601 views

 

           பௌர்ணமி நிலவு வானில் பளிச்சென வலம் வர, அதன் வெளிச்சத்தை சுற்றி நட்சத்திரங்கள் சிறு சிறு பொட்டுகளை இறைத்தது போல தெரிய, மெல்லிய பனி பெய்வதால் காற்று சிலு சிலு வென வீசிக் கொண்டு அந்த இடமே குளுமையாக இருந்தது.

தனது அறையின் பால்கனியில் அமர்ந்து ஏதோ யோசனையில் இருந்த சஞ்சனாவுக்கு இது எதுவும் ரசிக்கவில்லை. எதையும் கவனிக்கும் மனநிலையிலும் அவள் இல்லை. மனம் முழுதும் அசோக்கின் நினைவலைகளே இருந்தன. தான் செய்வது சரிதானா? இல்லை தவறா? எந்த முடிவுக்கும் வர முடியாமல் குழம்பி போயிருந்தாள் சஞ்சனா.

இரு நாட்களுக்கு முன் அசோக் விடுமுறை முடிந்த நாளன்று அவன் பேசியதை நினைத்து பார்த்தாள். அன்றும் வழக்கம் போல இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றி விட்டு, ஒரு பார்க் ரெசிடென்ஸி ஹோட்டலுக்கு வந்தனர்.

மாடி முழுவதும் பல்வேறு செடிகளும், கொடிகளும் நிறைந்திருக்க, அதற்கு நடுவே நாற்காலிகளும், மேசைகளும் போடப்பட்டு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது உணவருந்தும் இடம்.

அசோக், “இத்தனை நாளும் என்னோட லீவ் டேய்ஸ்ஸ என்னோட சேர்ந்து செலவு பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ் சஞ்சனா. உண்மையிலேயே எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது உன்கூட இருந்த தருணங்கள். என் லைஃப்ல நான் இந்த நாட்களை மறக்கவே மாட்டேன்.” என்க,

ஆனா நீங்க.” என சஞ்சனா ஏதோ கூற வர,ஒரு நிமிஷம். நான் பேசி முடிச்சிடறேன்.” என்றவன் தொடர்ந்தான். “அதுக்காக இன்னைக்கு ஒரு ட்ரீட் வைக்கறேன் உனக்கு. இங்க எல்லா விதமான டிஷ்ஷும் கிடைக்கும். உனக்கு பிடிச்சதை ஆர்டர் பண்ணு.” என மெனு கார்டை குடுக்க அவளுக்கு மறுக்க வழியில்லை.

அவள் தேர்வு செய்ததும் இன்னும் சில உணவுகளை வரவழைத்தவன் உணவருந்துமாறு பணித்தான். இருவரும் பொதுவாக பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தபின்,அப்படியே ஒரு வாக் போயிட்டு வரலாமா?” என அழைத்தான் அசோக்.

சஞ்சனா சரியென்கவும் இருவரும் இணைந்து அந்த மாடியிலே உலவ ஆரம்பித்தனர். ஆங்காங்கு நடப்பட்டிருந்த பூச்செடிகளில் இருந்து பூக்கள் மணம் வீசிக் கொண்டிருந்து அந்த சூழலை இதமாக்கியது.

மீண்டும் அசோக்கே பேசினான். “உன்னை கஷ்டப்படுத்தற மாதிரி ஏதாவது நான் நடந்திருந்தா என்னை மன்னிச்சிடு சஞ்சனா. என்னோட லவ்வை உனக்கு புரிய வைக்க தான் பத்து நாள் என் கூட இருக்க சொன்னேன். ஆனா உன்ன லவ் பண்ண சொல்லி ஃபோர்ஸ் பண்ண எனக்கு எந்த உரிமையும் இல்ல.

உனக்கும் கொஞ்சம் டைம் தேவைப்படும்னு எனக்கு இவ்வளவு நாள் தோணல. எதுனாலயோ ஆரம்பத்துல இருந்து ஒரு வெறுப்பு என் மேல இருக்கு உனக்கு. அது மறைஞ்சு நிஜமாலும் என்னுடைய நேசம் உனக்கு புரிஞ்சா அதுக்கப்பறம் நீ உன் முடிவை சொல்லு. அதுவரை உன்னை எந்த டிஸ்டர்ப்பும் பண்ண மாட்டேன்.

சப்போஸ் உன்னுடைய முடிவு எனக்கு சாதகமா இல்லன்னாலும் பரவால்ல. என்னால உன்னை புரிஞ்சுக்க முடியும். தேங்க்யூ பார் எவ்ரிதிங்க்.” என்றவன் அவள் பேசுவதற்கு வாய்ப்பே தராமல் அங்கிருந்து கிளம்பினான். அவளது பிரச்சனை அவனுக்கு தெரிந்திருந்தாலும் அதை காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

மற்ற எல்லாவற்றையும் தாண்டி அவள் தனது நேசத்தையும், அவளது மனதையும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றே விரும்பினான். அதன்பிறகு வீட்டிற்கு வந்தவள் இரு நாட்களாக மருத்துவமனை கூட செல்லவில்லை. ஆரம்பத்தில் இருந்து நடந்ததை நினைத்து பார்த்த போது, முதலில் தான் அவனது வேலை அவளுக்கு உறுத்தலாக இருந்தது.

ஆனால் நாளாக நாளாக, அவனது கடமை உணர்வும், தன் மீது காட்டும் அக்கறையும் அவளது மனதை இளக்கியதோடு அவனை நண்பனாக ஏற்றுக் கொள்ளவும் வைத்தது. அவன் மீது மெல்லியதாக ஒரு நேசம் வளர்ந்து கொண்டிருந்ததையும் அவளால் மறுக்க முடியவில்லை.

இப்போதும் அவனை ஏற்றுக் கொள்ளும் மனது என்றாவது பழைய நினைவுகளில் அவனை காயப்படுத்தி விடுமோ என்ற பயத்தினிலே தன் மனதை வெளிப்படுத்த மறுக்கிறாள். இவள் இதே யோசனையில் இருக்க கீழே ஏதோ சத்தம் கேட்டது.

சற்று நேரத்திற்கு முன்பு,

காரில் வந்து கொண்டிருந்த போது சந்திரிகா ஒரு இடத்தில் நிறுத்த சொல்ல என்னவென்று பார்த்தால் அது சத்யாவின் ஆசிரமம். சந்திரிகா, “அங்க போய்ட்டு போகலாமா சத்யா?எனக் கேட்க, அவனும் ஆர்வமுடன் வண்டியை நிறுத்தினான்.

இப்ப மட்டும் ருக்கு அக்கா நம்பள பார்த்தா என்ன நினைப்பாங்க?” என சத்யா கேட்க,அச்சோ மறுபடி இந்த லூசுங்க கிட்ட மாட்டிட்டமே. இப்ப என்ன கதை சொல்ல போகுதுங்களோ. பேசாம தப்பிச்சு ஓடிடலாமான்னு நினைப்பாங்க.” எனக் கூறி சிரித்தாள்.

ஆமாமா. ஆனாலும் பாவம் அவங்க அன்னைக்கு ரொம்ப குழம்பியிருப்பாங்கள்ள.” எனப் பேசிக் கொண்டே போனவர்கள் அவரை பற்றியும் விசாரிக்க அவர் தூரத்து உறவினர் ஒருவரின் குழந்தையை பார்த்துக் கொள்ள சென்று விட்டதாக தகவல் கிடைத்தது.

ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடியே எப்போதும் அவர்கள் அமர்ந்து பேசும் மகிழ மரத்தடிக்கு வர, அங்கே யாரோ தலையில் கை வைத்தபடி சோர்வாக அமர்ந்திருந்ததை பார்த்தனர். அருகே சென்று பார்த்தால் அது வேறு யாருமல்ல உதய்தான்.

இவன் இந்த நேரத்துல இங்க என்ன பண்றான்.” என்றவாறே உதய்யின் தோளை தொட அவன் அவர்களை அங்கு எதிர்பார்க்கவில்லை என அவன் பார்த்ததிலே தெரிந்தது. “ஏண்டா இங்க உட்கார்ந்திருக்க? என்னாச்சு ஏதாவது பிரச்சனையா?” எனக் கேட்டான் சத்யா.

சை சை அதெல்லாம் ஒன்னுமில்லடா. சும்மா தான் வேலை சீக்கிரம் முடிஞ்சிருச்சு. அதான் இங்க வந்தேன். வேற எதுவும் இல்ல. ஆமா நீ எங்க இந்தப் பக்கம்?” எனக் கேட்டான் உதய்.

ஒன்னுமில்லடா சூர்யாவை வீட்ல விடலாம்னு போய்ட்டு இருந்தேன். அவதான் நம்ம ஆசிரமத்தை பார்த்ததும் உள்ள போயிட்டு போலாம்னு சொன்னா.” என விவரம் சொன்னான் சத்யா.

என்ன திடீர்னு சூர்யா வீட்டுக்கு, ஏதாவது பிரச்சனை ஆகிட்டா. வேணாம்டாஎன உதய் பதற,எவ்வளவு நாள்தான் ஓடிட்டே இருக்க முடியும். எப்படியும் அரசல் புரசலா விசயம் தெரிஞ்சிருக்கும். தெரிஞ்சிக்கிட்டது எல்லாம் உண்மைதானு காட்டிடலாம்னு தான்.” என்றான் கண் சிமிட்டியபடி,

சரிடா. நானும் வரேன். என்னதான் நடக்குதுனு பாத்தர்லாம்.” என உதய்யும் கிளம்ப இந்த முறை சந்திரிகா யாரையும் தடுக்கவில்லை. ஆனால்டேய். நான் முன்னாடியே இறக்கி விட்டுட்டு வந்திடுவேன் டா. சும்மா சொன்னேன். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.” என்றான் சத்யா.

இன்னும் எவ்வளவு நாள் ஆனாலும் எதுவும் மாறாது சத்யா. எனக்கும் இப்படியே இருக்கறது பிடிக்கல. வீட்டுக்கே வந்து டிராப் பண்ணுங்க. என்னதான் நடக்குதுனு பாத்தர்லாம்.” என கிளம்பினாள். மூவரும் காருக்கு அருகில் வந்து விட ஆனாலும் சத்யாவிற்கு ஏதோ தவறாக பட சாவியை வைத்து விட்டதாக கூறி மீண்டும் உள்ளே வந்து விசாரித்தான்.

அவர்கள் கூறிய தகவல் அவனுக்கு யோசனையை தந்தது. இன்று மட்டுமல்ல சில நாட்களாகவே தொடர்ந்து உதய் ஆசிரமம் வந்து கொண்டிருக்கிறான் என்பதே அது. ஆம் சில நாட்களாக உதய் தனிமையை அதிகம் உணர்கிறான். வடக்கில் அவனுக்கு பணி காடுகளுக்கு உள்ளேயே என்பதால் எந்த நேரமும் பணியில் இருப்பது போன்றே இருக்கும்.

ஆனால் இங்கு பணி நேரம் அதைவிட குறைவு. மீதி நேரங்களில் தனது தோழர்களுடன் பொழுதை கழித்து மகிழ்வான். ஆனால் இப்போது இருவருமே அவரவர் வேலை நேரம் போக மற்ற நேரம் காதலுக்காக செலவிடுவதில் உதய்யை கவனிக்க முடிவதில்லை.

இதற்காக நண்பர்களை குறையாக நினைக்கவில்லை அவன். ஆனாலும் ஏதோ ஒரு வெறுமை அவனை தாக்க மீண்டும் ஆசிரமத்திற்கு வர ஆரம்பித்தான். இங்குள்ள மழலைகளுக்கு சில நேரம் ஏதேனும் பாடம் கற்று கொடுப்பான். அவர்களோடு விளையாடுவான்.

இது ஏதோ ஓரளவு அவனது தனிமையை போக்க, அப்படியும் சில நேரம் தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்து விடுவான். அவ்வாறு இருந்த போது தான் சத்யா அவனைக் கண்டது. ஓரளவு புரிந்தாலும் எப்படி உதய்யை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்ற யோசனையிலே காரை எடுத்தான்.

ஆனால் அதற்கு முன்பே உதய்யின் மனநிலையை ஓரளவு கணித்த சந்திரிகா, காரில் அவனையும் பின்னால் ஏற சொல்லி தானும் ஏறிக் கொண்டாள். சத்யா வந்ததும்,என்ன டிரைவர் சார். சீக்கிரம் கார் எடுங்க. எங்களாலலாம் வெயிட் பண்ண முடியாது. என்னண்ணா.” என உதய்யை சேர்த்துக் கொண்டு சத்யாவை கிண்டல் செய்தாள் சந்திரிகா.

ஆகட்டும் ராணியாரே.” என்றவன் சிரித்தபடி காரை எடுக்க, மூவரும் கதை அடித்துக் கொண்டே வீட்டிற்கு வரும் போது நன்கு இருட்டி இருந்தது. ஆள் அரவம் எதுவும் தெரியாமல் இருக்க ஹாலில் யாரும் இல்லை என நினைத்து, “வாங்களேன் சாப்பிட்டு போகலாமே?” என அழைத்தாள் இருவரையும்.

சாப்பிடலாமே.என்றவாறே காரில் இருந்து இறங்கியவன்,இன்னொரு நாளைக்கு.” எனக் கூறி அவளை அணைத்து விடை கொடுத்தான். போர்டிகோவில் நின்று கொண்டே இவ்வாறு செய்திருக்க, “டேய் எவ்வளவு தைரியம்டா உனக்கு. என் வீட்டு முன்னாடியே நின்னு என்ன வேலை பண்றஎன்ற குரல் சக்கரவர்த்தியுடையதே தான்.

அட வயசானாலும் மாமா இன்னும் நேரத்துக்கு தூங்கறதில்லடா. அவ்வளவு உழைப்பு.” என்றான் சத்யா நக்கலாக. “அப்பறம் என்ன சூர்யா. உங்கப்பாவே வந்துட்டார். இதுக்கு மேல வெளில நின்னு பேசினா அவ்வளவு மரியாதையா இருக்காதுல்ல.” எனப் பேசிக் கொண்டே சந்திரிகாவின் கையை கோர்த்துக் கொண்டு உதய்யை வர சொல்லி சைகை காட்டியவன், வலதுகால் எடுத்து வைத்து தன்னவளோடு உள்ளே நுழைந்தான்.

(இந்த ரண களத்துலயும் சம்பிரதாயத்தை கரெக்டா ஃபாலோ பண்றார் பாருங்க ஹீரோ சார்.)

இந்த சத்தம் கேட்டுதான் சஞ்சனா இறங்கி வந்தது. “மாம்ஸ் வாங்க வாங்க.” என வரவேற்றவள்..உடனே உள்ளே சென்று தண்ணீர் எடுத்தும் வந்தாள். அதை குடித்துவிட்டு தோரணையாக சென்று சோபாவில் அமர்ந்தவன் உதய்யையும் அருகே அமர வைத்துக் கொண்டான்.

ஒரு நிமிஷம்என சஞ்சனாவோடு அடுக்களைக்குள் சந்திரிகா சென்றாள். அவள் சென்றதும், “என்னடா. பழசெல்லாம் மறந்து போச்சா?என்றார் பல்லை கடித்தபடி சக்கரவர்த்தி.

அச்சோ. இப்பதானே சொன்னேன். வயசாகிடுச்சுன்னு. மறந்திருச்சானு கேட்க கூடாது. நியாபகம் வந்திருச்சானு கேட்கனும். நீங்க பண்ண எல்லாமே நியாபகத்துல இருக்கு. அதை விட அதிகமா என்னோட சூர்யா. என் மனசுல இருக்கா.” என்றான் விரைப்பாக..

அதற்குள் சந்திரிகா ஸ்வீட், காரம் வைத்து கொண்டு வர, “என்ன உபசாரம்லாம் பலமா இருக்கு. யார் குடுக்கற தைரியம் இதெல்லாம்.” என சந்திரிகாவை பார்த்து கத்தினார் சக்கரவர்த்தி. “என் கெஸ்ட்டை நான் கவனிக்கறேன். அவங்கவங்க வேலையை பாத்துட்டு போக சொல்லு சஞ்சு.” என்றவள் இருவருக்கும் சிற்றுண்டி அளித்தாள்.

அதற்குள் அரவம் கேட்டு வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்பறைக்கு வந்து விட்டனர். கீர்த்தி மீண்டும் தனது பழைய நண்பர்களை பார்த்ததில் மகிழ்ச்சியடைந்து. “ஹாய் அண்ணா. எப்படி இருக்கீங்க. இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க?என நலம் விசாரித்தவள் தனது மாமனாரின் பார்வையை கண்டு ஒரு நொடி தயங்கி நின்றாள்.

நல்லாயிருக்கோம் மா. நீ எப்படி இருக்க?” எனக் கேட்டவன், கண்களில் தைரியம் கொடுத்து பேச சொல்ல அவளும் இயல்பானாள். தனது கணவனை பார்க்கவும், அவனும் வந்து,எப்படி இருக்கீங்க. நானே உங்களை பார்க்கனும்னு நினைச்சேன்.” எனக் கேட்கவும், சத்யாவும் எதையும் காட்டிக் கொள்ளாமல் பேசினான்.

மற்றவர்களுக்கு சஞ்சனா அவன் யார் என அறிமுகம் செய்து வைக்க, அனைவருக்கும் தங்களது வீட்டு பெண்ணின் வாழ்வு வளப்பட்டதை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்தனர். “அரை மணி நேரத்தில விருந்து ரெடி பண்ணிடறோம். சாப்பிட்டு தான் போகனும்.” என சந்திரிகாவின் பாட்டியும், தாயும் சமையலறைக்கு சென்றனர்.

வீட்டில் அனைவருமே தனக்கு எதிராக மாறி விட்டார்கள் என அறிந்துமே சக்கரவர்த்தி மட்டும் இன்னும் பிடிவாதமாகவே நின்றார். “ஹேய். நில்லு.” என மனைவியை நிறுத்தியவர், “இவன் என் உன் வீட்டு மாப்பிள்ளையா. உபசரிப்பெல்லாம் பலமா இருக்கு.

அடுத்த வாரம் உன் பொண்ணை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க. அவங்களை இந்த மாதிரி கவனி. சரியா? இந்த அனாதை பயலுங்கள இல்லை.” எனவும், அவர் முன் கை நீட்டிய சந்திரிகா,இன்னொரு முறை அவரை தரக்குறைவா பேசினீங்கனா, உங்களுக்கு மரியாதை இருக்காது.” என்றாள் கோபமாக.

அவளருகில் வந்த சத்யாடென்ஷனாகாதடா.” என அவளிடம் மென்மையாக கூறி விட்டு, “ஆமா என்ன சொன்னிங்க பொண்ணு பார்க்க வராங்களா? யாரு சஞ்சனாவையா?” எனக் கேட்டான் சக்கரவர்த்தியிடம். ஏனோ அந்த பேச்சு சஞ்சனாவிற்கு உவப்பாக இல்லை.

அவளது தந்தையோமூத்தவ இருக்கும்போது இளையவளுக்கு பார்ப்பாங்களா?”எனக் கேட்டார். “ சூர்யா. ம்ம் சந்துக்கு. மாப்பிள்ளை பார்க்க நீங்க யாரு?எனக் கேட்டான் அழுத்தமாக சத்யா. “நான் அவளை பெத்தவன். எனக்கு இல்லாத உரிமையா?” என அவரும் வார்த்தையாட,

கட்டினவன் இங்க இவ்ளோ அழகா அம்சமா நிற்கிறப்ப என் முன்னாடியே என் பொண்டாட்டிக்கு மாப்பிள்ளை பார்க்கற உரிமை யாருக்காவது இருக்கா என்ன?” என்றான் சத்யா. அவன் கூறியது புரியாமல் அனைவரும் அவனை பார்க்க,என்னடா உளர்ற?” என்றார் சக்கரவர்த்தி.

இவ என் பொண்டாட்டினு சொல்றேன். ஒன்பது வருஷம் முன்னாடியே நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு சொல்றேன். இந்த செயினை தாலியா நினைச்சு தான் அவ கழுத்துல போட்டேனு சொல்றேன். இன்னிக்கு வர அதை அவளும் அப்படி தான் நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கானு சொல்றேன்.” என்றான் அதிரடியாக.

அனைவரும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் சில நிமிடங்கள் சிலையாகி நின்றனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்