433 views

அத்தியாயம் பதினாறு

 

கீழ் தளம் : 

” மகி அக்காவ கூட்டிட்டு வாடா ” என்று தன் தாயின் குரல் கேட்க ,  மகி அமிழ்தினியை அழைத்து வெளியே சென்றாள் . தன் மனக் கவலையை மறைத்துக் கொண்டு புன்னகையை பூசி தன் சகோதரி அமிழ்தினியின்  கையை பிடித்து அழைத்து வர, அமிழோ குனிந்த தலையை நிமிர வில்லை,  வெட்கம் அல்ல அவ்வளவு கடுப்பு . படியில் இறங்கி வந்தவள் வந்திருப்பர்களை பார்க்க , மகியின் காபி நிற கண்கள் விரிந்து கலங்கி , இதயம் வெடித்து வெளியே வராத  குறை தான், அந்த அழுத்தம் அமிழின் கைகளிலும் கொடுக்க , அமிழ்  திரும்பி பார்த்ததும் மகி தன்னை சரி செய்து,  அமிழின் கைகளிலிருந்து  தன்  கையை பிரித்து  விடுவித்தவள், இப்போது மகி தலையை குனிந்து கைகளை இறுக்கினாள் . காதல் கொண்ட மனமோ ஊமையாய் அழுக , அதை மறைக்க நன்றாக தலையை கவிழ்ந்து கொண்டாள்.   

அங்கிருந்த மற்றவர்களுக்கும் ஆச்சிரியம் தான், மகியும் அமிழும் ஒரே போல் இருக்க ஆச்சிரியமாக பார்த்தனர் . முகம் ஒரேமாதிரி இருந்தால் பரவாயில்லை இவர்களுக்கோ இடை,  எடை என அனைத்தும் ஒரே மாதிரி இருக்கும் . விழிகள் மட்டுமே மாற்றாக இருக்கும் மகிக்கு பிரவுன் நிறமும் அமிழுக்கு இள நீல நிற விழியும் இருக்கும் . அவர்களையே தான் ஆச்சிரியமாக பார்த்தனர் .  

” என்ன சம்மந்தி இப்படி பாக்குறிங்க , இதுவரைக்கும் டிவின்ஸ் பாத்தது இல்லையா ?!! ” என அதிசியமாக பார்க்கின்ற ராதாவை பார்த்து கதிரவன் கேட்க, 

” பாத்திருக்கோம் ஆனா …இந்த அளவு ஒரே மாதிரி பார்த்தது இல்லை ” 

” ஹா ஹா… நீங்க பார்க்க வந்தது மூத்த பொண்ணு   அமிழ் சம்மந்தி , பக்கத்துல இருக்குறது மகி .  இரண்டு பேருக்கும் அரைமணி நேரம் தான் வித்தியாசம் ” 

” ஓ சரி சரி சம்மந்தி  ” என்றவர் எழுந்து நின்று அமிழை அழைத்து தன் அருகில் அமர்த்தினார் . 

” ரொம்ப அழகா இருக்க மா ” என்றவரை கட்டுப்படுத்திய கடுப்புடன் பார்த்தாள் அமிழ் . சித்தோ அச்சிரியம் போய் அமிழ்தினியை ரசித்துக் கொண்டு இருந்தான் . கைகளை பிசைந்துக் கொண்டு அமிழ் அமர்ந்து இருக்க , தன் முகத்தை ஒரு முறை நிமிர்ந்து பார்க்க மாட்டாளா என்றிருந்தது சித்திற்கு , ஏக்கத்துடன் அவளையே பார்த்திருந்தான் . மகிக்கு கண்ணீரை கைகளை மடக்கி கட்டுப்படுத்தி நின்றாள் . 

” மகி நீயும் வா  இந்த அத்தை பக்கத்துல வந்து உட்காரு ” என்று கூப்பிட்டதும் விரத்தியுடன் அவரை பார்த்தவள் , மறந்து சித் பக்கம் திரும்ப வில்லை பார்த்தாள் அங்கே அழுது விடுவாள்  . 

” இல்..ல  பார..வா..யில்லை ” என்று மகி வார்த்தைகள் உடைந்து வெளியே வந்தது .

” என்ன சம்மந்தி இரண்டு பொண்ணு ரொம்ப கூச்ச சுபாவம் போல …பேசவே மாட்றாங்க ” 

” அமிழ் எப்போதும் இப்படி தான் இருப்பா , ஆனா மகி ரொம்ப வாலு . போக போக உங்களுக்கு தெரியும் ஹா ஹா ” என்று கதிரவன் சிரிக்க , ராதையும் லேசாக சிரித்தார் .  சந்துருவை தான் யாரும் கண்டுக்கவே இல்லை. அவனும் கவலை படாமல் செல்வி கொண்டு வந்திருந்த ஸ்வீட்டை சாப்பிட்டு கொண்டு இருந்தான் . 

” சரி மோதிரத்தை மாற்றிகலாமா சம்மந்தி ” என்றவுடன் அமிழ் அதிர்ச்சியாக தன் தந்தையை பார்க்க , அதை கவனித்த சித் இன்ப அதிர்ச்சி என்று நினைத்துக் கொண்டான். அங்கிருந்த மகியின் காதல் கொண்ட  மனமோ கல் பட்ட கண்ணாடியாய் இருந்தது. 

” சரிங்க சம்மந்தி ” என்று அவர் தன் விருப்பத்திற்கு கூறிவிட , அதற்கு மேல் மகியாள் தாக்கு பிடிக்க முடியாமல் தன் அறைக்குச் படி ஏறி ஓடி விட்டாள் . நேற்றிலிருந்து மகி வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து கதிரவன் வருந்தினார் . இப்போது மகியின் நடவடிக்கைகளில் ராதா முகம் ஒரு மாறி போக, அதை கவனித்த கதிரவன்

” மகிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை சம்மந்தி அதான் ” என்றதும் தான் ராதாவிற்கு முகத்தில் சிரிப்பு வந்தது . சித் எழுந்து நின்றான் ரெடியாக

” மச்சான் போட்டோ எடு டா ” என்று சந்துரு புறம் திரும்ப, அவனோ ஒரு முழு லட்டை வாயில் தனித்து மெல்லமுடியாமல் மென்று கொண்டு இருந்தான் . தன் நண்பனை பார்த்து தலையில் அடித்து 

” அடேய் மாணத்த வாங்கதடா ..” என்று அவன் மண்டையில் ஒரு கொட்டு வைக்க , 

” என்ன டா கிளம்பலாமா , கல்யாணம் பண்ணியாச்சா  ” என்று கேட்டு வைக்க , சித் அவனை கொள்ளும் வெறியோடு பார்த்தான்.

” சந்திரு சேட்டை பண்ணாத அப்பறம் சிக்கன் பிரியாணி அம்மா தர மாட்டேன்  ” என்று ராதா  மிரட்டுவதாய் நினைத்து  கூற ,  அவனும் சிக்கன் பிரியாணியை இழக்க விரும்பாமல்

” நா போட்டோ எடுக்க ரெடி மா ” என்று எழுந்து நிற்க , அந்த இடம் சிரிப்பு சத்தத்தால் நிறைந்து . 

மேலே ஒரு ஜீவன் உயிர் போக துடிப்பதை உணராமல்.

 

 மகியின் அறை : 

அறைக்கு வந்தவளுக்கு இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தரையில் அடித்து உயிர் போகும் அளவு அழுபவளை தேற்ற யாரும் இல்லை . போன் அடிப்பதை பார்த்தவள் சந்தியா அழைக்கவே யோசிக்காமல் எடுத்தாள் .எடுத்தும் பேசாமால் மகி அழுதுக்கொண்டு இருக்க சந்தியாவிற்கு தான் பயமாக இருந்தது. நேற்றைய சம்பவத்தை நினைத்து இன்னும் அழுகிறாளா என பயந்து விட்டாள்.

” மகி  ஏன் இன்னும் அழுதிட்டு தான் இருக்கியா ” 

” சந்தியா ..சித் …சித்வும் அமிழும் காத..லிக்..கு..றாங்களாம் ” என்று அழுத்துக்கொண்டு கூற , சந்தியாவிற்கு அதிர்ச்சியாக இருக்க ,”  வாட் ” என்று கூறியவள் இருக்கையில் இருந்தே எழுந்து விட்டாள் . 

” மகி‌..மகி ..” என்று கத்தும் போது மகி போன் கீழே விழுந்து உடைந்தது .

சந்தியா மீண்டும் அழைக்க தோல்வியே வந்தது . 

‘ ஏன்‌ கண்ணா இப்படி பன்ன எப்படி என்ன ஏமாத்தின…ஏன் ஏன் ‘ என வாயை மூடிக்கொண்டு சத்தம் இல்லாமல் கதருபவளை பார்த்தாள் நிச்சயம் கல்லும் கரைந்து விடும் .கதறி அழும்போது கூட அவ்வளவு வலி இருக்காது , அழுகையை மறைத்து கொண்டு இருப்பவர்களுக்கு அது இரண்டு மடங்கே வலியை தரும்.

‘  என் கவிதையை படிக்கும் போது சிரிப்பியே அது எல்லாம் எதுக்கு …என்ன ஏன் ‘ என்று அதற்கு மேலும் பேச இயல வில்லை . ‘ நீ அமிழ் அ அவ்வளவு லவ் பண்றேனா ?  அப்பறம் ஏன் நேத்து அத்தனை தடவ போன் அடிச்ச…   ஒரு பைத்தியம் நமக்காக இப்படி பண்ணுதே!  அது யாருனு தெரிஞ்சிக்க நினைச்சியா ?  ஏன் இப்படி பண்ண …ஏன் காதலுக்கு உயிர் கொடுக்காம கொன்னுட்டியே …ஐயோயோ….ஆரர்ர்ர்ர்ர் ‘ என்று அவள்  மனம் கத்தி கதற அதை  கேட்பாரும்,  அழாதே என்று கூறி அவளை தேற்றவும் யாரும் இல்லை . அவள் காதலித்தவனோ கீழ் மகிழ்ச்சியுடன் வேரொருவளுக்கு  சொந்தம் ஆக போவதை மகியின் மனம் ஏற்க மறுத்து துடியாய் துடித்தது . 

கீழ் தளம் : 

” அமிழ்  இந்தா டா இந்த மோதிரத்தை என் பையனுக்கு போடு ” என்று ராதா ஒரு மோதிரத்தை வருங்கால மருமகளிடத்தில் நீட்டினார் . அவர் ஏற்கனவே இரண்டு மோதிரங்களை வாங்கி தான் வந்திருந்தார், தன் மகனிற்கு சர்பிரைஸ் கொடுக்க , தன் தாயை புன்னகை தவழ்ந்து பார்த்தான் சித் . சிக்கன் பிரியாணி கிடைக்காமல் போய் விடும் என்ற வருத்தத்தில் சந்துரு அழகாக போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தான் . அமிழிடம் கையை மோதிரத்தை நீட்ட , அவள் தன் தந்தையை தான் பார்த்தாள் . ஒரு வார்த்தை கூட தன்னை கேட்க வில்லையே , இதுவே மகியாக இருந்திருந்தால் ஆயிரம் முறை கேட்டிருப்பீர் தானே என்று அவள் ஒருவாறாக யோசித்தாள் . சித் அவளிடம் கையை நீட்ட , வேறு வழியில்லாமல் சித் கையில் மோதிரத்தை அனிந்து விட்டாள் . சித் அவளிடம் கையை கேட்க அமிழிலாள் கை கொடுப்பது ஏதோ தீயில் கையை வைப்பது போல் இருந்தது . எல்லாம் இவர்கள் சென்றதும் பார்த்துக் கொள்ளலாம் என்று தன் கையை அவனிடம் கொடுக்க தன்னவள் கையை பூப்போன்று பிடித்து வெட்கத்துடன் அவள் கையில் மோதிரத்தை அனிந்து அமிழ் கையில் ஒரு முத்தத்தை கொடுக்க , அவள் சட்டென்று தன் கையை உருகிக் கொண்டாள் . அதில் ராதாவும் சந்துருவும் தான் சித்திற்குள் ஒரு ரோமியா இருக்கிறானா !! என்று  ஆச்சிரியமாக பார்த்தனர் . 

” அப்பா நா என் ரூம்ல இருக்கேன் ” என்று அமிழ் தன் அறைக்குச் சென்று போனை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைத்தாள் .மறுமுனையில் எடுத்ததும் முத்தம் சத்தம் தான் கேட்டது 

” ஆனந்த் என்ன பொண்ணு  பார்த்து …நிச்சயம் பண்ணிட்டாங்க ” என்று கூற 

” என்ன  ” என்று அவன்  சற்று அதிர்ந்து தான் விட்டான் . யார் தான் தன் காதலிக்கு நிச்சயம் செய்து விட்டார்கள்‌ என்று கூறினாள் அதிர்ச்சியாகாமல் என்ன செய்வர் . அமிழ் நடந்தது அனைத்தையும் கூறி 

” ஆனந்த் எனக்கு பயமா இருக்கு, எங்க வீட்டுக்கு வந்து பேசு. நா கல்யாணம் பண்ணா  உன்ன தான் பண்ணுவேன், இல்லேனா ..” என்று அழுதுகொண்டே கூறினாள் .

” அச்சோ … அழாதா  பாப்பா கண்டிப்பா நா வரேன் . அந்த மாப்பிள்ளை யாருனு மட்டும் சொல்லு , அவங்கட்ட பேசிட்டு நா உங்க அம்மா அப்பா கிட்ட பேச வரேன் அதுவர நீ அழக்கூடாது ” என்று பொறுமையாக குழந்தைக்கு   கூறுவது போல் அவன் பேசி , தன்னவளை  சரி செய்தான் . ஆனந்த் பார்த்துக் கொள்வான் என்று அமிழ் மனம் நிம்மதி அடைந்தது . 

மகியின் அறை கதவு தட்டும் சத்தம் கேட்க , வேக வேகமாக தன் முகத்தை அழுந்த  துடைத்தவள்  கதவை திறந்தாள் . யாரை பார்க்க வேணாம் என்று நினைத்தாளோ அவனே தான் அவள் அறைக்கு வாசலில் நின்றிருந்தான் . மனம் பாரத்தை கொண்டு அழுத்தியது . இனி தன் கண்ணா தன்னவன் இல்லையே தன் உடன்பிறந்தவளின் கணவன் என்பதை மனதிற்கு எவ்வாறு புரியவைப்பது, இரண்டு வருட காதலை மாற்ற முடியுமா என்று தனக்குள் பேசி துடித்து போனாள் மகி . சித்தை பார்க்கும் போது காதலை தாண்டிய வேதனையே முகத்தில் வர பார்க்க அதனை கடினப் பட்டு நிறுத்தி வாயிற் கதவின் அருகே நின்ற சந்துரு விற்கும்  சித்திற்கும் ஒரு சிரிப்பை கொடுத்தாள் .  

” ஹாய் ” என்று சித் கூற , பேச வார்த்தை வரவில்லை . முதல் பேச்சு தங்கள் காதலை கூற வேண்டும் என கனவு கண்டிருப்பாள் , ஆனால் இன்று தன் சகோதரியின் கணவன் தான் என்று கூற வந்திருக்கிறானே! என நினைக்கையிலே யாரோ கத்தியை வைத்து இதயத்தை கிழிப்பது போல இருக்க, வார்த்தைகள் வராமல் தொண்டையை அடைக்க அவனுக்கு தலையைசைப்பை மட்டும் கொடுத்தாள் .

” அது ..அது ” என்று சித் இழுக்க, அதற்கும் மேலும் பொறுக்காத சந்துரு 

” அது வந்துங்க அமிழ் அ வெளிய கூட்டிட்டு போறதுக்கு கொஞ்சம் உதவி பண்ணுவிங்கலாம் , இவன் தொல்லை தாங்கலை ” என்று சலித்துக் கொண்டு கூற , சித் அவன் காலை ஓங்கி மிதித்தவன்  மகியிடம்

” அது வந்து  உங்க பேரு என்னங்க ” என்று சித் கேட்க , மேலும் மகி உடைந்து போனாள் . அவனை பற்றி அணு  அணுவாய் தெரிந்து வைத்திருக்கிறாள் மகி… ஆனால், அவனுக்கு தன்னுடைய பெயர் கூட தெரியவில்லையே என வரும் அழுகையை உள்ளுக்குள்ளே புதைத்து 

” மகி..ழ்..தி..னி ” என்றாள் வார்த்தைகள் வராமல் உளரி.

” ஓகே மகிமா ” என்றதும் அவள் புதிதாக அவன் கண்களை பார்த்தாள் . அதில் தெரியும் காதலும் மகிழ்ச்சியும் துளி கூட தனக்கானது இல்லையே என நினைக்க நினைக்க முகம் அப்பட்டமாக வாடியது .

” ஏன் பேரு நல்லா இல்லையா இவ்வளவு அதிர்ச்சி எதுக்கு  ஹா ஹா ” என்று அவன் சிரிக்க , சூழ்நிலையை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தினறிபோனாள் .

” ஏங்க ஊமையாக நீங்க , பேசாமா அப்படியே நிக்குறிங்க . எதாச்சும் பேசுங்க எங்கல பார்த்தா பயமாவா இருக்கு அம்புட்டு பயங்கரமாவா இருக்கோம்  ” என்று சந்துரு வேறு நிலைமை தெரியாமல் பேசினான் . 

” இல்லைங்க பேரு நல்லா தா இருக்கு ” என்றாள் தன்னை சமன் படுத்தி 

” அப்பாடி பேசிடிங்க மச்சான் ஊமை இல்லை டா ” என்று சந்துரு கூற , சித் தன் நண்பன்  வாய் மேலே தன் முலங்கையை வைத்து ஒரு குத்து குத்தினான் .

” மகிமா அதான் அமிழ் அ வெளிய கூட்டிட்டு போக ஆசை படுறேன் . தனியா வரமாட்டா , சோ நீங்களும் அவள் சம்மதிக்க வச்சு எங்க கூட வரிங்கலா . பிளீஸ் மகிமா …பிளீஸ்… பிளீஸ் ” என்று அவனை காதலித்தவனிடமே உதவி கேட்கிறோம் என தெரியாமல் கெஞ்சிக் கொண்டு இருந்தான் மகியின் மன்னவன். அவளுக்கு இந்த நிமிடமே தன் உயிர் போய் விடாதா என தோன்றியது . அழுகையை அடக்கியதில் தொண்டை வேறு  எரிய தொடங்கியது .  தன்னவன் தன்னிடம் வேண்டுவது பொருட்காமல் அவனுக்கு தலை அசைப்பை கொடுத்து அமிழிடம் பேச சென்றாள் . அங்கோ அமிழ் வர மறுக்க காலில் விழுந்து அவனுடன் அனுப்பி வைத்தாள் . தன்னையும் அவர்களுடன் அழைக்க மகி செல்ல வில்லை எங்கே அதை பார்க்கும் தைரியம் அவளிடம் துளியும் இல்லை , தலைவலி என்று காரணங்கள் கூறி அவர்களுடனும் செல்லாமல் ராதாவிடமும் கலகலப்பாக பேசி தன் அறைக்குள் முடங்கினாள்.  இவ்வாறு கல்யாண பேச்சு தொடங்க கதிரவனும் செல்வியும் மகளின் கல்யாண வேலைகளில் பிசியாக இருந்தனர் . மகியை பொறுத்தவரை சித் காதலித்தது அமிழ்தினியை தான் என்று நினைத்தாள் . 

வீட்டிற்கு பேச வருகிறேன் என்று கூறிய ஆனந்தோ வேண்டு  வராது இருக்க,  இப்படி அமிழிடம் பேச ஒவ்வொரு முறையும் சித் மகியிடமே உதவி கேட்க அவளுக்கு தான் தன்னை மாய்த்துக் கொள்ளலாம் போல் இருக்கும் , இருந்தும் அனைவரிடமும் எந்த உணர்ச்சியும் காட்டாது மகிழ்ச்சியாகவே பேசி சிரிப்பாள் . தன் உடன் பிறந்தவளின்  காதலாவது வெல்லட்டும் என்ற என்னத்துடனே .  

 

நிகழ்காலம் :

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சந்துருவிற்கே லேசாக கண்ணீர் எட்டிப் பார்த்தது . இப்படி ஒருவனிடம் பேசாமல் அவன் உணர்வுகளை மட்டுமே ரசித்து காதலிக்க முடியுமா என்று ஆச்சிரியமாக இருந்தது  அவனுக்கு . இத்தகைய காதலையை கண்டுக்காமல் ஏன் சித் அமிழை காதலித்தான் என்று யோசனையும் வர, கடந்த காலத்தை பற்றி பேசிய மகிக்கோ அழுகையை நிற்காமல் வந்தது . அவள் அருகில் வந்த சந்துரு அவளை அனைத்துக் கொண்டான். இருந்த வேதனையில் தன் நண்பனிடம் நன்றாக ஒற்றி அனைத்துக் கொண்டாள் .

” மகி இப்படியும் காதல் இருக்குமானு ஆச்சிரியமா இருக்கு .  சரி அழாத விடு அழாதனு சொன்னே ” என்று  மெதுவாக ஆரம்பித்து மிரட்டலுடன் முடித்தான் . 

தன் கண்களை துடைத்துக் கொண்டவள் 

” எல்லாம் முடிஞ்சு போன விசியம் சந்துரு,  விடுங்க அதை பத்தி பேசுறது தேவை இல்லாதது ”  என்று விரக்த்தியுடன் மகி கூறினாள் .  

” முடிஞ்சு போனதுனு சொல்லாத மகி . அப்போ சித் உன் அக்காவுடையவனா  இருக்காலாம் , ஆனால் இப்போ சித் உன்னோட கண்ணா மட்டும் தான் அவன் உன் காதலால சரி செய்ய முயற்சி ஏன் செய்யகூடாது ” 

அதற்கும் விரக்தியாக புன்னகைத்தாள் . அந்த நேரம் அவளுடைய கண்ணா முகத்தை கடுப்புடன் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் . 

பிரியாமல் தொடரும் 😍💋…

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
18
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  14 Comments

  1. ………..🥺🥺🥺😭😭😭😭
   Mahi paavam …..

  2. Archana

   என்னத்துக்கு கடுப்பா வரானாம்🤔🤔 இந்த ஆனந்த் தான் அவனோட பிஸ்நெஸோட opp பார்ட்டியோ.

  3. Mudiyala thalaivareyy mudiyala 😶😶 rmba ala vaikireenga

  4. Janu Croos

   சந்த்ருவுக்கு புரிஞ்ச உண்மை எப்போ சித்துக்கு புரியுறது….அந்த உண்மை புரியுற வயைக்கும் இவன் மகிய காயப்படுத்திட்டே இருப்பானே….அதுக்கு என்ன பண்றது….

   அமிழ்தினி கூப்பிட்டும் ஏன் ஆனந்த் அவங்க வீட்டுல வந்து பேசல….ஒரு வேளை இந்த கல்யாணம் மண்டபமீ வரை வந்து அதுக்கு அப்புறம் அமிழ்தினி அவன் கூட வந்துட்டா சித்துக்கு பெரிய அவமானம்னு தெரிஞ்சே தான் அப்படி பண்ணானா….அப்படி பண்ற அளவு அவனுக்கும் சித்துக்கும் என்ன பகை….

   1. Bullet vedi
    Author

    நன்றி சகி 🥰🥰🥰😁❤️…உங்க கமண்ட் மிகவும் மகிழ்ச்சி அடைய செய்கிறது 😁😁😍😍🤩🤩❤️❤️

  5. Inga Mahi aluthukittu iruka anga enna na sidh ku pagumaanam kekuthu …….😠😠😠en ipdi alugura epi la poduringa 😖padikum pothu alugaya varuthu😭🤧 waiting for next epi❣️❣️

  6. Sangusakkara vedi

   Ada dubukku ava irukura feeling la avalaye mama vela pakka kuptta epdi… Irudi avalukum oru neram varum… Apo iruku unaku….