Loading

வீட்டிற்குள் வந்தவர்களை கண்ட சிவகாமி “ஏன் மா, போயிட்டு வர இவ்வளவு நேரம் ஆயிடுச்சே பிரச்சனை எதுவும் இல்லல, அம்மா அப்பா யாரும் எதாவது சொன்னாங்களா” 

நீலா “அது எப்படி ம்மா எதுவும் சொல்லாம இருப்பாங்க, சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி தான் அணுப்பினாங்க, சரி ம்மா எனக்கு ரெஸ்டாரன்ட் போக டைம் ஆயிடுச்சு, நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாரேன்” என்று கூறி, தன் சூட்கேஸை இழுத்து கொண்டு அறைக்குள்ளே சென்றாள்.

சிவகாமியோ நடந்ததை தேனுவிடம் கேட்டு தெரிந்து வருத்தபட்டார் .

இப்போது அறைக்குள் வந்த நீலா முகத்தை கழுவி விட்டு புடவை கட்டி கொண்டு தலையை இருப்புறம் முடியெடுத்து முடி முள்ளினால் குத்தி கொண்டு கீழே முடியை பறக்க விட்டு விட்டு, அதில் மல்லிகை பூவை சூடினாள். 

பிறகு கண்களுக்கு மையிட்டு உதத்திற்கு சாயமிட்டு நெத்தியில் ஒரு சிறு வட்ட வடிவ பொட்டு வைத்துவிட்டு கண்ணாடியில் தன்னை சரி பார்த்து கொண்டு இருக்க,

அப்போது  கதவின் தாழ்பாள் கழரும் அளவிருக்கு கதவை தள்ளி திறந்து உள்ளே வந்தவன், அவளை கண்டு மயங்கி “அழகா இருக்காளே, இதுக்கு மேல அவள பாத்தோம் நானே அவ அழகுல கவுந்துருவேன் போல, டேய் குணா பார்வைய திருப்பு கெத்த விடாத” என்று தனைக்குள் கூறியவாரு, அவளிடமிருந்து தன் கண்களை திருப்ப  படாது பாடுபட்டான்.

“டேய் பொறுக்கி கொஞ்சம் கூட அறிவில்ல திறந்த வீட்டுக்குள்ள நாய்  நுழைஞ்ச மாதிரி , கதவ உடைச்சிட்டு  உள்ளவர” 

“ஆமா, உன் அழக பாக்குறதுக்கு கதவ உடச்சிட்டு உள்ள வாரணாக்கும், ஓவர் நினைப்பு தான்டி” இதை கேட்டவள் அவனை தீயாய் முறைக்க,

“அப்படி தான்டி பண்ணுவன்,உன்னால என்ன பண்ண முடியும்” என்று கூறியவாறு, அவளை நோக்கி நெருங்கி வந்தான்.

“ஏய் எல்லாம் ஓகே, ஏதோ ஒன்னு குறையுதே” என்று அவளின் முகத்தை தடவியவாரு கூற,

“சீ பொம்பள பொறுக்கி மேல இருந்து மரியாதையா கை எடு டா” என்று கூற, அவன் அதையெல்லாம் காதில் துளியும் வாங்கவில்லை,

கண்ணாடி அருகில் இருந்த நாற்காலியில் இருக்கும் குங்குமத்தை எடுத்து, அவளின் நெத்தியின் உச்சியில் வைத்து விட்டு “ம் இப்போ தான் டி, என் பொண்டாட்டியா லட்சணமா இருக்க” 

“ஏய் யாருக்கு யாருடா பொண்டாட்டி” என்று கூறி அவனை தள்ளி விட்டாள்.

“நீ தான்டி என் பொண்டாட்டி, இதோ நான் கட்டுன தாலி கூட உன் கழுத்துல இருக்கே” 

“தாலி கட்டிட்டா புருஷன் ஆயிடுவியா, என் புருஷனா இருக்க உனக்கு என்ன தகுதி இருக்கு” 

“ஏய் என்னோட தகுதிய பத்தி பேச உனக்கு என்னடி ரைட்ஸ் இருக்கு கொஞ்சம் பாவம் இருக்கியே, உனக்கு தாலி பிச்ச போடலாம்ன்னு நினைச்சேன் ஆனா, ரொம்ப திமிரா பேசுற, உன் திமிர மொத்தமா அடக்குறேனா இல்லையான்னு பாரு” 

 

இதுக்குமேல் இங்கே இருந்தால், அவளை எதாவது செய்து விடுவோம் என்ற பயத்தில் குளியல் அறைக்குள் புகுந்தான்.

தன் திறன் பேசி கொண்டு தலையில் அடித்தவாரு நீலா “ரொம்ப ஓவரா தான் பண்றான், இவன எதாவது பண்ணனுமே என்ன பண்ணலாம்” என்று யோசித்து கொண்டு இருக்க,

அப்போது உள்ளே சென்றவன் “தேனு தேனு” 

அது நீலாவின் காதில் விழ “என்னதுக்கு இப்போ தேனுவ கூப்பிடுறான், அட தண்ணி காலி ஆயிடுச்சுல மறந்தே போயிட்டேன், பயபுள்ள தான வந்து சிக்குது விடாத நீலா” என்று யோசனையுடன் குளியல் அறைக்கு வர அங்கு, அவன் சோப்பு நுரையுடன் இடுப்பில் துண்டு கட்டி தன் கண்களை திறக்க முடியாதவாரு நின்றான்.

இப்போது, அவன் நிக்கும் கோலத்தை கண்டு சிரித்தவாரு “என்ன தண்ணி வரலையா, நான் குளிச்சிட்டு வரும் போதே தண்ணி போயிடுச்சு, நீ பாத்ரூமுக்குள்ள போகும் போதே தண்ணி வரலன்னு சொல்லாம்ன்னு நினைச்சேன் , ஆனா சார் கொஞ்சம் ஓவராலா பேசுனீங்க, அதான் நீயே என்கிட்ட உதவி கேக்கணும்ன்னு சொல்லல, அப்புறம் சார் கதவு பூட்டி இருக்கு, சோ நீ என்ன கூப்பாடு போட்டாலும் உன் பாசமலருக்கு சுத்தமா கேக்காது,வேணும்ன்னா உனக்கு நான் ஹெல்ப் பண்ணவா, அய்யோ மறந்தேபோயிட்டேன் நீ தான் ரோசகாரனாச்சே, இனி உனக்கு எப்படி வசதின்னு நீயே யோச்சிக்கோ, சரி எனக்கு டைம் ஆயிடுச்சு, நான் கிளம்புறேன்” என்று கூறி, அங்கிருந்து செல்ல,

இப்போது குணா “சரி ஹெல்ப் பண்ணி தொல” 

“ஹலோ நீ ஒன்னும் எனக்கு ஹெல்ப் பண்ணல, நான் தான் உனக்கு ஹெல்ப் பண்ண போறேன், அதுனால அத ஞாபகம் வச்சிக்கிட்டு ரொம்ப சலிச்சிக்கமா சிரிச்சிட்டே கேளு கண்டிப்பா பண்றேன்” 

இப்போது குணா “இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம இம்ச பண்றா, கிரகம் இப்படி  வந்து மாட்டிக்கிட்டேன்” என்று மனதிற்குள் நினைத்து கொண்டு இருக்க,

அப்போது நீலா “இங்க பாரு, நீ எனக்கு பண்ண துரோகத்த மறந்து உனக்கு போனா போதுன்னு ஹெல்ப் பண்ணலாம்ன்னு நினைச்சேன், ஆனா நீ வீரப்பா தான் இருப்பேன் சொல்லுற அப்புறம், உன் இஷ்டம்” என்று கூற,

இப்போது குணா “இவளே ஹெல்ப் பண்றேன்னு சொல்லுறாளே இதுல எதுவும் உள் குத்து இருக்குமோ, டேய் குணா உனக்கு வேற வழி இல்லடா, உன் வீரப்பா குறச்சிட்டு அவகிட்ட உதவி கேட்டுரு” என்று மனதிற்குள் நினைத்துவிட்டு, அவளிடம் ஈஈ என்று இளித்தவாரு “நீலுமா கண்ணுளாம் எரிச்சலா இருக்கு கொஞ்சம் சீக்கிரம் தண்ணி எடுத்துட்டு வந்து, உதவி பண்ணு நீலுமா” 

“அய்ய இவ்வளவு கேவலமா சிரிக்கிறதுக்கு சிரிக்காமலே இருந்து இருக்கலாம், சரி இரு தண்ணி எடுத்துட்டு வந்து தொலைக்குறேன்” என்று கூறிவிட்டு, அறையை விட்டு வெளியே வந்தவள். 

 

போனவள் வரவில்லை என்று “ஏய் கண்ணு எரியுது டி, சீக்கிரம் வந்து தொல” 

 

“டேய் எவ்வளவு வெயிட்டா இருக்கு தூக்கிட்டு வர வேண்டாமா, அதுக்குள்ள ரொம்ப தான் துள்ளுற உனக்கு ஹெல்ப் பண்ண நினைச்சேன் பாரு போடா கொண்டு வந்த தண்ணிய எடுத்துட்டு போய் கிணத்துக்குள்ளயே ஊத்திருரேன்” என்று கொண்டு வந்த தண்ணீர் வாலியை தூக்க,

“ஏய் நீலு மா, ரொம்ப கண்ணு ஏறிது அதான், அந்த எரிச்சல்ல அப்படி பேசிட்டேன் சாரி நீலு மா கொஞ்சம் கொண்டு வந்த தண்ணிய கொடுக்குறீயா” என்று இளித்தவாரு அவளிடம் கேட்டான்.

“சரி பொலச்சு போ” என்று கூறிவிட்டு தான் கொண்டு வந்த தண்ணீரை நக்கலாக சிரித்தவாரே ஊற்றினாள்.

இப்போது, அவள் கொடுத்த பாதி தண்ணீரை மட்டும் பயன் படுத்தி குளித்து வேறு ஆடை அணிந்து குளித்து வந்தவன் நேராக நீலாவிடம் சென்று “அடியே தண்ணியல என்னத்த டி கலந்து தொலச்ச, மேலலாம் எரிச்சலா இருக்குது டி” என்று கேட்க

“லைட்டா ப்ளீச்சிங் பவுடர் தான் கலந்தேன்” 

“என்ன தைரியம் இருந்தா குளிக்கிற தண்ணில ப்ளீச்சிங் பவுடர் கலப்ப” என்று கூறியவாரு, கையை ஓங்க தன் உடம்பில் இருந்த எரிச்சலால் ஓங்கிய கையை பின்னோக்கி இழுத்துவிட்டு, தன் திறன்பேசியை எடுத்தவன் குகனுக்கு அழைப்பு விடுத்து, 

“நீ என்ன பண்ணுவ ஏது பண்ணுவேன்னு தெரியாது ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு இன்னும், அஞ்சே நிமிஷத்துல உன் வண்டி எடுத்துட்டு வீட்டு வாசல் கிட்ட வந்து, என்ன ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போற” என்று கூறி அழைப்பை துண்டித்தவன், திறன் பேசியை தூக்கி படுக்கையில் வீசிவிட்டு எரிச்சல் தாங்க முடியாமல் சுவற்றில் கையை குத்தி கொண்டான்.

 

அவன் படும் வேதனை கண்டவள் “ஹாஹா…” என்று சத்தமாக சிரிக்க அதில் எரிச்சலுற்றவன் “ஏய் சிரிக்காத டி” என்று, அவள் கழுத்தில் கை வைக்க,

அவன் கையை தட்டி விட்டவள் “எரியுதா நல்லா எரியட்டும், உனக்கு இதெல்லாம் சும்மா சம்பிள் தான், ஆனா இதுக்கே அரண்டா எப்படி, நீ எவ்வளவு பெரிய ரவுடின்னு நினைச்சேன் நீ டம்மி பீஸ்ன்னு இப்போ தான தெரியுது” 

அதில் கோவம் கொண்டவன், அவளை அடிக்க கை ஓங்க, உடனே நீலா தன் திறன் பேசியில் அவன் சோப்பு நுரையுடன் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை, அவனிடம் காட்ட,

அதை கண்டவன் தன் கையை பின்னோக்கி இழுத்துவிட்டு,

“ஏய், இத எப்போ டி எடுத்த” 

“அதுவா உன்ன, அந்த கெட்டப்ல பாக்க நல்லா இருந்துச்சா, அதான் யூஸ் ஆகுமேன்னு, உனக்காக எடுத்து வச்சேன்” 

“வேண்டாம் டி அத ஒழுங்கா டெலீட் பண்ணிடு” 

“டெலீட் பன்றதுக்காக எடுத்தேன், அத நல்லா எடிட் பண்ணி சோஷியல் மீடியால போட்டேன்னு வை, நீ  வேர்ல்ட் முழுக்க ஃபேமஸ் ஆயிடுவ, எப்படி வசதி போடவா” 

“ஏய் அப்படி மட்டும் பண்ணின, அப்புறம் உங்க வீட்டுல ஒரு கொல விழும் ஞாபகம் வச்சிக்கோ” 

“டேய் அடுங்கு டா, இந்த மிரட்டலுக்குலாம் இந்த நீலா துளியும் பயப்பட மாட்டா உன்னால முடிஞ்சத பாத்துக்கோ, அப்புறம் நான் இத சோஷியல் மீடியால போடாம இருக்கணும்ன்னா, நீ நான் சொல்லுறது எல்லாம் செய்யனும், வேணும்ன்னா நீ ஹாஸ்பிட்டல் போயிட்டு வரும் போது, உனக்கு ஒரு சாம்பிள் காட்டுறேன், அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்”

 

அப்போது, அவனின் திறன்பேசியில் குகன் அழைப்பதை கண்டவன், அவளை முறைத்து விட்டு வெளியே சென்றான்.

இப்போது தன் உடம்பில் இருக்கும் எரிச்சல் தாங்க முடியாமல் நெளிந்தவாரே வெளியே வந்தவனை கண்ட குகன் “என்ன மச்சான் டான்ஸ்லாம் பலமா இருக்கு” 

“டேய் வேண்டாம் டா, ஏற்கனவே நெருப்புல வெந்துட்டு இருக்கேன், நீ வேற எதாவது மொக்க கவுண்டர் போட்டு என்ன சாவடிக்காம மூடிட்டு முதல வண்டிய ஹாஸ்பிட்டலுக்கு விடு டா,

வெண்ண” என்று கூறி வண்டியில் குகனின் பின் புறம் ஏற, நொடியும் தாமதிக்காமல் மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்