அத்தியாயம் பத்து
தன்னவன் பெயரை கூறியதற்கு முறைத்து அவள் கையில் கிள்ளியவள் தன் கண்ணாவை கண்ட முதல் சந்திப்பை கூற ஆரம்பித்தாள் . இது ஏற்கனவே சந்தியாவிற்கு தெரியும் பல முறை மகியும் கூறி இருக்கிறாள் . ஆனாலும் எப்போதும் கேட்டாலும் மகி கூறும்போது அவள் முகத்தில் இருக்கும் புன்னகைக்கும் அவள் கண்களில் தெரியும் காதலுக்காகவும் அவள் இரசித்து கூறுவதை கேட்பதற்காகவும் திரும்பவும் கேட்பாள் . மகிக்கு தன்னவனை பற்றி கூற கசக்குமா என்ன அவளும் சளிக்காது கூறுவாள் . இன்றும் அதே போல கூற ஆரம்பித்தாள் .
முதல் சந்திப்பு
கல்லூரி திறந்த கொஞ்சம் நாட்களே சென்று இருக்க , முதல் வருடம் பொதுவாகவே நிறைய மேஜர் பேப்பர்ஸ் ( major papers ) இருக்காது அல்லவா ! .. அதனாலே மகி எப்போதும் கல்லூரியை வட்டமடித்து வருவாள் . அன்றைக்கும் அதே போல் தான் , தன் தோழி சந்தியா மற்றும் சௌமியா இருவருடன் கைகளை கோர்த்து நடுவில் இவள் இருக்க முன்னும் பின்னுமாக கையை வீசிக்கொண்டு நடந்து வந்தாள் , அப்பொழுது காற்றில் ஒரு சார்ட் பேப்பர் பறந்து மகி காலுக்கு அருகில் வந்து விழுந்தது . அதை பார்த்ததும் மூவரும் நடையை நிறுத்தினர் , மகி குனிந்து அதனை எடுத்து பார்த்தவள் விழி அப்படியே விரிந்தது . அந்த காகிதத்தில் அழகாக பென்சிலை மட்டும் கொண்டு வரையப்பட்டு இருந்தது . ஒரு 3 டி ( 3 D ) இதய வடிவம் அதன் நடுவினிலே ஒரு ஆண் உள்ளே போகலாமா அல்லது வேண்டாமா என்று யோசித்திருப்பது போல் இருந்தது, ஒரு கால் இதயத்தின் உள்ளேயும் ஒரு கால் அந்தரத்திலையே இருப்பது போல் இருந்தது கீழே எஸ் . கி ( SK). அதனை ரசனையுடன் பார்த்தவள் அந்த ஆண் மகனின் படத்தை தன் கைகளால் வருடி விட்டாள் . ஏனோ அதை பார்த்ததும் சாதாரணமாக கடந்து செல்ல அவள் மனம் இடம் கொடுக்க வில்லை . தனக்கானவன் வரைந்தது போலவே அவள் மனது கூற… அதை அலச்சியமாக மற்ற இருவரும் பார்த்தனர் . மகி அதனையே கண் எடுக்காமல் பார்க்க
” ஏய் அதுல என்ன இருக்குனு இப்படி பார்க்குற ” என்று சௌமியா கேட்க
” இது …இது …ரொம்ப அழகா இருக்கு ,யார் வரஞ்சதா இருக்கும் ” என்று இருபக்கமும் பார்த்தாள்
” அப்படி என்ன டி இருக்கு இதுல ” என்று புரியாமல் சாதாரணமாக தானே இருக்கிறது என்று சந்தியாவும் கேட்க , மகி காதில் விழுந்தாள் தானே , அவள் தான் அந்த படத்தின் உரிமையாளர் எங்கே என்று சல்லடை போட்டு தேடி கொண்டு இருந்தாள் . அவளை காக்க வைக்காமல் வந்தான் அவளின் கண்ணா . அவனை பார்த்ததும் மேலும் மகியின் கயல்விழிகள் விரிந்தது , அப்பப்பா.. என்ன அழகு , கடவுள் சிலையை போல கம்பிரமாக பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார் போல என மனதினுள் கூறிக் கொண்டாள் . வேகமாக ஓடோடி வந்தவன் அவள் முன்னே நின்று ஒரு சிறிய புன்னகையை பரவ விட்டு அந்த வரை படத்தை வாங்கிச் சென்றான் இல்லை இல்லை அதனை மகி கையிலிருந்து உருகிக் கொண்டு சென்றான் . மகி அசையாமல் இருப்பதை பார்த்து இருவரும் தோளை உலுக்க அதில் உணர்வு பெற்று அவன் போன வழியையே பார்க்க
” அடியே …இதுக்கு முன்னாடி பையன பார்க்காத மாறி பார்க்காத டி ”
” கண்ணா பேரு என்ன டி ” ஏனோ வந்தவனை பார்த்ததும் அவள் மனதில் கண்ணா என்று பெயரே உதித்தது .
” கண்ணா வா யாருடி அது ” என்று சந்தியா கேட்க
” இப்போ வந்தாரே அவரு தான் ”
” ஓஓ அவரா …அவர் நம்ம சீனியர் டி, பேரு சித்தார்த் கிருஷ்ணன் ” என சந்தியா கூறியவுடன் ‘ பாரு டா நாம்ம மனசு வச்ச பேரு கரெக்ட்டா இருக்கு’ என்று புன்னகைத்துக் கொண்டவள் அவன் முகத்தை தன் இதயத்தில் பதிய வைத்து சென்றாள் . அன்று முதல் இன்று வரை அந்த வரைபடம் அப்படியே கண் முன்னால் இருக்கிறது அவளுக்கு அத்தனை அழகு . கலையை இரசிக்க தெரிந்தவர்களுக்கு தானே எந்த விசியத்தையும் கலை கண்ணுடன் பார்க்க இயலும் . அவளும் புற கண்ணால் பார்க்காமல் , அக கண்ணால் பார்த்து அந்த படத்தில் தன்னை தொலைத்தாள் . அதை வரைந்தவனும் அதனை போலவே இருக்க முதல் பார்வயிலையே அவள் இதய நுழைவாயிலின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து விட்டான் .
அன்று பார்த்த அதே இரசனையுடனே கூறி முடிக்கவும் ஆசிரியர் வகுப்பிற்கு வரவும் சரியாக அமைந்தது . அன்று முழுவதும் காலையில் நடந்த சம்பவத்தையே நினைத்து சிலாகித்தாள் மகி . அந்த நாள் நல்ல படியாக முடித்து தன் தோழிகளிடம் விடைபெற்று சீட்டாவை எடுக்க பார்க்கிங் சென்றவள் , அங்கு சித்தின் RE நிற்க தனது ஸ்டிக்கி நோட்டை எடுத்தவள்
” பட்டர்கப் வொய்யோன் இல்லாமல் உயிர்பெறாதாம் …
அதுபோல !!
இன்று காலையிலே என் கண்ணாவின் தரிசனத்தை தந்து எனக்கு உயிர் தந்துவிட்டான் ”
என் உயிர் கண்ணாவிற்கு😍💋
என்று ஒரு கவிதையை அவன் வண்டியில் ஒட்டியவள் , தன் வீட்டை நோக்கி பறந்தாள் . என்றும் போலவே அனைத்தையும் ரசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தவள் , விசுலுடன் நேராக தன் அறைக்கு சென்றாள் .
” உங்க பொன்ன பாருங்க … எப்படி விசிலடித்து போறானு ”
” விடுமா அவளுக்கு பிடிச்ச மாறி இருக்கட்டும் ”
செல்வி ” அமிழ்தினி வீட்டுக்கு வந்துடாளாங்க “
” இல்லமா லேட் ஆகுமாம் ” என்றார் இரு மகள்களை பெற்ற தந்தை கதிரவன் .
தன் அறைக்கு சென்றவள் தன்னை ஃபிரஷ் ( fresh ) செய்து கொண்டு கீழே வந்தாள் .
” அம்மா காஃபி ” என்று மேசையில் தலாமிட்டு கூறிக்கொண்டு தன் தந்தையிடம் கதை அளந்து கொண்டு இருந்தாள் . அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தவாறே தன் மகள் கேட்ட காஃபியை கொடுத்தார் செல்வி . தன் தலையை தடவியவள் . காஃபியை ஒரு மிடக்கு வைத்து
” அப்பா இந்த அம்மாவுக்கு காஃபி கூட ஒழுங்கா போட தெரியவில்லை ”
” என்ன பண்றது மகி பழகிருச்சு ” என தன் கணவனும் மகளுடன் சேர்ந்து கலாய்க்க
” அப்பா ‘ ம்ம்’ னு ஒரு வார்த்தை சொல்லுங்க … நாளைக்கே உங்களுக்கு பொண்ணு பார்க்க போலாம் ” என்று சத்தமாக சிரித்து பேசிய தன் மகளை முறைத்தவர் , தன் கணவனின் பதிலை எதிர்பார்க்க அவரோ எதுவும் கூறாமல் திருட்டு முழி முழிக்க , மேலும் கீழும் மூச்சு வாங்கி இருவர் முதுகிலும் ஒரு செல்ல அடியை வைத்து, கோபமாக இருப்பது போல பாசாங்கு செய்து அவர் அறைக்கு சென்றார் . அப்போது அவர் ஈன்ற அடுத்த மகள் அமிழ்தினி உள்ளே வந்தாள் .
அமிழ் மகியை விட அப்படியே மாற்று படுபவள் . மகி மிகவும் கலகலப்பாக பேச நினைப்பாள் , அமிழ் தனிமையை நாடுவாள் , அனைத்தையும் ரசிக்கும் எண்ணம் மகி என்றால் ,அமிழ் அதை எல்லாம் கண்டு கொள்ளவே மாட்டாள் . மகி கவிதை , வரைதல் , நடனம் என அனைத்தையும் செய்வாள் . ஆனால், அமிழ்கு இதில் அவ்வளவாக ஈடுபாடு கொண்டு நாட்டம் காட்ட மாட்டாள் . இவ்வாறு இருவரும் இரு துருவங்களாய் இருப்பர் .
காஃபியை சப்புக் கொட்டி குடித்தவள் அவளுக்கு பிடித்த இடமான தங்களின் தோட்டத்திற்கே சென்றாள் . இது அவளே அமைத்தது , ரோஜா , சென்பகம் , டேலியா என பல வண்ணங்களில் கண்ணை கவரும் வகை வகையான பூக்களையும் செடிகளையும் வீட்டிற்கு தேவையான அளவு பெரும் காய்கறி தாவரங்களையும் நிரம்பி வழியும் அளவு பரமறிக்கிறாள் , போதாதென்று கிளி , குருவி , லவ் பேர்ட்ஸ் போன்ற பறவைகளை வளர்ப்பவள் எதையும் கூண்டில் அடைப்பது இல்லை . அவைகளும் அந்த வீட்டை சுற்றியே பறக்கும் , நேரத்திற்கு சாப்பிட்டு இரவானதும் அவள் அறையில் வெளியே உள்ள பால்கனியில் இருக்கு அவைகளுக்கான கூட்டினுற்குள் வந்து தங்கி விடும் . அந்த இடத்திற்கு தான் இப்போது செல்கிறாள் . பூக்களை பார்த்து தனக்குள் நிரப்பி , அதன் வாசனைகளை நுகர்ந்து அப்படியே அந்த இடத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தாள் . அவளின் பட்டு என்று அழைக்கப்படும் கிளி அவள் தோளில் பறந்து வந்து அமர்ந்தது . அதனை கைகளுக்கு மாற்றியவள் அதன் அழகை தன் முத்து பல் தெரிய விரிந்த இதழுடன் பார்த்தாள் . அது ‘ கண்ணா கண்ணா ‘ என்று அழகாக கூற மதியின் இதழ் மேலும் விரிந்தது . அவள் தனக்குத்தானே பேசுகையில் ஒரு முறை என்ன பல முறை கண்ணா என்று கூறுவாள் , அதை பார்த்து பட்டுவும் ‘ கண்ணா கண்ணா ‘ என்று அழகாக அழைக்கும் . அதற்காக மேலும் இரண்டு பழங்களை தருவாள் . இன்றும் ஐஸ் வைத்து எக்ஸ்ட்ரா பழங்களை கொத்தி தின்று பறந்து விட்டது . அவள் வந்ததும் முயலும் அவளை உரசிக்கொண்டே அவள் பாதங்களுக்குள் சுற்றியது . பட்டு வை கொஞ்சியதால் பொறாமை போலும் , அதனுடன் சிறிது பேசி விளையாடியவள், தன் அறைக்கு வந்து புத்தகத்தை சிறிது புரட்ட ஆரம்பித்தாள் . அதில் அப்படியே மூழ்கி போனாள் . ஒரு கதையை ஆர்வத்துடன் படித்தாள் இரவானாலும் கூட தூக்கம் வராது . அதைப்போலவே பாடத்தையும் கூட இரசித்து இரசித்து படித்தவள் இரவு பத்தரை தாண்டியும் தூங்க வில்லை . அவள் தந்தை வந்து அவள் அறையை தட்டிய போதே நிமிர்ந்து பார்த்தாள் . மணியை. பார்த்தவள் வழக்கம் போல தலையில் அடித்துக் கொண்டு அவள் தந்தை முன் பல்லை காட்டி நின்றாள்
கதிரவன் ” எத்தன தடவ சொல்லுறது மகி ஒழுங்கா சாப்பிட வா ”
” நேரம் போனதே தெரியலை பா ”
தன் மகளை நன்று அறிந்தவர் ஆயிற்றே , அவளை தினமும் இவ்வாறு தான் அழைப்பார் .
” ஏன்டி மகாராணி …சாப்பிட கூப்பிட ஒரு ஆளு வரனுமோ ” என்று எப்போதும் போல செல்வி தனது அர்ச்சனையை தர , அவளும் ஏதாவது சொல்லி சமாளித்தாள் , அமியுடன் கொஞ்சம் பேச நேரம் கிடைப்பதே இரவு உணவிற்கு மட்டுமே . அவள் ஐடி பிரிவை எடுத்து அதினுள் புதைந்து விட்டாள் . கல்லூரி நேரத்தை தான்டி நண்பர்களுடன் இருந்து படித்துவிட்டு மாலை போல வருவாள் , வந்ததும் தன் அறைக்குள் நுழைந்து செல்பேசியில் கடலை தான் . நால்வரும் சிறு சிறு பேச்சுக்களுடன் சாப்பிட்டு உறங்க சென்றனர் .
….
இங்கு வீடு வந்தவனோ தன் அறையில் தனது அலுவலக வேலை முடிந்ததும் அந்த கவிதை எழுதுபவளை பற்றி யோசித்தான் . அவனும் பல முறை மறைந்து இருந்து அது யாரென பார்க்க முயன்றான் . எங்கே அவள் சிக்க மகி தான் சித் பின்னால் நிற்பாளே !!. என்றாவது மாட்டுவாள் என காத்திருக்கிறான் . முதலில் கோபம் வந்தாலும் அவனுள் இருந்த கவிஞன் போக போக மகியின் கவிதையின் தன் இதயத்தில் அவளிடமே பறிகொடுத்து, அவளை பார்க்க காத்துக் கொண்டு இருக்கிறான் .
இயற்கை விவசாயம் என்னும் கொள்கையை நிலை நிறுத்தி தாவரங்களை வளர்க்க வேண்டும் என்று நினைப்பவன் சித் . இன்று இயற்கை விவசாயம் என்றால் என்ன என்று கேட்பார்கள் என்ற நிலைமை வந்து விட்டது . பூச்சி வராமல் இருக்க ஒரு மருந்து , பழம் நன்றாக காய்க்க ஒரு மருந்து , செடி வேகமாக வளர ஒரு மருந்து , பழங்கள் பெரிதாக இருக்க ஒரு மருந்து என பல இரசாயனங்கள் பயன்படுத்துகின்றனர் . இப்பொழுது எங்கே பயிற்றுவிக்கும் பொருட்களில் ஊட்டச்சத்தை எதிர் பார்க்கிறார்கள் விளைச்சல் நிறைய கிடைத்தால் அதை விற்று லாபம் பார்க்கவே நினைக்கின்றனர் பலபேர் . இயற்கை விவசாயம் செய்வதால் விளைச்சல் குறைவாக இருந்தாலும் அதன் பலன்களும் சத்துக்களும் அதிகம் . இயற்கை முறையாகவே விளைச்சலை அதிக படுத்த முடியும் , இதனையே நோக்கமாக வைத்து சித் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அனைவரும் செய்யவில்லை என்றாலும் தன் ஊரில் உள்ள மக்களாவது இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என நினைத்து செயல் படுகிறான் . அதற்காக நிறையவே உழைத்துக் கொண்டும் அதற்காக ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் ஆராய்ந்து படித்துக் கொண்டு இருக்கிறான் . இப்படி ஒரு பக்கம் போக , மற்றொரு பக்கமோ தனக்கு கவிதை எழுதி வைப்பவளை எப்படி கண்டு கொள்வது என மண்டையை தினமும் குடைவான் . ஆனால் பதில் தான் பூஜ்ஜியமாய் அமையும் .
இப்போது அனைத்தையும் விட்டு , கல்லூரியில் நாளை நடக்க போதும் ஸ்டேட் லெவல் செமினாரை ( state level seminar ) போட்டிக்காக தன்னை தயார் படுத்தினான் .
பிரியாமல் தொடரும் 😍💋…..
உங்களின் புல்லட் வெடி 🎉
நிறைய எழுத்துப்பிழை இருக்கு பதிவிடும் முன் சரிபார்த்து பதிவிடவும்
Okay sisy 🥰
Enaa love story ya ithuu
Apdiueee love feel varuthuuu 💕❤️
நன்றி சகா 🥰🥰😁❤️
அடக்கடவுளே….அப்போ மகி பாத்து பாத்து வளர்த்த காதல இந்த சித்து பய அமிழ்னு நினைச்சு அவள் கூட கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டானா….அவ்வளவு அறிவு கெட்டவனா இந்த சித்து….
அவன் அமிழ லவ் பண்றேன்னு சொன்னப்பவும்…..அவள் கூட கல்யாணத்துக்கு ரெடியானப்பவும்…அவள் கூட சிரிச்சு சிரிச்சு பேசுறப்பவும் மகிக்கு எப்படி இருந்திருக்கும்…..
நல்லவேளை அமிழ் அந்த ஆனந்த கல்யாணம் பண்ணிட்டு போனாள்…இஷ்லனா மகியோட நிலமைய யோபிச்சிருக்க கூட முடியாது….
இந்த சித்து எப்போ இதெல்லாம் புரிஞ்சுகிட்டு மகி கிட்ட பாசாமா இருப்பான்னு தெரியலயே….
மிக்க நன்றி சகி 🥰🥰😁❤️…. உங்களின் கமெண்ட் எனக்கு கொஞ்சம் உத்வேகம் அளிக்கிறது பா 🥰🥰🥰
While reading feeling inside like💗💕💞💌♾️✌️ waiting for next epi…❣️
நன்றி சகி 🥰
அந்த பையன் “சித்”க்காக எழுதினே கவிதையே எல்லாம் அமி தான் எழுதினான்னு நினைச்சுட்டானா👀👀 ஓ மை காட் இந்த சித் மாறி மகியும் எழுதுற கவிதையிலே Mk (மகி💘கண்ணா or மகிகதிரவன்😅)இல்லைனா ஏதாவது ஒரு பிரத்யேகமான சிம்பிள் போட்டுருக்கலாம் இப்போ பாருங்க எல்லாமே non- sync ஆ போய் கடைசிலே என்ன என்னமோ ஆயிடுச்சு🏃♀️🏃♀️🏃♀️🏃♀️🏃♀️
😂😂😂😂. நன்றி சகி 🥰🥰😁❤️
1.வித்தியாசமான கதைக்கருக்கு மத்தியில ஒரு அழகான காதல் கதையை என்னால சுவாரஸ்யமா கொடுக்க முடியும்னு உங்க கதை சொல்லுது.
2. கதையோட கேரக்டர்ஸ் எல்லாமே சூப்பர். அவங்க அவங்க ரோல்ல அவங்க அவங்க சூப்பரா ப்ளே பண்றத ரைட்டர் அழகா சொல்லிருக்காங்க.
3.மகி காதலும் சரி, காதல் தோல்வியும் சரி ஒரு பொண்ணா அவங்க ஹேண்டில் பண்ணுன விதம் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.
4. காதலுக்கும், காமெடிக்கும், சுவாரஸ்யத்துக்கும் கொஞ்சம் கூட குறை இல்லாம ரெகுலர் ரா அப்டேட் குடுக்குற ரைட்டர்க்கு வாழ்த்துக்கள்….
நெகட்டிவ்
1. சின்ன சின்ன ஸ்பெல்லிங் எரர்ஸ்…
2. அடுத்தவங்களுக்கும் மனசு இருக்குறத கூட உணராத கதையோட ஹீரோ… கொஞ்சம் சுயமா தன்னோட தவறுகளை உணர்ந்தா நல்லா இருக்கும்.
3. தன்னால தன்னோட காதல் தோல்விய ஏத்துக்க முடியுங்குறதுக்காக அடுத்தவங்களும் அப்படி தான் இருக்கணும்னு நினைக்கிறது தப்பு… அதுக்காக அவ சூசைட்ட நான் ஆதரிக்கல. அவனே வரும்போது சந்தியா அவன் தான் வேணும்னு நினைக்கும் போது அதை தடுக்குறது தப்பு.மகி அவ பிரண்டோட காதலன அடுச்சத நான் கேள்வி கேட்டே ஆகணும். இப்போ சித்க்கு மதியால ஆபத்து வரும்னு தெரிஞ்சா ஆஃபியஸா அவ அவன பிரிஞ்சு தான் போவா. அதனால் அந்த Sri பண்ணுனதுல தப்பே இல்ல… இவ்வளோ பக்குவம் உள்ள பிள்ளை இதை ஏன் விட்டா?
Thankyou so much pa 😍😍😍❤️❤️🥰🥰🥰..neenga podura comments kaaga kooda daily ud podalamnu thoonuthu 😌😌😌❤️
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.
ரொம்ப ரொம்ப அழகான காதல் கதை. கண்ணா தான் சித்.. அண்ட் கிளி சொல்ல வந்தது கண்ணா தான் எல்லாமே முன்னவே கெஸ் பண்ணிட்டேன். நிறைய க்ளூ கொடுத்து எழுதுறீங்க. அழகா இருக்கு.
ஆனா நிறைய பிழை இருக்கு..
பண்ணுற… தான் சரி பன்னுற தப்பு. இப்படி ஓவர் பிழை. பத்து எபிலயும் பார்த்துட்டேன். எல்லாத்துலையும் அதே போல இருக்கு. இந்த ண வர்ர பல இடத்துல இந்த ன போட்ருக்கீங்க. அது அர்தத்தயே மாத்திடும்.
அத எல்லாம் கதைய முடிக்குறதுக்கு முன்ன எல்லா எபிலயும் மாத்திடுங்க. ஒரு நல்ல கதை எழுத்து பிழையால போட்டில தோற்க கூடாது. அவ்வளவு தான் என் விருப்பம்.
நிறைய இன்ஃபர்மேஷன் சொல்லுறீங்க. அத நீங்களா சொல்லாம ஒரு கேரக்ட்டர சொல்ல வைங்க. இன்னும் சுவாரசியமா இருக்கும். சின்ன சஜஸன் அவ்வளவு தான்
கதை ஓவரால் க்யூட். சித் எப்படி மகிய அமி யா நினைச்சான்னு தான் இனி தெரியனும்.
வாழ்த்துக்கள் ❤️
Thank you sisy 🥰🥰❤️