Loading

இப்போது ரெஸ்டாரன்ட்டில் தன் வேலையை செய்து கொண்டிருந்த மீனுவின் கண்ணகள் ரெஸ்டாரன்ட்டை சுற்றி ஒரு நோட்டமிட்டு விட்டு “அவன் இன்னைக்கு லீவ்வா இருக்கும் அப்பாடி இன்னைக்கு, அந்த இம்சை தொல்ல இல்லாம நிம்மதியா இருக்கலாம்” என்று பெருமூச்சு விட்டு அவள் வேலையை செய்து கொண்டிருக்க,

 

“மீனு குட்டி” என்று அவனின் குறல் கேட்டவள் “இந்த குட்டி கிட்டிலாம் கூப்பிடுற வேலை எல்லாம் வச்சிக்காதீங்க, கேட்டாலே அப்படியே பத்திகிட்டு வருது”

 

“அப்போ ஏன் இவ்வளவு நேரம் என்னைய காணோம்ன்னு தேடி ஃபீல் பண்ண”

 

“காணும்லாம் ஃபீல் பண்ணல, நீங்க லீவ்ன்னா, உங்க இம்சை இருக்காதேன்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனா அதுக்குள்ள தான் வந்துட்டீங்களே” 

 

“இவ்வளவு நேரம், இந்த முட்ட கண்ணு வச்சி உருட்டி உருட்டி என்ன தேடுனது இல்லாம என்ன தேடலன்னு பொய் வேற சொல்லுறீயா, உன்ன என் பின்னாடி அலையவிடுறேனா இல்லையான்னு பாரு” என்று மனதிற்கு நினைத்துவிட்டு அமைதியாக செல்ல,

 

அவன் செல்வதை கண்டவள் “ஒரு நிமிஷம், இனி இந்த மாதிரி ஃபாலோ பண்ணிட்டு, என் வீடு வரைக்கும் வராதீங்க வீட்டுல யாராவது பாத்தா, என்ன தான் தப்பா நினைப்பாங்க”

 

“இனி எந்த டிஸ்டர்ப்பும் பண்ண மாட்டேன்” என்று கூறிவிட்டு செல்ல,

 

போகும், அவனை ” என்ன சரின்னு சொல்லிட்டான்,அவ்வளவு நல்லவனா” என்று நினைத்தவாரு தன் வேலையை பார்க்கிறாள்.

 

 

இப்போது ரெஸ்டாரன்ட்டிற்கு வந்த நால்வருடன் நீலா மற்றும் மாது ஒருவரை ஒருவர் அறிமுகபடுத்தி கொண்டு சாப்பிட்டு கொண்டிருக்க,

 

 

தேனு ஒரு ஆடவனுடன் செல்வதை கண்ட குகன் எதையோ சொல்லி குணாவை சமாளித்து அனுப்பி வைத்தவன் 

வேகமாக ரெஸ்டாரன்ட்டின் உள்ளே வந்தான்.

 

இங்கு அனைவருக்கும் பரிமாறி கொண்டிருந்தவள், குகன் நிற்பதை வாசலில் நிற்பதை கண்டவள் வெளியே சென்று “என்ன அண்ணா வெளியவே நிக்குறீங்க, உள்ள வாங்க” 

 

 

“அவன் இருந்ததால சரியா பேச முடியல அதான் உன்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும், பிரீனா சொல்லு பேசலாம்”

 

 

“பேசலாம், முதல உள்ள வாங்க என்னோட அண்ணன் வந்திருக்கான், அவன்கிட்ட உங்கள இன்ட்ரோ கொடுத்துட்டு எல்லரோடையும் சேந்து சாப்பிட்டுட்டே பேசலாம்”

 

“இல்லமா அதெல்லாம் வேண்டாம், நான் கிளம்புறேன், இன்னொரு நாள் பேசலாம்”

 

“பிளீஸ் அண்ணா எனக்காக வாங்க” என்று கூறியதால், அவனும் உள்ளே வந்தான்.

 

உள்ளே வந்தவனை கண்ட சாது “ஹலோ அண்ணா” என்று கூற அவனும் “ஏய் கோணிமூக்கி, நீ என்ன இந்த பக்கம்”

 

“ஷாப்பிங் வந்தோம், அப்படியே அண்ணிய பாத்துட்டு சாப்பிட்டுட்டு போலாம்ன்னு வந்தோம், அண்ணா” என்று கூறி முடிக்க,

 

இப்போது நீலா அனைவரையும் குகனுக்கு அறிமுக படுத்த பதிலுக்கு 

 

மூவரும் (ஈஸ்வர், பாலு, மாதேஷ்) “ஹலோ ப்ரோ” என்று கூற 

 

அவனும் “ஹலோ ப்ரோஸ்” என்று கூறிவிட்டு பாலு மற்றும் ஈஸ்வரிடம் “எனக்கு உங்கள நல்லாவே தெரியும், நீங்க வேல பாக்குற அதே கம்பனில தான் நானும் வொர்க் பண்றேன், சோ உங்கள பாத்து இருக்கேன்”

 

“ஓ சாரி ப்ரோ, நான் உங்கள பாத்ததே இல்ல”

 

“இதுக்கு எதுக்கு சாரிலாம், ஃப்ரீயா விடுங்க இனிமே அடிக்கடி பாக்கலாம்”

 

 

 

இப்போது நீலா அனைவருக்கும் பரிமாற அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

 

 

இப்படியே சாப்பிட்டு கொண்டிருக்க தன்னை குகன் வச்ச கண்ணு வாங்காமல் பார்ப்பதை கண்டவள் “பயப்புள்ள இப்படி பாக்குறான், இவன எப்படியாவது வெறுப்பேத்தணுமே, ஐடியா” நினைத்தவள்

 

தன் அருகில் இருக்கும் ஈஸ்வரிடம் 

“என்ன அத்தான் இப்படி சாப்பிடுறீங்க நல்லா அள்ளி சாப்பிடுங்க” என்று கூறி, அங்கு வைக்கபட்டிருந்த அனைத்து உணவையும், அவனுக்கு பரிமாறிவிட்டு, அவனிடம் மட்டுமே பேசி கொண்டிருந்தாள்.

 

இதை எல்லாம் பார்த்து இரண்டு கண்களுக்கு வயிற் எரியதான் செய்தது,

 

அதை நன்கு அறிந்தவள்,மறுபடியும் தனக்கு கிரவியை ஒரு கரண்டியில் எடுத்து தனக்கு வைப்பதற்கு கொண்டு வந்து கொண்டிருக்க வேணுமென்றே, அதை ஈஸ்வரின் சட்டையில் கொட்டி விடுவிட்டவள் “சாரி அத்தான், தெரியாம கொட்டிட்டேன்” 

 

“பரவாயில்ல ஹனி, நோ பிராப்ளம்” அவன் கூப்பிட்டதை கேட்டு அவளே அதிர்ந்து விட்டாள் “பரவாயில்ல நமக்கு, அத்தான் நல்லாவே கோ-ஆபரேட் பண்றாரே” என்று நினைத்தவள்

 

அங்கிருக்கும் டிஸ்யூ காகிதத்தை எடுத்து, அவன் சட்டையில் உள்ள கரையை சுத்தம் செய்தாள்.

 

 

இதை கண்ட சாது “என்ன இவ கொஞ்சம்விட்டா இன்னைக்கே, அவன ஓகே சொல்ல வச்சிடுவா போலயே இவனும், அவள கண்டதும் இப்படி பல்டி அடிக்குறான்,இரு டா உனக்கு ஒருநாள் வச்சி இருக்கேன்” என்று மனதிற்குள் தன்னவனை அர்ச்சனை செய்தவாரே சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

 

குகனோ “போதும் டி, நீ இவ்வளவு நேரம் துடைக்குற துடைக்குறேன்னு, அவன் சட்டைய கிழிச்சிடாத, என்னமோ அவன் இவள கட்டிக்க போற மாதிரி இப்படி விழுந்து விழுந்து அத்தான் அத்தான்னு கவனிக்கிறது என்ன, அவன் இவள ஹனின்னு கொஞ்சுறது என்ன, இதுங்க பெருசா பிளான் பண்றதுக்குள்ள எதாவது பண்ணனும் டா குகன்” என்று நினைத்தான்.

 

அனைவரும் சாப்பிட்டு முடித்து கைகழுவ செல்ல 

 

இப்போது மாதேஷ் “ஏய் முனிமா, பேசாம தேனு தங்கச்சிய ஏன் நம்ம ஈஸ்வருக்கு கட்டி வைக்க கூடாது” 

 

அது இருவரின் (சாது,குகன்) காதில் விழ இருவரும், அதை எரிச்சலாகவே கேட்டார்கள்.

 

சாது கேட்டதை கண்டவள் “ஏய் நல்லா ஐடியாவா இருக்கே, அப்போ ப்ரோக்கர்விட்டு நம்ம ஃபேமிலியையும் அவங்க ஃபேமிலியையும் பேச வைக்கலாம், என்ன சொல்லுற” 

 

“ம் ஓகே தான்” 

 

“என்ன விட்டா, இப்போவே கல்யாணம் பண்ணி ஹனிமூன் அனுப்பி வச்சிடுவாங்க போலயே” என்று இருவரின் (குகன்,சாது) மணவோட்டமும் ஒன்றாகவே இருந்தது.

 

இப்படியே அனைவரும், அங்கிருந்து அவரர் இடத்திற்கு சென்றார்கள்.

 

 

இப்படியே நேரங்கள் கழிய நீலா ரெஸ்டாரன்ட்டில் இருந்து வீட்டிற்கு கிளம்ப மாதேஷ் “என்ன முனிமா, வீட்டுக்கு கிளம்பிட்டீயா, சரி வா, நானே உன்ன வீட்டுல ட்ராப் பண்ணிட்டு போறேன்” 

 

அவளும் மறுக்காமல் அவனுடன் சென்றாள்.

 

இப்போது வீட்டிற்கு வந்தவள் வண்டியைவிட்டு இறங்கியதும்

 

வாசலில் மாது நிற்பதை கண்ட தேனு வேகமாக, அவன் அருகில் வந்து”அட அண்ணா, உள்ள வாங்க” 

 

 

அவனும், அவள் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்காமல் உள்ளே வந்தான்.

 

அவன் வந்ததும் “அம்மா, நான் சொன்னேன்ல அண்ணியோட ப்ரெண்ட்டு மாது அண்ணன், இவரு தான்” 

 

 

“அட வாங்க தம்பி, இருங்க காபி எடுத்துட்டு வாரேன்”

 

“அண்ணா ஒரு செல்பீ எடுத்துக்கலாமா” 

 

“சரி எடுத்துக்கலாம்”

 

மூவரும் ஒன்றாக சுயபடம் எடுக்க,

 

அதே நேரம் வந்த குணா, அவள் நண்பனுடன் நெருக்கமாக நிற்பதை கண்டவன் கோவமாக அறைக்கு செல்ல, அவன் பின்னையே குகனும் செல்கிறான்

 

 

இப்போது தேநீர் குடித்தவன் அனைவரிடமும் கூறிவிட்டு விடை பெறுகிறான்.

 

 

உள்ளே சென்றவன் கோவமாக “யாரு டா, அவன்” 

 

“எவன் டா”

 

“அதான் வெக்கமே இல்லாம, ஈஈன்னு இளிச்சிட்டு அவன்கூட செல்பி எடுத்தாள, அவன தான் கேக்குறேன்”

 

“டேய் தப்பா பேசாத டா, அது அவ ப்ரெண்ட்டு” 

 

“ப்ரெண்ட்டுனா, இப்படி தான் புருஷன் மாதிரி பக்கத்துல ஒட்டிகிட்டு நிக்குறதா”

 

“டேய் வெண்ண அவ யாருகூட என்னமோ பண்றா உனக்கு தான் அவள பிடிக்காதுல அப்புறம் அவ யாருகூட பேசினா உனக்கு என்ன நீ அவள பலி வாங்க தான கல்யாணம் பண்ணிருக்க அப்புறம் ஏன் இதெல்லாம் நினைச்சி ஃபீல் பண்ற”

 

“அது.. அதுவந்து” 

 

“என்னடா இழுக்கிற அப்போ, உனக்கு அவள பிடிச்சிருக்கு,சரி அதவிடு, எனக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்லு, நீ ஒரு பொண்ணோட வாழ்க்கைய நாசம் பண்றவளுக்குலாம் கேடு கேட்டவன் கிடையாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்,ஏதோ காரணத்த என்கிட்ட இருந்து மறைக்குற”

 

“டேய் நீ நினைக்கிற மாதிரிலாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல” என்று கூறி வேகமாக சென்றான்.

 

அவன் சென்றதும் குகனும் அவன் பின்னையே சென்றான்.

 

இவர்கள் பேசிய அனைத்தையும் நீலா வெளியே நின்ற மறைந்தவாரு கேட்டவள், அவன் சென்றதும் அறைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு 

 

யோசித்தவாரே படுக்கையில் அமர்ந்தவள், அவனை சந்தித்தது முதல் கல்யாணமாகும் வரை நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்தவாரு “அப்போ குகன் அண்ணன் சொன்ன மாதிரி ஏதோ ரகசியம் இருக்கு என்னன்னு கண்டு பிடிக்குறேன்” என்று யோசித்தவாரே படுக்கையில் படுத்தவள், அவள் அறியாத வண்ணம் உறங்கிவிட்டாள்.

 

உறங்கி விழித்து வெளியே வந்தவளிடம் சிவகாமி “வாமா உனக்காக தான் வையிட் பண்ணிட்டு இருக்கோம்,எங்க குலதெய்வம் கோவில் திருவிழா வருது அதுக்கு தான், நானும் தேனுவும் போறோம் போயிட்டு வர ஒரு வாரமாகும், பாத்து பத்திரமா இருந்துக்கோ, என்னாலும் கால் பண்ணி கேளு, அப்போ நாங்க கிளம்புறோம்” என்று கூறி விடை பெற்றார்.

 

 

அவர்கள் சென்றதும் அறைக்குள் வந்தவள் திறன் பேசியை எடுத்து குணாவிற்கு அழைப்பை விடுக்க 

 

அவள் அழைப்பை ஏற்றவன் “ஏய் என்ன தான்டி, உன் பிரச்சன” 

 

“டேய் கிங் காங் மூக்கா, என் பிரச்சனையே நீ தான் டா”

 

அவன் கூறிய விதத்தில் ஆடவனுக்கு சிரிப்பு வந்தது 

 

அதை உணர்ந்தளோ என்னமோ தெரியவில்லை அவளும், அதை நினைத்து சிரித்தாள்.

 

“சிரிச்சி முடிச்சிட்டீயா” 

 

அவளின் கூற்றில் அதிர்ச்சியானவன், 

 

“அதெல்லாம் நான் ஒன்னும் சிரிக்கல, முதல சொல்ல வந்த விஷயத்த சொல்லி தொல”

 

“சரி, இப்போ என்ன பண்ற உடனே கிளம்பி வீட்டுக்கு வார, வரும் போது நீ குடிச்சி இருக்க கூடாது ஞாபகம் வச்சிக்க, அப்புறம் தனியா இருக்க போர் அடிக்குது கொஞ்சம் சீக்கிரம் வந்து சேரு, டாட்டா” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

 

 

 

சிறிது நேரம் கழித்து வேகமாக கதவை உடைத்து அறைக்குள் வந்தவன் அவள் இல்லை என்றதும் வீடு முழுவதும் ஒரு சுற்றி தேடி சற்று பதறி போனவன், திறன் பேசியில் தனிகாசலத்திற்கு அழைத்து “பெரிப்பா, நான் தான் சொன்னேன்ல அவள நான் பாத்துக்குறேன்னு,என்மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு, மறுபடி மறுபடியும் எதுக்கு அவ ரூட்ல க்ராஸ் பண்றீங்க, எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, இப்போ ஒழுங்கா அவள வீட்டுக்கு அணுப்புறீங்க சொல்லிட்டேன்” என்று பொரிந்து தள்ளியவன் அவர் கூற வருவதை கூட காதில் வாங்காமல் அழைப்பை துண்டித்தான் .

 

பாவம், இவன் செயலில் தணிகாசலம் புரியாமல் குழம்பி போனார்.

 

 

அவள் திறன் பேசி அறையில் இருப்பதை கண்டு கோவம் ஏற “ஏய் நீலு எங்க டி போய் தொலைஞ்ச” என்று கத்தி கொண்டிருந்தவன் தலையில் கைவைத்தவாரு இருந்தான்.

 

தொடரும்….

 

                             – ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்