670 views

 

               கடற்கரை அருகே உள்ள ஒரு பீச் ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்தனர் சஞ்சனாவும், அசோக்கும். “இன்னும் எத்தனை நாள்தான் இப்படி உங்களோட சுத்தறது.” எனக் கேட்டாள் சஞ்சனா சலிப்பாக.

ஹேய். என்னவோ வருஷக்கணக்குல இருக்கற மாதிரி கடுப்பா பேசற. இதுதான் ரெண்டாவது நாள். இன்னும் எட்டு நாள் லீவ் இருக்கு.” என்றான் அசோக். அன்று அஸ்வின் வீட்டில் பங்சன் முடிந்ததும் அசோக் வந்து பேசியது நினைவிற்கு வந்தது.

அசோக், “ஹாய். உன்கிட்ட ஒரு விசயம் கேட்கனும்.” என்க,சொல்லுங்க.” என்றாள் சஞ்சனா. “நீதான் சொல்லனும். இன்னமும் எனக்கு பதிலே சொல்லலயே.” எனக் கேட்டான் அசோக்.

இதை பாருங்க. எனக்கு இந்த பார்த்ததும் காதல், பார்க்காத காதல்ல லாம் நம்பிக்கை இல்ல. உங்களை பத்தி எனக்கு என்ன தெரியும். இல்ல உங்களுக்கு தான் என்னை பத்தி என்ன தெரியும். ஏதோ கேஸ் விசயமா ஒரு பத்து தடவை பார்த்திருப்போம். ஒழுங்கா போய் வேலையை பாருங்க.” என்றாள் சஞ்சனா.

கரெக்ட் சஞ்சனா. நீ சொல்றதுதான் சரி. எனக்கு ஒரு பத்து நாள் லீவ் இருக்கு. இந்த நாள் ஃபுல்லா நீ என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணு. அதுக்கப்பறம் என்னை பிடிக்க சான்ஸ் இருக்குல்லஎன்றவனை லூசாடா நீ என்பது போல பார்த்து வைத்தாள் சஞ்சனா.

ஆனால் அசோக்கோ விடாமல் இன்னும் ஏதேதோ பேசி அவளை சம்மதிக்க வைத்து விட்டான். வேறு வழியின்றி அவளும் முக்கியமான கேஸ் என்றால் மட்டும் அழைக்குமாறு கூறி பத்து நாட்கள் விடுப்பு எடுத்தாள். முதல் நாள் ஒரு மாலிற்கு சென்று பொழுதை கழித்தவர்கள் இன்று கடற்கரை வந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்தனர் தீபக்கும், சைந்தவியும். சைந்தவி இவர்களை பார்த்ததும் மகிழ்ச்சியாக கையசைத்து அருகில் வர, ‘போச்சுடா. இவகிட்ட வேற சிக்கிட்டனேஎன நினைத்தபடியே வெளியில் சிரித்து வைத்தாள். “பாருடா. நீ டெய்லி ஹாஸ்பிட்டல் போறன்னு ப்ரோ கூட தான் சுத்திட்டு இருக்கியா? இரு அக்காகிட்ட போட்டு குடுக்கறேன்.” என்றவள்,

என்ன ப்ரோ பட்சி ஓகே சொல்லிடுச்சா. இன்னைக்கே டிரீட் வைக்கறீங்களா?என ரகசியமாக அசோக்கிடம் கேட்டாள். “நீ வேற ஏம்மா. கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்கறா என்ன பண்றதுனே தெரியல.” என சலித்து கொண்டான்.

அங்க என்னடி ரகசியம் வேண்டி இருக்கு. நான் வேலை விசயமாதான் வந்தேன். ஆமா இந்த நேரத்துல உனக்கு இங்க என்ன வேலை.” எனக் கேட்டு வைத்தாள் சஞ்சனா. “அதை நான் சொல்றேன் மா. கொஞ்சம் மெட்டீரியல் ஆர்டர் குடுக்க வேண்டி இருந்தது இங்க பக்கத்துல. வேலை முடிஞ்சதும்,

இந்த ரெஸ்டாரண்ட்ல பிரான் நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். இவ்வளவு தூரம் வந்துட்டு எப்படி டேஸ்ட் பண்ணாம போறதுனு கூட்டிட்டு வந்தாச்சு. எப்படிதான் வீட்ல வைச்சு சமாளிக்கறீங்களோ? வெளில வரப்பெல்லாம் என் பர்ஸ் பஞ்சர் ஆகிடுது.” என இவன் கஷ்டப்பட்டு கதை சொல்லி கொண்டிருக்க அதற்குள் சைந்தவி ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்திருந்தாள்.

கொஞ்சமாது குடுத்துட்டு சாப்பிடனும்னு எண்ணம் இருக்கா பாரு.” என்றவன் சைந்தவியின் பிளேட்டை பிடுங்கி கொள்ள,அய்யோ என் பிரான்.” என அலறினாள் சைந்தவி. “எப்படியும் இன்னும் இரண்டாவது ஆர்டர் பண்ணிருப்ப. வந்ததும் சாப்பிடு.” என சொல்லி முடிப்பதற்குள் மூன்று வர பிறகு ஆளுக்கு ஒன்றாக சாப்பிட்டு முடித்தனர்.

அசோக் எழுந்து,ஒரு சின்ன வேலை. பேசிட்டே இருங்க வந்தடறேன்.” என சென்றுவிட்டான். சைந்தவி மெதுவாக சஞ்சனாவிடம், “இன்னும் எவ்ளோ நாள் அவரை சுத்த விடப்போற.” எனக் கேட்டாள். “இங்க பாரு. நான் முடியாதுனு எப்பவோ சொல்லிட்டேன். முடிஞ்சா அவருக்கு சொல்லி புரிய வை.” என்றாள் கோபமாக.

இத்தனை நாள்ல ஒரு தடவை கூடவா அவரு போலிஸா மட்டும் இல்லாம நல்ல மனுஷனா உனக்கு தெரியல. உனக்கு அவரை பிடிச்சிருக்கு. உன் பிடிவாதத்தை விட்டுட்டு யோசிச்சு பாரு.” என்றவள் தீபக்கை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அன்றிரவே அசோக்கிற்கும் அழைத்து பேசினாள் சைந்தவி. அசோக்கின் ஃபோன் ஒலிக்கவும் சத்யாதான் எடுத்தான். சத்யா என தெரிந்ததும்அண்ணா நான் சைந்தவி பேசறேன். எப்படி இருக்கீங்க?என நலம் விசாரித்தவள், அசோக்கிடம் சொல்வதை விட சத்யாவிடம் கூறி அவனுக்கு புரிய வைக்க சொல்லலாம் என நினைத்தாள்.

ஒரு முக்கியமான விசயம் சொல்லனும். எனக்கென்னவோ சஞ்சு மனசு மாறற மாதிரி தெரியல. அசோக் அண்ணாகிட்ட நீங்கதான் சொல்லி புரிய வைக்கனும் அண்ணா.” என்றாள். “நானே கேட்கனும்னு நினைச்சேன். எல்லாரும் இதையே சொல்றீங்க? அப்படி என்னதான் பிராப்ளம் சஞ்சனாக்கு. சொல்லு.” எனக் கேட்டான் சத்யா.

அது வந்து.” என முதலில் தயங்கியவள், “இல்லன்னா. அவ ஸ்கூல் படிக்கும்போது கூட படிக்கற பொண்ணுக்கு ஈவ்டீசிங் பிராப்ளம் நடந்திருக்கு. அதோட அவன் கூப்பிடற இடத்துக்கு போகலன்னா ஆசிட் அடிச்சிடுவேனு அந்த பொறுக்கி மிரட்டி இருக்கான்.

அவ பயந்து போய் இவகிட்ட சொல்ல, சஞ்சு தைரியமா ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் குடுத்திருக்கா. அந்த ஸ்டேஷன் போலிஸூம், யாருன்னு விசாரிச்சுட்டு. உன் ஃப்ரண்டு வந்து கம்ப்ளைண்ட் குடுத்தாதான் ஆக்ஷன் எடுக்க முடியும்னு சொல்லி இருக்கான்.

சரின்னு சொல்லி அவளுக்கு தைரியம் சொல்லி கூட்டிட்டு வரும்போது சஞ்சுவோட அப்பா ஃபோன் பண்ணியிருக்கார். அவருக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உடனே வரதா அப்பாட்ட சொல்லிட்டு நீ உள்ள போய் சைன் மட்டும் பண்ணிட்டு வீட்டுக்கு போ. நாம நாளைக்கு பேசிக்கலாம்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டா சஞ்சு.

ஆனா அடுத்த இரண்டு நாளும் அந்த பொண்ணு ஸ்கூலுக்கு வரல. மூனாவது நாள் ஊருக்கு ஒதுக்குப்புறமா அவளோட பாடிதான் கிடைச்சிருக்கு. அதுவும் நாலு பேரால பலவந்தமா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்திருக்கா.

அப்ப அந்த பொறுக்கி இவளை பார்த்து எவ்ளோ தைரியம் இருந்திருந்தா எங்க மேலயே கம்ப்ளைண்ட் குடுத்திருப்ப, அடுத்த டார்கெட் நீதான். அப்பறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். அவளை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து எங்க வேலையை ஈசியா ஆக்கிட்ட. அந்த ஸ்டேஷன் இன்ஸ்ஸே எங்க ஆளுதானு சொல்லி இருக்கான்.

அதக்கேட்டு இவ அதிர்ச்சி ஆகிட்டா. இதுல நடந்த ஒரே நல்லது. அவகிட்ட அப்படி பேசிட்டு போன மூனு பேரும் போற வழிலயே ஒரு ஆக்ஸிடென்ட்ல அடிபட்டு செத்தானுங்கஅதுக்கப்பறம் அந்த பொறுக்கிங்கள விட ஒரு பொறுப்பான பதவில்ல இருந்துட்டு நம்பி வந்த ஒரு பொண்ணை இப்படி பண்ணீட்டானேனு அவளுக்கு போலீஸ்னாவே இப்படிதானு மனசுல பதிஞ்சிடுச்சு.

அதுக்கப்பறம் இங்க படிக்க மாட்டேனு சொல்லி கனடால வந்து மெடிசன் படிச்சா. அதுதான் அசோக் அண்ணாவையும் போலீஸ்னு பார்த்து ஏத்துக்க மாட்றா. ஆனா அவர் மேல கோபம் எதுவும் இல்லை. அதனால இயல்பா பேசறா.” என முடித்தாள் சைந்தவி.

அனைத்தையும் கேட்டு முடித்தவன்,நான் அசோக்கிட்ட பேசிக்கறேன் மா. எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.” என்ற சத்யா ஃபோனை வைத்துவிட்டு மறுநாளே அசோக்கிடமும் கூறி விட்டான். அசோக் இந்த பிரச்சனையை எப்படி கையாளப் போகிறானோ!

             அஸ்வின் வீட்டில் அவனது அறையின் பால்கனியில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தான். ஒரு வாரம் முன்பிருந்து நடந்ததெல்லாம் நிழலாக ஓடியது. அன்று அனுவின் வீட்டில் கிரீட்டிங் கார்டில். “ லவ் யூ கிருஷ்ணாஎன எழுதியிருந்ததை பார்த்த அஸ்வினுக்கு.

அவள் காதலிக்கிறாள் என்பதே அதிர்ச்சியாக இருக்க அதிலும் தனது புகைப்படத்தின் மேல் லவ் யூ என எழுதியிருந்ததை பார்த்ததும் அதுவும் தான் தான் அது என உறுதிப்படுத்திக் கொண்டான். அவளிடம் கோபத்தில் எதுவும் பேசி விடக் கூடாது என தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

ஆனால் சில மணித்துளிகளிலே அவளுக்கு இதெல்லாம் தவறு என புரிய வைத்து விட்டால் போதும். சிறு பெண் ஏதோ அறியாமல் செய்கிறாள் என நினைத்து சமாதானமாகி விட்டான். மறுநாளும் அவளை கல்லூரிக்கு அழைத்து சென்று வர வீட்டில் அவளது டைரி கிடைத்தது.

அவளுக்கே தெரியாமல் அதை எடுத்து வந்து ஏதோ ஒரு வேகத்தில் படித்தும் விட்டான். முழுக்க முழுக்க அவனே நிரம்பியிருந்தான் அந்த டைரியில். முதன் முதலாக அவனை பார்த்த போது ஏற்பட்ட சலனம். இரு வருடங்களுக்கு முன் அவர்கள் தஞ்சாவூரில் இருந்தபோது திருவிழாவிற்கு வந்திருந்த போது காதலென உணர வைத்திருந்தது.

அதன்பிறகு தந்தைக்கு திருநெல்வேலிக்கு மாற்றல் கிடைத்த போதும், இவனது நினைவில் வாழும் அளவிற்கு காதலாகி கலந்தது. அதனாலே மேற்படிப்பு சென்னையில் படித்தால் தன்னவனை அடிக்கடி பார்க்க நேரிடும் என நினைத்து தான் இங்கு விண்ணப்பிக்கவே செய்தாள்.

ஆனால் அஸ்வின் வேறு பெண் மீது காதல் கொண்டுள்ளான் என அறிந்த போது அந்த பேதை மனம் தவித்து போனது. தனது அஸ்வின் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும் என நினைத்து தனது காதலை மனதிற்குள்ளே வைத்து பூட்டி விட்டு அவனிடம் இயல்பாக பழகவே செய்தாள்.

பின்பு அந்த காதல் தோல்வி அடைந்து அவன் வருத்தப்பட்ட போது அவனை விட அதிகமாகவே துடித்து போனாள். இருந்தும் அவன் மீது கொண்ட காதலால். அவன் மீண்டும் மகிழ்ச்சியாக வாழ தன்னால் இயன்றதை செய்ய காத்திருக்கிறாள்.

இவை அனைத்தும் அந்த டைரியில் விரிவாக எழுதப்பட்டிருக்க அதை படித்து கலவையான உணர்வுகள் தோன்றி மறைந்தது. தனது நண்பனின் தங்கையை தான் காதலிப்பது அவனுக்கு செய்யும் துரோகம் என நினைத்தே அனுவிடம் பேசி புரிய வைக்க வேண்டும் என நினைத்தான்.

ஆனால் அனு அவன் மீது கொண்டுள்ள காதல் அவன் எண்ணத்தை சற்று அசைத்து பார்த்தது. விரும்பியது கிடைக்காத போது படும் அவஸ்தையை அவனும் அனுபவித்து இருக்கிறானே. அதையே எப்படி அனுவிற்கு தருவது என ஒரு மனம் யோசித்தால் இது தெரிந்தால் தீபக் எப்படி எடுத்துக் கொள்வானோ என இன்னொரு மனம் நினைக்க குழம்பி போனான்.

அனு மீது அவனுக்கு இந்த கணம் வரை காதல் இல்லை. ஒரு தோழியாக அவள் மீது அன்பும், அக்கறையும் நிறையவே இருக்கிறது. அது காதலாகுமா என்றெல்லாம் அஸ்வின் யோசித்துக் கொண்டிருக்க, அவன் அருகே தீபக் வந்ததையோ,என்னடா டைரில்லாம் எழுதறஎனக் கேட்டு அதை புரட்டியதையோ கவனிக்கவில்லை.

அவன் கவனித்த போது டைரியில் இருந்த விசயம் தீபக்கிற்கு தெரிந்து போனது. அவனை பார்த்ததும் அனைத்தையும் விட தீபக்கின் நட்பே பெரியதாக பட்டது. அஸ்வின்டேய் மச்சான். சாரிடா. எனக்கே இன்னைக்கு தான்டா தெரியும். நீ அனுவை எதுவும் சொல்லிடாதடா. நான் அவளுக்கு சொல்லி புரிய வைக்கிறேன்டா.

என் மனசுல அந்த மாதிரி தப்பான எண்ணம் எதுவும் இல்லடாஎன விளக்கம் குடுக்க அவனை இறுக கட்டிக் கொண்டான் தீபக். “இரு மச்சி. உன்னை பத்தி எனக்கு தெரியாதா. அவ யாரையோ லவ் பண்றானு எனக்கு டவுட் இருந்ததுடா. ஆனா அது நீயா இருக்கும்னு சத்தியமா நினைச்சு பார்க்கல.

நீயும் அவளை லவ் பண்ணியிருந்தாலும் நான் தப்பாலாம் நினைச்சுக்க மாட்டேன். உன்னை மாதிரி ஒருத்தனை யாராது வேணாம்னு சொல்வாங்களாஎன அஸ்வினை சமாதானம் செய்தான். பிறகு தீபக்கே தொடர்ந்து, “ஆனாலும் இந்த கல்யாணம் நடக்க கூடாது. நானே அனுவுக்கு சொல்லி புரிய வைச்சுக்கறேன்எனக் கூறி விலகி சென்றதும் அஸ்வினுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்