Loading

அத்தியாயம் பதினெட்டு 

        இப்படியே நாட்கள் கழிய மகியும் அவ்வபோது சித்தை சீண்டும் பொருட்டு ஏதாவது செய்து அவனிடம் முறைப்பை பரிசாக பெற்றுக் கொள்வாள். கொஞ்சம் கொஞ்சமாய் சித்தின் மனம் மகியின் பக்கம் சாய்வதை மகியாள் நன்றாக உணர முடிந்தது. எப்போதும் தன்னை முறைத்து பார்ப்பவன் இப்போதெல்லாம் சிரிப்பு இல்லை என்றாலும் பார்த்து முறைப்பதில்லை. மகி சாப்பிடவிட்டாள் தன் தாயிடம் சாப்பிட சொல்லுமாறு கூறி செல்கின்றான்,  இதுவே மகியின் மனதிற்கு இதமாய் இருந்தது. இந்த நிம்மதியையும் பாலைவனத்தில் உள்ள காணல் நீர் போல இருந்த இடம் தெரியாமல் மறையும் நாளாய் வந்தது ஒரு நாள்.

_____

காலையில் எழுந்தவள் எப்போதும் போல் குளித்து காஃபி போட செல்ல , ஏற்கனவே ராதா அனைத்து வேலையையும் முடித்து வைத்திருந்தார் .

” ஏன் அத்தை நீங்க எல்லாம் பண்ணிங்க ” என்று கொஞ்சம் கோபத்தோடு கேட்பது போல் கேட்டு முகத்தை திருப்பிக் கொள்ள, அவரோ சிரிப்புடன் அவளை நோக்கி 

” என்ன மகி இன்னைக்கு போய் சுடி போடுற .. போய் சேரி கட்டிட்டு வா ” என்று  கூற , எந்த விசேஷமும் இல்லாமல் எதற்காக சேலையை உடுத்த கூறுகிறார் என குழப்பமடைந்தாள் . 

” என்ன மகி போ தலைக்கு குளிச்சிட்டு ,  டிரைஸை மாத்திட்டு சீக்கிரம் வா மா ” 

மகி ” இன்னைக்கு என்ன ஸ்பெஷல் அத்தை ” 

” உன்கிட்ட நா சொல்லலையாடா ?இன்னைக்கு நம்ம வீட்ல சுமங்கலி பூஜை ஏற்பாடு பண்ணிருக்கோம் டா . இன்னும் கொஞ்சம் நேரத்தில்  தொடங்கனும் டா சோ டக்குனு ரெடி ஆகு டா ” என்று ராதா கூறியதும் மீண்டும் குளிக்க வேண்டுமா என்ற சோம்பலுடன்தன் அறைக்கு சென்றாள் . சித் தூக்கத்தை கெடுக்காமல் பூனை போல் சத்தம் போடாமல்  அடிகள் வைத்து மெதுவாக குளியலறையில் நுழைந்தாள் . 

தன் மொபைல் அலாரம் சத்ததில் தூக்கம் கலைந்த சித் விழிகளை கசக்கி கொண்டு அதை நிறுத்தியவன் . இன்னும் குளியலறை உள்ளே பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து வேறு அறைக்கு குளிக்க சென்றான் . குளித்து முடித்தவன் கீழே சென்று ஒரு காஃபியை மட்டும் குடித்து விட்டு தன் அறையை நோக்கி பயணித்தான்.

குளித்து முடித்து வெளியே வந்தவள் ரவிக்கை மற்றும் பாவாடையை எளிதில் அணிந்து கொண்டாள் , ஆனால் சேலையை எவ்வாறு கட்டிடனும் என்று தெரியாமல் யூடியூப் வீடியோவை பார்த்து கட்டுகிறேன் என்று பெயரில் காமெடி செய்து கொண்டு  கலட்டி கலட்டி மாட்டிக்கொண்டு  களைத்து போயிருந்தாள் . கடுப்புடன் சந்தியாவிற்கு வீடியோ கால் அடித்து பேசலாம் என நினைத்தவள், ஏற்கனவே கையை அறுத்து கொண்டு இருப்பவளை தொல்லை செய்ய வேண்டுமா என தோன்றியதால் தன் மற்றொறு தோழி சௌமியாவிற்கே போனை போட்டாள் .  அவள் கூற கூற கட்ட ஆரம்பித்தாள் . 

” இப்படி இல்லை கட்டவிரலையும் இன்டெக்ஸ் விரலையும் மட்டும் வச்சு மடிப்பு எடு டி ” என்று பொறுமையிலந்து சௌமியா  கத்த 

” அடியேய் கத்தாத டி … அத்தை வந்துர போராங்க . ” என்றவள் மடிப்பை எடுக்கவும் வராமல் தினறிக் கொண்டு இருந்தாள்.

” வாய் மட்டும் பேச தெரியுதுல  ஒழுங்கா சொல்லற மாறி செய்யேன் டி ” என்று சலிப்புடன் கூறினாள். பின்னே பல முறை எப்படி கட்ட வேண்டும் என கூறி விட்டாள் ஆனாலும் மகிக்கு வரவில்லை .

” இரு டி… இப்படியா … இப்படித்தானே ” என்று பொறுமையா கட்டும் போதே வந்திருந்தான் அவளது மணவாளன், வந்தவன் அப்படியே  தன்னவளின் கோலத்தை பார்த்து கண்கள் விரிய நின்றான் . ஈர கூந்தலில் இருந்து சொட்டு சொட்டுக்ளாய் நீர் துளிகள் மகியின் முதுகை இதமாக ஒட்டி உருள,  செவியிடம் கிடந்த சிமிக்கியோ அவள் சௌமியாவிடம் தலையை ஆட்டி ஆட்டி பேச அதுவும் முன்னும் பின்னும் ஆடியது . கால் இரண்டும் இடத்தை விட்டு நகர மறுக்க தன்னை கட்டுப்படுத்தி அவள் அருகே சென்றான் . ஏனோ அவன் மனம் மகி தான் தன்னவள் என்ற உணர்வை எடுத்து கூறியதோ என்னவோ?  அவள் அருகே சென்று பின்னிருந்து  மெல்லமாக இடையோடு அனைத்துக் கொண்டான்.  தட்டு தடுமாறி தெரியாமல் எடுத்து வைத்த பாதி மடிப்பும் தன்னவன் கை பட்டதும்  நலுவி கீழே விழுந்தது . 

இவர்களின் கோலத்தை பார்த்து சௌமியாதான் கடைசியில் கண்களை மூடிக்கொண்டு அழைப்பை சிரித்துக் கொண்டே  துண்டித்தாள் . மகி ஏன் சித் மாறிவிட்டதை தன்னிடம் கூறவில்லை என்று செல்லமாக கோபம் கொண்டு , இன்று கல்லூரியில் பார்த்துக் கொள்ளலாம் என்று தன்னுடைய வேலையை தொடர்ந்தாள் . 

மகியை ஒட்டி நின்றவனோ அவள் சங்கு கழுத்தில் தன் மூச்சுக்காற்றை படற விட்டான் .  இளமை தீய் அவனுள் எரிய, இறுக்கி அணைத்து கொண்டான். தன் மனதை சித்திடம் எப்போதோ பரிகொடுத்தவளுக்கோ அவனின் தொடுதலும் தன்னை மீறி மயங்கி அவனிடம் நின்றது . இருவரின் மூச்சுகளும் சூடாக வெளியே வர , இரு உடம்பும்  இதமாக கொதித்தது . 

 மகிமை மெல்லமாக திரும்பி அவள் விழிகளை பார்க்க,  இள நீள விழி தன் விழிகளுக்குள் வர, சட்டென மகியை தன்னிடம் இருந்து விலக்கினான். இவ்வளவு நேரம் இருந்த மோக நிலை கலைந்து முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மகியின் முகத்தை பார்த்தான் . தன்னவனின் தள்ளிததும் தான் புரிந்தது எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என்று . வேக வேகமாக சேலையை எடுத்து அப்படியே உடல் முழுவதும் போற்றிக் கொண்டு தலை குனிந்து நின்றாள் .  

” நீ என்ன செஞ்சாலும் என்னை மயக்க முடியாது ” என்று மனசாட்சி துளியும் இல்லாமல் சித் கூற , வெடுக்கென தலையை நிமிர்த்தியவளோ தன்னவனின் அருவருப்பான முகத்தை பார்த்து தன்னையே திட்டிக் கொண்டாள். சித் தொட்டதும் அவன் கண்ணத்தை பலுக்கும் அளவுக்கு அறைந்திருந்தாள் இப்படியான பேச்சுக்களை கேட்க வேண்டியது இருக்காதே !  என தன்னை திட்டிக் கொண்டாள்.

” நல்லவ மாறி முகத்தை எதுக்கு தொங்க போட்டு நிக்கிற , உன்னோட எண்ணம் இதுதானே  நான் உன்னோட சேர்ந்து வாழனும் . அதுக்காக தானே இப்படி அறையும் கொறையுமாய் நின்ன இப்போ ”  என்று அவன் வாய்க்கு வந்ததை கூற, பொறுமையை இழந்தவளோ 

” நிறுத்து சித்  , இதோட நிறுத்திக்கோ ” மகியிடம் மயங்கி நின்றதை ஏற்க முடியாத சித் மனமோ  யோசிக்காமல் பேச தோன்றியது. ” என்னடி நிறுத்த இவ்வளவு நாள் சந்தேகமா இருந்துச்சு…அது எப்படி டா ஒரு பொண்ணு சட்டுனு வேற ஒரு பையனை அதுவும் தன் அக்காக்கு பார்த்த பையனை  கல்யாணம் பண்றானு. இப்போ தானே புரியுது நீ என்னோட பணத்தை பார்த்தும் அப்பறம் இப்போ நடந்த மாறி உடம்பு சுக..” என்று கூறும் முன்னே சித் கண்ணம் எரிய ஆரம்பித்திருந்தது . 

கண்கள் சிவக்க நின்ற மகியை பார்த்து சற்று பயந்து தான் விட்டான் . சித்தை அறைந்தவள் விரு விருவென கீழே கிடந்த மீதி சேலையையும் தன் கைகளில் தூக்கிக்கொண்டு மீண்டும் குளியலறை நுழைந்தாள் . 

மகியிடம் அறை வாங்கி இருந்தவனோ  அப்போது தான் உணர்ந்தான் தான் எவ்வளவு பெரிய வார்த்தையை கூறியுள்ளோம் என. அவனுள் இருந்த நல்ல மனது கொண்ட மகியின் கண்ணாவோ 

‘ சே ஏன் டா இவ்வளவு பெரிய வார்த்தையை சொல்லிட்ட, மகிமா ஓட மனது எவ்வளவு கஷ்டபடும் . நீ தானே போய் அவள ஹக் பண்ண ‘ என தனக்குள் பேசியவன் பாத்ரூம் கதவை பார்க்க , அது கண்டிப்பாக திறக்காது என உணர்ந்து கொண்டான் . சித்திற்கு அலுவலகத்திற்கு வேற நேரம் ஆக 

” மகி எப்படி போனா எனக்கு என்ன ,  என்னோட அமிழ் இருக்க வேண்டிய இடத்தில இருக்கா . என்னையும் எப்படியோ மயக்க பாக்குறா, நல்லா வேனும் அவளுக்கு இன்னைக்கு என்னையும் அடிச்சிட்டா  இருக்கு ஒருநாள் ” என்று அவனுக்குள் இருந்த கொம்பு வைத்த மூளை கூற , தன் கண்ணத்தை கண்ணாடி முன் நின்று பார்த்தவன் மகியை திட்டிக் கொண்டு கிளம்பி அவன் அறையை விட்டுக் கீழே சென்றான் .

” அம்மா நா கிளம்புறேன் , முக்கியமான மீட்டிங் இருக்கு ” என சித் கூறிச் அவரின் முகத்தை கூட பார்க்காது படியில் இருந்து இறங்கியவாறே  கூறி செல்ல 

” மகி டா ” என தன் மருமகளுக்காக பரிந்து பேச 

” அதான் டிரைவர் இருக்காங்கள அவர்கிட்ட சொல்லுங்க  ” என்றுரைத்தவன் காரை கிளப்பி அலுவலகத்திற்கு விட்டான் .

மகிக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது . அவனை காதலித்ததை தவிற வேறு என்ன தவறு செய்தோம் தனக்குள்ளே மறுகினாள் அந்த குயலவள்.  கண்ணாவிடம் காதல் கொண்ட மனமோ தன்னவன் வாயிலிருந்த வந்த வார்த்தையாள் அவள் இதயத்தை துளைத்து எடுக்க, வாயை மூடிக் கொண்டு அழுதாள் .  வாய்விட்டு அழுக கூட அவளால் முடியவில்லை . அவள் வீட்டில் இருந்தவரை அழுகை என்றாள் எப்படி இருக்கும் என்றே தெரியாது , ஆனால் கண்ணா வாழ்வில் வந்த கொஞ்ச நாட்களாகவே சிரிப்பை மறந்தே விட்டாள் பேதை . மனதை விட்டு அழுகவும் முடியாமல் அழுகையை அடைக்கி கொள்ளவும் முடியாமல் துடித்து போனாள் . நேரம் ஆவதை உணர்ந்தவள் சித்தின் சத்தம் அறையில் நின்றவுடன் மெதுவாக கதவை திறந்து வெளியே வந்தாள் .  விழிகளில் அருவியாய் பெருக்கெடுக்கும் கண்ணீரை எல்லாம் அனை போட்டு தடுத்து தன் விழிகளை   அழுந்த துடைத்து 

தனது செல்பேசியல்  ராதாவை தன் அறைக்கு வருமாறு கூறி அழைப்பை துண்டித்தாள் .

” என்ன மகி எதுக்கு டா கூப்பிட்ட …எவ்வளவு நேரம் டா ரெடி ஆகி ” என்று கதவை திறந்து கொண்டே வந்தவர் மகியின் கோலத்தை பார்த்து சிரித்து விட்டார் . 

” என்ன மகி இது கோலம் ..ஹா ஹா ” 

” சிரிக்காதிங்க அத்தை ..வந்து சரி செஞ்சு விடுங்க ” என்று தன்னுடையை கவலையை அடுத்தவர்கள் முன் காட்டி பரிதாபத்தையும் கஷ்டத்தையும் கொடுக்க விரும்பாமல், சினுங்கி  கொண்டே கூற

ராதாவும் சிரிப்புடனே மகியின் சேலையை சரி செய்து விட , அவர் கட்டுவதை அப்படியே மூளையில் பதிய வைத்து கொண்டாள் , பின்னாளில் இது போன்ற நிலமையை தடுக்கவே . 

” என்ன மகி முகம் ஒரு மாறி இருக்கு … சித் திட்டிட்டானா ” என்று வருத்ததோடு கேட்க , இல்லை என இருபக்கமும் தலையை ஆட்டி 

” உங்க மகன் திட்டுனா … நானும் திட்டுவேனே தவிற இப்படி முகத்தை தொங்க போட மாட்டேன் ” என சிரித்துக்கொண்டு கூறிய மகியை பார்த்ததும் தான் ராதாவிற்கு மனது லேசாக இருந்தது . 

மகியின் மனதில் உள்ள கஷ்டங்களையும் துக்கங்களையும் அறிந்தாள் இவ்வாறு நினைத்து இருக்க மாட்டார். இருவரும் கீழே சென்றனர் . 

தன் அத்தையின் வழிகாட்டுதல் மூலம் நல்லபடியாக பூஜையை முடித்தவள் , இன்று தான் கல்லூரிக்கு செல்லவில்லை என கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றாள் . 

தொம் என்று‌ கட்டிலில் அமர்ந்தவளுக்கு ஏனோ மனது பாரமாய் இருந்தது சித் கூற வார்த்தைகளை எல்லாம் நினைத்து பார்க்கையில் . தன்னை எவ்வளவு கீழ் தரமாக நினைக்கின்றான் என ஒருபுறம் அவள் மனது கதற , மற்றோரு புறமோ தான் நிலையாய் இருந்திருந்தாள் இந்த சூழ்நிலையே வந்திருக்காதே என தன்னையும் திட்டி கொண்டாள் . இரு துருவமாய் அவள் மனது படுத்தி எடுக்க , இலவச இணைப்பாய் தலைவலியும் வந்தது . மனது அனலாய் கொதிக்க அதை சரி செய்ய வழி தெரியாமல் அப்படியே கண்களை மூடி படுத்தவளை தோழியின் அழைப்பை கண்ணை மூட விடாமல் தடுத்தது . தன்னை நிதானித்து கொண்டே அழைப்பை எடுத்தாள் 

” என்ன மகி இன்னைக்கு கிளாஸ் வரலையா ” 

” இல்லை டி ” என்று ஒரே வார்த்தையில் முடித்து விட , அதை தவறாக புரிந்து கொண்ட சௌமியாவோ 

” என்ன மகி நீங்க இரண்டு பேரும் சந்தோசமா இருக்கிங்கனு சொல்லவே இல்லை ” என கோபத்துடன் கேட்க , மகிக்கு புரிந்துவிட்டது காலையில்  பார்த்ததை வைத்து  இவ்வாறு கேட்கிறாள் என்றே. தனக்குள் விரக்தியாக சிரித்தவள் 

” சௌமியா ஒரு உதவி பண்றியா ” 

” என்ன டி பேச்ச மாத்துறியா? அது சரி ,  சொல்லு என்ன பண்ணனும் ” என்று நிலைமை புரியாமல் அவள் வேறு கலாய்க்க 

” எனக்கு ஒரு வேலை வேனும் ” 

” வாட் … என்னடி எதாச்சும் பிரச்சனையா ” என பதறி கேட்க, எந்த உணர்ச்சியும் காட்டாமல் 

” இல்லை டி நம்ம தான் பாதி நேரம் தானே காலேஜ் போறாம் அதான் ” என்று ஏதோ காரணத்தை கூற , தோழியை அறியாதவளா என்ன 

” சித்தார்த் எதாச்சும் திட்டுனான ” என கோபத்துடன் கோட்டாள் 

” சௌமியா  பிளீஸ்  , எனக்கு ஒரு வேலை கண்டிப்பா வேனும் நாளைக்கே …நைட் ஒரு ஏழு மணிக்கு வீட்டுக்கு வர மாறி வேணும் ” என்று கூறும் போதே மகியின் கண்ணீர் வெளியே வந்தது .

” சரி டி பாக்குறேன் , என்ன ஆச்சு திடீர்னு இப்படி சொல்லுற ” என்று சௌமியா கேட்டாள். அவளுக்கு இருக்கும் ஆசைகளில் படிக்கும் போது எதற்காக வேலைக்கு செல்ல நினைக்கிறாள் என யோசனையாகவே இருந்தது. 

” என்ன வேலையா இருந்தாலும் சொல்லு டி… இப்போ தலை வலிக்குது நா போனை வைக்குறேன்.  நாளைக்கு  நா காலேஜ் வரும்போது கண்டிப்பா வேலை இருக்கனும் பிளீஸ் ” என்றவள் அதற்கு மேலும் முடியாமல் அழைப்பை  துண்டித்து படுத்து விட்டாள் . அவளை அறியாமல் கண்களில் கண்ணீர்  வடிந்தது , இனிமேல் சித்திடம் எதற்கும் வேண்டி நிற்க   கூடாது என முடிவெடுத்தவளுக்கு  முதல் முதலாய் அவளுக்கு தோன்றியது அந்த ஹாஸ்பிடல் சம்பவமே! எனவே தான் முதலில் வேலை வேண்டும் என முடிவு எடுத்தாள். 

அலுவலகம்

அலுவலகத்திற்கு சென்றவனுக்கு ஏனோ நடக்கும் மீட்டிங்கில் கவனம் செலுத்த முடியாமல் , மனது கஷ்டமாக இருந்தது . முக்கியமான மீட்டிங் நடக்கும் நாளில் இப்படி  நண்பன் திணறுவதை பார்த்தவன் ஒரு இடைவேளைக்கு பின் தொடர உத்தரவிட்டான் . 

பிரியாமல் தொடரும் 😍💋…

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
24
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  13 Comments

  1. Sidh yen ipdi pannuran😠 ipdi oru varthaya Mahi ya pathu sollitu poitan ni feel pannatha Mahi 🤧😖ithu ellathukum sethu Namma last ta paathukiralam….. 🔥🔥waiting for next epi ❣️❣️

  2. Inaaaah sithuuuu oru ponnutu ipdi pesalamaaa🤦🏻‍♂️🤦🏻‍♂️poyaa

  3. ரொம்ப பேசுற சித் நீ…..அவள் மேல எனீனடா தப்பு…நீயா வந்த கட்டிப்புடிச்ச…அப்ழுறம் அழள அப்த பேச்சு பேசுற…மனுஷனாடா நீ….
   இதுக்கெல்லாம் உனக்கு இருக்குடா….உன்ன லவ் பண்ணது அமிழ் இல்ல மகிதான்னு தெரியவரும் போது அவள பேசகன பேச்புக்கு எல்லாம் நீ கஷ்ட்டப்படுவ பாரு…

  4. Intha sid uh romba pesurane😒😒😒😒 paavam magi😔😔😔😔

  5. Sidh nee rmba over ah pora da…. Pavam ava… Avala pottu mental mtorture kudukura … Evlo periya varthaiya asalta solra… Unna unnala control panna mudiyalana ava enna Panna mudiyum… Loose ….. Super ud sis….