1,226 views

கோபமாக செல்லும் அவளை பார்த்தவாறு நின்றிருந்த அஸ்வினுக்கு அவள் ஒரு புரியாத புதிராகவே தோன்றினாள். அவள் மனதை மாற்ற முடியுமா இல்லை தன் மனதை மாற்றிக் கொள்ளதான் வேண்டுமா என புரியாமல் நின்றிருந்தவனின் தோளில் ஒரு கரம் விழ, சட்டென திரும்பி பார்த்தால் தீபக்தான் சிரித்தபடி நின்றிருந்தான்.

அப்பறம் மச்சி, சார்க்கு இப்படில்லாம் ஒரு புரோகிராம் இருக்குனு சொல்லவே இல்ல?” என தீபக் கேட்க, “நீ எப்படா வந்த? என்றான் அஸ்வின். “அதெல்லாம் அந்த பொண்ணு இதெல்லாம் சரிப்பட்டு வராது. உருப்பட்ற வழிய பாருன்னு சொன்னப்பவே வந்துட்டேன்என சிரிக்கவும், ‘ அப்ப அவளை பத்தி எதுவும் கேட்டுருக்க மாட்டான்என பெருமூச்சு விட்டான் அஸ்வின்.

என்னடா விசியம், யார் அந்த பொண்ணு? அம்மா பார்க்கற பொண்ணேதான் கட்டுவேனு போன வாரம் வரை சொல்லிட்டு இருந்த, இப்ப என்ன இந்த பொண்ணுக்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டு இருக்க?” எனக்கேட்டான் தீபக்.

ஏண்டா நீ வேற. அம்மா எனக்கு பார்த்ததே இவளைதான்.” என அஸ்வின் பதில் கொடுக்க,துரோகி. அப்ப பிக்ஸ்ஸே பண்ணிட்டிங்களா? உனக்கும் அவங்களுக்கும் ஏதாவது சண்டையா? என்கிட்ட ஏண்டா சொல்லல?என பேசிக் கொண்டே போகவும்,டேய் டேய் நிறுத்துடாஎன கத்தினான் அஸ்வின்.

நான் சொல்றத கேட்டுட்டு அப்பறம் பேசு. அம்மா பார்த்த பொண்ணு இவதான். ஆனா எனக்கு இந்த மேரேஜ் பிடிக்கலன்னு சொல்லிட்டு போறா.” என்றான். “அதை வீட்ல சொல்ல வேண்டியதுதானே. உன்கிட்ட சொல்லி நிறுத்த சொன்னாளாக்கும்எனக் கேட்டான் தீபக்.”இல்லடா, அவ எல்லார்கிட்டயும் முடியாதுனு சொல்லிட்டா. நான்தான் என்ன ரீசன்னு தெரிஞ்சுக்கலாம்னு வர சொன்னேன்என்றவனை ஆச்சர்யமாக பார்த்தான் தீபக்.

பொதுவாகவே அஸ்வின் பெண்களிடம் அதிகமாக வைத்துக் கொள்ள மாட்டான். எத்தனையோ பெண்கள் அவனது அழகையும், பணத்தையும் பார்த்து பழக வந்த போதும் எட்ட நிறுத்தி விட்டவன் வேண்டாம் என சொன்னவளிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்டுதான் அந்த வியப்பு. “சரி ஓகே வாடா கிளம்பலாம். அம்மாக்கிட்ட இங்க நடந்ததை வாய தொறந்துடாத. சரியா?” என சொல்லிக் கூட்டிக் கொண்டு கிளம்பினான்.

அங்கிருந்து வீட்டிற்கு வந்த சந்திரிகாவிற்கு ஏனோ பழைய நிகழ்வுகளால் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. சற்று நேரம் அழுது தன்னை சமன்படுத்தி கொள்ள, அவளது அலைபேசி ஒலித்தது. அதில் ஒளிர்ந்த பெயர் அவளது மனநிலையை சற்று மகிழ்ச்சியாக மாற்ற புன்னகையோடு ஃபோனை எடுத்தாள்.

ஹாய் சந்து டார்லிங். ஹவ் ஆர் யூ?” என மறுமுனையில் கேட்க, ஆம் பைன் டி நீ எப்படி இருக்க.” எனக் கேட்டாள் இவள். “நைஸ் மா. இரு ஒரு குரங்கு உன்கிட்ட பேசனுமாம்என ஃபோனை குடுக்க, “உன் கூடதானே இருக்கேன். அப்ப நீயும் அப்படிதான்.” என வாயாடிக் கொண்டே ஃபோனை வாங்கியவன், “சந்து எப்படி இருக்க?” எனக் கேட்டான்.

நல்லா இருக்கேன். அப்பறம் என்ன விஷேஷம்என சந்திரிகா கேட்க, “ஒரு குட் நியூஸ். உன் தங்கச்சிக்கு படிப்பு முடியறதால, நெக்ஸ்ட் வீக் நாங்க ஊருக்கு வரோம்.” என்க, அதற்குள் அவள் வாங்கி, “அதுமட்டுமில்ல உன் ஃப்ரண்ட்டும் இனிமே இந்தியால தான் செட்டில் ஆகப் போறான்என்றாள் சந்திரிகாவின் தங்கை சஞ்சனா.

வாவ். சூப்பர் நியூஸ்தான். ஓகே வரப்ப கால் பண்ணுங்க, நான் பிக் பண்ணிக்கறேன்என்றவள் சிரித்தபடி ஃபோனை வைத்தாள். அங்கு அவளும் ஃபோனை வைத்துவிட்டு திரும்ப அவளை முறைத்தபடி நின்றிருந்தான் தரணீந்திரன்.

என்னாச்சு?” என சஞ்சனா கேட்க, “நான் சர்ப்ரைஸ் குடுக்கனும்னு நினைச்சா நீ இப்படிதான் சொல்லி வைப்பியா?” எனவும், “அப்படி இல்ல மாம்ஸ் அக்கா ஏதோ டல்லா இருந்த மாதிரி இருந்தது அதான். இதை சொன்னா சந்தோஷப்படுவால்ல.” எனவும் அவனும் அமைதியானான்.

சஞ்சனா, சந்திரிகாவின் செல்ல தங்கை. மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் இருந்தாள். சந்திரிகா வெளிநாட்டில் படிக்கும் போது அவளுக்கு கிடைத்த தோழன்தான் தரணீந்திரன். அவன் குடும்பம் இந்தியாவில் இருந்து தொழிலுக்காக அங்கே சென்று அங்கேயே செட்டில் ஆகியவர்கள்.

இவள் அங்கு இருக்கும் போதே சஞ்சனாவும் வந்துவிட, அவளுக்கும் நல்ல நண்பனாகி போனான். சந்திரிகா இந்தியா வந்த பின்பு சஞ்சனாவிற்கு அதுவே பாதுகாப்பாகவும் ஆகிவிட்டது. சந்திரிகா, இங்கு தொழில் ஆரம்பிக்கும் போது அவனையும் சேர்த்துக் கொள்ளதான் நினைத்தாள்.

ஆனால் அப்போது வேண்டாமென்றவன் சில ஆண்டுகள் கழித்து வருகிறேன் என்று கூறி விட்டான். ஆனால் சைலண்ட் பார்ட்னராக அவனது பெயரும் இருக்கிறது தூரிகை நிறுவனத்தில். இனிமேல் இங்கு வருவதாக முடிவெடுத்து விட்டான். சஞ்சனாவிற்கும் படிப்பு முடிய இருவரும் இந்தியா வர இருக்கின்றனர்.

    சத்யேந்திரன், பணிக்கு சேர்ந்து ஒரு மாத காலம் ஆகியிருந்த நிலையில், இந்த ஒரு மாத காலத்திற்குள் சென்னையின் நிலவரங்களையும் அது சம்பந்தப்பட்ட கோப்புகளையும் ஓரளவு பார்வையிட்டு முடித்திருந்தான். இன்று அலுவலக ஊழியர்கள் அனைவரையும் அழைத்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்ய சொல்லிருந்தான்.

அலுவலக ஊழியர்கள் அனைவரும் குழுமியிருக்க, இவன் பேச ஆரம்பித்தான். “ஹலோ எவ்ரிபடி, குட் மார்னிங். இப்ப எதுக்கு இந்த மீட்டிங்னு தெரியுமா?” எனக் கேட்டான். இல்லையென்றவாறு மற்றவர்கள் தலை அசைய, “நான் இங்க ஜாயின் பண்ணி ஒன் மந்த் ஆச்சு. நான் அப்சர்வ் பண்ணதுல சில விசயங்கள் உங்கள்ட டிஸ்கஸ் பண்ணனும்னு நினைச்சேன். சீனியர்ஸ் மட்டுமில்ல ஜுனியர் லெவல் ஆபிசர்ஸ்ம் இதைபத்தி தெரிஞ்சுக்கனும்என்றான்.

சத்யா, “ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மனுக்கள் பெறும் நாளாக இருக்கு அப்படிதானேஎன்றதும், “ஆமாம் சார்என்றார் உதவியாளர் ஒருவர். “ஆனா நிறைய மனு பெண்டிங் இருக்கேஎனக் கேட்க, அது நிறைய டிப்பார்ட்மெண்ட் வேலை சார் அதுனால டிலேவாதான் ஆகும் என்றார் ஒருவர்.

லுக். சம்பந்தப்பட்ட துறைகள்ல மனு குடுத்து அதுல சரியா நடவடிக்கை இல்லனாதான் கலெக்டர் ஆபிஸ்க்கு வருவாங்க. நாமளும் தாமதப்படுத்தினா எப்படி?” என்றவன். “இன்னைல்ல இருந்து மனுக்கள் பிரிவை நேரடியாக என்னோட கட்டுப்பாட்டில் இருக்கும். ஒவ்வொரு மனுவும் பிரையாரிட்டி பார்த்து அதுக்கு ஏத்த மாதிரி நடவடிக்கை எடுத்துக்கலாம்எனவும் சிலர் அதிர்ந்தனர்.

மனுக்கள் வாங்குவதை விட அதை வைத்து காசு வாங்குபவர்களாயிற்றே. அதுதான் அப்படி. “அப்பறம் நிறைய வரிகள் வர வேண்டியது நிலுவைல்ல இருக்கேஎன சத்யா கேட்க, “வரி கேட்டா யார் சார் கட்றாங்க. ஏகப்பட்ட செலவு இருக்கு. அப்பறம் கட்றோம்னு விடுறாங்க. கடுமையான நடவடிக்கை எடுக்கனும் சார். அப்பதான் கட்டுவாங்கஎன ஒருவர் கூறினார்.

அதற்கு சத்யா, “சார் நான் மக்கள்கிட்ட நிலுவைல்ல இருக்கிற வரியை பத்தி மட்டும் பேசல. சிப்காட் மாதிரி கார்ப்பரேட் கம்பெனிகள் நமக்கு குடுக்க வேண்டிய வரிகளை பத்தி பேசறேன். நீங்க சொல்றமாதிரி கடுமையான நடவடிக்கை எடுத்தாதான் கட்டுவாங்களோ.” என யோசிக்க, அவர் முகம் இருண்டது. சில கம்பெனிகள் அரசாங்கத்திற்கு கட்ட வேண்டிய வரிக்கு பதிலாக இது போன்ற அலுவலர்களுக்கு லஞ்சம் குடுத்து வருவதை அறிந்தே அவன் அப்படி சொன்னான்.

அதன்பிறகு சில விசயங்களை பேசியவன் அனைவரையும் அனுப்பி விட்டு தனது உதவியாளர்களிடம், “ஓகே. முக்கியமான தொழிலதிபர்கள் எல்லாரையும் வைச்சு என்னோட பர்சனல்லா ஒரு மீட்டிங் அரென்ஜ் பண்ணுங்க.” எனவும், “எல்லாரையும் ஒரே டைம்ல வர சொல்ல முடியாதே சார்என்றார் துணை ஆட்சியர்.

ஒரே டைம்ல வேண்டாம். ஒரு பிளான் போட்டு அஞ்சாறு டேட்ஸ் மென்ஷன் பண்ணி சர்க்குலர் அனுப்பிடுங்க. அவங்களுக்கு எந்த நாள் ஓகேன்னு கேட்டு அதுக்கேத்த மாதிரி பிளான் பண்ணிக்கோங்க. பட் மேக்ஸிமம் 15 டேய்ஸ்குள்ள நான் எல்லாரையும் மீட் பண்ணிடனும்என்றான் சத்யா. “ஓகே சார்என்றபடி அனைவரும் வெளியேறினர்.

சற்று நேரத்தில் அவனை பார்ப்பதற்கு அசிஸ்டண்ட் கமிஷ்னர் அவனை பார்க்க காத்திருப்பதாக கூற, வர சொன்னான். அட்டகாசமான புன்னகையோடு காக்கி உடையில் உள்ளே நுழைந்தான் அசோக். அவனை பார்த்ததும் சத்யேந்திரன் எழுந்து அவனை வரவேற்றவன், “சொல்லவே இல்லடா எப்ப ஜாயின் பண்ண?” எனக் கேட்க, “இன்னைக்கு தான்டா. அதான் உடனே உன்ன பார்க்க வந்துட்டேன்என்றான் அசோக்.

சத்யா, “சூப்பர்டா. இரு லன்ச் ஒன்னா சாப்பிடலாம்என்க. “இல்ல சத்யா. கொஞ்சம் வேலை இருக்கு. நான் உடனே போகனும். நீ ஃப்ரியா இருக்கப்ப சொல்லு மீட் பண்ணலாம்என்ற அசோக்,நாம இரண்டு பேரும் நண்பர்கள்னு யாருக்கும் தெரியாம இருக்கறது தான் நல்லதுஎனவும் சத்யாவும் அதை ஆமோதிக்க அசோக் விடைபெற்றான்.

    அதிகாலையிலே, ஏர்போர்ட் வாசலில் நின்றிருந்தாள் சந்திரிகா. ஆரவாரத்தோடு வந்து இறங்கினர் சஞ்சனாவும், தரணியும். “எனக்கு தெரியும்கா நீ வருவன்னுஎன வாயடித்துக் கொண்டே காரில் ஏற, இருவரையும் வரவேற்றவள் நலம் விசாரித்தாள்.

பிறகு வீட்டிற்கு வந்தவர்களை அனைவரும் வரவேற்க, வந்தவுடன் தனது அறைக்கு வந்து விட்டாள் சந்திரிகா. சஞ்சனா அந்த வீட்டின் செல்லப் பெண். அனைவரிடமும் செல்லம் கொஞ்ச, அதை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான் தரணி. அதை பார்த்த சஞ்சனா அனைவரிடமும் அவனை அறிமுகப்படுத்தினாள். பிறகு கெஸ்ட் ரூமை காட்டி அவனை ஓய்வெடுக்க சொல்லி விட்டு தமக்கையின் அறையில் நுழைந்தாள் சஞ்சனா.

அங்கே அவள் கிளம்பிக் கொண்டிருக்க, “நீ இன்னும் அப்படியேதான் இருக்கியா அக்காஎனக் கேட்க. “அப்படியே இல்லடி கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி இல்ல.” என்றாள் சந்திரிகா. “நான் அதை சொல்லல.” என முறைத்தவள், “வீட்ல இன்னும் எதுவும் சரியாகல போல.” என்றாள். “எல்லாம் சரியாதான் இருக்கு. நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் ஆபிஸ் கிளம்பனும்என்றாள் சந்திரிகா.

சஞ்சனா, “நீ சொல்லுஎனக்கேட்க, “இன்னும் யாரும் மாறலடி. அதான் நானும் மாறல. போதுமா. இப்ப கூட எனக்கு அலையன்ஸ் பார்த்துட்டு இருக்காரு உங்கப்பா.” எனவும், சஞ்சனா, “அவரை விடுக்கா. நீ அண்ணா, பாட்டிக்கிட்டலாம் பேசலாம்ல.” எனவும்சந்திரிகா, “பேசிக்கலாம் இப்ப என்ன அவசரம்எனும் போதே, “உள்ளே வரலாமா?” எனக் கேட்டுக் கொண்டே வந்தான் தரணி

வந்துட்டு என்ன வரலாமா?” எனக் கேட்ட சஞ்சனா. “ரெண்டு லேடிஸ் தனியா பேச எவ்ளோ இருக்கும். இப்படிதான் டிஸ்டர்ப் பண்ணுவியா?” என்றாள். “எனக்கு தெரியாம உங்களுக்குள்ள என்ன சீக்ரெட் இருக்க போகுது. சரிதான் போவியாஎன்றவன்,ஆமா இங்க இரண்டு லேடிஸ்னு சொன்னியே ஒன்னு இங்க என சந்திரிகாவை காட்டியவன். இன்னொருத்தர் எங்க?” எனக் கேட்டான்.

யூ யூஎன்றவாறே சஞ்சனா அவனை அடிக்க துரத்த, “இப்படியே விளையாடிட்டு இருங்க நான் ஆபிஸ் போய்ட்டு வரேன்என கிளம்பினாள் சந்திரிகா. “இரு சந்து நானும் வரேன்.” என தரணி சொல்ல, “வேணாம் தரணி. இன்னைக்கு ரெஸ்ட் எடு நாளைக்கு வந்தா போதும்என்றவாறே சென்று விட்டாள்.

அலுவலகம் சென்ற போது, கலெக்டர் ஆபிஸ்ஸில் இருந்து வரச் சொன்ன தகவல் வந்தது. அதுவும் நிறுவன முதலாளிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென்ற நிபந்தனையோடு..!!!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
3
+1
2
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments