Loading

இப்போது , அவளை பிடித்து ஒரு திண்ணையில் அமர வைத்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் கடையில் தண்ணீர் தெளிப்பதற்கும்,  ஜுஸ் குடிப்பதற்கும், பிரெட் சாப்பிடுவதற்கும் வாங்கி தண்ணீரை முகத்தில் தெளித்துவிட்டு தான் வாங்கி வந்தை சாப்பிட கொடுக்க,

அவள் பசி மயக்கத்தில் இருந்ததால், இப்போது கிடைத்ததையே தேவாமிர்தம் என்று எண்ணி சாப்பிட்டாள்.

“சாரி மா, இந்த பக்கத்து கடைல ஜூசும் பிரெட்டையும் தவிர வேற எதுவும் சாப்பிடுறதுக்கு இல்ல”

“பரவாயில்லம்மா இப்போதைக்கு இதுவே போதும், ரொம்ப நன்றியம்மா, நீங்க எனக்கு பண்ண உதவிக்கு”என்று அதை சாப்பிட்டு முடித்தவள்.

“சரிம்மா, நான் போயிட்டு வாரேன்”

“இப்போ, எங்க மா போவ”

“இப்போ, நீங்க என்ன கேட்டீங்க”

“இல்ல வீட்ட விட்டு தூரத்தி விட்டுட்டாங்கள, அதான் வீடு இல்லாம, இப்போ எங்க போவன்னு கேட்டேன்”

“அதுக்குள்ள, இந்த நியூஸ் வெளிய வர பரவிட்டு போலயே, சரி உங்களுக்கு எப்படி தெரியும்”

“முதல என்ன மன்னிச்சிடு மா,உன் வாழ்க்கைய நாசமாக்கினவன பெத்தவமா நான்,  அவன் ஃப்ரெண்ட் தான் கால் பண்ணி உனக்கு நடந்த எல்லாத்தையும் சொன்னான் ,
ஆனா, உன்னோட வாழ்க்கைய நாசமாக்கி, உன்னோட குடும்பத்த பழி வாங்குவான்னு, நான் கொஞ்ச கூட நினைக்கல பாவி, அவன் நல்லாவே இருக்க மாட்டான்மா அவனலாம் சும்மாவே விடாத கேஸ் போட்டு போலீஸ்ல பிடிச்சி கொடு”

“நீ போலீஸ் கிட்ட போனாலோ இல்லன்னா இந்த தாலிய கழட்ட நினைச்சாலோ, உன்னோட குடும்பத்துல ஓவ்வொருத்தனும் சாவான் மனசல வச்சிக்க” என்று அவன் கூறிய கூற்றை நினைத்து பார்த்து கொண்டு சிவகாமிடம்

“அட அவன் பண்ண தப்புக்கு,  நீங்க ஏன்மா என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க, விடுங்க இன்னைக்கு இல்லன்னா கண்டிப்பா, ஒருநாள் எங்கவீட்டுல புரிஞ்சிகிட்டு என்ன ஏத்துப்பாங்க, அது வரை என்னோட ரெஸ்டாரன்ட்ட பாத்துக்கிட்டு அங்கையே இருந்துருவேன், நீங்க என்ன நினைச்சி கவலபடாதீங்க மா”

“நீ தப்பா நினைக்கலன்னா,  நீ என்கூட வந்து என் வீட்டுலயே தங்கிக்குறீயா மா, என்னடா, உன் வாழ்க்கைய நாசம் பண்ணவன் வீட்டுலயே தங்க சொல்லுறேன்னு நினைக்கிறீயா, இருந்தாலும் அவன பெத்த பாவத்துக்கு புண்ணியம் தேட, இத தவிர வேற வழி தெரியல மா, என்ன இருந்தாலும் என் மகன் கட்டுன தாலி, உன் கழுத்துல இருக்கு, அதுக்காக அவன் பண்ணத மறந்துட்டு அவன் கூட வாழுன்னு சொல்ல மாட்டேன், இப்போ உடனே டிவோர்ஸ் கூட கிடைக்காது , ஒரு வருஷம் தான் , அதுக்கு அப்புறம் உனக்கு நானே முறபடி கோர்ட்ல டிவோர்ஸ் வாங்கி தருவேன், இப்போவே கோர்ட்ல டிவோர்ஸ் கிடைக்காது, அப்படியே கிடைச்சாலும் நீ அவன் கூடவே ஒன்னா அவன் வீட்டுல இருந்தீயான்னு தான் கேப்பாங்க அதுனால ஒரே ஒரு வருஷம் ,

அந்த ரெஸ்டாரன்ட்ட பாத்துக்கிட்டே என்னோட வீட்டுலயே இரு, அப்புறம் ஒரு வருஷம் முடிஞ்சி, அவன எதாவது சொல்லி விவாகரத்து, உனக்கு கொடுக்க வைக்கிறேன், அப்புறம் நீ நிம்மதியா உன்னோட வாழ்க்கைய வாழலாம், நான் சொல்லுறத நம்பு”

“இல்லம்மா, என்ன மன்னிச்சிடுங்க, ஏற்கனவே நான் அவன் கூட ஓடி போய் தாலி கட்டிகிட்டேன்னு சொல்லுறாங்க, இதுல நான் அவன்கூடவே ஒரே வீட்டுலயே இருந்தா, அது உண்மைன்னு ஆயிடாதாம்மா”

“சரி அப்போ, இப்போதைக்கு ஒரே வழி தான் இருக்கு, அந்தா உன் கழுத்துல இருக்கிற, அவன் கட்டுன தாலிய இப்போவே கழட்டி தூக்கி வீச்சிரு உன்னோட எல்லா பிரச்சனையும் இன்னைக்கே முடிஞ்சுதும், என்ன சொல்லுற”

“கடவுளே அவ அப்படி மட்டும் பண்ணிற கூடாது, எனக்கு என்னமோ இவளால மட்டும் என் பையன மாத்த முடியும்ன்னு  தோணுது, அத உண்மையாக்க எப்படியாவது அவ மனச மாத்தி என்கூடவே வீட்டுக்கு அனுப்பி வச்சிரு” என்று கடவுளிடம் வேண்டிவிட்டு, அவளின் பதிலையே எதிர் பார்த்தார்.

அவளும் தாலிய பார்த்துவிட்டு அவரை கட்டி கொண்டாள்.

“ஏய் என்னாச்சி மா, இப்போ எதுக்கு அழுகுற, அதான் சொன்னேன்ல , இந்த தாலிய கழட்டுனா உனக்கு எல்லாம் பிரச்சனையும் முடிஞ்சிரும்ன்னு, அப்புறம் ஏன் இவ்வளவு யோசிக்கிற”

“இல்லாம நான் தாலிய கழட்டினாலோ இல்ல போலீஸ்க்கு போனாலோ என்வீட்டுல இருக்குறவங்கள கொன்னுடுவேன்னு சொன்னான் அம்மா”

“கொலகார பாவி செஞ்சாலும் செய்வான்ம்மா, அதுக்கு தான் சொல்றேன் நீ என்கூட ஒரு வருஷம் மட்டும் இருந்தா போதும், அப்புறம் அவன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி உன்ன உன்னோட வீட்டுலயே சேக்க வேண்டியது என் பொறுப்பு, நீ அந்த வீட்டுல ஒரு வருஷத்துல, நீ பட்ட கஷ்டத்த என்னன்னு அவனுக்கு காட்டு அப்போ தான், இனி எந்த பொண்ணையும் கஷ்ட படுத்த நினைக்க மாட்டான், அப்புறம் உன் இஷ்டம் நல்லா யோசிச்சு முடிவு எடு”

என்ன நினைத்தால் என்று தெரியவில்லை , சிறு யோசனைக்கு பின் தன் கண்ணில் வரும் கண்ணீரை துடைத்தவள்.

“சரிம்மா, எனக்கு உங்ககூட உங்க வீட்டுல இருக்க சம்மதம்”

“ரொம்ப சந்தோஷமா இனி, நீ எடுக்கிற ஒவ்வொரு முடிவுக்கும் நான் எப்போவும் உனக்கு துணையா இருப்பேன்” என்று கூறிவிட்டு,

“கடவுளே எப்படியோ பேசி அவ மனச மாத்த , எனக்கு உதவி பண்ணிட்ட அதே மாதிரி இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இவ என் பையன நல்லவனா மாத்தி அவங்க ஒன்னா சந்தோஷமா பிள்ளை குட்டியோட வாழனும், தயவு செஞ்சி நீ தான் ரெண்டு பேரு மனசையும் மாத்தி அவங்க சேந்து வாழ வழி பண்ணணும்” என்று வேண்டியவாரே நீலாவுடன் சிவகாமி நடக்க,

இப்போது வீட்டை நோக்கி ஆட்டோவில் வந்தார்கள்.

இப்போது கதவு தட்டும் சத்தம் கேட்ட தேன்மொழி , தன் அம்மா தன் அண்ணியுடன் வந்துவிட்டார் என்று, நினைத்து அண்ணியை காண ஆர்வமாக ஓடி வந்து கதவை திறந்தவள் வெளியே குகன் நிற்பதை கண்டு கதைவை திறந்தவாரே உள்ளே சென்றாள்.

அவள் பின்னாலேயே வந்த குகன் “அம்மா எங்க”

“அம்மா அண்ணிய கூட்டி வர போயிருக்காங்க” என்று வேண்டா வெறுப்பாக பதிலை கூற,

அவனின் எரிச்சலூட்டும் பார்வையில் கோவம் கொண்டவள், அவளின் அறைக்கு சென்றாள்.

இப்போது உள்ளே சென்றவள், “அம்மா” என்று கத்த, அவளின் சத்தம் கேட்டு பயந்தவன்.

அவளின் அறை கதவருகில் செல்ல, அதே நேரம் அவளும் கதவு திறந்து ஓடி வந்தில் இருவரும் மோதி கொண்டதால், குகனின் மேல் தேன்மொழி விழுந்துவிட்டாள்.

அதில் , இருவரின் பார்வையும் ஒரு சேர இருவரும் கண் இமைக்காமல் ஒருவரை ஒருவர் கண்டார்கள்.

இப்போது நினைவிற்கு வந்த தேன்மொழி “முதல எந்திக்குறீங்களா”

“நல்லா பாரு, யாரு மேல யாரு இருக்கான்னு” என்று கூற, சற்றும் தாமதிக்காமல் வேகமாக எழ குகனும் எழுந்தான்.

“ஆமா, ஏன் இப்படி கூச்சல் போட்டு ஓடி வந்த”

“அதுவந்து ரூம்ல கரப்பான் பூச்சி, அதான் பயத்துல”

அதில் குகன் சிரித்தவாரு “ஏன் தான், பொண்ணுங்க தம்மா தூண்டு கரப்பான் பூச்சி பயப்படுறாங்களோ தெரியல, அத நினைச்சேனா சிரிப்பு வந்துட்டு”

அதை கேட்ட தேன்மொழி, அவனை முறைத்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள்.

போகும் அவளை பார்த்தவாரு “ப்பா என்னமா முறைக்குறா, கொஞ்சம் விட்டா முறைச்சே ஏறிச்சிருவா போல” என்று நினைத்து விட்டு, அவளின் பின்னே சென்றான்.

“என்ன வேணும் உங்களுக்கு , இப்போ எதுக்கு என் பின்னாடியே வரீங்க”

“இதோ பாரு டா ஆசைய பின்னலாம் வாரங்களாமே பின்னால” என்று கூறி, அங்கு இருக்கும் குடத்தில் தண்ணீர் கோரி குடித்தான்.

“சே இப்படி அசிங்க பட்டுடோமே , ஏய் தேனு இதுக்கு மேல வாய கொடுத்து அசிங்க படாத” என்று மனதிற்குள் தன்னை நொந்து கொண்டு சமையல் வேலையை செய்கிறாள்.

குகன் “ஓய் தேனு”

அதில் காதில் வங்கி கொள்ளாமல், தன் வேலையில் மும்முரமாக இருந்தாள்.

“அடியே தேனு உன்னதானடி கூப்பிடுறேன் இப்போ எதுக்கு, என்கிட்ட சிடுசிடுன்கிற, உனக்கு என்ன தான் பிரச்சனை வந்ததுல இருந்து என்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டிக்க, அப்படி என்ன டி நான் உன்ன பண்ணேன்”

அப்போதும் தேன்மொழி, ஒரு முறைப்பை மட்டும் பதிலாக கொடுத்துவிட்டு மறுபடியும், அவள் வேலையை செய்ய தொடங்கினாள் .

“அண்ணனுக்கு தங்கச்சி தப்பாம பிறந்து இருக்கா , கல்நெஞ்சக்காரி” என்று மனதிற்குள் நினைக்க,

அப்போது சிவகாமி வாசலில் நின்றவாரு “ஏய் தேனு” என்று அழைக்க,

சமையல் அறையில் இருந்து ஓடி வந்தாள்.

தேன்மொழியுடன் குகன் வருவதை கண்டவர்

“டேய் நீ எப்போ வந்த”

“இதோ, இப்போ தான் வந்தேன் அம்மா” 

இப்போது சிவகாமி “ஏய் ஏவ்வளவு நேரம் வாசலையே நிக்கிறது, போ போய் சீக்கிரம் ஆரத்தி கரச்சி கொண்டு வா”

நொடியும் தாமதிக்காமல் ஆரத்தி எடுத்து வந்தவள், அதை சுற்றி தன் அண்ணியை வீட்டிற்குள் வரவேற்றாள்.

சிவகாமி “முத முத வீட்டுக்கு வார , வலது கால் எடுத்து வச்சி உள்ள வாமா”

அவர் கூறியதை போல் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வந்ததும் சபூஜை அறைக்கு அழைத்து சென்று “இந்த விளக்கு ஏத்து மா” என்று தீப்பெட்டியை, அவள் கையில் கொடுக்க,

அதை கையில் வாங்கி விளக்கை ஏற்ற அனைவரும் சாமி கும்பிட்டுவிட்டு பூஜை அறையில் இருந்து வெளியே வந்தார்கள்.

இப்போது சிவகாமி “நீலா மா இங்க உக்காரு, நான் போய் உனக்கு குடிக்க எதாவது கொண்டு வாரேன்”

அதை கேட்ட நீலா சோகமான முகத்துடன் நாற்காலியில் அமர்ந்தாள்.

இப்போது தேன்மொழி “ஹாய் அண்ணி, நான் தேன்மொழி குணாவோட தங்கச்சி, உங்க பேரு”

“நீலாவதி” என்று சுருக்கமாக கூற

“நீலாவதியா… ஹான் நான் ஷார்ட்டா உங்கள நீலு அண்ணின்னு கூப்பிடுறேன், அப்புறம் அண்ணி, இது இனிமே உங்க வீடு சோ கூச்ச படாம, உங்க இஷ்டத்துக்கு, நீங்க ஜாலியா இருக்கலாம் அது மட்டும் இல்லாம இந்த வீட்டுல உங்களுக்கு என்ன தேவபட்டாலும் தயங்காம என்கிட்ட கேளுங்க”

அதற்கு சிரிப்பை மட்டும் நீலா பதிலாக
கொடுத்தாள்.

இப்போது குகன் அவளிடம் “ஹாய் மா நான் குகன், என்ன நீ பாத்து இருப்ப , நான் குணாவோட ஃப்ரெண்டு அப்புறம் இப்படிலாம் நடக்கும்ன்னு கொஞ்சம் கூட எதிர் பாக்கல எல்லாத்தையும் பண்ணிட்டு தான்,  அவன் என்கிட்ட சொல்லவே செஞ்சான் அவன் பண்ணுனதுக்கு மன்னிச்சிடு மா, அவன் ரொம்ப நல்லவன் மா பாக்க ரவுடி மாதிரி தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள குழந்தமா,

அவன் ஒரு சில சூழ்நிலையால இப்படி அவன் மாறிட்டான், இனி இங்க தான இருக்க போற போக போக அவன புரிஞ்சிப்ப, உனக்கு என்ன உதவி தேவபட்டாலும், இந்த அண்ணன்கிட்ட தயங்காம கேளு” என்று கூறி கொண்டு இருக்க,

பாட்டி “இங்க பாரு டி மா , அவன் ரொம்ப நல்லவன் தான், அவங்க அப்பா சாவுக்கு ஒருவழில உங்க அப்பாவும் காரணம் அதுனால தான் நம்ம குடும்பத்து மேல கோவமா இருக்கான் ஏன், நீ சொன்ன மாதிரி பலி வாங்க கூட உன்ன அவன் கட்டி இருக்கலாம் ஆனா, இது கடவுள் உனக்கு கொடுத்த வாழ்க்க அவன் கெட்டவனாவே இருந்தாலும் அவன திருத்தி அவன் கூட சந்தோஷமா வாழ வேண்டியது உன்கிட்ட தான் இருக்கு, இந்த பாட்டியோட ஆசிர்வாதமும் உனக்கு எப்போவும் இருக்கும்”

அவள் மண்டப்பத்தை விட்டு வரும் போது யாரும் அறியாதவன்னம் , அவளின் பின்னால் வந்து அவளிடம் கூறியதை குகன் சொன்ன கூற்றில் , அவளுக்கு ஞாபகம் வந்தது அதை யோசித்தவாரே “சரிங்க அண்ணா”

அவள் அண்ணா என்று கூறியவார்த்தையில் சிறிது திருப்தி
அடைந்தான்.

இப்போது , அவளுக்கு குடிக்க தேனீர் கொடுத்தார்.

தேநீரை குடித்துவிட்டு “அண்ணா..எனக்கு போட்டுக்க டிரஸ் எதுவும் இல்ல, இப்போதைக்கு எதாவது டிரஸ் கடையில வாங்கி தந்தீங்கன்னா நல்லா இருக்கும்” என்று தயங்கியவாரு கூறி முடிப்பதற்குள்,

தேனு”அண்ணி, உங்களுக்கு பிரச்சனை இல்லன்னா நீங்க என்னோட சுடி யூஸ் பண்ணிக்கோங்க, அதுல எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல”

அதற்கு நீலா “தேங்க்ஸ்…” என்று கூறி நெத்தியில் விரல் வைத்தவாரு “சாரி மறந்துட்டேன், உங்க பேரு”

“அட வாங்க போங்கலாம் வேண்டாம், கால் மீ தேனு”

“தேங்க்ஸ் தேனு, உன்னோட டிரஸ் எடுத்து தாரீயா நான் போய் ப்ரஷ் ஆகிட்டு வாரேன்” என்று கூற, உடனே அவள் அறைக்கு சென்று நிறைய ஆடைகளுடன் வந்தவள் அவளுக்கு வேண்டியதை எடுக்க சொல்ல

நீலாவும் அதில் ஒன்றை தேர்ந்து எடுத்துவிட்டு “தேனு ரூம் எங்க இருக்கு”

“ம் அதோ இருக்குல்ல, அது தான் அண்ணன் ரூம் இனி, இந்த ரூம் உங்க ரூமும் கூட” என்று கூற, சிறு யோசனைக்கு பின் குணாவின் அறைக்கு குளிக்க சென்றாள்.

இப்படி நேரங்கள் கடக்க, இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார்கள்.

நீலாவும், குணாவின் அறையில் படுத்து கொண்டாள்.

வழக்கமாக குடித்து விட்டு, இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்தான்.

வந்தவன் நேராக, அவனின் அறையை நோக்கி கதவையை தள்ளியவாரு செல்ல அதில் கதவு பூட்டி இருந்ததால் கதவில் முட்டி கொண்டான்.

இப்போது போதையில் “என்னடா இது எப்போவும் ஒரு தள்ளுல கதவு திறந்துரும் , இன்னைக்கு என்னாச்சி” என்று மறுபடியும் கதவை தள்ள முயற்சி செய்தான்.

இப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டு நீலா கதவை திறக்க,

போதையிலும் அவள் முகம் தெளிவாகவே தெரிய “ஏய் நீ இங்க என்னடி பண்ற, வெளிய போடி” என்று கத்தி, அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து வாசலின் இழுத்து செல்ல முயற்சி செய்தான்.

அவனின் சத்தம் கேட்டு மித்த இருவரும் வெளியே வர  தன் மகனின் செயலை கண்டு “டேய் , அவள விடுடா”

அவன், அதை காதில் வாங்காமல் அவளை இழுத்து செல்ல,

பொறுமை இழந்த சிவகாமி, அவனை பளாரென்று அரைந்துவிட்டு “இங்க பாரு தேனு அவன் எப்போ, நீலா கழுத்துல தாலி கட்டினானோ அப்போவே அவ இந்த வீட்டு மருமக ஆயிட்டா, அதுனால அவ இங்க தான் இருக்கணும் அதையும் மீறி அவள இந்த வீட்டவிட்டு அணுப்பணும்ன்னு நினைச்சான், அவகூடவே நம்மளும் போயிடுவோம்ன்னு அவன் காதுல உரைக்குற மாதிரி சொல்லு டி”

அதற்கு குணா “தேனு இவ விஷயத்துல அம்மாவ தலையிட வேண்டாம்ன்னு சொல்லு”

“ஏய் யாருக்கு யாருடி அம்மா, எப்போ ஒரு பொண்ணு வாழ்க்கைய நாசமாக்கணும்ன்னு நினைச்சி, இப்படி ஒரு காரியத்த பண்ணினானோ அப்போவே, இவன் என் பையன்ங்குற தகுதிய இழந்துட்டான்,

இப்போ என் உயிர் கூட நீலாக்காகவும் தேனுக்காகவும் மட்டும் தான், இதுக்கு மேல இவன பையன்ன்னு சொல்ல எனக்கு அசிங்கமா இருக்கு, நல்லா கேட்டுக்க சொல்லு டி தேனு, நீலாவும் இங்க தான் இருப்பா அப்படி இல்லன்னா, நானும் அவகூடவே போயிடுவேன் யோசிக்க சொல்லு” என்று அதில் கோவம் கொண்டவன், வேகமாக தன் அறைக்கு சென்றான்.

அவள் சென்றதும் சிவகாமி “இங்க பாரு மா, நீ அவன் கூட அவன் ரூம்ல தான் இருந்தாகனும், அப்போ தான் ஒரு வருஷம் கழிச்சு, உனக்கு முறைபடி உண்மைய சொல்லி டிவோர்ஸ் வாங்க முடியும்” என்று கூற,

அவர் கூறியது சரி என்பதால் அமைதியாக அறைக்கு சென்றாள்.

அவள் உள்ளே வருவதை கண்டவன், வந்த மறுநொடியே கதவை மூடிவிட்டு, அவளின் கழுத்தை பிடித்து தள்ளி கொண்டு சுவற்றில் சாய்யித்தவாரு “என்னடி, எங்க உங்க வீட்டுல யாரையாச்சும் எதாவது பண்ணிருவேன்ங்குற பயத்துல,

என் வீட்டுலயே இருந்து நான் என்னலாம் பண்ண போறேன்னு நோட்டம் போட வந்து இருக்கியா, அந்த அளவு என்மேல உனக்கு பயமா”

அவன் கூறியதை கண்டு, அவள் சிரிக்க,

அதில் கோபமுற்றவன், அவள் கழுத்தை அழுத்தி பிடிக்க,

இப்போது கழுத்தில் இருந்த, அவன் கையை வெடுக்கென்று எடுத்தவாரு “என்ன டா, உன்ன பாத்து நான் பயந்துட்டேனா, அப்படி நினைச்சா உன்ன விட முட்டாள் யாரும் இந்த உலகத்துல இருக்க முடியாது  , கொஞ்சம் அமைதியா இருந்தா என்ன வேனா பேசுவீயா புலி பாயறதுக்கு தான் அமைதியா இருக்கும் கேள்விபட்டது இல்ல”

“ஏய் என்ன பத்தி உனக்கு தெரியாது”

“அதை தான், நானும் சொல்றேன் என்ன பத்தி உனக்கு சரியா தெரியல, நீ இப்படிலாம் பண்ணினதும், உனக்கு பயந்து அப்படியே ஓடி போயிருவேன் நினைச்சியா, பதிலுக்கு பதில் மோதி பாக்குறவ தான் இந்த நீலா, இங்க தான் இருக்க போறேன் போக போக என்ன பத்தி முழுசா தெரிஞ்சிப்ப, இப்போ எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்” என்று கூறிவிட்டு சென்றாள்.

நாயகி – நீலாவதி, வயது – 25 , படிப்பு – msc of catherine, சாரா ரெஸ்டாரன்ட்டை நடத்தி வருகிறாள்,

முதலில் சுந்தரம் மற்றும் அமராவதி இவளின் அம்மாவின் பெற்றோர் (சாரதையின் பெற்றோர்) இவளின் தந்தையின் தாய்மாமன் தான் சண்முகம் சிறு வயதிலேயே, தன் பெற்றோரை இழந்த காரணத்தினால் தன் அக்காவின் மகனை சுந்தரம் எடுத்து வளர்த்தார், தாய் மாமன் மீது கொண்ட நன்றிக்ககாக , அவரின் பெண்ணாகிய சாரதையை திருமணம் செய்து, அனைவரும் ஒன்றாக இருந்தார்கள்.

சுந்தரம் மற்றும் அமராவதிக்கு , ஒரு பையன் மூன்று பொண்ணு, ஒரு பையன் மற்றும் சாரதையை தவிர மித்த இரு பெண்களும் திருமணமாகி அவரர் வீட்டில் சென்றார்கள், ஏதேனும் குடும்ப விசேஷத்திற்கு மட்டும் கலந்து கொள்ள வருவார்கள்.

சாரதை ஆறுமுகம், இவர்களுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு,

பையன்-ஈஸ்வரன், நீலாவின் செல்ல அண்ணன் என்று கூட சொல்லலாம், வயது – 26 , ரெண்டு வருடமாக ஐடி கம்பனியில் பணி புரிகிறான். நீலா இந்த வீட்டின் கடகுட்டி தாத்தாவின் செல்ல பிள்ளை .

நாயகன் குணசேகரன், வயது – 28 , சிவகாமி-அம்மா, தேன்மொழி தங்கை, குகன் அவனின் சிறு வயது தோழன், சிறு வயதில் இருந்தே தான் அனைவரையும் அடக்கே வேண்டும் என்று எண்ணம் கொண்டவன்.

          
                                       
                                         
                    

    
           

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்