609 views

   

               திடீரென சத்யாவும் அவனது சகாக்களும் வீட்டிற்குள் வர, மல்லிகா முதலில் திகைத்து பின் மகிழ்ச்சியுடன்,வாங்கப்பா, வாங்க மாப்பிள்ளைஎன வரவேற்றார். மற்றவர்கள் அனைவரும் அவரவர் அறைகளில் இருக்க மல்லிகா தண்ணீர் கொடுத்தார். அதை வாங்காமல் சத்யா படிகளில் ஏறவும் மல்லிகாவின் முகம் வாடியது.

உடனே அசோக்,அவனுக்கு ஏதோ அவசரமா சந்திரிகாகிட்ட பேசனுமா. அதான் ஆன்ட்டி. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.” என்றவாறே நீரை வாங்கி குடித்துவிட்டு உதய்க்கும் குடுத்தான். “சரிங்க தம்பி. ஒரு நிமிஷம் வந்தடறேன்.” என அவர் உள்ளே செல்ல உதய்யும் அந்த நீரை குடிக்கவில்லை.

ஏண்டா இப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?என அசோக் கேட்க,அதெல்லாம் உனக்கு புரியாதுடா. சரி நீ உன் ஆளை பார்க்க போகலயா?என உதய் வம்பிழுக்க, அதற்கு அசோக்,நக்கல்டா உனக்கு. உண்மையை சொல்லு. நாம சந்துவ கூப்பிடதானே வந்திருக்கோம்.” என பாவமாக கேட்டான்.

இல்ல மச்சி. சஞ்சுவை பத்தி பேசத்தானு சத்யா கூட சொன்னானே.” என கடுப்பேத்த அசோக் வாயை மூடிக் கொண்டான். அங்கே சத்யாவோ சந்திரிகாவின் அறைக்குள் குழந்தை போல தூங்கும் அவளை ரசித்தபடி, அவளது அருகில் அமர்ந்து தலை கோதி கொண்டிருக்க,

அவளோ தூக்கத்திலே,லவ் யூ தீரன்.” என்றபடி புரண்டு அவன் மடியிலே படுத்தாள். திடீரென ஏதோ தோன்ற கண் விழித்தால் நெருக்கமாய் சத்யா இருந்ததை பார்த்து, கனவா என கண்ணை கசக்கி பார்க்க, அப்போதும் மறையவில்லை அவன். “ஹேய் சத்யா. நீங்க எப்ப வந்தீங்க. கீழ யாரும் இல்லயா?” எனக் கேட்டாள் சந்திரிகா.

ஏன் உன்ன பார்க்க எல்லார்கிட்டயும் பர்மிஷன் வாங்கனுமா?” என ஒரு மாதிரி குரலில் கேட்க,அப்படின்னு யாரு சொன்னா. புருஷன் பொண்டாட்டி ரூம்க்கு வர யாரு பர்மிஷன் குடுக்கனும். அங்க யாரும் கவனிக்கலயோனு கேட்டேன் அவ்ளோதான். ஆமா சொல்லுங்க. இவ்ளோ காலைல வந்திருக்கீங்க? என்ன ஆச்சு?” என சந்திரிகா கேட்க,

ஹேய் மணி பத்து ஆகுதுடி. போ. போய் ரெப்ரஷ் ஆகிட்டு வா.” என அவளை அனுப்பியவன் கூடவே சில விசயங்களையும் கூற, சரியென்றவள் குளியலறைக்கு சென்றாள். அதற்குள் கீழே மற்றவர்கள் வந்து அவர்களிடம் பேசிக் கொண்டிருக்க சஞ்சனா எழுந்து கீழே வரும்போதே,அம்மா. காபி.” என குரல் குடுத்துக் கொண்டே வந்தவள் அசோக்கை கண்டதும் பிரேக் போட்டது போல நின்றாள்.

அவளை கண்ட கீர்த்தி,ஏன் சஞ்சு அங்கையே நின்னுட்ட. வா.” என அழைத்து அருகில் அமரவைக்க அசோக்கை பார்வையாலே எரித்தாள். அவனோ அவளை கண்டு கொள்ளாமல் தீவிரமாக தீக்ஷிதாவுடன் விளையாடிக் கொண்டிருக்க சத்யாவும், சந்திரிகாவும் அங்கு வந்தனர்.

வாங்க மாப்பிள்ளை. எப்படி இருக்கீங்க?என தாத்தா சத்யாவை விசாரிக்க, அவன் பதிலேதும் கூறாமல் சந்திரிகாவை பார்த்தான். “எதுல இருக்கோ இல்லையோ. இந்த வைராக்கியதுல உங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு ஒத்துமைய்யா.

இம்புட்டு நாளா என் பேத்தி என்கிட்ட பேசமாட்டாளானு தவம் கிடந்தேன். இப்ப பேரன் நீ பேச மாட்ற. என்ன பண்றது சாக போற வயசில இதெல்லாம் அனுபவிக்கனும்னு என் தலைல எழுதியிருக்கே.” என பாட்டி கண்ணீர் விடவும் எல்லோருக்கும் ஒரே மாதிரி ஆகிவிட்டது.

சட்டென உதய்தான் சூழ்நிலையை இலகுவாக்க,அட என்ன பாட்டி. இதுக்கே இப்படி கவலைப்பட்டா எப்படி உங்க பேரன் கஷ்டத்தை கூட இருந்து பார்த்தவன் நான். நானாவது பொறக்கும் போதே அனாதை. ஆனா இவ்வளவு சொந்தம் இருந்தும் எல்லாரும் அப்படி அவனை சொல்லும் போது அவனுக்கு எப்படி வலிச்சிருக்கும்.

அவனுக்கு கொஞ்சம் டைம் குடுங்க. எல்லாரும் இப்படி பிரஷர் பண்ணா அவன் என்ன பண்ணுவான்.” என தனது நண்பன் நிலையை எடுத்துக் கூறவும்சட்டென சத்யா, “டேய். என்னடா அவங்கதான் பாசம் இருக்கிற மாதிரி நடிக்கறாங்கன்னா நீ சமாதானம் பண்றனு உன்னையை ஏன் தாழ்த்திக்கற.

ஆயிரம் சொந்தம் இருந்தாலும் ஏன் சந்திரிகாவை விட நீதான்டா எனக்கு முதல் சொந்தம். இன்னொரு முறை உன்ன இப்படி பேசின அவ்வளவுதான் பார்த்துக்க.” என எச்சரித்தவன் அசோக்கை பார்த்து,நீ வந்த விசயத்தை சொல்லுடா. கிளம்பலாம்.” என்றான்.

எது நானா?” என அசோக் முழிக்க சந்திரிகாவோ,கல்யாண விசயமா பேச வந்திருக்காங்க பாட்டி. நீங்க ஏன் தேவை இல்லாம பேசிட்டு இருக்கீங்க. என்றவள், “சஞ்சு நீ போய் ரெடியாகிட்டு வா.” என அவளை உள்ளே அனுப்பினாள்.

பின்பு இவர் அசோக். அசிஸ்டென்ட் கமிஷனரா இருக்காரு. கேள்விப்பட்டுருப்பீங்க.” என்றவள், அசோக்கை பற்றி பேசிக் கொண்டேயிருக்க ஒருவருக்கும் எதுவும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். சஞ்சனாவோ மாடிப்படிகளில் நின்று அசோக்கை முறைத்து கொண்டிருந்தாள்.

அசோக் அவளை பார்த்து நம்மள இன்னைக்கு பிரியாணி போட்ருவாங்க போலவே என நினைத்து, சட்டென ஏதோ தோன்றியவனாக,சந்திரிகா போதும். அவங்க பொறுமையா என்ன பத்தி தெரிஞ்சுப்பாங்க. நீங்க முதல்ல.” எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே, சைந்தவி, தரணியுடன் உள்ளே வந்தவள்,

எல்லோரையும் பார்த்து,ஏதோ கல்யாண விசயம்னு காதுல விழுந்தது. ஆல்ரெடி சத்யா அண்ணா கல்யாணம் முடிஞ்சது. அப்ப அசோக் அண்ணா, உங்களுக்கும் சஞ்சுவுக்கும் தானே கல்யாணம். அதுக்குள்ள வீட்ல பேசி சம்மதம் வாங்கிட்டிங்க போல. சூப்பர்னா.” என்றவள்,

சஞ்சுவை பார்த்து, “ஹேய் கங்கிராட்ஸ்டி. எப்ப ட்ரீட் தர போற.” எனக் கேட்டு வைக்க, அசோக் தலையில் கைவைத்து அமர்ந்து விட, சஞ்சனா அறைக்கே ஓடிவிட, மற்றவர்களுக்கு லேசாக விசயம் பிடிபட ஆரம்பித்தது. “சந்திரிகா இங்க என்ன நடக்குது. இவ ஏதேதோ சொல்றா. அப்ப சஞ்சுவும் காதலிக்கறாளா?” எனக் கேட்டார் மல்லிகா.

மெதுவாக சத்யா அருகே வந்த சைந்தவி, “என்னாச்சுண்ணா. எதுவும் தப்பா பேசிட்டனா?” எனக் கேட்க,தப்பா மட்டும் இல்ல. தப்பான நேரத்துலயும் பேசிட்ட.” என்றவன் விளையாட்டாக செய்தது வினையமாகும் போல தெரிய சட்டென அமைதியை கலைத்தான்.

இல்லத்தை. சஞ்சு காதலிக்கல. அசோக் தான் அவளை காதலிக்கறான். ஆனா நாங்க அதை பத்தி பேச இன்னைக்கு இங்க வரல. சூர்யாவுக்கும், எனக்கும் மறுபடி கல்யாணம் பண்ணலாமா? இல்ல ரிசப்ஷன் மாதிரி வைச்சா போதுமான்னு கேட்கதான் வந்தோம்என்றவன்,

இருந்தாலும் இந்த பேச்சும் வந்திருச்சு. அசோக் என்னை மாதிரி அனாதை இல்ல. ஊர்ல சொந்த பந்தம், நிலம் எல்லாம் இருக்கு. ஒரே பையன். அம்மா மட்டும்தான். நல்லா படிச்சிருக்கான். நல்லா சம்பாதிக்கிறான். எல்லாத்துக்கும் மேல சஞ்சு மேல உயிரையே வச்சிருக்கான். அதுக்கு மேல நீங்க பேசிட்டு உங்க முடிவை சொல்லுங்க. நாங்க அதுவரை மேல இருக்கோம்.” என நண்பர்களை அழைத்துக் கொண்டு மேலே சென்றான்.

சஞ்சனா அறையில் அழுது கொண்டிருப்பதை கண்ட அசோக் தனது நண்பர்களிடம் கூறிவிட்டு அவளருகே சென்றான். “ஹேய். என்ன அடிக்க வெப்பன்ஸ் ரெடி பண்ணிட்டு இருப்பன்னு பார்த்தா, நீ இப்படி அழுதுட்டு இருக்க?” எனக் கேட்டான் அசோக்.

சஞ்சனா, “இப்ப உங்களுக்கு சந்தோஷம் தானே?” என அழுகையினூடே கேட்க,நான் என்ன பண்ணேன். உங்கக்காவும், சத்யாவும் கஷ்டப்படறாங்கனு தான் வந்தேன். இப்படி அது எனக்கே எதிரா மாறும்னு யாரும் நினைக்கல.” என தன்னிலை விளக்கம் கொடுக்க முயல அவளோ அதை காதில் வாங்காமல் பேச ஆரம்பித்தாள்.

எங்கப்பாவை எல்லாரும் வில்லனாதான் பார்க்கறீங்க. ஆனா அவர் எவ்ளோ நல்லவர் தெரியுமா. கொள்ளை அடிச்சு பிஸினஸ் பண்ணாரா. நேர்மையான ஒரு தொழில் தானே பண்றாரு. பணத்து மேல எங்கப்பாக்கு பிரியம் ஜாஸ்திதான். ஆனா அது எல்லாமே நாங்க சந்தோஷமா இருக்கனும்தான்.

அக்கா விசயத்துல அவர் செஞ்சது எல்லாமே தப்புதான். நான் இல்லைனு சொல்லல. ஆனா அக்கா பண்ணது மட்டும் முழுசும் சரியா? பதினெட்டு வயசுல படிக்க அனுப்பின தன் பொண்ணு காதலிக்கறான்னு கேள்விப்பட்டா எந்த அப்பாக்குதான் கோபம் வராது. அந்த கோபத்தை எப்படி ஹேண்டில் பண்றதுனு தெரியாமதான் ஏதேதோ தப்பு பண்ணி இப்படி இருக்காரு.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? என்னையை விட அக்காவைதான் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவளை பிரிஞ்சு அவரும் கஷ்டப்பட தான் செஞ்சாரு. ஆனா அதே வெளிக்காட்டக் கூடாதுனு தான் கோபமா இருக்கிற மாதிரி ஆகிட்டாரு.

அக்கா விசயம் ஓரளவு தெரிஞ்சு நான் அவர்கிட்ட சண்டை போட்டு காதலிக்கறது தப்பான்னு நான் கேட்டப்ப அவர் என்ன சொன்னாரு தெரியுமா?” “காதல் தப்பா சரியான்னுலாம் எனக்கு சொல்ல தெரியாதும்மா. ஏன்னா எனக்கு யார் மேலயும் காதல் வந்ததுல்ல. உங்கம்மாவை கூட எங்கப்பா சொன்னாருன்னு கட்டிக்கிட்டேன்.

அவ மேல எப்பவும் எனக்கு ஒரு அக்கறை இருக்கும். எந்த குறையும் இருக்க கூடாதுனு நினைச்சேன். அவ்ளோதான் எனக்கு தெரிஞ்ச காதல். பெத்ததுல இருந்து எல்லாமே பார்த்து பார்த்து செய்யற பெத்தவங்களுக்கு கல்யாணம் மட்டும் பண்ணிக்க வைக்க முடியாதானு கேட்கிற சராசரி அப்பன்தான் நானும்.

ஆனா உங்கக்கா விசயத்துல என்னால அப்படி நினைக்க முடியல. அவ வயசில வரது காதல் இல்ல. அது ஒரு வித ஆர்வம். சில பேருக்கு அது காதலா மாறலாம் அதை காலம்தான் முடிவு செய்யனும். அவளை பொறுத்தவரை நான் தப்பானவனா தெரியலாம். ஆனா எப்பவும் தப்பான ஒருத்தரோட அவளோட வாழ்க்கை இணைய கூடாது.

என் பொண்ணை அவன் உண்மையா காதலிச்சிருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் அவன் ஜெயிச்சு வந்து என் பொண்ணை கேட்பான். ஒரு காதல் தோல்விக்கே சோர்ந்து போறவனால வாழ்க்கைல்ல எப்பவும் ஜெயிக்க முடியாது. அப்படி அவன் அதை ஜெயிச்சா நானே அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பேன்.

உனக்கும் அதேதான். ஆனா உங்கக்கா பண்ண தப்பை நீ பண்ண மாட்டனு நான் நம்பறேன்மா. படிக்கற வயசில படிங்க. நல்லது கெட்டது தெரிஞ்சு கல்யாணம் பண்ணி ஆயுசு பூரா காதலிங்க. அவ்ளோதான்.” அப்படின்னு சொன்னாரு. ஆனா இன்னைக்கு எங்கப்பா நிச்சயம் என்னை தப்பா நினைச்சிருப்பாரு. அவரு மனசு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கும்.” என்றாள் சஞ்சனா.

அவளின் பேச்சை வெளியில் இருந்து மொத்த குடும்பமும் கேட்டு கொண்டிருந்தது. இதுநாள் வரை அவர்கள் பார்வைக்கு தெரிந்த சக்கரவர்த்தி வேறு மாதிரி தெரிந்தார். வாழ்க்கையை இந்த கோணத்திலும் காணலாம் என்ற உண்மையும், சந்திரிகா செய்த தவறும் அவளுக்கு புரிந்தது.

அசோக், “பேசி முடிச்சிட்டியா? உங்கப்போவோட கோணத்துல அது சரிதான். நான் இல்லைனு சொல்லல. ஆனா அதே நேரம் தன் பொண்ணு நல்லா இருக்கனும்னு நினைச்சாரே தவிர சத்யாவை பத்தி கவலைப்படல. முதல்ல நடந்ததெல்லாம் விட்றலாம்.

ஆனா அவனுக்கு கல்யாணம் ஆனமாதிரி பத்திரிக்கை அனுப்பி அவனை சோதிச்சு பார்த்ததெல்லாம் என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியாது. சரி ஓகே. அப்ப இவ்ளோ நாளா என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்காததுக்கு காரணம் உங்கப்பா மேல வைச்சிருந்த பாசம் தான் இல்லையா?” எனக் கேட்டதற்கு அவள் தலை தானாக ஆடியது.

சரி ஓகே. நீ உங்கப்பா சொல்ற பையனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா காதலி. சரியா. இதை முன்னாடியே சொல்லியிருந்தா நான் எப்பவோ விலகியிருப்பேன். இப்ப கூட இங்க வந்து விசயத்தை சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு பயந்தேனே தவிர உங்கப்பாவை நினைச்சு எனக்கு பயம்லாம் இல்ல. குட் பாய்.” என கூறி எழ அவளோ அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்