Loading

இப்போது பகிரியில் நீலா தொடங்கிய குழுவை கண்ட தேனு “என்ன அண்ணி குரூப்லாம் கிரீட் பண்ணி இருக்கீங்க, எதுக்கு” 

 

“அதுவா, எனக்கு இந்த மாதிரி குரூப்ல சட் பண்ண ரொம்ப பிடிக்கும், அது மட்டும் இல்லாம யாருக்காவது எதாவது விஷயம் சொல்லணும்ன்னா தனி தனியா சொல்ல வேண்டாம் குரூப்ல போட்டா எல்லாரும் பாத்துக்களாம்ல, டைம் சேவிங் கூட” 

 

“ரொம்ப அறிவு தான் அண்ணி உங்களுக்கு, ஆனாலும் இந்த ஐடியா கூட நல்லா தான் இருக்கு” 

 

ஆனால், இங்கே குணவோ அவள் பகிரியில் தனக்கு தனியாக அனுப்பி இருந்த செய்தியை பார்க்க அதில் “டேய் மாங்கா, அந்த குரூப் உனக்காக ரெடி பண்ணினது தான் டா, இந்த குரூப்ல தான் உன்ன குளிக்கும் போது எடுத்த போட்டோஸ வரைட்டி வரைட்டியா எடிட் பண்ணி போடலாம்ன்னு இருக்கேன் ஆனா, இது போடாம இருக்கணும்னா அது உன்கைல இருக்கு, எப்படி வசதி” என்ற அவள் அனுப்பி இருந்த செய்தியை படித்துவிட்டு, அவளை முறைக்க நீலாவோ, அவனை நக்கலாக பார்த்தாள்.

 

இப்போது கோவத்தில் வேகமாக எழுந்து அவனின் அறைக்கு சென்று கோவத்தில் சுவற்றில் கையை குத்தி கொண்டியிருந்தான்.

 

இவன் சென்ற சிறிது நேரம் கழித்து நீலாவும் அறைக்கு வந்து, அவன் கோவத்தை கண்டவள் “டேய் டேய், இப்படிலாம் கோவபடுறது உடம்புக்கு நல்லதுக்கு இல்ல டா, நமக்கே இப்போ தான் கல்யாணம் ஆயிருக்கு, அதுக்குள்ள நீ போயி சேந்துட்டேனா என்னால தாங்கிக்க முடியுமா சொல்லு” 

 

“வேண்டாம் டி, என் பவர் தெரியாம என்கிட்ட மோதுற அப்புறம் ரொம்ப வருத்தபடுவ”

“பவரா என்ன பவர், சோலார் பவரா இல்ல தெர்மல் பவரா” 

 

“என்னடி கொழுப்பா, உன் கொழுப்ப ஒருநாள் அடக்குரேனா இல்லையான்னு பாரு” 

 

“எல்லாத்தையும் தப்பு தப்பா சொல்லுற, கொழுப்ப அடக்க முடியாது,  குறைக்க தான் முடியும், ஆல்ரெடி நான் டயட்ல இருந்து குறைச்சிட்டு தான் இருக்கேன் சோ, உனக்கு சிரமம் வேண்டாம்”

 

“சரி, நீ என்ன சொன்னாலும் கேக்குறேன், முதல எல்லாம் டெலீட் பண்ணு” 

 

“இந்த கத எல்லாம் என்கிட்ட வேண்டாம் முதல, நான் சொன்னதெல்லாம் செய் அப்புறம், நான் டெலீட் பண்றேன் நல்லா ஞாபகம் வச்சுக்கோ, உன் குடுமி என் கைல” என்று கூறிவிட்டு அறையில் இருந்து வெளியே சென்றாள்.

 

போகும், அவளையே காட்டமாக பார்த்தான்.

 

இப்போது அனைவரும் சாப்பிட்டு விட்டு உறங்கினார்கள்.

 

மறுநாள் காலையில், நீலா வேலைக்கு கிளம்பும் முன்னரே இருவரும், அவர்களின் கல்யாண பதிவை போய் பதிவு செய்து விட்டு வந்தார்கள்.

 

இப்படியே நான்கு நாட்கள் கழிந்தன,

 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் விடுமுறை என்பதால் குகனும் இங்கேயே தங்கி விட்டான்.

 

மறுநாள் பொழுது விடிய,

 

சீக்கிரமாக எழுந்த தேனு சமையல் அறைக்குள் வந்து, தன் அன்னையிடம் இருந்து தேநீரை வாங்கி கொண்டு மொட்டை மாடி ஏறி வந்தாள்.

 

ஆனால், அங்கு அவளுக்கு முன்னாடியே மாடியில் குகன் கையில்லா டி ஷர்ட் டிராக் சூட்டில் குணாவின் உடற்பயிற்சி ஆயுதத்தை வைத்து கொண்டு உடற்பயிற்சி செய்து கொண்டியிருந்தான்.

 

அவன் நிற்பதை பார்த்தும் பார்க்காதது போல் காலை பொழுதை ரசித்தவாரு தேநீர் குடித்து கொண்டியிருந்தாள்.

 

ஆனால், குகனோ அவளையே தான் பார்த்தவாரு உடற்பயிற்சி செய்து கொண்டியிருந்தான்.

 

இப்போது குகன் “ஓய்” 

 

தேனு, அவனை ஒரு புருவம் உயர்த்தி என்ன என்பது போல் பார்த்தாள்.

 

அதற்கு குகன் “ஏய், எதுக்கு என்ன சைட் அடிக்குற, அதுவும் நான் பாக்கும் போது எதுவும் தெரியாது மாதிரி திரும்பிக்குற, தைரியம் இருந்தா நேருக்கு நேரா சைட் அடிக்க வேண்டி தான” என்று அவளை வம்புக்கு இழுத்தான், இருந்தாலும் அவனின் அழகை அவளும் ரசிக்க தான் செய்தாள்.

 

அதை கேட்டவள் “ஆமா, இவரு பெரிய ஹீரோ சூர்யா, இவரு ஜிம் பாடிய பாத்து மயங்கி சைட் அடிக்குரோமாக்கோம்  நினைப்பு தான் புலப்ப கெடுக்குமாம்” 

 

“ஏய், நான் பண்ணினது தப்பு தான்டி, அத இல்லன்னு சொல்லல அப்போ நான் இருந்த மன நிலமைல என்ன பண்றதுன்னு தெரியாம பண்ணிட்டேன் அதுக்காக, இப்படி யாரோ மாதிரி பேசி என்ன வெறுக்காத டி, என்னால தாங்கிக்க முடியல, முதல நான் ஏன் அப்படி பண்ணேன் தெரியுமா” 

 

“இங்க பாருங்க, எனக்கு உங்க எக்பளனேஷன்லாம் தேவை இல்லாதது ஏன், நான் அத கேக்கவும் விரும்பல பிளீஸ், அகைன் அண்ட் அகைன் என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க” 

 

“ஏன் டி, என்ன சாவடிக்குற, நான் சொல்லுறத கேளு டி” 

 

“நான் சொல்லுறத நல்லா கேட்டுக்கோங்க, எனக்கு முக்கியமான பிடிச்ச பொருள் தொலைஞ்சா தொலைஞ்சத நினைச்சி கொஞ்சம் நேரம் ஃபீல் பண்ணுவனே தவிர, அத திருப்பி தேடவும் மாட்டேன் தேடனும்ன்னு நினைக்வும் மாட்டேன், ஏதோ நமக்கு இவ்வளவு தான் கொடுத்து வச்சதுன்னு போயிட்டேயிருப்பேன், பொருள் மட்டும் இல்ல, அது யாரா இருந்தாலும் இப்படி தான் போயிட்டே இருப்பேன்” 

 

“தைரியம் இருந்தா, என் கண்ண பாத்து சொல்லு, உனக்கு என்ன பிடிக்காதுன்னு, அப்புறம் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” 

 

“உங்களுக்கு புருவ் பண்ணி நிரூபிக்க வேண்டிய அவசியம், எனக்கு இல்ல” 

 

“எனக்கு தெரியும் டி, நீ பயப்படுற, எங்க என் கண்ணா பாத்தா நான் சொல்லுறதெல்லாம் உண்மை ஆயிடும்ன்னு பயப்படுற அப்போ, உனக்கு இன்னும் என்ன பிடிச்சி இருக்குங்குறது உண்மை தான்னு ஒத்துக்கோ” 

 

“சரி, உங்க சல்லெங்ச்ச நான் அக்ஸபட் பண்றேன்”

 

இப்போது குகனும் தேனுவும் ஒருவரின் கண்களை ஒருவர் பார்க்க, இருவரின் பார்வையும் ஒரு சேர குகன், அவளிடம் தன் கண்களாலே மன்னிப்பு கேட்டு கொண்டியிருந்தான்.

 

ஆனால், தேன்மொழியால் ஒரு நிமிடத்திற்கு மேல் அவன் கண்ணை காண முடியவில்லை இருப்பினும் தன் உணர்ச்சிகளை கட்டு படுத்தி கொண்டு அவன் கண்களையே நோக்க,

 

அவளால் முடியவில்லை இறுதியில் அழுதவாரே மாடியில் இருந்து இறங்கி அவளின் அறைக்கு ஓடினாள்.

 

போகும், அவளையே பார்த்த குகன் “எனக்கு தெரியும், நீ என்ன லவ் பண்றேன்னு, இருக்குற காதல இல்லன்னு உன்னால எப்படி பொய் சொல்ல முடியும் தேனு மா, ஆனா நீ என்ன ஏத்துக்கவும் முடியாம, வேண்டாம்ன்னு விடவும் முடியாம தவிச்சிக்கிட்டு இருக்க, நான் பண்ணின தப்புக்கு என்ன விட, நீ தான் வலிய அதிகமா அனுபவிக்குற, உன்ன இப்படி பாக்க என்னால முடியல டி, லவ் யூ அண்ட் சாரி தேனு மா” என்று மனதிற்குள் நினைத்தவாரு, தன் கண்களில் வரும் தண்ணீரை துடைத்தான்.

 

இப்போது அறைக்கு சென்ற தேன்மொழி படுக்கையில் குப்புறை படுத்து கதறி அழுதவாரு “என்னால உன்ன ஏத்துக்கவும் முடியல வெறுக்கவும் முடியல, ஏன் டா இப்படி பண்ண தினம் தினம் செத்துட்டு இருக்கேன், நீ தான் என்னோட உலகம்ன்னு நினைக்கும் போது, பாதிலயே ஏன் டா என்ன அம்போன்னு விட்டுட்டு போன, ஏன் டா விட்டுட்டு போன” என்று கூறி அழுதவாரு தலையணை அடித்தாள்.

******

 

இப்போது ஒரு கார் ஒரு வீட்டின் கேட்டை தான்டி உள்ளே வந்ததும், அந்த வீட்டியில் வேலை செய்யும் பணியாளர் வந்து, அந்த கார் கதவை திறக்க, காரில் இருந்து ஒரு ஐந்தரை அடி உயரம், உயரத்திற்கு ஏற்ற எடையோடு மாநிறம் கொண்டு வெள்ளை சட்டை மற்றும் வேஸ்டியுடன் பார்பதற்கு அரசியால்வாதி போன்று கம்பீரமான ஒருத்தர் இறங்கி வேகமாக வீட்டிற்குள் சென்றார் .

 

உள்ளே சென்றவர், அங்கு இருக்கும் சோஃபாவில் அமர்ந்து இருக்க “டாட் , எப்போ வந்தீங்க” என்று கேட்டவாரு அவரின் மகன் வர,

 

“டேய், நான் கேள்வி பட்டதெல்லாம் உண்மையா” 

 

“எத பத்தி கேக்குறீங்க, டாட்”

 

“அதான் டா, இந்த குணா பையன் நீலாவ கல்யாணம் பண்ணிக்கிட்டானமே” 

 

“ஆமா டாட் , இந்த சம்பவம் முடிஞ்சி மூணு நாள் ஆயிடுச்சு, அது மட்டுமில்ல அவள பலி வாங்க தான் கல்யாணம் பண்ணி இருக்கான்னு நினைக்கேன் ஆனா, அவ சொன்னத யாரும் அவ வீட்டுல நம்பல போல அதுனால அவள வீட்ட விட்டு துரத்திட்டாங்க, நேத்து அவள, குணா வீட்டுல தான் பாத்தேன், ஒருவேள அங்க தான் இருக்களோ என்னமோ” 

 

“டேய் நான் ஒரு பிளான் பண்ணி அவளலாம் யாரும் இல்லாம ஆனாதையா நடு தெருல நிக்க வைக்கணும்ன்னு நினைச்சேன், ஆனா நடக்கல இருந்தாலும் அவள வீட்ட விட்டு விரட்டிடாங்கள இனி நான் யாருன்னு அவளுக்கு காட்டுறேன்” என்று மகனிடம் கூறி கொண்டியிருக்க,

 

அப்போது குணா, குகன் இருவரும் அவரின் வீட்டிருக்கு வந்தார்கள்.

 

“என்ன பெரிப்பா, இன்னைக்கு தான் ஊருக்கு வாரேன்னு ஒரு வார்த்த கூட சொல்லல” 

 

“ஆமா, இங்க யாரு தான் ஒரு வார்த்த சொல்லுறா, எல்லாம் தானே முடிவு எடுக்குற அளவுக்கு வந்துட்டாங்க”

 

“இப்போ, எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு பேசுறீங்க, டைரக்ட்டாவே கேட்டுற வேண்டி தான” 

 

“பின்ன என்ன டா, நான் ஒருத்தன் உசுரோட தான இருக்கேன், நீ பாட்டுக்கு அவ கழுத்துல தாலிய கட்டி வீட்டுல கூட்டு வந்து வச்சிருக்க, பின்ன பெரிய மனுஷன்னு நான் எதுக்கு இருக்கேன், ஒரு வார்த்த, எனக்கு அந்த நீலாவா தான் பிடிச்சி இருக்கு பெரிப்பான்னு சொன்னா நான் வேண்டாம்ன்னா சொல்ல போறேன், அதவிட்டுட்டு யார்கிட்டேயும் ஒரு வார்த்த கூட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வந்துருக்கியே, நீ என்ன யாரும் இல்லாத அனாதையா டா”

 

“ஆமா அனாத இல்ல தான், நீங்க சொல்லுற மாதிரி உங்ககிட்ட சொல்லிட்டு அவ கழுத்துல தாலிய கட்ட, நான் ஒன்னும் அவள பிடிச்சி போய் கட்டிக்கலயே, அவள பலி வாங்க இத தவிர எனக்கு வேற ஐடியா கிடைக்கல, அதான் யாருக்கும் சொல்லாம அவள மண்டப்பத்துல இருந்து தூக்கிட்டு போய் தாலிய கட்டிட்டேன், இப்போ அவ யாரும் இல்லாத அனாதையா இருக்கா, ஏன் அவள பெத்தவங்களே அவள வேண்டாம்ன்னு துரத்திட்டாங்க இத விட பெரிய வலி அவளுக்கு இருக்க முடியுமா, இதெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சி தான் அவ கழுத்துல தாலியவே கட்டினேன், 

 

இதுலயும் வழியே இல்லாம என்கூடவே இருக்கா, இனி அவள ஈசியா பலி வாங்கலாம் தினம் தினம் நரகம்ன்னா என்னன்னு காட்டுவேன், அப்புறம் அவளோட உயிரா நினைக்கிற, அந்த ரெஸ்டாரன்ட்ட தட்டி பறிக்கிறது தான் என்னோட அடுத்த வேல கூடிய சீக்கிரம் அதையும் நடத்தி காட்டுறேன்” 

 

அவரோ, அவனை நம்பாத பார்வை பார்க்க,

 

அதற்கு குணா “என்ன பெரிப்பா, நான் சொல்லுறதுல நம்பிக்க இல்லையா”

 

“டேய், நீ என் இரத்தம் டா உன்ன நம்பாம இருப்பேனா ஆனா, அவளுக்கு இந்த வலிலாம் போதாது இன்னும் அவள வச்சி செய்யனும்”

 

“கண்டிப்பா பெரிப்பா நம்மள, ஏன் பாத்தோம்ன்னு அவ நினைச்சு வருத்தபடனும் பட வைப்பேன், இவ அனுபவிக்குற ஒவ்வொரு வலியையும் தாங்கிக்க முடியாம சாகவா வாழவான்னு அவ துடிக்கணும், கண்டிப்பா துடிப்பா பாத்துட்டே இருங்க” 

 

“என்னமோ பண்ணி தொல, சீக்கிரம் முதல அவ ரெஸ்டாரன்ட்ட அவகிட்ட இருந்து பிடுங்கனும்” 

 

“சிறப்பா செஞ்சிடலாம் பெரிப்பா” 

 

இப்போது அவர் “ஆமா டா , உனக்கு முகத்துல, அங்க அங்க சேவந்து இருக்கே என்னாச்சி எப்படி காயம் வந்துடு” 

 

அதற்கு குகன் “மச்சான், அதான் பெரிப்பா கேக்குறாருல சொல்லு டா” என்று நக்கலாக சிரித்தபடி, அவன் காதில் மட்டும் கூற,

 

அதற்கு குணா “தெரியுது மூடு” 

 

“அது ஒன்னும் இல்ல பெரிப்பா, சோப் மாத்தினது பிடிக்காம அலர்ஜி ஆயிடுச்சுன்னு டாக்டர் சொன்னாங்க” 

 

அதற்கு அவர் “சரி டா , இனி பாத்து கவனமா இரு” என்று கூறி கொண்டியிருக்க,

 

அப்போது குணாவின் திறன் பேசி அடித்தது எடுத்து பார்த்தவன் யாரு என்று தெரிந்தும் அழைப்பை நிராகரித்தான் .

 

இப்படியே விடாமல் ஒலிக்க, அவன் நிராகரித்து கொண்டு இருப்பதை கண்டவர் “டேய் யாரு டா அது, விடாம ஃபோன் போடுறா , என்னன்னு பேச வேண்டிய தான” 

 

“தேனு தான் போடுறா ஃப்ரெண்ட் வீட்டுக்கு படிக்க போகனும், என்ன ஃபக்ல ட்ராப் பண்ணுவீயான்னு கேட்டா, சரி பெரிப்பா வீட்டுக்கு போயிட்டு பணம் கொடுத்துட்டு வாரேன் சொல்லிட்டு வந்தேன்” என்று நீலாவை தேனு என்று பொய் கூற,

 

“என்ன பணம் டா” 

 

“அது வந்து, இந்த மாசம் நம்ம ரைஸ் மில் காச விக்ரம்ட கொடுத்துட்டு போலாம்ன்னு வந்தேன், என் கைல இருந்தா எதாவது அவசரத்துல செலவு பண்ணிட கூடாதுல , இப்போ நீங்க வந்ததும் நல்லதா போச்சு, இந்தாங்க” என்று கூறி, பணத்தை கையில் கொடுத்தான்

 

“ஏன் டா, நீ செலவு பண்ணனா, நான் என்ன உன்ன குத்தமா சொல்ல போறேன், வேணும்ன்னா எடுத்துக்க வேண்டி தான”

 

“பெரிப்பா, என்ன இருந்தாலும் உங்க கைல கொடுத்து, நீங்க கொடுக்குற காச வாங்குறது தான் எனக்கு விருப்பம்ன்னு உங்களுக்கு தெரியாதா, புதுசா பேசுறீங்க”

 

“டேய் படவா சொன்ன கேக்க மாட்ட, இந்தா புடி” என்று அதில் இருந்த பாதி பணத்தை, அவன் கையில் கொடுத்துவிட்டு,

 

“டேய் குகா, இந்தா இது உனக்கு” 

 

“எனக்கு எதுக்கு பெரிப்பா, இந்த மாசம் வேல பாத்து சம்பள காசு இருக்கு, எனக்கு வேணும்ன்னா கேக்குறேன்”

 

“நீ வாங்குற சம்பள காசுல, பாதி எனக்கு தந்துருத பின்ன உனக்கு அந்த பாதி எப்படி டா காணும்” 

 

“இங்க பாருங்க பெரிப்பா, எனக்கு அப்பா இருந்துருந்தா அவர்கிட்ட பாதி காசு கொடுத்துட்டு மீதிய தான், நான் வாங்கிட்டு போயிருப்பேன் ஆனா, என்ன அப்பா இடத்தில இருந்து படிக்க வச்சது நீங்க தான அப்போ உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடம” 

 

“சரி டா பெரிய மனுசா, உன் இஷ்டம்” 

 

இங்கு குணாவிற்கு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க

 

அதை கண்டவன் “சரியான இம்சையா, இருப்பா போல, இப்போ என்னத்துக்கு இப்படி விடாம டார்ச்சர் பண்றா” என்று மனதிற்குள் நினைத்தவாரு வரும் அழைப்புகளை நிராகரித்தான்.

 

மறுபடி மறுபடியும் நீலா அழைப்பதால் பொறுமை இழந்தவன் “சரி பெரிப்பா அப்போ நாங்க கிளம்புறோம், தேனு ஃபோன் அடிச்சுட்டே இருக்கா” என்று கூறிவிட்டு, வெளியே வந்தார்கள்.

 

இப்போது வெளியே வந்தவன், நீலாவின் அழைப்பை ஏற்று “ஏய் என்ன இழவுக்கு டி இப்படி விடாம கால் பண்ணி தொலைக்குற” 

 

அதற்கு மறுமுனையில் இருந்த நீலா “டேய், உன்ன நான் லவ் பண்றேன் பாரு அதான், உன் குரல கேக்க அலஞ்சிட்டு இருக்கேன், உனக்கு கால் பண்ணி உன்கிட்ட  பேசி வாங்குறேன் பாத்தியா என் கிரகம்” 

 

“தோடா கிரகமாம்ல கிரகம், நான் சொல்ல வேண்டியது எல்லாம் நீ சொல்லிட்டு இருக்கியா” 

 

“இங்க பாரு, எனக்கு இப்போ  உன்கிட்ட வெட்டியா பேசிட்டு இருக்க நேரமில்ல அதுனால, நீ என்ன பண்ற நேரா வீட்டுக்கு வந்து, நம்ம ரூம்ல செல்ஃப்ல வச்சி இருக்குற ரெண்டு பைல்ஸ்ம், என்னோட ஹேன்ட் பேக்கையும் எடுத்துட்டு பத்து நிமிசத்தில, என் ரெஸ்டாரன்ட்க்கு வார” 

 

“என்ன டி, நான் என்ன நீ வச்ச ஆளா, உன் இஷ்டத்துக்கு அதிகாரம் பண்ற”

 

“நான், ஏதோ வேணும்ன்னே வச்சிட்டு போய் உன்ன எடுத்துட்டு வர சொல்லுற மாதிரி பண்ற, ரெஜிஸ்டர் ஆபீஸ் போற அவசரத்துல மறந்து வச்சிட்டு வந்துட்டேன், அதான் வேற வழியே இல்லாம உன்கிட்ட உதவி கேக்க வேண்டியதா போச்சு” 

 

“இங்க பாரு வேணும்ன்னா வீட்டுக்கு வந்து எடுத்துட்டு போ, அதவிட்டுட்டு என்ன அதிகாரம் பண்ணாத”

 

“சார் இதுக்கு மேல, நீங்க சரி பட்டு வர மாட்டீங்க, உங்க சம்பவத்த ரிலீஸ் பண்ணிற வேண்டிய நேரம் வந்துடுச்சு” 

 

“ஏய், அப்படி எதுவும் பண்ணி தொலச்சிடாத வந்து தொலைக்குறேன், முதல ஃபோன வைய்” என்று கூறி அழைப்பை அணைத்தான்.

 

இதை எல்லாம் கண்ட குகன் “என்ன மச்சான், யாரு போன்ல தங்கச்சியா”

 

“ஆமா, ஏதோ ஃபைல வச்சிட்டு போயிட்டாளாம், நான் போய் எடுத்து கொடுக்கணுமாம்” என்று கூற, அவனை குகன் ஏற இறங்க பார்த்துவிட்டு 

 

“மச்சான் ஏதோ பண்ணி தொலைச்சிதாதே அப்படின்னு, நீ சொன்ன மாதிரி கேட்டுச்சு, எதுக்கு அப்படி சொன்ன” 

 

“அய்யோ, இவன் வேற கேள்வியா கேக்குறானே சமாளிப்போம்” என்று மனதிற்குள் நினைத்து விட்டு,

 

“அது ஒன்னும் இல்ல மச்சான், ஃபைல் எடுத்துட்டு வரலன்னா வீட்ட விட்டு போயிடுவேன்னு பிளாக் மெயில் பண்றா”என்று கூறி, அவன் திருமணம் முடிந்து இரவு வீட்டில் நடந்ததை  அவனிடம் கூறினான்.

 

அதை கேட்டவன் சிரிக்க,

 

அதற்கு, அவனை தீயாய் முறைக்க,

 

அதை கண்ட குகன் “சரி முறைக்காத, அடுத்து கால் வருறதுக்குள்ள போய் தங்கச்சி கிட்ட ஃபைல் எடுத்து கொடுத்துட்டு வராலாம் வா” 

 

குணாவிற்கும், அது தான் சரியென பட நொடியும் தாமதிக்காமல் வண்டி எடுத்து வீட்டிற்கு சென்றவன், அவனின் அறைக்கு சென்று எரிச்சலாக, அந்த கோப்புவை எடுத்தவாரு, குகன் உடன் வண்டியில் ரெஸ்டாரன்ட் நோக்கி சென்றான்.

தொடரும்…

                          -ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்