753 views

 

                   சந்திரிகாவை தூக்கிக் கொண்டு சத்யா அறைக்குள் செல்ல மற்றவர்கள் அனைவரும் கீழே சென்றனர். உள்ளே சென்றதும் அவளை கட்டிலில் இறக்கி விட, அவளோ ஆயாசமாக அமர்ந்தாள். அவள் கோபமாக இருப்பதை போல காட்டிக் கொண்டாலும் உண்மையில் எவ்வளவு வேதனையில் உள்ளாள் என்பதை சத்யா அறிந்திருந்தான்.

அவளை அமர வைத்து விட்டு கீழே அமர்ந்தவன், அவளது கால் விரல்களுக்கு சொடக்கு எடுத்தவாறே பேச ஆரம்பித்தான். “எத்தனை முறை உன்கிட்ட மன்னிப்பு கேட்டாலும் நான் பண்ணது தப்புதான். ஆனா என் நிலைமையையும் புரிஞ்சுக்கோ சூர்யா.

உங்கப்பா சொன்ன மாதிரி நம்மளது டீன் ஏஜ் லவ். கண்ணுல படாதது கருத்துல நிக்காதுன்னு சொல்ற வயசுல தான் நாம காதலிக்க ஆரம்பிச்சோம். அதான். நீ கனடா போனதும், நம்ப காதல் உனக்கு சாதாரணமாக கூட போயிருக்கலாம்ல. அப்ப கூட நீ என்ன மறந்திருப்பன்னு நான் நினைக்கல.

ஆனா ஏதோ உன்கிட்ட வர முடியல. சாரி.” என அவன் விழுங்கவும் சந்திரிகா, “சரி அதை விடுங்க. ஏதோ ஒரு சிட்சுவேஷன்ல தப்பா நினைச்சதாவே இருக்கட்டும். மறுபடி என்னை பார்த்தப்பயாவது என்கிட்ட பேசியிருக்கலாம்ல. எதுக்காக அப்படி அவாய்ட் பண்ணனும். உங்களுக்கு இன்னும் நியாபகம் வரலன்னு தான் நான் நினைச்சேன்.

ஆனா நீங்க பேசியிருக்கலாம்ல. ஏன் அதை பண்ணல?எனக் கேட்டாள். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், “அது வந்து உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு நினைச்சேன்என்றான் தலை குனிந்தபடி. கோபத்தில் அவனை அடித்து விட்டாள் சந்திரிகா. “ஏண்டா. நீ என்னைக்கோ போட்டு விட்ட இந்த செயினை கூட இன்னும் நான் போட்டுருக்கேன்.

ஆனா நீ இன்னொருத்தனை கல்யாணமே பண்ணீட்டேனு நினைச்சிருக்க.” என தனது கழுத்தில் இருந்த செயினை காட்டினாள். அவளது பிறந்தநாள் அன்று தனது சம்பாத்தியத்தில் சத்யா வாங்கி கொடுத்த மெல்லிய செயின் அது. அன்றைக்கு இருந்து இன்று வரை எதற்காகவும் அதை சந்திரிகா கழட்டியதேயில்லை.

ஆனா அதுக்கு காரணம் இருக்கு.” என்றவன், ஒரு பத்திரிக்கையை காட்டினான். நான்கு வருடத்திற்கு முன்பு சந்திரிகாவிற்கும், தரணிக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக அதில் இருந்தது.

இது யார் அனுப்பினா?” என அவள் கேட்க, “வேற யாரு உங்க அப்பாதான். நான் அப்பதான் டிரைனிங் முடிஞ்சு வேலைக்கு ஜாயின் பண்ணியிருந்தேன். என்றவன் அவள் அப்பாவை சந்தித்த பிறகு நடந்ததை கூறினான்.

உதய் மட்டும் இல்லன்னா நான் என்ன ஆகி இருப்பேனே தெரியாது சூர்யா. உங்கப்பா அப்படி பண்ணதும் ஒரு மாசம் அறைக்குள்ளையே அடைஞ்சிருந்தேன். அதுக்குள்ள எல்லா ரிசல்ட்டும் வந்திருச்சு. உன்கிட்ட பணம் இல்லாததால தானே எல்லாரும் உன்னை உதாசினம் பண்றாங்க. உன்னாலையும் சாதிக்க முடியும்னு எல்லாருக்கும் காட்டனும்.

அப்படின்னு சொல்லி திருநெல்வேலில இருக்கற ஒரு பயிற்சி மையத்துக்கு கூட்டிட்டு போனான். அதுல என்ட்ரண்ஸ்ல பாஸ் பண்ணா அவங்களே எல்லா பயிற்சியும் இலவசமாக தருவாங்க. என்னை படிக்க சொல்லி ஊக்கம் கொடுத்து எப்படியோ அந்த பரீட்ச்சையை கிளியர் பண்ண வச்சான் உதய். ஆனா அவன் அதுல அப்ளை பண்ணல.

இல்லடா எனக்கு சிவில்ல விட மத்த எக்ஸாம்ல தான் இண்டர்ஸ்ட் இருக்குனு சொல்லி அவன் பார்ட் டைம் ஜாப் ஒன்னை பாத்துக்கிட்டே கவர்மெண்ட் எக்ஸாம்க்கு படிச்சான். படிக்கவும், தங்கவும் அந்த மையத்துல இலவசம். என்னோட மற்ற செலவுகள உதய்தான் பாத்துகிட்டான்.

எனக்கு முன்னாடியே வேற ஒரு எக்ஸாம்ல அவன் செலக்ட் ஆகிட்டான். ஆனா அது சாதாரண வேலை தான். இருந்தாலும் நான் படிப்பை முடிக்கற வரை அந்த வேலைதான் பாத்துட்டு இருந்தான். நான் எக்ஸாம் கிளியர் பண்ணி ..எஸ் டிரைனிங்க்கு செலக்ட் ஆனதுக்கு அப்பறமா பாரஸ்ட் ஆபீஸர் எக்ஸாம் கிளியர் பண்ணி அந்த வேலைக்கு சேர்ந்தான்.

அது சென்ட்ரல் கவர்ன்மெண்ட் ஜாப். அதனால வேலை செய்யற இடத்தை தேர்ந்தெடுக்கறப்ப நார்த் இந்தியா குடுத்து அங்கயே வேலைக்கு வந்தான். அதுவரைக்கும் வேற எந்த நினைப்பும் வரல. அந்த அளவு வெறித்தனமா படிச்சு எப்படியாவது வேலைக்கு போகனும்னு மட்டும்தான் எண்ணம் இருந்தது.

அதுக்கப்பறம் உன் நியாபகம் வரும் போதெல்லாம் ஏதாவது நினைச்சு என்னையே சமாதானம் படுத்திக்குவேன். டிரைனிங் முடிஞ்சு வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் இருக்கும். அப்பதான் என்னோட அட்ரஸ்க்கு இந்த பத்திரிக்கை வந்தது. அதுவரைக்கும் உங்கப்பா என்னை ஃபாலோ பண்ணிட்டு இருந்திருக்காருனே எனக்கு அப்பதான் புரிஞ்சது.

வேலைக்கு சேர்ந்ததும் வந்து உன்னை பார்க்கனும். என்னதான் நடந்ததுனு கேட்கனும்னு நினைச்சேன். ஆனா இதை பார்த்ததும் நீயாவது நல்லா இருக்கனும்னு இங்க வர நினைப்பையே விட்டுட்டேன். ஆனா உதய்தான் உன் மேல ரொம்ப கோபமா ஆகிட்டான். இனிமே அவளை தேடி போலாங்கற எண்ணம் இருந்தா இப்பவே அழிச்சிடுனு சொல்லிட்டான்.

நானும் அதுக்கப்பறம் நார்த்லயே தான் இருந்தேன். கண்டிப்பா இந்த முறை சௌத் போடனும்னு ஆர்டர் வந்ததால இங்க வந்தேன். ஆனா இங்க உன்னை பார்த்ததும் முதல்ல சந்தோஷமா இருந்தாலும் உன்கூடவே தரணியும் இருந்ததால நிஜமா கல்யாணம் ஆகிடுச்சுனு நினைச்சேன்.

நீயாவது காலேஜ் ப்ரண்ட் நியாபகம் இல்லையானு சாதாரணமா பேசுவன்னு எதிர்பார்த்தேன். ஆனா நீ தெரியாத மாதிரி இருக்கற தால நானும் அப்படியே விட்டுட்டேன். சில நேரம் தரணி உன்கிட்ட உரிமையா பேசறப்ப கோபம் வரும். அதையும் உன்கிட்டயே காட்டிடுவேன்.

அப்பறம் காதலிச்சவனே மறந்ததுக்கு அப்பறம் இன்னொரு வாழ்க்கையை அமைச்சிக்கிட்டா என்ன தப்புன்னும் தோணும். அன்னைக்கு கடற்கரைல்ல பார்த்தப்பதான் உனக்கு இன்னும் கல்யாணம் நடக்கலன்னு தெரியும். ஆனா உன் ஃப்ரண்ட்ஸ் தரணியோட நிச்சயம் ஆகிடுச்சுனு பேசிட்டு இருந்தாங்க.

அசோக் உனக்கு வாழ்த்து சொன்னப்பவும் நீ மறுக்கல. அதனால மறுபடி உன் வாழ்க்கைல வந்து குழப்பத்தை விளைவிக்க கூடாதுனு அமைதியா இருந்தேன். ஆனா அப்பப்ப என்னை பார்த்தா உன் கண்கள்ள தெரியற காதலை ரசிக்கறத்துக்காகவே உன்னை கோபப்படுத்தி இந்த புராஜக்ட்ல பங்கேற்க வைச்சேன்.” என தனது நீண்ட விளக்கத்தை அளித்தான்.

சரி அப்பறம் இப்ப மட்டும் எங்க போச்சு. அந்த சந்தேகம், கோபம் எல்லாம்?” எனக் கேட்டாள் சந்திரிகா. “எல்லாத்துக்கும் தரணி தான் காரணம். அவர் அன்னிக்கு உன்னையை நான் தூங்குனதுக்கு திட்டினேன்ல அதுக்கு அப்பறம் என்னை வந்து பார்த்தார்என்றவன் அவனுடனான சந்திப்பை நினைவு கூர்ந்தான்.

இருங்க இருங்க. அன்னைக்கு நான் தூங்குனதுக்கா உங்களுக்கு அவ்வளவு கோபம் வந்தது.” என்றாள் இடைமறித்து,இல்ல. அன்னைக்கு நோட்லலவ் யூ தீரன்னு எழுதியிருந்த அதை பார்த்து தரணீந்திரனை நீ செல்லமா அப்படி எழுதியிருக்கன்னு நினைச்சேன். அதான்என்றதும் அவன் முதுகில் இரண்டு வைத்தவள்,

அட மக்கு பையா. தரணிக்கு மட்டுமா வரும். உன் பேர் சத்யேந்திரன் தானே. அதுல இருந்து தீரன் வராதா. நீ எல்லாம் எப்படி கலெக்டர் ஆன?எனக் கேட்டாள். ஆமாமில்ல அதை நான் யோசிக்கவே இல்ல. நீ சொல்லிதான் இப்படி யோசிக்கவே தோணுது. எல்லாம் உன்னால தான்.

லவ் பண்ணும் போது செல்லப்பேர் வைக்க சொன்னா, நீ மறதியான அப்பறம் பேர் வைச்சிருக்க.என்றவன் தொடர்ந்து,ஆனா நீயும் மக்குதான். நான் எல்லாம் நியாபகம் வச்சிருக்கேனு உன் கூட இருந்த தரணியே கண்டுபிடிச்சாச்சு. ஆனா உன்னால கண்டுபிடிக்க முடியல.” என்றான் கேலியாக.

நான் உங்களுக்கு மறந்திருச்சுனு மட்டும் தான் மனசுல வைச்சிருந்தேன். ஞாபகம் வந்திருந்தா என்னை தேடி வந்திருப்பிங்கனு நம்பினேன். ஆனா எங்கப்பா நடுவுல இவ்ளோ விளையாடி இருப்பாருனு தோணல. இருக்கு அவருக்கு.” என்றாள் சந்திரிகா. மீண்டும் மன்னிப்பை யாசித்தவன்,இப்ப ரெண்டு பேரும் சேர்ந்து போய் ஒரு ஷாக் குடுப்போமா?” எனக் கேட்டான்.

இல்ல சத்யா. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அப்பறம் பண்ணலாம். அதுக்குள்ள முடிக்க வேண்டிய வேலைலாம் கொஞ்சம் இருக்கு.” என்றாள் சந்திரிகா. இன்னும் அவள் முழுதாக சமாதானம் அடையவில்லை என்பதை உணர்ந்த சத்யா. ஆனால் அவள் பேசியதில் இருந்து நிச்சயம் பழைய சந்திரிகாவை மீட்டு விட முடியும் என நம்பினான்.

பிறகு,இந்த வீடு பிடிச்சிருக்கா?” எனக் கேட்க, “ம்ம் நல்லா இருக்கு யாரோடது?” எனக் கேட்டாள் சந்திரிகா. “நம்மளோடது.” என அழுத்தமாக சொன்னவன், “சரி வா கீழ எல்லாரும் நமக்காக காத்திருப்பாங்க.” என அவளை கீழே அழைத்து வந்தான். அதற்குள் அங்கே ஒரு விருந்தே தயாராக இருந்தது.

வாசனை பிடித்துக் கொண்டே வந்தவன், “அடடா. என மச்சினி எனக்காக விருந்தே தயார் பண்ணியாச்சா?என்றபடியே வந்து டேபிளில் அமர,யாரு. உங்க மச்சினி. உங்களுக்காக சமைச்சது இதுதான் டேஸ்ட் பண்ணிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.” என சுடுநீரை ஒரு தம்ளரில் ஊற்றி நீட்டினான் தரணி.

அச்சச்சோ. அப்ப நம்ப நிலைமைஎன மனதில் நினைத்த அசோக் முகத்தை மாற்ற,வேற வழி நீங்கதான் சமைக்கனும்.” என அவனது காதில் ஓதினாள் சைந்தவி. “உங்களுக்கு எப்படி தெரியும். அதுக்குள்ள நான் புரப்போஸ் பண்ணதை உங்ககிட்ட சொல்லிட்டாளா?என்றான் அதிர்ச்சியாக.

ஹலோ. இந்த மரியாதைல்லாம் வேணாம். எனக்கும் சஞ்சனா வயசுதான். அப்ப உங்க காதலை சொல்லிட்டீங்களா? செம. ஓகே சொல்லிட்டாளா?” எனக் கேட்டாள் சைந்தவி.அப்ப நானாதான் உளறிட்டனா? இன்னும் இல்லமா.” என்றான் அசோக்.

பாத்துக்கலாம் விடுங்க ப்ரோ. யாமிருக்க பயமேன்.” என அவனுக்கு நம்பிக்கை அளிக்க இருவருக்கும் இடையே ஒரு பாச பிணைப்பு உருவானது. சந்திரிகாவோ உதய்யிடம் சென்று, “சாரி அண்ணா. அப்பறம் ரொம்ப தேங்க்ஸ். நீங்க இல்லன்னா இன்னைக்கு என் சத்யா எனக்கு திரும்ப கிடைச்சிருக்க மாட்டாரு.

அன்னைக்கு உங்க வார்த்தைக்காகவும், சத்யாவோட உயிரை பாதுகாக்கவும் தான் நான் அவரை விட்டு விலகினேன். ஆனா இனிமேல் என்ன நடந்தாலும் நாம எல்லாரும் சேர்ந்தே இருக்கலாம். ப்ளீஸ்னா. உங்க தங்கச்சியை மன்னிக்க மாட்டீங்களா?என கெஞ்சினாள்.

அதற்குள் தரணி மூலமாக விசயம் அவனுக்கும் தெரிந்திருக்க சந்திரிகாவின் மேல் அதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை. சத்யாவுக்கு முன்பிருந்தே சந்திரிகாவை தெரிந்தவன் உதய். ஆனாலும் நண்பனின் இந்த நிலைக்கு தனது தங்கையென நினைத்தவளே காரணமாகி விட்டாலே என்ற கோபமே மேலோங்கி இருந்தது.

இப்போது அதுவும் விலகி விட ஆதரவாக அவளது தலையை வருடி விட்டவன், “நானும் சாரிடா. உன்னை சரியா புரிஞ்சுக்காம தப்பா நினைச்சுட்டேன்என்க, அங்கு ஒரு பாசமலர் ஓடியது.

அப்பா சாமி. போதும்பா. உங்க பாசமழையை லாம் கொஞ்சம் நிறுத்திட்டு, சோத்த கண்ணுல காட்டுங்க.” என சைந்தவி கூறவும், சந்திரிகா தானே பரிமாறுவதாக எடுக்க, எல்லாரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம் எனக் கூறி அவளையும் அமர வைத்துக் கொண்டு, கடையில் வாங்கிய உணவை அனைவரும் சிரித்து கதை பேசியபடியே சாப்பிட்டனர்.

ஆனால், அந்த நொடி மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தாலும், நிறைய தீர்க்க வேண்டிய பிரச்சனைகளும் இருக்கிறது என்பதும் எல்லாருடைய மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்