808 views

 

              மருத்துவமனையில் சஞ்சனா தனது அறையில் இருக்க அவளை தேடி வந்தான் அசோக். “ஹாய் சஞ்சனா. எப்படி இருக்க?” என்றபடியே அசோக் வர, “நல்லாருக்கேன் அசோக். என்ன திடீர்னு இந்த பக்கம் காவல்துறை காத்து வீசுது. எனி பிராப்ளம்?” எனக் கேட்டாள்.

“ஏதாவது பிரச்சனை இருந்தாதான் வரனுமா என்ன? நான் உன்னை பார்க்க தான் வந்தேன்.” என்றான் அசோக். “ஓ ஓகே ஓகே. என்ன விசயம் சொல்லுங்க?” எனக் கேட்டாள் சஞ்சனா. “நாளைக்கு நீ ஃப்ரீயா. என்கூட கொஞ்சம் வெளில வர முடியுமா?” எனக் கேட்டான் அசோக்.

சஞ்சனா, “எங்க” எனவும், “ம்ம். நாளைக்கு சண்டே தானே. பவித்ராவை போய் பார்த்துட்டு வரலாம்னு நினைச்சேன். அதான் நீயும் வந்தா அவ சந்தோஷமா ஃபீல் பண்ணுவான்னு நினைச்சேன்.” என அசோக் கூறவும், “அட. நானே நாளைக்கு அந்த பிளான் தான் வச்சிருந்தேன். கண்டிப்பா போகலாம். நான் நேரா அங்க வந்திடவா?” எனக் கேட்டாள் சஞ்சனா.

“இல்ல. நீங்க உங்க வீட்டு பக்கத்துல இருக்கற ஸ்டாப்ல வெயிட் பண்ணுங்க. நானே வந்து கூப்பிட்டுக்கறேன். உங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லையே.?” என அசோக் கேட்டான். “அதெல்லாம் ஒன்னுமில்ல. நான் ஒரு ஒன்பது மணிக்கு ரெடியானா போதும்ல.” எனக் கேட்டாள் சஞ்சனா.

“தாராளமா. ஓகே பாய். நாளைக்கு பார்க்கலாம் என்ற அசோக் விடைபெற்று சென்றான். மறுநாள் காலையில் எப்போதும் விடுமுறை நாட்களில் எழுப்ப எழுப்ப தூங்கும் தங்கை, இன்று ஏழு மணிக்கே எழுந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டு சந்திரிகா என்னவென்று விசாரிக்க,

“அது இன்னைக்கு பவித்ராவை பார்க்க போலாம்னுக்கா. அவங்க வீடு இங்க இருந்து கொஞ்ச தூரம்ல. அதான் சீக்கரமா கிளம்பலாம்னு எழுந்துட்டேன்” என்றாள் சஞ்சனா. “ஓகே டா. எனக்கும் வெளில போற வேலை இருக்கு. நான் உன்னை டிராப் பண்ணிட்டு போறேன்.” என்றாள் சந்திரிகா.

“இல்லக்கா. என்ன அசோக் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டாரு. சோ நோ ப்ராப்ளம்” என்க, அவளை கேள்வியாக பார்த்தாள் சந்திரிகா. “அது வந்துக்கா. இரண்டு பேரும் பவியை பார்க்க தான் போறோம். ஏன் தனி தனியா போகனும்னு தான். வேற ஒன்னும் இல்ல.” என்றாள் அவசரமாக.

“ஹேய் லூசு. இதுக்கு நான் என்ன நினைக்க போறேன். அசோக்கோட நல்லா ராசி ஆகிட்ட போலனு நினைச்சேன். அவ்ளோதான். சரி நானும் போய் கிளம்பறேன்.” என்றவாறு குளியலறைக்கு சென்றாள். ஒன்பது மணிக்கு இருவரும் கிளம்பி வர, அப்போது தான் எழுந்து தோட்டத்திற்கு வந்தனர். தரணியும், சைந்தவியும்.

“ஹேய். எங்கள கழட்டி விட்டு தனியா புரோகிராமா.” எனக் கேட்டாள் சைந்தவி. “வேலை விசயமா தான் போறோம். மதியம் வந்திடுவோம்.” என்ற சஞ்சனா அனைவரிடமும் விடைபெற்று வெளியில் வர, அசோக் காத்திருந்தான். அவனோடு சென்று விட்டாள்.

சந்திரிகாவும் தனது காரில் ஏறி புறப்பட தரணி, “நீயும் போய் ரெடியாகு. நாமளும் வெளிய போலாம்.” என்றான் சைந்தவியிடம். சைந்தவி, “நான் சும்மா அவங்கள கிண்டல் பண்ணேன்னா. வெளிலலாம் வேண்டாம்.” என்க, “இல்ல. நெஜமாலும் கொஞ்சம் வேலை இருக்கு. கிளம்பு.” என்று விட சற்று நேரத்தில் அவர்களும் கிளம்பி வெளியில் வந்தனர்.

காரில் சென்று கொண்டிருந்த அசோக்கும், சஞ்சனாவும் மௌனமாகவே பவித்ரா வீடு வரை வந்தனர். இவர்களை கண்டதும் மகிழ்ச்சியடைந்த பவி துள்ளி குதித்தபடி, “அங்கிள், ஆன்ட்டி வாங்க. எப்படி இருக்கீங்க?” என வரவேற்க, பின்னாலயே அவளது அன்னையும், தந்தையும் வந்து வரவேற்றனர்.

சற்று நேரம் அவர்களோடு பேசியவர்கள் “நாம கார்டனுக்கு போகலாமா?” எனக் கேட்டு பவித்ராவை வெளியில் அழைத்து வந்தனர். கார்டனில் பவித்ரா ரகுவை பார்க்க அவனிடம் சென்று பேசியதோடு இவர்களுக்கும் அறிமுகம் செய்தாள். அப்போது பவியை சஞ்சனாவிடம் விட்டு விட்டு, யாருக்கும் தெரியாமல் ரகுவை சங்கேத மொழியில் உள்ளே அனுப்பினான் அசோக்.

இவனும் பவித்ரா வீட்டுக்கு போவது போல ரகுவின் வீட்டிற்குள் நுழைந்தவன் அவனிடம் சில தகவல்களை பெற்றுக் கொண்டு மீண்டும் பவித்ரா வீட்டுக்கு வந்து விட்டான். பவித்ராவின் தந்தையிடம், “குற்றவாளியை இன்னும் பிடிக்கலன்னு தப்பா எடுத்துக்காதீங்க. இன்னும் டைம் வேணும்னு தோணுது.” என்றான்.

“அப்படியெல்லாம் இல்ல சார். எப்படியும் அவனுக்கு நீங்க தண்டனை வாங்கி தருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா பாப்பா பேர் மறுபடியும் வெளில வந்தர கூடாது சார்.” என அவர் கூறவும், “இப்ப வரை உங்க பாப்பாவோட உண்மையான பேர் யாருக்கும் தெரியாது. ஏன் எனக்கு கூட. அது இனிமேலும் தெரியாம பாத்துக்கறது என்னோட கடமை.” என்றான் அசோக்.

அவர் ஏதோ சொல்ல வர, “இல்ல சார் பேர் தெரிஞ்சுக்க எந்த அவசியமும் இல்ல. அவ எங்களுக்கு பவித்ராவாகவே இருக்கட்டும்.” என்றான் அசோக். சஞ்சனாவும் அதற்குள் வீட்டிற்கு வந்து சேர பவியை உள்ளே அனுப்பியவள், “ஷீ இஸ் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட். நீங்க இனிமே பவியை பத்தி பயப்பட அவசியமே இல்ல.” என நம்பிக்கை கொடுத்தாள்.

அதன்பின்பு இருவரும் அங்கிருந்து கிளம்பினர். வரும் வழியிலே ஒரு பார்க்கின் முன் அசோக் தனது காரை நிறுத்தினான். “சஞ்சனா. உன்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசனும். கொஞ்ச நேரம் உள்ள போயிட்டு அப்பறம் போகலாமா?” எனக் கேட்டான் பார்க்கை காட்டி. சரி எனவும், இருவரும் இறங்கி உள்ளே சென்று ஒரு மர நிழலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தனர்.

சஞ்சனா அமர்ந்ததும் எழுந்த அசோக் அப்படியே நடக்க ஆரம்பித்தான். அவன் ஏதோ டென்ஷனில் இருக்கிறான் என தெரிய, இவளும் சற்று நேரம் அமைதியாக இருந்தாள். அவன் மவுனம் கலைப்பதாக இல்லை எனவும், “சரி நீங்க அப்படியே பார்க் ஃபுல்லா நடந்துட்டு வாங்க. நான் ஆட்டோ பிடிச்சு கிளம்பறேன்.” என்றாள் சஞ்சனா.

“ஹேய். இரு. அதெல்லாம் இல்லை. உன்கிட்ட ஒன்னு சொல்லனும். ஆனா எப்படி ஆரம்பிக்கறதுனு தான் தெரியல. அதான்.” என இழுக்க, “பரவால்ல சொல்லுங்க. என்னன்னு.” என ஊக்கினாள் சஞ்சனா. “அது வந்து. அதாவது. அது நான் உன்னை விரும்பறேன் சஞ்சனா. உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன். யெஸ் ஐ ஆம் டீப்லி லவ் வித் யூ.” என ஒரு வழியாக புரப்போஸ் செய்து விட்டான்.

சொல்லி விட்டு சஞ்சனாவின் முகம் பார்க்க, அவள் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள். “என்னாச்சு சஞ்சனா?” எனக் கேட்க, ஒரு முடிவுக்கு வந்தவளாக பேச ஆரம்பித்தாள். “ஐ ஆம் சாரி அசோக். ஏதாவது ஒரு விதத்துல உங்கள நான் டிஸ்டர்ப் பண்ற மாதிரி நடந்துருக்கேன். உங்கள நல்ல ஃப்ரண்டா தான் நினைச்சிட்டு இருந்தேன். உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல. சாரி.” எனவும் அவளை தடுத்தவன்,

“நீ சொல்ற மாதிரில்லாம் ஒன்னுமில்ல. எல்லா நேரங்கள்ளல்லயும் நீ இயல்பாகதான் இருந்த. அந்த குணம் தான் எனக்கு பிடிச்சிருந்தது. உன்னை பர்ஸ்ட் டைம் பார்த்தப்பவே மனசுக்குள்ள இவதான் உனக்கானவங்கற எண்ணம் வந்தது. ஆனா. அது காதலானான்னு என்னையே அனலைன்ஸ் பண்ணிக்கிட்டு தான் உன்கிட்ட சொல்றேன்.

நீ உடனே உன் முடிவை சொல்லனும்னு அவசியம் இல்ல. பொறுமையா யோசிச்சு முடிவு பண்ணு. உன் பதில் எதுவா இருந்தாலும் நான் அக்செப்ட் பண்ணிக்கறேன். எந்த விதத்திலயும் உன்ன போர்ஸ் பண்ண போறதில்லை. என்னோட லைஃபை உன்னோட ஷேர் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்னு தோணுச்சு.

அதே எண்ணம் உனக்கும் வந்தா தான் நீ இதை அக்செப்ட் பண்ணிக்கனும். அதுதான் சரி. வா கிளம்பலாம்.” என அவளை பேச விடாமல் கூட்டிக் கொண்டு வெளியில் வந்தான். அப்போது அவனுக்கு ஒரு ஃபோன் வர, அதை எடுத்து பேசியவன் மறுமுனையில் என்ன கூறினார்களோ, “நாங்க உடனே வரோம்.” என்று சஞ்சனாவிடம் விசயம் சொல்லி அவளையும் கூட்டிக் கொண்டு கிளம்பினான்.

           வீட்டில் இருந்து சந்திரிகா கிளம்பும் போது அவளுக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்தது. சத்யாதான் அவன் இருக்குமிடத்தை அனுப்பி வைத்திருந்தான். சென்னையை தாண்டி ஒரு இருபது கிலோ மீட்டர் தொலைவில் காட்டியது அந்த இடம். கூகிள் வரைபடத்தின் உதவியோடு சென்று பார்த்த போது அங்கு ஒரு தென்னந்தோப்பு தான் இருந்தது.

அவனுக்கு அழைப்பு விடுத்து இங்குதானா எனக் கேட்க, அவன் அதை தாண்டி உள்ளே வர சொன்னான். சற்று தூரம் நடந்ததுமே பெரியதும் இல்லாமல், சிறயதுமாகவும் இல்லாமல் தோப்பிற்கு நடுவே ஒரு வீடு தெரிந்தது.

அதனை சுற்றி பல வித பூச்செடிகளும், காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு, பல வித வண்ணங்களும், மணங்களும் அந்த இடத்தை நிறைத்திருக்க, நடுவில் வெள்ளை நிறத்தில் ஒரு வீடு இருந்தது. அந்த சூழலும், அழகும் சந்திரிகாவின் மனதை நிறைக்க, ‘ஆனால் ஆட்கள் யாரும் இருப்பதை போலவே தெரியவில்லையே.’ என யோசித்தாள்.

அவள் இறங்கி வரும் போதே அங்கு ஒரே ஒரு கார் மட்டும்தான் நின்றிருந்ததை கவனியாமல் போனாள். வீட்டிற்கு வெளியே வாசலில் நின்று “சத்யா சார்.” என விளிக்க, “உள்ள வாங்க.” என குரல் மட்டும் வந்தது. வாசலில் இரு புறமும் திண்ணைகள் வைத்து கட்டப்பட்டிருக்க உள்ளே இரண்டு அறைகள் மட்டும் இருக்க, உள்ளிருந்தே மாடிக்கு செல்லுமாறு படிகள் வைக்கப்பட்டிருந்தது.

அவள் உள்ளே சென்றதும் மாடிக்கு வாங்க என குரல் வர படிகளில் ஏறினாள். மேலேயும் கீழே இருந்தது போலவே மாடியில் சற்று வித்யாசமான அமைப்பில் இரு அறைகள் வைக்கப்பட்டு நடுவே சிறிது இடம் விடப்பட்டு பால்கனி போன்ற தோற்றம் இருந்தது.

ஒரு அறை பூட்டப்பட்டும் மறு அறை திறக்கப்பட்டும் இருக்க, திறந்திருந்த அறையை நோக்கி சென்றாள். உள்ளே நடுநாயகமாக மறுபுறம் திரும்பி சத்யா மட்டும் நின்றிருக்க அந்த அறை முழுவதும் அவளது புகைப்படங்கள் நிறைந்திருந்தன.

இவளது சந்தடி கேட்டதும் சத்யா திரும்ப அவனுக்கு நேராக, அறையின் நடுவே அவர்கள் கல்லூரி காலத்தில் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் சற்று பெரிதாக பிரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. இரு கைகளையும் விரித்து அவளை அருகே சத்யா அழைக்க, சந்திரிகாவோ அவனை புரியாமல் பார்த்தாள்.

“சூர்யா. என்கிட்ட வர மாட்டியா?” என சத்யா கேட்க, பல வருடங்களுக்கு பின் அவளுக்கு கேட்ட, “சூர்யா” என்ற அழைப்பு அவள் உயிர் வரை சென்று தீண்டியது. மறுகணமே எதை பற்றியும் யோசியாமல் அவனிடம் ஓடியவள், அவனை அணைத்துக் கொள்ள விழிகளில் கண்ணீர் அருவியென வந்துக் கொண்டிருந்தது இருவருக்கும்.

பல வருடங்களாக பிரிவுத்துயரை தீர்க்கும் வகையில் அரு மருந்தாக அந்த அணைப்பு இருவருக்கும் இருந்தது. சில நிமிடங்கள் நீடித்த அந்த நிலையில் இருந்து விலக மனமின்றி இருவரும் விலகினர். அவளை அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தவன், கீழே சென்று இருவருக்கும் ப்ளாக் டீ போட்டு எடுத்து வந்தான்.

மறுப்பின்றி அதை குடித்து முடித்தவள் கப்பை கீழே வைக்கவும், “ஐ ஆம் வெரி சாரிடி. லவ் யூ சூர்யா. மிஸ் யூ ஆல் சோ.” என்றான் சத்யா. அவளோ எந்த பதிலும் பேசாமல் இருக்க, “உனக்குள்ள நிறைய கேள்விகள் இருக்கும்னு எனக்கு தெரியும். எல்லாத்துக்கும் நான் பதில் சொல்ல தயாரா இருக்கேன்.

அதே சமயம் உன் மேல நான் வைச்ச காதல்ல ஒரு சதவீதம் கூட குறையாம, உன்னோட சத்யாவா தான் இப்பவும் உன் முன்னாடி இருக்கேன். அதை மட்டும் முதல்ல நியாபகம் வச்சுக்கோ” என்றவன், அவளை கூட்டிக் கொண்டு பால்கனியில் மாட்டியிருந்த ஊஞ்சலில் அமர வைத்து எதிரே ஒரு இருக்கையை போட்டு அமர்ந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்