561 views

                         அனைவரும் மகிழ்வோடு உணவருந்த எழுகையில் வாசலில் ஒரு உயர்ரக மகிழுந்து ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் இருவரும் அங்கிருந்த பலருக்கு புதிய முகங்களாக இருக்க, சைந்தவி தான் வேகமாக ஓடிச் சென்று அவரை கட்டிக் கொண்டு, “வாங்க டாடி. ஐ மிஸ் யூ சோ மச்.” என்றாள்.

அதன்பிறகே அனைவருக்கும் அது தரணியின் பெற்றோர்கள் என தெரிந்தது. பிறகு அவர்களும் உள்ளே வர, “ஹேய். நீ வர போறன்னு என்கிட்ட கூட இன்பார்ம் பண்ணல மேன். என்ன ஏதாவது பிஸினஸ் டீலா?” என தரணியின் தந்தை கோதண்டரங்கனிடம் சக்கரவர்த்தி கேட்டார்.

“இல்லடா. பர்சனல் டீலிங்.” என அவரை பார்த்து கண்ணடித்தார் ரங்கன். பிறகு பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு, சந்திரிகா அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

பிறகு, தரணியின் தாய் கவுசல்யா, “திடீர்னு இங்க வந்ததுக்கு காரணம் இருக்கு.” என பேச ஆரம்பித்தார். தனவேலிடம், “உங்க பொண்ணு மிருணாவை எங்க பையனுக்கு கேட்டு வந்திருக்கோம். உங்களோட விருப்பத்தை சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.” என்றார்.

திடீரென அவர் அப்படி கேட்பார் என யாரும் எதிர்பார்க்காமலிருக்க, அவர்களது அமைதியை கண்ட ரங்கன், “என்னடா. இவங்க யாரு என்னன்னு தெரியாது. திடுதிப்புனு வந்து இப்படி பேசறாங்கன்னு நினைக்காதீங்க. எங்க பொண்ணு சைந்தவி. நான்தான் அண்ணனுக்கு பொண்ணு பார்ப்பேனு ஒரே பிடிவாதம்.

உங்க பொண்ணு மிருணாவை பார்த்ததும். அதுதான் அண்ணியா வரனும்னு ஒத்த கால்ல நிக்கறா. அதான் நீங்க வேற ஏற்பாடு பண்றதுக்குள்ள பேசி முடிச்சர்லாம்னு வந்தோம்” என்றார்.

“டேய். உனக்குதானே டா மிருணாவை பிடிக்குதுனு சொன்ன. உங்கப்பா என்னடான்னா ஏதேதோ சொல்றாரு.” என அஸ்வின் தரணியின் காதை கடிக்க, “சும்மா இருங்க அஸ்வின். அங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.” என்ற தரணி தனது தங்கையை பாசத்தோடு பார்த்தான்.

சைந்தவியின் பெயரை அவர் கூறியதுமே இது அவளது வேலை என சந்திரிகாவிற்கு புரிந்து போனது. அவள் உதவிக்கு வந்தாள். “அம்மா. எனக்கு மிருணாவும் தங்கச்சி மாதிரிதான். இவங்களை பத்தி நீங்க கவலைப்பட ஒன்னுமே இல்ல. எங்க வீட்டு பொண்ணா அவளை பார்த்துப்போம்.” என்றாள் மிருணாவின் தாயிடம்.

“அதுக்கில்லம்மா இவங்க வெளிநாட்டுல இருக்காக. அவ்வளவு தூரம் பொண்ண எப்படி தனியா அனுப்பறது.” என கேட்டார் தனவேல். “நீங்க அதுக்காக பார்க்க வேணாம். பையன் இங்கதான் கம்பெனி வைச்சிருக்கான். அதோட நாங்களும் கூடிய சீக்கிரம் இந்தியாவுக்கு வந்திடுவோம்.” என்றார் ரங்கன்.

“அப்பறமும் உடனே கல்யாணம் பண்ண போறதில்ல. மிருணா படிப்பை முடிக்கட்டும். சும்மா பேசி வைச்சுக்கலாமேனு தான் வந்தோம்.” என்றார் கவுசல்யா. உடனே செண்பகம், “பேசிட்டு இருங்க. இதோ வந்திடறேன்.” என்று மிருணாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில் புடவையில் வந்த மிருணாவை அவர்களுக்கு தண்ணீர் குடுக்க சொல்ல, பார்த்த கணமே தரணியின் வீட்டினருக்கும் பெண்ணை பிடித்து விட்டது. ஆனால் தனவேலு மட்டும் தனது மகளை தனியாக அழைத்து சென்று, “உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான்டா அப்பா அங்க போய் பேசுவேன். பிடிக்கலன்னா தைரியமா சொல்லு.

ஏன்னா அந்த தம்பியும் இங்க நாலு நாளா இருக்கு. என் மனசுக்கு நல்லவனா தான் படுது. ஆனா வாழ போறது நீதானே. அதுனால நீ யோசிச்சு பொறுமையா உன் முடிவை சொல்லு. நான் அவங்ககிட்ட பேசிக்கறேன்.” என்றார்.

தனது தந்தையின் அன்பில் நெகிழ்ந்தவள் அவர் சங்கடப்படுவது போல எதுவும் நிகழக் கூடாது என எண்ணி திருமணத்திற்கு சம்மதம் கூறினாள். அதற்கு பின் அவரின் முகமலர்ச்சியை கண்டு தான் எடுத்த முடிவு சரிதான் எனும் எண்ணமும் கொண்டாள்.

பிறகு சம்பிரதாயமாக பேசிக் கொண்டவர்கள் கவுசல்யா கூறியது போலவே படிப்பு முடிந்தே திருமணம் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து விட்டனர். அதன்பிறகு அனைவருமே உணவருந்தி பின் சென்னையை நோக்கிய பயணத்திற்கு ஆயத்தமாகினர்.

கிளம்பும் முன் சைந்தவி, மிருணாவை தனியே அழைத்து, “உங்களை கேட்காம நானே எல்லா முடிவும் பண்ணிட்டேனு தப்பா நினைக்காதீங்க அண்ணி. எங்க அண்ணாவை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் இதுவரை எந்த பொண்ணுக்கிட்டயும் ரொம்ப குளோஸா பேசினது கூட இல்ல.

ஆனா அவனுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. அவன் மனசை மாத்திக்கறது ரொம்பவே கஷ்டம். இப்ப கூட உங்களை யாரும் தப்பா நினைச்சறக் கூடாதுனு தான் நானே முடிவு பண்ண மாதிரி அப்பாம்மா கிட்ட பேச சொன்னேன்.

சாரி. ஆனா ஒன்னு கன்பார்ம். இன்னும் கல்யாணத்துக்கு ஒன் இயர் இருக்கு. அதுவரை எங்க அண்ணனை நீங்க எப்படி வேணா டார்ச்சர் பண்ணிக்கங்க. நான் உங்க பக்கம்தான்.” என்றாள்.

“அச்சோ. அண்ணி. நீங்க என்னை விட பெரியவங்க. பேர் சொல்லியே கூப்பிடுங்க. உங்களோட நல்ல மனசுக்காகவே நான் உங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கறேன். ஓகேவா.” என்றாள் மிருணா.

“ஓகே. மிரு. பழகி பார்த்தா என்னை விட தங்கமான மனசு எங்க அண்ணாக்குனு புரிஞ்சுக்குவ. நான் வரேன்.”  என விடைபெற்று சென்றாள் சைந்தவி. தரணியின் பெற்றவர்களும் மிருணாவிடமும், அவர்கள் வீட்டிலும் விடைபெற்று கிளம்பினர்.

தனது பெண்ணிற்கும் சிறப்பான சம்பந்தம் கூடி வந்து விட்ட மகிழ்வில் நேற்று இருந்த சிறு கசப்பு கூட விலகி பழையபடி பங்கஜத்திடம் பேச ஆரம்பித்தார் செண்பகம். அதைக்கண்டு பங்கஜத்திற்கும், தனவேலிற்கும் மிக்க மகிழ்ச்சி.

இங்கே காரிலோ எல்லோரும் தரணியை பலமாக கிண்டல் செய்து கொண்டே வந்தனர். “ஆனாலும் உனக்கு ஏதோ ஒரு அதிர்ஷ்டம் இருக்குடா. வருஷமே ஆகப் போகுது. நான் இவளை லவ் பண்ணி ஆனா இன்னும் நிச்சயம் கூட நடக்கல.

ஆனா நீ மிருவை பார்த்தே நாலு நாள் தான் ஆகுது. கல்யாணத்தையே கன்பார்ம் பண்ணிட்டியே.” என்றான் அசோக். “உங்க நிலைமையை விடுங்க புரோ. சத்யா புரோவை பாருங்க. டென் இயர்ஸ் ஆகிடுச்சு.” என்றான் அஸ்வின்.

“சரி அண்ணா எல்லாரும் அவங்கவங்க மேரேஜ் பிளான்ல தெளிவா இருக்காங்க. நீங்க எப்போ கல்யாணம் பண்ண போறீங்க.” எனக் கேட்டாள் சைந்தவி உதய்யிடம். உதய் தனது திருமணம் பற்றி பேசியதில் சற்று தடுமாறியவன் பிறகு சுதாரித்து, “எனக்கு இப்ப என்னம்மா அவசரம். தங்கச்சி நீ இருக்கப்ப அண்ணன் கல்யாணம் பண்ணலாமா?” எனக் கேட்டான் உதய்.

“நானா. நான் இப்போதைக்கு மாட்டிக்கற ஐடியால்ல இல்ல. ஆள விடுங்கப்பா.” என சைந்தவி வாயை மூடிக் கொள்ள அனைவரும் சிரித்தனர். இப்படியே சிரித்து பேசிக் கொண்டு அனைவரும் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அதன்பிறகு வரிசையாக புத்தாண்டு, பொங்கல் என விடுமுறை வேறு வருவதால் அனைவரும் அவரவர் வேலைகளில் பிசியாக இருந்தனர்.

இதற்கிடையில் தை மாதம் முதல் முகூர்த்தத்திலே சத்யா- சந்திரிகாவின் திருமண தேதியை சக்கரவர்த்தி முடிவு செய்திருந்ததால் அந்த வேலைகளும் நடந்து கொண்டிருந்ததது.

அனைவரும் சத்யாவின் திருமணத்திற்காக, ஆளுக்கொரு வேலையாக பிரித்து கொண்டு செய்திருக்க இது எதிலும் ஒட்டுதல் இல்லாமல் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது என்னவோ சத்யா மட்டும் தான்.

அவனுக்கு வேலை அதிகம் என்றுதான் அனைவரும் நினைத்து கொண்டிருந்தனர் ஆனால் சந்திரிகாவிற்கு மட்டும் ஏதோ உறுத்தலாக இருந்தது. இருந்தாலும் அவளும் கேட்காமலே இருந்தாள்.

மறுநாள் புத்தாண்டு தினமாக இருக்க அனைவரும் ஒன்றாக கொண்டாடலாம் என அசோக் கேட்டதற்கு சத்யா மறுத்து விட்டான். “நமக்கு வேலை இருக்கும். அவர்கள் அங்கே கொண்டாடட்டும்.” என்றுவிட அசோக்கும் சரியென்றான். புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு. சத்யா தனது அறையில் தூங்கி கொண்டிருக்க திடீரென முழிப்பு தட்டி பார்த்தால் சந்திரிகா அருகில் படுத்திருந்தாள்.

“ஹேய். சூர்யா. டெய்லி ஒரு முறையாவது ஏதாவது ஒரு காரணம் சொல்லி பார்க்க வந்தடற. சரி தூங்கவாவது விடுவனு பார்த்தா, இப்படி டெய்லி கனவுல வந்து டிஸ்டர்ப் பண்ற. இது உனக்கே நியாயமா இருக்கா.” என்றான் அவளது முன் உச்சியில் அலைந்த முடியை ஒதுக்கி கொண்டே.

“நீ எப்படா இப்படி நிஜத்துல என்கூட இருக்கப்போற. இன்னும் ஒரு மாசம் வெயிட் பண்ணனும்.” என பெருமூச்சு விட்டான். “அதான் இப்ப கூடதானே இருக்கேன்.” என சந்திரிகா கூற, “இல்ல. இது கனவுல நான் நிஜத்துல சொல்றேன்.” என்றான் சத்யா.

“அச்சோ சத்யா. நான் நேர்ல தான் இருக்கேன்.” என்ற சந்திரிகா எழுந்து கலகலவென சிரித்தவாறே, “இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். எனது அன்பு கணவருக்கு.” என தனது வாழ்த்துகளையும் கூறினாள்.

சத்யாவுக்கு ஏனோ சந்திரிகாவின் வீட்டிற்கு செல்வதற்கு பிரியமே இல்லை. அன்று அங்கிருந்து வந்ததற்கு பிறகு மீண்டும் அங்கே அவன் வரவே இல்லை. இன்று அனைவரையும் அங்கு வர சொல்லி அசோக்கிடம் கூறியதே சந்திரிகாதான்.

அவனோ சத்யா கூறியதை அவளிடம் கூறவும் தான் சந்திரிகா சற்று நேரம் யோசித்ததில் அவனது மனதை புரிந்து கொண்டவள் தனது திட்டத்தை மாற்றி அனைவரையும் இங்கே கூட்டி வந்து விட்டாள்.

சத்யாவும் தனது வாழ்த்துக்களோடு ஒரு முத்தத்தையும் கொடுத்து அவளை கூட்டிக் கொண்டு கீழே வந்தால், அங்கு தரணி, சைந்தவி, சஞ்சனா, கீர்த்தி, சுரேந்திரன் என அனைவரும் கூடி இருந்தனர்.

குழந்தை தீக்ஷிதா சத்யாவை கண்டதும் தாவி அவனிடம் வந்து, “ஹேப்பி நியூ இயர் மாமா.” என்றவாறே அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். பதிலுக்கு அவனும் அவளது பட்டுக் கன்னத்தில் முத்தம் பதித்து தனியொரு உலகிற்கு சென்றனர்.

பிறகு மொட்டை மாடியில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது சுரேந்திரன் சத்யாவிடம், “உங்களுக்கு இன்னும் என் மேல கோபம் போகலன்னு எனக்கு தெரியும்.” என்றான்.

“அதெல்லாம் ஒன்னுமில்லங்க. எனக்கு நிஜமாலுமே யார் மேலயும் கோபம்லாம் இல்ல. எல்லாமே சந்தர்ப்பம்னு புரியுது. ஆனாலும் ஒரு வருத்தம் இருக்கு. அது போக மாட்டேங்குது. கொஞ்ச கொஞ்சமா மாத்திக்கறேன்.” என்றான் சத்யா.

“நீங்க மாத்திக்கலாம் வேணாம் இப்படியே இருந்தாலும் எங்களுக்கு ஓகே தான்.” என சுரேந்திரன் கூற, அதன்பிறகு அங்கிருந்து அதிகாலையில் தான் அனைவரும் கிளம்பினர்.

அதுவரையில் சஞ்சனா அசோக்கின் கை பிடியிலே தான் இருந்தாள். அதை பார்த்து சைந்தவி கிண்டல் செய்து கொண்டிருக்க, “எங்களை விட்டுட்டு, நீ போய் உங்க அண்ணனை பாரு. எங்கோ இருட்டிலே வேடிக்கை பார்க்கிறான்.” என அசோக் கூற தரணி அதே போல தான் நின்றிருந்தான்.

“ஹேய். அங்க என்ன வானத்துல தெரியுதா மிருணா முகம். இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல பார்த்துக்கோ.” என அழைத்து வந்தாள். ஆனால் அடுத்த நாள் காலையில் மிருணாவிற்கு அவளே ஃபோன் செய்து தரணியை பேச வைத்தாள்.

அதன்பிறகு நாட்கள் வேகமாக நகர பொங்கல் முடிந்து தொடர்ந்து வந்த அடுத்த திங்கள் கிழமை சத்யாவிற்கும், சந்திரிகாவிற்கும் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்