211 views

வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு

வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு!!

விஜயின் தினசரி பணிப்பட்டியலில் சாக்ஷியை தொடர்வதையும் இணைத்துக் கொண்டான். அவனின் இச்செயலுக்கு பாரத் இன்டர்நேஷனல் பள்ளியில் அவர்கள் கட்டும் கட்டிட பணி அவனுக்கு மிகவும் உதவியது. ஆம் சாக்ஷி அதே பள்ளியில் தான் ஆசிரியையாக பணியாற்றுகிறாள். 

கட்டிட பணியில் கவனம் செலுத்தினாலும் அவ்வபோது சாக்ஷியை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். 

ஒரு வாரம் கடந்த நிலையில், 

விஜய் அந்த பள்ளியிலிருந்து தனது பைக்கை கிளப்பிக் கொண்டு தன் ஃபிளாட்டை நோக்கி புறப்பட்டான். பள்ளி வளாகத்தில் இருந்து சற்று தூரம் சென்ற போது தான் சாக்ஷி அவள் ஸ்கூட்டியில் முன்னே செல்வதை கண்டான். 

ஒரு திருப்பத்தில் தனது ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு விஜயின் வாகனத்தை வழிமறித்தாள் சாக்ஷி. மெல்ல தன் வாகனத்தை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை கழட்டினான். உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் எதையும் வெளிக்காட்டாது கம்பீரமாக அவளை எதிர்க் கொண்டான். 

“எனி ப்ராப்ளம்? ” அவள் ஸ்கூட்டியை பார்த்த வண்ணம் விஜய் வினவ, 

அவனை தீயென முறைத்தவள், “எதுக்கு என்னை ஃபாலோ பண்ணுகிறீங்க?” என ஹிந்தியில் கேட்க, 

“வாட்? ” என்றான் திகைப்பான குரலில். 

அவனுக்கு ஹிந்தி புரியவில்லை என எண்ணி “Why are you following me? ”  ஆங்கிலத்தில் மறுபடியும் வினவினாள். 

“ஹலோ என்ன பேசுறீங்க? இப்போ நீங்க தான் என் பைக்கை ஸ்டாப் பண்ணீங்க. உங்க ஸ்கூட்டியில் ஏதோ ப்ராப்ளம் போல அதான் ஸ்டாப் பண்றீங்கனு நினைத்து ஹெல்ப் பண்ண வந்தால். ஃபாலோ பண்ணுகிறேன்னு சொல்றீங்க.  What’s wrong with you? ” – ஆங்கிலத்தில் பதிலளித்தான். 

அவர்களின் உரையாடல் ஆங்கிலத்தில் இருந்தது. 

“இல்லை நீங்க பொய் சொல்றீங்க, நான் தினமும் உங்களை நான் நோட் பண்ணிட்டு தான் இருக்கேன். மார்னிங் அன்ட் ஈவினிங் நீங்க என்னை ஃபாலோ பண்ணுகிறீங்க “

“ஹலோ மேடம் என்ன பேசுறீங்க?  மார்னிங் வேலைக்கு போகிறேன் ஈவினிங் என் ஃபிளாட்க்கு போகிறேன். நான் உங்களை ஃபாலோ பண்ணுகிறேனா? “

“ஆமாம்” என்றாள் அழுத்தமான குரலில். 

(வசமா சிக்கிட்ட போலடா விஜய், சரி சமாளி)

“இல்லை” – என அதே அழுத்தமான குரலில் விஜய் மறுக்க, அவனை தீயென முறைத்தாள்.

“ஹலோ நீங்க வொர்க் பண்ணுகிற ஸ்கூல்ல இப்போ புதிதாக பில்டிங் கட்டுகிறாங்க இல்லையா?  அதுக்கு  Chief Engineer நான் தான். மார்னிங் அந்த சைட்க்கு வருவேன் ஈவினிங் என் ஃபிளாட்க்கு போவேன்”

“உங்க ஃபிளாட் என்ன பார்க் வியூவ் அப்பார்மெண்ட்லயா இருக்கு?” 

“ஆமாம்,  C Block, Flat No. :212”

“சாரி சார்” என சன்ன குரலில் முணுமுணுத்துவிட்டு அங்கிருந்து நகர எத்தினாள் அவள். 

‘அவக்கிட்ட ப்ரண்ட்ஷிப் ஸ்டார்ட் பண்ண இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது சோ ஸ்டாப் ஹெர் மேன்’ என விஜயின் உள்ளம் குரல் கொடுக்க, 

அவள் முன் வழிமறைப்பதை போல் கைநீட்டினான் விஜய். 

“ஹலோ மேடம், நீங்க பாட்டுக்கு வந்தீங்க, நான் உங்களை ஃபாலோ பண்ணுகிறேன்னு சொல்லி சண்டப்போட்டிங்க. இப்போ நீங்க பாட்டுக்கு போகுறீங்க”

“அதான் சாரி சொல்லிட்டேன்ல”

“வெறும் சாரியெல்லாம் அக்செப்ட் பண்ண முடியாது. ஒரு காஃபி வாங்கிக்கொடுங்க. உங்க சாரியை அக்செப்ட் பண்ணுகிறேன்” என விஜய் குறும்பாக கூற, 

 அவனை முறைத்துவிட்டு, “ச்ச, சரியான அலஞ்சானா இருப்பான் போல” என தமிழில் முணுமுணுத்துவிட்டு தன் ஸ்கூட்டி நோக்கி நகர, “எனக்கு தமிழ் தெரியும்” என்ற விஜயின் குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் சாக்ஷி. அவளை முறைத்துக்கொண்டிருந்தான் விஜய். 

“சாரி சார்” என்றாள் பரிதாபமாக, அவளின் முகபாவனையில் கோபத்தை இழுத்துப்பிடிக்க இயலாமல் பக்கென்று சிரித்துவிட்டான் விஜய். 

“இந்த சாரிக்கு காஃபிக்கூட சமோசாவும் வாங்கித்தரணும்”

புன்னகையுடன், “சரி வாங்க” என அருகிலிருந்த காஃபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்றாள் சாக்ஷி. 

எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்தனர் விஜயும் சாக்ஷியும். 

“By the way, I’m Vijay from Tamil Nadu, ஸ்டார் பில்டர்ஸ்ல வொர்க் பண்ணுகிறேன்”

“நைஸ் டு மீட் யூ, நான்… “

“தெரியும் உங்க பெயர் சாக்ஷி,  பாரத் இன்டர்நேஷனல் ஸ்கூல்ல சயின்ஸ் டீச்சரா வொர்க் பண்ணுறீங்க”

” பெரிய ஜென்டில்மேன் மாதிரி என்னை ஃபாலோ பண்ணலனு சொன்னீங்க இப்போ என்னைப்பற்றி இவ்வளவு டீடைல்ஸ் சொல்றீங்க? ” என்றாள் முறைப்பாக, 

“ஏங்க உங்க நேம் அன்ட் வொர்க் ப்ளேஸ் சொன்னா உங்களை ஃபாலோ பண்ணுவதா அர்த்தமா? “

“இல்லையா பின்ன? ” 

அவள் நம்பாதப் பார்வைப் பார்க்க, 

“இல்லை, அட நம்புங்க, நான் உங்களை முதல் தடவை பார்க்கும் போது ‘சாக்ஷி க்ராஸ் கரோ’னு உங்க ப்ரண்ட் எட்டு ஊருக்கு கேட்குற மாதிரி கத்துனாங்க. அப்படி தான் உங்க பெயர் எனக்கு தெரிந்தது”

“நான் சயின்ஸ் டீச்சர்னு எப்படி கரெக்ட்டா சொன்னீங்க? “

“உங்க ஸ்கூலுக்கு முதல் நாள் வந்த போது கரெஸ்பாண்டென்ட் ரூம்க்கு வழித் தெரியாமல் உங்கக்கிட்ட தானே கேட்டேன். அப்போ நீங்க Body Movements பத்தி க்ளாஸ் எடுத்துட்டு இருந்தீங்க அதை வைத்து தான் சொன்னேன் நீங்க சயின்ஸ் டீச்சர்னு. இப்போ டவுட் தீர்ந்ததா?”

“சாரி”

“இந்த சாரிக்கு நாளைக்கும் காஃபி வாங்கி கொடுங்க சாரியை அக்செப்ட் பண்ணுகிறேன் “

சாக்ஷி முறைப்பாக,” உங்கக்கூட இப்போ காஃபி குடிக்க வந்ததே தப்பு இதுல நாளைக்கு வேறயா? ” என பொரியத் தொடங்க, 

“அட பில் வேணும்னா நான் பே பண்ணுகிறேங்க”

“காஃபி வாங்க காசு இல்லனு உங்கக்கிட்ட சொன்னேனா?”, 

 “அட ஏங்க கோவப்படுறீங்க, நான் நீங்க தமிழ் பொண்ணுங்கிற ஒரே காரணத்திற்காக தான் காஃபி குடிக்க கூப்பிட்டேன். ஏன்னா நான் நம்ம ஸ்டேட்டை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். உங்க இடத்துல ஒரு தமிழ்ப்பையன் இருந்தாலும் நான் காஃபி குடிக்க கூப்பிட்டு் இருப்பேன்”

“அப்படி தமிழ்நாட்டை மிஸ் பண்ணுகிறவங்க இங்க ஏன் இருக்கணும்? போகவேண்டியது தானே உங்க தமிழ்நாட்டுக்கு” என சாக்ஷி கூற, 

தொலை தூரத்தை வெறித்தப்படி, “Some Personal reasons”, என்றான் உணர்ச்சியற்ற குரலில். 

“சாரி”

“இட்ஸ் ஓகே, இப்போவாது காஃபி ஆர்டர் பண்ணலாமா? ” என வினவியபடி வெயிட்டரை அழைத்து காஃபி ஆர்டர் கொடுத்தான். 

“உங்க பேமிலி? வொய்ஃப்? “- சாக்ஷி. 

“ஏங்க என்னை பார்த்தா கல்யாணம் பண்ணிக் குழந்தை எடுத்த பேமிலி மேன் மாதிரியா இருக்கு? “- விஜய். 

“சாரி”,

விஜய் ஏதோ சொல்ல வாய் திறக்க, ” என்ன இந்த சாரிக்கு நாளை மறுநாளும் காஃபி வாங்கிக் கொடுக்கணுமா? “

“ச்ச இல்ல,  என்னை மாதிரி ஒரு Most eligible Bachelor பார்த்து நீங்க இப்படி சொல்லிட்டீங்க, அது என்னை ரொம்ப ஹர்ட் பண்ணிருச்சு அதுக்கு பணிஸ்மெண்ட்டா இந்த வீக் முழுக்க காஃபி வாங்கிக் கொடுக்கணும்”

மென்புன்னகை உதயமானது சாக்ஷி உதட்டில், 

“ஹப்பா, சிரிச்சிட்டீங்களா.  ப்ரண்ட்ஸ்? ” என விஜய் கரம் நீட்ட, 

“ஓகே, பிரண்ட்ஸ் ” என அவன் கரத்தைப் பற்றிக் குலுக்கினாள். அவர்கள் ஆர்டர் செய்த காஃபியும் சமோசாவும் வர, அதை உண்ட வண்ணம்ப் பேசத்தொடங்கினர் சாக்ஷியும் விஜயும். 

“நீங்க A Block-ல இருக்கீங்க இல்லையா ? உங்க கூட இருக்கிறவங்க அம்மாவா? “

ஆமோதிப்பாய் தலையசைத்தவள்.  “ஃபாலோ பண்ணலனு சொல்லிட்டு என்னைப் பற்றி இவ்வளவு டீடைல்ஸ் சொல்றீங்கலே?” என அவள் மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வர, “அட ஒரே அப்பார்மெண்ட்ல இதுக்கூட தெரியாம இருக்குமாங்க? “

“உங்கள நம்ப ட்ரை பண்றேன்”

 இருவரும் பேசியவண்ணம் காபி அருந்தினர் பின்னர் விஜயிடம் விடைபெற்று தன் பிளாட்டிற்கு சென்றாள் சாக்ஷி.

 பிளாட்டை அடைந்த விஜய் முகம் கழுவி உடை மாற்றி கைபேசியை கையில் எடுத்த வண்ணம் பால்கனி பக்கம் நகர்ந்தான். 

பிடித்த பாடலை ஹம் செய்தவண்ணம் ஜெயின் எண்ணை அழுத்தினான். 

“குட் ஈவினிங்  ஜெய்”

“குட் ஈவினிங் விஜய்”

” ஆபீஸ்ல இருக்கியாடா”

” ஆமாடா, நீ?”

“ஃபிளாட்க்கு வந்துட்டேன்”

” என்ன அதிசயம் 6 மணிக்கெல்லாம் ஃபிளாட்டுக்கு வந்துட்டியா? என்னடா உடம்பு ஏதும் சரியில்லையா?” என அக்கறையாக வினவ, 

“அப்படியெல்லாம் இல்லடா நான் நல்லாத்தான் இருக்கேன்.” 

“அப்போ வேற என்ன விஷயம்? சாக்ஷிகிட்ட பேசினயா? “

“அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்…” என தொடங்கி அன்று மாலை நடந்தவற்றை ஒரு வரி விடாமல் ஒப்பித்தான் விஜய். 

“காபி குடிக்கிற லெவலுக்கு போயாச்சா? செம ஃபாஸ்ட் தான் போ” என்றான் ஜெய் கிண்டலாக

” சரி சாக்ஷி பேமிலி பத்தி ஏதாவது சொன்னாங்களா? “

“இல்ல எதுவும் சொல்லல, அவ ஃபிளாட்ல கூட ஒரு அம்மா இருக்காங்க அவ அம்மானு நினைக்கிறேன். 

“அப்பா? அன்ட் கூட பிறந்தவங்க?”

“தெரியல”

” ஓகே மொபைல் நம்பர் கொடுத்தாங்களா?” என்று ஜெய் கேட்ட பிறகு விஜய்க்கு உரைத்தது அவளின் அலைபேசி எண்ணை வாங்க மறந்தது. 

“ச்சே… மறந்துட்டேன்” என்றான் பின்னந்தலையில் தட்டிய வண்ணம். 

” நல்லது தான் விடு”

“நல்லதா? புரியல…”

“ஆமாம் நீ மீட் பண்ண முதல் நாளே நம்பர் கேட்டா அவங்க உன்னை தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு. நீ நம்பர் கேட்காததால உன்னை ஜென்டில்மேன்னு நினைச்சிருப்பாங்க”

“அப்போ நம்பர் கேட்க வேண்டாம்னு சொல்றியா?”

” அவங்களா கொடுக்குற வரைக்கும் கேட்க வேணாம்னு சொல்றேன்”

” ஓகே” 

“அப்புறம்”

  அப்பொழுது பீப் ஒலியுடன் விஜயின் செல்போன் திரை மின்னியது.

திரையை கண்ட விஜய்,”ப்ச்” என எரிச்சலாக முனக,  

“என்னாச்சுடா? ” – ஜெய்

“அக்ஷயா செகன்ட் கால்ல வரா”

“அட்டென்ட் பண்ணி பேச வேண்டியதுதானே? அவகிட்ட பேசு நான் வைக்கிறேன்” என ஜெய் தொடர்பைத் துண்டிக்க முயல, 

“இல்ல.நீ பேசு நான் இப்போ நல்ல மூடுல இருக்கேன் அவகிட்ட பேசி அதை ஸ்பாயில் பண்ண விரும்பல” என்றான் விஜய். 

“This is not fair Vijay,  அவ உன் MD. ஆபிஸ் விஷயமாக பேசகூட கால் பண்ணலாமில்லயா?  சோ பேசு நான் வைக்கிறேன்” என ஜெய் தொடர்பைத் துண்டிக்க,  அக்ஷயாவின் அழைப்பை ஏற்றான் விஜய். 

 “ஹலோ விஜய், எங்க இருக்கீங்க?” 

” என்னோட பிளாட்டில்”

” வாட்? வொர்க் எப்படி நடக்குதுன்னு பார்க்கலாம்னு  பாரத் இன்டர்நேஷனல் ஸ்கூல் வரைக்கும் வந்திருக்கேன். நீங்க எங்க என்று கேட்டால் நாலு மணிக்கே கிளம்பிட்டீங்கனு சொல்றாங்க. சரி ஏதோ வொர்க் விஷயமா போயிருக்கீங்கனு நினைச்சுட்டு உங்களுக்கு கால் பண்ணா ஹாயா பிளாட்டுக்கு வந்துட்டேன்னு சொல்றீங்க? “என அவள் பொரிய, 

“தலைவலி அதான் ஃபிளாட்டிற்கு வந்தேன்”என்றான் எரிச்சலான குரலில்.

“இதை ஏன் நீங்கள் முதலில் சொல்லவில்லை? டேப்லெட் சாப்பிட்டீங்களா ? ஹாஸ்பிடல் போனீங்களா?  நான் இப்போ வரேன் ரெடியா இருங்க ஹாஸ்பிட்டல் போகலாம்”

 அவளின் அக்கறை அவன் கோபத்தை கிளப்ப,  “ஹாஸ்பிட்டல் போயிட்டு தான் பிளாட்டுக்கு வந்தேன். நீங்க டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பேன்” என விட்டெறிந்தார் போல் பதில் மொழிந்தான்

“ஓகே டேக் கேர்” என் அழைப்பை துண்டித்தாள் அக்ஷயா.

விஜயின் இந்த நேரடி நிராகரிப்பு மனதை வாட்ட முயன்று தன்னை சமன்ப்படுத்திக் கொண்டாள் அக்ஷயா. 

தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்த ஜெய் அவனின் எதிரே இருந்த கம்யூட்டர் திரையில் பார்வை பதித்திருந்தான். பார்வை திரையில் நிலைத்திருக்க எண்ணம் எங்கோ சுழன்றுக் கொண்டிருந்தது. 

“காஃபி சாப்பிடுகிற அளவுக்கு க்ளோஸாகிட்டயா? நல்லா க்ளோஸாகு அவளை உயிரா நேசிக்க ஆரம்பி…அதுதான் எனக்கு வேணும். நான் ஏன் தெரியுமா இன்னும் அக்ஷன்ல இறங்காமல் இருக்கிறேன்? அவளை நீ உருகி உருகி நேசிச்சப்பறம் அவளை உன்கிட்ட இருந்து பிரிச்சு உன்னை கதறவிட நல்ல நேரம்ப் பார்த்துட்டிருக்கேன்டா.” என விஜயுடன் மனதில் குரோதமாக உரையாடிக்கொண்டிருந்தான் ஜெய். 

ஜெய்யின் குரோத எண்ணம் அறியாது அவனுக்கு “குட் நைட்” குறுஞ்செய்தி வாட்ஸப்பில் அனுப்பிவிட்டு உறங்கிப்போனான் விஜய். 

அலாரம் ஒலியில் தூக்கம் கலைந்து எழுந்தாள் சாக்ஷி. காலைகடனை முடித்து முகம் கழுவி பல்துலக்கிவிட்டு சமையலறையினுள் நுழைந்தாள். 

கதவில் தொங்கிக்கொண்டிருந்த பையிலிருந்த பால் பாக்கெட்டை எடுத்து பால்காய்ச்சி காஃபி கலக்கத்தொடங்கினாள். அவள் காஃபியை கோப்பையில் ஊற்றிக்கொண்டிருந்தப் போது அங்கே வந்தார் சுனந்தா. 

அவரை கண்டவள் புன்னகையுடன் காலை வணக்கத்தை மொழிந்துவிட்டு, கலந்துவைத்திருந்த காஃபியை அவரிடம் நீட்டினாள். 

“நானேப் போட்டுக்கமாட்டேனா? நீ ஏன்டா சிரமப்படுற?” என வாஞ்சையாக அவர் வினவ,  “இதுல என்ன சிரமமிருக்குமா? இரண்டு நிமிஷ வேலை இதுக்குப்போய்” என புன்னகையுடன் பதில் மொழிந்தாள். 

“சரி இன்னைக்கு உனக்கு லன்ஞ்ச் என்ன செய்யட்டும்? ” என ஃபிரிட்ஜிலிருந்த காய்கறிகளை ஆராய்ந்தப்படி சுனந்தா வினவ, 

“சுனோம்மா இன்னைக்கு சனிக்கிழமை ஸ்கூல் லீவ்” என்றாள் சாக்ஷி. 

“அப்புறம் ஏன்டா ஆறு மணிக்கே எழுந்த?  இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாமே? “

“நான் என்னைக்கு ஆறுமணிக்கு மேல தூங்கிருக்கேன்? “

“அது என்னவோ நிஜம் தான் கண்ணம்மா” என அவர் கூற புன்னகையை அவருக்கு பதிலா கொடுத்தாள். 

“சரி இன்னைக்கு ஜாகிங் போலயாடா? “

“இல்லம்மா சீமா ஊருக்கு போயிருக்கா. தனியாக ஜாகிங் போக ஒரு மாதிரியிருந்தது அதான் போகல” அங்கே ஒருவன் அவளை ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது அறியாது காலை சமையலை கவனிக்கத் தொடங்கினாள் சாக்ஷி. 

காலை நேரு பூங்காவிற்கு ஜாகிங் வந்த விஜயின் கண்கள் சாக்ஷியை தேடி அலைப்பாய்ந்தது. 

எங்கும் அவளை காணாததை கண்டு மனம் கல் பெஞ்சில் அமர்ந்து அவள் வரவிற்காக காத்திருக்க தொடங்கினான். நேரம் கடக்க மனம் சோர்வுற கைப்பேசியை எடுத்து ஜெயின் எண்ணை அழுத்தினான். 

ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்த ஜெய் செல்ப்பேசி சிணுங்க அதை உயிர்ப்பித்து ஸ்பீக்கர் மோடில் போட்டவண்ணம் ஓட்டத்தை தொடர்ந்தான். 

“குட் மார்னிங் விஜய்”

“குட் மார்னிங் ஜெய்” என சோர்வாக ஒலித்தது விஜயின் குரல். 

“என்னாச்சு விஜய் வாய்ஸ் டல்லாயிருக்கு நைட் சரியா தூங்கலயா? “

“இல்லடா நல்லா தூங்குனேன்”

“அப்புறம் என்ன? “

“சாக்ஷி ஜாகிங் வரல”

“அதான் உன் சுருதி இறங்கிடுச்சா?  இப்போ பார்க்கலனா என்ன அதான் அவங்க ஸ்கூலுக்கு போவயே அப்போ பார்த்துக்கோ ” 

“ம் சரி”

“இந்த டைம் அவங்களை மீட் பண்ணும்போது நம்பர் வாங்கு”

“சரிடா இன்னைக்கு ஆபிஸ் போகிறாயா? “

“இல்லடா இன்னைக்கு வீட்டுக்கு ரஸ்மியும் ராகுலும் வரேன்னு சொன்னாங்க அதான் ஆபிஸ் போகல” என ஜெய் கூற,  எதிர்முனையில் மௌனம் நிலவியது. 

“ராகுல் இன்னும் என் மேல கோபமாக தான் இருக்கானாடா? ” என விஜய் கேட்க இப்பொழுது மௌனம் சாதிப்பது ஜெய்யின் முறையாற்று. 

பெருமூச்சுடன், “ரஸ்மியை கேட்டதா சொல்லுடா”என குரல் கம்ம கூறிவிட்டு தொடர்பை துண்டித்தான். 

காலை ஒன்பது மணியளவில் ஒரு சிவப்பு நிற பலேனோ கார் ஜெய்யின் வீட்டின் முன் வந்து நின்றது. 

அதிலிருந்து இறங்கினர் ஜெய்யின் தங்கை ரஸ்மியும் அவளின் கணவன் ராகுலும்.

“டேய் ராகுல் வாடா வாடா” என ராகுலை இறுக்க கட்டிக்கொண்டு ஆரவாரமாக வரவேற்றான் ஜெய்.

“எப்படியிருக்க மச்சான்?”

“நல்லாயிருக்கேன்டா. நீ? “

” நல்லாயிருக்கேன்”

அவர்களின் பாசப்பினைப்பை கண்ட ரஸ்மி,  “Hello My dear brother from same mother, இங்க நான் ஒருத்தி இருக்கேன்” என தன் இருப்பை உணர்த்த,

“எப்படியிருக்கடா ரஸ்மி? ” என புன்னகையுடன் ஜெய் நலம் விசாரிக்க,

 “போண்ணா உனக்கு இப்போ தான் நான் கண்ணுல தெரிஞ்சேனா? என்னை நீ வானு கூப்பிடவேயில்ல ” என அவள் குறைப்பட 

“ரஸ்மிமா நீ இந்த வீட்டோட இளவரசிடா. இது உன் வீடு சோ உன்னை வானு வரவேற்க அவசியமில்லை ” என வாஞ்சையாக கூறினான் ஜெய். 

இவர்களின் பரிபாஷையை புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தனர் ஜெய்யின் அன்னையும் தந்தையும்.

திரிலோக்பூரில் கட்டிட வேலை நடக்கும் இடத்திற்கு வந்த விஜய் அங்கிருப்பவர்களுக்கு அன்றைய வேலையை பட்டியலிட்டு அலுவலகம் திரும்பினான். 

அவன் கேபினை அடைந்த நிமிடம் எப்பொழுதும் போல் இன்டர்-காம் அலற அதை எடுத்தவன்,” வரேன்” என்ற சொல்லோடு அதை இருந்த இடத்தில் பொருத்திவிட்டு அக்ஷயா அறையை நோக்கி விரைந்தான்.

“இப்போ தலைவலி எப்படியிருக்கு? “

‘அதான் என் தலைவலி உன் ரூபத்தில் முன்னாடி உட்கார்ந்திருக்கே’ என மனதில் எண்ணிய வண்ணம்,  “பெட்டர்” என்றான் மென்னகையோடு. 

“ஓகே, திரிலோக்பூர் சைட் வொர்க் எந்த லெவல்ல இருக்கு?”

“இப்போதான் பார்த்துட்டு வந்தேன். நெக்ஸ்ட் வீக்குள்ள வொர்க் முடிஞ்சிடும்”

“ஓகே, பாரத் இன்டர்நேஷனல் ஸ்கூல்? “

“நேத்து தான் பேஸ்மெண்ட் போட்டு முடிச்சிருக்கு மேம்”

“ஓகே விஜய். நீங்க போங்க” என அவள் கூற, ஒரு நிமிடம் தயங்கியவன், “மேம் பாரத் இன்டர்நேஷனல் ஸ்கூல்ல வொர்க் எப்படி நடக்குதுன்னு பார்க்கப் போகணும்” என்றான். ‘டேய் டேய் உன் ஆளை பார்க்க போகணும் சொல்லு’ என அவனை கிண்டலடித்தது அவனது மனசாட்சி. 

“ஒரு அரைமணி நேரம் வெயிட் பண்ணுங்க விஜய் நானும் வரேன் சேர்ந்தே போகலாம்” என அக்ஷயா கூற, ‘இதுக்கு பெயர் தான் செல்ஃப் ஆப்பு’ என நொந்தவன் சிறு தலையசைப்புடன் தன் கேபினிற்கு வந்தான். 

அரைமணிநேரத்தில் அக்ஷயா கிளம்ப விஜயும் கிளம்பினான். 

அக்ஷயா அவளின் காரின் அருகே சென்றதும். 

“மேம் நான் பைக்ல வரேன்”

“அட ஒரே இடத்துக்கு தானே போகிறோம் வாங்க ஒன்னாவே போகலாம்”

“இல்ல மேம் ஓவர் ட்ராஃபிக்கா இருக்கும் நான் பைக்லயே வரேன்”

“ஆமாம்ல ட்ராஃபிக் அதிகமாக இருக்கும்ல. நானும் உங்களுடன் உங்க பைக்லயே வரேன்” என அக்ஷயா கூற, ‘டேய் விஜய் இன்னைக்கும் உன் வாய்ல வினைடா. அவக்கூட ஒரே பைக்ல போகிறதா?  நோ சான்ஸ்… ஏதாவது சொல்லி சமாளி’ என மனதினுள் பேசிக்கொண்டு, 

“மேம் வெயில் அதிகமாக இருக்கு அன்ட் பொல்யூசன் வேற. நீங்க உங்க கார்லயே வாங்க” என்றான் விஜய் அவளை தவிர்க்கும் நோக்கத்தோடு. 

அவனின் இச்செயலை சரியாக புரிந்துக்கொண்டாள் அக்ஷயா. ‘ஓ… என்ன அவாய்ட் பண்ண நினைக்கிறயா? ‘ 

“இந்த வெயிலும் பொல்யூசன்னும் உங்களை அஃபக்ட் பண்ணாதா? “

அவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, “No more arguments, கார்ல ஏறுங்க” என கூறிவிட்டு அவள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்ப, மௌனமாக காரில் ஏறி அமர்ந்தான். 

‘அச்சோ இவகூட வந்தால் சாக்ஷிகிட்ட பேசமுடியாதே.’ என அவன் எண்ணிய வண்ணம் அமர்ந்திருக்க, 

“என்ன விஜய்? ஏதோ யோசனை இருக்குற மாதிரியிருக்கு”

“அப்படியெல்லாம் இல்லை மேம்” என்றான் மென்னகையோடு 

“விஜய் நான் ஒன்று கேட்கட்ட? ” என அவள் கேட்க, 

‘ஏடாகூடமாக எதுவும் கேட்காமல் இருந்தால் சரி’ என எண்ணிய வண்ணம் அவளை கேள்வியாக ஏறிட்டான். 

“உங்க மேரேஜ் பத்தி எதுவும் முடிவு பண்ணிருக்கீங்களா? ” என அவள் கேட்க ஒரு நொடி சாக்ஷி முகம் அவன் மனக்கண்ணில் மின்னி மறைந்தது. 

“இல்லை”

“எப்போ பண்ணுவதாக ஐடியா?”

“மேம் ப்ளீஸ் நாம வேற பேசலாம்”

“சரி, நான் நாலு மாசம் முன்னாடி ஒரு விஷயம் சொன்னேனே அதுக்கு பதில்? “

“அப்போவே நான் அதுக்கு பதில் சொன்னதாக எனக்கு ஞாபகம்”

“அந்த பதில்ல எந்த மாற்றமும் இல்லையா? “

“இல்லை”

“இதுவரை மாற்றம் இல்லாமல் இருக்கலாம். இனி வரலாமில்லையா? “

“மேம் ப்ளீஸ், அந்த டாபிக்கை விடுங்க. ப்ச்,  இதுக்கு தான் நான் என் பைக்ல வரேன்னு சொன்னேன்”, என கோபமாக கூறிவிட்டு வெளியில் வேடிக்கை பார்க்க தொடங்கினான். 

பாரத் இன்டர்நேஷனல் ஸ்கூலை நெருங்கையிலே விஜயின் மனம் சாக்ஷியின் தரிசனத்தை எதிர்ப்பார்க்கத் தொடங்கிவிட்டது. 

பள்ளியின் அமைதியே உணர்த்திவிட்டது அன்றைய தினம் விடுமுறை என்பதை ஏமாற்றத்தை தனக்குள்ளே புதைத்துக் கொண்டவன் சலிப்புடன் வேலையில் கவனத்தை திருப்பினான். 

ராகுலை கலாட்டா செய்த வண்ணம் காலை உணவை முடித்தான் ஜெய். 

“டேய் என் தங்கச்சி பக்கத்துல இல்லைனு தைரியமா?  அவ மட்டும் இப்போ இருந்திருந்தால் இப்போ சீனே வேற” என ராகுல் கூற, 

“ஆமாமா சீன் வேறதானாகிருக்கும், அவ இருந்திருந்தால் அவளையும் சேர்த்து வச்சு செஞ்சிருப்பேன்” என ஜெய் கூற, 

“Think of Devil” என ரஸ்மி வைப்பேரேட்டாகிக் கொண்டிருந்த ராகுலின் அலைப்பேசியை காட்ட, ராகுலின் தங்கையின் பெயர் அதில் மின்னி மறைந்தது. 

ரஸ்மி கையிலிருந்த ராகுலின் அலைப்பேசியை வாங்கிய ஜெய் அதை உயிர்ப்பித்த வண்ணம் தன் அறை நோக்கி விரைந்தான். 

அவன் செல்வதை கண்டு புன்னகைத்து கொண்டனர் ராகுலும் ரஸ்மியும். 

அரைமணிநேரம் கடந்த நிலையில் ஜெய்யின் அறைக்கு சென்றான் ராகுல். அறை வெறுமையாக இருக்க கண்களை சுழலவிட்டவனின் கண்களில் பால்கனியில் நின்று போன் பேசிக்கொண்டிருந்த ஜெய் தென்பட,

“டேய் இன்னுமா பேசிட்டிருக்க? ” என்றான் கிண்டலாக, சைகையிலே ஐந்து நிமிடம் என காட்டிய ஜெய் கைப்பேசியில் கவனமானான். 

“சரி” என தலையசைத்த ராகுல் கட்டிலில் அமர்ந்து அங்கிருந்த தொலைக்காட்சியை உயிர்பித்தான். 

பத்து நிமிடத்தில் கட்டிலில் இருந்த ஜெய்யின் அலைப்பேசி சினுங்க அதை நோக்கினான் ராகுல் “V” காலிங் என மின்ன, 

“ஜெய் உன் போன் அடிக்கிறதுடா” என ஜெய்யை நோக்கி குரல் கொடுத்தான் ராகுல்.

“அடென்ட் பண்ணி பேசுடா நான் பிஸியாக இருக்கேன்னு சொல்லுடா” என கூறிவிட்டு மீண்டும் கைப்பேசியில் பேசத்தொடங்கினான். 

ஜெய்யின் கைப்பேசியை உயிர்ப்பித்த ராகுல், “ஹலோ, ஜெய் கொஞ்சம் பிஸியாக இருக்கிறான் நீங்க அப்புறம் கால் பண்ணுகிறீங்களா? ” என கூறிவிட்டு எதிர்முனையில் இருந்து வரும் பதிலுக்காக காத்திருந்தான். 

“ராகுல்… ” என தழுதழுத்து ஒலித்தது விஜயின் குரல். 

விஜயின் குரலை இனம் கண்டுக்கொண்ட ராகுல் கோபத்தில் அழைப்பை துண்டித்துவிட்டு அலைப்பேசியை விசிறியடித்தான். அது அங்கிருந்த சோபாவில் விழுந்து உயிர்பிழைத்துக் கொண்டது. 

போன் பேசி முடித்த ஜெய், “யாருடா கால் பண்ணது? ” என கேட்க அவனை உறுத்து விழித்தவன் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினான்.

ராகுலின் கோபத்திற்கு காரணம் புரியாமல் தன் கைப்பேசியை நோக்கியவனுக்கு அர்த்தமாயிற்று மைத்துனனின் கோபத்திற்கான காரணம். 

“ஓ… ஷிட்…. ஏற்கனவே விஜய் மேல கொலை காண்டுல இருந்தானே” என நொந்த வண்ணம் ராகுலை தேடி விரைந்தான். 

ஹாலுக்கு வந்த ராகுல், “ரஸ்மி…. ” என கத்தினான். 

அவன் குரல் கேட்டு சமையலறையில் அன்னைக்கு உதவிக்கொண்டிருந்தவள் ஹாலுக்கு விரைந்தாள். 

அவள் அன்னை அன்பரசியும் ஹாலுக்கு வந்தார். 

“என்னங்க, எதுக்கு கூப்பிட்டீங்க?”

“கிளம்பு” 

“எங்கே? “

“நம்ம வீட்டுக்கு தான்” என்றான் தன் கோபத்தை கட்டுபடித்திக் கொண்டு, ஜெய் அவன் அருகில் வர, அவனிடம் ‘என்னாச்சு?’ என சைகையில் வினவினாள் ரஸ்மி. 

‘ஒன்றுமில்லை’ என சைகை செய்தவன்.  ராகுலிடம், “டேய் இப்போ தானே வந்தீங்க இன்னைக்கு தங்கிட்டு நாளைக்கு போகலாமில்ல? ” ஜெய் கேட்க அவனுக்கு ஆமோதிப்பாய் குரல் கொடுத்தார் அன்பரசி. 

“ஆமாம் ராகுல் நாளைக்கு போங்க”

“இல்லை அத்தை, ஆபிஸ்ல ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு அதான்” என அன்பரசி கூறிவிட்டு கண்களாலே ரஸ்மியை ‘கிளம்பு’ என பணித்தான். 

ரஸ்மியும் கிளம்ப, அவர்களிடம் விடைப்பெற்று சென்றனர் ராகுலும் ரஸ்மியும். அவர்கள் சென்றதும், “ஜெய், உனக்கும் ராகுலுக்கும் ஏதாவது பிரச்சனையா?” என அன்பரசி கேட்க, 

“ச்ச இல்லம்மா” என்றான் மறுப்பாக.

“அப்புறம் எதுக்கு அப்படி வந்த உடனே கிளம்புனாங்க? “

“அதான் சொன்னானே ஆபிஸ் வொர்க்னு” என ஜெய் கூற, அவனை நம்பாத பார்வை பார்த்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தார் அன்பரசி. 

காரில் அமர்ந்திருந்த ரஸ்மி ராகுலை முறைத்துக் கொண்டிருந்தாள்.  கோபத்தில் உழன்றுக்கொண்டிருந்த ராகுல் முதலில் இதை கவனிக்க தவறினான். 

அவளின் முறைப்பினை கண்டவன் கோபத்தை கைவிட்டபடி,  “என்னாச்சு அம்மு? ” என்றான் காதலாக. 

“அதை நான் கேட்கணும்”

“புரியல”

“நேத்து என்ன சொன்னீங்க இரண்டு நாள் அம்மா வீட்ல இருக்கலாம்னு சொன்னீங்க, இப்போ இரண்டு மணிநேரம்கூட அங்கே இருக்கவிடாமல் கூட்டி வந்துட்டீங்க” என கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டாள். 

“அம்மும்மா, ஆபிஸ் வொர்க்டா புரிஞ்சிக்கோ”

“உங்களுக்கு தானே ஆபிஸ் வொர்க். என்னை ஏன் கிளம்ப சொன்னீங்க?” என அவள் கோபமாக கேட்க பதில் கூற முடியாமல் அமைதிகாத்தான் ராகுல். 

 “ஜெய் விஜய் கூட பேசுறான் இதுதான் காரணம்னு சொல்ல முடியுமா? சொன்னா அவ சும்மாதான் விடுவாளா?” என அவன் மனசாட்சி கேட்க, 

“கண்டிப்பா சும்மாவிட மாட்டாள்” என மனசாட்சிக்கு பதிலளித்தான் ராகுல். 

“நீதான் தைரியமான ஆளாச்சே சொல்லிதான் பாரேன்” என அவன் மனசாட்சி கிண்டல் செய்ய, 

” சொன்னாஅடுத்த செகன்ட் டிவோர்ஸ் தான்” என மனசாட்சிக்கு கௌன்டர் கொடுத்தான் அவன். 

“ஹலோ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க ?” என ரஸ்மி கேட்க, 

“அம்மு உனக்கு தெரியாதா நீ இல்லாமல் என்னால் ஒரு நாள் கூட இருக்கமுடியாதுனு அதான் கூட்டிட்டு வந்தேன்”

“சரி அப்போ உங்க வொர்க்க முடிச்சுட்டு ஈவினிங் வந்து கூட்டிட்டு போயிருக்கலாமே” என அவள் விடாது வழக்கடிக்க கோபம் கிளர்ந்தது ராகுலுக்கு. 

முயன்று தன்னை கட்டுப்படுத்தி அமர்ந்திருந்தான். அவனின் பொறுமையை சோதிக்கும் அளவிற்கு ரஸ்மி வழக்கடிக்க, 

பொறுமை பறக்க காரை ஓரமாக நிறுத்தியவன், அவளின் மேவாயை பிடித்து தன் பக்கம் இழுத்தவன் ,

“ஏய் என்னதான்டி பிரச்சினை உனக்கு ? உங்க அண்ணன்காரன் மேலே ஏற்கனவே நான் கோபத்துல இருக்கேன்னு உனக்கு தெரியும் அப்படி இருந்தும் நீ கேட்டனு உன்னை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போனேன். சரி சகஜமாக இருக்கலாம்னு நினைச்சா உன் அண்ணன்காரன் என்னை வெறி ஏத்துற விஷயத்தை பண்ணுகிறான். அவங்க மேலே இருக்கிற கோபத்தை உன்கிட்ட காட்டிட கூடாதுனு நான் பொறுமையாக இருந்தா என் பொறுமையை சோதிச்சு என் கோபத்தை பயங்கரமா கிளருகிற. என்ன உன் வீட்டுக்கு போகனுமா? போ ஆனால் திரும்பி வந்துவிடாதே” என கோபமாக கர்ஜித்துவிட்டு அவள் பக்கமிருந்த கதவை திறந்துவிட்டு, 

“போ” என அவன் மீண்டும் முழங்க வெலவெலத்து போனாள் ரஸ்மி. மூன்றாண்டுகளுக்கு பின் மீண்டும் ராகுலின் ரௌத்திர முகத்தை காண்கிறாள். என்றும் தன்னை கண்டால் காதலை மட்டுமே சிந்தும் ராகுலின் கண்களில் இன்று கோபத்தை காண்கிறாள். கண்கள் உடைப்பெடுக்க கண்ணீர் துளிகள் கன்னம் தீண்டியது. கண்களை மூடி ஆழமூச்செடுத்து தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான் ராகுல். இரண்டு நிமிடத்தில் கண்களை திறந்தவன் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த ரஸ்மியை கண்டு சொல்லென வேதனை கொண்டு அவளை தன்புறம் இழுத்தவன் காற்றுபுகாத வண்ணம் இறுக்க கட்டிக்கொண்டான்.

“சாரி அம்மு, அவன் மேலே இருக்க கோபத்தை உன் மேல காட்டிடேன். சாரிடா. அழாதே அம்முமா ப்ளீஸ் அழாதேடா. சாரிடா. இத்தனை நாள் அவன் மேல இருக்கிற கோபத்தை உன் மேல காட்டிட கூடாதுனு எவ்வளவோ கன்ட்ரோலா இருந்தேன் ஆனால் என்னையும் மீறி உன்னை கஷ்டப்படுத்திட்டேன். சாரிடா” என மன்னிப்பு கோரியவண்ணம் அவள் விழிகளின் வழிந்த கண்ணீரை துடைத்து அவள் கண்களில் முத்தமிட்டான்.

அவளின் அழுகை விசும்பலாக மாறியது. மெல்ல அவனின் தோள் சாய்ந்தாள் ரஸ்மி. அவளின் தலையில் கன்னம் பதித்து மீண்டும் மன்னிப்பு வேண்டினான்.

“ப்ளீஸ் அந்த பேச்சை விடுங்க, வண்டி எடுங்க வீட்டுக்கு போகலாம்” என அவள் கூற, 

“அம்மு என் மேல கோபம் இல்லையே? ” என அவன் தவிப்பாக வினவ, மறுப்பாக தலையசைத்தான் அவனின் மனையாள்.

“நிஜமா கோபம் இல்லைல? “

“ப்ச், ராகுல் நீங்க அவன் மேல எவ்வளவு கோபமா இருந்தீங்கனு தெரியும். ஆனால் அந்த கோபத்தை நீங்க இந்த மூன்று வருஷத்தில ஒரு நாள் கூட என் மேல காட்டியது இல்ல. இன்னைக்கு நடந்ததுக்கு உங்களை நான் புரிஞ்சிக்காம பேசியது தான் காரணம்” என ரஸ்மி கூற மெல்ல அவளை அணைத்து அழுத்தமாக அவள் நெற்றியில் முத்தம் பதித்தான் அவன். 

ரஸ்மியை தங்கள் இல்லத்தில் விட்டுவிட்டு அலுவலகம் பறந்தான் ராகுல். அன்று விடுமுறை என்பதால் அந்த ஏற்றுமதி கம்பெனி அமைதியாக காணப்பட்டது. தன் அறைக்கு விரைந்தவன் சுழல் நாற்காலியில் அமர்ந்து விட்டதை வெறித்துக் கொண்டிருந்தான். 

அப்பொழுது அவன் அறையின் கதவு மெலிதாக தட்டபட, “கமின்” என்றான் தன் கம்பீர குரலில். 

அறைகதவை திறந்துக் கொண்டு வந்தவனை கண்டவன் தீயென முறைத்தான்.  ராகுல் முறைப்பை சட்டை செய்யாது ஆசுவாசகமாக ராகுல் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் அவன். 

“இப்போ எதுக்கு இப்படி முறைச்சுட்டு உட்கார்ந்திருக்க?” என அவன் கேட்க ராகுல் கண்களில் கனல் அதிகமானது. 

‘தன் கோபத்தின் காரணத்தை அறிந்தும் ஏதும் அறியாதது போல் பாவனை செய்யும் இவனை என்ன செய்தால் தகும்’ என்பதை போல் அவனை பார்த்து வைத்தான் ராகுல். 

“டேய் நான் உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் “

“ஏன் உனக்கு தெரியாதா? “

“இங்க பார் ராகுல் உனக்கு அவன்கிட்ட பேச இஷ்டமில்லனா பேசாதே “

“நீயும் பேசகூடாது” என ராகுல் கூற, 

“நான் அவன்கிட்ட பேசகூடாதுனு சொல்ற உரிமை உனக்கு இல்ல. இன்னும் சொல்லப்போனால் ரஸ்மியை பேசகூடாதுனு சொல்ற உரிமை கூட உனக்கு இல்ல” என்றான் ஜெய் காட்டமாக. 

“எனக்கு உரிமை இல்லயா?  ரஸ்மி என்னோட மனைவி”

“அதுக்கு முன்னாடி அவ எங்க தங்கச்சி”

“அவன் பண்ணதெல்லாம் எப்படிடா உன்னால மறக்கமுடிந்தது?” என ராகுல் கேட்க அவனை மௌனமாக ஏறிட்டான் ஜெய்.

“அக்ஷி மேல உன் அளவுக்கு யாரும் பாசம் வைக்கலனு மார்தட்டிட்டு திரிஞ்சியே, இப்போ எங்கடா போச்சு அந்த பாசம்? ” என அவன் கேட்க, 

‘இன்னும் கர்வமாக சொல்வேன்டா என் அளவுக்கு யாரும் அக்ஷி மேல பாசம் வைக்கலனு. நான் எந்த அளவுக்கு அவ மேல பாசம் வைத்திருக்கேன்னு நீ இன்னும் கொஞ்ச நாள்ல உணரத்தான் போகிறாய் ராகுல்’ என நினைத்தவன், மௌனமாக அங்கே மேஜையின் மீதுதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிய வண்ணம் அமர்ந்திருந்தான். 

அவனின் செயலில் எரிச்சலான ராகுல் சட்டென அவன் கையில் இருந்த பேப்பர் வெயிட்டை பறித்தான். 

ராகுலை நிதானமாக ஏறிட்டான் ஜெய். “சரி நான் கிளம்புகிறேன்” என இருக்கையிலிருந்து எழ, ” நீ எதுக்கு வந்தனு சொல்லாமலே கிளம்புகிற ?” என கேட்டான் ராகுல். 

“கோபமாக வந்தாயேனு சமாதானப்படுத்த வந்தேன்,  இப்போ அது நடக்கிற காரியம் இல்லனு தெரிஞ்சிடுச்சு அதான் எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும் கிளம்பிட்டேன்” என உரைத்துவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான் ஜெய். 

அன்றைய வேலைகளை நெட்டித் தள்ளிய விஜய் தன் ஃபிளாட்டிற்கு புறப்பட்டான். செல்லும் வழியில் ஒரு புத்தக கடை வாசலில் சாக்ஷி நிற்பதை கண்டவன் அவள் அருகில் சென்று தன் பைக்கை நிறுத்தினான்.

கைப்பேசியில் கவனமாக இருந்தவள் தன்னை ஒட்டி ஒரு இருசக்கர வாகன நிறுத்தப்பட கோபமாக நிமிர்ந்தாள்.  எதிரில் மோகன புன்னகையோடு நின்றிருந்தான் விஜய். 

மென்புன்னகையோடு, “ஹலோ மேடம், என்ன ஆளையே பார்க்கமுடியல? ” விஜய் கேட்க, 

“நேற்று ஈவினிங் தானே பார்த்தீங்க அதுக்குள்ள பார்த்து பல வருஷமான மாதிரி விசாரிக்கிறீங்க? ” என்றாள் சாக்ஷி.

“இல்லைங்க மார்னிங் பார்க்ல பார்க்கமுடியல, ஸ்கூலையும் பார்க்கமுடியல அதான் கேட்டேன் “

“இன்னைக்கு ஃப்ரண்ட் வரல சோ மார்னிங் ஜாகிங் வரல. அன்ட் இன்னைக்கு ஸ்கூல் லீவ் அப்பறம் ஏன் நான் அங்க போகப்போகிறேன்”

“ஒகே, காஃபி சாப்பிட்டிங்களா?” என விஜய் கேட்க மறுப்பாக தலையசைத்தாள். 

“அப்போ காஃபி சாப்பிட போகலாமா? ” என விஜய் கேட்க அவனை தீயென முறைத்தாள் அவள். 

“அட ஏங்க?  நீங்க தானே ஒரு வாரத்துக்கு ஈவினிங் காஃபி வாங்கி தர ஒத்துக்கிட்டிங்க. இப்போ காஃபி சாப்பிடப் போகலாமானு கேட்டா முறைக்கிறிங்க?  திஸ் இஸ் நாட் ஃபார்” என விஜய் தோளை குலுக்கினான். 

“கண்ணம்மா அந்த புக் ஸ்டாக் இல்லையாம். அடுத்த வாரம் தான் வருமாம்” என கூறியப்படி அங்கே வந்தார் சுனந்தா. 

அவளின் அருகே நின்ற புதியவனை கண்டவர் திகைத்து, “தம்பி…..? ” கேள்வியாக அவளை ஏறிட்டார். 

“ஹலோ ஆன்ட்டி, நான் விஜய். இவங்களோட ஃப்ரண்ட் ” என சுனந்தாவிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான் விஜய். 

“ஃப்ரண்டா? ” என கேள்வியாக அவர் சாக்ஷியை ஏறிட ஆமோதிப்பாய் தலையசைத்தாள் அவள். 

“ஆனால் கண்ணம்மா… ” என அவர் ஏதோ உரைக்க வாயெடுக்க, 

“என்னாச்சு ஆன்ட்டி ?” என வினவினான் விஜய். 

“இல்லை என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் சுனோம்மாக்கு தெரியும். இதுக்கு முன்னாடி உங்களை பார்த்ததில்லையே கேட்கிறாங்க. அதானேம்மா? ” என சாக்ஷி கேட்க, அவள் விழி மொழியினைக் கண்டவர் அமோதிப்பாய் தலையசைத்தார். 

  “ஓ அப்படியா, நான் இவங்களோட புது ஃப்ரண்ட் நேத்து தான் ஃப்ரண்ட்ஸானோம் ” என விளக்கினான் விஜய். 

“சரி தம்பி நாங்க கிளம்புகிறோம்” என கிளம்ப முனைய, 

“ஆன்ட்டி நீங்க என் கூட காஃபி சாப்பிட வந்தால் நான் சந்தோஷப்படுவேன் ” என விஜய் கேட்க அவர் மகளை ஏறிட்டார். 

“இல்லை தம்பி இன்னொரு நாள் வருகிறோம் ” என விடைப்பெறுவதிலே முனைப்பாய் இருந்தார் அவர். அவருக்கு மகளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. 

“ப்ளீஸ் ஆன்ட்டி”என அவன் மீண்டும் வேண்ட

“சரிப்பா போகலாம்” என உரைத்தவர் மகளோடு அருகிலிருந்த காஃபி ஷாப்பிற்குள் நுழைந்தார். 

சாக்ஷியும் சுனந்தாவும் அருகருகே அமர, அவர்களின் எதிர் இருக்கையில் அமர்ந்தான் விஜய். 

“தம்பி எங்க தங்கிருக்கிங்க? “

“உங்க அப்பார்ட்மண்டல தான் ஆன்ட்டி ஃபிளாட் நம்பர் 212”

“அப்படியா?  நீங்க டெல்லி வந்து எத்தனை நாளாகுது? “

“ஒரு வருஷமாகுது ஆன்ட்டி.”

“நான் உங்களை பார்த்ததில்லையே?”

“இரண்டு வாரம் முன்னாடி தான் ஆன்ட்டி இந்த ஏரியாக்கு குடிவந்தேன் “

“அதுக்கு முன்னாடி? “

“அதுக்கு முன்னாடி வேற ஒரு ஏரியால தங்கியிருந்தேன் அங்க இருந்து என்னோட ஆபிஸ் ரொம்ப தூரம் தினமும் வர போக சிரமமாக இருந்ததுனு வீடு மாறிட்டேன் ஆன்ட்டி”

“இப்போ சிரமம் ஏதும் இல்லையே? “

“இல்லை ஆன்ட்டி இங்கிருந்து பத்து நிமிஷ தூரம் தான்”

“நல்லது. இங்க வருவதுக்கு முன்னாடி எங்க வேலை செய்திங்க? “

“சென்னைல ஸ்டார் பில்டர்ஸோட ஹெட் ஆபிஸ்ல ஆன்ட்டி” 

அந்த நேரம் வெயிட்டர் வர அவர்களுக்கு தேவையானவற்றை உரைத்தனர். தன் கையிலிருந்த சிறுகுறிப்பேட்டில் அவர்கள் கூறியவற்றை குறித்துக் கொண்டு நகர்ந்தான் அந்த பணியாள். 

அவர்களுக்கு அருகே இருந்த மேஜையில் அமர்ந்தான் ஒருவன். தனக்கு ஒரு காஃபியை வரவலைத்தவன் அதை உறிஞ்சியவண்ணம் இவர்களை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தான். 

தன் கைப்பேசியில் யாரும் அறியா வண்ணம் அவர்களை புகைப்படமெடுத்து ஒரு எண்ணிற்கு அனுப்பினான். 

“அப்புறம் தம்பி… ” என கேட்க சுனந்தா வாயெடுக்க, 

“சுனோம்மா லேட்டாகுது காஃபியை குடிங்க போகலாம்” என சாக்ஷிக் கூற, தன் மணிக்கட்டை திருப்பி நேரம்ப் பார்த்தார் ஆறு மணியாக ஐந்து நிமிடம் இருப்பதாக காட்டியது. 

“அச்சோ லேட்டாகிடுச்சே, சரி தம்பி இன்னொரு நாள் பார்க்கலாம். கரெக்ட்டா ஆறு மணிக்கு என் பையன் வீடியோ கால் பண்ணுவான். லேட்டானா சத்தம்ப் போடுவான். நம்ம வீடு A Blockல தான் இருக்கு ஃபிளாட் நம்பர் 105. நேரம் கிடைத்தால் வாங்க. நாங்க வருகிறோம்.” என விஜயிடம் படபடவென்று மொழிந்துவிட்டு சாக்ஷியை அழைத்துக் கொண்டு விடைப்பெற்று கிளம்பினார் சுனந்தா. 

சிறுதலையசைப்புடன் விஜய்யிடம் விடைப்பெற்றாள் சாக்ஷி. 

அவர்களுக்கு விடைக்கொடுத்தவன் பில் வர அதற்கான பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து அகன்றான். 

இவர்களை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தவன் கைப்பேசி அலற அதை எடுத்து செவிக்கு கொடுத்தான் அவன். 

எடுத்த எடுப்பிலே, “டேய் முட்டாள் முட்டாள், நான் என்ன பண்ண சொன்னா நீ பண்ணி வைத்திருக்க” என ஜெய்யின் குரல் கர்ஜனையாக கேட்க, 

“இன்னா சார் ஆச்சு? ” என கேட்டான் அவன் 

“என்ன நொன்னா சார்ராச்சு?  நான் அந்த பொண்ணை தானே போட்டோ எடுத்து அனுப்ப சொன்னேன்”

“ஆமா சார். அத்ததானே நானும் பண்ணேன்”என குழப்பமாக அவன் கேட்க. 

“டேய் நீ அனுப்பின போட்டோவை பார்” என ஜெய் மீண்டும் உறும, 

“ஒரு நிமிட் சார்” என கூறிவிட்டு தான் எடுத்த புகைப்படத்தை பார்த்தான். விஜய் மற்றும் சுனந்தா முகம் மட்டுமே அதில் தெளிவாக தெரிந்தது. சாக்ஷியை மறைத்த வண்ணம் நின்றிருந்தான் வெயிட்டர். 

“மன்னிச்சுக்கோ சார். எனக்கு இந்த கருமம்பிடிச்ச டச் போனை யூஸ் பண்ண தெரியல. தட்டுறது தூக்குறதுனா இந்நேரம் சுலூவா முடிச்சிருப்பேன். நீ இன்னாடா நோட்டம்விட்டு உனக்கு தகவல் மட்டும் சொல்ல சொல்ற”

“நான் சொல்றதை மட்டும் செய். அதிகம் பேசாதே. இப்போ அந்த பொண்ணை மட்டும் தெளிவா போட்டோ எடுத்து அனுப்பு”

“சார் அவங்க நீ போன் பண்ணும்போதே கிளம்பி போய்ட்டாங்க” என அவன் கூற, மேலும் ஜெய்யிடமிருந்த சில வசவுகளை பெற்றான் அவன். 

“சார் நான் அவங்களை பாலோ பண்ணிப் போய் போட்டோ எடுக்கவா” என அவன் கேட்க, 

“நீ ஆணியே புடுங்க வேணாம் ” என கோபமாக மொழிந்துவிட்டு தொடர்பை துண்டித்தான் ஜெய். 

“முகம் தெரியாத எதிரிக்கூட மோதுவதுக் கூட நல்லாதான் இருக்கு” என மனதில் நினைத்த ஜெய். 

“சாக்ஷி லெட்ஸ் வெயிட் ஃபார் தி ஆக்சன் ” என்றான் கண்களில் கனலோடு. 

-தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.