647 views

 

        சத்யா இப்போதும் அதே பழைய சத்யாவாக தான் உன் முன்னால் இருக்கிறேன் என்ற வார்த்தைகளில் உள்ளம் மகிழ்ந்தாலும், அதை அனுபவிக்க அவளால் முடியவில்லை. “எப்ப இருந்து இந்த நாடகம். உங்களுக்கு நியாபகம் வரலங்கறது பொய்யா. இல்ல மறந்ததே நாடகம்தானா.” என்று மட்டும் கேட்டாள்.

அதன்பிறகு அவன் வாழ்வில் சந்திரிகா தொலைத்த பக்கங்களை அவனே விளக்கினான். “ஆக்ஸிடண்ட் ஆனது உண்மைதான். அதுல பழைய நியாபகங்கள் மறந்து போனதும் உண்மைதான். அப்ப எனக்கு என்ன பண்றதுனு தெரியல. உதய்தான் எல்லாத்தையும் பாத்துக்கிட்டான்.

இங்க இருந்தா இன்னும் மனநிலை மோசமாதான் இருக்கும்னு டாக்டர் சொன்னதை நம்பி, ஆசிரமம் மூலமாகவே கோயம்புத்தூர்ல இருக்கற ஒரு கல்லூரிக்கு மாற்றல் வாங்கி என்னையும் அங்க கூட்டிட்டு போனான். ஒரு வருஷம் கிட்டத்தட்ட எனக்கு நியாபகம் எதுவும் வரல.

அதுக்கப்பறம் மங்கலா சில நினைவுகள் வர ஆரம்பிச்சதால, தலைவலி வந்து மறுபடி ஆஸ்பிட்டல் போனோம். அங்க ட்ரீட்மெண்ட் எடுத்து பழைய நினைவுகள் எல்லாம் மொத்தமா திரும்பி வந்தப்ப, என் மனசுல இருந்தது உன் முகம் தான் சூர்யா. நான் இல்லாம நீ எவ்ளோ தவிச்சு போயிருப்ப. உன்னை போய் நான் எப்படி மறந்தேனுல்லாம் நினைச்சு நினைச்சு என்னையே காயப்படுத்திக்க தோணுச்சு.

எப்படியாவது உன்ன பார்க்கனும்னு உதய்கிட்ட சொல்லி நானும், அவனும் மறுபடி சென்னைக்கு வந்தோம். ஆனா, நீ பாரீன் போய்ட்ட. அப்ப நம்ப ஃப்ரண்ட்ஸ் யார்க்கிட்டயும் உன்ன பத்தின டீடெல்ய்ஸ் கிடைக்கல. வேற வழியே இல்லாம உங்க அப்பாவை தேடி போனோம்என்றவனின் முகம் அன்றைய நினைவில் வாடியது.

அப்போது சந்திரிகா, “நானே கேட்கனும்னு நினைச்சேன். உங்களுக்கு எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு. எங்க அப்பாவும், அண்ணாவும் எப்படி அங்க வந்தாங்க?” எனக் கேட்டாள். “அன்னைக்கு செமஸ்டர் முடிஞ்சதால எல்லாரும் சாப்பிட போனோம். நான் பாதியிலயே வெளில வந்தேன்.

ரோடு கிராஸ் பண்ணும்போது எதிரில ஒரு லாரி வேகமா வந்தது. கடைசி நேரத்தில தான் பார்த்து பின்னாடி வந்தேன். ஆனா லாரி டிரைவர் குடிச்சிருப்பான் போல. கண்ட்ரோல் இல்லாம தான் லாரி வந்தது. நான் ஓரமா வந்தும் கூட என்னை மோதிடிச்சு. நான் கீழ விழுந்த இடத்துல ஒரு பெரிய கல் இருந்தது. அதுல மோதினதுனால மயக்கம் வந்திருச்சு.” என்றான்.

அப்ப எங்க வீட்ல இருந்து எப்படி வந்திருப்பாங்க.” என இவள் யோசிக்க, “எனக்கு தெரிஞ்சு என்னை ஃபாலோ பண்ண ஆள் போட்டுருக்கனும். அவன் குடுத்த இன்பர்மேஷன்ல தான் அவர் வந்திருக்கனும்என்றான் சத்யா. “யாருக்கு தெரியும். இவரே கூட ஆள் வைச்சு அடிச்சிருக்கலாம். நீங்க முடியாம இருந்தப்ப கூட, உங்கள ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டிதானே என்னை வெளிநாடே அனுப்பினார்என்றாள் வேதனையாக.

இல்லடி. நடந்த ஆக்ஸிடென்ட்ட உங்க அப்பா யூஸ் பண்ணிக்கிட்டார். மத்தபடி அவருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைஎன்றான் சத்யா. மனதுக்குள் தனது தந்தை கொலை செய்யும் அளவு இறங்கி விடவில்லை என்ற நிம்மதி படர்ந்தாலும்அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?என சந்தேகமாகவே சந்திரிகா கேட்க,

அது உங்க அப்பாவே சொன்னார்.” என்றவன் அதன்பின் மௌனமாகி விட்டான். “நீங்க வந்து அப்பாவை பார்த்துருக்கீங்க. ஆனா என்ன தேடி அங்க வரல. என்னையை காண்டாக்ட்டும் பண்ணல. அங்க இருந்த வரை, என்னை பார்க்கறது முடியாம போயிருக்கலாம். எங்க அப்பா கூட தடுத்திருக்கலாம். ஆனா இந்த நாலு வருஷத்துல ஏன் ஒருமுறை கூட பார்க்க வரல.

திரும்ப நாம சந்திச்சதுக்கு அப்பறமும் ஏன் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல. அப்ப நடுவுல ஏதோ நடந்திருக்கு. சொல்லுங்க.” என சந்திரிகா கேட்ட போது சத்யா திரும்பி நின்று கொண்டிருந்தான். “சொல்லுங்க சத்யா.” எனக் கேட்க, அவன் மௌனமாக இருக்கவும் அவனது தோளை தொட்டு திருப்ப அவனது கண்களில் நீர் நிறைந்திருந்தது.

அவனது அழுகையை தாங்க முடியாதவள்,என்னாச்சு சத்யா.” என மென்மையாக கேட்க, அவனோ அவளை அணைத்துக் கொண்டு, “என்ன கேட்காத சூர்யா. நான் பாவி. நீ என்மேல வைச்ச காதலுக்கு கொஞ்சம் கூட நான் தகுதியே இல்லாதவன்.

என் வாயால அதை சொல்ல முடியாத அளவு நான் உன்னை உன் காதலை புரிஞ்சுக்காம சந்தேகப்பட்டுட்டேன். ஆம் சாரி. உனக்கு நான் வேண்டாம். நீ சந்தோஷமா இருக்கனும்.” எனக் கூறினான். அவனை அமைதிப்படுத்தியவள், என்ன நடந்ததுனு சொன்னாதானே தெரியும்.” என அவனை ஊஞ்சலில் அமர வைத்தாள்.

அதே நேரம்,டேய் சத்யா. இங்க என்னடா பண்ற?எனக் கேட்டபடியே, உதய் உள்ளே வந்தான். இருவரும் சேர்ந்திருப்பதை பார்த்ததும் கோபம் தலைக்கேற, சந்திரிகாவிடம்,ஹேய். எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டியா? சத்யாகிட்ட நெருங்கற வேலை வைச்சுக்காதன்னு அன்னைக்கு தானே சொன்னேன்.” என திட்டினான்.

உடனே, “டேய். அமைதியா இருடா. நான்தான் அவளை இங்க வர சொன்னேன். அவ நீ நினைக்கற மாதிரி இல்லைஎனச் சொல்ல,என்னடா இல்லை. உனக்கு இவளோட நியாபகம் மறந்து போன கொஞ்ச நாள்லயே வேற ஒருத்தனோட பழகுனவ தானே இவ. இப்ப கூட நீ திரும்பி வந்ததும் ஒரு நாளாச்சும் உன்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டாளா யார்க்கிட்டயாவது? எப்படியும் உன்ன ஏமாத்தி, இன்னொரு ஆளும் கிடைச்சாச்சு.

அவனையாவது ஏமாத்தாம கல்யாணம் பண்ணிட்டு போக வேண்டியது தானே.” என வார்த்தைகளை இரைத்தான். சந்திரிகா உதய் பேசியதில் நிலை குலைந்து போய் அமர சத்யாவோ,வாயை மூடுடா.” என கையை ஓங்கியிருந்தான்.

அதில் அதிர்ந்த உதய், “எத்தனை நாள் இவ நினைப்பால நீ சோறு தண்ணி இல்லாம கிடந்திருப்ப. இப்ப இவளுக்காக என்னையைவே அடிக்க வந்துட்டல்ல.” என கூறியதில் கையை கீழே இறக்கினான் சத்யா.

அவன் கை ஓங்கும் போதே அசோக்கும் அங்கு வந்திருக்க பதறியவன் வேகமாக இருவருக்கும் இடையில் வந்து,டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டான். இங்கு எதற்கு வந்திருக்கிறோம் என யோசித்தவாறே பின்னால் வந்த சஞ்சனா தனது தமக்கை அங்கு இருப்பதை பார்த்து ஓடி வந்தாள்.

என்னவோ போல அமர்ந்திருந்த தமக்கையை கண்டதும், “அக்கா. என்னாச்சுக்கா. ஏன் ஒரு மாதிரி இருக்க?எனக் கேட்டாள். சஞ்சனாவை பார்த்ததும், “என்னையை கூட்டிட்டு போறீயா. டிரைவ் பண்ண முடியும்னு தோணல.” என்றாள் சந்திரிகா.

அவளது வார்த்தைகளை கேட்டதும் பதறி போய் அவளது அருகில் கீழே அமர்ந்த சத்யா,உதய் பேசனதெல்லாம் மனசில வைச்சுக்காத சூர்யா. ப்ளீஸ். நான் பண்ண தப்புக்கு நீ என்ன தண்டனை வேணா குடு. உங்கப்பா பேச்சை நான் நம்பி இருக்க கூடாதுதான். ஆனா உன்ன மாதிரியே நானும் கஷ்டம் தான் பட்டேன்.

என்ன விட்டு மட்டும் போய்டாத. மறுபடியும் நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு பார்க்க முடியல.” என்றான் சத்யா. “என்ன நடக்குதுன்னு யாராவது புரியற மாதிரி சொல்றீங்களா? சந்திரிகாவை உனக்கு அப்ப முன்னாடியே தெரியுமா?” எனக் கேட்டான் சத்யாவிடம், அசோக்.

ஆமா காலேஜ் படிக்கும் போதே ரெண்டு பேரும் லவ்வர்ஸ். ஒரு ஆக்ஸிடெண்ட்ல அக்காவை மாமா மறந்ததால பிரிய வேண்டியதாகிடுச்சு. அவ்ளோதான் தெரியும். ஆனா இங்க நடக்கறத பார்த்தா மாமாக்கு நியாபகம் வந்து ரொம்ப நாள் ஆச்சு போலஎன சத்யாவை குற்றம் சாட்டும் தொணியில் பார்த்தவாறே அசோக்கிடம் கூறினாள்.

அப்பறம் வேற என்ன பிரச்சனை. நீ ஏண்டா இவ்ளோ கோவமா இருக்க?” என உதய்யிடம் கேட்டான் அசோக். “அத நான் சொல்றேன்.” என்றபடியே அங்கு சைந்தவியுடன் வந்து சேர்ந்தான் தரணி. நேராக சத்யாவிடம் சென்றவன், சாரி புரோ. இன்னேரத்துக்கு சமாதானம் பண்ணிருப்பிங்கன்னு நெனைச்சு இவங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு இங்க வரவைச்சேன்.

ஆனா இவங்க எல்லாம் பூஜை வேளை கரடி மாதிரி வந்து மொத்தமும் ஸ்பாயில் பண்ணிட்டாங்க. சாரிஎன்றான். பிறகு அனைவரிடமும், “ஆக்ச்வலி தப்பு சத்யா மேலையும் இல்ல, சந்தும்மா மேலயும் இல்ல. எல்லாமே அங்கிளோட பிளான் மட்டும் தான்.

சத்யாவுக்கு நியாபகம் வந்து சந்திரிகா அப்பாவை பார்க்க வந்தப்ப சந்து எங்க வீட்ல இருந்தா. அந்த நேரம்தான் சந்துவோட பிரச்சனை எனக்கு தெரிஞ்சு அவளை ரிலாக்ஸ் பண்றதுக்காக வெளில கூட்டிட்டு வர ஆரம்பிச்சேன். ஆனா எங்களுக்கே தெரியாம சந்திரிகாவோட எல்லா நடவடிக்கையையும் அங்கிள் ஆள் வைச்சு ஃபாலோ பண்ணியிருக்காரு.

நாங்க சேர்ந்து வெளில போறதெல்லாம் ஃபோட்டோ எடுத்து அவன் அங்கிளுக்கு அனுப்பி இருக்கான். சத்யா தேடி வந்தப்ப அதை காண்பிச்சு,என் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்த்தாச்சு. ஏதோ வயசுக் கோளாறுல உன்கிட்ட பழகியிருக்கா. இப்ப பாரு நீ இல்லன்னு உடனே அவளோட வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டா.

கூடிய சீக்கிரமே கல்யாணம். கண்டிப்பா உனக்கு பத்திரிக்கை அனுப்பறேன். உன்ன கொல்லனும்னு நான் இது வரை நினைச்சதே இல்ல. என் பொண்ணு வாழ்க்கையில நீ இருக்க கூடாது அவ்ளோதான். இப்பயும் நீயா விலகிட்டா நல்லது. இல்லன்னா அன்னைக்கு சாதாரணமா நடந்த ஆக்ஸிடென்ட வைச்சு என் பொண்ணை நம்ப வைச்ச மாதிரி என்ன வேணா பண்ணுவேன்.

பாரு அவ நீ இல்லாம எவ்ளோ சந்தோஷமா இருக்கா. உன்னை கல்யாணம் பண்ணி அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாடி ஒரு பிச்சைக்கார வாழ்க்கை வாழ்வாளா? இல்ல தரணீந்தரன் மாதிரி, ஒரு கோடீஸ்வரன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவாளா? அவளுக்கு புரிஞ்சிருச்சு. உனக்கும் புரிஞ்சு நீயா விலகிட்டா நல்லா இருக்கும்.”

அப்படீன்னு சொன்னதோட அந்த ஃபோட்டோஸ்ஸையும் காட்டியிருக்காரு. அதனால வேற வழி இல்லாம உதய்யும், சத்யாவும் சந்திரிகாவை தப்பா நினைக்கற மாதிரி ஆகிடுச்சு.” என்றவன்,

உதய்யிடம் சென்று,ஆனா அங்கிள் சொன்னதெல்லாம் பொய். இந்த நிமிஷம் வரை சந்து சத்யாவை மட்டும் தான் விரும்பறா. அதுதான் உண்மை. அவர் சொன்னதெல்லாம் உண்மையா இருந்திருந்தா எப்பவோ சந்திரிகாவுக்கும், எனக்கும் கல்யாணம் முடிஞ்சிருக்கும்ல. ஏன் இன்னும் கல்யாணம் ஆகாம இருக்குனு யோசிங்க. எப்பவுமே எனக்கு இவங்க மூணு பேருமே ஒன்னுதான்.” என்றான் மூன்று பெண்களையும் காட்டி.

பிறகு சத்யாவிடம், “நாங்க கீழ இருக்கோம் புரோ. எப்படியாவது சமாதானம் பண்ணுங்க.” என்றவன்,மத்த டவுட்லாம் நாம கீழ போய் பேசலாம் வாங்க.” என அவர்கள் இருவரையும் தனியே விட்டு விட்டு மற்றவர்களுடன் கீழே இறங்கினான்.

நாம உள்ள போய் பேசலாம். ப்ளீஸ்.” என சத்யா அழைக்க, அவனை முறைத்தவாறே கீழே இறங்க போனவளை, சட்டென அலேக்காக தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்று கதவை சாத்தியவன், மெதுவாக அவளது அருகில் சென்றான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்