சாதனாவிற்கு வேலை சம்பந்தபட்ட அனைத்தையும் சொல்லி கொடுத்தவாரே அடிக்கடி, அவளை பார்பதற்கும் மறக்கவில்லை ( ஐ மீன் சைட் அடிக்குறான்)
இப்படியே நேரங்கள் ஓட வேலை முடியும் நேரம் வந்தது,
இப்போது சாதனா “ஓகே, நான் கிளம்புறேன் நாளைக்கு பாக்கலாம்”
அதை கேட்டவனின் மனம், அவளை பிரிய மனம் இல்லாமல் சோகத்தில் தவிக்க,
அதை வெளிகட்டும் விதமாக, அப்போது பாலு தன் திறன் பேசியில் நண்பனுக்காக பாட்டை ஒலிக்க விட்டான்.
“நீ போகாத என்ன விட்டு என்கண்ணே உன் முன்னே என் உசுர தவியா தவிக்கவிட்டுப்புட்டு”
இதை கேட்டவள் பாலுவிடம் “என்ன, சிச்சுவேஷன் சாங்கா”
இப்போது ஈஸ்வர் “டேய் மச்சான், இப்போ இது ரொம்ப முக்கியமா” என்று அவனின் காதுக்கு மட்டும் கேட்ட படி கூற,
“மச்சான், இந்த நேரத்துல உன்னோட மனசுல உள்ள ஃபீலிங்ஸ், எனக்கு புரியுது அதான், அவளுக்கும் புரியனும்ன்னு ஒரு ஃப்ரெண்ட்டா ஹெல்ப் பண்ண வேண்டியது என் கடமல மச்சான், அத சரியா செய்யனும்ல, அதான் செய்றேன்”
“டேய் , ஒரு மண்ணாங்கட்டியும் புடுங்க வேண்டாம், மூடிட்டு போயிடு” என்று கூற,
அவனும் தள்ளி நின்றான்.
அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு சாதனாவின்
இதழ் சிறிது விரியதான் செய்தது, இருப்பினும் கட்டுபடுத்தி கொண்டவள் “சரி டைம் ஆயிடுச்சு, நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.
போகும், அவளையே ஏக்கமாக பார்த்து கொண்டிருக்க,
அப்போது பாலு “என்ன மச்சான், ஃபீலிங்கா”
“டேய், கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டியா, கொய்யால உன்ன” என்று கூறி அவனை துரத்த, பாலுவும் அவனின் பிடியில் இருந்து தப்பித்தவாரு ஓடினான்.
*********************************
இப்போது வேலை முடியும் நேரம் வர நீலா “டேய் மாடு, டைம் ஆயிடுச்சு வீட்டுக்கு கிளம்பலாமா என்று கேட்டு கொண்டிருக்க, அப்போது மீனு வருவதை
கண்டவன், அப்படியே மீனு பின்னே செல்ல,
அதை கண்ட நீலா “நாசமா போச்சு , அவ வந்ததும் என்ன கழட்டி விட்டுட்டு மந்திரிச்ச பொம்ம மாதிரி, அப்படியே அவ பின்னாடியே போறானே, இன்னும் என்ன டார்ச்சர்லாம் பண்ண போறானோ” என்று தனக்கு தானே புலம்பிவிட்டு வண்டியை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
இப்போது மீனுவின் பின்னே கொண்டிருந்த மாதேஷை கண்டவள் “என்ன இவன், எங்க போனாலும் பின்னாலேயே வந்து டார்ச்சர் பண்றான், என்ன தான் இவன் பிரச்சன” என்று மனதிற்குள் நினைத்தவள் வேகமாக திரும்பி அவனின் எதிரே வந்து நின்றவாரு “இப்போ, உங்களுக்கு என்ன தான் பிராப்ளம், எதுக்குங்க, என் பின்னாடி வாரீங்க”
“ஹலோ ரோட்ல யார் நடந்து வந்தாலும் அவங்க, உன் பின்னால வருறதா அர்த்தமா”
“இம்ச பண்றானே” என்று மனதில் நினைத்துவிட்டு, வேகமாக நடந்தவள் பேருந்து நிறுத்தும் இடத்தில் இருந்த பேருந்தில் ஏற பின்னயே அவனும் ஏறி அவளுடனே சென்று இறங்கினான்.
பேருந்தில் இருந்து இறங்கியவள் அவளின் வீட்டை நோக்கி நடந்தவாரு வீட்டின் வாசலுக்கு வந்தவள்.
அவன் பின்னயே வருவதை கண்டு எங்கே அவன் வீட்டினுள் வந்து விடுவானோ என்று அஞ்சி வேகமாக உள்ளே சென்று வாயில் கதவை, அவனை முறைத்தவாரு மூடிவிட்டு வீட்டின் உள்ளே சென்றாள்.
இவன் பின் தொடர்ந்து வந்ததையும் மீனு அவனை கண்டு அஞ்சி வாயில் கதவை மூடியதை அனைத்தையும், அவளின் தந்தை பார்த்துவிட்டு தான் சென்றார்.
இப்போது உள்ளே வந்து கோவமாக தன் கைப்பையை, அங்கு இருந்த சோஃபாவில் எறிந்தவள் “அம்மா காபி” என்று கத்தியவாரு சோஃபாவில், தன் தந்தையின் அருகே அமர்ந்தாள்.
இப்போது, அவளின் தந்தை “என்னாச்சி மா, இன்னைக்கு ரொம்ப தலை வலி போல”
“ஆமா அப்பா, இன்னைக்கு ஒருத்தன் ரெஸ்டாரன்ட்ல பயங்கரமா டார்ச்சர் பண்ணிட்டான், அவன நினைச்சால கடுப்பாகுது, சரியான இம்சையா இருக்கான்”
அப்போது, அவளின் அம்மா தேநீரை கொடுத்து விட்டு, அவளின் எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்தவாரு “யாரு டி, இம்ச பண்றான்”
“அவனும், அந்த ரெஸ்டாரன்ட் முதலாளி தான்மா, நான் வொர்க் ஜாயின் பண்ணும் போது, ஏதோ வேல விஷயமா ஆறு மாசம் சென்னை போயிருந்திருக்கான், அதுனால இன்னைக்கு தான் அவன பாக்குறேன், அவன் சரியான இம்சை புடிச்சவனா இருக்கான், அவன பாத்தாலே காண்டாகுது” என்று கூறி தேநீரை குடித்து கொண்டிருக்க,
அப்போது, அவளின் தந்தை “யாரு மா அவன், நீ வரும் போது உன் பின்னாடியே வந்தானே, அவனா”
அதில் அதிர்ச்சியானவளுக்கு பொறை ஏற பொறை ஏறியதில் தன் வாயில் இருந்த தேநீரை டம்ளரியிலே துப்பிவிட்டு இருமி கொண்டிருந்தாள்.
இப்போது, அவளின் அப்பா வேகமாக எழுந்து, அவளின் தலையில் தன் கை கொண்டு தட்டிவிட்டார்.
அதற்கு மீனு “அத விடுங்க, அப்போ நீங்க அவன் பின்னால வந்தத பாத்தீங்களா”
“அட ஆமா மீனு மா, அவன் வந்தத மட்டும் இல்ல, எங்க விட்டா அவன் நம்ம வீட்டுக்குள்ளையே வந்துருவானோன்னு பயத்துல, நீ வேகமா வந்து கேட் லாக் பண்ணுணதையும் சேத்து தான் பாத்தேன், அப்போ நீ சொன்ன இம்ச, இவன் தான”
“அட ஆமா அப்பா, அவனுக்கு என்ன பிடிச்சு இருக்காம், லவ் பண்றேன் சொல்லி, போற இடத்துக்குலாம் வந்து இம்ச பண்றான், இன்னைக்கு காலைல என்ன நடந்துச்சுனா” என்று கூறி, அவன் காலையில் இருந்து செய்த இம்சையை அவளின் பெற்றோரிடம் கூறி முடித்தாள்.
அவளின் தாய் “மீனு மா, அவன் பாக்க எப்படி இருந்தான், நல்லா குணமா அவன் வீடு எங்க இருக்கு, பெத்தவங்க என்ன பண்றாங்க” என்று வரிசையாக கேள்வி கேட்டு பொறிந்து தள்ளி விட்டார்.
அதை கேட்டவள் “எம்மா கொஞ்சம் நிறுத்துரீயா, விட்டா அவன் ஜாதகமே கேப்ப போல”
“ஆமா டி, நல்ல பையன் நல்ல குணமானவனா இருந்தா பேசி முடிச்சிட வேண்டி தான” என்று அவள் கூறிய கூற்றில் பே பே என்று விழிக்க,
இப்போது, அவளின் தந்தை “இவ ஒருத்தி கேள்வியா கேட்டுகிட்டு, அவ கடக்கா, நீ சொல்லு மா உனக்கு அந்த பையன பிடிச்சி இருக்கா” என்று கேட்டதும்,
மீனு அதிர்ந்தே விட்டாள்.
இப்போது மீனு “என்ன அப்பா, நீங்களுமா”
“இல்ல மா, அந்த பையன பாக்க நல்ல பையனா தான் தெரியுறான், ஒருவேள உனக்கும் அவன பிடிச்சி இருந்தா பெத்தவங்களா பிள்ளைங்க ஆசைய நிறைவேத்தி வைக்கிறது தான , எங்க கடம”
அதற்கு மீனு “நல்லவங்களா இருக்கலாம் அதுக்குன்னு, உங்கள மாதிரி இவ்வளவு நல்லவங்களா இருக்க கூடாது..அவன இன்னைக்கு தான் பாத்து இருக்கேன், அதுக்குள்ள அவன பிடிச்சி இருக்கான்னு கேட்டா என்ன சொல்லுறதுன்னு எனக்கு தெரியல, ஒருவேள எனக்கு அவன பிடிக்கும் போது கண்டிப்பா சொல்றேன், அப்போ கல்யாணம் பண்ணி வைங்க, இப்போ என்ன ஆள விடுங்க எனக்கு ஒரு விஷயம் புரியல எல்லா வீட்டுலயும் லவ் பன்றவங்கள வீட்ட விட்டு துரத்தி பாத்துருக்கேன் ஆனா, இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் லவ் பன்றீயான்னு கேட்டு சப்போர்ட் பண்ற பரென்ஸ்ஸ அதுவும் உங்க மூளியமா தான் பாக்குறேன்” என்று கூறி அறைக்கு சென்றாள்.
**********************************
இப்போது வீட்டிற்கு வந்த நீலா தன்னை சுத்த படுத்தி கொண்டு சிவகாமியிடமும் தேனுவிடமும் சிறிது நேரம் பேசி கொண்டிருக்க,
அப்போது குகனும் குணாவும் வந்தார்கள்.
ப்ளீச்சிங் பவுடர் தன் உடம்பில் பட்டதால் உடம்பில் ஒரு சில இடங்களில் சிறு சிறு காயங்கள் சிவந்திருந்தன
அதை கண்ட நீலா சிரித்தாள்.
இப்போது சிவகாமி “டேய் என்னடா சண்டைக்கு போன சேவல் எங்க சருக்குச்சு”
“அது ஒன்னும் இல்லாம, குளிக்கும் போது சோப் இல்லன்னு பையன் ப்ளீச்சிங் பவுடர் யூஸ் பண்ணி குளிச்சி இருக்காப்புல, அதுல வந்த காயம் தான், ஹாஸ்பிட்டல் போய் இஞ்செக்சன் போட்டாச்சு மருந்து மாத்திரை எல்லாம் எழுதி கொடுத்து இருக்காங்க, போட்டா சரி ஆயிடும்”
அதை கேட்ட நீலாவால் தான் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரிக்க,
அவள் சிரிக்கவும் , அனைவரும் அவளை தான் ஆச்சிரியமா பார்த்தார்கள் ஆனால் குணா மட்டும், அவளை எரிப்பது போல் முறைத்து கொண்டிருந்தான்.
இப்போது நீலா “தேனு, எப்போவும் தன்ன
ஜெயிக்க யாரலையும் முடியாதுன்னு ஆனவத்துல திரிஞ்ச முயல ஆமை ஜெயிக்கும் போது எல்லாரும் அந்த முயல முட்டாள்ன்னு சொன்னாங்கலாம், அத நினைக்கும் போது இப்போ சிரிப்பு வருது”
இதை கேட்ட குகன் “மச்சான் தங்கச்சி உன்ன தான் சொல்றான்னு நினைக்கேன்”
“தெரியுது மூடு”
“நக்கலாடி பண்ற, இரு உன்ன ஒரு நாள் வச்சி செய்றேன்” என்று மனதிற்குள் நினைத்தவாரு, அவளையே முறைத்து கொண்டிருந்தான்.
இதை கண்டவள் “என்ன, இந்த கிங்காங் நம்மள பாத்து இப்படி முறைக்குறான் ஏற்கனவே கொடுத்தது பத்தல போல, என்ன பண்ணலாம்” என்று யோசித்து கொண்டிருக்க,
குணா அம்மாவிடமிருந்து அலைபேசியை வாங்கியவள், சிறிது நேரம், அதை நோண்டி எதையோ கண்டவள், அதை வைத்துவிட்டு தன் திறன் பேசியை எடுத்து, அதை சிறிது நேரம் நோண்டிவிட்டு குணாவை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்தாள்.
இப்போது குகன் குணா தேன்மொழி மூவரின் திறன் பேசிலும் ஒரே நேரத்தில் டோயிங் என்று சத்தம் கேட்க,
மூவரும், அவர் அவரின் திறன் பேசியை பார்த்தார்கள்.