இப்போது, இரயில் நிலையம் உள்ளே நுழைந்ததும் தன் உடமைகளை எடுத்து கொண்டு தயாராக வாசலில் முன் நின்றவன், இரயிலின் வேகம் குறைந்ததும் தக் என்று குதித்து, அந்த இரயிலில் உள்ளவர்கள் இறங்கும் முன்னே இறங்கியவன், கேத்தாக கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு இரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து சிறிது தூரம் நடந்தவன்.
“அட இன்னைக்குன்னு பாக்க வெயில் மண்டைய பொலக்குதே ரொம்ப டைரேட்டா வேற இருக்கு, என்ன பண்ணலாம்” என்று யோசித்தவாரு சுற்றும் முற்றும் பார்த்தவன், இளநீர் கடைக்கு சென்று இளநீர் வாங்கி குடித்து கொண்டிருக்க,
அப்போது, அந்த கடையில் இருந்த வானொலியில் “கோலி சோடா 2 என்ற படத்தில் உள்ள பாடல், இப்போது உங்களுக்காக” என்று கூறி முடித்தும் பாடல் ஒளி பரப்பாகிறது .
அந்த வானொலியில் ஓடும் பாடலை ரசித்தவாரு இளநீர் பருகி கொண்டு இருக்க,
“கணக்கா கண்ண எடுத்து என்ன ஏண்டி பாத்து போறகூட்டி கொஞ்சம் கழிச்சு பார்த்தா மிச்சமா நீ வார”
இந்த வரி ஒலிக்கும் போது எதற்சியாக திரும்பியவன் தன் எதிரே வரும், ஒரு பெண்ணை கண்டதும் இளநீரை கீழே போட்டவாரு, ஸ்ட்ராவை மட்டும் வாயில் வைத்த படி, அவளை விழித்து பார்த்து கொண்டிருக்க, அவனின் பார்வைக்கு ஏற்ற வரி, இந்த பாடலில் ஒலித்தது,
“என் பொண்டாட்டி நீ பொண்டாடி நீ தாண்டி என் செல்ல குட்டி செல்ல குட்டி நீதாண்டி என் மனசில் உன் மனச இப்போ ஜோடி சேக்குறியே”
இப்போது, இந்த பாடல் முடியவும் தான் அவள் தன்னை விட்டு ரொம்ப தூரம் சென்றுவிட்டாள் என்று எண்ணி வேகமாக தான் குடித்த இளநீருக்கு பணம் கொடுத்து விட்டு, அவளின் பின்னே ஓடி வந்து இரண்டு மீட்டர் தூரம் இடைவெளி விட்டு, அவளை பின் தொடர்ந்து நடந்தான்.
தன்னை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்த, அவள் மெதுவாக திரும்பி பார்த்துவிட்டு ஒரு இடத்தில் நின்றாள்.
அதை கண்ட, அவனும் அவளை விட்டு இரண்டு மீட்டர் தூரம் இடைவெளியிலே நின்றான்.
அதை கண்டவள், மறுபடியும் நடந்துவிட்டு நிற்க்க, அவனும் நடந்து விட்டு நின்றான்.
“யார் இவன் ரொம்ப நேரமா நம்மலையே ஃபாலோ பண்றான், என்னன்னு கேட்டுருவோமா வேண்டாம், தேவை இல்லாத பிரச்சனை ஆயிடுச்சுனா என்ன பண்றது, இன்னைக்கு என்ன சைட் அடிப்பான் நாளைக்கு வேற ஒருத்திய பார்த்துட்டு போயிடுவான், எதுக்கு வம்பு பேசாம அவன கண்டுக்காம போறது தான் நல்லது” என்று கூறி பெண்ணவள் வேகமாக நடக்க அப்போது, அவள் கழுத்தில் இருந்த அடையாள அட்டை கீழே விழுவது கூட கவனிக்காமல் வேக எட்டு வைத்து நடந்து கொண்டிருந்தாள்.
அவளின் அடையாள அட்டை விழுந்ததை கண்டவன், அதை கையில் எடுத்து ஒரு நிமிடம் அதை நோட்டமிட்டடு, கையில் ஏந்தியபடி, அவளின் பின்னால் வந்தவாரே “ஹலோ”
“அய்யோ, இவன் நம்மள தான் கூப்பிடுறான்” என்று பயந்தவாரு இன்னும் தன் நடையின் வேகம் அதிகரித்து கொண்டே தான் இருந்தது
அவள் கேட்காமல் செல்வதை கண்டு பொறுமை இழந்தவன் “ஏய் மீனு குட்டி, உன்ன தான்”
அதை கேட்டவளின் இதயம் படபடக்க “என்னோட பேரு எப்படி இவனுக்கு தெரியும்” என்று பயந்தவாரு, தன் நடையின் வேகம் குறைந்து மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்.
இப்போது அவன் “உன் பேரு மீனாட்சி, நீ சாரா ரெஸ்டாரன்ட்ல வொர்க் பண்ற அப்புறம், உன்னோட வயசு 24 , 7502467810 இது உன்னோட ஃபோன் நம்பரு, இந்த டீடைல்ஸ் போதுமா இல்ல வேற எதுவும் வேணுமா, மீனு குட்டி நில்லு டி, அப்புறம் நிக்காம போனதுக்கு ரொம்ப வருத்தபடுவ, அப்புறம் உன் இஷ்டம்”
அதில் கடுப்பானவள் திரும்பி அவனின் அருகே “ஏய் யாரு யாரு டா நீ, எதுக்கு என்ன ஃபாலோ பண்ற, மரியாதையா போயிடு, நானும் பொறுமையா போலாம்ன்னு போயிட்டு இருந்தா, நீ ரொம்ப தான் ஓவரா பண்ற, இதுக்கு மேல என் பின்னால பாலோ பண்றத பாத்தேன் நல்லா இருக்காது சொல்லிட்டேன்”
அதை கேட்டவன் “எம்மா தாயே கொஞ்சம் நிருத்துறீயா இதோ, இதான் உன் ஐடென்டிட்டி கார்டு, இத பாத்து தான் உன்ன பத்தின டிடைல்ஸ் சொன்னேன், நீ நினைக்கிற மாதிரி உன்ன பாலோலாம் பண்ணல, நான் வருற வழில உன் கார்ட் கீழே கிடந்துச்சு அதான் அத எடுத்து உன்கிட்ட கொடுக்கலாம்ன்னு உன் பின்னால வந்தேன், நீ தான் ஏதோ, நான் உன்ன நான் கடத்த போறவன் மாதிரி பயந்து ஓட்டமா ஓடுன, அதான் உன்ன ஸ்டாப் பான்றதுக்காக, உன்னோட ஐடெண்டி கார்டு பாத்து டீடைல்ஸ் சொன்னேன் போதுமா, இந்த விளக்கம்”
அவன் கூறியதை கேட்டவள் , தன் தலையில் அடித்துவிட்டு “ஈஈஈ…”என்று இளித்தவாரு “சாரிங்க , உங்கள தப்பா நினைச்சிட்டேன், இந்த ஏரியால இப்படி தான் அடிக்கடி பொறுக்கி பசங்களாம் பொண்ணுங்கள சைட் அடிச்சி டீஸ் பண்ணுவாங்க, அதான் நீங்க பாலோ பண்ணினதும், என்ன சைட் அடிக்குறீங்கன்னு தப்பா நினைச்சிட்டேன்”
அதற்கு அவன் “உன்ன இன்னைக்கு தான், முத முத பாக்குறேன் ஆனா, உன்ன பாத்ததுமே நீ தான் என் பொண்டாட்டியா வரணும்ன்னு முடிவு பண்ணிட்டேன், இதுவரைக்கும் எந்த பொண்ணு பின்னாலயும் போனது இல்ல, சத்தியமா சொல்றேன் டி உன்ன பாத்ததும் விழுந்துட்டேன், ஐ லவ் யூ மீனு குட்டி”
“ஏய், நீ என்ன பைத்தியமா, இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் பாத்தேன்னு சொல்லுற, அது எப்படி டா உங்களுக்குலாம் பாத்ததும் லவ் வருது..இப்போ சொல்றேன் கேட்டுக்கோ எனக்கு, இந்த பாத்ததும் வருற காதல் மேல துளியும் நம்பிக்க இல்ல, ஏன் இனியும் வராது, நான் இவ்வளவு சொல்லியும் நீ என் பின்னாடி தான் வருவேன்னு வந்தேன்னு வை, அப்புறம் உன்ன போலீஸ்ல தான் புடிச்சி கொடுப்பேன், மைண்ட் இட் ” என்று கூறிவிட்டு, தன் அடையாள அட்டை கூட அவனிடம் இருந்து வாங்காமல், அங்கு வந்து ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி சென்றாள்.
போகும் அவளை பார்த்தவாரு “போ டி போ, நீ தான் என்னோட பொண்டாட்டி அதுல எந்த மாற்றமும் இல்ல, அப்புறம் ஒரு லவ்வரா உன்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டியது என்னோட கடம அதையும் செய்வேன், வெயிட் அண்ட் வாட்ச்” என்று கூறிவிட்டு அவனும், அவளின் அடையாள அட்டையுடன், ஒரு ஆட்டோவில் ஏறி சென்றான்.
************************************
இங்கு , அவன் சென்றதும் நீலாவும் சாப்பிட்டு விட்டு தேனுவின் உத்தரவோடு அவளின் வண்டியை எடுத்து கொண்டு சாரா ரெஸ்டாரன்ட்டை நோக்கி வந்தாள்.
அவள், வந்த சிறிது நேரத்தில் மீனாட்சியும் வந்து சேர்ந்தாள்.
இப்படியே, அவர்கள் வேலை செய்து கொண்டிருக்க,
திடீரென்று ஒரு ஆடவன் “எக்ஸ்க்யூஸ் மீ, ஒன் காபி பிளீஸ்” என்று, அங்கு வேலை செய்பவர்களிடம் குறல் கொடுத்தான்.
அந்த குரலை கேட்டவளுக்கு எங்கையோ கேட்டது
போல் தோன்ற உடனே திரும்பியவள், அந்த ஆடவனை கண்டு அதிர்ச்சியில் கண்கள் ரெண்டும் விரிந்தது.
அவனை கண்டவள், வேகமாக அவனின் அருகே வந்து “டேய் நீயா, நான் அவ்வளவு தூரம் சொல்லியும் கேக்காம இங்கையும் ஃபாலோ பண்ணிட்டு வந்துட்டீயா, ஏன் டா இப்படி என் உயிர வாங்குற”
அதற்கு அவன் “ரிலாக்ஸ் மீனு குட்டி”
“டேய் குட்டி கிட்டின்ன, அப்புறம் பல்ல உடச்சு கைல கொடுத்துருவேன்”
“ஏய், இந்த ரெஸ்டாரன்ட்ல, நான் காபி குடிக்க வந்தது, ஒரு குத்தமா”
“ஓ அப்படின்னா, இப்போ நான் போயிட்டு வருறதுக்குள்ள, நீ காபிய குடிச்சிட்டு இடத்த காலி பண்ணி இருக்கணும், சொல்லிட்டேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.
அப்போது நீலாவோ திறன் பேசியை கையில் வைத்து வாரு, ஏதோ கோப்புவை புரட்டி பாத்து கொண்டிருக்க,
அவளை கண்டவன் காபி வந்ததும், அந்த காபி கோப்பையை கையில் ஏந்தியவாரு
அவளின் பின் புறம் வந்து “பே பே..” என்று கத்த, அவனின் கத்தலில் பயந்தவள் கையில் வைத்திருந்த திறன் பேசியை நழுவவிட்டவாரு, தன் இரு கைகளையும் காதில் வைத்தபடி கண்களை மூடி கொண்டாள்.
இப்போது, அவள் நழுவவிட்ட திறன் பேசியை குனிந்து பிடித்தவன், அவளின் முன்னே திறன் பேசியை நீட்டி நின்றவாரு விசில் அடிக்க, இதெல்லாம் வைத்தே தன்னை பதற விட்டவன் யாரு என்பதை உணர்ந்தவள், தன் கண்களை திறந்து அவன் கையில் இருந்த தன் திறன் பேசியை வெடுக்கென்று பிடிங்கி விட்டு மறுபடியும் கோப்புவை புரட்டி கொண்டிருந்தாள்.
“ஏய் முனிமா பாரு டி” என்று கையை பிடித்து இழுக்க,
தன் கை மேல் இருந்த, அவனின் கையை தட்டி விட்டவள், மறுபடியும் கோப்புவையே புரட்டினாள்.
“ஏய் முனிமா, என்ன தான்டி உன் பிரச்சன”
“டேய் மாடு” என்று கூறி, அவனை தன் கைகளால் அடிக்க, அவள் அடித்ததில் வலி எடுக்க “ஆ வலிக்குது டி, முனிமா”
“நல்லா வலிக்கட்டும்”
“சாரி டி முனிமா, கோவபடாத நான் வேணும்ன்னே பண்ணல”
இப்போது, அவன் சென்று விட்டானா என்று பார்ப்பதற்காக வந்த மீனு, அவன் நீலாவிடம் பேசுவதை கண்டு அதிர்ச்சி கலந்த பயத்தில் நிற்க்க,
இங்கு நீலாவோ “டேய் போன மாசத்துல இருந்து நேத்து வர ஒரு கால் மெசேஜ்ன்னு எதுவுமே இல்ல, நீ என்னடான்னா சாரி கேட்டு ஈஸியா எஸ்கேப் ஆகலாம்ன்னு பாக்குறீயா, மரியாதையா மூடிட்டு போயிடு இல்லன்னா அசிங்கமா எதாவது பேசிட போறேன்”
அதை கேட்டதும் தன் கோப்பையில் இருந்த மொத்த காப்பியையும் மடகென்று குடித்து முடித்து ஓரமாக வைத்தவன்,
அவளிடம் “ஏய் போன மாசம் என்னோட ஃபோன் தண்ணிக்குள்ள விழுந்து ரிப்பேர் ஆயிடுச்சு டி, இருக்கிற பிஸில ஃபோன் வாங்க கடைக்கு போகவே டைம் இல்ல, அப்புறம் ஃபோன் ரிப்பேராகி ரெண்டு வாரம் கழிச்சி தான் நியூ ஃபோன் வாங்குனேன், வாங்குனதும் உனக்கு தான் கால் பண்ணனும்ன்னு நினைச்சேன், பட் உன் நம்பர் ஞாபகம் இல்ல, சரி உன்னோட மேரேஜ்க்கு எப்படியும் ஒன் வீக் முன்னால வர தான போறேன், அப்போ பேசிக்கலாம்ன்னு நினைச்சா, அந்த சொட்ட தலையேன் அதெல்லாம் நோ லீவ் காண்ட்ராக்ட் படி நீங்க, உங்க ஆறு மாசம் வொர்க் முடிஞ்சி தான் போகணும்ன்னு சொல்லிட்டான் இருந்தாலும், நான் மறுபடி மறுபடியும் பேசி பாத்தேன் சொட்ட இறங்கி வரல அப்புறம், நான் என்ன பண்ண முடியும்” என்று பாவமாக கூற,
“சரி சரி மூஞ்ச இப்படி கேவலமா வைக்காத, பாக்க முடியல”
இப்போது எதற்சியாக திரும்பியவனின் கண்ணில் மீனு விழ அவளை கண்டு சிரித்துவிட்டு, “ஏய் முனிமா, நான் உன் ரெஸ்டாரன்ட் வர வழில இந்த ஐடென்டி கார்ட் கீழ கிடந்துச்சு அதுவும், இல்லாம நம்ம ரெஸ்டாரன்ட் நேம் இருந்துச்சா, அதான் கொடுக்கலாமேன்னு எடுத்துட்டு வந்தேன், இந்தா டி” என்று கூறியவாரு, அவன் பையில் இருந்த மீனுவின் அடையாள அட்டையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
இப்போது, இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் பயந்தவாரே நீலாவின் அருகில் வந்து கொண்டிருக்க,
அவளை கண்ட நீலா “ஏய் மீனு”
“என்ன சொன்னான்னு தெரியலையே” என்று மனதில் நினைத்துவிட்டு அவனை முறைத்தவாரு, அவளின் அருகில் வந்து,
என்ன கேக்க போகிறாள் என்பதை அறியாதவள் “மம், அவன் சொன்னதெல்லாம் நம்பாதீங்க நான் எதுவுமே பண்ணல, இவன் தான் என்ன லவ் பண்றேன்னு, இப்போ என் பின்னால சுத்தி டார்ச்சர் பண்றான்”
அவள் கூறியதை கேட்ட நீலா விழிகள் விரித்து, அவனை பார்க்க,
அவனோ நீலாவை கண்ட “ஈஈ..” என்று இளித்து கொண்டிருக்க,
“அடியே மீனு குட்டி, ஐடென்டி கார்ட் கொடுக்க தான உன்ன கூப்பிட்டேன் கடைசில அத என்கிட்ட இருந்து வாங்கமலயே போயிட்ட அதான் உன்ன தேடி இவ்வளவு தூரம் வர வேண்டியதா போச்சு”
நொடியும் தாமதிக்காமல் கீழே குனிந்து பார்த்தவள் “ச்சை, இவன் பண்ண டார்ச்சர்ல ஐடென்டி கார்ட் வாங்கவே மறந்துட்டேன் போல” என்று எண்ணியவாரு, அவனை தீயாய் முறைத்தாள்.
இவர்கள் பேசுவதை பார்த்த நீலா தான் மண்டை குழம்பியவாரு பே பபே என்று விழித்தாள்.
இப்போது, அவன் நீலாவின் கையில் இருந்த அடையாள அட்டையை பிடிங்கி அவளிடம் கொடுக்க,
அவளும் வெடுக்கென்று வாங்கி கொண்டாள்.
“டேய் மாடு, அவ என்னடான்னா நீ லவ் டார்ச்சர் பண்றேன்னு சொல்லுறா, நீ என்னடான்னா மீனு குட்டின்னு சொல்லுற என்ன டா நடக்குது, இங்க”
இவர்கள், இருவரும் பேசுவதை கேட்ட மீனு “மம், இவன உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா”
“ஹான் , உனக்கு தெரியாதுல இவன் தான் மாடு”
அதை கேட்டு மீனு வாயில் கைவைத்தவாரு சிரிக்க,
அதை கண்டவன் “ஏய், ஏன் டி அசிங்க படுத்துற ஒழுங்க சொல்லி தொல” என்று கோவமாக கூறினான்.
“சாரி டா, ஏதோ பழக்க தோஷத்துல சொல்லிட்டேன்”
“சாரி, இவன் பேரு மாதேஷ் எல்லாரும் மாதுன்னு கூப்பிடுவாங்க, நான் அவன கிண்டல் அடிக்கிறதுக்காக மாதுவ மாடுன்னு கூப்பிடுவேன், அந்த பழக்கத்துல உன்கிட்ட அப்படி சொல்லிட்டேன் தப்பா நினைச்சிக்காத,அப்புறம் மீனு நானும் இவனும் சேந்து தான் இந்த ரெஸ்டாரன்ட் ரன் பண்றோம்”
இப்போது கண்களை உருட்டியவாரு அவனை விழிக்க,
அதை கண்டவன் “ரொம்ப முழிக்காத கண்ணு வெளிய விழுந்துற போகுது”
இப்போது மீனு “என்ன மம் சொல்லுறீங்க”
“ஆமா மீனு, இவன் வேற யாருமில்ல சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ், சோ ரெண்டு பேரும் பார்ட்னர்ஸா, இந்த ரெஸ்டாரன்ட்ட ரன் பண்றோம், நீ வொர்க் ஜாயின் பண்ற முன்னாடி, இவனுக்கு ஒரு முக்கியமான வொர்க்கா சிக்ஸ் மந்த்ஸ் இருக்கிற மாதிரி சென்னை வர அனுப்பி இருந்தேன், அதுனால தான் நீ இவன பாத்து இருக்க மாட்ட” என்று கூறிவிட்டு,
“டேய் மாடு, இவள நமக்கு பிஏவா அப்பாயின்ட் பண்ணி இருக்கேன்”என்று கூற,
அவன், அவளை பார்த்து கண்ணடித்தான் .
அதை கண்டு பயந்தவள் “சரி மம், நான் வொர்க்க கண்டின்யூ பண்றேன்” என்று கூறி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடினாள்.
போகும், அவளை பார்த்து சிரித்து கொண்டு இருந்தவனின் காதை நீலா பிடித்து திருகினாள்.
அதில் வலி எடுக்க “ஏய் என்னடி பண்ற வலிக்குது டி முனிமா, விடு”
“டேய் மாடு வந்ததும், என்ன டா சேட்ட பண்ண”
“சொல்றேன் டி, முத காத விடு” என்று கூற அவளும், அவனின் காதை விடுவித்தாள்.
இப்போது, அவளிடம் நடந்ததை கூறினான்.
“டேய் மாடு என்னடா சொல்லுற, அவள லவ் பண்றீயா”
“ஆமா” என்று வெட்கபட்டவாரு , தன் தலையை ஆட்டினான், அதை கண்டவள் “என்ன கருமம் டா இது, அட ச்சீ நிறுத்து”
“சரி அதவிடு, கல்யாணமாகி ஒரு வாரம் கூட ஆகல, அதுக்குள்ள ஹனிமூன் கூட போகாம, இங்க வந்து நிக்குற உனக்கு தான் அறிவில்ல, உன் ஆளுக்கு கூடவா இல்ல” என்று கேட்டதும், அவளின் முகம் மாறுதலை கண்டவன் “ஏய் என்னாச்சி டி எதுவும் பிராப்ளமா”
அவளும் நடந்த அனைத்தையும் கூறினாள்.
“அப்போ, நீ அவன் வீட்டுல ஏன் இருக்க, நான் வேணா அம்மா அப்பாகிட்ட பேசி பாக்கவா”
“இல்ல வேண்டாம் டா, அவன் என்ன பண்றான்னு, அவன் இடத்தில இருந்து நல்லா வாட்ச் பண்ணா தான், நேரம் வரும் போது, அவன வச்சி செய்ய முடியும், நீ இதெல்லாம் நினைச்சி வொர்ரி பண்ணிக்கமா, உன் மீனு குட்டிய கரெக்ட் பண்ற வழிய பாரு”
“அது, நீ ஹெல்ப் பண்ணா தான் முடியும்”
“ஏய் என்ன பாத்தா, உனக்கு எப்படி தெரியுது” என்று கேட்க,
“அது நான் சொல்லி தான், உனக்கு தெரியணுமா” என்று கூறி ஓடிவிட்டான்.
அவன் சென்றதும் , இவளுக்கும் அழைப்பு வந்ததால் அவளும் சென்றுவிட்டாள்.
– ஆனந்த மீரா