Loading

என் உயிர் – 4 🧬

கவிதாயினி
திருமலை – கண்மணி

செல்வி (கவி தோழி)

மகிலன்
இந்திரா (தாய்)

வனஜா (இந்திரா, திருமலை தாய்)

தீரன் (கண்மணி அண்ணன் ) – கமலன்

சஞ்சய் , நிலவன் (நண்பர்கள்)

சீமா(சஞ்சய்யின் அத்தை மகள்)
பரமேஸ்வரி ( தாய்)

சீமா, பூஜா (நண்பர்கள்)

டேய், வேலைக்காக டில்லி வந்தா பத்ததாது டா? ஹிந்தி சீக்கிரமா கத்துகனும். படிப்பு வரலை வரலைனு சொல்லி சொல்லியே தப்பிச்சுக்கிட்டு இருக்க நீ? என்று ஒருவன் மகிலனை வெளுத்து கொண்டிருந்தார்.

மகிலனோ சற்று நெளிந்து கொண்டே “அண்ணே! கத்துக்க மாட்டேனா சொல்லுறேன் ! வர மாட்டேங்குது. படிப்பு வந்தா நான் ஏன் பன்னிரண்டாம் கிளாஸோட நிக்க போறேன். புரிஞ்சுக்க அண்ணே  “

“டேய்  ! இந்த சென்டிமெண்ட் பேச்சுலாம் இங்க எடுபடாது. ஒழுங்கா ஹிந்தி கத்துக்க . இல்லைனா நம்ம தொழில நீ இருக்க முடியாது ” என்று கூறிவிட்டு செல்பவனை கவலையுடன் கண்டான்.

தத்தி புத்தி பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரிக்கு செல்லவும் பிடிக்காமல், வயல் வேலை செய்யவும் பிடிக்காமல் , ஊரில் உள்ள ஒருவனின் மூலம் டெல்லியில் இவர்களிடம் வந்தான்.

அதிக சம்பளம் வருகின்றது என்ற ஒரே நற்பாசையில் இவர்களை நாடி வந்தான். வந்தவனுக்கு அப்போது தான் தெரிந்தது. வருவது மட்டும் நம் இஷ்டம். போவது என்பது அவர்களின் விருப்பமே. அதுவும் உலகத்தை விட்டு தான் செல்ல முடியும் இவர்களை விட்டு அல்ல என்பது பிறகு தான் தெரிந்தது.

முதலில் வருந்தினாலும், ஊருக்கு செல்லும் சமயம் எல்லாம் கிடைக்கும் மரியாதை அவனுக்கு ஒரு போதை தந்தது. அது போல் , அவனின் வயதொத்த நண்பர்களுக்கு இவனின் உடல் முறுக்கும், அவனின் திண்ணக்கமும் அவர்களை அச்சமடைய வைத்தது. அதுவும் அவனுக்கு இன்பத்தை தந்தது. அதனால், அதை விரும்பியே ஏற்றுக் கொண்டான்.

இயற்கையிலேயே அவனிடம் உள்ள காட்டுமிராண்டி தனத்துடன் இவர்களின் அடாவடித்தனமும் ஒன்றாக இருப்பதால் எளிதாகவே முன்னேறினான்.

ஒரு வருடம் சென்றவுடன் , அவனின் முயற்சி மற்றும் அயர்ச்சி அனைத்தையும் கண்டு அவனுக்கு ஊதியம் சற்று கூட்டி கொடுத்தனர். அதனின் பலனாக அவனுக்கு வருமானம் கூடியது. தனது தாயிடம் கூறியவுடன் ஒன்றுக்கு பத்தாக மாற்றி நாற்பதாயிரம் சம்பளத்தை எழுபதாயிரம் என்று ஏற்றி கூறி விட்டார்.

இதனிடையில் சிறு வயதிலிருந்தே தனது மகனுக்கு அத்தை மகளின் மேலே  பிரியம் வர வைக்க முயன்றதை விட கவிதாயினிக்கு மகிழனின் மேல் பிரியம் வர வைக்க அதிகம் முயற்சி எடுத்தார் இந்திரா (மகிலனின் தாய் ) . அதனின் பிரதிபலனே கவியின் இக்காதல்.

🛖 சாலமேடு

தீரனுக்கு ஆதரவாக பேசிய திருமலையைக் கண்டு வனஜா பொங்கி கத்த, வாசலில் இருந்து ஒரு சத்தம் “கொஞ்சம் வாயை மூடுங்களேன் ”  .

அதில் அனைவரும் திரும்பி பார்த்தனர். அதிர்ந்தது அனைவரானாலும், இருவரை தவிர மற்றவர்கள் துரிதமாக வேலை செய்ய ஆரம்பித்தனர்.

வெளியில் இருந்து வனஜாவின் கணவனே கத்தியது. வேலை என்ற ஒன்றிற்கு செல்லாமல் கட்ட பஞ்சாயத்து செய்வதே வேலையாக வைத்துள்ளார். வீட்டு மருமகன் என்று வனஜா எப்பொழுதும் அவருக்கு தக்க மரியாதை கொடுப்பார். அவரோடு மற்றவர்களும் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம் இங்கு .

அதனாலேயே அவர் கத்தியவுடன் திருமலையும் , வனஜாவும் வாசலுக்கு வர, கண்மணி அடுப்பறைக்குள் சென்று விட்டார். கவியும், தீரனும் தான் அதிர்ந்து அவ்விடத்திலேயே நின்றனர்.

இந்திராவின் கணவன் பாரி துண்டை உதறிக் கொண்டே உள்ளே வர, இந்திரா கையில் தட்டு தாம்பூலத்துடன் சிரித்துக் கொண்டே உள்ளே வந்தார். அவர்களை வனஜா சந்தோஷத்துடன் வரவேற்க, திருமலைக்கு யோசனை இருந்தாலும் புருவ முடிச்சுகளைக் கூட வெளியில் காண்பிக்காதவாறு வரவேற்றார் .

பின்னால் சலசலப்பு தெரிந்து வெளியில் எட்டிப்பார்க்க இருபதுக்கும் மேற்பட்டவர்கள் புது உடை , நகை அணிந்து கையில் தட்டுடன் உள்ளே நுழைந்தனர். அதில் ஸ்தம்பித்த விட்டனர் அனைவரும் . ஆனால், வாயைத் தான் யாரும் திறக்கவில்லை வெளியில் எட்டிப்பார்த்த கண்மணி உட்பட .

அவள் பாட்டிற்கு உள்ளே சென்று வந்தவர்களுக்கு விருந்தோம்பல் செய்ய காபி, பலகாரங்கள் செய்து கொண்டிருந்தார்.

உள்ளே வந்த பாரி நாற்காலியில் அமர்ந்து நிமிர, நிற்கும் கவியைப் பார்த்து புருவ இடுங்கில் முறைத்தார். அதில் அதிர்ந்தவள் தன்னை அறியாமல் தன் மாமனின் கையை பிடித்துக் கொண்டு அவரின் பின்னால் நின்றுக் கொண்டாள்.

அதில் மேலும் முறைத்து கொண்டே தனது மனைவியைக் காண, ஏற்கனவே தீரன் இருப்பதில் எரிச்சல் கொண்டவர் தனது கணவன் பார்வை மேலும் சக்தி ஏற்றி “கவி மாமா வீட்டுக்கு வந்திருக்காங்க. ரூம்க்கு போகணும்னு தெரியாதா? அதோட வெத்தலை பாக்கு தாம்பூலம்னு வந்திருக்கோம். இந்நேரம் பட்டு கட்டி அம்மாக்கு உதவி பண்ண போயிருக்கனும். நீ இன்னும் சின்ன பிள்ளை இல்லை ஒன்னு ஒன்னா சொல்ல . போ ” என்று கொஞ்சம் அதட்டி கூறியதில் கவிக்கு உடலில் நடுக்கம் ஏற்பட்டது விட்டது.

காலையில் இருந்து சாப்பிடாதவள், தன்னைக் கண்டு அதிர்ந்து மயங்கி விட்டாள். இப்பொழுது இவரும் அதட்டினால் அவள் என்ன தான் செய்வாள் ? என்று தீரனின் ஒரு மனம் வாட , பால் மணம் மாறாத பிள்ளைக்கு கல்யாணமா ? அதுவும் இந்த வீட்டுக்கு மருமகளா? ஏற்கனவே தனது தங்கையை கொடுத்தே வேதனை பட்டுக் கொண்டிருக்கிறோம் இதில் தனது தங்கை மகள் வேறா ? என்று இன்னொரு மனம் அனலாக கனன்றது.

இதைப் பற்றி கண்மணியிடம் பேசியே ஆக வேண்டும் என்று  கவியின் கையைப் பிடிக்கும் நொடி இன்னொரு கரம் கவியின் கைகளைப் பிடித்தது.

நிமிர்ந்து பார்த்தவர் எதிர்ப்பார்த்தது தான் என்பது போல் நின்றார். கண்மணி தனது அண்ணனை காணாமல் அவளை இழுத்துக் கொண்டு கவியுடன் அவளின் அறைக்கு சென்று விட்டார். தீரனைக் கண்டு கர்வப் புன்னகை வீசினார் பாரி.

ஒன்றும் கூற முடியாத சூழ்நிலை கைதியானார் தீரன். பின்பு, ஏதேனும் கூறினால் இம்முறையும் தன்னை வீட்டிற்கு வராதபடி செய்து விடுவர் என்று அத்தகைய சூழ்நிலையிலும் பொறுமையாக யோசித்தார். அதனால் அமைதியாக அமர்ந்து விட்டார் தீரன்.

பின்பு, சிறிது நேரம் சென்று பாரி தீரனிடம் பேச்சுக் கொடுக்க, எந்த பொழுதிலும் நம் நிதானத்தை இழக்காமல் மிகவும் நேர்த்தியாக சூழ்நிலையை கையாண்டார் தீரன். இந்திரா தீரனிடம் அனைவரையும் வைத்துக் கொண்டே ” கமலம் பையனும்  கிட்டதட்ட இருபது இருப்பத்தி அஞ்சு வயசு இருக்குமே?அதுக்கு  தங்கச்சி தம்பி எதுவும் இருக்கா? ” நக்கலாக கேட்டார்.

அதனை புரிந்து கொள்ளாமல்  “என்ன ? ”  தீரன் நெற்றி சுருக்கி கேட்டார்.

“என்ன மாமா , கமலம் இறந்ததுக்கு அப்புறம் எதுவும் இரண்டாவது கல்யாணம் பண்ணீங்கலா ? முத கல்யாணத்துக்கு தான் கூப்பிடல ? அதான் கேட்டேன் ” என்று வாயை பிடுங்கினார் இந்திரா .

சிரித்துக் கொண்டே ” அந்தளவுக்குலாம் நமக்கு சக்தியும் இல்லை. திறமையும் இல்லை “என்று ஓரக்கண்ணால் பாரியைப் பார்த்துக் கொண்டே கூறினார்.

அதில் முகம் கறுத்து விட்டது பாரி, இந்திரா மற்றும் வனஜாவிற்கு . பாரி தனது மனைவியை முறைத்துப் பார்க்க, கப்சிப் என்று ஆகி விட்டார்.

அதே நேரத்தில் கிளிப்பச்சை நிறத்தில் பட்டு அதில் அங்கு அங்கு அன்னப்பறவை  ஊதா , ஆரஞ்சு, நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு நிறத்தில் இழைந்தோடியது. முந்தானையில் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறம் நூல்கள் தங்க ஜரிகையோடு இணைந்திருந்தது. அதற்கு ஏற்ற ஊதா நிற பனாரஸ் ப்ளவுஸ் உடுத்தி , உறுத்தாத ஒற்றை அட்டியல். அதுவும் இக்காலத்திற்கு ஏற்ற ஆண்டிக். அதற்கு ஏற்ற மூன்று அடுக்கு ஜிமிக்கி . ஒவ்வொரு அடுக்கிருக்கும் முத்துகள் வட்டமிட்டு இருந்தது.

அதே பச்சை நிறத்தில் பொட்டு, கண்களுக்கு மைத்தீட்டி, புருவத்தை நேர்த்தியாக்கி இருந்தாள். உதட்டுக்கு சாயமே தேவையில்லை என்பதால் லிப் கிளாஸ் மட்டுமே போட்டு இருந்தாள். தலையை வகிடு எடுத்து தனது இடை வரை கூந்தலை சீவி இருந்தாள். அதில் ஒரு எடை மல்லிகைப் பூவை பந்தாக மாற்றி தலையில் வைத்திருந்தாள். கைகளில் அதே ஆண்டிக் வளையல். பார்க்கவே அம்சமாக இருந்தாள்.

அதில் தனது மாமனை மணக்க போகிறோம் என்ற ஆனந்தமே அவளின் எலுமிச்சை நிறத்தின் கன்ன சிவப்பு எடுப்பாக எடுத்துக் காட்டியது. அதனால் அனைவருக்கும் அவளின் விருப்பம் வெளிப்படையாக காட்டியது.

அனைவரும் அவளின் அழகை ரசிக்க, இந்திரா மட்டும் அவளின் உடை மற்றும் நகையை ஆராய்ந்தாள். “ஏங்க அண்ணி புள்ளைக்கு நல்லா நிறையா நகை போட்டா என்ன? இப்படியா கறுத்து  போன நகையா போடுறது ? ” என்று சிலுப்பி கொள்ள ,

“என்ன கொழுந்தியா , இன்னும் உலகம் தெரியலையா ? அது கறுத்து போன நகை இல்லை. ஆண்டிக் அதுவும் தங்கம் தான் கவரிங்லாம் இல்லை. என் மாமா அதான்  உங்க அண்ணன் அப்படிலாம் அவரு மகளுக்கு போட மாட்டாரு ” என்று நாசுக்காக கலாய்த்து விட்டார் தீரன்.

அது புரியாத இந்திரா  ” அப்படியா ” என்று கேட்டு விட்டு மறு மறு பேச்சு பேசினாள். அவரின் நோக்கம் நகை மேல் இருந்ததால் தீரனின் நக்கல் புரியவில்லை.  ஆனால், பாரி புரிந்து கொண்டு தனது தொண்டையை செறுமி ” என்ன மாப்பிள்ளை தாம்பூலம் மாத்திருவோமா?  ” என்று கூறி எழும்பினார் அனைவரையும் திசை திருப்பும் பொருட்டு .

“மச்சான் தாம்பூலம் மட்டும் மாத்திக்கலாம் ”
திருமலை.

“அப்படினா ? ” பாரி பாய,

“என்ன ? ” வனஜாவும் இந்திராவும் ஒரு சேரக் கேட்டனர்.

“அப்படினா இப்போ தாம்பூலம் மாத்திகலாம். கல்யாணம் இரண்டு மூணு வருஷம் போகட்டும் ” திருமலை நிதானமாக பேசினார்.

இப்பேச்சு கண்மணி மற்றும் தீரனுக்கே ஆச்சரியம் தான்.

” என்ன அசிங்கப்படுத்திருங்களா? ” பாரி வனஜாவிடம் பாய்ந்தார்.

வனஜா திருமலையை திருப்பி “டேய் ராசா ” என்று கூற,

” நான் அசிங்கபடுத்தல மச்சான் “

” அப்போ இதுக்கு பேரு என்ன? ” என்று சுற்றும் உள்ள உறவினர்களை காண்பித்தார் பாரி.

” நான் வர சொல்லலை மச்சான் உங்களை ? ” என்று நிமிர்வுடன் கூறினார்.

இதற்கு மேல் நின்றால் அசிங்கம் என்று விறுவிறுவென வெளியேறினார் பாரி.

ஆனால், இந்திரா தான் தான் நினைத்தது நடக்கவில்லையே என்று பொங்கி கொண்டிருந்தார். அவருக்கு தீரன் வந்தது தெரிந்தே வேண்டுமென்றே தனது கணவனையும் , கணவன் சொந்தத்தையும் அழைத்து வந்தார். எப்படியும் தீரன் சண்டையிடுவார். அதில் திருமலை கோபம் கொண்டு தீரனை வெளியில் அனுப்பவதோடு திருமணமும் விரைவில் நடைபெறும் என்று. ஆனால், நடந்தது அதற்கு நேர் மாறாக . இருந்தும் விடக் கூடாது என்று நினைத்து இந்திரா தனது அன்னையிடம் சண்டையிட்டு கத்தி விட்டு வந்தவர்களையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

அதன் எதிர் வினையாக வனஜா கண்மணியிடம் திரும்பி விட்டார். தீரன் ஒன்றும் கூற முடியாத சூழ்நிலையில் முறைத்துக் கொண்டு இருந்தார். அப்பொழுது எதார்த்தமாக திரும்பிய பொழுது கவி கண்களை கசக்கிக் கொண்டே அறையினுள் செல்வததை கண்டு அவள் தான் முக்கியம் என்று அவளின் பின்னே சென்றார்.

அரை மணி நேரத்தில் தீரன், திருமலை, கண்மணி மூவரும் இந்திராவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

கீர்த்தி ☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்