காலையில் தன் படுக்கையில் இருந்து எழுந்தவள் “அம்மா….” என்று கத்த, தன் மகளின் சத்தம் கேட்டு ஓடி வந்தார் சிவகாமி .
இப்போது மகளை காண வந்த சிவகாமி அவளிடம் “ஏய் என்னடி ஆச்சு, காலையிலேயே எதுக்கு டி, அம்மான்னு கூச்சல் போடுற”
“அங்க பாரு அம்மா” என்று தன் எதிரே நோக்கி கை காட்டினாள்.
“அடியே, இதுக்கு தான் இந்த கத்து கத்துனீயா, நான் என்னமோ ஏதோன்னு பதறி அடிச்சி வாரேன் , நீ என்னடான்னா கரப்பான் பூச்சிக்கு , இந்த கத்து கத்துற”
“எத்தன தடவ சொல்லி இருக்கேன், நைட்டு தூங்குறதுக்கு முன்னால கரப்பான் பூச்சி வரமா இருக்க மருந்து தெளின்னு சொன்னேன்ல, இப்போ பாரு உன்னால காலையிலேயே என் மூடு ஸ்பாயில் ஆயிடுச்சு, முதல போய் அந்த கரப்பான் பூச்சிய விரட்டு”
அதை கேட்ட சிவகாமியும் , அந்த கரப்பான் பூச்சியை விரட்டி விட்டு விட்டு அவளிடம் “ஏன் டி , அப்படி என்ன டி வீட்டுல வேல பாக்க சும்மா தான வெட்டியா இருக்க ,
இந்த கரப்பான் பூச்சி வராம இருக்க, உன்னால மருந்து கூடவா தெளிக்க முடியாது,
எல்லாத்துக்கும் என்னைய நல்லா ஏவு, உன்னலாம் எவன் கட்டி மேய்க்க போறான்னு, தெரியல”
“யார பாத்து வெட்டியா இருக்கேன்னு சொல்ற, வருங்கால கவர்ன்மென்ட் அதிகாரிங்குறத ஞாபகம் வச்சிட்டு மரியாதையா பேசு”
அதற்கு சிவகாமி “ஆசை படலாம் அதுக்குன்னு பேராச பட கூடாது டி”
“என்ன கிண்டலா, நீ வேணா பாத்துக்கிட்டே இரு, நான் கண்டிப்பா கவர்ன்மென்ட் அதிகாரி ஆகுறனா இல்லையான்னு”
“அது சரி , நீ கவர்ன்மென்ட் அதிகாரி ஆகுறதுக்கும் வீட்டுல, எனக்கு ஒத்தாச பன்றதுக்கும் என்ன டி சம்பந்தம்”
“எனக்கு கூட உனக்கு ஒத்தாசையா இருக்கணும் ஆசை தான், ஆனா படிக்கணும்ல படிக்கும் போது வேல பாத்தா படிப்புல கவனம் இருக்காது, அப்புறம் நான் எப்படி கவர்ன்மென்ட் அதிகாரியாக முடியும்,
கொஞ்சம் மாசம் பொறும்மா எக்ஸாம்லாம் முடிஞ்சதும் உன்ன உக்கார வச்சி வித விதமா, ஆக்கி போடுறேன் இப்போ ஆள விடு”
“அடியே வேலை பாக்க சோம்பேறிங்குறத சொல்ல, படிக்கிறேன்னு சாக்கு சொல்லுறீயா, நாங்களாம் அந்த காலத்துல 12 வயசுலேயே,
இத்தா பெரிய பானைல சோறு பொங்கி வச்சிட்டு வீட்டுல வேலை எல்லாம் அம்மாக்கு ஒத்தாசையா பாத்து வச்சிட்டு , அப்புறம் தான் படிக்கவே போவோம்,
ஆனா, நீ எரும மாடு மாதிரி வளந்துட்டு, ஒரு தண்ணி கூட கோரி குடிக்காம, அத செய் இத செயின்னு என்ன ஏவுற இப்படியே இருந்தேன்னு வை, போற இடத்துல ஆத்தாகாரி ஒருவேளையும் பாக்க சொல்லி கொடுக்கலன்னு என்ன தான் கிழிப்பாங்க”
“காலைலேயே ஆரம்பிச்சிட்டீயா, உன் புராணத்த , இதெல்லாம் பேசாம நீ பேசுறத ரெகார்ட் பண்ணி வச்சிட்டேன்னு வை , உனக்கு தோணும் போது நான் போட்டு கேட்டுக்கிறேன் உன்னோட எனர்ஜியாவது சேவ் ஆகும்ல”
“என்னடி கொழுப்பா, இப்போலாம் வர வர உனக்கு வாயும் ஜாஸ்தி ஆயிடுச்சு, என்ன பேசினாலும் பதிலுக்கு பதில் பேசுற போற இடத்துல இப்படி பேசிட்டு திரியாத மாமியாகாரி வாயிலேயே நாலு போடு போடுவா , பாத்து நடந்துக்கோ டி”
“எம்மயோய் , உனக்கு நான் இந்த வீட்டுல இருக்கிறது பிடிக்கலன்னா சொல்லிடு, எங்கேயாவது போயிடுறேன்”
“அடியே பொம்பள பிள்ளை, பேசுற பேச்சாடி இது போயிடுறேன்னு”
“பின்ன என்னம்மா, நான் என்ன செஞ்சாலும் எதாவது குத்தம் கண்டு பிடிச்சு, இத செஞ்சா மாமியா அப்படி சொல்லுவா , இப்படி அப்படின்னு டெய்லி சொல்லி சாவடிக்குற ,
இப்படியே சொல்லிட்டு இருந்தேன்னு வையு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்ன்னு, அப்படியே உன்கூடவே இருந்துருவேன் பாத்துக்கோ”
“என்னமோ பண்ணி தொல போ” என்று சிவகாமி மூஞ்சை வெட்டி கொண்டார்.
இப்போது, தன் அன்னையை கட்டி கொண்டவள் “சிவகாமி இங்க பாரு செல்லம்” என்று கூற,
அதே சமயம் “தேனு மா” என்று ஒரு ஆடவன் குரல் கேட்டது,
அதை கேட்ட சிவகாமி “அடியே, உன் நொன்னங்காரன் கூப்பிடுறான் போ” என்று கூற, தன் அன்னைக்கு கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு ஓடினாள்.
“அடியே தேனு, எங்க டி இருக்க” என்று அவன் குரல் கேட்ட , மறுநொடி
அவன் எதிர்ப்புறம் வந்து நின்றாள் தேன்மொழி.
“இவ்வளவு நேரம், எங்கடி போன எவ்வளவு நேரமா, உன்ன கூப்பிடுறேன்”
“சாரி அண்ண”
“சரி போடி , காபி கொண்டா”
“ஆமா, இன்னைக்கு சண்டேய் தான வழக்கமா சன்டேய் இவ்வளவு சீக்கிரமா எந்திக்கவே மாட்டியே, இன்னைக்கு என்ன அதிசயமா இருக்கு”
“இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான ஜோலி ஒன்னு கிடக்கு, அத முடிக்க தான் கிளம்புறேன், சரி முதல போய் காபிய கொண்டா”
வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தவள், தன் அன்னை ஏற்கனவே போட்டு வைத்து இருந்த தேநீரை சிறிது சூடு செய்து ஒரு டம்ளரில் ஊத்தி வேகமாக கொண்டு வந்து,
அவனிடம் கொடுக்க அவனும், அதை வாங்கி குடித்துவிட்டு குளிக்க சென்றான்.
அவன் சென்றதும் தேனுவும் குளிக்க சென்றாள்.
தன் அண்ணன் சாப்பிட வருவதற்குள் வேகமாக குளித்து முடித்து வேறு உடை அணிந்து ஈர தலை கொண்டையில் துண்டுடன் வந்தாள்.
இவள் வந்த சிறிது நேரத்தில், அவனும் வந்து சாப்பிட அமர்ந்து “ஏய் தேனு மா சாப்பாடு எடுத்து வை”
தன் அன்னை செய்து வைத்து இருந்த இட்லியை ஹாட் பாக்ஸில் இருந்து சுடு பறக்க எடுத்து வைத்துவிட்டு தொட்டு சாப்பிடுவதற்கு சாம்பார் சட்னி என்று வைத்தாள் .
மகன் தாய் இருவருக்கும் இடையில் சிறு சண்டையால் பேசு வார்த்தை இல்லை ஆதலால், அவனுக்கு செய்ய வேண்டிய முக்கியமான பணியை, அவன் தங்கை தேன்மொழி தான் செய்வாள்.
அதோடு தங்கை மேல் அதிகம் பாசம் கொண்டவன்.
இப்போது, அவன் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, அவனின் அன்னை சிவகாமி “அடியே என்னடி ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சேவல் இவ்வளவு சீக்கிரம் எந்திச்சு, எந்த சண்டைக்கு போகுதாம்”
அதற்கு, அவள் “எம்மா அவனுக்கு ஏதோ முக்கியமான ஜோலி கிடக்குன்னு சொன்னான், அதான் இவ்வளவு சீக்கிரம் எந்திச்சி இருக்கான்”
“ஆமா, அந்த சேவலு எவன் ஜோலிய முடிக்க போகுதாம்”
“எம்மயோய் வாய முடிகிட்டு சும்மா இருக்க மாட்டியா, அவன நிம்மதியா சாப்பிட விடேன்”
“அடியே இவனே பல பேரோட நிம்மதிய கெடுத்து, அவங்க வாழ்க்கைய நாசமாக்குறவன் டி இவனுக்கு, எதுக்கு டி நீ வக்காலத்து வாங்குற முதல இன்னைக்கு யார் நிம்மதிய கெடுக்க போறான்னு கேளு”
அதை கேட்டு கடுப்பானவன் “அடியே தேனு, நான் எல்லாரோட நிம்மதிய கெடுக்கிறவன் தான், இனியும் அப்படி தான் இருப்பேன், என்ன அடக்க எந்த கொம்பனாலையும் முடியாது” என்று கூறிவிட்டு, பாதி சாப்பாடுலையே தட்டில் கை கழுவி விட்டு சென்றான்.
அதை கண்டு கோபமுற்ற தேன்மொழி “என்னமா நீ, எப்போ பாரு அவன் சாப்பிடும் போது எதையாவது பேசி கிளப்பி விடுறதே வேலையா செய்யுற, அவனும், இந்த பாதி சாப்பாடுலையே தட்டுல கை கழுவிட்டு போயிடுறான்”
“அடியே, இவ்வளவு பேசுரீயே உன் அண்ணன்கிட்ட போய் புத்திமதி சொல்லி திருத்த வேண்டி தான”
அதற்கு தேனு “நான் மாட்டேன் பா, ஏன்ம்மா நான் உசுரோட இருக்கிறது உனக்கு பிடிக்கலையா என்ன, போய் யார்கிட்ட கோத்து விடுற”
“தெரியுதுல, அப்போ யாரு தான் அவன திருத்துவா என்னையும் பேச கூடாதுன்னு சொல்ற, நீயும் எதுவும் வாய திறந்து அவன்கிட்ட கேக்க மாட்ட, அப்போ யாரு தான்டி அடக்குவா, அவன”
“அம்மா, இதுக்கு ஒரே வழி தான் இருக்கு பேசாம , அவனுக்கு ஒரு பொண்ண பாத்து கட்டி வச்சிட்டேன்னா, அவன அண்ணி மாத்திருவாங்க”
அதற்கு சிவகாமி “நானும் அது தான்டி யோசிக்கேன், ஆனா இவன பாத்து ஊரே நடுங்குது அப்படி பட்ட இவன நம்பி எவன்டி பொண்ணு தருவான், கடவுளா பாத்து இவனுக்கு ஏத்த பொண்ண அனுப்பி வச்சா தான் உண்டு , பாக்கலாம் இவனுக்கு வர போறவ,
இவன ஆட்டி படைப்பளா இல்ல, இவனுக்கு அடங்குவாளன்னு பொறுத்து இருந்து பாக்கலாம்” என்று அவளிடம் கூறிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றார்.
இப்போது தேன்மொழியும் படிக்க சென்றாள்.
இப்படி பல மணி நேரங்கள் கடக்க,
இப்போது சிவகாமியின் கைபேசி சிணுங்கியது , அதை கண்ட தேன்மொழி அந்த கைபேசியை காதில் வைத்து “ஹலோ” என்று கூற,
மறுமுனையில் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை, உடனே படக்கென்று தன் அம்மாவிடம் போனை கொடுத்துவிட்டு சென்றாள்.
அதை காதில் வைத்த சிவகாமி “ஹலோ, யாரு”
“நான் தான் அம்மா, குகன் பேசுறன்”
அதற்கு சிவகாமி “அட நீயா சொல்லு டா, இந்த நேரத்துல ஃபோன் பண்ணி இருக்க, என்ன விஷயம்”
“எம்மா உங்ககிட்ட முக்கிமான விஷயமா பேசணும், அதான் குணாக்கு கூட தெரியமா தனியா வந்து பேசுறேன்”
“என்னடா எதுவும் பிரச்சனையா”
அதற்கு குகன், தன் நண்பன் செய்த அனைத்தையும் கூற
அதை கேட்டு நெஞ்சை பிடித்தவாரு “டேய் என்னடா சொல்லுற, பாவி பையன் இப்படியா பண்ணான்”
அதற்கு குகன் “அம்மா எனக்கு ரொம்ப நேரம் பேச நேரம் இல்ல , அவனுக்கு தெரிஞ்சா என்ன கொன்னு போடுவான், நீங்க என்ன பண்றீங்க, நான் சொன்ன அட்டிரஸ்ல போய், அந்த பொண்ண பாத்து, அவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பாத்துக்கோங்க,
ரொம்ப நல்ல பொண்ணுமா அவ, நீங்க தான் அவள பாத்துக்கணும் மத்ததெல்லாம் நேருல வரும் போது பேசிக்கலாம்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
இப்போது சிவகாமி “அடியே தேனு, உன் அண்ணன் ஒரு பொண்ணோட வாழ்கையவே நாசம் ஆக்கிட்டான் டி”
“என்னமா சொல்ற”
“சாரா ரெஸ்டாரன்ட் வச்சி இருக்காள, அதான் டி உங்க அப்பாவோட ஃப்ரெண்ட் ஆறுமுகம் அண்ணன் பொண்ணு, அவளுக்கு இன்னைக்கு கல்யாணம் டி, இந்த பாவி பையன் அவள மண்டபம் பூந்து கடத்திட்டு போய், அவ கழுத்துல தாலிய கட்டி, அவ வாழ்கைய நாசம் ஆக்கிட்டான், இப்போ அந்த பிள்ள வீட்டுல இவ சொல்லுறதெல்லாம் நம்பி அவள சேத்துப்பாங்களான்னு கூட தெரியல நான், அந்த மண்டபத்துக்கு போய் அந்த பிள்ளைய பாத்து பேசி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாரேன், நீ வீட்டில பத்திரமா இரு டி” என்று கூறி வீட்டை விட்டு கிளம்பினார்.
இப்போது குகன் கொடுத்த விலாசத்தை கண்டு பிடித்து ஒரு வழியாக, அந்த மண்டபத்தின் அருகில் வந்து கொண்டு இருக்க, அப்போது தான் நீலாவும் பத்திரத்துடன் வெளியே வந்து நின்றாள்.
அதை கண்ட சிவகாமி “அய்யோ, இந்த புள்ள வெளிய நிக்கிறத பாத்தா, இவள வீட்ட விட்டு தோரத்தி விட்டுட்டாங்க போலயே” என்று புலம்பியவாரு, அவளை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அதே சமயம், காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததால் கண்ணை இருட்டி மயக்கம் போட்டு நீலா கீழே வில போக ஓடி வந்து சிவகாமி , அவளை தாங்கி பிடித்தார்.
இப்போது , அவளை பிடித்து ஒரு திண்ணையில் அமர வைத்துவிட்டு தண்ணீரை முகத்தில் தெளித்தார்.
தேன்மொழியின் அண்ணன் பெயர் தான் குணசேகரன், அவனை சுருக்கமாக குணா என்று அழைப்பார்கள்.