அத்தியாயம் இருபத்து மூன்று
சித் அறை :
தயங்கி கொண்டே கதவை திறந்தவளுக்கு நன்கு உணர முடிந்தது சித் அமர்ந்திருப்பது. எதையும் பேசாமல் அவளது பையை டேபிளில் வைத்தவள் நேராக கழிவறை சென்று கதவை பூட்டிக் கொண்டாள். பேசுவதற்கு அளவில்லா வார்த்தைகள் இருந்தாலும் இருவராலும் ஒரு வார்த்தையை கூட கூறமுடியவில்லை. முகத்தை கழுவி கொண்டு வந்தவள் இன்னும் கூட சித் அசையாது இருப்பதை பார்த்து என்ன செய்வது என்று புரியவில்லை .
இன்றாவது மன்னிப்பு கேட்டு பேசிவிட வேண்டும் என்று நினைத்த சித்தினாலும் எதுவும் பேச முடியாது தினறி போனான். அத்தனை கம்பெனிகளை சர்வ சாதாரணமாக வெற்றியோடு நடத்துபவனால் இன்று ஒரு பெண்ணிடம் பேச முடியவில்லை . வாயை திறந்தாலே காற்று தான் வந்தது, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து கீழே இறங்க பார்க்க இத்தனை நாள் பேசாது , ஏன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காது இருந்தவளின் குரல் தடுத்தது. தலையை புயல் வேகத்தில் திருப்பி அவனுடைய மகிமாவை பார்க்க இப்போதும் தலையை குனிந்தே இருந்தாள். அவளின் குறும்புகளும் துடுக்கான பேச்சுக்களும் அவளுடைய கண்ணாவை பார்த்தால் மட்டும் மறைந்து விடுகிறது. அவனும் திரும்பி நிற்க, இவளோ பேசாது அமைதியாய் நிற்பதை பார்த்து சரி இது தான் சந்தர்ப்பம் என்று மன்னிப்பு கேட்க சித் வாயை திறக்கும் முன் மகி அவளிடம் இருந்த பணத்தை அவன் முன் நீட்டியிருந்தாள்.
” இது..ல ஆறா..யிரம் இரு..க்கு , நா இந்த வீட்ல சாப்..பிடுறதுக்கு, இதே மாறி மாசம் மாசம் வந்து கொடுத்திடுறேன். இப்..போ..தைக்கு இதை வச்சுக்கோங்க எனக்கு வேற வேலை கிடைச்சதும் த..ங்குர..துக்கு வாடகை மாறி எதாச்சும் குடுக்கிறேன் ” என்று வார்த்தைகள் அனைத்தும் திக்கி திக்கி வெளியே வர , சுக்கு நூறாய் உடைந்து போனான் சித். தான் யோசிக்காது கோபத்தில் கூறிய வார்த்தை எங்கு வந்திருக்கிறது என நினைத்தவனால் இம்மியும் நகர முடியவில்லை . மகி நீட்டும் பணத்தையும் வாங்காது வேதனை கலந்த பார்வையுடன் மகியை பார்க்க அவளோ மறந்தும் கூட நிமிர வில்லை . அந்தரத்தில் மகியின் கைகள் பறக்க, அதை பார்க்க பார்க்க சித் உடைந்து போனான். இவ்வளவு நாள் வேண்டும் என்றே கோபத்தையும் அருவருப்பையும் காட்டியவனால் இன்று பேச கூட முடியவில்லை.
” இதை வாங்கிகோங்க… ” என்றவள் அவளுடைய கண்ணாவின் கையை பூவிற்கே வலிக்கும் அளவு மெதுவாக பிடித்து பணத்தை அவன் கையில் வைத்து விட்டு நகர போனவள் ஏதோ ஒரு உந்துதலில் சித்தின் விழிகளை பார்த்தவள் , அவன் கண்களில் இருந்து உவர்ப்பு நீர் வெளியே வர பார்த்தது, அதில் அத்தனை வேதனை கொட்டி கிடக்க, அவனை தோளோடு அணைத்து கொண்டு சரி செய்யவும் முடியாமல் அதை தவிர்க்கவும் முடியாமல் அதே இடத்திலே நின்றாள். இருவரும் அதே இடத்தில் நிற்க மௌனமே பேசிக் கொண்டது.
” அத்தை சாப்பிட கூப்டாங்க… ” என்று தன்னை சமன் படுத்தி கூறியவள் தன்னவன் விழிகளை மீண்டும் பார்க்க முடியாது விரு விருவென கதவை திறந்து வெளியே சென்று விட்டாள்.
மகி சென்றதும் தொப்பென்று மெத்தையில் அமர்ந்தவனின் மனதில் இருப்பதை கூற முடியாது. இத்தனை நாட்கள் லேட்டாக வருவதற்கு அவள் வேலைக்கு செல்வது தான் காரணமென அவனுக்கு இப்போது தான் தெரிந்தது. அதுவும் அவனால் வந்ததே ! நெருப்பில் இட்ட பஞ்சாய் அவன் மனம் எறிய , மகி கொடுத்த அனைத்து பணமும் சுவர்களில் பட்டு கீழே விழுந்திருந்தது.
” சித்தார்த் சாப்பிட வா ” என கிழிருந்து தன் தந்தையின் சத்தம் கேட்க, விழிகளில் ஒட்டி இருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கீழே இறங்கினான்.
சித்திற்கு பிடித்த உணவு பதார்த்தங்களை ரெடியாக சாப்பாடு மேஜையில் வரிசையாய் ராதாவின் கைவண்ணத்தில் இருந்தது.
” எப்போ கூப்பிட்டேன் … டக்குனு வந்து உட்காரு டா, சூடு ஆரிட போது” என்று தன் மகனை கடிந்து கொண்டு அவனுடைய தட்டில் உணவை நிரப்பினார்.
அவனின் கண்களோ மகியை தான் தீண்டி இருந்தது.
இவ்வளவு நாட்களாக சாப்பிடும் ஓரிரு வாய்களும் சித் கூறிய பேச்சுக்களில் உள்ளே செல்லாது தொண்டை குழியில் நிற்பவளுக்கு இன்று தான் நிம்மதியாக உணவை உண்ண முடிந்தது. அவ்வளவு தன்மானமும் ரோசமும் கொண்டவள் சித்திடம் மட்டும் எப்போதும் உருகி நிற்பாள். அவள் சாப்பிட்டு கொண்டு இருக்க, இப்போது சித்தால் உண்ண முடியவில்லை.
” பாத்தியா மகி உன்னோட அத்தை பண்ற வேலையை, அவ மகனுக்கு பிடிச்சதா சமைச்சு டேபிள நிறப்பி இருக்கா ” என்று நக்கலுடன் கேட்க, அவரை புரிந்து கொண்டவள் அவரோடு சேர்ந்து ஓட்ட ஆரம்பித்தாள்.
” ஆமா மாமா…ரொம்ப தான் பண்றாங்க , விடுங்க நா நாளைக்கு உங்களுக்கு பிடிச்ச சாப்பாடா சமைச்சு வைக்குறேன் ” என்று அவளும் கண்ணடித்து கூறி , இருவரும் சிரிக்க, ராதா தான் இருவரையும் முறைத்துக் கொண்டு இருந்தார்.
” மாமா அத்தை நம்மள ரொமான்ஸோட பாக்குறாங்க… ஹி ஹி ” என்று மகி மீண்டும் அவரை வாறி சிரிக்க, வாசுதேவனும் சத்தமாக சிரித்தார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சித்திற்கோ கொஞ்சம் அல்ல நிறையவே ஏக்கம் இருந்தது. அந்த சிரிப்பில் தன்னையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்களா என நினைத்தவன் மூளையை அவனது மனம் காரி துப்பி அமைதியாய் நடப்பவற்றை பார்த்துக் கொண்டு இருந்தான்.
” பாருங்க நீங்க கலாய்ச்சதும் என் பையன் சாப்பிட மாட்ரான்… நீ இவங்க சொல்றத கேட்கதடா , சாப்பிடு நீ ” என்று ராதா தன் மகனை கவனித்து கூற, இப்போது மகியின் முகத்தில் இருந்த சிரிப்பு அப்படியே வந்த தடம் தெரியாமல் மறைந்தது. அதையும் குறித்து கொண்ட மகிமாவின் கண்ணாவின் மனமோ உயிர் பிரியும் உடம்பாய் துடித்தது.
” இல்லை அம்மா எனக்கு வயிறு ஒரு மாறி இருக்கு… நீங்க சாப்பிடுங்க ” என்று அதற்கு மேலும் தாக்கு பிடிக்க முடியாமல் கையை கழுவி தன் அறைக்கு சென்றான். மகியின் மன்னவன் சென்றதும் அவளுக்கு மட்டும் எப்படி சாப்பாடு இறங்கும் அவளும் உணவை கொறித்து விட்டு கையை கழுவி சாப்பிட்ட இருவருக்கும் உணவை பரிமாற தொடங்கினாள்.
கீழே சிதறி இருந்த பணத்தை எல்லாம் எடுத்து அங்கிருந்த ஒரு குட்டி டேபிளில் வைத்தவன் அப்படியே மெத்தையில் சரிந்தான். ‘ நம்ம ரொம்ப தப்பு பண்ணிட்டோம் … எல்லாரும் சொன்ன அப்போ புரியல , இப்போ தான் தெரியுது என்னோட மகிமா ஓட குணம் ‘ என்று அவனுக்குள் நினைத்தவன் வாயில் இருந்து அவனை அறியாது ‘ என்னோட மகிமா ‘ என்று வந்தது. ‘ கண்டிப்பா இதை பேசி ஆகனும்… அவள வேலைக்கு போக விடமா தடுக்கனும், மன்னிப்பு கேட்கனும் , அவளோட நல்ல கணவனா இல்லாட்டியும் ஒரு நண்பனா பேசனும்’ என எல்லாத்தையும் செய்யனும் என்று நினைத்தவன் , பாவை நடந்து வந்ததும் அனைத்தும் ஊமையாய் போனது.
தன்னவனை பார்க்காது எப்போதும் போல் வந்து படிக்க அமர்ந்தாள் . அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் பேச வார்த்தைகளை தேடிக் கொண்டு இருந்தான்.
‘ சரி மகிமா படிக்கட்டும் … அப்பறம் பேசுவோம் ‘ என்றவன் அவளை பார்த்தவாறே படுத்திருந்தான். மகியை பற்றி தெரியாது அல்லவா? புத்தகத்தை புரட்டி எழுதிக் கொண்டே இருக்க, ஒரு மாத களைப்பு சித்தின் விழிகளை தழுவி அவனை உறங்க வைத்தது. ஒருவழியாய் இரண்டு மணி நேரம் படித்து முடித்து திரும்ப, தன் கண்ணா வின் அமைதியாக தூங்கும் முகம் அவளை வரவேற்றது. தன்னவன் முகத்தை பார்த்தால் மட்டும் அவன் கொடுக்கும் தொல்லைகளும் வெறுப்புகளும் கோபமும் அவளுக்கு தெரிவதில்லை. அப்படியே சோஃபாவில் படுத்தவள் தன்னை பார்த்திருந்த தன்னை கொள்ளை கொண்டவனின் முகத்தை பார்த்தவாறு உறங்கி போனாள்.
______
பூமியை உலா வந்த நிலவை முறைத்துக் கொண்டு கோபத்துடன் விழுங்கி தான் வெளியே வந்து கொண்டு இருந்தான் கதிரவன். வந்தவன் மகியை மட்டும் தொல்லை செய்யாமல் நேராக ஒழிந்து வந்து சித்தை மட்டும் எழுப்ப நினைத்து அவன் விழிகளில் பட்டான்.
சூடான கதிர்கள் விழிகளில் பட்டதும் கண்ணை கசக்கி கொண்டு எழுந்தான் மகியின் கண்ணா. எழுந்தவன் கண்களுக்கு விருந்தாக மகி அமைதியாக எதிரில் உறங்கி கொண்டு இருக்க, அதை பார்த்ததும் நேற்று நடந்தவை தான் கண் முன்னாடி வந்தது. குற்ற உணர்வில் இருந்தவனின் மனமோ காலையிலே கவலையோடு எழுந்தது. படுக்கையை விட்டு எழுந்தவன் மகி அருகில் வந்து நின்றான்.
குட்டியாக இருந்த பேபி ஹேர்ஸ் அனைத்தும் காற்றில் அங்கும் இங்குமாய் பறந்து கொண்டு இருந்ததை பார்த்து அதை அவளின் காதோரம் எடுத்து சொறுக போனவன் அவள் அசைந்ததில் இரு அடிகள் பின்னே சென்றான்.எதற்கு தேவை இல்லாத வேலை என நினைத்து அலுவலகத்திற்கு கிளம்ப சென்றான்.
சிறிது நேரம் கழித்தே வெய்யோன் அவளை எழுப்ப, மகியும் சேட்டை செய்யாது எழுந்து குளிக்க கிளம்பினாள்.
சாப்பிட அமர்ந்த சித்தோ கண்டிப்பாக இப்போது பேசி விட வேண்டும் என நினைத்தான். அனைவரையும் இழுத்து வந்து சாப்பிட அமர்த்தியவள், மகியும் அவனுக்கு சாப்பாடு பரிமாறி விட்டு சாப்பிட அமந்தாள். சாப்பிடும் போது பேசலாம் என நினைத்தவனால் தாய், தந்தை இருக்கவும் அதுவும் தடைபட்டு போக, வேற பேச்சை எடுத்தான்.
” அம்மா அமிழ பார்த்தேன் ” என்று சித் கூறியதும் வாய்க்குள் இருந்த உணவை விழுங்கி தன் கண்ணாவை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் வந்து மெய் மறந்து நிற்க, வாசுதேவனின் கடுமையான குரல் அவர்களின் நிலையை களைத்தது.
” அதை எதுக்கு இப்போ சொல்லுற…அவ யாரோ நம்ம யாரோ. திரும்பி முதல இருந்து காதல் , கருமம்னு ஆரம்பிக்காத . எனக்கு வர கோபத்துக்கு அவ்வளவு கடுப்புல இருக்கேன் அமிழ் மேல. இப்போ அமைதியா சாப்பிடுறது தான் நல்லது. ” என்று அவர் கொஞ்சம் கத்தவே செய்தார். அதில் மகியின் முகம் அப்படியே வாடி போனது. மகி இருப்பதை மறந்து வாசுதேவன் உரைத்து விட , தன் மனைவி அதிர்ச்சியாக பார்ப்பதை பார்த்து தான் மகி இருப்பதை உணர்ந்தார். சித்தும் இதை எதிர் பார்க்க வில்லை , அமிழை பற்றி பேசினால் மகி பேசுவாள் என்று நினைத்து அவன் பேச, வாசுதேவன் பேச்சை எதிர் பார்க்கவில்லை தான்.
” ஏங்க … ” என்று ராதா கூறவும் அவரும் அமைதி ஆனார்.
” நா இப்போ காதல பத்தி பேசல அப்பா…இப்போ அமிழ காதலிக்குற உரிமை கூட எனக்கு இல்லை. ஏனா அவ வேற ஒருத்தரோட மனைவி ” பட்டென்று கூற, அனைவரும் இப்போது அதிர்ச்சி ஆகினர். சகோதரியை பற்றி பேச வாய் திறந்தவளை ராதாவின் பேச்சு கலைத்தது.
” விடு சித் , எது நடக்கனுமோ அதுதான் நடக்கும் ” என்று அவர் வருத்தோடு கேட்க, அன்று குடும்பம் பெற்ற அவமானத்தை தாங்க முடியாத வாசுதேவனோ வார்த்தைகளை கொட்ட ஆரம்பித்தார்.
” நிஜமாவா சித்தார்த்…உன்ன லவ் பண்ணவ வேற ஒருத்தன எப்படி கல்யாணம் பண்ணிகிட்டா . அவ்வளோ தான் அமிழ் ஓட லவ்வா , எப்படி தான் இப்படி மாறுதோ . அப்படி என்ன அவ கல்யாணம் பண்ணவகிட்ட இருந்திச்சோ ” என்று கூறியதும் மகி தன் கைகளை கழுவி கல்லூரி செல்வதற்காக வெளியே சென்றுவிட்டாள்.
” ஏங்க..மகி இருக்குறத மறந்துடிங்கலா… பாருங்க அவ சாப்பிடாம கூட போறா. அவளே எப்பவாச்சும் தான் ஒழுங்கா சாப்பிடுறா ” என்று வருத்தமாக அவர் கூறி ராதாவும் கைகளை கழுவி சென்றார். அதில் சித் தான் தலையில் அடித்து கொண்டான், எப்படியாவது மகியை தன்னிடம் பேச வைக்க பிளான் போட , இப்போது அவை எல்லாம் சொதப்பி அவளை கவலை செய்ய வைத்தது தான் மிச்சம்.
” அப்பா … நா மகிகிட்ட அவளோட அக்காவ பத்தி மட்டும் தான் சொன்னேனே தவிர, எனக்குள்ள வேற எந்த எண்ணமும் இல்லை ” என்றவன் தானும் கையை கழுவி அலுவலகம் சென்றான். இப்போது வாசுதேவனுக்கு தான் ஓவராக போய்விட்டோமோ என்றிருந்தது.
கல்லூரி வந்து அமைதியாக இருந்தவளை பார்த்து இரு தோழிகளும் விசாரித்தாலும் பதில் உரைக்காது இருந்தாள்.
” மகி என்ன தான் ஆச்சு … அந்த சித் எதாச்சும் திட்டுனானா ” என்று சௌமியா ஒருபுறம் கத்த , எப்படி கேட்டாலும் அவளாய் கூறும்வரை எதுவும் பேசமாட்டாள் என தெரிந்த சந்தியா கேட்டு கேட்டு அமைதியாக இருந்தாள்.
நாள் முழுவதும் அவள் அப்படியே இருக்க, இருவரும் அவள் போக்கில் விட்டு விட்டனர். கல்லூரி முடிந்ததும் தோழிகளிடம் தலை அசைப்பை மட்டும் கொடுத்தவள் அவளுடைய வேலைக்கு கிளம்ப தயாரானாள். இன்று அதிக வேலை இருந்ததால் நேரம் எட்டை தாண்டி இருக்க, அவள் நினைத்து பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது.
பிரியாமல் தொடரும் 😍💋….
உங்களின் புல்லட் வெடி 🎉
Sambavamaaaa🙄🙄
😜😁😁
Chandru va kanom ☹️☹️☹️
Waiting for next episode ..😍
Ahaan varuvaan 😂.. thankyou sahi 🥰🥰❤️
இப்ப வந்து சோககீதம் வாசி…இதமெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி யோசிச்பிருக்கனும்…அவள என்ன பாடு படுத்தின…அவள் தன்மான சிங்கம் டா….அதான் சம்பாலிச்சு உன்கிட்ட பணத்தை குடுத்துட்டாள்…
அவள பேசவைக்க உனக்கு வேற வழியே கிடைககலயா….அமிழ பத்தி பேசி…உச்கப்பாவும் பேசி இதெல்லாம் தேவையா…
என்னது சம்பவமா….மகிக்கு ஏதும் ஆப்த்து வந்துட கூடாது….
மிக்க நன்றி சகி 🥰😁❤️❤️
Sambavama😳😳😳😳😳 enna sambavam yaaruku sambavam
காத்திருக்கவும் 😂😂
Ipo feel panni enna aga pothu sidh ,ethu pannalum plan panni pannanum plan pannama panna ipdi tha nadakum pavom Mahi saptama poitaa☹️
நன்றி சகி 🥰😁..நாளைக்கு சாப்பிட வச்சிரேன் 😂😂😂
Ava oru madam velaiki ponathu kuda unnala terunjukka mudiyala… Unnala epdi mahima lv pannunana teriyala pa… Achoo anga ena achu nu teriyalaye…
நன்றி சகி 🥰🥰😁