Loading

அப்போது நடை தடுமாறியவாரு சோகமாக அழுது கொண்டே “அப்பா” என்று அழுதவாரு நீலா, அவர்களின் எதிரே வந்தாள்.

 

அவளை தான் கோவமாக கண்டார்கள் சாரதை ஆறுமுகம் மற்றும் ஒரு சில கண்கள்.

 

இப்போது மறுபடியும் நீலா “அப்பா” என்று அழைக்க,

 

அதில் கோபமுற்ற ஆறுமுகம் , அவள் முகம் பார்க்காமல் திரும்பி கொண்டார்.

 

இப்போது சாரதை “ஏய், இவ்வளவு நேரம் எங்கடி போய் தொலஞ்ச” 

 

அதற்கு நீலா “அம்மா…ம்மா..” என்று கூறி அழுதவாரு, தன் அன்னையை கட்டி அணைத்து கொண்டாள்.

 

இப்போது, அவள் அன்னை அவளை தன்னிடம் இருந்து விலக்கி “ஏய் முதல எங்க போனேன்னு சொல்லி தொல டி, 

 

உன்னால எல்லார்கிட்டயும் நாங்க பேச வாங்க வேண்டியதா இருக்கு, இப்படி ஊமையா இருக்கமா முதல என்ன நடந்ததுன்னு சொல்லு டி” 

 

அதை கேட்ட ஹரிஷின் அம்மா “ஏய், என் பையனவிட அப்படி யாரு டி, உனக்கு ஒச்சத்தியா கிடைசிட்டான்னு இப்படி கடைசி நேரத்துல ஓடி போன, சொல்லு டி” 

 

அதில் கோபமுற்ற ஈஸ்வரன் “இங்க பாருங்க வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க , அப்படியே அவ ஓடி போயிருந்தா திரும்பி , இங்க வந்து ஏன் நிக்கணும், அப்படியே போய் இருப்பாள, 

 

முதல அவ என்ன சொல்லுறான்னு கேளுங்க , இதுக்கு மேல என் தங்கச்சிய தப்பா எதாவது பேசுனீங்க, அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்” என்று அவரிடம் கூறிவிட்டு, “ஏய் இவ்வளவு நேரம் எங்க போன என்னாச்சி”

 

அதில் கோபமுற்ற ஹரிஷின் அம்மா “நீ எத்தன தடவ கேட்டாலும், அவ வாய திறக்கவே மாட்டா, அது மட்டும் இல்ல அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாம தான் வேற ஒருத்தன்கூட ஓடி போய், 

 

இதோ அவள கழுத்துல அவன் கையால தாலிய கட்டிட்டு வந்து இருக்கா , 

 

இதுலையே தெரியல , உன் தங்கச்சியோட லட்சணம் என்னன்னு” என்று, அவள் கழுத்தில் இருக்கும் தாலி கயிறை அனைவருக்கும் காட்டியவாரு கூறினார்.

 

அவள் எங்கே சென்றாள் என்பதை தெரிந்து கொள்வதில் இருந்ததால் யாரும், அவள் கழுத்தில் இருந்த தாலியை பார்க்கவில்லை. 

 

இப்போது ஹரிஷின் அம்மா சொன்னதை கேட்ட, அனைவரும் அதிர்ச்சியில் , அவள் கழுத்தில் இருந்த தாலியை ஒரு நிமிடம் பார்த்தார்கள்.

 

இப்போது ஓங்கி பளாரென்று நீலாவின் கன்னத்தில், அவளின் அம்மா அடிக்க,

 

அவர் அடித்ததால் கன்னம் வலி எடுக்க தன் கன்னத்தில் கைவைத்தவாரு , அவரை பாவமாக அழுது கொண்டே பார்த்தாள்.

 

நீலாவை இழுத்து ஓங்கி முதுகில் அடித்தவாரு “ஏய் ஏன்டி இப்படிலாம் பண்ணேன, இப்படி அசிங்க படுத்துறதுக்கு, எனக்கு இந்த மாப்பிளை பிடிக்கலன்னு சொல்லி உனக்கு எவன பிடிச்சி இருக்குன்னு சொல்லி இருந்தா, அவனையே நாங்க பேசி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோமா சொல்லப்போறோம், 

 

“எதுக்கு டி,  எங்கள இப்படி நம்ப வச்சி கழுத்த அறுத்த சொல்லு, அப்படி நாங்க பாத்த மாப்பிள்ளையை விட , எவன் முக்கியமுன்னு இப்படி மண்டபத்த விட்டு ஓடுன சொல்லு”

 

அதற்கு நீலா “அம்மா, நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லம்மா, முதல நான் சொல்ல வருறத யாரது காது கொடுத்து கேளுங்க”

 

அனைவரும் அவளை ஒரு மாதிரி பார்வை பார்க்க,

 

அதற்கு நீலா “என்ன புரிஞ்சிக்காத, உங்க யார்கிட்டேயும் பேச விரும்பல, நான் என் அப்பாகிட்ட பேசிக்குறேன், என் அப்பா என்ன புரிஞ்சிப்பாங்க”

 

ஆறுமுகம் எதிரே வந்து நின்றவாரு, அவரிடம் “அப்பா பிளீஸ் ப்பா தயவு செஞ்சி, நீங்களாவது நான் சொல்லுறத கேளுங்க, நான் உங்க பொண்ணு அப்பா எப்படி உங்களுக்கு பிடிக்காதத செய்யனும்ன்னு நினைப்பேன்” 

 

அதற்கு ஆறுமுகம் “டேய் ஈஸ்வர், அவள கண்ணு முன்னாடி நிக்காம, இங்க இருந்து போக சொல்லிடு, அப்புறம் அசிங்கமா எதாவது பேசிட போறேன்”

 

அதற்கு நீலா “அப்பா, நான் சொல்லுறத நீங்களும் கேக்க மாட்டீங்களா, எனக்கு உங்கள விட்டா யாருப்பா இருக்கா வார்த்தைக்கு வார்த்த நீலா மா நீலாமான்னு கூப்பிடுவீங்க, 

 

இப்போ இந்த நீலாமா உங்களுக்கு வேண்டாமா, சொல்லுங்க அப்பா, நீங்களும் என்ன போக சொன்னா, நான் எங்கன்னு போவேன் சொல்லுங்க” 

 

“எங்கனாலும் போ, ஏன் எவனையோ தேடி ஓடி போய் தாலி கட்டிட்டு வந்தல, அவன் கூடவே போக வேண்டி தான, இப்போ என்னதுக்கு , இங்க வந்து என் கழுத்த அறுக்க, மரியாதையா போயிடு” 

 

அதில் கோவம் கொண்டவள் “நிறுத்துங்க ஓடி போனேன் ஓடி போனேன்னு சொல்லுறீங்களே, நான் ஓடி போனேன்னு யாராவது பாத்தீங்களா இல்லல, 

 

அப்படியே நான் ஓடி போய் இருந்தா இங்கே ஏன் மறுபடியும் வந்து நிக்க போறேன், கொஞ்சமாவது யாராச்சும் யோச்சி தான் பேசுறீங்களா” 

 

அதை கேட்ட ஹரிஷின் அம்மா “எதுக்கு வந்து இருப்ப , சொத்து பணத்துக்காக வந்து இருப்ப, வேற என்ன இருக்க போகுது , அது மட்டும் இல்லாம இவ்வளவு நாள் நடிச்சு ஏமாத்துன மாதிரி இப்போவும் எல்லார்கிட்டயும் நல்லவ மாதிரி நடிச்சி ஏமாத்தி, இந்த சொத்து காச எல்லாம் அனுபவிக்க வந்து இருப்ப,

 

இவங்க காசு இல்லாம உன்னால எப்படி உன் பிஸ்னஸ் நடுத்த முடியும்” 

 

அதில் கோவம் கொண்டவள்  “உங்க வாய கொஞ்சம் முடுறீங்களா, தேவை இல்லாம, என் வீட்டு விஷயத்துல மூக்க நுழைக்காதீங்க, அப்புறம் மரியாதை இருக்காது சொல்லிட்டேன்”

 

அதற்கு ஆறுமுகம் “டேய் ஈஸ்வர் தங்கச்சி சொன்னதுல, என்ன டா தப்பு உண்மைய தான சொல்லுறாங்க, இந்த குடும்பத்துல உள்ள சொத்து காசு இல்லன்னா, அவ எப்படி அவ பிசினஸ்ல பண்ண  முடியும், 

 

அது மட்டும் இல்ல இங்க இருந்து போயிட்டா, அந்த ஹோட்டலும் அவல விட்டு போயிடும்ல அதான் இங்க வந்து நாடகம் ஆடுறா” 

 

“என்ன பேசுறீங்க, எனக்கு உங்க சொத்து காசுல, ஒரு பைசா கூட வேண்டாம், ஏன் அந்த ரெஸ்டாரன்ட்ட கூட உங்க பேருல மாத்தி கொடுத்துறேன் அப்பா, ஆனா நீங்களும் இப்படி பேசுவீங்கன்னு, நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல” 

 

அதை கேட்ட ஆறுமுகம் “ஆமா, நான் கூட நீ இந்த மாதிரி ஓடு காலியாவன்னு நினைச்சி கூட பாக்கல” 

 

“யாரு ஓடுகாலி, நான் ஒன்னும் ஓடுகாலி இல்ல” 

 

அதற்கு ஹரிஷின் அம்மா “கல்யாண மண்டப்பத்துல இருந்து ஓடினா ஓடுகாலின்னு சொல்லாம, வேற என்ன சொல்லுவாங்க” 

 

“இங்க பாருங்க கொஞ்சம் வாய மூடிட்டு மாறியாதையா, இங்க இருந்து கிளம்புங்க” என்று கூறிவிட்டு

 

“ஆமா, நான் ஓடி போகல முகூர்த்த நேரம் பாத்து என்ன கததிட்டு போயிட்டான் அவன்” 

 

அனைவரும், இவள் கூறுவதை நம்பாத பார்வை பார்த்தார்கள்.

 

இப்போது சுந்தரம் பேத்தியிடம் “என்ன மா சொல்லுற, யாருமா உன்ன கடத்துனா” 

 

அதற்கு நீலா “தாத்தா என்னையும் என்னோட வாழ்க்கயையும் நாசம் பண்ணி பழி வாங்கணும்ன்னு நினைச்சி, அந்த பொறுக்கி என்ன கடத்திட்டு போய் தாலி கட்டிட்டான்” 

 

அதற்கு அவர் “என்னமா சொல்ற” 

 

“ஆமா தாத்தா,  அவன் என்ன கடத்திட்டு போய் தாலி கட்டிட்டான்னு சொன்னா யாரும் நம்பாம என்ன நீங்களான் வீட்ட விட்டு அணுப்புவீங்கள, 

 

அப்புறம் யாரும் இல்லாம நான் அனாதையா நின்னு என் வாழ்க்கை நாஷமா போயி கஷ்ட படுவேன்னு அப்படின்னு சொல்லி , என் கழுத்துல தாலிய கட்டிட்டான்” 

 

அதை கேட்ட ஆறுமுகம் “நடிக்காத டி அரம்பத்துலையே , எனக்கு சந்தேகம் இருந்துச்சு நீ அவன் கூட தான் ஓடி இருப்பேன்னு, இப்போ க்ளியர் ஆயிடுச்சு இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ என்னோட பொண்ணு சேத்து போய் ஒரு மணி நேரமாச்சு அவ போனதாள தான் இப்போ நாங்க அழுட்டு இருக்கோம் போனவ திரும்பி வரவே வேண்டாம்,

 

அப்புறம் செத்து போனவளுக்கு சொத்தும் காசும் உரிமை கிடையாது, அத ஞாபக வச்சிட்டு இங்க இருந்து மறுபடியும் என்ன பாக்க வர முடியாதா தூரத்துக்கு போயிடு” 

 

அதை கேட்ட சுந்தரம் “மாப்பிளை நீ என்ன பேசுற, அவ எங்க போவா, அவ நம்ம வீட்டு பொண்ணு டா பொய் சொல்ல மாட்டா புரிஞ்சிக்க டா” 

 

அதை தொடர்ந்து ஈஸ்வர் “ஆமா அப்பா, நீலா இந்த மாதிரிலாம் பண்ண மாட்டா உங்க வளர்ப்பு எப்போவும் தப்பாகாது எனக்கு என்னமோ அவ சொல்லுற மாதிரி அந்த பொறுக்கி, இவள பலிவாங்க இதெல்லாம் பண்ணி இருப்பான்னு தோணுது” 

 

அதற்கு நீலா “கண்டிப்பா போயிடுறேன் ஆனா , என்னைக்காவது ஒருநாள் நான் சொல்லுறது உண்மைன்னு தெரிஞ்சி நீங்க என்ன தேடும் போது, நான் உங்க பக்கத்துல இருக்கவே மாட்டேன் அப்பா, நான் போறேன்” என்று கூறி திரும்பி மண்டபத்தின் வெளியே நோக்கி நடக்க,

 

அப்போது சுந்தரம் “ஒரு நிமிஷம் நில்லு நீலா” என்று கூறி கல்யாணம் முடிந்ததும் கொடுக்க இருந்த பத்திறத்தை, இப்போது எடுத்து கொண்டு வந்து, அவள் கையில் கொடுத்து 

 

“இந்த மா, இது உன்னோட ரெஸ்டாரன்ட் பத்திரம், உன் கல்யாணம் முடிஞ்சி தரணும்ன்னு எடுத்து வச்சி இருந்தேன், என்ன ஆனாலும், இந்த ரெஸ்டாரன்ட் விட்டுட்டு நீ போக கூடாது , 

 

அப்படி போனா அது செத்து போனதா அர்த்தம் புடி மா” என்று கூறி அவள் கையில் கொடுத்தார்.

 

அதை கண்ட ஆறுமுகம் “மாமா நீங்க என்ன பண்றீங்கன்னு தெரிஞ்சி தான் பண்றீங்களா ,!நம்மள ஏமாத்திட்டு போன ஓடுகாலிய நம்புறீங்க, இங்க பாருங்க இந்த ரெஸ்டாரன்ட் இனி ஹரிஷ் பாத்துப்பாரு , 

 

அவர் பேருலயே மாத்தி கொடுங்க , இவ பண்ண அசிங்கத்துக்கு இதையாவது அவருக்கு நம்ம செய்யனும்” 

 

“இந்த ரெஸ்டாரன்ட் என்னோட சொத்து அது யாருக்கு கொடுக்கணும்னு, நான் தான் முடிவு பண்ணுவேன் , எப்போவும் போல அது என் பேத்தி நீலா பேருல தான் இருக்கும் , அவ தான் அந்த ரெஸ்டாரன்ட்ட பாத்துப்பா , அந்த ரெஸ்டாரன்ட் அவகிட்ட இருந்து வாங்குற நொடி என்ன நீங்க உயிரோட பாக்க முடியாது” என்று கூறிய மறுநொடி நீலா “தாத்தா..” என்று கூறியவாரு கட்டி கொண்டாள்.

 

இப்போது சுந்தரம் “இங்க பாரு நீலா, தாத்தா எப்போவும் உன்கூட இருப்பேன், நீ தைரியமா போய் , உன் ரெஸ்டாரன்ட்ட நடத்து , யாரு நம்பளனாலும் பரவாயில்ல நான் உன்ன நம்புறேன், எப்போவும் நம்புவேன், இந்த தாத்தா ஆசிர்வாதம் எப்போவும் உனக்கு இருக்கும்” என்று கூறி, வழி அனுப்பி வைத்தார்.

 

இதை கேட்டுவிட்டு, தன் தாத்தா கொடுத்த பத்திரத்துடன் மண்டபத்தில் வெளியே வந்தவள், எங்கே செல்வது என்று தெரியாமல் நின்று கொண்டு இருக்க, 

 

காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததால் கண்ணை இருட்டி மயக்கம் போட்டு நீலா கீழே வில போக, அப்போது ஒரு பெண்மணி தன் கைகளால் அவளை தாங்கி பிடித்தார்.

அதோடு, அவளை தாங்கி பிடித்த அந்த பெண் யார் இருவருக்கும் என்ன சம்பந்தம் என்று அடுத்த பாகத்தில் கூறுகிறேன்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்