Loading

ரெஸ்டாரன்ட் உள்ளே வந்தவர்களை கண்ட நீலா “அட அண்ணா வாங்க, காபியா டீயா என்ன சாப்பிடுறீங்க” 

 

“அட அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா”

 

“என்ன அண்ணா அவர எதுக்கு பாக்குறீங்க, அதெல்லாம் அவர் ஒன்னும் சொல்ல மாட்டாரு” குணாவை பார்த்து “இல்லங்க” என்று தன் திறன்பேசியை ஆட்டியவாரு கேட்க,

 

“குடிச்சிட்டே போலாம்” என்று பற்களை கடித்துக்கொண்டு கூறினான்.

 

 

அவள் சென்றதும் குகன், அவனை பார்த்து நக்கலாக சிரிக்க,

 

“இப்போ என்ன எழவுக்கு சிரிக்கிற”

 

“அது ஒன்னும் இல்ல மச்சான், நானே உன்கிட்ட பேச கொஞ்சம் பயப்படுவேன் ஆனா, தங்கச்சி உன்ன எப்படி அசால்ட்டா ஹன்ட்டில் பண்றான்னு நினைக்கும் போது, ஆச்சரியமா இருக்கு”

 

“அது என்ன டா, நானும் வந்ததுல பாத்துட்டு தான் இருக்கேன், நீ தங்கச்சி தங்கச்சின்னு உருகுறது என்ன, அவ அண்ணா அண்ணான்னு கரையுறது என்ன, கொஞ்சம் விட்டா பாசமலர் பார்ட் 2வே ஓட்டிடுவீங்க போல” 

 

“டேய் டேய் கண்ணு வைக்காத டா”

 

“ஆமா கண்ணு வைக்கிறேனா கண்ணு, எதாவது சொல்லிற போறேன் வாய கிளராத டா” கூறிமுடிக்கவும் அவள் தேநீரை கொடுக்க குடித்துமுடித்து கோப்புவை, அவளிடம்  கொடுத்துவிட்டு “பரவாயில்ல, நான் கூட என்னமோ ஏதோன்னு நினைச்சேன் ஆனா, உன்ன மாதிரியே நீ போட்ட டீயும் நல்லா இருந்துச்சு” என்று குணா கூறி செல்ல,

 

அவர்கள் சென்றதும் அவன் கூறிய கூற்று ஞாபகம் வர, அதை நினைத்து சிறிது புன்னகைத்துவிட்டு அவள் வேலையை தொடர்ந்தாள்.

 

 

 

சாதுவும் தேனுவும் எப்எஸ்எம் ஃபோர்ட் மாலுக்கு சென்று, அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொண்டிருக்க,

 

 

அப்போது, அங்கிருக்கும் பொம்கைகள் பிரிவிற்கு வந்து பொம்மை பார்த்து கொண்டிருக்க,தேனு எதற்சியாக திரும்ப “அட, அது நம்ம ஈஸ்வர் அத்தான்ல” என்று மனதிற்குள் நினைத்துவிட்டு, சிறிது ஓரமாக வந்து திறன்பேசியில் ஈஸ்வருக்கு அழைப்பு விடுத்தாள்.

 

கேள்வியாக, அவளின் அழைப்பை ஏற்று “என்ன கால்லாம் பண்ற, என்ன விஷயம்” 

 

“ஏன், நான் உங்களுக்கு கால் பண்ண கூடாதா, சரி பண்ணல ஃபோன வையுங்க” 

 

“ஏய் அப்படிலாம் ஒன்னும் இல்ல, என்னன்னு சொல்லு” 

 

“அத்தான், உங்க ஆளுக்கா டெடி பியர் பாக்குறீங்க” என்று அவள் கூறியதில் அதிர்ச்சியானவன், அவள் இருக்கிறாளா என்று சுற்றி பார்க்க, அதற்கு தேனு “என்ன அத்தான், நான் எங்க இருக்கேன், சுத்தி பாக்குறீங்க போல” என்று சிரித்தவாரு கேட்க,

 

“ஏய் எப்படி எல்லாம் கரெக்ட்டா சொல்லுற, அப்போ நீ இங்க தான் இருக்கியா”

 

“பரவாயில்லயே கரெக்ட்டா கண்டு பிடிச்சிட்டீங்க ஆனா, நான் மட்டும் இல்ல கோணிமூக்கியும் என்கூட தான் இருக்கா” என்று கூற, வேகமாக தன் பார்வையை திருப்பி தன்னவளை தேடினான் ஆனால், அவன் கண்ணுக்கு அவர்கள் அகபடவில்லை.

 

இப்போது தேனு “அத்தான் ரொம்ப சுத்தி சுத்தி பாக்காதீங்க, கழுத்து சுளுக்கிக்க போகுது” 

 

“ஏய் சாது, எங்க இருக்கா” 

 

“அட பாவி அத்தான், நானும் தான் வந்து இருக்கேன் சொல்லுறேன் கோனிமூக்கி மட்டும் எங்க இருக்கான்னு கேக்குறீங்களே, என்னால சொல்ல முடியாது வேணும்ன்னா உங்க சாதுவ நீங்களே தேடுங்க, நான் ஃபோன வைக்கிறேன்” என்று கூறி அழைப்பை அணைத்துவிட்டு, அவன் கண்களில் தெரியாதபடி சாதுவை மறைத்து திரும்பி நின்றாள்.

 

 

இப்போது, அவன் சுற்றி முற்றி சென்று தேடுவதை கண்ட பாலு “டேய் என்ன டா, இந்த கடைய வாங்குறவனாட்டம் சுத்தி பாக்குற” 

 

 

“ஏய் சாது பேபி, இங்க தான் இருக்காடா” 

 

“எத சாது பேபியா,அது யாரு டா புது கேர்ள்பிரண்டு” 

 

“டேய் அர மெண்டல், நான் சாதனாவ சொல்றேன் டா” 

 

“ஏய் காங்கிரஸ் டா, அவளே நான் இங்க இருக்கேன்னு உனக்கு கால் பண்ணி சொல்லிருக்கான்னா, உன்ன அவளுக்கு பிடிச்சு இருக்குன்னு தான அர்த்தம், அதுனால இன்னைக்கு எனக்கு திரீட் வைக்கிற” 

 

“அதெல்லாம், அவ ஒரு மண்ணங்கட்டியும்யும் கால் பண்ணல அவ தங்கச்சி தான் கால் பண்ணி சொன்னா” 

 

 

“டேய், அவ தங்கச்சி பாக்குற மாதிரி இருப்பாளா டா” 

 

அவனை மேலும் கீழும் பார்க்க,

 

“டேய், இப்போ என்னத்துக்கு இப்படி பாக்குற,எனக்கு ஏத்த தேவதை அவளா இருக்குமோன்னு தோணுச்சு, அதான் கேட்டேன் ஏன், எங்களுக்குலாம் லவ்ஸ் இருக்க கூடாதா”

 

“தரலாமா லவ் பண்ணு, இப்போ என்கூட சேந்து அவங்கள தேட ஹெல்ப் பண்ணு” 

 

“லவ் பண்ணு ஹெல்ப் பண்ணு வாட்ட ரைமிங் டா மச்சான்” 

 

“நீ இப்படியே பேசிட்டு இருந்த, உன் டைமிங்,சரி இல்லாம போயிடும் மூடிட்டு வந்து தேடு டா” என்று கூறி இருவரும் தேட,

 

இவன் தேடுவதை பார்த்து சிரித்தபடியே, அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருக்க,

 

அதை கண்ட சாது “ஏய் யார டி சைட் அடிக்குற” 

 

“அந்தா கிரீன் கலர் ஷர்ட் போட்டு இருக்காருல, அவர தான் சைட் அடிக்கிறேன்” என்று கூறி ஈஸ்வரை தான் கை காட்டினாள்.

 

 

இப்போது தேனு திரும்பியவாரு திறன்பேசி எடுத்து, அவனுக்கு அழைப்பு விடுக்க,

 

அழைப்பை ஏற்ற ஈஸ்வர் “ஏய் எங்க இருக்கீங்க” 

 

“அத்தான் அத்தான் இங்க பாருங்க நேரா நேரா” என்று கைகாட்ட, அவளை கண்டதும் அழைப்பை துண்டித்துவிட்டு திரும்ப, பாலுவோ தன் தலையை ஒரு கையால் கோதிவிட்டான்.

 

ஈஸ்வரோ காரி துப்பும் பார்வை பார்த்துவிட்டு “பாத்து டா, அவளுக்கு ஏற்கனவே ஆளு இருக்க போகுது”

 

 

“உனக்கு பொறாம டா, எங்க எனக்கு உனக்கு முன்னாடியே லவ் செட் ஆயிடுமோன்னு” 

 

“தூ.. ஓவர் சீன்போடாம மூடிட்டு வா” என்று கூறி, அவர்களை நோக்கி வந்தார்கள்.

 

தேனு அத்தான் என்று கூறியதை கேட்டு “எத அத்தானா” என்று கூறி திரும்ப ஈஸ்வரை கண்டு சிலையாகி விட்டாள்.

 

 

அவர்கள், அருகில் வந்ததும் தேனு “ஏய் கோணிமூக்கி” என்று அடித்து அழைக்க, 

 

அந்த வலியில் தான் சுயநினைவிற்கு வந்தவள் கையை தடவியவாரு, அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்

 

ஒரு நிமிடம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருக்க,

 

 

இப்போது தேனு “நான் சொன்னேன்ல இவர் தான், என் அத்தான்” 

 

அதற்கு சாது “எனக்கு தெரியாம, உனக்கு ஏது டி இப்படி ஒரு அத்தான்” 

 

“எனக்கு மட்டும் இல்ல டி, உனக்கும் இவர் அத்தான் தான்” 

 

“என்ன” என்று அதிர 

 

“ரியாக்ஷன குற ரியாக்ஷன குற, இவரு தான் அண்ணியோட அண்ணன், அப்போ நமக்கு அத்தான் தான, அதான் அப்படி சொன்னேன், ஆமா நீ என்ன நினைச்சி இப்படி ஷாக்கானா” 

 

“ஏய் திடீர்னு இவர அத்தான்னு சொன்னதும் ஷாக் ஆயிட்டேன், வேற ஒன்னும் இல்ல, அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் வொர்க் பண்றோம்” 

 

“அட இதுவேறயா” என்று இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு

 

அவளின் காதில் “ஏய் எதுக்கு ஷாக்கானன்னு எனக்கு தெரியும், அது அவரு உன்ன கட்டிகிட்டா, எனக்கு அத்தான் முற தான வேணும், அப்படி நினைச்சி சொன்னதா தான நீ நினைச்ச” 

 

“ஏய் நீ முடிவே பண்ணிட்டீயா, கொஞ்சம்விட்டா இங்கேயே கல்யாணம் பண்ணி வச்சிருவ போல” 

 

“உனக்கு ஓகேன்னு சொல்லு ஜாம் ஜாம்ன்னு பண்ணிடலாம்”

 

“ஏய் அதெல்லாம் ஒரு ஆணியும் வேண்டாம், உன் வேலைய பாரு” 

 

“அப்போ வேண்டாமா, நான் வச்சிக்கிறேன்” என்று கூறி கொண்டிருக்க,

 

இப்போது பாலு “இங்க, எங்கள நிக்க வச்சிட்டு, அங்க என்ன குசு குசு” 

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல”

 

இப்போது சாது “ஏய் தேனு சீக்கிரம் வா கிளம்பலாம் ஷாப்பிங் முடிச்சிட்டு சாப்பிட்டுட்டு வர போகனும்ல, அப்புறம் பெரிமா திட்ட போறாங்க” 

 

அதை கேட்டவன் “ம்ம் இப்போ என்னத்துக்கு இவ இப்படி அவசர படுறா கொஞ்சம் நேரம் பேசுனா தான் என்னவாம், நான் மட்டும் தான் அவள பாக்க தவியா தவிக்கேன், என்ன பண்ணினாலும் கல்லு மாதிரி இருக்கா, எப்படி, இந்த கல்ல சிமெண்ட்டாக்கி வீடு கட்ட போறனோ தெரியல” என்று தனக்கு தான புலம்பி கொண்டிருக்க,

 

“அதுக்கு வாய்ப்பில்ல தான் நினைக்கிறேன்” என்று கூறி தேனுவை வச்ச கண்ணு வாங்காம பார்த்து கொண்டிருந்தான்.

 

அதை கண்ட ஈஸ்வர் “டேய் பாத்து டா கண்ணு விழுந்து ஓடிற போகுது” 

 

“அதெல்லாம் எங்களுக்கு தெரியும், நீ வந்த வேலைய பாரு” 

 

“சரி அப்போ, நாங்க கிளம்புறோம், நீங்க கண்டினு பண்ணுங்க” 

 

“என்ன இதுங்க கிளம்புறதுலயே இருக்குதுங்க, எதாவது பண்ணினா தான் கரெண்ட் வரும், என்ன பண்ணலாம், ஹான் ஐடியா” என்று மனதிற்குள் யோசித்துவிட்டு,

 

ஈஸ்வரிடம் “அத்தான் சாப்டீங்களா” 

 

“இல்ல இனிமே தான்”

 

“அப்போ நல்லதா போச்சு, ஷாப்பிங் முடிச்சுட்டு எல்லாரும் ஒன்னா சாப்பிட்டு போகலாமா” 

 

பாலு அவளை பார்த்து இளித்தவாரு “ஹான் போலாமே” என்று அவனுக்கு முன்னாடி, இவன் முந்திக்கொள்ள அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

 

அப்போது சாது “ஏய், அவங்கள எதுக்கு டி கூப்பிடுற”

 

“ஏய் அதான் உனக்கு வேண்டாம்ன்னு சொல்லிட்டேல, பாக்க வேற ஹன்ட்சம் தான் இருக்காரு, சோ நானும் எவ்வளவு நாள் தான் சிங்கிளா இருக்கிறது, அதான் டபிள்ஸ் ஆகலாம் முடிவு பண்ணிட்டேன், நீ வாய மூடிட்டு எனக்கு கோ-ஓபரட் பண்ணு டி” 

 

“தேவை இல்லமா, ஆசைய வளக்காதடி அவரு வேற எதுவும் பொண்ணு லவ் பண்ணிருக்க போறாரு, உன் நல்லதுக்காக தான் சொல்றேன்”

 

“இதுக்கு பேரு தான் பொசசிவ்னஸ் போல, நம்ம ஐடியா நல்லா வொர்க்அவுட் ஆகுது, இப்படியே கண்டினு பண்ணா அத்தான் லவ் சக்சஸ் தான்” என்று மனதிற்குள் நினைத்தவாரு

 

“சரி, சாப்பிட எங்க போகலாம்”

 

பாலுவோ”நீலா தங்கச்சி ரெஸ்டாரன்ட் இங்க இருந்து பக்கம் தான், வாங்க அங்கேயே போகலாம்” 

 

“சூப்பர் ஐடியா அண்ணா, அப்போ அங்கேயே போகலாம், என்ன டி சொல்லுற” 

 

அவளும் சரி என்று தலையாட்டினாள்.

 

அதற்கு பாலு “அண்ணாவா” என்று கூறி வாய் பிலக்க,

 

தேனு “என்ன அண்ணா, என்னாச்சி”

 

அதற்கு ஈஸ்வர் “அது ஒன்னுமில்ல, நீ அண்ணான்னு கூப்பிட்டதும் பையன் அரந்து போயிட்

டான்”

 

“பிரதெர்,எனக்கு ஆல்ரெடி ஆளு இருக்கு” 

 

“ஓகே சிஸ்டர், நோ பிராப்ளம்” 

 

ஈஸ்வர் “டேய் என்னடா தோச கல்லயே திருப்பிட்ட” 

 

“மூடிட்டு, நீ வந்த வேலைய பாக்குறீயா” என்று கூறினான்.

 

தொடரும்…

               

                                         -ஆனந்த மீரா 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்