Loading

என் ஆயுள் நீயே 31

தங்கையின் காதலின் கோணமே வேறு என்று புரிந்த உதயன் தலையை இருபக்கமும் அசைத்து மென்மையாக சிரித்தான்.

“என்னண்ணா?”

“நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, இப்போ ரெண்டு நாள் முன்ன கூட, பிரணவ் நினைச்சு அழுத பொண்ணான்னு பார்க்கிறேன்” என்றான்.

“அந்த வலி இருக்கு தான். எப்பவும் அனுபவிச்ச வலி மறையாதே” என்ற நனி, “அந்த வலிக்கெல்லாம் இப்போ கொஞ்சமே கொஞ்சம் மருந்து போட்டுக்கிறேன்” என்று குறும்பாய் கண் சிமிட்டினாள்.

“சரிதான்.”

“உங்க ரெண்டு பேரிடமும், விருப்பத்தை சொல்ல முடியாமப் போனதுக்கான காரணம் அப்படியே தான் இருக்கு. சீக்கிரம் பேசறது நல்லது” என்றான்.

“ஆமால” என்ற நனி, “அவங்களும் என்னை விரும்புறாங்கா அப்படின்னா, அன்னைக்கு அது… நான் தப்பா புரிஞ்சிக்கிட்ட அர்த்தம் தானே?” என்றாள்.

உதயன் ஆமென்க,

“அப்போ பிரணவ்வும் இல்லாத ஒன்னை இருக்குன்னு நம்பியிருக்கணும் கரெக்ட்” என்றாள்.

“மே பீ.” உதயன் தோள்களை உயர்த்தி இறக்கினான்.

“காதல் இருக்க அளவுக்கு புரிதல் இல்லையோ?” நனியிதழ் கேட்க, “உட்கார்ந்து பேசினால் புரிதல் தானா வந்துட்டு போகுது. அன்பு போதும். சின்னப் பார்வைக்கான பொருள் கூட புரிஞ்சிடும்” என்றான்.

“லவ் டாபிக்லையும் பின்றீங்க செல்வா.” நனியிதழ் கிண்டல் செய்தவளாக களுக்கிச் சிரித்தாள்.

“அதிகத்துக்கும் பிடிச்சிருக்கு பட்டு. எப்படி இவ்ளோன்னு தெரியல” என்றான். இருவரும் மெத்தையில் அமர்ந்திருக்க, தனக்கு நேரெதிர் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னை பார்த்தவாறு.

“அண்ணா… உங்க முகம் பிளஷ் ஆகுது” என்று நனி ஆர்ப்பரிக்க, “எங்க நானும் பார்க்கிறேன்” என்று உள் வந்தான் இன்பா.

“அடேய்… ஏண்டா?” என்று கீழுதட்டை கடித்து தன் வெட்கத்தையும், புன்னகையையும் மறைத்தான் உதயன். பின்னந்தலையை அழுந்த கோதியவனாக.

“அத்தை, மாமாகிட்ட சொல்லியாச்சா இன்பா?”

“பாட்டியும், பெரியம்மாவும் போனாங்க. இன்னும் வரலண்ணா” என்ற இன்பா, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான்.

“இருக்குமே! சீக்கிரம் லவ் சக்ஸஸ் ஆச்சுல” என்று கண்ணடித்தாள் நனியிதழ்.

“அதுவும் தான். பட் இந்த சந்தோஷத்துக்கு காரணமே வேற” என்று உதயன் அருகில் அமர்ந்த இன்பா அவனை தோளோடு கட்டிக்கொண்டு முகம் மலர தங்கையை ஏறிட்டான்.

“ரெண்டும் பெரும் எதோ மறைக்கிறீங்க…” என்று இடையில் கை வைத்து சொல்லிய நனியிதழ், “எப்படியும் சொல்லுவீங்க தானே. அப்போ பார்த்துக்கிறேன்” என்றாள்.

“ம்ம்…” அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக குறுஞ்சிரிப்போடு பற்கள் தெரிய ஒருவரையொருவர் பார்த்து சிரித்து ஒரு சேர நனியிதழை பார்த்தனர்.

“பெருசா இருக்கும் போலயே” என்ற நனியிதழ், “ரொம்ப தான் தம்பிகிட்ட நெருக்கம்…” என்று உதயனிடம் புருவத் தூக்கலோடு வினவினாள்.

“ஜெலஸ்ஸா?” இன்பா கேட்க,

“லைட்டா” என்று கண்கள் சுருக்கி அவள் சொல்லியதில், பொறாமை என்பது வார்த்தையில் மட்டுமே இருந்தது.

“உங்க ஆட்டத்துக்கு நான் வரல” என்று எழுந்துகொண்ட உதயன், “ஹார்பர் வரை போயிட்டு வரேன்” என்று சென்றுவிட்டான்.

“அண்ணாவை இப்படி பார்க்க ரொம்பவே நல்லாயிருக்குல?” இன்பா கேட்டிட…

“என்னால தான் அண்ணாக்கு நிறைய கஷ்டம்” என்ற நனி, “இனியாவது அண்ணா அவங்களுக்காகன்னு இருக்கணும்” என்றாள்.

“கண்டிப்பா மாட்டாங்க. வர ஆளும் அண்ணாக்கு ஏத்த மாதிரி தான். இங்க அண்ணாக்கு நாம தான் முதலில் அப்படிங்கிற மாதிரி அங்க அவங்களுக்கு அவங்க அண்ணா, தம்பி தான் ஃபர்ஸ்ட்” என்ற இன்பா, ‘இங்க வரதுக்கு முன்னவே உனக்காக அதிகம் யோசிக்கிறவ. வந்துட்டா…’ என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.

இன்பா நினைப்பதைப்போல் அஷ்மிதா தற்போது பிரணவ் மீது கோபமாக இருப்பதுக்கூட, பிரணவ் தன் காதலுக்கு தானே சிக்கலாக இருக்கிறான் என்பதை தாண்டி நனிக்காகவும் தானே!

‘ஜாடிக்கேத்த மூடி.’ மென் புன்னகை இன்பாவிடம். உதயன் என்றும் அவர்களின் நலன் மட்டுமே தன் சந்தோஷம் என்று வாழ்பவனாயிற்றே. இத்தகைய உடன் பிறப்பு அமைவதெல்லாம் வரம். இங்கு இவர்களும் வரம் பெற்றவர்கள் தான்.
________________________

“ஆல் செட்.”

உதயன் தகவல் அனுப்பியதும், அறையை விட்டு வெளியில் வந்தாள் அஷ்மிதா.

கூடத்திலே அமர்ந்திருந்தனர் ராகவன் மற்றும் விமலா. அவளிடம் பேச வேண்டுமென்று இருந்தனர்.

மகளை கண்டதும் விமலா அழைத்திட…

“உங்ககிட்ட பேசுறதுக்கு முன்ன அண்ணாகிட்ட எல்லாம் சொல்லணும் மாம். பிளீஸ்…” என்று நிற்காது வெளியேறிவிட்டாள்.

அஷ்மிக்கு அனைத்தும் பிரணவ் தான். தந்தையுமானவன் அவன். பெற்றோரை இழந்து நின்றவளை, தானும் அந்த வயதில் சிறுவன் என்பதை மறந்து, விமலாவை முந்திக்கொண்டு கைகளில் ஏந்தி நெஞ்சில் சுமந்தவன். அவனிடம் விளையாட்டாய் நடந்து கொண்டாலும், அவனது உறவில் அவளிடம் எப்போதும் அழுத்தம் தான். அவர்களுக்கிடையில் ஆர்யனையே அவள் அனுமத்திதமாட்டாள்.

அஷ்மிதா பிரணவ்விடம் சொல்லாது மறைத்த ஒரே விஷயம் அவளின் காதல் மட்டும் தான். பிரணவ் காதல் வலியில் மௌனித்திருக்க, அவளுக்கு ஏனோ தன்னுடைய காதலை சொல்ல முடியவில்லை.

அகம் நுழைந்த காதல் பார்வையிலும் கரங்கங்களிலும் சேர்ந்திருந்தாலோ அல்லது உதயனிடம் சொல்லிட நினைத்திருந்தாலோ பிரணவ்விடம் தான் முதலில் சொல்ல வேண்டுமென்று சொல்லியிருப்பாள். அவளுக்குத்தான் அப்படியான சூழல்கள் அமையவில்லையே!

வீட்டில் கிளம்பிய வேகம் உணரும் முன் அலுவலகம் வந்து சேர்ந்திருந்தாள்.

எதிர்ப்பட்ட ரீமாவிடம்,

“நாளைக்கு மார்னிங் வீட்டுக்கு வந்திடுங்கக்கா. உங்க ஃபிரண்ட் வர்றாங்க” என்று சொல்லிக்கொண்டே, ரீமா புரியாது “யாரு?” என்று கேட்டதற்கு, “சீனியர்” என்று நடந்துகொண்டே சொல்லி பிரணவ்வின் அறைக்குள் அதே வேகத்தில் நுழைந்திருந்தாள்.

பிரணவ் அப்போதுதான் நனியிடம் பேசிவிட்டு, இல்லையில்லை சண்டை போட்டுவிட்டு, ‘செல்வா காலில் விழ வேண்டியது தான்’ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

கதவு திறந்த சத்தத்தில் நிமிர்ந்த பிரணவ் முகத்தை சட்டென்று மாற்றி உம்மென்று வைத்துக் கொண்டான்.

“வாங்க மேடம். ஆபிஸ் வரமாட்டிங்க நினைச்சேன்” என்றான். கோப்புகளை ஆராய்ந்தபடி.

“அண்ணா” என்று அவள் அழைத்ததும், விலுக்கென நிமிர்ந்து தங்கையை பார்த்த பிரணவ், “மீ?” என்றான். தன்னையே சுட்டி. ஆச்சரியமாக.

“ஆமா… நீ என் அண்ணா தானே?”

“இப்படிலாம் ஷாக் கொடுக்காதம்மா. வழக்கம்போல பாசமா டேய் அப்படின்னே கூப்பிடு” என்றான்.

“உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றாள்.

“இதழ் விஷயமா இருந்தா இப்போ எதுவும் பேச வேணாம் அஷ்மி. நானே அவகிட்ட எல்லாம் ஓபனா பேசிட்டேன். ஜஸ்ட் நௌ” என்று வேகமாக சொல்ல வேண்டியதை எல்லாம் அவளிடம் சொல்லிவிட்டான்.

“இப்போ உன் சீனியர் தான் வீம்பு பண்ணிட்டு இருக்காள். என்கிட்ட பேசவே பயப்படுவாள் தானே? இப்போ எவ்ளோ ஆர்க்யூ பண்றா தெரியுமா?” எனக் கேட்டான்.

“அனுபவிடா… உனக்கு தேவை தான்” என்ற அஷ்மிதா, “உனக்கும் சீனியருக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகிடும். நான் கியாரண்டி” என்றாள்.

“ம்க்கும்… அன்னைக்கு நானே பிடிக்கல சொல்ல சொன்ன கோபம் தான் அவளுக்கு இருக்கு நினைக்கிறேன். ஆனால் என்னை வச்சு செஞ்சிடுவாள் போல” என்றான்.

அஷ்மிதா சிரித்துவிட்டாள்.

“நீங்க எதும் பிளான் பண்றீங்களா?” அவளின் வார்த்தைகளை வைத்து யூகித்தவனாக வினவினான்.

“நாங்க இல்லை…”

“அப்போ வேற யாரு?” என்ற பிரணவ், யோசித்தவனாக, “செல்வாவா?” எனக் கேட்டான்.

“டேய் அண்ணா… எப்புட்ரா!” அவளிடம் ஆச்சரியம்.

“பாசமலருக்காக… பொண்ணு பார்க்கும் படலத்தை அரெஞ் பண்ணவர். இப்போ மட்டும் சும்மா இருந்திடுவாங்களா?” என்றான்.

“ம்ம்… தங்கச்சின்னா ரொம்ப பிடிக்கும்” என்றான்.

“ஹலோ எங்களுக்கும் தான் தங்கச்சின்னா உசுரு… ஆனால் பாரு அந்த வாலு தான் வேணும்னே சண்டை போடும். கோபமா பேசமலாம் இருக்கும்” என்று உதடு சுளித்தான்.

“பின்ன, லவ் மேரேஜ் சான்ஸ் இல்லை. எப்படியும் நீங்க ரெண்டு பேரும் உங்களுக்குள்ள இருக்க காரணத்தை தாண்டி லவ்வை சொல்லிக்கப் போறதே இல்லைன்னு தெரிஞ்சு, எத்தனை நாள் வெயிட் பண்ணி, மாம் உன் கல்யாணத்தை பேச வச்சு, நீ ஓகே சொல்லி அப்படின்னு அந்த நாளை உருவாக்கினா… பொசுக்குண்ணு ஒண்ணுமே இல்லாம ஆக்கிட்ட. அதுவும் உனக்காக அந்த நாளுக்காக வெயிட் பண்ண சீனியரையே நோ சொல்ல வச்சிருக்க நீ… அப்போ கோபம் வரும் தானே?” என்றாள்.

“அப்போ செல்வாவுக்கு கூட்டு நீதானா?” என்றான். விழியுயர்த்தி அமர்த்தலாக.

“ஆமா… உதய் அவங்க தங்கச்சிக்காக பண்ணாங்க. நான் என் அண்ணாக்காக பண்ணேன். ஆனால் நீ கொடுத்தப்பாரு எங்களுக்கு ஒரு டிவிஸ்ட்” என்ற அஷ்மிதா, “செம காண்டாகிடுச்சு” என்றாள்.

“சாரி… நீ என்கிட்ட இதழும் என்னை விரும்புறான்னு இப்போ சொன்னதை அப்போ சொல்லியிருந்தா, இந்நேரம் எங்க கல்யாண வேலை நடந்திருக்கும்” என்றான்.

“அடேய் அண்ணா…” என்று பற்களைக் கடித்த அஷ்மிதா அவனின் கழுத்தை நெறித்து உலுக்கினாள்.

“ஹேய் அஷ்மி…” என்று சிரித்த பிரணவ், “ஓகே ஓகே நான் தான் தப்பு” என்று கத்தினான்.

“அது” என்று இருக்கையை இழுத்து அவனுக்கு பக்கவாட்டில் போட்டு ஒட்டி அமர்ந்தாள்.

“மேடம் எதோ பெரிய விஷயம் சொல்லப்போறீங்க? என்னது?” என்றான் அவள் பக்கமாக இருக்கையோடு நன்றாக திரும்பி.

அஷ்மிதா தடுமாற்றம் கொண்டாள்.

“முதல்ல இதை சொல்லு… உனக்கு கோபம் போச்சா?”

“அது இருக்கு தான்” என்ற அஷ்மிதா பிரணவ்வின் கரத்தை மணிக்கட்டில் அழுத்தமாக பற்றிக்கொண்டு, கண்களை இறுக மூடி, “நான் உதய்யை லவ் பண்றேன். இப்போ இல்லை தேர்ட் இயரிலிருந்து. அவங்ககிட்ட இன்னைக்கு மார்னிங் வரை நானா என் லவ் சொல்லவே இல்லை. அவங்களுக்கே தெரிஞ்சிருக்கு. நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க” என்று படபடவென்று ஒரே மூச்சில் மனதில் உருபோட்டு வைத்ததை சொல்லி முடித்து ஒற்றை கண் மட்டும் பாதி திறந்து பார்த்தாள்.

பிரணவ் எவ்வித உணர்வையும் முகத்தில் காட்டாது பார்த்திருக்க,

“பர்ஸ்ட் தேர்ட் இயர் படிக்கும் போது சீனியர் கூட, அவங்க ஷிப்பிங் பார்க்க போனப்போ தான் உதய்யை பார்த்தேன். அப்புறம் எப்போ எப்படி பிடிக்க ஆரம்பிச்சது தெரியாது. திரி இயர்ஸ் பேக் அவங்க தான் கால் பண்ணி உங்களுக்கு வீட்டில் மேரேஜ் டாக் எடுத்தா சொல்ல சொன்னாங்க. ஒரு த்ரீ டைம்ஸ் தான் எனக்கு டெக்ஸ்ட் பண்ணியிருப்பாங்க. இதை தவிர்த்து வேறெதுவும் பேசியதில்லை” என்றாள்.

……..

“அண்ணா பிளீஸ் எதும் பேசுடா.” பிரணவ்வின் அமைதி அவளை கலங்கடித்தது.

“உனக்கு வேண்டான்னா வேண்டாம்” என்று முகம் கவிழ்ந்து சொல்லியவளின் துளி நீர், அவள் பற்றியிருந்த பிரணவ்வின் கையில் பட்டுத் தெறித்தது.

 

என் ஆயுள் நீயே 32

“உனக்கு வேண்டான்னா எனக்கும் வேண்டாம்.”

அஷ்மிதா சொல்லிட பிரணவ் பக்கென்று சிரித்துவிட்டான்.

“அண்ணா…”

அஷ்மிதாவின் தலையில் கை வைத்து அழுத்தம் கொடுத்த பிரணவ், “நான் நோ சொல்வேன் தோணுதா உனக்கு?” எனக் கேட்டான்.

“அண்ணா” என்றவள், தாவி பிரணவ்வின் கழுத்தினை கட்டிக் கொண்டாள்.

“உன்கிட்ட சொல்லாம விட்ட கில்ட்… ஒரு மாதிரி தவிப்பாகிருச்சுடா. சாரி… சாரி… சாரிடா” என்ற அஷ்மி, “எப்படியும் உதய் சீனியரை உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க, அதுவரை நான் பொறுமையா இருக்கணும் நினைச்சு தான் சொல்லாம இருந்தேன். ஆனால் இப்படி திடீர்ன்னு ஃபாஸ்ட்டா நடக்கும் தெரியாது” என்றாள்.

“ஹேய்… அஷ் குட்டி அழுதா பிரணவ்வும் அழுவான் தெரியும்ல” என்று அவளின் முதுகை வருடியபடி பிரணவ் சொல்லி முடிக்கும் முன்பு, அவனிலிருந்து பிரிந்து வேகமாக கண்களைத் துடைத்து, “நான் ஒன்னும் அழல” என்றாள்.

“பாருடா… அப்போ கண்ணுல என்னவாம்?” என்ற பிரணவ், “என்கிட்ட முதலில் சொல்லலன்னு ஃபீல் பன்றியா?” என்றான்.

ஆமென மேலும் கீழும் தலையை ஆட்டினாள்.

“இப்பவும் என்கிட்ட தான் பர்ஸ்ட் சொல்லியிருக்க” என்றான்.

“இல்லையே அவங்க கேட்கவும் சொல்லிட்டனே” என்றாள்.

“எவங்க?” பிரணவ் குலுங்கிய சிரிப்போடு கேட்க, அவனின் தோளில் அடித்த அஷ்மிதா “அண்ணா” என்று சிணுங்கினாள்.

“டேய் பாப்பா வெட்கப்படுறியா நீ?” என்று மேலும் அட்டகாசமாக சிரித்த பிரணவ், “நிறைய ஷாக் குடுக்காதடா. பாடி தாங்காது” என்றான்.

“உனக்கு என்மேல வருத்தமில்லையே?”

“நீயா உன் லவ்வை உதய்கிட்ட கூட பர்ஸ்ட் சொல்லல. என்கிட்ட தான் சொல்லியிருக்க. இப்போ நீ வீட்டில் கிளம்பும் போது கூட, எல்லாம் தெரிஞ்ச மாம் உன்னை பேச கூப்பிட்டிருப்பாங்க. நீ என்கிட்ட பேசணும் ஓடி வந்திருப்ப கரெக்டா?” எனக் கேட்டான்.

“ஆமா… உன்கிட்ட சொல்லாம அவங்க கேட்டதும் ஓகே சொன்னது எதோ உன்னைவிட்டு மறைச்சு செய்யுற மாதிரியே இருந்துச்சு. அதான் ஓடி வந்தேன்” என்றாள்.

“ம்ம்… எனக்கு உன்னைத் தெரியும்டா…” என்று தங்கையின் கன்னம் தட்டினான்.

தனக்காக பார்த்து அர்த்தங்கள் கோர்க்கும் அவனின் புரிதலில்… நெஞ்சம் நெகிழ பார்த்தாள் அஷ்மிதா.

“லவ் யூ’ண்ணா” என்று ஒற்றை விரல் அவனது இதயத்தை நோக்கி நீட்டி அவள் சொல்ல, பிரணவ் தன்னிரு கரங்களை விரித்து வா என்று பார்வையால் அழைத்தான்.

பாந்தமாய் தனக்குள் அடங்கிய தன்னுடைய தங்கையாகிய குழந்தையை ஆதுரமாய் அடைகாத்துக் கொண்டான்.

“உன்னோட மொமண்ட்ஸ்… நோ ஹர்ட் ஃபீலிங்க், ஓகே” என்று அவளின் நெற்றி முட்டி விலகினான்.

“சாரி…”

“இந்த சாரி எதுக்கு?”

“எனக்கு நீயும் சீனியரை லவ் பன்றங்கிற ஃபீல்… எதோ காரணம் ரெண்டு பேரும் சொல்லிக்காம விலகி நிக்கிறிங்கன்னு யூகம். எனக்கும் சீனியரை ரொம்ப பிடிக்குமா! அதான் உதய் ஹெல்ப் கேட்டப்போ மறுக்க முடியல. தென் அவங்ககிட்ட பேச ஒரு சான்ஸ் கிடைக்காதா வெயிட் பண்ண என் மனசுக்கு இதை ஒரு வாய்ப்பா யூஸ் பண்ணிக்கிட்டேன். அடிக்கடி இல்லைன்னாலும் சீனியருக்காக என்கிட்ட பேசுவாங்க நினைச்சேன். நான் கேட்டு நீ இல்லைன்னு சொல்லிட்டா, என்னால உனக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய முடியாதே. அதான் உதய் என்னை சீனியருக்காக அப்ரோச் பண்ணதை, அவரோட பிளான் எதையும் உன்கிட்ட சொல்லல. சீனியரை விட உனக்கு யாரும் பொருத்தமா இருக்கமாட்டங்க தெரியும். உனக்கு லவ்வே இல்லைன்னாலும், சீனியர் லவ் மட்டுமே உன் லைஃப் கலர்ஃபுல்லா மாத்திடும் நினைச்சேன். எல்லா நேரமும் சீனியர் சைட் மட்டுமே யோசிச்சிருக்கேன்ல” என்றாள்.

பிரணவ் இதழ் விரியா சிரிப்பை உதிர்த்தான்.

“உன் பக்கம் ஒரு காரணமிருக்குல. அன்னைக்கு நீ உன்னையே பிடிக்கல சொல்ல சொன்னப்போ… அதை சொல்றதுக்கு முன்ன எவ்ளோ பெயின் ஃபீல் பண்ணியிருப்ப… இதையெல்லாம் யோசிக்காம, சீனியர் நோ சொல்ல நீதான் காரணம்ன்னு உன்னை பிலேம் பண்ணிட்டேன். சாரிடா” என்றாள். தன்னிரு காதுகளையும் பிடித்துக் கொண்டு இரைஞ்சும் பார்வையில்.

“முழுசா என் பக்க லவ் தெரியாமலே எனக்காகதான் எல்லாம் யோசிச்சிருக்க… என் மேல கோபம் கூட எனக்காகதான… நானே யோசிக்காத விஷயம், என் லவ்க்காக நீயும் உதய்’யும் செய்திருக்கீங்க. நான்தான் சொதப்பிட்டேன்” என்றான்.

“நாளைக்கும் ஒரு பிளான் இருக்கு சொதப்பிடாத” என்றாள்.

“என்ன பிளான்?”

“உன் ஆளு வருவாங்க. அவங்ககிட்ட நான்தான் பொண்ணுன்னு கூட சொல்லாம சாஸ்பென்ஸா தான் கூட்டிட்டு வராங்க… தென்…” என்று இழுத்த அஷ்மிதா, “உங்களுக்கு தான் பர்ஸ்ட் மேரேஜ்” என்றாள்.

“அடிப்பாவிங்களா… எனக்கே தெரியாம என் கல்யாணம் டிசைட் பண்ணியிருக்கீங்க… இதழுக்கு தெரியுமா?” எனக் கேட்டான்.

“உதய் உனக்காக சீனியர்கிட்ட பேசியிருக்காங்க… உன்னை கொஞ்சமே கொஞ்சம் அழ வச்சிக்கிறேன் சொன்னாங்களாம். அவங்களை உனக்கு புரியுமாம்” என்று அஷ்மி சிரித்திட, “மொத்தமா கட்டம் கட்டுறீங்க” என்றான் பிரணவ்.

“பின்ன நீங்களா சேருவீங்கன்னு வெயிட் பண்ணா… அவ்ளோதான்” என்று அஷ்மி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிரணவ்வுக்கு விமலாவிடமிருந்து அழைப்பு வந்தது.

“வீட்டுக்கு எப்போட வர? உன் தங்கச்சி எல்லாம் சொல்லிட்டாளா? பேசணும் சீக்கிரம் வா” என்று அவரே பேசி வைத்திட்டார்.

கதவினை தட்டிவிட்டு ரீமா உள்ளே வந்தாள்.

“ஹேய் அஷ்மி என்னவோ சொன்னியே… ரீஸன் என்ன? மீட்டிங் டேக் ஓவர் பண்ணதால உடனே வர முடியல” என்று அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“அஷ்மிக்கு ப்ரொபோஸல் வந்திருக்கு ரீமா. நாளைக்கு வராங்க” என்ற பிரணவ், “லவ் புரோபோஸல்… நம்மகிட்டவே மறைச்சிட்டா” என்றான். தங்கையை பொய்யாக சீண்டிட.

“அண்ணா” என்ற அஷ்மிதா, “அதான் எல்லாம் எக்ஸ்பிளைன் பண்ணிட்டேன்ல” என்றவள், “எனக்காக நீ ஓகே சொல்ல வேண்டாம்” என்றாள்.

“அப்போ நான் வேண்டாம் சொன்னா அக்செப்ட் பண்ணிப்பியா நீ?”

“நீ சொல்லமாட்ட தெரியும். நடிக்க ட்ரை பண்ணாத” என்றாள்.

“அப்போ நான் வேணாம் சொல்லமாட்டேன் தெரிஞ்சே, அப்படியே பாசமலர் மாதிரி ஆக்ட் விட்டிருக்க நீ?” என்று அவள் தலையில் வலிக்காது கொட்டினான்.

“நீ என் அண்ணா டா… எனக்காக பார்ப்பேன்னு கூடவா தெரியாது” என்றாள். இருவரின் அன்பும் கரை கடந்து அலை வீச அவர்களின் இந்த புரிதல் தான் காரணம்.

“பையன் யாரு?” ரீமா இருவருக்கும் நடுவில் தனக்குரிய கேள்வியைக் கேட்டாள்.

“நாளைக்கு வீட்டுக்கு வாங்க உங்களுக்கு சர்ப்ரைஸ்” என்ற அஷ்மிதா, “மாம் கால் பண்ணாங்கல… வா வா போலாம்” என்று பிரணவ்வையும் ரீமாவிடம் எதையும் சொல்லவிடாது இழுத்துக்கொண்டு சென்றாள்.

இருவரும் ஒரே வண்டியில் செல்ல, நனியிதழிடமிருந்து பிரணவ்வுக்கு அழைப்பு வந்தது.

“உன் சீனியர் தான்” என்ற பிரணவ் அழைப்பினை கார் ப்ளூடூத்தில் பொருத்திவிட்டு, வண்டியை லாவகமாக செலுத்தினான்.

“பிரணவ்…” மதியம் அவனிடம் பேசிய நனியின் குரலுக்கும் இப்போது ஒலிக்கும் குரலுக்கும் அத்தனை வித்தியாசமிருந்தது.

“இதழ்… அழறியா?” என்று பிரணவ் பதறி கேட்க,

“டூ யூ லவ் மீ?” என தழுதழுப்பாக வினவினாள்.

“எஸ்… அம் லவ்விங் யூ” என்று சட்டென்று சொல்லிய பிரணவ், “என்னடி ஆச்சு?” எனக் கேட்டான்.

“இப்போ வீட்டுக்கு வர முடியுமா?”

நனியிதழ் அவ்வாறு கேட்டதும் அண்ணனும் தங்கையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னடா…?”

“வீட்ல வந்து பேசுங்க. டைம் இல்லை. நாளைக்கு வேற பையனோட பேசி முடிக்கப் போறாங்க” என்று அவள் அழுதுகொண்டே சொல்ல, அஷ்மிதா வந்த சிரிப்பை அடக்கினாள்.

“உங்க பிளானா இது?” என்று தங்கையின் தோளில் தட்டிய பிரணவ், “உனக்கு நான் தான் டி மாப்பிள்ளை. வேற யாரும் குறுக்க வர முடியாது” என்று நனியிடம் கூறினான்.

“நான் சொன்னா அண்ணா கேட்பாங்க. ஆனால் என்னால் மறுத்து சொல்ல முடியாத சிட்டுவேஷன்ல இருக்கேன் பிரணவ்… பிளீஸ் நீங்க வந்து பேசுங்க” என்றாள்.

“நீ பர்ஸ்ட் விஷயத்தை தெளிவா சொல்லு?” என்ற பிரணவ் தங்கையை முறைத்தான்.

“எதுக்குடா முறைக்கிற?” சத்தமின்றி உதடசைத்தாள்.

“இவ்ளோ நாள் அவள் அழுதது போதாதா?” என்று அவனும் சத்தமின்றிக் கூறினான்.

“பிரணவ்…”

“கேட்குதா இதழ்?”

“ம்ம்…” என்ற நனியிதழ், “அண்ணா லவ் பண்றாங்க. அவங்க பொண்ணெடுத்து பொண்ணு கொடுக்க விருப்பப்படுறாங்களாம். இப்போ அண்ணாக்கு ஓகே சொல்லனும்னா நான் அவங்க பையனை கட்டிக்க ஓகே சொல்லணுமாம். எனக்கு என்ன பண்ணனும் தெரியல” என்றாள் விசும்பலோடு.

“இதுதான் உங்க கார்னர் ஐடியாவா?” என்று தங்கையிடம் கேட்ட பிரணவ்,

“நீதான் என்னை வேண்டாம் சொன்னியேடி… பார்க்குற பையன் நல்லவனா இருந்தா அவனை கட்டிக்கோயேன்” என்று தன்னவளிடம் விளையாடினான்.

“பிரணவ்” என்று பற்களைக் கடித்த நனியிதழ், “நீதாண்டா வேணாம் சொல்ல சொன்ன” என்று சீறினாள்.

“என்னடி டா சொல்ற?”

“ஆமா… சொல்லுவேன். உன்னை லவ் பண்றேன். டா கூட சொல்லக்கூடாதா?” என்றவள், “வர முடியுமா முடியாதா?” எனக் கேட்டாள்.

“வரணுமா?”, பிரணவ்.

“நான் வேணாமா?” என்ற நனியிதழ், “கிவ் மீ வன் சான்ஸ் கேட்ட” என்றாள்.

“வரேன்” என்ற பிரணவ், “அழமா இரு” என்று வைத்திட்டான்.

“அண்ணா போகப்போறியா?” அஷ்மி கேட்க, “எப்படியும் நாளைக்கு வர அவகிட்ட உண்மையை சொல்லமாட்டிங்க தான? அதுவரை அவள் ஓவர் திங்க் பண்ணி ஃபீல் பண்ணனுமா? இதுவரை அவளுக்கு தெரியாம நான் கொடுத்த பெயினே போதும். தெரிஞ்சே கொடுக்க விரும்பல. அவங்க வீட்ல வச்சு தானே என்னை பிடிக்கல சொல்லுன்னு சொல்ல சொன்னேன். அப்போ அங்க வச்சே அவளை தான் எனக்கு பிடிச்சிருக்கு சொல்றது தானே சரி” என்ற பிரணவ், “வீடு வந்தாச்சு” என்று அஷ்மியை வீட்டின் முன் இறக்கிவிட்டு உள்ளே கூட செல்லாது அத்தீஸ்வரம் நோக்கி பறந்தான்.
_____________________

உதயன் ஹார்பரில் வேலையென்று சென்றதும், கல்லூரியிலிருந்து எழிலை அழைத்துவர இன்பாவும் புறப்பட்டிருந்தான்.

கஜமுகன் அழைத்தாரென்று நனியிதழ் அறையை விட்டு வெளியில் வர, பெரியவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

“சொல்லுங்க தாத்தா” என்று பக்கம் வந்தவளை தனக்கு முன்னால் அமர்த்திக்கொண்ட கஜா, “உதயா உன்கிட்ட சொல்லியிருப்பாங்க” என்றார்.

“சொன்னாங்க தாத்தா. நாளைக்கு பொண்ணு பார்க்க போகணும் சொன்னாங்க” என்றாள்.

“உதயா அந்தப் பொண்ணை விரும்புறாங்க” என்றார் கஜேந்திரன்.

“தெரியும் சித்தப்பா.”

“அப்போ உன் அண்ணன் ஆசைப்பட்டது நடக்கிறது உன் கையில் தான் இருக்கு” என்றார் இளங்கோவன்.

“புரியலப்பா?”

“பொண்ணுக்கு அண்ணன் இருக்காங்களாம். அவங்க பொண்ணை கொடுக்கிற இடத்தில் தான், பொண்ணெடுக்க விருப்பமா அவங்களுக்கு” என்றார் லட்சுமி பாட்டி.

“இதுல நான் என்ன பாட்டி பண்ணனும்?” அப்போதும் புரியாது வினவியவளுக்கு, காமாட்சி விளக்கமாக சொல்லிட ஒரு நொடி உலகமே அவளுக்கு இருண்டுவிட்டது.

“உன் சம்மதம் வேணும்” என்று கஜா கேட்க, அவள் எப்படி மறுத்திடுவாள். அவளின் அண்ணனின் காதல் இதில் அடங்கியுள்ளதே! பொங்கி வர துடித்த கண்ணீரை தனக்குள் அமிழ்த்துக் கொண்டவள், “உங்க இஷ்டம்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் ஓடி வந்திருந்தாள்.

உண்மை தெரியாது ஒரு மூச்சு அழுது கரைந்தவள், உதயனிடம் சொல்லலாம் என்று நினைத்த நொடி, தனக்காக அவனது காதலையும் துறந்திடுவான் என நன்கு அறிந்தவளாக, அப்போதைய தவிப்புகள் அடங்குவதற்காக பிரணவ்விற்கு அழைத்து அவன் வந்து பேசினால் பெதுமென நினைத்தவளாக அவனிடம் விஷயத்தை ஒப்படைத்து விட்டாள்.

சரியாக இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே உதயனின் வீட்டிற்கு முன் நின்றிருந்தான் குரு பிரணவ்.

 

 

Epi 33 and 34

என் ஆயுள் நீயே 33 ம 34

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
35
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்