அத்தியாயம் இருபத்து ஒன்று
கூட்டம் இல்லாத பேருந்தில் ஏறலாம் என பல நிமிடங்களாய் வந்த பேருந்தை எல்லாம் ஏறாமல் கோட்டை விட்டாள் மகி . நேரம் ஆக ஆக தான் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது ‘ ஐயோ ஃபிரியா பஸ் வராது போல இருக்கே ? அதான் எல்லாரும் ஓடி ஓடி ஏறுறாங்காளா ! கடவுளே நா எப்படி ஏறுவேன் ‘ என தனக்குள்ளே புலம்பியவள் , அடுத்து வரும் பேருந்தில் கண்டிப்பாக ஏற வேண்டும் என்று சபதம் இட்டுக் கொண்டாள். பேருந்தும் வந்து நின்றது பாவம் மகியால் தான் ஏற முடியவில்லை . எங்கே முன்னே வேகமாக சென்றதும் இடித்து இடித்து பின்னால் தள்ளிவிட்டு அவர்கள் சென்றுவிட, உதடு பிதுங்க மறுபடியும் அடுத்த பஸ்ஸில் கண்டிப்பா ஏற வேண்டும் என நினைத்து மீண்டும் தனக்குள் சபதம் இட்டாள். கொஞ்சம் நேரம் அவளை காத்திருக்க வைத்தே பேருந்து வந்ததும் இந்த முறை ஓடி சென்று ஏறிவிட்டவள் முகத்தில் அவ்வளவு சிரிப்பு , எதையோ சாதித்ததை போல முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டவள் , தன் அத்தையிடம் கூறவேண்டிய பொய்களை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள் . சிறிது நேரத்தில் வீடு வந்ததும் மணியை பார்க்க அது ஏழரையில் தனது முள்ளை வைத்துகொண்டு நிற்க , மகிக்கு தான் ஸ்டிராங்கான பொய் தேவைப்பட்டது .நேராக வீட்டின் உள்ளே நுழைய வரவேற்பறையிலே ராதா நின்றுக் கொண்டு இருந்தார் . மகியை பார்த்து வந்ததும் முறைத்துக் கொண்டே வர, இவளுக்கு தான் சற்று பயமாக இல்லை இல்லை பதட்டமாக இருந்தது . இப்படி பட்ட மாயியாரை பார்த்து மகியாவது பயப்படுவதாவது . பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டவள் அமைதியாக நிற்க , அவளை பார்த்து அடிப்பது போல வேகமாக வந்தவர் அருகில் வந்ததும் அவளை கட்டிக் கொண்டார். மகி புரியாமல் முழிக்க
” ஏன் மகி லேட் ஆகும்போது சொல்லுறது இல்லையா , ரொம்ப பயந்துடேன் டா, ஒரு போன் கூட பண்ண மாட்டியா அட்லீஸ்ட் இனிமே போனையாவது ஆஃப் பண்ணாத ” என்று கூறியவர் குரலில் பயம் தெளிவாக தெரிந்தது. இந்த காலத்தில் பெண்களை வீட்டை விட்டு அனுப்பி அவள் திரும்பி வரும் வரை நிம்மதி இருக்காதே ! . அவரின் இந்த செயல் மகி மனதில் அவருக்கான உள்ள அவருடைய இடம் மேலும் உயர்ந்தது, இந்த காலத்தில் இப்படியும் இன்னும் சில மாமியார்கள் மருமகளை மகளாய் பார்த்து கொள்கிறார்களே என கொஞ்சம் வியப்பாகவும் தனக்கும் அப்படி பட்ட ஒருவர் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தது .அவரிடம் பல்லை காட்டியவள்
” அது அத்தை இனிமே இப்படி பண்ண மாட்டேன் அத்தை . போன் ஒன்னும் நான் ஆஃப் பண்ணல… சார்ஜ் இல்லை, அத்தை கொஞ்சம் ரிசர்ச் அண்ட் புராஜெக்ட் பண்றேன் அத்தை அதான் இனிமே வர லேட் ஆகும் ” என்று அவரிடம் கூறியவள் மனதில்
‘ உங்க பையன் மனசுல மட்டும் தான் இருந்துருந்தேனா இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது அத்தை … நா போன ஜென்மத்தில ரொம்ப பாவம் செஞ்சு டேன் போல , அதான் என் கண்ணாவோட காதல் எனக்கு கிடைக்காமலும் அது கண்ணாக்கு தெரியாமலும் என்னோட காதல் பிறக்குறதுக்கு முன்னாடியே அழிஞ்சிடுச்சு. இனியும் அவர் பணத்துக்காக தான் அவரை கல்யாணம் பண்ணிருக்கேனு சொல்லறத என்னால தாங்க முடியாது அத்தை ‘ என மனதில் நினைத்த மகியின் சிந்தனைக்கும் முகத்தில் அவள்காட்டும் சிரிப்பிற்கும் கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் இருந்தது.
அவரிடம் இருந்து பிரிந்தவள் நேராக தன் அறைக்குச் சென்று உடையை மாற்றி மறுபடியும் கீழே வந்து கிட்சனுள் நுழைந்தாள். இரவு உணவை சமைக்க வந்தவளை ராதை எவ்வளவு திட்டியும் கேட்க வில்லை
” மகி இப்போ தானே வந்த …போ ரெஸ்ட் எடு, நா இன்னைக்கு சமைக்கிறேன் ” என்று ராதா கெஞ்சிக் கொண்டு இருக்க, அவளோ மசிவதாய் தெரியவில்லை.அவர் கூற கூற எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் தானே சமைத்து முடித்து அடுக்களையை விட்டு வெளியேறினாள். சிறிது நேரம் கழித்து வாசுதேவன் வந்ததும் இருவருக்கும் பரிமாறி விட்டு தானும் ஓரிரண்டு வாய் திணித்து விட்டவள், படிப்பதற்காக கிளம்பி விட்டாள்.
சித் அலுவலகம்:
” அப்பாடா ஒருவழியாய் எல்லா வேலையும் முடிஞ்சுது டா …இனி ஒருவாரம் நிலத்தில தண்ணீ விட்டு விதையை போட வேண்டியது தான் ” என்று அதீத களைப்பில் கூறினான் சந்துரு . காலையில் சோகமாக சென்ற சித் , தன் மனதை மாற்றும் பொருட்டு இன்றே தொடங்கியிருந்தான் அவனது பயிரிடும் வேலைகளை காலையிலிருந்து சந்துருவை உயிரை வாங்கி விட்டான் வேலை சொல்லியே .
“மச்சான் இன்னும் என்ன என்ன வேலை டா இருக்கு ” என்றவன் கேள்விக்கு பதில் கூறாதவன் எண்ண அலைகளில் இப்போது மகியே இருந்தாள் . எவ்வளவு தன்னை வேறு வேலைகளில் ஈடு படுத்தினாலும் மனமோ நேற்று பேசியதும் அதற்கு மகியின் கண்களில் தெரிந்த ஏக்கம் மட்டுமே திரும்ப திரும்ப நியாபகம் வந்தது. நண்பன் பதில் கூறாது இருக்க சித்தை போட்டு உலுக்கிய சந்துரு , தன் மச்சானின் நடவடிக்கைகளை பார்த்து குழம்பி போனான் .
” மச்சா என்ன டா ஆச்சு ?… கேட்டது எதுக்கும் பதில் சொல்ல மாட்ற ” என்று அவனை பார்த்து புரியாது கேட்க, சித்திற்கோ தன் செயல்களை பார்த்து குழப்பமாக இருந்தது .
” இன்னும் மண்ணை ரெடி பண்ணனும் டா …நம்ம கண்டுபிடிச்ச நெல்லுக்கு கொஞ்சம் ஏத்த மாறி மண்ணை தயார் பண்ணனும் டா ” என்று சித் கூறினான் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது.
ஒரு பயிரை எடுத்ததும் அப்படியே மண்ணில் போட்டு விட முடியாது அதற்கு முதலில் நிறைய வேலைகள் செய்ய வேண்டும் . அதிக அளவு களிமண் மற்றும் கரிமப் பொருட்கள் கொண்ட நல்ல நீர் தக்கவைப்பு திறன் கொண்ட மண் நெல் சாகுபடிக்கு ஏற்றது.
களிமண் நிலங்கள் நெல் சாகுபடிக்கு மிகவும் பொருத்தமானது.
இத்தகைய மண் நீண்ட காலம் நீரை தேக்கி, பயிர்களை தக்க வைக்கும் திறன் கொண்டது.
அரை நீர்வாழ் பயிராக இருக்கும் நெல், துணை-இணைப்பு நிலைமைகளின் கீழ் சிறப்பாக வளரும்.
நெல் பல்வேறு உற்பத்தித்திறன் கொண்ட அனைத்து வகையான மண்ணிலும் பயிரிடப்படுகிறது.
நெல் பயிரிடப்படும் முக்கிய மண் குழுக்கள் ஆற்று வண்டல், சிவப்பு-மஞ்சள், சிவப்பு களிமண், மலை மற்றும் துணை மலை, தேரை, லேட்டரைட், கடலோர வண்டல், சிவப்பு மணல், கலப்பு சிவப்பு, கருப்பு, நடுத்தர மற்றும் ஆழமற்ற கருப்பு மண்.
இது 5.5 முதல் 6.5 வரை pH வரம்பைக் கொண்ட மண்ணில் நன்றாக வளரும்.
செய்ய வேண்டிய வேலைகளை மேலோட்டமாக சந்துருவிடம் கூறியவன் தன் வீட்டிற்கு கிளம்ப ஏதோ மாறியாக இருந்தது . வீட்டிற்கு சென்று மகியின் முகத்தை பார்க்கவே வெட்கமாக அதை விட கொஞ்சம் அசிங்கமாகவே இருக்க, வீட்டிற்கு செல்லவே யோசனையாக இருந்தது.
” சரி மச்சான் நான் கிளம்புறேன் , இல்லேன்னுவை எங்க அம்மா சப்பாத்தி கட்டையோட நிப்பாங்க. மணி பாறு ரொம்ப லேட்டாச்சு , நீயும் போ ” என்று தன் நண்பனிடம் இருந்து விடைபெற்றவன் தன் வீட்டிற்கு கிளம்பினான்.சித்தும் தன் மனதை சமன் படுத்தி வீட்டிற்கு செல்ல , தாயே வரவேற்றார். திருமணம் நடந்து நாள் முதல் மகியே அவன் வரும் வரை காத்திருந்து தான் சமைத்த உணவுகளை அவன் திட்டினாலும் பரிமாறி தன் கண்ணா உண்ணும் அழகை ஒழிந்து இருந்து ரசித்து தூங்க செல்வாள், இரண்டு நாட்களாய் எல்லாம் மாறி இருந்தது. தன் தாயிடம் பசி இல்லை என கூறியவன் தன் அறைக்குச் செல்ல மகி ஒரு டேபிளில் புத்தகத்தை புரட்டி எழுதி கொண்டு இருந்தாள் . தன்னை ஒரு முறையாவது திரும்பி பார்ப்பாளா என நினைத்தவன் எண்ணம் வீணாய் போனது . தன் கண்ணா வருவதை அவன் வரும் காற்றை வைத்தே கண்டு கொள்பவள் , இன்று அவன் அவ்வளவு சத்தம் போட்டு நடந்து வந்தும் இம்மியும் திரும்பி பார்க்க அவளின் காஃபி நிற விழிகளுக்கு அனுமதி தர மறுத்தாள் .
வந்தவன் தன் உடைகளை மாற்றி மெத்தையில் வேண்டும் என்றே ஒரு ஓரமாக படுத்து கொண்டான், மகி ஒருவேலை வருவாளோ என நினைத்து. அவனால் உடைந்து இருந்த மனம் கொண்டவள் கண்டிப்பாக வரமாட்டாள் என சித்திற்கு தெரியவில்லை . அவள் அமர்ந்திருப்பதை பார்த்தவன் அவ்வாறே உறங்கி போனான்.
கல்லூரி முடிந்ததும் வந்திருந்தால் இன்னேரம் அனைத்து வேலைகளையும் முடித்து படுத்திருப்பாள். எங்கே , இன்றே வேலைக்கே சென்றே தீருவேன் என்று கூறி சௌமியா பார்த்திருந்த ஒரு சின்ன கம்பெனியில் டைபிங் வேலைக்கு சேர்ந்து விட்டாள். அவர்களும் மாதம் ஏழாயிரம் என கூறியதும் மகிக்கு போதுமானதாய் இருந்தது. வேலை முடித்து வந்தவள் வீட்டிலும் வேலை செய்து இப்போது தான் படிக்கவே ஆரம்பித்தாள் . இவள் இருக்கும் ஆர்வம் தான் தெரியுமே படிக்க ஆரம்பித்தாள் அவள் வீட்டில் மகியின் அப்பா கதிரவன் வந்து கதவை தட்டும் வரை எதையாவது படித்துக் கொண்டாவது அல்லது பார்த்து கொண்டு இருப்பாள்.இன்றும் படித்து கொண்டே இருந்தவள் தலையை டேபிலில் சாய்ந்தவாறு அப்படியே உறங்கி போனாள்.
____
காலை கதிரவன் தன் வென் கதிர்களை உலகிற்கு தந்து அனைவரையும் எழுப்ப , ஒரு ஜீவன் மட்டும் களைப்பில் இன்னும் உறங்கி கொண்டு இருந்தது.
தன் விழிகளை கசக்கி கொண்டு எழுந்தவன் அமர்ந்தபடி உறங்கிய மகி கண்ணில் பட்டாள்.
‘ இது தான் நல்லது சித், மகி உன்ன விட்டு தள்ளி இருக்கட்டும்… நீ ஆசை பட்டதும் அது தான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவள விட்டு பிரிஞ்சுரனும். இப்போ நம்ம கவனம் எல்லாம் நீ கண்டுபிடிச்ச விதையை சாகுபடி பண்றதுல தான் இருக்கனும் ‘ என அவன் மூளைக்கு கட்டளை இட்டாலும் அவன் விழிகளோ அமர்ந்து உறங்களிடம் தான் இருந்தது. ஒருமுறையாவது தன்னை பார்க்க மாட்டாளா என்று ஏங்கியது . அவன் மனம் மகியின் பக்கம் சாய்வதாய் உணர்ந்தவன் தன்னை தான் அசிங்கமாய் உணர்ந்தான். ஏற்கனவே அமிழை காதலித்தவன் அவள் விட்டு சென்றதும் எப்படி வேறு ஒரு பெண்ணை அதும் ஒரு மாதத்தில் பிடிக்க தொடங்கும் என்று தன்னையே காரி துப்பி, மகியிடம் இருந்து தன் கண்களை கஷ்டப்பட்டு பிரித்தவன் குளிக்க சென்றான்.
_____
குளிருக்கு இதமாய் இருந்தது அந்த சிம்னி . தன் கைகளை அதில் வைத்து தேய்த்து தன் கண்ணத்தில் அவ்வப்போது ஒற்றி எடுத்தான் சந்துரு. குளித்து முடித்து ஒரு அழகான அடர் சிவப்பு நிற சேலையில் ஜொலித்து பெண்களுக்கு இருக்கும் நளினத்துடன் மெல்ல மெல்ல அடிகளை வைத்து நடந்து வந்தவளை பார்த்த சந்துருவின் மனமோ மோக நிலையில் இருந்தது. அழகு சிற்பமாய் நடந்து வந்தவளை தன் அருகே இழுத்து அமர்த்தி கொண்டவன், இரசனையுடன் அமர்ந்திருந்த சந்தியாவின் முகத்தை பார்க்க, அவளோ தன் விழிகளை தரையை நோக்கி பயணித்திருந்தாள். அந்த இதமான நெருப்பில் தன் உள்ளங்களை சிறிது நேரம் வைத்திருந்தவன் தன் அருகே அமர்ந்திருந்த சந்தியாவின் கண்ணங்களில் வைக்க , அவள் உடம்போ சிலிர்த்தது. தாடையை நிமிர்த்து சந்தியாவின் இதழ் நோக்கி பயணிக்க
” தங்க மாரி ஊதாரி பூட்டுக்கின நீ நாறி
ரூட் எட்டு கோடு போட்டேன் கோடு மேல ரோட்ட போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன் ”
என்ற பாட்டு காதை கிழிக்க, அடித்து பிடித்து எழுந்தவன் தன் செல்போனை உடைக்கும் வெறியில் பார்த்தான்.
” பொம்பள சோக்கு கேக்குதா கோபி ” என்று அவன் செல்போன் கேட்பது போல இருந்தது. தனது அழைப்பேசியை ஓரம் போட்டவன் சலிப்புடன்
‘ சீ கனவுல கூட காதலிக்க மாட்டோம் போல இருக்கே’ என்று வாய் விட்டு புலம்பினான். இருமுறையும் கனவில் நன்றாக காதலிக்காத வெறியில்.
சித் அறை :
குளித்து முடித்து அறையினுள் நுழைய அவன் போகும் போது எப்படி உறங்கி இருந்தாலோ அதே நிலையில் இன்னும் மகி உறங்கி கொண்டு இருந்தாள்.
‘ இவளுக்கு காலேஜ் வேற இருக்கே ! இன்னும் தூங்குறாளே ‘ என நினைத்தவன் வேண்டும் என்றே கதவை வேகமாக ‘ பட் ‘ என அறைந்தான். அதில் சித் நினைத்தது போலவே மகி பதறி எழுந்தாள். விரு விருவென புத்தகத்தை மூடி தன் பையினுள் வைத்தவள் அவரசமாக குளியலை போட சென்றாள். அந்த அறையில் இருந்த அவளின் கண்ணாவை மறந்தும் கூட பார்க்கவில்லை. கடைசியில் சித் தான் தலையில் அடித்து கொண்டான்.
‘சீ இப்போ தானே அவ விசியத்தில தலையிட மாட்டோம்னு முடிவு பண்ண ‘ என மீண்டும் தன்னை திட்டியவன் அலுவலகத்திற்கு கிளம்ப தயாரானான்.
காக்கா குளியலை போட்டு வந்த பாவையவளோ கீழே சென்று தன் சமையல் கலையை காட்ட தொடங்கினாள். ராதா மகி பரபரப்பாக இருப்பதை பார்த்து அவளிடம் தான் பார்த்து கொள்ளுமாறு கூறினாளும் கேட்கும் அவரின் பேச்சை கேட்பதில்லை.சமைத்து முடித்தவள் அனைவருக்கும் பரிமாறி அவளுடைய வேலைகளை தொடங்கினாள், வேறு என்ன கல்லூரிக்கு கிளம்புவது தான். அவள் ஓட்ட பந்தையத்தில் இருக்கும் குதிரையாய் அனைத்து வேலைகளையும் முடித்து பஸ்ஸை பிடிக்க ஓட , அவளுக்கு களைப்பாக இருந்ததோ இல்லையோ ? அதை பார்க்கும் ராதாவிற்கும் வாசுதேவனுக்கும் களைப்பாய் இருக்கும். எதாவது அறிவுரை கூறினாளும் அதை காதில் வாங்கி காற்றாய் விட்டு தன் வேலைகளை செய்து முடித்து சக்கரம் கட்டிய வாகனமாய் ஓடுவாள்.
கல்லூரிக்கு சென்றவளுக்கு ஒரே நாளில் அனைத்து வேலைகளையும் செய்வது களைப்பாக தான் இருந்தது. இருந்தும் செய்து தானே ஆக வேண்டும் , தன் எடுத்த கொள்கை வேறு கண் முன் வந்து போக, களைப்பை ஓரம் தள்ளி வகுப்பை கவனிக்க ஆரம்பித்தாள் .
அலுவலகத்திற்கு சென்றவனுக்கு அவ்வப்போது மகியின் நியாகம் வரும்போது , தன்னை திட்டி வேலையில் கவனம் செலுத்தி கொண்டு அந்த நினைப்பை மூட்டை கட்டி வைப்பான் . பல நேரம் அவன் பேசியதிற்கு மன்னிப்பு கேட்க நினைப்பான் , அவனின் முட்டாள் மூளையோ அமிழை மனதில் வைத்துக் கொண்டு அதையும் மறுக்க செய்தது.
கல்லூரி முடிந்ததும் அரக்க பறக்க தன் தோழியிடம் இருந்து விடை பெற்றவள் தன் வேலைக்கு செல்ல தயாரானாள். இப்படியே நாட்கள் நகர்ந்து ஒரு திங்களின் இறுதியில் வந்து நிற்க, எதிர்பாராத மாற்றம் உருவானது.
பிரியாமல் தொடரும் 😍💋……
உங்களின் புல்லட் வெடி 🎉
Ena panrathu chandru namaluku kudupana illa polaa🙂🤦🏻♂️
🤣🤣🤣.. நன்றி சகா 🥰🥰
Chandru dream la mattum thaan romance panna mudiyum pola 🤣🤣🤣 Fast ah chandru love success aahga pray pannrean 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🤣🤣🤣
இந்த சித்து கூட சேர்ந்த சகவாசதோசம் உன் வாழ்க்கையில கனவுல கூட ரொமான்ஸ் பண்ண வக்கில்லாம போச்சே சந்த்ரு….
ஏன் சித்….உன் மனசு என்ன கல்லா…இதுவரைக்கும் மகி உன்ன லவ் பண்ணது உனக்கு தெரியாது…. உன்ன பொறுத்தவரைக்கும் அமிழ் கல்யாணமண்டபத்தை விட்டு போனதால மகிய கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க அவ்வளவு தான்….அந்த மனிதாபிமானம் கூடவா உனக்கு இல்ல….அவளோட விருப்பத்தை கூட கேக்காம அவங்க வீட்டு ஆளுங்க உனக்கு அவள கல்யாண பண்ணி வச்சாங்களே….உன் பேரும்…உன் வீட்டு கௌரவமும் கெடக்கூடாதுனு அவள் வாழ்க்தைய பணயம் வச்பாங்களே அந்த நன்றி கூடவா இல்ல…அவள எவ்வளவு தஷ்ட்ப்படுத்த முடியுமோ அவ்வளவு கஷ்ட்ப்படுத்துற சித்….
உண்மை தெரியவரும் போது ரொம்ப வருத்தப்படுவ…
🤕🤕🤕🤕🤕….நன்றி சகி 🥰😁❤️❤️
Antha maatram enna vaa irukum🤔🤔 chandru tha pa pavom dreams la kuda duyet illaye so sad 😏😏avanoda life ipdiye dreams la tha poidum polaye……….sidh ni poye mahi ta pesita Ella problem solve agitum atha vittu tu polambi yen thavikira poye olunga pesitu……… waiting for next epi ❣️❣️❣️
நன்றி சகி 🥰🥰🥰😁🥰🥰😁❤️
Pavam pacha pullaya dream la kuda love panna vida matinguranga pa…..
😂😂😂😂… நன்றி சகி 🥰🥰