உ
என்னுள் வந்தவளே(னே)
பாகம் -1
மே 19, வைகாசி மாதம் 6 ஆம் தேதி திருச்சியில் அரியமங்கலம் என்ற பகுதியில் இருக்கும், ஒரு மிக பெரிய மண்டபமான ஶ்ரீ பிரகாஷ் மண்டபம்.
அந்த மண்டபத்தின் வெளிபுறத்திலே அனைவரும் ஆச்சரியம் படும் அளவு அலங்கரிக்கபட்டு மிகவும் பிரம்மாண்டமாக காட்சி அளித்தது.
மண்டபத்தின் வாசலில் மணமக்களின் புகைப்படங்களுடன்,அவர்களின் பெயர் நீலாவதி வெட்ஸ் ஹரிஷ் என்று பொறிக்கப்பட்ட மிகவும் பெரிய அளவிலான கட்டவுட் அனைவரும் பிரம்மிக்கும் அளவு வைக்கப்பட்டு இருந்தது,
எவ்வளவு நேரம் தான் மண்டபம் வெளியேவே நிக்கிறது, வாங்க உள்ள போகலாம்.
மண்டபத்தில் விருந்தினர்களை வரவேற்பதற்க்காக , அந்த வீட்டின் பெரியவர்கள் என்ற முறையில் சுந்தரமும் அமராவதி சுந்தரமும் தம்பதியராய் மண்டப நுழைவாயிலில் , இரு நாற்காலி போட்டு அமர்ந்தவாரு திருமணத்திற்கு வருவோர்களை, பன்னீர் தெளித்து வரவேற்றார்கள்.
இது பெண்வீட்டு திருமணம் என்பதால் மண்டபத்தினுள் பெண் விட்டார்கள் அனைவரும் மிகவும் ஆராவரமாக ஓடி ஆடி, அனைத்து வேலைகளையும் கவனமாக செய்து கொண்டு இருக்க மணமேடையில் அய்யர் மந்திரங்களை கூறி கொண்டு இருக்க ,
இப்போது அய்யர் “நேரமாயிடுச்சு மாப்பிளைய அழைச்சிட்டு வாங்கோ” என்று கூற,
சிறிது நேரத்தில் மாப்பிள்ளையை தன் கை பிடித்து அழைத்து வந்து மணமேடையில் அமர வைத்தான் மணமகளின் சகோதரன் ஈஸ்வரன்.
இப்போது மாப்பிளைக்கு சொல்ல வேண்டிய சில மந்திரங்களை அய்யர் சொல்ல சொல்ல, ஹரிஷும் அவருடனே சேர்ந்து கூறினான்.
இப்படியே நேரங்கங்கள் போய் கொண்டு இருக்க, இப்போது அய்யர் “முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு சீக்கிரம் யாராவது போய் பொண்ண அழைச்சிட்டு வாங்கோ” என்று கூறினார் .
அதை கேட்ட, பெண்ணின் தோழிகள் இருவரும் நீலாவதியை அழைத்து வருவதற்காக, அவளின் அறைக்கு சென்றார்கள்.
பெண்ணின் தோழிகள் பெயர்,
ஒருத்தி கன்னிகா
இன்னொருத்தி ஜெனிபர் ,
அவளை காண அறைக்கு சென்றவர்கள்.
இப்போது பதற்றம் கொண்டு வேகமாக ஓடி வந்தவர்கள் மணமேடையில் நின்று கொண்டு இருந்த ஆறுமுகம் சாரதை தேவி இருவர்களின் முன் வந்து நின்றார்கள்.
அவர்களை கண்ட சாரதை “ஏய் என்னாச்சி, ஏன் ரெண்டு பேரும் இவ்வளவு பதற்றமா வரீங்க, ஆமா நீலா எங்க டி” என்று கேட்க,
அவர்கள் “அது வந்து அது வந்து….” என்று திணற
அதை கண்ட ஆறுமுகம் “என்னாச்சி டா நீலா, எங்க” என்று கேட்க,
அதற்கு இருவரில் ஒருத்தி “அப்பா அம்மா ரெண்டு பேரும் இப்படி கொஞ்சம் தனியா வாங்களேன்” என்று அவர்கள் காது பட கூறினாள்.
அதற்கு அவர் “என்னாச்சி டா, ஏன் ரெண்டும் பேரும் டென்ஷனா இருக்கீங்க, முதல நீலாவ கூட்டிட்டு வாங்க”
“கூட்டிட்டு வா கூட்டிட்டு வான்னா, எங்க இருந்து அவள கூட்டிட்டு வருறது அதுக்கு அவ ரூம்ல இருக்கணும்ல அப்பா” என்று கூற,
அந்த அதிர்ச்சியில் சிலையாக நின்றான்.
பின் சாரதை தான் கணவனையும் தோழிகள் இருவரையும் அழைத்து கொண்டு தனியாக வந்தார்.
இப்போது சாரதை “என்னங்க டி சொல்லுறீங்க, அவ ரூம்ல இல்லையா நல்லா பாத்தீங்களா பாத்ரூம் எங்கேயாச்சும் போய் இருப்பா டி, நல்லா போய் தேடி பாருங்க” என்று அவர்களிடம் கூறினார்.
அதற்கு நீலாவின் அப்பா “ஆமா நல்லா தேடி பாருங்க, என்னோட பொண்ணு எங்கேயும் போய் இருக்க மாட்டா, இங்க தான் எங்கேயாச்சும் இருப்பா, நல்லா தேடி பாருங்க டா” என்று கூறினார்.
அதற்கு கன்னிகா “இல்ல அப்பா, நாங்க ரெண்டு பேரும் நல்லா தேடி பாத்துட்டோம், அவ ரூம்ல எங்கேயும், அவ இல்ல” என்று அவனிடம் கூறினார்கள்.
இதை கேட்டதும் சாரதை மற்றும் ஆறுமுகம் இருவருக்கும் தலையில் இடி விழுந்தது போல் இருக்க,
ஆறுமுகம் தன் தலையில் கை வைத்தவாரு, அங்கு இருக்கும் நாற்காலியில் இடிந்து அமர்ந்தார்.
இப்போது மறுபடியும் அய்யர் “நேரமாகிட்டே இருக்கு, சீக்கிரம் பொண்ண அழைச்சிட்டு வாங்க, அப்புறம் நல்ல நேரம் முடிஞ்சிதும்” என்று கூற,
அதை கேட்ட சாரதை “அய்யர் வேற பொண்ண கூப்பிடுறாரே, இப்போ அவள நான் எங்கேன்னு போய் தேடுவேன், அய்யோ கடவுளே” என்று அழுது புலம்பி கொண்டு இருக்க,
அப்போது, அவர்கள் அருகில் சிறியவன் வந்து “என்னாச்சி அம்மா, இப்போ எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க” என்று கேட்டான்.
அதை காதில் வாங்காமல், அவளும் ஒரு முலையில் போய் அமர்ந்தார்.
அதற்கு ஈஸ்வரன் “ஏய் ஜெனி கனி, என்னாச்சின்னு சொல்லுங்க” என்று கூற,
அப்போது ஜெனி “அண்ணா அதுவந்து அதுவந்து… நீலா நீலா…” என்று இழுத்தவாரு , “நீலா ரூம்ல இல்ல அவள காணும்” என்று கூற,
அதற்கு ஈஸ்வரன் “நல்லா தேடி பாத்தீங்களா , அவ ப்ரெண்ட்ஸ் யாரைச்சும் வெல்கம் பண்ண வெளிய எங்கேயாச்சும் போயிட்டாளான்னு நல்லா தேடி பாத்தீங்களா,
இவ்வளவு நேரம் இருந்தவ எப்படி காணாம போவா, போங்க நல்லா தேடி பாருங்க டா” என்று அவர்களிடம் கூறினான்.
“இல்ல அண்ணா, எங்க ரெண்டு பேர தவிர வேற க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்லாம் அவளுக்கு யாரும் இல்ல அண்ணா, அது மட்டும் இல்லாம, காலேஜ் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரு தான் வந்து இருக்காங்க அவங்கள,
அப்போவே நாங்க நீலா கூட போய் வெல்கம் பண்ணிட்டு வந்துட்டோம்” என்று அவனிடம் கூறினாள்.
இப்போது ஈஸ்வரன் ” சரி நான் போய் எதுக்கும் ஒரு தடவ அவள தேடி பாத்துட்டு வாரேன்” என்று கூற,
தங்கை தோழியிடம் “ஏய், நீங்க ரெண்டு பேரும் அம்மா அப்பாவ பாத்துக்கோங்க, நாங்க ஒருதடவ போய் , அவள தேடி பாத்துட்டு வரோம்” என்று கூறிவிட்டு, ஈஸ்வரனை அழைத்து கொண்டு தங்கையை தேட சென்றான்.
இப்போது தங்கையை மண்டபத்தை சுற்றி, அனைத்து இடங்களிலும் தேடி அழுத்து போய் வந்தார்கள்.
இப்போது சாரதை “டேய் என்னங்கடா ஆச்சு , அவ கிடைச்சாளா இல்லையா சொல்லுங்க டா” என்று கேட்க,
அதற்கு ஈஸ்வரன் “இல்ல மா, நான் எல்லாம் இடத்துலையும் தேடி பாத்துட்டேன், நீலா எங்கயேயும் இல்லம்மா” என்று கூறினான்.
“டேய் என்ன டா சொல்லுற, அங்க பாரு டா , உங்க அப்பாவ எப்படி இடிஞ்சி போய் உக்காந்து இருக்காருன்னு, இப்போ எந்த முகத்தோட மாப்பிளை வீட்டுல பேசுவோம் ,
இப்படி எல்லாரையும் அசிங்க படுத்திட்டு போயிட்டாளே டா, நீலா மா நீலாமான்னு அவமேல உசுறையே வச்சி இருந்த மனுசன ஏமாத்திட்டு போயிட்டாளே டா, இப்போ என்ன பண்ணுவேன்” என்று அழுது புலம்ப,
இப்போது பொறுமை இழந்த ஹரிஷின் பெற்றோர்கள் சாரதையிடம் வந்து “சமந்தி, என்னாச்சி நேரம் ஆயிட்டே இருக்கு,
அங்க அய்யர் வேற பொண்ண அழைச்சிட்டு வாங்கன்னு கூப்பிட்டுகிட்டே இருக்காரு, ஆமா நீலா ரெடி ஆயிட்டாளா, இல்லையா” என்று கேட்க,
அதற்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தார் சாரதை .
அதை கண்ட ஹரிஷின் தாயார் “இப்போ எதுக்கு , எல்லாரும் இப்படி சோகமாக உக்காந்து இருக்கீங்க, ஆமா நீலா எங்க” என்று கேட்டார்.
அதற்கு சாரதை “அதுவந்து… சமந்தி நீலா” என்று இழுக்க,
அதில் சிறிது, அவள் கூற்றை உணர்ந்தவள் “அட என்னன்னு சொல்லுங்க, இப்படி எல்லாரும் அமைதியா இருந்தா, என்ன அர்த்தம்” என்று கேட்க,
“சமந்தி நீலாவ காணும்” என்று கூற,
“என்ன நீலாவ காணுமா, என்ன சொல்லுறீங்க சமந்தி நல்லா தேடி பாத்தீங்களா” என்று கேட்க,
அதற்கு சாரதை “மண்டபம் முழுக்க தேடி பாத்தாச்சு , அவள எங்கேயும் காணும் சமந்தி” என்று கூறினார்.
அதை கேட்ட ஹரிஷ்யின் அம்மா “உங்க பொண்ணு காணாம போயிட்டாளா, இல்ல ஓடிட்டாளா” என்று சத்தமாக கேட்க,
அங்கே இருந்த, அனைவரும் ஒன்று கூடினார்கள்.
இப்போது ஹரிஷின் அப்பா “ஏய் என்னடி இப்படிலாம் பேசிட்டு இருக்க, நீலா ரொம்ப நல்ல பொண்ணுடி அவ எதுக்கு டி, ஓடி போகனும்”
“அது என்னதுக்குன்னு, என்ன கேட்டா எனக்கு எப்படி தெரியும் , இதோ இருக்காருல, உங்க ஃப்ரெண்ட்டு அவர்கிட்ட கேளுங்க” என்று கூறிவிட்டு,
“டேய் ஹரிஷ் , அங்க இருந்து எந்திச்சி வாடா, இந்த கல்யாணம் நடக்காது பொண்ணு ஓடிருச்சு டா” என்று அவனிடம் கூற,
அதை கேட்ட சுந்தரம் “ஏம்மா, என் பேத்தி ரொம்ப நல்ல பொண்ணு மா, அவ அப்படிலாம் பண்ணமாட்டா, வேற ஏதோ நடந்து இருக்கு , இருங்க தேடி பாக்கலாம்” என்று கூற,
இப்போது மணமேடையில் இருந்து கீழே வந்தவனை,
“எங்கன்னு போய் தேடுவீங்க, அவ எங்க ஓடி போனாளோ , இதோ இருக்கானே என் மவன் ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லாத மாதிரி, இவள தான் கட்டிப்பேன்னு ஒத்த காலுல நின்னான்,
நானும் அவ வேண்டாம் வேண்டாம்ன்னு தலைப்பார அடிச்சிக்கிட்டேன், கேட்டானா இப்போ அசிங்கம்பட்டது தான் மிச்சம்” என்று தன் மகனை, அர்ச்சனை செய்தார்.
“ஏய் கொஞ்சம் வாய மூடு டி, உன் அளவுக்கு மீறி பேசுற, என்ன இருந்தாலும் அவன் என் நண்பன் ,
அவன்கிட்ட இப்படி நீ பேசுறது ரொம்ப தப்பு ஒழுங்கு மரியாதையா, அவன்கிட்ட மன்னிப்பு கேளு” என்று அவரிடம் கூற,
“என் பொண்ணு அப்படி இப்படின்னு அன்னைக்கு எண்ணலாம் பேசுனாரு, இப்போ பேச சொல்லுங்க அவர,
ஒரு பொம்பள பிள்ளைய ஒழுங்கா வளக்க தெரியல,
இவருலாம் ஒரு அப்பாவா, இதுல நான் பேசுனது தப்புன்னு , என்ன மன்னிப்பு வேற கேக்க சொல்றீங்களாக்கும்”
“ஏய் இப்போ, நீ மன்னிப்பு கேக்க போறீயா இல்லையா” என்று ஹரிஷ்யின் தந்தை கூற,
“அதெல்லாம் முடியாது வேணும்ன்னா நம்மள அசிங்க படுத்தினதுக்கு, அவங்கள நம்ம காலுல விழுந்து மன்னிப்பு கேக்க சொல்லுங்க” என்று கூற,
“ஏய், இதுக்கு மேல ஒரு வார்த்த பேசுன பல்ல ஓடச்சிருவேன், சொல்லிட்டேன்” என்று கூறிவிட்டு,
தன் நண்பன் ஆறுமுகத்திடம் வந்து “டேய் என்ன மன்னிச்சிடு டா, அவ பேசினத தப்பா நினைச்சுக்காதடா, அவ சார்பா நான் மன்னிப்பு கேட்கிறேன், என்ன மன்னிச்சிடுடா” என்று கூற,
“டேய் , தங்கச்சி சொன்னது என்ன தப்பு டா, நான் என்னோட பொண்ண நம்பினேன்,
ஆனா, அவ என்ன கடைசில நம்பவச்சி கழுத்த அருப்பான்னு எனக்கு தெரியாது டா , அவ பண்ணுணதுக்கு உங்களுக்கும் அசிங்கம், அதுனால என்ன மன்னிசிரு டா” என்று கூறி கொண்டு இருக்க,
அப்போது நடை தடுமாறியவாரு சோகமாக அழுது கொண்டே “அப்பா” என்று அழுதவாரு நீலா, அவர்களின் எதிரே வந்தாள்.
அவளை தான் கோவமாக கண்டார்கள் சாரதை ஆறுமுகம் மற்றும் ஒரு சில கண்கள்.
நீலாவிற்கு எண்ணவாயிற்று, ஏன் கல்யாண மண்டபத்தில் காணாமல் சென்றாள்.
அவளுக்கு நிகழ்ந்தது என்ன ?
கதை எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க.
இப்படிக்கு,
-ஆனந்த மீரா
**************