அத்தியாயம் ஒன்பது
கதவை திறந்து வந்தவன் அவளை உறுத்து விழிக்க , தலை குனிந்து கொண்டாள் மலரவள் .
” மகி சௌமியா சொன்னது உண்மையா , நீ சித் அ லவ் பண்ணியா ” என்று சந்துரு அதிர்சயாக கேட்க , அவளும் தன் தலையை ‘ ஆம் ‘ என்பது போல் ஆட்டி கண்ணீருடன் தன் கண்ணாவுடனான காதலை கூற ஆரம்பித்தாள் .
❤️ __________ ❤️
கடந்த காலம் :
மகி வீடு :
துள்ளி மானை போல , தாயிடம் கூறி பாதங்களை தரையில் ஒரு நிமிடம் கூட தொடந்து பட விடமால் பறந்து வந்தவள் , தன் தந்தை சாப்பிட அழைத்தும் அவர் கன்னத்தை நறுக்கென்று கிள்ளி தன் சீட்டா என்று தான் பெயர் வைத்து சொல்லிக் கொள்ளும் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து முகத்தில் விழிகள் மட்டும் தெரியும் அளவு முகத்தை மறைத்து , தன் தலைகவசத்தை அனிந்து கிளம்பி தன் கல்லூரியை நோக்கி செலுத்துகிறாள் மகிழ்தினி . மனதை மயக்கும் வெய்யோனின் சுட்டெரிக்காத கதிர்களையும் , பறக்கும் பறவைகளும் அவளை எழுப்பும் ஒலிகளும் இசையாய் இரசித்தவாறே தன்னை போல அவசரமாக அலுவலகம் , பள்ளி , கல்லூரி என செல்பவர்கள் புலம்பிக் கொண்டு போவதையும் பேரிஸ் பர்ன் ஆர் பிரவுன் ( paris burn or brown ) நிற கயல்விழியால் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் இரசித்தவாறே , இயற்கை காற்றை சுவாசித்து தன் நுரையீரலுக்குள் செலுத்தி புத்துணர்ச்சியுடன் தனது இருசக்கர வாகனமான சீட்டாவில் பறந்து கொண்டு சென்றாள் மகி .
கடவுள் படைத்த அனைத்து உயிரினங்களும் ஏன் உயிரற்ற பொருட்களையும் இரசனையுடனே பார்ப்பாள் மகி ( மகிழ்தினி ) . எல்லாவற்றையும் மற்றவர்களை போல் பார்க்காமல் சற்று வித்தியாசமாக பார்க்கும் மகிக்கு செடிகளிலும் கொடிகளிலும் ஆர்வம் அதிகம் . அதனாலே பள்ளியில் அதிகமாக மதிப்பெண் எடுத்தும் மருத்துவர் , பொறியியல் என்று நுழையாமல் தாவரவியல் பிரிவு மற்றும் அக்ரி ( agri ) என்று இரு பிரிவை மட்டுமே சில கல்லூரியில் பதிவு செய்தாள் . அவள் விருப்பத்திற்கேற்ப இரண்டுமே கிடைத்தது . ஆனாலும் அருகில் உள்ள கல்லூரித் தாவரவியல் பிரிவு கிடைத்தால் அதையே தேர்ந்தெடுத்தாள் . ஒரு வருடமாக வெற்றிகரமாக அனு அனுவாய் இரசித்து படித்துக் கொண்டு இருக்கிறாள் . பொதுவாகவே தாவரவியல் பிரிவு கல்லூரியில் மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களே எடுப்பதாகவும் அந்த பிரிவு எடுப்பதால் வேலைவாய்ப்பு குறைவு என்பதாகவும் ஒரு கருத்து தற்போது உள்ளது . ஆனால் இந்த உலகத்தில் பச்சையென்று தாவரங்கள் இருக்கும் வரையிலும் அதை மனிதர்கள் அன்றாட உணவாக எடுத்துக் கொள்ளும் வரையிலும் தாவரவியல் பிரிவுக்கு மதிப்பு எப்படி குறையும் . நமக்கு தேவையான வேலைகளையும் எவ்வாறெல்லாம் வேலைவாய்ப்பு இருக்கிறது என்பது தெரியவில்லை போலும் . சரியான வழியில் சென்றால் எந்த பிரிவும் வாழ்க்கைக்கு சரியாகவே அமையும் .
காற்றில் அலை அலையாய் இருக்கும் இடுப்பை தான்டி அங்கங்கு சுருண்டு இருக்கும் கூந்தல் தென்றலில் பறக்க , தன் காஃபி நிற கண்கள் இயற்கையை இரசித்துக் கொண்டு வருகையில் கல்லூரியில் வாயிலினுள் நுழையும் போது எதிரே வந்த ராயல் என்ஃபீல்டு ( Royal Enfield 😍 ) பைக்கை கவனிக்காமல் நேரே சென்று அதன் மேலையே விட்டாள் . அதுவும் அதில் அமர்ந்தவனும் கம்பிரமாக நின்றனர் . பாவம் மகியும் அவளின் சீட்டாவும் இரண்டும் ஒருசேர சேர்ந்து விழுந்தது .
கீழே விழுந்தவள் மேல் சீட்டா இருக்க எழ முடியாமல் தடுமாறி பல்லி போலவே தரையோடு தரையாய் கிடந்தாள் . RE யில் இருந்து பதறி இறங்கியவன் தன் பலத்திற்கு தூசியாக இருக்கும் மகியின் சீட்டாவை தூக்கி ஒரு ஓரமாக நிறுத்தினான் . மகிக்கும் இன்முகத்துடன் கையை நீட்ட அவளும் அவன் பொன்னான கையுடன் இதுதான் வாய்ப்பு என்று தன் பஞ்சு போன்ற கையை சிறிது அல்ல நிறைய இரசனையுடனே வைத்து எழுந்து நின்றாள் . மகியின் விழியோ அவள் மனதை கேட்காமல் அவனை உட்சி முதல் இரசிக்க ஆரம்பித்தது . ஹாக்கி ( hockey ) கட் எனப்படும் பிறையில் ஓரிரண்டு முடிகள் அழகாய் தொட்டு அவன் கண்களை அவ்வபோது மறைக்க , அதை அழகாய் எடுத்தி விடும் அவன் கைகளும் , சற்று அதிகமாக இமை உள்ள கருமை விழிகளும் , குட்டியான கூர் நாசியும் , அளவான இதழ்களும் , அதற்கும் கீழ் இறங்கினாள் அவனின் அகன்ற வலிமையான புஜங்களும் , உடற்பயிற்சி செய்து எடுப்பாக உள்ள கட்டுக்களையும் விழி அகலாமல் இரசித்தாள் . எப்பொழுதும் தூரத்தில் இருந்தே இரசித்து கொண்டு இருப்பவள் இன்று அவனை மிக அருகில் கான மகிக்கு இரு கண்கள் போதவில்லை என்று தான் கூற வேண்டும் .
“ஹலோ !! ” என்று அவன் உறைக்க கத்தியபோது தான் கனவுலகில் இருந்து வெளியே வந்தாள் அந்த கயல்விழியாள் .
மகி ” ஹான் ” என , அவன் தலையில் அடித்துக் கொள்ளாத குறை தான். தன் இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டி
” ஆர் யு ஓகே ” என்றான் அந்த ஆணழகன். தலையை மட்டுமே ஆட்டினாள் எங்கே வார்த்தை வெளியே வந்தாள் தானே !! . அவளிடம் விடைபெற்று மீண்டும் தன் வண்டியில் கல்லூரியினுள் நுழைந்தான் அந்த ஆணழகன். வேடிக்கை பார்த்தவர்களும் மெதுவாக களைய ஆரம்பித்தனர் . சிலர் மகி விழுந்தும் தூக்க வராமல் தன் செல்பேசியில் வீடியோவாக எடுத்தனர் .
அவன் கூறிய ஒரு வரி உள்ள மூண்று வார்த்தைகளே காதினுள் தேனாய் பாய உடல் சிலிர்த்து வண்டியை கல்லூரி வளாகத்தினுள் தன் சீட்டாவை தள்ளிக் கொண்டு வந்தாள் . தன்னவன் தரிசனம் காலையிலே கிடைக்க அதனை நினைத்து நினைத்து சிலாகித்து வண்டியை நிறுத்தியவள் , தன்னுடைய துப்பட்டா கார்ஃபையும் தலைகவசத்தையும் கலட்டி வைத்து விட்டு , அவனை பற்றி யோசித்தவாறே தன் வகுப்பறையை நோக்கி நடந்தாள் .
மகியின் கனவு கண்ணா , கண்ணா என்றே அழைப்பாள் செல்லமாக . அவனும் இவளை போலவே தாவரங்களில் பிரியம் கொண்டவன் இவளை போலவே கவிதை எழுதுபவன் , உயிர் பெற்று எழுந்து வந்திராத அளவுக்கு தத்ரூபமாக படங்களை வரைபவன் இப்படி இருவருக்கும் பல ஒற்றுமை உண்டு . முதல் வருடம் தீயாய் உழைத்து அழைந்து அவனை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்த தகவல்கள் தான் அவன் ஏற்கனவே எம் . எஸ்சி அக்ரி ( agri ) முடித்து விட்டான் . எதற்கோ பிகச்டி ( PhD ) தாவரவியல் பிரிவு காரணமாக இருக்க அதனாலையே இப்படி மாற்று பிரிவு எடுத்து அதன் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த நான்கு வருடங்களாக மகி படிக்கும் அதே கல்லூரியில் தாவரவியல் ஆராய்ச்சி பிரிவு படித்துக் கொண்டு , ஒரு பக்கம் தொழிலையும் சேர்த்தே செய்கிறான் . அவன் தன்னை போலவே தாவரத்தின் மேல் கொண்ட காதல் மேலும் அவன் மேல் உள்ள ஈர்ப்பை காதலாக தூண்டி விட்டது . இன்னும் ஒரு வருடத்தில் அவன் இந்த கல்லூரியை விட்டு சென்று விடுவான் அந்த கவலை மட்டும் அவ்வபோது வந்து மறையும் . மற்ற நேரங்களில் அவள் பாடத்தில் உள்ள காதலும் அவன் மேல் கொண்ட காதலும் கூடிக்கொண்டே போகிறது . காதலித்து படித்தால் எதுவுமே எளிதாக தானே இருக்கும் . அவன் மேல் கொண்ட காதலை நேராக சொல்ல துனிவின்றி தன் வார்த்தைகளால் கவிதையாய் தீட்டி அவன் வண்டியினுள் அல்லது அவனுடைய உடமைகளில் எதிலாவது வைத்து மறைந்து பார்ப்பாள் . தன் கவிதை முதலில் படித்தவன் கண்களில் கோபமும் உதடுகள் திட்டும்படியாக இருக்கும் . ஆனால் இப்போது தன் வார்த்தைகளை படிக்கும் போதே அவனுடைய விழிகளும் இதழும் விரிவடைவதை பார்த்து இரசிப்பாள் .
அவனுடனான நினைவுகளிளே வகுப்பறையினுள் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தாள் . ஏற்கனவே அவளுக்காக காத்திருந்த அவளின் உயிர் தோழி சந்தியா அவளை பார்த்து சிரித்துக் கொண்டே அவள் தலையில் ஒரு கொட்டை வைத்தாள் .
” ஏன்டி இப்போ அடிச்ச ” என்று தலையை தடவியவாறே பேசியவளை பார்த்து மேலும் சிரித்தவள்
” என்ன மேடம் காலையிலையே உன் ஆளு சித்தார்த் கிருஷ்ணன் கூட ரொமான்ஸ் போல ” என்று கலாய்த்து கூற , இங்கு இருந்தவளுக்கு அதுக்குள்ளே எப்படி தெரிந்தது என்று மனதினுள் யோசித்தவள் , கோபமாக
” ஏய் எத்தன தடவ சொல்லுறது என் கண்ணாவ பேர் சொல்லி கூப்பிடாதனு ” என்று முகத்தை சுருக்கி கோபத்துடன் பொறிந்தவளிடம் . அவள் கீழே விழுந்தது படமாக சந்தியாவின் தொலைபேசியின் திரையில் ஓட அதனை காண்பித்தாள் . அதனை வெடுக்கென புடுங்கியவள் மேலும் தன் இதயத்தினை திருடிய கள்ளவனை மீண்டும் பார்த்து இரசித்தாள் . அதில் சந்தியா தலையில் அடித்து அதை பிடுங்கி
” ஐயயோ என் போனு நனைஞ்சுறாம , வழியுது ” என்று தன் கைக்குட்டையை அவள் வாயில் ஒட்டி எடுத்தாள் . அதில் அவளை முறைக்க முயன்று பக்கென சிரித்து விட்டாள் . இருவரும் சிறிது நேரம் வயிறு குலுங்க சிரித்த பிறகு மகியே தொடங்கினாள்
” அந்த வீடியோ எப்படி டி ”
” அது நம்ம காலேஜ்ல எவனோ எடுத்தது இப்போ வந்த பாஸ்ட் அண்ட் ஹாட் நியுஸ் ”
” எது வருதோ இல்லையோ இந்த மாறி நியூஸ் மட்டும் தீயா வந்துரும் . எப்படியோ அத எனக்கு கொஞ்சம் அனுப்பி விடேன் ” என அனைத்து பற்களும் தெரிய இளித்து கூறியவளை ஏற இறங்க பார்த்தவள்
” உன்னை நான் அறிவேன் மகளே நீ கேக்குறதுக்கு முன்னாடியே அனுப்பிட்டேன் ” என்றாள் . அதற்கும் ஒரு இதழ் விரிப்பை கொடுத்தவள் சந்தியாவை உறசிக்கொண்டு தன் செல்பேசியை கைபையிலிருந்து எடுத்து ஆன் செய்து மறுபடியும் அவனை கண்கள் மின்ன இரசித்தாள் . தன் தோழியை பார்த்து சிரித்த சந்தியா
” எப்படி டி இவன் மேல , பேசாமலே இவ்வளவு காதல கொட்டுற ” என்க, மகி பதில் கூறாமல் தன்னவனை ரசிப்பதில் இருந்தாள், அவள் போனை பிடுங்கி தன் பையினுள் போட்டு மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் .
” அதெல்லாம் ஒனக்கு புரியாது டா சோனமுத்தா ” என்று இரு கைகளையும் அமரும் மேசையின் விழும்பில் வைத்து வகுப்பறையை சுற்றி தன் காஃபி நிற விழிகளை சுழலவிட்டாள் .
” சே ஏன்டி கார்ஃப் போட்ட இல்லைனா இன்னைக்காச்சும் அவன் உன்ன பார்த்திருப்பான் ” என்று சந்தியா நொந்து கூற , அவள் மனதிலும் அது தோன்றியது தான்… பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே!! என என்னினாள் பிறகு கடவுள் மீண்டும் வாய்ப்பு தருவார் என மனதிடம் கூறினாள் .
” விடு டி என் கண்ணா இந்த காலேஜ் விட்டு போறதுகுள்ள எப்படியாச்சு என் காதலை சொல்லிருவேன் ” அவள் எப்பொழுதும் கூறும் அதே வார்த்தை தான் , அவ்வபோது சந்தியாவும் அவள் பைத்தியக்கார காதலை பற்றி கேட்பாள் , அதற்கு ஒனக்கு புரியாது அல்லது உனக்கும் காதல் விதை மனதில் முளைத்து விருட்சமாய் வளரும் போது புரியும் என்று கூறுவாள் . அவளும் மேலும் தன் தோழியை தொல்லை செய்யாமல் இருவரும் ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தனர் . அவர் வராமல் சந்தியாவிற்கு போர் அடிக்க
” எங்க டி அந்த வலுக்க சாரை காணோம் ”
” அதான் நானும் யோசிக்குறேன் வந்து பாடத்தை நடத்த சொன்ன கழுத்துல பிளேட போட்டு அருப்பானே காணோமே ” என இருவரும் வகுப்பு பேராசிரியரை கலாய்த்தனர் . இருவருக்கும் போர் அடிக்க மகி அப்படியே டேபிளில் தலையை கவிழ்த்து தூங்கலாம் என்று நினைக்கையில் ,
” சரி டி நீ எப்படி சித்தார்த் அ பார்த்த ” என்று சந்தியா கேட்க , தான் கண்ணாவுடனான முதல் சந்திப்பை கூற ஆரம்பித்தாள்.
பிரியாமல் தொடரும் ….❤️
உங்களின் புல்லட் வெடி 🎉
Apa Sid tha kanna vaa Vera leveluuu❤️
Tq 😍🥰🥰
மகி சித்தே லவ் பண்ணும் போது எப்படி அமி நடுலே வந்தா🤯🤯 ஏதோ கம்யூணிக்கேசன் பிராப்ளமா இருக்குமோ🤔🤔🤔🤔 எனக்கு அமி&மகி ட்வின்ஸூனே தோணுது👀👀👀👀
நன்றி சகி 🥰🥰😁❤️
First epdi pathurupaa sidh tha ..🤔🤔🤔 waiting for next epi❣️❣️
Thankyou sisy 🥰🥰
ஏன்மகி…வீ தானே சித்தார்த்த லவ் பண்ற..அதைநீ அவன் கிட்டயே சொல்லி இருக்கலாமே….நீஅஸனுக்கு எழுதின கவிலைய தான் அவன் அமிழ் எழுதகனதா நினைச்சிட்டு அவள லவ் பண்ணானா? உனக்கு இப்படியா சோதனை வரனும்….
Nalla sollunga sisy 😂😂.. thankyou ❤️🥰
‘என்னை விட்டுப் பிரியாதே’ ஒரு கியூட்டான, சால்ட் அண்ட் பெப்பர் லவ் ஸ்டோரி.
இதோட பாசிட்டிவ்ஸ்னா,
1. சந்துரு, இந்த ஸ்டோரியோட பெரிய ப்ளஸ் பாயிண்டே இவன் தான். சீரியான சூழ்நிலையையும், இலகுவா மாத்துற இவன் கேரக்டர் செம.
2. அடுத்தது, மகிழ்தினியோட பொலம்பல்ஸ். லவ் முத்திப் போனப்பயும் சரி, லவ் ஃபெய்லியர் முத்திப் போனப்பயும் சரி. இந்த பொண்ணு மைண்ட் வாய்ஸ்லயே பொலம்புறதும், வாய்விட்டு பொலம்புறதும் ரெண்டுமே செம ரியலிஸ்டிக்கா இருக்கு.
3. மகியோட எமோஷன்ஸ எக்ஸ்பிரஸ் பண்றது சிம்ப்லி நைஸ். தனியா ஃபீல் பண்றதும், சித் கடுப்பேத்துறப்ப பொங்குறதும் செமையா இருக்கு.
அப்புறம் நெகட்டிவ்ஸ்,
1. ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நெறைய இடத்துல இருக்கு. அத மாத்திக்கிட்டா படிக்கும்போது, இன்னும் ஸ்டோரியோட நல்லா இன்வால்வ் ஆக முடியும்.
2. சித்தோட கோபமும், அவன் மகிய ஹர்ட் பண்ற விதமும், அவன ஒரு ஆன்ட்டி ஹீரோவா ப்ரொஜெக்ட் பண்ற மாதிரி இருக்கு. அதக் கொஞ்சம் கம்மி பண்ணலாம்னு நெனைக்கிறேன்.
3. அக்ரி பத்தின டீட்டெயில்ஸ் அங்கங்க நரேட் பண்றது, கதையோட ஒட்டாத மாதிரி இருக்குப்பா. அத ஸ்டோரிலயே யாராச்சும் சொல்ற மாதிரி வச்சா, இன்னும் டீப்பா மனசுல பதியும்னு நெனைக்கிறேன்.
ஓவர் ஆலா பாத்தோம்னா, லவ் பார்ட் கியூட்டா இருக்கு. ஸ்டோரி போக, போக மத்த டீட்டெயில்ஸும் இன்னும் டீப்பா புரியும்.
நன்றி … குறைகளை சரி செய்ய முயற்ச்சிக்கிறேன் 🥰🥰🥰
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.