660 views

 

                தரணியுடன் தானும்தான் அலுவலகம் வருவேன் என அடம்பிடித்து அவனுடன் சென்ற சைந்தவி அவன் சென்ற இடத்தை பார்த்து அதிசயித்தாள். சைட் என்றதும் ஏதோ ஒரு மால் அல்லது அப்பார்மெண்ட் கட்டிடமாக இருக்கும் என நினைத்தவளுக்கு ஒரு கிரவுண்ட் இடத்தில் பெரிய வீடு ஒன்று கட்டுவதற்கான பேஸ்மெண்ட் போடப்பட்டு இருந்தது.

“ஏதாவது கோடீஸ்வரர் இங்க வீடு கட்றாங்களான்னா. அந்த கான்ட்ராக்ட் இவங்க எடுத்துருக்காங்களா?” என தரணியிடம் கேட்டாள் சைந்தவி. “இல்லப்பா. ஆக்ச்சுவலி இதுதான் இவங்களோட பர்ஸ்ட் புராஜக்ட். ஆன்சியன்ட் மாடல் ஹவுஸ் இது.” என்றவன் தனது அலைபேசியில் இருந்த வீட்டின் மாதிரியை காண்பித்தான்.

அதை பார்த்ததும் சைந்தவிக்கு ஒரு எண்ணம் வந்தது. அதை செயல்படுத்த முடிவெடுத்தாள். “வீட்டை கட்டிட்டு அப்பறம் தான் செல்லிங் இருக்கும்” என்ற தரணி மேலும் சில தகவல்களை கூறியபடியே அஸ்வினிடம் அழைத்து சென்றான்.

அங்கோ அஸ்வின் இல்லாமல் தீபக் மட்டுமே இருக்க தரணி பேசுவதற்குள், சைந்தவி தீபக்கிடம் அஸ்வின் என நினைத்து, “ஆனாலும் உங்க கான்பிடன்ஸ்ஸ பாராட்டியே ஆகனும் சார். பர்ஸ்ட் புராஜக்ட் ஆனா இவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கறீங்க. ஆமா. இந்த ஐடியா உங்களுக்கு எங்க இருந்து வந்தது. எனக்கு ஒரு இண்டர்வியூ தரீங்களா சார்.” எனக் கேட்க,

தீபக்கோ புரியாமல் அவளை பார்க்க, “என்ன அஸ்வின் சார் அப்படி பார்க்கறீங்க. இந்த பிராஜக்ட் பத்திதான். இண்டர்வியூ. என்னதான் நீங்க ஹேண்ஸமா இருந்தாலும் உங்கள இண்டர்வியூ பண்ற ஐடியால்லாம் எனக்கில்ல.” எனவும் தரணி ஏதோ கூற வர அதற்குள் அவளே, “அண்ணா பேசாம என்னை இவங்க அஸிட்டெண்ட் ஆக சேர்த்து விட்றேன்.

எனக்கும் இண்டர்ஸ்டிங்கா இருக்கு. அப்பறம் நீ சொன்ன மாதிரி இனிமே பொறுப்பா மாறீடுவேன்ல.” என்றாள் சைந்தவி. “ஹேய். கொஞ்சம் மூச்சு வாங்கு. ஏன் இப்படி பொரியற. முதல்ல இவர் அஸ்வினே இல்ல. இவர் பேரு தீபக். ஒன் ஆப் த பார்ட்னர் ஆப் த கம்பெனி.” என தீபக்கை அறிமுகம் செய்தான் தரணி.

அவனை பார்த்து சற்று அசடு வழிந்தவள் மன்னிப்பு கேட்க, பிறகு சைந்தவியையும் அவனுக்கு அறிமுகம் செய்த தரணி, “இவ பேசனதெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க.” எனவும் கூறினான்.

பிறகு “அஸ்வின் எங்க?” எனக் கேட்க, தீபக், “இல்ல அவன் இன்னைக்கு இங்க வரல. ஏதாவது இம்பார்ட்னா?” என்க. “நத்திங் தீபக். சும்மாதான் கேட்டேன். ஓகே நாம வொர்க்கை பார்க்கலாம்.” என்றவன் பில்டிங்கை சுற்றி வர போனான். சைந்தவி எதுவும் பேசாமல் அங்கிருந்த கல் ஒன்றில் அமர, தீபக்கிற்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.

பெரிதாக பெண்களிடம் பழகியிராதவன் தான். அவள் முதலில் படபடவென பேச முதலில் ஒன்றும் புரியவில்லை. புரிந்தபோது தரணி அவளை அதட்டவும், அதோடு வாயை மூடிக் கொண்டு அமைதியாக அமர்ந்து விட்டாள். அவள் அருகில் சென்றவன், “ஹாய். ஏதாவது வேணுமா?” எனக் கேட்டான் தீபக்.

ஒன்றுமில்லை என அவள் தலையாட்டவும், “சரி விடுங்க. நீங்க இப்படி இருக்கறது நல்லாவே இல்ல. உங்க அண்ணாதானே சத்தம் போட்டார். நீங்க பேசினாதான் நல்லா இருக்கும்” என வாயை விட்டான்.

“சே சே. அப்படில்லாம் ஒன்னுமில்லை. எங்க அண்ணன் திட்டினாலே கவலைப்பட மாட்டேன். இதெல்லாம் ஒரே விசயமே இல்ல. நான் பேசனதெல்லாம் மனசில வச்சுக்காதீங்கன்னு உங்ககிட்ட சொன்னான்ல. அதைதான் யோசிச்சுட்டு இருந்தேன்.” என்றாள் சைந்தவி.

“ஓ நான் இண்டர்வியூ குடுக்க மாட்டேனு நினைச்சுட்டீங்களா? கண்டிப்பா இந்த புராஜக்ட் பத்தி நான் உங்களுக்கு சொல்றேன்.” என தீபக் கூற, “அதில்ல. நான் நீங்க ஹான்ட்ஸமா இருக்கீங்கன்னு சொன்னேன்ல. அப்ப அண்ணா நீங்க அழகா இல்லன்னு சொல்றானு நினைக்கறேன். எதுக்கும் கிளியர் பண்ணிக்கோங்க.” என்றவள் தனது அண்ணனிடம் சென்றாள்.

“என்ன கேரக்டர் இவன்னே புரியலயே. டல்லா இருந்த மாதிரி இருந்ததுன்னு பேச போனா நம்மளயே கலாய்க்கறா. இவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாதான் பேசனும்.” என எண்ணிக் கொண்டு வேலையை பார்க்க சென்றான் தீபக். வேலையை முடித்துவிட்டு காரில் செல்லும்போது தரணி, சைந்தவியிடம், “நீ எப்ப கனடா கிளம்பற?” எனக் கேட்டான்.

“நான் ஏன் கனடா போகனும். இனிமே இங்கதான் நானும் இருப்பேன்.” என்றதில் துணுக்குற்றான் தரணி. “ஹேய் என்ன நடந்தது சொல்லு. நீ ஏதோ ஓரு வாரம் இல்ல பத்து நாள் தங்கிட்டு போய்டுவன்னு நினைச்சேன். நீ என்னடான்னா எதுக்கு போகனும்னு கேட்கற.

நானும் இங்க வந்துட்டேன். நீயும் அங்க இல்லன்னா இருக்கற வேலையெல்லாம் யாரு பார்ப்பாங்க.” எனக் கேட்டான். “என்னண்ணா. எனக்கு அங்க இருந்தா போர் அடிக்குது. நீங்க எல்லாரும் இங்க வந்துடீங்க. அப்பா எப்ப பாரு ஆபிஸ்க்கே கூட்டிட்டு போறாரு. எனக்கு பிடிக்கவே இல்லை. அதான் நானும் இந்தியா போறேன்னு கிளம்பி வந்துட்டேன்” என்றாள் சைந்தவி.

“இருந்தாலும் இரண்டு பேரும் பக்கத்துல இல்லன்னா அப்பாம்மாக்கு கஷ்டம்ல.” என தரணி தனது பெற்றோரை நினைத்து கவலை கொள்ள, “அதெல்லாம் ஒன்னுமில்லன்னா. நாம ரெண்டு பேரும் இல்லன்னு ஜாலியா ரொமான்ஸ் பண்ணுவாங்க பாரு.” என சைந்தவி கிண்டலடிக்க, “சரியான வாலு நீ. என்ன பேச்சு பேசற. கொஞ்ச நேரம் ஓயுதா பாரு.” என சைந்தவியின் காதை திருகவும் அவளது அலைபேசி ஒலித்தது.

“ஃபோன் ணா.” என்றவள் எடுத்து பார்க்க, அவளது அன்னை தான் வீடியோ காலில் அழைத்திருந்தார். “ஐ அம்மா. ஹாய் அம்மா. எப்படி இருக்கீங்க. அண்ணாவும் இங்கதான் இருக்கான்” என்றபடி அவனை காட்டினாள்.

அவளை விடுத்து, “தரணி எப்படிப்பா இருக்க. ஒழுங்கா சாப்பிடுறீயா. வேலைல்லாம் நல்லா போகுதா. சந்தும்மா அவங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என பேசிக் கொண்டே சென்றார். சைந்தவி, “ஹலோ. இங்க நானும் இருக்கேன். பையன் மேல மட்டும் பாசம் பொங்குது.” என பொய்க்கோபம் கொள்ள, “போடி நீதான் அம்மாவை விட்டுட்டு போயிட்டல்ல. உன் மேல நான் கோபமா இருக்கேன்.” என்றார் அவரும் விடாமல்.

“அப்படி பார்த்தா இவன்தான் உங்களை முதல்ல விட்டுட்டு வந்தான். அம்மா பேசாம நீங்களும் இந்தியா வந்துடுங்களேன்.” என அழைத்தாள் சைந்தவி. “ம்ம். இங்க வேலை சரியா இருக்கே. எல்லாரும் அங்க இருந்து இங்க வர ஆசைப்படறாங்க. என் பிள்ளைங்க ரெண்டுக்கும் வெளிநாட்ல இருந்து இந்தியால இருக்கதான் ஆசை என்ன பண்றது.” என அலுத்து கொண்டார் அவர்.

“எல்லாரும் இந்தியாவுல இருக்கறதால அவங்களுக்கு வெளிநாடு போக ஆசை. எங்கள கனடாலயே வைச்சு இருந்ததால எங்களுக்கு இந்தியா மேல ஆசை.” என்றாள் சைந்தவி.

அதற்குள் வீடு வந்திருக்க காரை நிறுத்திய தரணி சைந்தவியிடம் இருந்து ஃபோனை வாங்கிக் கொண்டு தனது அன்னையிடம், “அவ கிடக்கறாம்மா சரியான வாயாடி. நீங்க சொல்லுங்க.” என நலம் விசாரித்து விட்டு பேசிக் கொண்டே அவுட்ஹவுஸ் சென்று விட்டான்.

அதே நேரம் சஞ்சனாவும் வீட்டிற்கு திரும்ப அவளுடன் பேசிக் கொண்டே உள்ளே வந்தாள் சைந்தவி. “ஆன்ட்டி. நான் வந்துட்டேன். இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ஸ்னாக்ஸ்.” என சைந்தவி குரல் குடுக்க, “தோ வரேன்டா.” எனக் கூறி அவர் வருவதற்குள் உடை மாற்றிக் கொண்டு வந்தாள் சஞ்சனா.

“ஹேய். வாழைப்பூ வடை செஞ்சிருக்காங்கடி. சூப்பரா இருக்கு. சாப்பிடு.” என அவளிடம் நீட்டினாள் சைந்தவி. “அக்கா இன்னும் வரலயாம்மா.” எனக் கேட்டுக் கொண்டே அதை வாங்கியவள், “அவ மதியமே வந்துட்டாமா. இன்னும் கீழ வரல. சாப்பிட கூப்பிட்டா சாப்பிட்டு தான் வந்தேன்னு சொல்றா. அவளை நினைச்சா எனக்கு கவலையா இருக்குடி.” என புலம்பினார் மல்லிகா.

எடுத்த வடையை வைத்துவிட்டு தமக்கையை காண சென்றாள் சஞ்சனா. கதவை தட்டியவள் திறந்த சந்திரிகாவை பார்க்க அழுத தடம் நன்றாக தெரிந்தது. “என்னாச்சுக்கா. காலையில நல்லாதானே கிளம்பி போன. அப்பறம் ஏன் இப்படி இருக்க. மாமா ஏதாவது சொன்னாரா.” எனக் கேட்டாள் சஞ்சனா.

காலையில் நடந்ததை சந்திரிகா கூற, “சரி விடுக்கா. அவர் ஏதோ டென்ஷன்ல இருந்திருப்பாரு. நீ வேற தூங்கிட்டு இருந்தா இன்னும் கடுப்பாகி இருக்கும். பாத்துக்கலாம் விடு. வெளிய எல்லார்க்கிட்டயும் தைரியமா இருக்கற மாதிரி இரு. வீட்டுக்குள்ள வந்தா ஏன்தான் இப்படி ஆகிடறன்னு தெரியல.” என பேசி அவளை சமாதானம் செய்தவள் வெளியே கூட்டி வர அதற்குள் தரணியும், சைந்தவியும் ஸ்னாக்ஸ்யை எடுத்துக் கொண்டு மேலே வந்து விட்டனர்.

பிறகு அனைவரும் பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டே உண்டு முடிக்க தரணி, “என்னாச்சு சந்து. ஏன் ஒரு மாதிரி இருக்க. அங்க வொர்க் ஸ்டார்ட் பண்ணீட்டாங்களா.” எனக் கேட்டான். “இன்னைக்கும் மாமா திட்டிட்டாராம். அதான் இந்த சோகம். கலெக்டர் ஆபிஸ்ல போய் அக்கா தூங்கியிருக்கு. அவர் கடுப்பாகிட்டார்.” எனக் கூறினாள் சஞ்சனா.

“சும்மாயிருடி.” என அவளை அதட்டிய சந்திரிகா, “எனக்கென்னவோ. மறுபடி அவருக்கு என் மேல காதல் வரலாம் வாய்ப்பே இல்லைன்னு தோணுது.” என்றவள், தொடர்ந்து அவன் ஆரம்பத்தில் இருந்து நடந்து கொள்ளும் விதத்தை பற்றி கூறினாள்.

தரணியின் மூலம் ஓரளவு விசயம் அறிந்திருந்த சைந்தவி, “எனக்கென்னவோ அவருக்கு உங்க மேல காதல் வந்திருச்சுன்னு நினைக்கறேன். அதை மறைக்கதான் எப்ப பாரு உங்ககிட்ட எரிஞ்சு விழறாருன்னு தோணுது” என தனது சந்தேகத்தை கூறினாள்.

இந்த கோணத்தில் யாரும் யோசிக்காமல் இருக்க, “ஆமாக்கா. அப்படியும் இருக்குமோ.  ஏன்னா நான் விசாரிச்ச வரை மாமா ரொம்பவே சாப்ட்னு சொல்றாங்க. அவர் சத்தம் போட்டு பேசி யாரும் பார்த்ததே இல்லையாமா. ஆனா கண்ணசைவிலே எல்லா வேலையும் கரெக்டா நடக்கற மாதிரி பாத்துக்குவாராம். ஆனா உன்கிட்ட மட்டும் கோவப்படுறாருன்னா ஏதோ சம்திங் ராங்க்.” என்றாள் சஞ்சனா.

“ஆமா. என்னைதான் அதிகமா வெறுக்கறார் அதான் அப்படி நடந்துக்கிறார் போடி. வந்துட்டா. என்ன நடக்குதுன்னு வெயிட் பண்ணி பார்க்கலாம்.” என்றாள் சந்திரிகா சாதாரணமாக. ஆனால் அந்த வார்த்தைகள் தரணியை யோசிக்க வைத்தது. அப்போது சைந்தவி, “அண்ணா நான் காலைல சொன்னதை யோசிச்சியா?” எனக் கேட்டாள்.

“நீ எதை சொல்ற?” என தரணி திருப்பிக் கேட்க, “அதான் அஸ்வின் ஆபிஸ்ல வேலைக்கு சேரரது பத்தி” என சைந்தவி இழுக்க, “அதெல்லாம் ஒத்து வராது. நீ கனடாக்கே போற வழியை பாரு.” என்றான் தரணி. “என்ன ஆச்சு. எதை பத்தி பேசறீங்க” என சகோதரிகள் இருவரும் கேட்க,

“பாருங்க அக்கா. நான் படிச்சது சிவில் இன்ஜினியர். அப்பா வச்சிருக்கறது மெடிசன் தயாரிக்கற கம்பெனி. என்ன போய் அங்க வேலை செய்ய சொல்றான். இதே அஸ்வினோடது மாதிரி ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனின்னா என் படிப்புக்கேத்த ஒரு எக்ஸ்போஷர் இருக்கும்ல.” என்றாள் சைந்தவி.

“நீ சொல்றது சரிதான். நீ ஒரு ரெண்டு நாள் வெயிட் பண்ணு. நான் அவங்ககிட்டலாம் பேசிட்டு அப்பறம் டிசைட் பண்ணலாம். அவங்களுக்கு இப்ப ஆள் தேவையா என்னனு கேட்டுதான் முடிவெடுக்கனும். அவசரப்படக் கூடாது. நானே பேசிட்டு உனக்கு சொல்றேன்.” என்றாள் சந்திரிகா. அதற்கு சைந்தவி தலையாட்ட மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள் அவரவர் அறைக்கு சென்றனர்.

              பவித்ராவை டிஸ்சார்ஸ் செய்த அன்றே ரகுவையும் அசோக் வீட்டிற்கு அனுப்பி விட ரகு வரும்போது பவித்ரா தோட்டத்தில் இருந்தாள். இவன் வருவதை பார்த்து விட்டவள், “ரகு அங்கிள். நான் வீட்டுக்கு வந்துட்டேன். நீங்க நல்லா இருக்கீங்களா? ஏன் டல்லா இருக்கீங்க? உங்களுக்கும் காய்ச்சலா?” எனக் கேட்டாள்.

அதைக்கண்டு ரகுவிற்கு யாரோ இரும்புக் கம்பியால் அடித்தது போல இருந்தது. தனது சுயநலத்திற்காக இந்த சிறு குழந்தையை இப்படி நாசமாக்கி விட்டோமே என தன்னையே நொந்து கொண்டு அவன் எதுவும் பேசாமல் நின்றான்.

அதற்குள் பவித்ராவின் அன்னை அழைக்க, “வரேன் அங்கிள். பாய்.” என்றவாறே அவள் சென்று விட, ரகுவின் அருகில் வந்தான் ஒருவன். “அண்ணன் உன்னையை கூட்டிட்டு வர சொன்னார். வரீயா.” என வந்தவன் ரகுவை அழைக்க. “போலாம்” என அவனுடன் சென்றான் ரகு.

ஊருக்கு ஒதுக்குபுறமான ஒரு தென்னந்தோப்பின் நடுவே கலைநயத்துடன் கட்டப்பட்டிருந்தது அந்த பங்களா. இவன் அந்த வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, பக்கத்து அறை வாசலில் ஒரு திரைச்சீலை போடப்பட்டிருக்க அதன் பின்னால் ஒரு உருவம் தெரிந்தது.

“வாடா நல்லவனே. எங்க இத்தனை நாளா ஆளையே காணோம்.” என அந்த உருவம் கேட்க, “அப்பார்ட்மெண்ட் புல்லா ஒரே போலீஸ்னே. இப்பதான் கொஞ்சம் கலவரம்லாம் அடங்கியிருக்கு. முதல்நாள் போலீஸ் விசாரிச்சதுலயே கொஞ்சம் பயந்து போய்ட்டேன்.

அதான் வேலை கிடைச்சிருக்குனு சொல்லி ஊட்டிக்கு போய்ட்டேன்னா. இன்னைக்கு அந்த கழுதை டிஸ்சார்ஜ் ஆகறான்னு கேள்விப்பட்டதும்தான் திரும்ப வந்தேன். உங்ககிட்ட காண்டாக்ட் வச்சிகிட்டா போலீஸ் மோப்பம் பிடிச்சிருவாங்கன்னு தானே ஃபோன் கூட ஆப் பண்ணீட்டேன்.” என்றான் ரகு.

“வெரிகுட். அப்படிதாண்டா புத்திசாலித்தனமா நடந்துக்கனும். நீ ஒன்னும் பயப்படாத. கமிஷனர் நம்ம ஆள்தான். அந்த பிள்ளைக்கு எதுவும் நியாபகம் இல்லையாமா. என்னையும் மறந்த முதல் பொண்ணு அவளாத்தான் இருப்பா.” என சிரித்ததில் சற்று எரிச்சல் வந்தது ரகுவிற்கு.

“எதுக்கும் இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த வேலையெல்லாம் நீ பார்க்க வேணாம். சரியா.” என அவன் கூறியதும் ரகுவின் கையில் ஒரு பணக்கட்டு தரப்பட்டது. மறுக்காமல் அதை வாங்கி கொண்டவன், “அப்ப நான் கிளம்பட்டுமா அண்ணா” எனக் கேட்டான் ரகு.

“ம்ம் போய்ட்டு வா.” என அவனை அனுப்பி வைத்தது அந்த உருவம். ரகு வெளியேறியதும், “எதுக்கும் கொஞ்ச நாளைக்கு இவன ஃபாலோ பண்ணுங்கடா. இவன் நிஜமாலுமே நமக்கு விசுவாசமா இருக்கானான்னு தெரியனும்.” என்றவன் உள்ளே சென்றான்.

ஆனால் மறைந்திருந்து அதை கேட்ட ரகுவோ, ‘நீ என்னடா என்னையை ஃபாலோ பண்றது. இன்னும் கொஞ்ச நாளைக்கு உன்ன வேவு பார்க்கறதுதான் எனக்கு வேலையே.’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் அங்கிருந்து வெளியேறினான். அதே நேரம் அசோக் அவனது புதிய திட்டத்தை பற்றி சத்யாவிடம் விளக்கமாக கூறிக் கொண்டிருந்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்