412 views

 

              சத்யாவிடம் அசோக் தனது திட்டங்களை கூற அவனோ, “நீ எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்கனும். பேசாம அவனை அரஸ்ட் பண்ணி என்கொயரி பண்ணி உன் பாணில விசாரிச்சா பிராப்ளம் சால்வ் தானே” எனக் கேட்டான்.

“இல்ல பங்கு. அப்படி பண்ண முடியாது. அவனை அரஸ்ட் பண்ண அடுத்த செகன்ட்டே அவன் வெளில வந்திடுவான். அப்படி ஆகக்கூடாதுன்னா, அவன் மேல ஸ்ராட்ங்கான எவிடென்ஸ் வேணும். அதுக்கு தான் இந்த பிளான்” என விவரிக்கவே சத்யாவிற்கும் அது சரி எனப்பட்டது.

“சரி ஓகே உனக்கு எந்த டைம்ல ஹெல்ப் வேணும்னாலும் கேளு. நான் அரென்ஜ் பண்ணி தரேன்.” என்றான் சத்யா. “கண்டிப்பாடா. அப்பறம் உதய்க்கு டிரான்ஸ்பர் ஆகிருக்காம். சீக்கிரமே வரானாம். உன்கிட்ட சொன்னானா.” என அசோக் கேட்க, “ம்ம் சொன்னான்டா. நான் முன்னாடியே லீவ் போட்டுட்டு இங்க வந்திரு. அப்பதான் ஜாயின் பண்ண சரியா இருக்கும்னு சொன்னேன்.” என்றான் சத்யா.

அசோக், “ம்ம். ஆமாடா நாமெல்லாம் ஒன்னா இருந்தே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு.” என்க, “ம்ம் சீக்கிரம் வந்திடுவான்டா. ஆமா நீ வீட்டுக்கு ஃபோன் கூட பண்றதில்லையாமா. ஆன்ட்டி ஃபோன் பண்ணாங்க. ஏண்டா இப்படி பண்ற?” என சத்யா கேட்டான்.

“ஆமாடா. ஃபோன் பண்ணாலே, எப்ப வீட்டுக்கு வர, உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா எனக்கு நிம்மதி ஆகிடும். மிருணாவும் எம்புட்டு நாளா உன்ன நினைச்சிட்டே இருப்பான்னு. இதே புலம்பல் தான்டா. எனக்கு மனப்பாடமே ஆகிடுச்சு. தெரியுமா?” என சலித்துக் கொண்டான் அசோக்.

“ஆன்ட்டி சொல்ற மாதிரி நீ கல்யாணம் பண்ணிக்கலாம்ல டா. மிருணாவை உனக்கு பிடிக்காதா?” எனக் கேட்டான் சத்யா. “ஹேய் நீ வேறடா. அவ சின்ன பொண்ணுடா. இப்பதான் காலேஜ் செகண்ட் இயர் போறா. என் வயசுக்கும், அவ வயசுக்கும் எப்படி செட் ஆகும். அவங்க தான் புரியாம பேசறாங்க.” என்றான் அசோக்.

“அப்படியா இது எனக்கு தெரியாதே அத்தை பொண்ணை கட்டிக்க சொல்லுன்னு ஆன்ட்டி சொல்றப்ப உனக்கு ஈக்குவல்னு நினைச்சேன்டா. சரி நீ முடியாதுனு சொல்ல வேண்டியது தானே?” என சத்யா கேட்க,

“சொல்லலாம்டா. ஆனா காரணம் மிருணாதான். எங்க அப்பா இறந்ததுக்கு அப்பறம் எங்க அத்தை வீடு எங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்காங்கடா. அத்தையும், மாமாவும் இல்லன்னா, நான் இன்னைக்கு ஐ.பி.எஸ் பாஸ் பண்ணி இருக்க மாட்டேன். அத்தையையும், அம்மாவையும் பார்த்தா எல்லாரும் சகோதரிகள்னு தான் நினைப்பாங்க.

அவ்வளவு ஒற்றுமையா இருப்பாங்க. அத்தைக்கு மிருணா ஒரே பொண்ணு. என்னதான் பாசமா இருந்தாலும் கிராமத்துல இருக்கறதாலயோ என்னவோ, பொண்ணுங்க படிக்கறது அனாவசியம்னு தான் நினைக்கறாங்க. அவ டென்த் முடிச்சப்ப எனக்கு பர்மனட் போஸ்டிங் வந்தது. உடனே எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடனும்னு ஒரே ரகளை.

அப்பறம் நான் போய் டுவெல்த் முடிக்கட்டும் எதுனாலும் பேசிக்கலாம்னு சொல்லிட்டு வந்தேன். ப்ளஸ் டூ முடிச்சு இதே பிரச்சனை வந்தப்ப மிருணா என்கிட்ட வந்து அழுதா. “எனக்கு படிக்கனும் மாமா. எப்படியாவது ஹெல்ப் பண்ணுங்கன்னு” சொல்றப்ப எனக்கு என்ன பண்றதுனே தெரியல.

அப்பறம் அவளே, “நீங்க கல்யாணம் வேணாம்னு சொன்னா, அம்மா உடனே கோவிச்சுக்கிட்டு வேற இடத்துல ஏற்பாடு பண்ணுவாங்க. நான் படிக்கற வரைக்கும் ஒத்துக்கற மாதிரி சமாளிங்கன்னு” சொல்றா. நானும் வேற வழி இல்லாம ஆமானும் சொல்லாம, இல்லன்னும் சொல்லாம அப்படியே சமாளிச்சிட்டு இருக்கேன்.

எல்லாம் அவ படிப்பு முடியற வரைதான். அதுக்கப்பறம் உண்மையை சொல்லிடனும். எங்க அத்தைகிட்ட இப்படி இருக்கறது கஷ்டமாதான் இருக்கு. ஆனா நன்றிக்கடனுக்காக விருப்பம் இல்லாத பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும். இரண்டு பேருக்கும் விருப்பம் இல்லாம பண்ணி சந்தோஷமா இல்லனா அப்ப அவங்களுக்கு இன்னும் கஷ்டம் தானே.

அதான் அப்படியே இது தப்புன்னு தோணி உண்மையை சொல்லலாம்னா மிருணா வந்து தடுக்கறா. நான் என்ன பண்றது சொல்லு.” என கேள்வியில் முடித்தான் அசோக். சத்யாவிற்கு தனது நண்பனை நினைத்து பாவமாக இருந்தது. சஞ்சனா மீது அவனுக்கு இருக்கும் விருப்பத்தை அவன் அறிவான்.

ஆனால் இந்த மாதிரி பணக்கார பெண்களின் மீது எப்போதும் அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. சொந்தத்தில் திருமணம் செய்தால் அவனது வாழ்வு நன்றாக இருக்கும் என நினைத்து தான் இன்று மிருணா பேச்சையே எடுத்தான்.

ஆனால் அது இன்னும் சிக்கலாக அல்லவா இருக்கிறது. சரி இதை பற்றி பிறகு யோசிக்கலாம் என நினைத்தவன் நண்பனிடமும், “சரி விடுடா. பாத்துக்கலாம். நீ இந்த கேஸை முடிச்சு ப்ரமோஷன் வாங்கற வழியை பாரு.” என கூறினான். “ஆமாம்டா. நாம வேலையை பார்க்கலாம். ஆமா உன் புது பிராஜக்ட் ‘கிளீன் அன்ட் கிரீன்’ நல்லா போயிட்டு இருக்கா?” எனக் கேட்டான்.

“ம்ம் இப்பதான் கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. பர்ஸ்ட் ஒரு இருபத்தைந்து பள்ளிகளை செலக்ட் பண்ணியிருக்கோம். இன்னும் ஒரு டூ வீக்ஸ்ல பினிஷிங் வொர்க் ஸ்டார்ட் ஆயிடும்.” என்றான் சத்யா. அசோக், “ஓகே.” என்றவன் அவனிடம் விடைபெற்று கிளம்பினான்

           அஸ்வின் இரு நாட்களாக எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தான். அவனது அண்ணி ஆருத்ரா ஒரு வாரம் முன்புதான் இங்கு வந்திருந்தாள். மூன்று மாதம் கழித்துதான் செல்ல வேண்டும் என தன் அன்னை சொன்னதை கேட்காமல் முன்னதாகவே தனது வீட்டிற்கு வந்து விட்டாள்.

அஸ்வினிடம் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவள் விட்டு பிடிக்கலாம் என நினைத்து கண்டு கொள்ளாமல் இருக்க, அவனோ சரியாவது போலவே தெரியவில்லை. இன்று என்னவென்று கேட்டு விட வேண்டும் என நினைத்து அறைக்கு வர அவனோ கண் மூடி படுத்திருந்தான்.

“தூங்கறீயா அஸ்வின்.” என ஆரு குரல் குடுக்க கண்விழித்தவன், “இல்லை அண்ணி வாங்க.” என அழைத்தவாறே எழுந்து அமர்ந்தான் அஸ்வின். “என்னாச்சு. ஏன் ஒரு மாதிரியா இருக்க? ஏதாவது பிராப்ளமா? ஆபிஸ் கூட போகல.” எனக் கேட்டாள் ஆருத்ரா.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. கொஞ்சம் மனசு சரியில்லை அவ்வளவுதான் அண்ணி.” என்றான் அஸ்வின். “மனசு சரியில்லாம போற அளவு என்ன நடந்தது. ஆபிஸ்ல ஏதாவது பிரச்சனையா? இல்ல யாராவது ஏதாவது சொன்னாங்களா” என கேட்டவள், “என்கிட்ட ஷேர் பண்ண முடியாத பிரச்சனைன்னா சொல்ல வேண்டாம்.” என முடித்தாள்.

“அப்படில்லாம் இல்லண்ணி. சந்திரிகா விசயம் தெரியும்ல.” எனக் கேட்க, “ம்ம் கேள்விப்பட்டேன்டா. ஆனா அவ ஏதோ முடியாதுன்னு சொல்லிட்டான்னு அத்தை சொன்னாங்க. ஆனா அது நடந்து ரொம்ப நாள் இருக்குமே. அதுக்கு ஏன் இப்ப இப்படி இருக்க?” எனக் கேட்டாள் ஆருத்ரா.

“ஆமா அண்ணி. அவ ஆரம்பத்துல இருந்து ஒரே மாதிரி முடியாதுன்னு தான் இருக்கா. நான்தான் தேவை இல்லாம அவ லைஃப்ல இண்டர்பியர் ஆகிட்டு இருந்திருக்கேன்.”  என்றவன் ஆரம்பத்தில் அவளை சந்தித்ததில் இருந்து நடந்ததை தனது அண்ணியிடம் பகிர்ந்தான் அஸ்வின்.

அதை கேட்டதும் ஆருத்ராவிற்கு தனது கொழுந்தன் மீது வருத்தமும், பரிதாபமும் ஒருசேர எழுந்தது. “அவதான் தெளிவா சொல்லியிருக்காளேடா. வேற ஒருத்தரை லவ் பண்றேனு. அப்பறம் எப்படி நீ அவ மனசை மாத்திடலாம்னா நினைச்ச” எனக் கேட்டாள்.

“கரெக்ட் அண்ணி. அவ அதை மட்டும் சொல்லியிருந்தா பரவால்ல. அது காலேஜ் டைம்ல வந்த லவ். அதுக்கப்பறம் அவங்க அப்பாவால இரண்டு பேரும் பிரிஞ்சிருக்காங்க. இத்தனை வருஷத்தில அந்த பையன் இன்னொரு கல்யாணம் பண்ணாம இருப்பானு என்ன நிச்சயம். ஆனா அவன் வருவான்.

அப்படி இல்லன்னா அவனை நினைச்சே என் லைஃபை வாழ்ந்து முடிச்சிருவேனு அவ சொல்றப்ப அவளோட காதலை நினைச்சு எனக்கும் பெருமையாதான் இருந்தது. ஆனா அவளை ஏதோ ஒரு விதத்தில என் மனசார நேசிச்சேனே அண்ணி. அதனால அவ வாழ்க்கையை நினைச்சு எனக்கு பயமா இருந்தது.

அதனாலதான் அவளை என்னால விட முடியல. ஆனா இப்ப அவன் வந்துட்டதா சொல்றா. இதை நம்பறதா வேணாமான்னு புரியல. இருந்தாலும் இனிமே உங்க வாழ்க்கைல தலையிட மாட்டேனு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணி.

அவளே சொல்றா எனக்கு வந்திருக்கறது லவ் இல்லன்னு. ஆனா, முதன்முதலா அவளை பார்த்த நிமிஷம் இன்னும் என் கண்ல மறக்காம இருக்கே. இவதான் உன் வாழ்க்கைன்னு அப்ப தோணிச்சே. எப்படி மறக்கறதுன்னு தெரியலண்ணி.” என்றான் வேதனையோடு.

“சரி அஸ்வின் ஃபீல் பண்ணாத. உன் மேலயும் தப்பு இல்ல. அதே சமயம் அவளும் எந்த விதத்திலயும் உனக்கு நம்பிக்கை தந்து ஏமாத்தல. அதனால சந்திரிகாவ மறக்கறதுதான் நல்லது. காதலிக்கறவங்க கூட சேர்ந்து வாழ்ந்து அவங்கள சந்தோஷமா வைச்சிருக்கிறது மட்டும் காதலோட பெருமை இல்லை.

அவங்க ஆசைப்பட்ட வாழ்க்கையை சந்தோஷமா வாழறதை பார்த்து மகிழ்ச்சியடையறதும் உண்மையான காதல்தான். அதே சமயம் நீயும் நல்லா இருக்கனும்டா. நீ இப்படி என்ன பண்றதுன்னு தெரியாம, ஒழுங்கா உன் வேலையை பார்க்காம கஷ்டப்பட்டீனா என்னைக்காது இது சந்திரிகாவுக்கு தெரியும் போது தன்னால தான் இவன் வாழ்க்கை இப்படி வீணாயிடுச்சுன்னு நினைச்சா அவளோட நிம்மதியும் போய்டும்.

கிளம்பு. உனக்கு பிடிச்ச விசயங்கள்ள கவனம் செலுத்து. புரியுதா? நான் உனக்கு அட்வைஸ் பண்ணல. வாழ்க்கையோட இன்னொரு பக்கத்தை நியாபகப்படுத்தறேன். இன்னைக்கு பூரா நீ இப்படியே இருந்து பீல் பண்ணு. கஷ்டமா இருந்தா அழக் கூட செய். ஆனா நாளைல இருந்து பழைய அஸ்வினா உன்னை பார்க்கனும்.

எதுவுமே உடனே மாறிடாது. மறக்கவும் செய்யாது. ஆனா நிச்சயம் ஒருநாள் மாறாமலும் இருக்காது. நம்பிக்கையோட இரு.” என கூறியவள் எழுந்து வெளியே சென்றாள். அஸ்வினும் தனது அண்ணியின் வார்த்தைகளை அசைபோட்டபடி யோசனையில் ஆழ்ந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *