497 views

டீஸர் – 1

” அம்மா நீ நினைக்கிறது நடக்கும்னு எதிர் பார்க்காத …என் மனசுல அவ தன் இருந்தா ….எப்பவு இருப்பா  ” என்று அந்த அறையே அலரும் அளவு கத்திகொண்டு இருந்தான்  ‘சித்  ‘ சித்தார்த் கிருஷ்னன் .

” ஒனக்கு ஏன் புரிய மாடிங்குது..அவ எல்லாரும் வேணாம்னு தா இத்தனை பேரு முன்னாடி நம்மள அசிங்க படுத்தி ஓடிட்டா…இன்னும் அவ புராணம் பாடாத ” என்று தன் கட்டுப்பாட்டை இழந்து அவரும் கத்தினார் .

” அவ என்ன உயிருக்கு உயிரா காதலிகுறா புரிஞ்சுகொங்க அப்பா பிளீஸ் ” என்று கண்ணீர் வடியா குறையாய் தன் தந்தைக்கு புரிய வைக்க முயற்சி செய்தான் . ஆனால் அவர் கேட்ட பாடு இல்லை . அவருக்கும் என்ன செய்வது என்று புரியில்லை அளவில்லாமல் உயிருக்கு உயிராக  காதலிக்கிறாள் என்று மகன் கூறுகிறான் ,  ஆனால் , அப்பொழுது ஏன் இப்படி   கல்யாண நாளன்று  மண்டபத்தை விட்டு  யாரிடமும் கூறாமல்  ஓட வேண்டும் என்று அவர் குழப்பம் முற்றார்‌ . அவரை போலவே அங்கிருந்த சித் தின் தாய் மற்றும் தோழன் சந்துரு என  குடும்பமே குழம்பி போனது .

                ❤️

மகி புரிஞ்சுக்க டா ” என்று கண்கள் கலங்க பேசும் தன் தந்தையின் கூற்றை கேட்டு ஒத்துக்கொளவும் முடியாமல் அவர் கூறுவதை கேட்கவும் முடியாமல் தவித்து போனால் பேதை .

” சரி பா நா கல்யாணம் பண்ணிகுறேன் ” என்றாள் கண்களில் வடியும் கண்ணிரை துடைக்க மறந்து  . தன் மனது முழுவதும் தன் கண்ணாவிற்கான  காதலே உயிர் மூச்சாக இருக்க ,    இன்று  தன் குடும்பத்தை பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் திருமண மண்டபததிலிருந்து சென்ற தன் உடன் பிறந்த  ‘ அமி ‘ யை நினைத்து கோபத்தையும் தாண்டி இயலாமையே அதிகமாக இருந்தது  .  அனைத்து வழிகளும் அடைக்க பட்டது போல் இருந்தது  ‘ மகி’ க்கு . 
தன் மகளின் தலையை  வேதனையுடன் வருடியவர் அங்கிருந்து மணமகன் அறைக்கு  இந்த விசியத்தை கூற சென்றார் .

           ❤️

” அமி சீக்கரம் வா  ”  என்று கூறும் தன் காதலன் கூறுவது காதில் தேனாய் பாய , அவன் கை ஐ விரலுடன்  தன் கை விரல்களை இறுக்கமாக  கோர்த்து  ஓட்டமும் நடையுமாக இருவரும்  சென்னைக்கு செல்லும் விமானத்தை பிடிக்க வேகமாக சென்றனர் .

தன்னை  நேசித்தவள்   தனக்காக அனைவரையும் விட்டு  தன்னுடன் வந்ததை  நினைத்து மகிழ்ந்தாலும் அதனுடன்  சேர்த்து ஒரு வஞ்ச புண்ணைகையும் தோன்றி மறைந்தது ஆனந்த்திற்கு .

          ❤️

 ” இப்போ என்ன அம்மா இந்த கல்யாணம் நடக்கணும் அதானே  ஒங்க எல்லாருக்கும்….நல்லா நியாபகம் வச்சுக்கோங்க அவ கூட  ஒன்னா சேர்ந்து வாழ்வேனு மட்டும் கனவு காணாதிங்க”  என்றான் சித் .

அவன் சம்மதம் தெரிவித்து மகிழ்வை கொடுக்க , முடிவில் கூறியது அனைவருக்கும் சிறிது வேதனையே கொடுத்தது . 

       ❤️

சில பெண்கள் தன்னை மணப்பெண்னாய்  அலங்கரிக்க , அதை ரசிக்க தோன்றாமல் இருந்தாள் மகி  .  மனது முழுவதும் ஏற்கனவே  ஒருவனால் அடிமேல் அடி வாங்கி சில்லு சில்லாய் உடைந்து இருந்து ,  இன்று தன் பெற்றோரும் தன்னை புரிந்துகொள்ளாமல் இப்படி நடப்பது மேலும் அவளை நொறுக்கியது அவர்களை கூறி எந்த தப்பும் இல்லை என்று நினைத்தாலும் இந்த கல்யாணத்தை செய்ய மனம் தன் கண்ணாவை நினைத்து வலித்தது  . எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் கண்ணாடியை வெறித்து பார்த்திருந்தாள் . .

பிரியாமல் தொடரும் …. 😍💋.  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  39 Comments

  1. Superb 👏👏👏👏👌👌👌👌👌👌…..Mahi kannava love pannitu yen avanga appa ta solli apose pannama kalyanam panna othukuraa 🙄🤔…sith so paavam ☹️….waithing for your stories☺️☺️

   1. Abirami

    டீஸர் சூப்பர். அமி சித் ஐ காதலித்தால் ஏன் வேறு ஒருவனுடன் ஓட வேண்டும்? அப்புறம் மகி ஐ கண்ணா ஏம்மாத்திட்டானா? இல்லை சித் தான் அந்த கண்ணாவா? உங்களுடைய கதைக்கு வெயிட்டிங்.

  2. கௌசல்யா முத்துவேல்

   காதலே காதலை சிதைக்கும் விந்தை!!!.. காதலின் வலியை காதல் கொண்டே போக்குவார்களோ?!!.. தெரிந்து கொள்ள ஆவலுடன்!!..

   போட்டிக்கு வாழ்த்துகள் எழுத்தாளரே💖

   1. நன்றாக உள்ளது தோழி😍😍😍😍waiting for your story…😘😘

  3. Nancy Mary

   நரகத்தை கடந்த நான் நல்வழியில் மீள…
   நரகமென்றே உணராதவளின் வாழ்வு பிழையாகுமோ…😳😳😳

  4. பிருந்தா கதிர்

   டீசர் சூப்பரா இருக்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 waiting to read the full story. Spelling mistakes konjam irukku athai mattum correct பண்ணிடுங்க ஓகேவா. நான் சொன்னது உங்களுக்கு கஷ்டமா இருந்தா I’m really sorry. My best wishes to win

   1. Bullet vedi
    Author

    ஓகே 🥰..அடுத்த முறை பிழை இல்லாமல் வழங்க முயற்சிக்கிறேன் …நன்றி 🥰🥰

  5. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!

  6. அருமையான காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்!

  7. Mohanapriya Ayyappan

   ஒருவனால் அடிவாங்கி அப்படின்னா மகி லவ் பண்ண கண்ணாவும் அவளுக்கும் பிரச்சினையோ
   இன்னொருத்தன் கூட சந்தோஷமா போறவள என்ன தான் லவ் பண்றான்னு சித் ஏன் நினைக்கிறான் .
   ஆனந்த் வேணும்னே தான் இப்படி பண்றானோ

  8. Shailaputri R

   ஆக மொத்தம் ஒருத்தரும் லவ் பண்ணவங்கள கல்யாணம் பண்ணல அதான

  9. To
   Ladduuuuuuuu eagerly waitinggg to continue for story❤️🤩🤩😍😍😍😍😍😍😍😍😍💙💙💙💙💙aana oru doubtuu ithella paatha oru vela irukumoooooo😂🤭🤭🤭superrr ah Iruku ladduuuu masss kaatu 🔥🤗

  10. hani hani

   ஏமாந்த காதலன் ஏமாற்றப்பட்ட காதலி ஏமாற்றியவர்களா எதில் ஏமாறுவார்களோ… ??? ரொம்ப நல்லா இருக்கு
   வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  11. Archana

   ஒரு வேலை ஆனந்த் பேரு ஆனந்த கண்ணாவோ மிஸ் கம்யூணிக்கேட் ஆகி இருக்கு போல. டீசர் அழகா இருக்கு படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳.

  12. டீசர் ரொம்ப அருமையா இருக்கு.செம்ம All the best

  13. சில்வியா மனோகரன்

   இது என்னடா புது கூத்தா இருக்கு 🙄🙄
   காதலிச்சு கல்யாண மேடை வரை வர்றதே பெரிய போராட்டம் . வந்த பிறகு இப்படி அந்தர் பல்டி அடிச்சு போறது … இது லாம் நல்லா இல்ல பாத்துக்கமா …

   அது என்னங்கடா ஒரு கல்யாணம் நிறுத்துனா உடனே இன்னொரு ஆள் செட் பண்ணி அடுத்த கல்யாணம் நடத்தீட்டே போறீங்க …. ச்சை … பிள்ளையோட வாழ்க்கை நல்லா இருக்கணும் னு கல்யாணம் பண்ணி வைக்குறாங்தளா இல்ல மண்டபம் வச்சுருக்கவனுக்கு வருமானம் இல்ல னு பரிதாபப்பட்டு எதனாச்சும் பண்ணுறீங்களாயா 🙄😳😏😤😤😤🙆🙆🤦🤦

   நல்லா வருவீங்கய்யா 😤😤😤

   °°°***°°°
   காதல் கைகூட போகிறதென
   கனவில் நான் மிதக்க
   கானலாய் மாற்றிப் செல்வதன்
   பொருள் ஏதடி கண்ணம்மா
   வலிகள் தான் வாழ்வோ ….