1,225 views

அன்று காலை அந்த சென்னை மாநகர ஆட்சியர் அலுவலகமே பரபரப்பாக இருந்தது. இன்று புதிய ஆட்சியர் வருவதே அந்த பரபரப்பிற்கு காரணம். ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்த இருவர் பேசிக் கொண்டிருந்தனர்.

என்னப்பா, வரப் போறவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு பேசிக்கறாங்கஎன ஒருவர் கேட்க, மற்றொருவர், “ஆமாமா. நானும் அப்படிதான் கேள்விப்பட்டேன். இள வயசு ஆளுல்ல அதான் இப்படி. போக போக அவரும் நமக்கு ஏத்த மாதிரி மாறிடுவார்என ஆருடம் வேறு சொன்னார்.

மத்த மாவட்டம் மாதிரி சென்னையை டீல் பண்ணிட முடியாதில்ல. ஏகப்பட்ட பேர அட்ஜஸ்ட் பண்ணிதான் போகனும். பார்க்கலாம்” என பேசிக் கொண்டே இருவரும் நகர்ந்தனர்.

மற்றொருபுறம் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் இரு இளம் பெண்களில் ஒருத்தி, “வரப் போற கலெக்டர் செம்ம அழகா இருக்காருடி.” என்க. “நீ எங்கடி பார்த்த..?” எனக் கேட்டாள் மற்றொருத்தி. “அவரோட டீடெயில்ஸ் இருந்த ஃபைல்ல ஃபோட்டோ இருந்ததுஎன்றாள்.

ஆமா. அந்த பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோல உனக்கு என்ன தெரிஞ்சிருக்கும். வரட்டும் பார்த்துட்டு ஒத்துக்கறேன்என அவள் பேசிக் கொண்டிருக்க, இதற்கெல்லாம் காரணமானவனோ, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கால் டாக்ஸியில் வந்து இறங்கினான்.

வெல்கம் சார்என அவரை வரவேற்று உள்ளே கூட்டி சென்றார் துணை ஆட்சியர் வெற்றி வேலன். அலுவலகத்தின் முக்கிய அலுவலர்கள் மீட்டிங் ஹாலில் நிறைந்திருக்க, அவர்கள் நடுவில் பிரவேசித்தான். இன்று சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்கும் சத்யேந்திரன் ..எஸ்.

ஹாய் எவ்ரிபடி, குட்மார்னிங் டு எவ்ரிஒன். யாம் சத்யேந்திரன்“. என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், “என்னால முடிஞ்சவரை இந்த பொறுப்புக்கு சின்சியரா இருக்கனும்னு நினைக்கறேன். அதுக்கு உங்க எல்லாரோட சப்போர்ட்டும் எனக்கு தேவை. தேங்க்யூஎன்று முடித்து விட்டான்.

பிறகு தன் அறைக்கு வந்தவன் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டு, அலுவல் சம்பந்தமாக அன்றே ஒரு மீட்டிங்கையும் நடத்தி விட்டு அன்றைய பணியை முடித்தவன் தனக்கென கொடுக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்றான்.

சத்யேந்திரன் ..எஸ். முப்பதே வயதான இளம் ஆட்சியர்களில் ஒருவன். பட்டப்படிப்பை முடித்து, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி முதல் முயற்சியிலே தேர்ச்சி பெற்று இந்திய ஆட்சி பணியாளர்களில் ஒருவராக தேர்வாகியவன்

அழகிய மலைகள் சூழ்ந்தமலைகளின் இராணிஎன பெயர்பெற்ற இமயமலை சாரலில் அமைந்துள்ள முசோரியில் ஒரு வருடம் பயிற்சியினை முடித்து, பிறகு பயிற்சி பணிக்காக இரு வருடங்கள் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் உள்ள உக்குல் எனும் மாவட்டத்தில் பணிபுரிந்தான்.

அதன்பிறகு கடந்த நான்கு வருடங்களாக, உத்தரகாண்ட்டில் இருக்கும் அல்மோரா எனும் மாவட்டத்தில் பணியாற்றியவனுக்கு இப்போது சென்னையில் பணிமாறுதல் கிடைத்துள்ளது. இந்த குறுகிய காலத்திலே அவனது நிர்வாகத்திறனை பற்றி அனைவரும் பேசுமளவு சிறப்பாக நிர்வாகத்தை நடத்தி உள்ளான்.

உக்ருல் ஒரு அழகிய மலைபிரதேசமாக இருப்பதால் அங்கு பழங்குடிகள் மற்றும் மலைவாழ் மக்கள் நிறைந்த ஓரு கிராமப்புற பகுதியாக இருக்கிறது. அல்மோரா மாவட்டமும், பனியால் சூழ்ந்த மலை பகுதிகள் நிறைந்த பகுதி என்பதால் நகர்ப்புற பிரம்மாண்டங்கள் இன்னும் அவ்வளவாக சென்று சேரவில்லை.இந்த இரு பகுதிகளிலும் மக்களோடு கலந்து பணியாற்றியதால் மக்கள் மத்தியில் இவனுக்கு நல்ல பெயர் இருந்தது.

இதுபோல இல்லாமல் சென்னை முற்றிலும் நகர்புறமாக பகுதி. இவனது திறமைக்காக இந்த பணிமாறுதல் நடந்ததா அல்லது இவனை சோதிப்பதற்காக இவனுக்கு வேண்டாத சிலர் செய்த வேலையா என்பது தெரியவில்லை. எதுவாகினும் இந்த ஊர் அவனுக்கு முற்றிலும் பல மாறுபட்ட அனுபவங்களை வழங்க காத்திருக்கிறது.

           ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணி. செம்மோழி பூங்காவில் காத்திருந்தாள் சந்திரிகா. சற்று நேரத்தில் வந்து சேர்ந்தான் அஸ்வின். பொதுவான நல விசாரிப்புகளுக்கு பின் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தனர்.

சந்திரிகா, “ம்ம். சொல்லுங்க அஸ்வின். எதுக்கு என்ன பார்க்கனும்னு சொன்னிங்க.” எனக் கேட்க,நீங்கதான் சொல்லனும்என்ற அஸ்வின், “ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னிங்க. இல்ல என்னை ஏன் பிடிக்கலைன்னு சொன்னிங்கன்னு கேட்கனுமோஎன்றான் நேரடியாகவே.

அவளோ, “இங்க பாருங்க அஸ்வின். உங்களுக்கு எப்படி தகவல் வந்ததுன்னு எனக்கு தெரியாது. ஆனா நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லல. உங்களை பிடிக்கலன்னும் சொல்லல.” என்றவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

மேலும் தொடர்ந்தவள்,உங்க ஃபோட்டோவை கூட நான் பார்க்கல. இன்பேக்ட் நீங்க பார்க்கனும்னு சொன்னப்ப கூட உங்க பேரை கேட்டுதான் நீங்கதான் அவர் சொன்ன பையன்னு எனக்கு தெரியும். சோ, நான் உங்கள பிடிக்கல மாதிரி எதுவும் சொல்லல. அப்பறம் நான் எப்ப கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ண வேண்டியது நான் மட்டும்தான். கல்யாணம் வேணாம்னு நான் நினைச்சதே இல்லை. அதுல நான் தெளிவா இருக்கேன்.” என பதில் கொடுத்தாள்.

என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?” என அவன் கேட்க, “அதைதான் நானும் கேக்கறேன். என்ன காரணம். என்ன மேரேஜ் பண்ண ஓகே சொன்னதுக்குஎன எதிர்க் கேள்வி கேட்டாள். “என்ன ரீசன்னா. அம்மாக்கு பிடிச்சிருந்தது. அதான்எனும் போதே அவன் கண்களை பார்த்து பொய் என்றாள் இவள்.

அதில் ஒரு நிமிடம் அவன் தடுமாற, அவள், “எனக்கு தெரிய வேண்டியது உண்மை மட்டும்தான்.” என்றாள் கூர்மையாக. அவளே தொடர்ந்து, “அம்மாக்காக மட்டும்னா. இப்ப நாம இங்க நின்னு பேசிட்டு இருக்க மாட்டோம்னு நினைக்கறேன். வேண்டாம்னு சொன்னதும் அடுத்த வேலையை பார்க்க போயிருப்பிங்கஎன்றாள்.

அவளது புத்திசாலித்தனத்தை மெச்சியவன், “அங்க உட்கார்ந்து பேசலாமா.” எனக் கேட்டு அமரவும் செய்தான். சற்று தள்ளி அவளும் அமர, “ஆக்சுவலி உன்னை நான் முதன்முதலா பார்த்தது. நாலு வருஷம் முன்னாடி கனடால வைச்சு.” என்றபோது இவள் முகம் ஆச்சர்யத்தை காட்டியது. அதோடு அவன் ஒருமைக்கு தாவியதையும் இவள் குறித்துக் கொண்டாள்.

அவனது மனம் அன்றைய நாளுக்கு சென்றது. அஸ்வின் மாஸ்டர் டிகிரி படித்துக் கொண்டிருந்த சமயம் அது. ஒரு ப்ராஜக்ட் விசயமாக கனடா சென்றிருந்தான். வந்த வேலை முடிந்ததும் ஊர் சுற்றி பார்ப்பதற்காக நண்பர்களுடன் டோராண்டாவில் அமைந்துள்ள ரிப்ளே கடல் வாழ் உயிரினங்கள் பூங்காவிற்கு சென்றிருந்தான்.

அங்கிருந்த ஒரு நடந்து செல்லும் மீன் தொட்டியில் தானும் ஒரு மீன் என்பது போல மெதுவாக கால்களை வைத்து நடந்து கொண்டிருந்தாள் அவள் சந்திரிகா. அவள் கால்களுக்கடியில் மீன்கள் வந்து கடிப்பது போன்ற உணர்வினில் இறுக்கமாக இருந்த அவள் முகம் லேசான புன்னகையை சிந்தியது. ஏனேன்றே தெரியாமல் அதை புகைப்படம் எடுத்துக் கொண்டது அஸ்வினின் கைபேசி.

இவனை போலவே அவளும் தோழிகளுடனே ஊர் சுற்ற வந்திருப்பாள் போல. அதன்பிறகு அவர்கள் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு போகலாம் என முடிவு செய்ய, அதை அறிந்தவன் தன் நண்பர்களுடன் அவர்களுக்கு முன்பே அங்கு சென்று விட்டான். சற்று நேரத்தில் அவர்களும் அங்கு வந்து சேர அன்று முழுவதும் அவர்கள் பின்னே சுற்றி அவள் பெயர் சந்திரிகா. இந்தியாவை சேர்ந்தவள் என்று மட்டும்தான் அறிய முடிந்தது.

ஏனோ அவளிடம் சென்று பேச மனம் வரவில்லை. சற்று தூரத்தில் இருந்து அவளை ரசிப்பதையே விரும்பினான் அவன். ஆரம்பத்தில் சற்று கவலைக் கோடுகளோடு காட்சி அளித்த அவள் முகம் போக போக இயற்கையோடு இணைந்து மலர்ந்தது.

ஆயிரம் அடிகள் உயரத்தில் இருந்து நாலாப்புறமும் பரவி வெண் மேகங்களை துவைத்தது போல நுரைகளை பொழிந்து கொண்டிருந்தது நயாகரா அருவி. ஒருபுறம் கனடா எனும் பெரிய தேசத்தையும், மறுபுறம் அமெரிக்கா எனும் மாபெரும் தேசத்தையும் இணைக்கும் பாலமான அந்த நீர்வீழ்ச்சியை பார்க்க பார்க்க திகட்டவில்லை அனைவருக்கும்.

 இயற்கை பல அற்புதங்களை உள்ளடக்கியது. அதோடு இணைந்து கொள்ளும் போது அது இன்பங்களை நமக்கு வாரி வழங்குகிறது. அது போலதான் அன்று தன் மனமும் அனைத்து காயங்களையும் மறந்து இன்பத்தை ருசித்ததாக சந்திரிகாவிற்கும் தோன்றியது.

இவன் கனடா பற்றி பேசும்போதே இவள் மனமும் அந்த நாள் நினைவிற்கு சென்று விட்டது. “ம்ம். அப்பறம்என இவள் ஊக்க, “அப்பறம் என்ன. அதுக்கப்பறம் உன்னைய பார்க்கவே முடியல. உன்னை பத்தி எந்த டீடெயிலும் தெரியாது. அப்பப்ப உன் நியாபகம் வரும்போது உன் ஃபோட்டோவை எடுத்து பாத்துக்குவேன்.

அதுக்கப்பறம் ஒருமுறை நான் கனடா வந்தப்ப உன் அட்ரஸ் கூட கண்டுபிடிச்சுட்டேன். ஆனா நீ காலி பண்ணிட்டதா தகவல் வந்தது“. எனவும், “எஸ் அதுக்கப்பறம் நான் இந்தியா வந்துட்டேன்.” என்றாள் சந்திரிகா.

அப்பறம் உன்னை மறுபடி பார்த்தது அம்மா அனுப்பிய ஃபோட்டாலதான். ஏனோ உன்னை மிஸ் பண்ணிட கூடாதுன்னு தோனிச்சு. அதான் உடனே ஓகே சொல்லிட்டேன்என்றான் அஸ்வின்.

என்மேல இருக்கற ஒரு அட்ராக்ஷன நம்பியா, மேரேஜ் வரைக்கும் போனிங்க?” எனக் கேட்டாள் இவள். “அட்ராக்ஷன் னா இத்தனை வருஷத்தில உன் முகம் மறந்தே போயிருக்கும். இது கண்டிப்பா லவ்தான். நான் அதுல கான்பிரண்ட்டா இருக்கேன்என்றான் அஸ்வின்.

ஓகே. அன்ட் சாரி ஃபார் ஒன்திங். இது அப்பா பண்ண வேலையா இருக்கும்னு நான் உங்கள சந்தேகப்பட்டேன் அதுக்குஎனவும், “பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கறது அவ்ளோ தப்பான விசயமா என்ன?” என இவன் கேட்டான்.

அது கல்யாணமா இருந்தா தப்பில்லை. பிஸினஸ் டீலா இருந்தா தப்புதானே.” என்றவள், “இப்ப நீங்க ஒரு பெரிய வீட்டு பையன். உங்கப்பா ஒரு பிஸினஸ் மேக்னட். அதுனால அவர் ஒத்துக்கிட்டார். இதுவே ஒரு சாதாரண பேமிலில என்ன பொண்ணு கேட்டுருந்தா என்கிட்ட சொல்லி கூட இருக்க மாட்டார்தானே?” எனக் கேட்டாள்.

பொண்ணுக்கு ஒரு நல்ல லைப்ப குடுக்கனும்னு நினைச்சிருக்கலாம்என்றான் அஸ்வின். “ஓகே அஸ்வின். அதை விடுங்க. பட் நான் உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுக்கு நிறைய காரணம் இருக்கு. உங்களுக்கு என் மேல இருக்கறது ஒரு அட்ராக்ஷன்தான். இதை நீங்க ஈசியா கடந்திட முடியும். நாம நல்ல பிரண்ட்ஸா இருக்கலாம்.” என்றாள் சந்திரிகா.

அப்படி என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா.” என அஸ்வின் மீண்டும் கேட்க,அதை பத்தி சொல்லனும்னா என்னோட கடந்த கால வாழ்க்கையை பத்தி முழுசும் சொன்னாதான் உங்களுக்கு புரியும். இருந்தாலும் மேலோட்டமா சொல்றேன்என்றவள் சில விசயங்களை கூற, அவள் சொன்னதில் அதிர்ந்து போய் சில நிமிடங்கள் நின்றான்.

ஆனால் உடனே,பட் அதை நினைச்சு உங்கள் லைப்ப ஏன் நீங்க கெடுத்துக்கனும். உங்க பாஸ்ட் லைப் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லஎன்றான் அஸ்வின் தன்மையாகவே.

பாஸ்ட் மட்டுமில்ல பிரசன்ட், பியூச்சர் எல்லாமே ஒன்னுதான். அதை கடந்து வர என்னால முடியாது.” என கோபமாக சொன்னவள் அங்கிருந்து வேகமாக செல்ல, செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அஸ்வின்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
4
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்