சென்றவள் , சற்று பின்னே வந்து அவனின் முகத்தின் எதிரே சொடுக்கிட்டு “ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ நான் அனுபவவிச்ச அதே வலியே உனக்கு என்னன்னு காட்டி, என் காலுல விழ வச்சி இதோ நீ கட்டின இந்த தாலிய உன் கைலாய கழட்டி, உன் முஞ்சுல வீசிட்டு போகல நான் சுந்தரம் பேத்தி நீலாவதி இல்ல டா , அப்புறம் இன்னும் ரெண்டு நாள்ல போய் நம்ம கல்யாணம் பண்ணினத போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு வரலாம்,
என்ன பொறுத்தவரைக்கும் எல்லாமே முறை படி செஞ்சா தான் எனக்கு பிடிக்கும்”
“என்ன டி என்கிட்டயே சவலா, இதுக்குலாம் பயப்படுறவன் இந்த குணா இல்லடி, எங்க அம்மா வாயாலையே உன்ன வீட்டு போன்னு சொல்ல வைக்கிறேன் டி, இனி ஒவ்வொரு நாளும் உன்ன கதற விடுவேன் டி”
“ம் சூப்பர் பொறுத்து இருந்து பாக்கலாம்” என்று கூறிவிட்டு, படுக்கையில் வலதுபுறம் படுத்து கொண்டாள்.
இவள் பேசியதில் கடுப்பானவன் சுவற்றில் ஓங்கி தன் கைகளை குத்திவிட்டு படுக்கையில் இடது புறம் படுத்து தூங்கினான்.
இப்போது மறுநாள் பொழுது விடிந்தது,
இப்போது நீலா சீக்கிரமாக எழுந்து பல் துலக்கி குளித்து முடித்து தேன்மொழி கொடுத்த வேறு ஆடையை அணிந்து கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தவள் சிவகாமியிடம் வீட்டுக்கு போயிட்டு வாரேன் என்று கூற மறுப்பு தெரிவித்தவர் ஒரு கட்டத்தில் தேனுவையும் உன்னுடன் கூட்டிட்டு போ என்று கூற, அவளும் தேனுவுடன் வண்டியில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
இப்போது வண்டியை விட்டு இறங்கியவள் அவளை வெளியில் நிற்க்க சொல்லிவிட்டு தான் மட்டும் வீட்டினுள் சென்றாள்.
அதை கண்ட ஆறுமுகம் “இங்க எதுக்கு டி வந்த , உன் மூஞ்சில இனி முளிக்கவே கூடாதுன்னு நினைச்சேன், முதல போ டி” என்று கூற,
“இங்க பாருங்க அப்பா, நான் ஒன்னும் ஆசை பட்டு இப்போ, இந்த வீட்டுக்கு வரல எப்போ தான் பெத்த பிள்ளைய நம்பாம சந்தேகபட்டு வெளிய துரத்தினீங்களோ அப்போவே நான் செத்துட்டன், இனி இந்த வீட்டு வாசல மிதிக்கவே கூடாதுன்னு தான் நினைச்சேன், ஆனா என்ன பண்றது மிதிக்க வேண்டிய சூழ்நிலை ஆயிடுச்சு, கொஞ்சம் வழி விட்டீங்கன்னா என்னோட திங்க்ஸ் அண்ட் பைல்ஸ் எடுத்துட்டு மொத்தமா போயிடுவேன்” என்று கூறிவிட்டு, அவள் அறைக்கு நோக்கி செல்ல,
மேலும் கோபமுற்ற ஆறுமுகம் நீலாவின் தலை முடியை கோதி தரதரவென்று இழுத்தவாரு வீட்டியின் வெளியே தள்ளிவிட்டு வேகமாக உள்ளே சென்றார்.
தள்ளி விட்டதில் நீலா கீழே விழுந்தாள்.
இதை கண்ட தேன்மொழி ஓடி வந்து அவளை தூக்கி விட்டு கொண்டிருக்க,
அப்போது ஆறுமுகம் , அவளின் உடை கோப்பு என்று அவள் சம்பந்தபட்ட அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு “இதுக்கு தான வந்த , இந்தா இத எடுத்துட்டு என் கண்ணு முன்னால நிக்காம போயிடு, இனி எந்த உறைவையும் சொந்த கொண்டாட , இந்த வீட்டு பக்கம் வந்துறாத செத்து போனவ செத்து போனவ தான்”
அதை கேட்டவர்கள் கீழே கிடந்த உடை மற்றும் கோப்புகளையும் எடுத்து கொண்டு வண்டியின் அருகில் வந்து நின்றார்கள்.
அனைத்தையும் வண்டியில் வைத்துவிட்டு சோகமாக நிற்கும் நீலாவை கண்ட தேனு “அண்ணி என்னாச்சி அங்கிள் பேசினது நினைச்சி ஃபீல் பண்றீங்களா, கவலபடாதீங்க கண்டிப்பா ஒருநாள் உங்க வீட்டுல உள்ள எல்லாரும் புரிஞ்சிகிட்டு ஏத்துப்பாங்க” என்று கூற,
“ஏன் தேனு, ஒருநாள் தான் நீ என்கூட இருந்து இருக்க, அப்படிபட்ட உனக்கே என்மேல பாசம் இருக்கும் போது, என்ன இத்தன வருஷமா வளத்த என் அப்பா அம்மாவால என்ன வேண்டாம்ன்னு எப்படி சொல்ல முடியுது”
“விடுங்க அண்ணி ஃபீல் பண்ணாதீங்க ஒருநாள் எல்லாம் உங்க வசம் வரும்” என்று கூறி கொண்டிருக்க,
“ஏய் நீலா”என்று ஈஸ்வரன் தன் தங்கையை அழைத்தான்.
அதை கேட்டு இருவரும், அவனின் புறம் சென்றார்கள்.
அவனை அழுதவாரு அனைத்தவள்
அவனை விட்டு விலகி “டேய் ஈஸ்வர், நீயாவது நம்புறீயா டா, நான் எந்த தப்பும் பண்ணல டா”
“எனக்கு தெரியும் டி , நீ எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டேன்னு, எல்லாம் அந்த பொறுக்கி நாய் குணா பண்ணினதுக்கு, நீ என்ன டி பண்ணுவ அவனலாம் சும்மாவே விட கூடாது, அவனுக்கும் தங்கச்சி இருப்பாள அவளுக்கு இப்படி நடந்தா சும்மா இருப்பானா” என்று கூறி கொண்டி இருக்க,
அவன் கூறியதை கேட்ட தேன்மொழி பே பே என்று விழிக்க, அவளை பார்த்து நீலாவிற்கு சிரிப்பு வர சிரிப்பை அடக்கி கொண்டாள்.
இப்போது ஈஸ்வர் “ஆமா, இந்த பொண்ணு யாரு”
அப்போது சத்தமாகவே சிரித்து விட்டாள்.
அதை கண்டவன் “நான் என்ன கேட்டேன்னு சிரிக்கிற”
அதற்கு நீலா “டேய் , நீ இவ்வளவு நேரம் சாபம் விட்டியே அவன் தங்கச்சியே இவ தான்டா” என்று கூறி சிரித்தாள்.
அவள் கூறியதும் அதிர்ச்சியில், அவளை காண அவள் ஒரு புருவம் உயர்த்தி அவனை கண்டாள்.
அதை கண்டவன் ஈஈ ஈ…. என்றவாரு பற்கள் தெரிய இளித்தான்.
இப்போது நீலா “தேனு, இது என்னோட அண்ணன் ஈஸ்வரன் எல்லாரும் செல்லமா ஈஸ்வர்ன்னு கூப்பிடுவோம்” என்று கூற நொடியும் தாமதிக்காமல் “ஹலோ ஈஸ்வர் அத்தான்” என்று கூற,
அதில் இருவரும் அதிர்ச்சியில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,
அதை கண்டவள் “என்னாச்சி அத்தான் ஏன் , இப்படி பாக்குறீங்க” என்று கேட்க,
“அத்தானா” என்று இருவரும் ஒருசேர கேக்க,
அதற்கு தேனு “ஆமா, இவங்க உங்க சிஸ்டர், இவங்க எனக்கு அண்ணின்னா நீங்க எனக்கு அத்தான் முறை தான வேணும் , அதான் அப்படி சொன்னேன்”
“நீ கொஞ்சம் வித்தியாசமான கேரக்டரா தான் இருக்க, ஐ லைக் இட்”
“போங்க அத்தான், எனக்கு வெக்கமா இருக்கு”
இதை கண்ட நீலா “ஏய் தேனு, அவனுக்கு ஆல்ரெடி ஆளு இருக்கு”
அவள் கூறியதை கேட்டு ஈஸ்வர் தங்கையை தீயாய் முறைத்தான்.
அதற்கு நீலா “அவ பாட்டுக்கு மனசுல ஆசைய எதுவும் வளத்துகிட்டானா, அதான் ஒரு பிலோல சொல்லிட்டேன் டா”
இப்போது தேன்மொழி “என்ன அத்தான் லவ்லாம் பண்றீங்க போல, அப்போ லவ் மேரேஜ் தானா”
“மே பீ இருக்கலாம் , கடவுள் மனசு வச்சா தான் உண்டு, பாப்போம் எல்லாம் விதியின் செயல்”
“சரி காலேஜ் லவ்வா, இல்ல ஸ்கூல் லவ்வா”
“காலேஜ் தான்”
“சரி , உங்க லவ் சக்சஸ்ஸாக என்னோட வாழ்த்துக்கள்”
“தேங்க்ஸ்”
“அத்தான், நீங்க தப்பா நினைக்கன்னா என் வருங்கால அக்கா ஃபோட்டோ கிடைக்குமா”
அதற்கு நீலா “ஏய் நீ நினைக்கிற மாதிரிலாம் இல்ல ஜஸ்ட் ஒன் சைட் லவ் தான் ஆமா, இப்போ எதுக்கு இதெல்லாம் கேக்குற நீ கேக்குறத பாத்தா ஜாதகமே கேப்ப போலயே”
“இல்ல அண்ணி, எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு, சோ க்ளியர் பண்றதுக்கு தான் கேட்டேன்”
இதை கேட்ட ஈஸ்வர் சற்றும் யோசித்துவிட்டு “இல்ல, என்கிட்ட அவ போட்டோலாம் இல்ல”
அதை கேட்ட தேனு “அட பயப்படாதீங்க அத்தான், சும்மா ஃபோட்டோ காட்டுங்க எனக்கு என்னமோ, உங்க லவ்க்கு என்னால ஹெல்ப் பண்ண முடியும்ன்னு தோணுது”
“ஏதோ பெருசா பிளான் பண்ற, ம் இதான் அவ ஃபோட்டோ” என்று கூறி திறன் பேசியில் இருந்த தன்னவள் புகைப்படத்தை காட்டினான்.
“அட கோனிமூக்கி, இவகிட்ட எத பாத்து மயங்குனீங்க”
“ஏய், என்ன சொல்ற உனக்கு இவள தெரியுமா”
“ம் நல்லாவே தெரியும் , இவ நிஜமாலே என்னோட சிஸ்டர் தான்”
அதில் இருவரும் பே பே என்று முழிக்க,
“அட ஆமா அண்ணி, இவ என்னோட சித்தி பொண்ணு கிட்டதட்ட எங்க ரெண்டும் பேருக்கும் சிக்ஸ் மந்த்ஸ் டிஃபரன்ஸ் தான் , என்னோட காலேஜ் செமஸ்டர் லீவ்க்கு வரும் போது இவ வீட்டுக்குலாம் போவேன் , அப்போ அடிக்கடி அத்தான பாத்து இருக்கேன்” என்று கூற,
“டேய் வீட்டுக்குலாம் போய் இருக்கியா, சொன்னதே இல்ல”
“இல்ல அண்ணி வீட்டுக்கு வந்தது இல்ல ஆனா , அத்தான் அவ வீடு வழி தான் அடிக்கடி அவள சைட் அடிச்சிட்டே போவாரு, அப்போ பாத்து இருக்கேன் இருந்தாலும் , ஒரு சின்ன டவுட் நீங்க தான் அந்த பையனான்னு, அதான் ஃபோட்டோ கேட்டேன், இப்போ கன்பார்ம் ஆயிடுச்சு” என்று அவனை புருவம் உயர்த்தி பார்த்தபடி கூறினாள்.
அதை கேட்ட ஈஸ்வர் “இப்போ , எதுக்கு இப்படி பாக்குற” என்று கேட்க,
“சும்மா தான் இருந்தாலும், பிரதேர் சிஸ்டர் ரெண்டும் பேரும் எங்க ஃபேமிலிகூடவே கல்யாணம் சமந்தம் பண்றீங்க சூப்பர் ல” என்று கூற,
“எதே” என்று நீலா கேட்க,
“இல்ல இல்ல, நாங்க பண்றோம்” என்று கூறிவிட்டு,
“சரி அத்தான், உங்க நம்பர் கொடுங்க” என்று கேட்க,
இப்போது, அவளை பாத்து விழிக்க,
“அத்தான் எல்லாத்துக்கும் இப்படி ஷாக் ஆனா எப்படி , பயப்படாம நம்பர் கொடுங்க கோணிமூக்கி கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்”
அதற்கு ஈஸ்வர் “ஆமா, எதுக்கு நம்பர் கேக்குற”
“அத்தான் எல்லாம் அண்ணிக்கு ஹெல்ப்க்கு தான், கொடுங்க தேவபடும்” என்று கூற,
அவனும் தன் திறன்பேசி எண்ணை அவளிடம் பகிர்ந்தான்.
அதை சேமித்து வைத்த தேனு , அவனுக்கு அழைப்பு விடுத்து “இதான் என்னோட நம்பர் சேவ் பண்ணிக்கோங்க அத்தான்”
“சரி டைம் ஆயிடுச்சு, நாங்க கிளம்புறோம்” என்று நீலா கூற,
அதற்கு ஈஸ்வர் “சரி பாத்து போயிட்டு வாங்க, நான் அடிக்கடி ரெஸ்டாரன்ட் வந்து உன்ன பாக்குறேன், எதாவது ஹெல்ப் வேணும்ன்னா என்கிட்ட தயங்காம கேளு”
அதை கேட்ட தேன்மொழி “அத்தான் ஃபீல் பண்ணாதீங்க, நான் அண்ணிய பாத்துக்குறேன்”
“அதான், என் பயமே” என்று கூற,
“அத்தான்” என்று இடுப்பில் கை வைத்து முறைக்க,
அதற்கு ஈஸ்வர் “சரி பாத்து போயிட்டு வாங்க, ஏய் அப்புறம் அவகிட்ட எதையவாது உளரிக்கிட்டு இருக்காத”
“அதெல்லாம் கோணமூக்கி கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் பயப்படாதீங்க, சரி பாய் அத்தான் ” என்று கூறி கை காட்டினாள் .
அதற்கு பதிலாக, அவனும் கை காட்டினான் .
பிறகு தேன்மொழி வண்டியை எடுக்க நீலா பின் அமர்ந்தவாரு இருவரும் கிளம்பினார்கள்.
போகும் அவர்களை பார்த்த ஈஸ்வர் “இவனுக்கு இப்படி ஒரு தங்கச்சியா ரொம்ப நல்ல பொண்ணா பாசமா இருக்கா” என்று மனதிற்குள் நினைத்து விட்டு, வண்டியை எடுத்து கொண்டு தன் அலுவலகம் நோக்கி பறந்தான்.
இப்போது அலுவலகம் உள்ளே வந்து தன் இருக்கையையில் அமர “மச்சான்” என்று குறல் கேட்டு திரும்பியவன்,
“சொல்லு டா மச்சான்” என்று கேட்க,
“என்னடா எதுக்கு, இன்னைக்கு லேட்டு” என்று அவன் நண்பன் பாலு கேட்க,
“ஆபீஸ் வரும் போது, நீலாவ பாத்தேன் அதான் அப்படியே பேசிட்டே நின்னதுல நேரம் போயிடுச்சு”
அப்போது “மிஸ்டர் ஈஸ்வரன்” என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு திரும்ப அப்போது, இந்த அலுவலகத்தின் மேல் அதிகாரி( IT director) அவனின் எதிரே நிற்க்க ,
அவரை கண்ட ஈஸ்வர் “சொல்லுங்க சார்”
“இன்னைல இருந்து, நம்ம கம்பனிக்கு ஒரு புது ஸ்டாப் வாரங்க, அவங்களுக்கு நீங்க ஒன் மந்த் கைடு பண்ணனும்”
“ஓகே சார் நான் பாத்துக்குறேன், அவங்க நேம் டீடைல்ஸ்லாம் வாட்ஸ்அப் பண்ணுங்க, நான் போய் காபி குடிச்சிட்டு வந்துருறேன்” என்று கூறி கொண்டு செல்ல, எதிரே வந்த பெண்ணை கவனிக்காம , அவள் மேல் மோத அதில் பெண்ணவள் தடுமாறி விழ போக, அதை கண்டவன், அவளை இடுப்போடு தன் கை கொண்டு வளைத்து பிடிக்க ,
அதே நேரம் இருவரின் பார்வையும் ஒருசேர , அவனுக்கு பிடித்தமான ஹரிஷ் ராகவேந்திராவின் குறளில் இமானின் இசையில் அவனுக்கும் மட்டும் கேட்ட பாடல்
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்
என்ற வரிகளுக்கு பொருந்தும்மாரு அவனின் விழிகளில் அவள் விழ ( அதாவது, அவன் கண்களில் அவள் தெரிந்தாள்)…………
காதல் என் காதில் சொல்வாய்” இந்த வரி ஒலிக்கும் போது நீ எப்போது உன் காதலை என் காதில் சொல்லயாய் என்று அவனும் அவளின் பதிலுக்கு பல நாள் காத்து கொண்டவனாக இருந்தான்.
இருவரும் , இப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தவாரு நின்று கொண்டு இருக்க,
இப்படியே , இந்த நிமிடம் நீளாதா என்ற ஆசை, அவனின் மனதில் இருக்க தான் செய்தது, வேறு வழியின்றி அவளை விடுவித்தவன்.
“சாரி, நான் கவனிக்கல நீ வந்தத”
“ம் இட்ஸ் ஓகே”
அதற்கு ஈஸ்வர் “எப்படி இருக்க” என்று கேட்டான்.
அதை கேட்டவள் “ம் நல்லா இருக்கேன், நீங்க” என்று கேட்டுவிட்டு “ஆமா, ஏதோ பல மாசம் பாக்காதவன் மாதிரி நலம் விசாரிக்க , டெய்லி என்ன சைட் அடிக்க தான செய்ற , பெரிய நடிகன் டா நீ” என்று மனதிற்குள், அவனை அர்ச்சித்தாள்.
அவள் கேட்டதுக்கு “நான் நல்லா இருக்கேன் சரி, நீ என்ன இந்த பக்கம்”
“அதுவா ஷாப்பிங் பண்ணலாம்ன்னு வந்தேன், நீங்க”
“என்ன கிண்டலா , இப்படிலாம் கூட பேசுவீயா”
“பின்ன என்ன ஐடி கம்பனிக்கு எதுக்கு வருவாங்க”
“சரி கோவபடாத ரிலாக்ஸ்”
அதை கேட்டவள் “ஹலோ, நான் ஒன்னும் கோவபடல” என்று கூறி கொண்டு இருக்க,
அதே சமயம் ஈஸ்வரின் திறன் பேசியில் திங் என்று சத்தம் கேட்க,
அதை எடுத்து பார்த்தான்.
ஆனா, அதை பார்த்தவனின் கண்கள் நம்பவே இல்லை
இப்போது, அவள் “ஹலோ, நான் உங்ககிட்ட தான பேசிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா ஃபோன பாத்து சிரிச்சிட்டு இருக்கீங்க” எ
“உன்ன பத்தி தான் பாத்துட்டு இருக்கேன்”
அதற்கு அவள் “ஹலோ என்ன சொல்லுறீங்க”
“நீ, இந்த கம்பனிக்கு புது ஜாய்னர் தான” என்று கேட்க,
“ஆமா” என்று அவள் கூற,
“ம் ஒன் மந்த் டிரெய்னிங் இருக்கும்ன்னு சொல்லி இருப்பாங்கள”
அதற்கு, அவள் “ஆமா”
“உனக்கு ஒன் மந்த் கைடு பண்ண போறது நான் தான், இப்போ தான் டைரக்டர் சொல்லிட்டு போனாரு, உன்ன பத்தின டீடைல்ஸ் தான் பாத்துட்டு இருந்தேன்”
இப்போது அதே சமயம் டைரக்டர் வந்து “ஹலோ மிஸ் சாதனா, உங்களுக்கு ஒன் மந்த் டிரெயின் பண்ண போறது மிஸ்டர் ஈஸ்வரன் தான்” என்று கூறியவாறு அவனை கை காட்டினார்.
“அப்புறம் ஈஸ்வர், நான் சொன்ன நியூ ஜாய்னர் இவங்க தான், ஒன் மந்த் அவங்கள நல்லா டிரெயின் பண்ணுங்க உங்களுக்கு ஹெல்ப் தேவைபட்டா கண்டிப்பா, என்ன கேளுங்க ஈஸ்வர்” என்று அவர் கூற,
அதை கேட்டவன் “கண்டிப்பா சார்” என்று கூறினான்.
இப்போது சாதனாவிடம் “என்ன டவுட்னாலும் ஈஸ்வர் கிட்ட கேளுங்க சொல்லுவாரு , ஒன் மந்த் டிரெய்னிங் பினிஷ் பண்ணிட்டு என்ன வந்து பாருங்க” என்று கூறினார்.
இப்போது அவன் செல்ல அவளும் , அவன் பின்னையே சென்றாள்.
சாதனா தான் , நம்ம ஈஸ்வரன் ஜோடி
வாங்க அவள பத்தியும் சொல்றேன்
பெயர் – சாதனா, வயது – 24 , ஊர் – திருச்சி, படிப்பு – எம்எஸ்சி ஐடி, இவள் தான் தேன்மொழியின் அம்மாவின் தங்கை மகள், கோணிமூக்கி என்று செல்லமாக தேன்மொழி அவளை அழைப்பாள். இவளும் குணாவின் செல்ல தங்கை தான்.