515 views

          தேனருவியின் வீடு வந்ததும் உதய்யை அசோக் எழுப்ப, அவனோ தூக்கத்திலேயே,எங்கடா அதுக்குள்ள வந்துட்டமா?” எனக் கேட்டான். “ஆமாமா. இறங்குஎன்றவன் அவனது பதிலை எதிர்பார்க்காமல் சஞ்சனாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.

உதய்யோ காரில் இருந்து இறங்காமல் வெளியில் இருந்தே,இது யார் வீடு. இங்க எதுக்கு வந்திருக்கான். சரி வர வரைக்கும் கார்லயே வெயிட் பண்ணுவோம்.’ என யோசித்தவாறே அமர்ந்திருந்தான்.

முதல்நாள் நன்கு இருட்டிய பிறகு வந்திருந்ததாலோ, சுற்றி உள்ள எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லாததாலோ அது தேனருவியின் வீடு என தெரியவில்லை போலும்.

சற்று நேரத்தில் சந்திரிகா வந்து, “அண்ணா என்ன பண்றீங்க. உள்ள வராம?” எனக் கேட்க, உடனே காரில் இருந்து இறங்கியவன்ஏன் சந்தும்மா. அதுக்குள்ள வீடு மாத்தியாச்சா, என்கிட்ட சொல்லவே இல்ல?” எனக் கேட்டான்.

அதைக் கேட்டவளுக்கு சிரிப்பு வர,நாங்க வீடு மாத்தல. இதை உள்ள சொன்னா உங்களுக்கு தான் மாத்து விழும்என மனதில் நினைத்தவள், அவனிடம், “ஏண்ணா. நிஜமா இது எந்த இடம்னு தெரியலயா?” எனக் கேட்டுக் கொண்டே உள்ளே அழைத்து வந்தாள்.

ஹேய். இது அருவியோட வீடு. இங்க எதுக்கு வந்திருக்கோம்அவளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லயா?” என உதய் பதற, “அதெல்லாம் ஒன்னுமில்ல. வாங்க. ஆமா அதுக்குள்ள செல்லப்பேரெல்லாம் வைச்சாச்சா?எனக் கேட்டாள் சந்திரிகா. உதய், “அதெல்லாம் எப்பவோ.” என்க, இருவரும் உள்ளே வந்தனர்.

என்ன பண்ணிட்டு இருந்தான் இவ்வளவு நேரம்.” என சத்யா கேட்க, அப்பறம் சொல்றேன். என சைகை காட்டினாள் சந்திரிகா. அதற்கு அவனும் சைகையிலே பதில் கொடுக்க சஞ்சனாதான்,அக்கா வந்த வேலையை பார்க்கலாமா?” எனக் கேட்டு அவர்களை நடப்பிற்கு கொண்டு வந்தாள்.

பிறகு சந்திரிகா, “உங்களுக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் முறைப்படி கேட்கறோம். இவர் எங்க அண்ணா உதய். பாரஸ்ட் ஆபிஸரா இருக்காங்க. உங்க பொண்ணு தேனருவியை எங்க வீட்டு மருமகளா அனுப்பி வைக்கனும்.” என்றாள்.

அதற்கு தேனருவியின் தாத்தா, “அதெல்லாம் தாராளமா கூட்டிட்டு போங்க.” என்றவர் தனது மருமகளிடம் தேனை அழைத்து வர சொன்னார். அழகான ஒரு சில்க் காட்டன் புடவையில் மிதமான ஒப்பனையுடன் அங்கு வந்தாள் தேனருவி.

என்னதான் மாடர்ன் என கூறிக் கொண்டாலும் அதற்கேற்ப நவீனமாக நடந்து கொண்டாலும் திருமணம் என வரும்போது இயல்பாகவே பெண்களுக்கு நாணம் கூட வந்து விடுகிறது. காதலித்தவன் தான் எனினும், பெண் பார்க்கும் நிகழ்வின் போது வெட்கச் சிரிப்போடு வந்து அமர்ந்தாள் தேனருவி.

பிறகு முறைப்படி உறுதி செய்து திருமண தேதியையும் முடிவு செய்தனர். திருமணத்தின் முதல்நாள் நிச்சயம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து, அசோக் திருமணம் முடிந்து அடுத்து வந்த முகூர்த்தத்தில் தேதி குறித்தனர்.

அதன்பின்பு அனைவரும் உணவருந்திய பின், சத்யாவும், சந்திரிகாவும் தேனருவியின் தாயிடம் பேசிக் கொண்டிருந்தனர். “சாதாரணமா நான் மட்டும் வந்து பேசலாம்னு தான் நினைச்சேன். ஆனா சூர்யாதான் முறைப்படி பண்ணிக்கலாம்னு சொன்னா?என்றான் சத்யா.

அப்படி இல்லங்க என்ன இருந்தாலும், மாப்பிள்ளை வீட்டு பக்கம் யாரும் கல்யாண பேச்சை பேச இல்லனு நீங்க சங்கடப்படக் கூடாது. அதோட உதய் அண்ணா எங்க எல்லாருக்காகவும் நிறைய பண்ணியிருக்காங்க.

அவங்களும் நமக்கு யாரும் இல்லனு நினைச்சிட கூடாதில்ல. இப்பவும் சொல்றேன். நாங்க மூணு பேரும் ஒரே குடும்பம்தான். எங்க இருந்தாலும் ஒண்ணாதான் இருப்போம். தேனை நாங்க நல்லா பாத்துப்போம். நீங்க பயப்பட தேவையில்லை.” என்றாள் சந்திரிகா.

இதை விட எனக்கு வேற என்னம்மா வேணும். என் பொண்ணு இங்க ரொம்ப செல்லமா வளர்ந்தவ. ஆனாலும் சூழ்நிலைக்கு தக்கபடி எல்லாத்தையும் அட்ஜட்ஸ் பண்ணிக்கற டைப்தான். ஒரு அம்மாவா அவள் நல்லா சந்தோஷமா இருக்கனும்னு ஆசைப்பட்டேன். இப்ப அதுவும் நிறைவேறிடுச்சு.

உதய் தம்பியை எனக்கு நல்லா தெரியும். அவர் குணத்துக்காக தான் தேனு சொன்னப்ப நாங்க மறுக்கலஆனா கல்யாணம்னு வரப்ப எல்லாருக்கும் வர ஒரு பயம் இருந்தது. உங்களை பார்த்ததும் அது போய்டுச்சு. ரொம்ப சந்தோஷம்.” என வெளிப்படையாகவே பேசினார் தேனருவின் தாய்.

இதற்கிடையில் உதய்யும், தேனருவிக்கும் தனிமை தருவதற்காக மொட்டை மாடிக்கு அனுப்பியிருக்க, அங்கு கீழிருந்து மாடியில் படர்ந்திருந்த முல்லைப்பந்தலின் கீழ் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். “போங்க சீனியர். அதுக்குள்ள மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கலாம்ல.” என்றாள் தேனருவி.

ஏம்மா ரொம்ப சலிச்சுக்கற. என்னை கல்யாணம் பண்ணிக்க கஷ்டமா இருக்கா?” எனக் கேட்டான் உதய். “அப்படி இல்ல சீனியர். நேத்துதான் நீங்க லவ்வே அக்சப்ட் பண்ணிங்க. இன்னைக்கு உறுதி பண்ணி இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம். இன்னும் கொஞ்ச நாள் லவ் பண்ணி இருக்கலாம்ல. அதான்.” என்றாள் அருவி.

பண்ணலாம்தான். ஆனா எனக்கு இப்பவே முப்பது வயசுக்கு மேல ஆச்சு. உன் வயசே எனக்கும் இருந்தா பொறுமையா பண்ணிக்கலாம். ஆமா. என்னை விட நீ அஞ்சு வயசு சின்ன பொண்ணு. உனக்கு அது உறுத்தலா இல்லையா?எனக் கேட்டான் உதய்.

அச்சோ சீனியர். எட்டு ஒன்பது வருஷ வித்தியாசத்துலயே கல்யாணம் பண்றாங்க. அதை விட உங்களுக்கு ஒன்னு தெரியுமா. பசங்கள விட பொண்ணுங்க சீக்கிரமா மெச்சூரிட்டி ஆகிடுவாங்க. அப்படி பார்த்தா எனக்கும் உங்களுக்கும் சேம் ஏஜ் குரூப்தான்.” என்றாள் அருவி இயல்பாக.

அப்படி ஒன்னு இருக்கோ. அது சரி. அதான் கல்யாணமே பிக்ஸ் ஆகிடுச்சு. அப்பறம் ஏன் சீனியர்னே கூப்பிடற. பேர் சொல்லியே கூப்பிடலாம்ல.” எனக் கேட்டான் உதய். “வேணாம் சீனியர். எல்லாரும் கூப்பிடற மாதிரி நான் எப்படி கூப்பிட முடியும், உங்களுக்கு வேற உதய்னு ஒரே பேரா இருக்கு. இரண்டு பேரா இருந்தா அதை கூப்பிடலாம்.” என்றாள் அருவி.

அது ஆசிரமத்தில பெரிய பேரா வைக்க மாட்டாங்க பெரும்பாலும் கூப்பிட வசதியா இருக்கும்னு இப்படிதான் வைப்பாங்க.” என்றான் உதய் ஒரு மாதிரி குரலில். அவனது குரலில் அவன் முகம் கசங்கியதை பார்த்தவளுக்கு தன் மீதே கோபம் வந்தது.

சாரி சீனியர். நான் சும்மாதான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு எப்பவுமே நீங்க செல்லமான சீனியர்தான். அது எனக்கு பிடிச்சிருக்கு. சாரி. ஹர்ட் பண்ணதுக்கு.” என்றாள் அருவி.

பரவால்லடா நீ வேணும்னு சொல்லனு எனக்கு தெரியும். நான் பீல் பண்ணல. உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படியே கூப்பிடு.” என்றான் அவளது விரல்களை நீவியபடியே. பிறகு,சரி. அப்பறம் வேற.” என்றான். “வேற என்ன.” என அருவி புரியாமல் கேட்க, வீட்ல கல்யாணம் உறுதி பண்ணிட்டாங்க. எனக்கு அச்சாரம் எதுவும் இல்லையா?” எனக் கேட்டான்.

ம்ம். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம்.” என இழுக்க, அப்படிஎன்றவன் அவளது நெற்றியில் தனது முதல் முத்தத்தை பதித்தான். அதில் சிலிர்த்தவள் ஒரு நொடி கண் மூடி அதை அனுபவிக்க அவன் கன்னத்தில் அடுத்த முத்தம் கொடுத்தான்.

அதற்குள் அசோக், “உதய்.” என குரல் கொடுக்க, அதைக் கேட்டு,கீழ தேடுறாங்க போல வாங்க.” என எழுந்து ஓடினாள் தேனருவி. “அது எப்படிதான் எனக்குன்னா கரெக்டா வரானோ.” என நொந்து கொண்டபடி கீழே இறங்கி சென்றான் உதய்.

அதன்பிறகு அனைவரும் அவர்களிடம் விடைபெற்று கிளம்பினர். அடுத்து வந்த சில நாட்கள் அனைவரும் அவரவர் வேலைகளில் கவனமாக, சத்யாவும், சந்திரிகாவும் மட்டும் தோட்ட வீட்டில் இருந்தே பணிக்கு சென்று வந்தனர்.

இத்தனை வருட காதலை அனுபவிக்க அவர்களுக்கு இந்த பொழுது அவசியமாக இருந்தது. அசோக்கும், உதய்யும் பணிக்கு சென்ற நேரம் போக மீதி நேரத்தை அலைபேசியிலே கழித்து தங்களது காதலை வளர்த்தனர்.

அன்று அதிகாலையிலே மண்டபத்தில் அனைவரும் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தனர். அஸ்வின், அனுவிற்கு அன்று திருமணம். நகரின் பெரிய மண்டபத்தில் பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார் தெய்வவிநாயகம்.

மணமகள் அறையில் அழகு நிலைய பெண்கள் அனுப்பிரியாவை தங்களது கைவண்ணத்தால் மேலும் அழகுப்படுத்தி கொண்டிருக்க அங்கு வந்தனர் சந்திரிகா, சஞ்சனா, தேனருவி மூவரும். “வாங்கக்கா. நைட்டே வந்திருக்கலாம்ல. ரொம்ப அதிகமா இருக்கா மேக்கப்.” எனக் கேட்டாள் அனு.

சாரிமா. நேத்து வேலையை முடிச்சு வீட்டுக்கு வர ரொம்ப நேரமாகிடுச்சு. இன்னைக்கு எல்லா அப்பாய்மெண்ட்டையும் கேன்சல் பண்ணிட்டேன். அதெல்லாம் இல்ல. அழகா இருக்க.” எனக் கூறி முத்தமிட்டாள் சந்திரிகா. “சொல்லுங்க மேடம். எங்களை எதுவும் செய்யவே விட மாட்றாங்க.” என்றனர் அந்த பெண்கள்.

அதற்கு சிரித்த சஞ்சனா, “நல்லா மேக்கப் போட்டாதான் ஃபோட்டோஸ்லாம் அழகா இருக்கும்.” என்றாள் அனுவிடம். அதன்பிறகு அழகாக அலங்காரம் செய்யப்பட்டு மணமகளை அழைத்து வர, ஏற்கனவே மேடையில் அமர்ந்து மந்திரங்கள் கூறிக் கொண்டிருந்த அஸ்வின் அவளை கண்டதும், வைத்த கண் வாங்காமல் அவளை ரசித்து கொண்டிருந்தான்.

அவனை உலுக்கிய தரணி,இங்க கொஞ்சம் கவனம் இருக்கட்டும். ம்ம்என கிண்டல் செய்தான். இப்படி கேலியும், கிண்டலுமாக திருமண சடங்குகள் நடைபெற அனுவின் சங்கு கழுத்தில் மங்கல நாண் அணிவித்து மனைவியாக்கி கொண்டான் அஸ்வின் கிருஷ்ணா.

மூன்றாவது முடிச்சை காவ்யா போட்டு தனது உரிமையை நிலைநாட்டி விட, தனது கொழுந்தனின் மகிழ்வான முகம் பார்த்து மனம் நிறைந்த புன்னகையோடு வலம் வந்தாள் அண்ணி ஆருத்ரா. தனது மகனின் வாழ்வு செம்மையானதை உணர்ந்து அஸ்வினின் தாயும், தந்தையும் உள்ளம் குளிர நின்றிருந்தனர்.

திருமண விழா முடிந்து தொடர்ந்து நடந்த வரவேற்பில் மணமக்கள் இருவரும் இழைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, நண்பர் பட்டாளங்கள் அனைவரும் மேடை ஏறினர். முதலில் ஒருசில ஃபோட்டோக்கள் எடுத்து பரிசினை அளித்தபின் இருவரையும் இருபுறமும் நிற்க வைத்துவிட்டு நடுவில் மற்றவர்கள் நின்று புகைப்படம் எடுத்தனர்.

அப்போது அவர்களை பார்த்த அஸ்வின், “அதெப்படி கரெக்டா ஜோடி மாறாம நிற்கறாங்க. ஆனா என்னையை பிரிச்சு விட்டுட்டாங்களே.” என மனதில் நினைத்து சத்தமாகவே கூறிவிட்டான்.

மச்சான், நீங்க மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசறீங்க. ஆனா அதுக்காகல்லாம் நாங்க அசர மாட்டோம். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.” என்ற அசோக் அவர்களை ஓரமாக அமர வைத்து விட்டு இவர்கள் மேடையில் புகைப்படம் எடுக்கிறேன் என அந்த கேமிராமேனை ஒருவழி செய்து கொண்டிருந்தனர்.

பிறகு உணவருந்த சென்ற இடத்திலும், இதே கலாட்டாக்கள் செய்ய கடுப்பாகி விட்டான் அஸ்வின்என்னவோ பண்ணுங்கப்பா. என அனுவை கைபிடித்து அழைத்துக் கொண்டு சென்று அமர அவள் இவர்களை வேடிக்கை பார்ப்பதை கண்டு உணவை எடுத்து அவனே ஊட்டி விட தொடங்கினான்.

அதை கேமிரா கண்கள் அழகாக புகைப்படம் எடுத்துக் கொள்ள சிரித்தவாறே அதை கண்டு ரசித்த மற்றவர்களும் உணவருந்த சென்றனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்