அத்தியாயம்: 12
மாதவி மித்திரனை முதலில் பார்த்தவுடன் இவன் தான் எனக்கு புருஷனாக வர வேணும் இவன் ஆனந்த் அண்ணனின் நண்பன் தானே….சரி ஆத்தா, அப்பு கிட்ட சொல்லி அவனை விசாரிக்க சொல்லலாம் இவன் ஏதோ பெரிய இடத்து பையன், பெரிய வேலையில் இருப்பவன் என்று பேசி கொண்டாங்க….
இந்த பட்டிக்காட்டில் என்ன இருக்கிறது வயல், மாடு, கன்று அதையே நான்கு தெரு மரத்தடி பஞ்சாயத்து இதுவா வாழ்க்கை….சே! சலிப்பு தட்டி விட்டது வதனி போல எனக்கும் பட்டணத்தில் தான் மாப்பிள்ளை அமைய வேணும்… அவளை விட வசதியாக வாழ வேணும் அதற்க்கு இவன் தான் சரியான ஆள்… இவன் வெளிநாட்டில் தான் இருப்பது என்று சொன்னாங்க அப்போ நான் வெளிநாட்டுக்கு போகலாம் என கற்பனை கோட்டை கட்டி இருக்க அதை மித்திரன் உடைத்து தூள் தூளாகி விட்டான்..
இந்த ஊமச்சியை இவன் எதற்காக பார்க்கிறான் பார்த்தது மட்டுமா! அவன் முகம் வேற சந்தோஷமாக இருப்பது போல தெரிகிறது….இவனுக்கு கண் ஏதும் கோளாறு இருக்குமோ!…இங்கே வயசு பெண்ணுங்க பார்க்க லட்சணமான பெண்ணுங்க இருக்கும் போது…இவன் எதை இவள் கிட்ட கண்டான் என இப்படி நடந்து கொள்கிறான்…இல்லை இதை விட கூடாது ஏதும் செய்ய வேணும் என நினைத்து கொண்டாள்…
ஆனந்தை வரவேற்று அவனை மண மேடையில் அமர வைத்து சடங்குகள் செய்ய ஆரம்பித்தனர்…கொஞ்ச நேரத்தில் வதனியை அழைத்து கொண்டு வந்த ஆனந்த் அருகில் இருக்க வைத்தார்கள்….அவளுக்கும் சில சடங்கள் செய்து முடிய அவள் முகூர்த்த புடவை மாற்றி வர போக ஆனந்த் வேட்டி சட்டை மாற்றி வர போனான்…
முதலில் ஆனந்த் வந்து இருக்க ஐயர் திருமண சடங்கை தொடங்க கொஞ்ச நேரத்தில் வதனியை அழைத்து வந்து அவன் அருகில் அமர வைத்தார்கள்…தாலியை சுகந்தி கொண்டு அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்து ஐயரிடம் கொடுக்க சுப முகூர்த்த வேளையில் கெட்டி மேளம் முழங்க உற்றார் உறவினர், நண்பர்களின் வாழ்த்தோடு ஆனந்த் வதனி கழுத்தில் இரண்டு முடிச்சு போட்டான்…
அவன் தங்கை முறையில் உள்ள ஒரு பெண் மூன்றாவது முடிச்சு போட்டாள் பிறகு மற்ற சடங்கு எல்லாம் செய்து விட்டு பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தார்கள்…அவர்களும் மனசார ஆசிர்வாதம் வழங்கினார்கள்…ஆனந்த் நண்பர்களிடம் வர அவர்களும் அவனை அணைத்து வாழ்த்து சொன்னார்கள்…
மித்திரன் ஆனந்த் கையில் ஒரு கவர் கொடுத்தவன் மித்திரன் “ ஆனந்தா இது என் பரிசு உனக்கும் சிஸ்டருக்கும் ஹனிமூன் டிக்கெட் லண்டனுக்கு போட்டு இருக்கிறேன்…அங்கே தங்க வீடு இருக்கு சுற்றி காட்ட ப்ரண்ட் ஒருவனை ஏற்பாடு பண்ணி இருக்கிறேன் ஒரு மாதம் ஜாலியாக என்ஜாய் பண்ணி விட்டு வா…
சிஸ்டர் இது உங்களுக்கு என் அம்மா தந்த கிப்ட் என சொன்னவன் ஒரு நகை பெட்டியை வதனியிடம் கொடுக்க அவள் அதை திறந்து பார்த்தாள்… அது உயர்தர கற்கள் கொண்ட டயமண்ட் நெக்லஸ் அடுத்து தன் தங்கை கொடுத்த பரிசு என இரண்டு ஜோடி வைர மோதிரமும்… தந்தை கொடுத்து விட்டார் என கூறி வைர கற்கள் பதித்த ஜோடி வாட்ச் கொடுத்தான் …
உண்மையில் ஆறு பேரின் நட்புகளை அவர்கள் குடும்பம் ஏற்று தங்க வீட்டு பிள்ளைகளாக நினைத்தார்கள்…அதனால் தங்கள் சார்பாகவும் பரிசுகளை கொடுத்து அனுப்பி இருந்தார்கள்…
பரத், நஸீர் பணமாக ஆளுக்கு ஐம்பதாயிரம் என கொடுத்து இருந்தார்கள் பிரியா ஜோடி பிரேஸ்லெட்…..ரேகா வதனிக்கு ஒரு ஜோடி வளையல் ஆனந்த்க்கு செயின் கொடுத்தாள்….உண்மையில் அங்கே இருப்பவர்கள் அப்போது தான் புரிந்தது இவர்கள் பணக்கார வீட்டு பிள்ளைங்க… எப்படி இந்த கிராமத்தில் எந்த குறையும் சொல்லாமல் இருந்தார்கள் இது தான் வளர்ப்பு என்று நினைத்தார்கள்…
பாலமுருகன் அப்போது தான் அலரை தேடினார் அவர் எண்ணம் அலர் வந்து இருப்பாள் என்று….அவர் சுற்றி சுற்றி பார்க்க அவளை காணவில்லை…அவரும்,கதிரும் கல்யாண வேலையில் அலைந்து திரிந்ததால் இவள் இங்கு இல்லாததை கவனிக்கவில்லை…
பாலமுருகன் “ ஆத்தா சுகந்தி அலர் எங்கே? அவளை காணோம் அக்கா கல்யாணத்தில் வந்து நிற்காது…..எங்கே போனாள் என கேட்டார்…அங்கே இருந்த சிலரின் முகம் மாறியது காரணம் அவர்கள் சம்பிரதாயத்தை அதிகமாக கடை பிடிக்கும் மூட வர்க்கம் மாற்ற முடியாத மனிதர்கள்…
சுகந்தி “அது வந்து பெரிய மாமா” என மென்று முழுங்கினாள்…
கதிர் “ நீ மென்று முழுங்கியது எல்லாம் போதும் நல்ல நாள் அதுவுமாக ….என்னை கோபப்பட வைக்காது போய் என் தங்கச்சியை அழைத்து கொண்டு வா” என்றான் …
வள்ளியம்மை “ டேய்!கதிரு உனக்கு தான் பைத்தியம் பிடித்து இருக்கு நாங்க தான் உன் மேலே கோபப்பட வேணும்…நல்ல நாள் அதுவுமாக சீதேவியை அழைக்காமல் அதன் அக்கா மூதேவியை அழைக்கிற…அவள் வந்தால் விளங்கி விடும் உன் தங்கச்சி கழுத்தில் இப்போ தான் தாலி ஏறி இருக்கு இப்போ போய் அந்த மூளியை இவள் பார்க்க வேணுமா!…என கேட்டாள் ..
வள்ளியம்மை கேட்க தணிகாசலம் வள்ளியம்மை என குரலை உயர்த்த… அழகப்பன் அவரை ஒரு பார்வை பார்த்தவர் வேற ஏதும் பேசாமல் நின்றார்…
வள்ளியின் தந்தை “ வள்ளி கேட்டதில் என்ன தவறு பெரிய மாப்பிள்ளை இது நம்மூர் வழக்கம் தானே! அறுத்து கட்டியவள் எந்த சுப காரியத்திலும் பங்கெடுக்க கூடாது….சபைக்கு வர கூடாது என்று பிறகு எதற்காக நீங்க வழக்கத்தை மாற்ற நினைக்கிறீங்க” என கேட்டார்…
குமுதாவின் அண்ணன் “ அது தானே சித்தப்பு கேட்டதில் தவறு ஏதும் இல்லை மச்சான்…நீங்க தான் அந்த ஊமை பெண்ணுக்கு ஜாஸ்தியாக கவனிப்பு செய்கிறீங்க…அவள் எல்லாம் கொல்லையில் இருக்க வேண்டிய ஆளு” என சொன்னான்…
பாலமுருகன் “ மன்னிக்க வேணும் இது என் பெண்ணு கல்யாணம் இங்கே யார் வர வேணும்….சபையில் நிற்க வேணும் என தீர்மானிப்பது நான் தான்… சரசு நீ போய் செங்கமலத்திடம் சின்ன பாப்பாவை அழைத்து வர சொல்லு” என்றார்…
சரசு மறு வார்த்தை பேசாது போக கொஞ்ச நேரத்தில் செங்கமலத்தின் பின்னால்… அலர்விழி தயங்கி தயங்கி தலை குனிந்தபடியே வந்தாள்…
பாப்பா என அழைத்தபடியே கதிர் போய் அவள் கரம் பற்றி அழைத்து கொண்டு தந்தை அருகே வந்தான் …
பாலமுருகன் “ ஆத்தா உன் அக்காளுக்கு இன்று கல்யாணம் அவள் தங்கச்சி நீ இங்கே இல்லை என்றால் எப்படி ஆத்தா…ஐயன் உன் கிட்ட என்ன சொன்னேன் நீ ஐயனுக்காக சபைக்கு வர வேணும் என்று.. ஆனால் நீ வரவில்லை தாயி இது தானா! நீ ஐயனுக்கு கொடுக்கும் மரியாதை” என கேட்டார்….
கதிர் “ இங்கே பாரு ஆத்தா கண்ட கண்ட குடிகார நாய்ங்க, ஊருக்கு ஒரு கூத்தியாள் வைத்து கொண்டு வெளியே வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பவன்… எல்லாம் ஊருக்குள்ளே தலை நிமிர்ந்து நடந்து போகிறான்…ஏன்? சபையில் கூட வந்து நிற்கிறான் அப்படி இருக்கும் போது தப்பே செய்யாத நீ! எதற்காக ஆத்தா ஓடி ஒளிய வேணும்…
இது உன் அக்காள் கல்யாணம் யார் என்ன சொன்னாலும் கூட…. நீ அதை தூசி போல தட்டி விட்டு வந்து இருக்க வேணும்” என்றான்…அவன் சொல்ல அங்கே இருந்தவர்கள் முகம் மாறியது காரணம் கதிர் சொன்னது பாதி உண்மை… அங்கே இருப்பவர்கள் அப்படி தான் ஏன் அலர் கைம்பெண் என தெரிந்து அவளிடம் வாலாட்ட நினைத்து கதிரிடம் வாங்கி கட்டியவர்கள் கூட உண்டு… அதை வெளியே சொல்லவா முடியும்! அவர்கள் உள்ளுக்குள்ளே இவனை எப்படி வஞ்சம் தீர்க்கலாம் என நினைத்து கொண்டு இருந்தார்கள்…
அலர் சைகை மூலமாக பாலமுருகனிடம் ஏதோ சொல்ல அது அங்கே இருப்பவர்களுக்கு புரியவில்லை…
பிரியா “ அங்கிள் அலர் என்ன சொல்கிறாள்” என மித்திரன் உணர்வை படித்து கேட்டாள்…
பால முருகன் “ அது ஒன்றுமில்ல தாயி உங்க சொல்லை மதிக்கவில்லை என்று நினைக்க வேணாம் அப்பு …என் அக்கா வாழ்க்கை எனக்கு முக்கியம் அது தான் நான் வரவில்லை… நான் எங்கே இருந்தால் என்ன அவள் நல் வாழ்க்கைக்காக நான் கடவுளை வேண்டி கொள்வேன் என சொன்னாள்….இது தான் என் அலர் தன்னை விட மற்றவங்க நன்மையை தான் அதிகமாக பார்ப்பாள்… இந்த மனசுக்கு நீ நல்லா இருப்ப தாயி…சரி நாங்க பரிசு கொடுத்து விட்டோம் நீ உன் அக்காவுக்கு என்ன கல்யாண பரிசு கொடுக்க போகிற” என கேட்டார்….
மாதவி “ என்ன பெரிய மாமா இவளே ஒரு பிச்சைக்காரி நாங்க சாப்பிட்ட மிச்சம் மீதியை சாப்பிட்டு உடம்பை வளர்ப்பவள்….இவள் என்ன பரிசு மதனிக்கு கொடுக்க போகிறாள் புடவையா! இல்ல நகையா! இதில் எது கொடுக்க போகிறாள்” என நக்கலாக கேட்டாள்…
கதிர் “ மாதவி வார்த்தையை பார்த்து விடு நீ என் அத்தை பெண்ணு என் மச்சினி மட்டும் தான்… ஆனா அலர் என் தங்கச்சி இந்த வீட்டில் உன்னை விட அதிக உரிமை இருப்பது அவளுக்கு தான்… நீ தான் அக்கா புகுந்த வீட்டில் ஓசி சோறு சாப்பிடும் ஆள் அவள் இல்லை” என கொடுத்து கட்டினான்…
கதிர் மாதவியை திட்ட பிரியா, ரேகா சட்டென சிரித்து விட்டனர் அவர்களுக்கு மாதவி மேலே ஏற்கனவே வன்மம் இருந்தது…காரணம் அலரை எப்போ பாரு பேச முடியாதவள், பிச்சைக்காரி, வேலைக்காரி என குத்தி காட்டி கொண்டு…அவளும் மனித பிறவி தானே அவளுக்கு ஒரு மனசு இருக்காதா!… இப்படியா ஒருவரை பேசுவது அது தான் கதிர் கொடுத்து கட்ட அவர்கள் சிரித்தனர் மாதவி சிரிக்க இவர்களை முறைத்து பார்த்தாள்…
அலர் பாலமுருகனிடம் சைகையில் ஏதோ சொன்னவள் உள்ளே போனவள்… பழைய செய்தி தாளில் ஏதோ ஒன்றை சுற்றி கொண்டு பால முருகனிடம் நீட்டினாள்…
பால முருகன் “ என்ன ஆத்தா உன் அக்காளுக்கு பரிசா!… நீயே அவள் கிட்ட கொடு ஆத்தா…சந்தோஷபடுவாள் ஆத்தா வதனி தங்கச்சி பரிசை வாங்கி கொள்ளு என சொன்னார்….வதனி தாயை பார்க்க குமுதா செய்கையால் வேணாம் என சொல்ல அவள் தயங்க சட்டென அதை ஆனந்த் கை நீட்டி வாங்கி கொண்டவன்…
அதை பிரித்து பார்த்தவன் கண்கள் ஆச்சரியத்தில் விரித்தது காரணம் அது சிவன் பார்வதி திருமண கோலத்தில் உள்ள படம்… அதை கலர் மணிகள் கொண்டு கோர்த்து இருந்தது படத்தின் இடது பக்கத்தின் கீழ் அல்லி மலர் படம் குட்டியாக போட்டு இருந்தது….
ஆனந்த் “ அலர் இதை நீங்களா செய்தது ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு… எங்களுக்கு கிடைத்த பரிசு பொருட்களில் இது தான் பெஸ்ட்” என சந்தோஷமாக சொன்னான்….ஆனந்த் அருகில் இருந்த மித்திரன் அதை வாங்கி பார்த்தவன் வாவ் இஸ் அமேசிங் என்றான்…
அல்லி மணம் வீசும்….
கல்யாணத்துக்கு விருந்துக்கு வந்தவங்க வீட்டுக்கு சொந்தக்காரிய திட்றாங்க