுற்றி முற்றி காண்பித்து “பாரு ஏசி ஹாலு ஆனா சன்னலை திறந்து விட்டிருக்காரு…. பாட்டு ……. பாத்ரூம்ல உட்காந்து இருக்கிறவருக்கு எதுக்கு பாட்டு அதுவும் சாமி பாட்டு ….. அலற வேற வச்சிட்டு “எனக் கூறி, அப்பொழுது தான் அந்நபரை பார்த்தான்.
பார்த்தவுடன் அதிர்ச்சியாக நிற்க, செல்வி ஏற்கனவே இவ்வுலகிலேயே இல்லை. ஸ்தம்பித்து நின்றுக் கொண்டிருந்தாள். அவன் கூறிய மன்னிப்பு கூட காதில் விழவில்லை.
அவன் வேறு வழியின்று அவளின் சுண்டு விரலைப் பிடித்து உலுக்க, நிகழ் உலகத்திற்கு வந்தாள்.
“டேய் லூ……. “
“ஹே ஹே …..” எனக் கூறி அவளின் வாயில் கை வைத்தான். மறுபடியும் ஃபிரீஸ் மோடிற்கே சென்று விட்டாள். அவன் “தெரியாம தாண்டி பண்ணேன் …. கத்தாதடி ” அவன் கண்களால் இறைஞ்ச,
அவள் வாயில் முணுமுணுக்க , இவனும் விடாமல் வாயை மூடிக் கொண்டு கெஞ்ச ,
“எந்த எடுபட்ட பய பாட்டை அமத்துனது ” என கத்திக் கொண்டே வந்த வனஜாவின் குரலில் செல்வி அதிர்ந்து, அவளின் நாவால் அவனின் கையை எச்சில் செய்ய, டக்கென்று அவன் எடுத்து “ச்சீ…. லூசு….. ” எனக் கூறியவனை , நங்கென்று தலையில் கொட்டி விட்டு தெரிந்த கெட்ட வார்த்தைகளால் வாயில் முணுமுணுத்துக் கொண்டே அவனை முறைத்து விட்டு சென்றாள்.
அவள் சென்ற பின் , நிலவன் தொண்டையை செருமி கொண்டே வர, எதுவும் நடவாதது போல் விசிலடித்துக் கொண்டே ஜன்னலை ஒட்டியிருந்த கதவைத் திறந்து பால்கனியில் தெரியும் மேக மூட்டத்துடன் உள்ள வானில் பனிகள் பரவியிருப்பதை பார்க்க சென்று விட்டான்.
நிலவன் பின்னால் வந்து ” என்ன என்னென்னமோ நடக்குது? “
“அதான என்ன என்னமோ நடக்குது? ” என வனஜா கூறிக் கொண்டே உள்ளே வந்தார். இருவரும் திரும்பி பார்க்க, இருவரின் மீதும் சிபிஐ பார்வையை வீசினார்.
இருவரும் தத்தமது குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று நினைத்து திரும்ப , வனஜா இருவருக்கும் நடுவில் வந்து இருவர் முகத்தையும் திரும்பி திரும்பி பார்க்க, நிலவனும் சஞ்சய்யைப் பார்க்க, அவனுக்கே வெட்கம் வந்து சிரித்தான்.
அதில் வனஜாவிற்கும் நிலவனிற்கும் முகத்தில் புன்னகை தோன்றியது. “நீ எப்படி பாட்டி கண்டுபிடிச்ச? ” நிலவன் வனஜாவின் தோளில் கைப் போட்டு விசாரிக்க,
“நீ எப்படி கண்டுபிடிச்ச? ” வனஜா கேட்க,
“அவன் நாலு மணிக்குலாம் எந்திரிச்சு ஜிம் போறவன் பாட்டி . அதான் செல்வி பாத்துட்டு தான் இப்படி பண்ணுறானு நினைச்சேன் “
“அதே தான் நானும் … அவன் முழிச்சுட்டானு தெரிஞ்சு தான் டிவியை போட்டேன் . அதோட ஏரோபிளேனுலாம் இறங்குச்சே அங்கையே இவன் களவாணி பார்வையைக் கண்டுபிடிச்சுட்டேன். நான் செல்வியை எதுக்கு கூட்டிட்டு வந்தேனோ அது நடந்துருச்சு “
“எதுக்கு கூட்டிட்டு வந்த? ” சந்தேகப் பார்வையுடன் கேட்க,
“இவன் தான் எனக்கு ஒரு நண்பன் இருக்கானு சொன்னான் “
“ஹி ஹி ஹி…… ” சஞ்சய் தனது முப்பத்தி இரண்டு பல்லையும் காண்பிக்க,
“ரொம்ப பல்ல காண்பிக்காத…. கவி அமைதி …. ஆனா , செல்வி தைரியம் துடுக்குத்தனம் கூட, அதோட அவளுக்கு முதிர்ச்சியும் கூட “
வனஜா கூற கூற நிலவன் முகம் அஷ்டகோணலாக மாற , சஞ்சய் சிரிக்க, வனஜா கண் சுருக்கி ” ஆனா கவிக்கிட்ட பக்குவம் இருக்கும் ….. செல்வி ……. “
“செல்வி…….. “இருவரும் ஒரு சேர இழுக்க ,
“அடிச்சதுக்கு அப்புறம் தான் பேசுவா ” எனக் கூறிய நொடி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே நகர முற்பட்ட நிலவனை வனஜா காலரோடு இழுத்து “அவனை இவ்வளவு கேள்வி கேக்குற ? நீ என்னடா நடு இராத்திரல பண்ணிக்கிட்டு இருந்த? “
பயத்தில் இருந்த சஞ்சய் வனஜா கூறிய இறுதி வாக்கியத்தில் அதிர்ந்து விட்டான். “அட கிராதகா ! உன் வாழ்க்கையே பிரேக் இல்லாம ஓடுது. இதுல என் வாழ்க்கை பெட்ரோல் இருந்து ஓடுதானு பாக்குற பைத்தியக்காரா “
நிலவன் முழித்துக் கொண்டிருந்த சமயம் தீரன் ” அத்தை, நிலவா, சஞ்சய் சீக்கிரம் கிளம்புங்க ! வெளிய போவோம் ! சீக்கிரம் ரெடியாகுங்க ! சாப்பாடு வெளிய பாத்துக்கலாம் . சஞ்சய் உன் வீட்டுல சொல்லிடு ” எனக் கூறி அவர் நகன்றவுடன் நிலவன் இதுதான் சாக்கென்று நகன்று விட்டான்.
அனைவரும் ரெடியாகி காத்துக் கொண்டிருக்க , இறுதியாக நிலவன் வெளியில் வந்தான். அவனின் மெருகேற்றிய உடம்பில் ப்ரவுன் நிறத்தில் சட்டையும், சந்தன நிறத்தில் பேண்டும் அணிந்து, கையில் ஒரு வெள்ளிக் காப்பு , அமேசான் காடு போன்ற அடர்ந்த கேசம் , அதை சரி செய்துக் கொண்டே வெளியில் வர , மொத்தமாக வீழ்ந்தே விட்டாள் கவி.
ஆனால், இம்முறை அவள் எதை பற்றியும் யோசியாமல் அவனைக் கண்டு புன்னகைக்க, அவன் கண்ணடித்தான். இன்னும் பெரிதாக புன்னகைத்து விட்டு திரும்பினாள். இவனும் தலைகோதி கொண்டே திரும்ப , சஞ்சய் முறைத்துக் கொண்டிருந்தான்.
அனைவரும் கிளம்ப, நிலவன் சஞ்சய்யின் தோளில் கைப்போட்டு என்னவென்று விசாரிக்க, சஞ்சய்யும் காலையில் நடந்த சம்பவத்தில் இருந்து செல்வியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்க , அவளோ அவனை ஏதோ ஒரு ஜந்து போன்று நினைத்து பயந்து ஒதுங்கினாள். அவனுக்கு எதிர்த்தாவது எதாவது பேசிக் கொண்டிருப்பவளை தாமே ஏதோ செய்து பேச விடாமல் என்ன பார்க்க கூட விடாமல் செய்து விட்டோமே என்று நினைத்து மனம் வெம்பிக் கொண்டிருக்கும் சமயம், நிலவன் மற்றும் கவியின் செயல் எரிச்சலை கிளப்பியது.
ஒரு வழியாக அனைவரும் கிளம்பி ஆம்பியன்ஸ் மாலில் இறங்க, தீரனுக்கு அவசர வேலை என்று கூறி அவர்களை விட்டுவிட்டு கிளம்பி விட்டார்.
ஆம்பியன்ஸ் மால் உணவுப் பதார்த்தங்களுக்கு பிரபலமானவை. அதனால், அவர்களை அங்கு அழைத்து சென்று உணவு பதார்த்தங்களை பகிர்ந்ததோடு கண்களால் கண்டதையும் பகிர்ந்தான் நிலவன் என்னும் நல்லவன் .
அனைவரும் நன்றாக உண்டு மாலைச் சுற்றி முடித்து விட்டு வெளியில் வர, மணி ஒன்றரையை தொட்டிருந்தது. மதிய உணவிற்காக அருகில் உள்ள உணவகத்தை கூற, “அய்யோ மீண்டும் மீண்டுமா ” காலையில் இருந்து வாய் திறவாத செல்வி இப்பொழுது தான் திறந்தாள்.
“ஏன் மா பசிக்கலையா ? ” நிலவன் கேட்க, கவி தலையில் அடித்துக் கொள்ள, சஞ்சய் பேசுபவளை ஆர்வமாகப் பார்க்க , அது செல்வியை துளைத்தாலும் இவன் ஒருவன் இங்கு இருக்கிறான் என்ற நினைப்பு கூட அல்லாமல் “எனக்கு நான் வெஜ் வேணும்னா “
“அதுக்கா இப்படி கத்துற “
“அசைவம்ம்………. அதுக்காக என்ன வேணாலும் பண்ணலாம் “
“அடிப்பாவி இது தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே நான்வெஜ் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணியிருப்பேனே ” என மனதிற்குள் நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.
பின்பு, அனைவரும் கிராஸ் செய்யும் நேரம், சடாரென்று ஒரு தோட்டா கவியின் காது ஜிமிக்கியில் பட்டு தெறித்தது. அதில் அதிர்ந்து பின்வாங்க நிலவன் அவளைத் தாங்கிக் கொண்டான்.
அதற்குள் கவியின் கழுத்தை நெறித்தான் மகிலன் ஆவென்று கத்திக் கொண்டே. சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர் . அதற்குள் திருமலை, செல்வி, கண்மணி , வனஜா துடித்துக் கொண்டு அருகில் வர, நிலவன் அதற்குள் அவனின் கையை எடுத்துப் பிடித்து தள்ளினான்.
அதில் தடுமாறி கீழே விழுந்தவனை ஐவர் சூழ்ந்தனர். அதில் மகியின் நண்பர்கள் பாய்ந்து கொண்டு வர, அங்கே இரு குழுவிற்கும் கலகலப்பு நடந்தது. செல்வி சுற்றிப் பார்க்க, போலிசார் கூட வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
கவிக்கு மூச்சு விட சிரமம்பட , அனைவரும் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க, செல்வி சுற்றி நடக்கும் சில நடைமுறைக்கு அப்பாற்ப்பட்ட விஷயங்களைக் கண்டு அனைத்தையும் மனதினில் பதித்துக் கொண்டாள்.
பின்பு, அனைத்தும் முடிந்து ஒரு வழியாக அனைவரும் அமைதியாக வீடு வர அங்கு பெரும் நிசப்தமே நிலவியது. இவர்கள் வரும் முன் தீரன் அமர்ந்திருக்க, அனைவருக்கும் ஆறுதல் கூறி, கவியை உள்ளே அனுப்பி விட, நிலவனும் பின்னால் சென்று விட்டான்.
இம்முறை யாரும் தடுக்கவில்லை. “நம்ம போனதுக்கு அப்புறம் இந்திராவுடைய நடவடிக்கையில் சந்தேகம் வந்து அவளை ஹாஸ்பிட்டல சேத்துருக்காங்க . அதுல அவர் மனம் பாதிப்பு வந்திருக்குனு சொல்லி இருக்காங்க. மகியும் அப்போ போனை எடுக்கலை போல . அதனால பாரிக்கு சொல்லி அவரை கூட்டிட்டு வர, இந்திராவோட நிலைமையைப் பாத்துட்டு அவருடைய இன்னொரு மனைவியோட போய்ட்டாரு போல . நேத்து தான் மகிக்கு தெரிஞ்சு போய் பாத்திருக்கான். காசு இல்லாம, வெளியவும் விட முடியாம ரொம்ப மோசமா நாய்கள் வெறிப் பிடிச்சிருக்க இடத்துல வச்சிருக்காங்க. அதுல அந்த நாய்ங்க வேற கடிச்சு இதுவும் அது மாறி பண்ணுதாம் ” எனக் கூறி நிமிர,
திருமலை குனிந்த தலை நிமிரவில்லை, செல்வியின் கண்களில் கண்ணீர். கண்மணி கணவனைக் காணாமல் சட்டென்று தனது மாமியாரிடம் சென்றார்.
அருகில் வருவதற்குள் கை நீட்டி தடுத்து ” வேணாம்…. பிள்ளைங்க பசியா இருக்குங்க . சாப்பிட எதுனாச்சும் வாங்கி கொடுக்க சொல்லு. எனக்கு மோர் மட்டும் அடிச்சு கொடு. நான் படுத்திருக்கேன் “எனக் கூறி வனஜா அறைக்கு செல்லும் முன் , நிலவன் கவி அறையை எட்டிப் பார்க்க, நிலவனின் தோளில் சாய்ந்து கவி கேவிக் கொண்டிருந்தாள்.
ஆழ மூச்சு எடுத்து விட்டு போய் படுக்க சென்று விட்டார். சஞ்சய்யிடம் தீரன் கண்காட்ட , அனைவருக்கும் சாப்பாடு வாங்க சென்று விட்டான்.
“உன்னை கொல்லாம விட மாட்டேன். உங்க அத்தனை பேரையும் கொன்னாலும் என் ஆத்திரம் அடங்காது டா ! யோவ் திருமலை உனக்கு தான்ய்யா மொத அடி ! ” என மகி கத்திக் கொண்டே சென்றது இன்னும் அனைவரின் காதுக்குள் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது.
❤️❤️❤️❤️❤️
“நீ தான அந்த பாடிகார்ட்ஸை மெசேஜ் பண்ணி வர சொன்ன? “
“நாளைக்கு என்ன நாள் தெரியுமா? ” செல்வி கேட்டதற்கு பதில் கூறாமல் சஞ்சய் கேட்ட கேள்வியில் முகம் பீதியானது செல்விக்கு .
கீர்த்தி☘️