704 views

 

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா..!!

மேலும் சில முறை உன் குறும்பிலே.
நானே தோற்கிறேன். உன் மடியிலே. என் 

தலையணை இருந்தால் உறங்குவேன்..!!

ஒரு வரி நீ சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம்
அனைவரும் கேட்கும் நாள் வரும்..!!

வெயிலினில் ஊர்கோலம்
இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்காலமே
நனைந்திடுவோம் நாள் தோறுமே..!!

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா..!!

              எப்.எம்மில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, உடன் சேர்ந்து பாடிக் கொண்டே கிளம்பிக் கொண்டிருந்தாள் சந்திரிகா. வெளிர் பச்சை நிற சல்வாரில் அழகாக தயாராகி கொண்டிருந்தாள். முகம் வழக்கத்தை விட பொலிவை கூட்டியிருக்க சஞ்சனா அறைக்கு வந்தாள்.

என்னடா. இன்று எமது தமக்கையின் வதனம் மகிழ்வை காட்டுகிறது. என்ன விசயம் என தெரிந்து கொள்ளலாமா?” என குறும்பாக கேட்டாள். அவள் பதில் கூறுவதற்குள் அங்கே சைந்தவி வந்து, “அக்கா. இன்னைக்கும் கிளம்பிட்டீங்களா?” என்றாள். “ஏன். என்னாச்சு?என சந்திரிகா கேட்க,

எனக்கு போர் அடிக்குது. எங்காவது வெளில கூட்டிட்டு போங்க.’ என்றாள் சைந்தவி. “ஏன் சஞ்சனாவை கூப்பிட்டுக்க வேண்டிதானே.” என சந்திரிகா கேட்க,யாரு இவளா, மேடம் இப்பல்லாம் ஒரே பிஸி.” என அலுத்துக் கொண்டாள் சைந்தவி.

சந்திரிகா, சஞ்சனாவை பார்க்க,இரண்டு நாளா பவித்ராவை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றதால ஹாஸ்பிட்டல் போக வேண்டியிருந்தது. இன்னைக்கு மட்டும் போயிட்டு வந்துட்டா. அப்பறம் பிரீதான்க்கா. இவ சொன்னா கேட்கவே மாட்றா.” என்றாள் அவள். ஒரு நிமிடம் யோசித்த சந்திரிகா,ம்ம். அப்ப ஒன்னு பண்ணு. இன்னைக்கு இவளையும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ.” என யோசனை சொன்னாள் சஞ்சனாவிற்கு.

நோ அக்கா. நான் அங்கல்லாம் போகல. அது எனக்கு அலர்ஜின்னு தெரியும்ல.” என சைந்தவி சிணுங்க, “அப்ப உங்க அண்ணா கூட சைட்டுக்கு தான் போகனும்.” என்றாள் சஞ்சனா விளையாட்டாக. “ஹய்யோ, இதுவும் நல்ல ஐடியா தான். நான் அண்ணா கூடவே போய்க்கறேன். பாய்என கூறிக் கொண்டே கீழிறங்கி சென்றாள் சைந்தவி.

சரியான லூசு. போய் வெயில்ல அலைஞ்சுட்டு வரட்டும். நீ சொல்லுக்கா. என்ன ஸ்பெஷல் இன்னைக்கு.” எனக் கேட்டாள் சஞ்சனா. “ஒன்னுமில்லடி. நீ சொன்னதை யோசிச்சு பார்த்தேன். அதான் இன்னைல இருந்து சத்யாவோட ஆபிஸ்ல வொர்க் இருக்கு.

அவரோட பிரண்ட்ஷிப்பை டெவலப் பண்ணலாம்னு தோணுச்சு. ஆனாலும் இதெல்லாம் பண்ணணுமானு தயக்கமாவும் இருக்கு. அவர் இப்பல்லாம் என்கிட்ட நார்மலா பேசற மாதிரி தெரியல.” என்றாள் சந்திரிகா.

நீ வொரி பண்ணாதக்கா. நாம ஒன்னும் அவர போர்ஸ் பண்ண போறது இல்ல. நீ ஜஸ்ட் அவரோட நியாபக்கத்தை திரும்ப வர வைக்க டிரை பண்ணு அவ்ளோதான். அதுக்கு மேல நடக்கறது நடக்கட்டும். இவ்ளோ நாள் ஆகிட்டதால, அவரோட உடல்நிலைக்கு எந்த ஆபத்தும் வராது. நீ பயப்படாத.” என அறிவுரை கூறினாள் சஞ்சனா.

சரி என்றவள் அவளிடம் விடைபெற்று அலுவலகம் கிளம்பினாள். பதினொரு மணி அளவில் கிளம்பி ஆட்சியர் அலுவலகம் சென்ற போது சத்யா எங்கோ வெளியில் சென்றிருந்தான். சந்திரிகா வந்த தகவலை சத்யாவிடம் தெரிவித்த போது அவளை காத்திருக்க செய்யுமாறும் அரை மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் சொன்னான்.

அவனுடைய உதவியாளரும் அவளுக்கு ஒரு அறை ஒதுக்கி அங்கே காத்திருக்க சொன்னார். அங்கே சென்றவள் சத்யாவுடனான நினைவலைகளில் ஆழ்ந்து அப்படியே உறங்கியும் போனாள் அமர்ந்த நிலையிலே. அரை மணி நேரத்தில் வருவதாக கூறியவன் ஒரு மணி நேரம் கழித்தே வந்திருக்க, வந்ததும் அவள் இருந்த அறைக்கு வந்து பார்த்த போது நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்.

அதை பார்த்ததும் இதழ் கடைகளில் புன்னகை மிளிர அவள் அருகில் வந்து பார்த்தால், ஒரு நோட்டில் ஏதோ எழுதி வைத்திருந்தாள். என்னவென்று அவளது உறக்கம் கலையாமல் எடுத்து பார்க்கவே அதில் லவ் யூ சோ மச் தீரன். மிஸ் யூ.” என எழுதியிருக்க..

நொடியில் எதையோ யோசித்தவனின் முகம் கோபத்தை தத்தெடுக்க வேகமாக அவளை எழுப்பினான். திடீரென உறக்கம் கலைந்ததில், “என்னாச்சு தீரன்.” என்றவாறே எழுந்து பார்க்க எதிரில் சத்யா நின்றிருந்தான். “சாரி சார். ஏதோ நியாபகத்துல தூங்கிட்டேன்.” என விளக்கம் கூறுவதற்குள் சத்யா கத்த ஆரம்பித்து விட்டான்.

என்ன மேடம் உங்களுக்கு தூங்கறத்துக்கு கலெக்டர் ஆபிஸ் கேட்குதோ? அவ்வளவு சுகமா இருக்க வீட்லயே படுத்து தூங்க வேண்டியது தானே. இங்க வந்து என் உயிரை வாங்காதீங்க. நீங்க தூங்குங்க. கனவுல லவ்வரோட டூயட் கூட பாடுங்க. ஆனா ஆபிஸ்க்கு வந்த வேலையை மட்டும் பாருங்க.

போய்ட்டு நாளைக்கு வாங்க.” என கோபமாக பேசியதில் அரண்டு போய் நின்றிருந்தாள் இவள். ஆனாலும் அவனிடம் எதிர்த்து சண்டை போட மனம் வராமல்,சாரி சார். நாளைக்கு பார்க்கலாம்.” என வெளியே செல்ல எத்தனித்தவள் அவனிடம் ஒரு பாக்ஸை குடுத்தாள்.

இது என்ன.” எனக் கேட்க,ஒன்னுமில்ல சார் ஸ்வீட் தான். சாப்பிடுங்க.” எனக் கூறியவள் திரும்பியும் பார்க்காமல் நடந்தாள். எங்கே திரும்பினால் ஸ்வீட் வேண்டாம் என திருப்பி கொடுத்து விடுவானோ என்ற பயத்தில். அலுவலகம் செல்ல மனமில்லாமல் வீட்டிற்கே வந்தவள் அழுது தீர்த்தாள். பின்பு யோசித்தவளுக்கு ஒன்று புரிந்தது.

சத்யாவை மீண்டும் பார்த்த நாளில் இருந்து ஒருமுறை கூட சாதாரணமாக பேசவே இல்லை. ஒன்று கோபமாக முகத்தில் அடித்தாற் போல பேசுகிறான். இல்லையென்றால் யாரென்றே தெரியாத வண்ணம் அமைதியாக இருக்கிறான்.

இரண்டாவதுக்கு காரணம் இருந்தாலும் தன் மீது கோபம் வர என்ன காரணம். சாதாரணமாக சத்யாவிற்கு இவ்வளவு கோபமே வராது. ஆரம்ப நாட்களில் இவள் காதலை புறக்கணித்த போது கூட சில நேரம் கோபப்படுபவன் அடுத்த நிமிடமே ஏதாவது பேசி அவளது மனதை மாற்றவே முயல்வான். இவ்வளவு வெறுப்பு ஏனென்று எவ்வளவு யோசித்தும் அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

              அன்று பவித்ராவை டிஸ்சார்ஜ் செய்வதால் மருத்துவமனைக்கு அசோக்கும் வந்திருந்தான். இத்தனை நாட்களில் பவித்ரா ஓரளவு பூரணமாகவே குணமாகி இருந்தாள். டிரீட்மெண்ட் ஆரம்பித்த சில நாட்களில் அவளுக்கு எதுவும் நினைவுக்கு வராத வரை எல்லாம் நன்றாக தான் இருந்தது.

ஆனால் பிறகு தூங்கும் நேரத்தில் கனவு கண்டது போல அரற்ற தொடங்கியவள் நாளாக நாளாக மோசமாக நடந்து கொள்ள தொடங்கினாள். அவளை சமாதானம் செய்வது பெரும் சவாலாக இருந்தாலும் சஞ்சனா பொறுமையாக அவளை பார்த்துக் கொண்ட விதம் அவளிடம் பவித்ராவை நெருங்க செய்திருந்தது.

அதை வைத்தே பலவித கவின்சிலிங்க்கு அவளை ஆட்படுத்தி கொஞ்ச கொஞ்சமாக அவளது பயத்தை போக்கினாள் சஞ்சனா. அசோக்கும் அவ்வபோது வந்து அவளது உடல்நிலை பற்றி விசாரித்து செல்வான். நாளடைவில் மீடியாக்களும் இதை விடுத்து வேறு செய்திகளில் கவனம் செலுத்த தொடங்கி விட இவர்களுக்கு மருத்துவம் பார்க்க வசதியாகி போனது.

இப்போது உடலும் சரி, மனதும் சரி ஓரளவு தேறி விட்டதால் வீட்டிற்கு கூட்டிச் செல்லலாம் என முடிவெடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்கின்றனர். அசோக்கையும், சஞ்சனாவையும் பார்த்ததும் புன்னகைத்த பவித்ரா,நான் இன்னைக்கு வீட்டுக்கு போலாம்னு அம்மா சொன்னாங்க. அப்படியா ஆன்ட்டி.” என்றாள் உற்சாகமாக.

ஆமாம்டா செல்லம். வீட்டுக்கு போனதும் ஆன்ட்டியை மறந்துட மாட்டிங்களே?என சஞ்சனா கேட்க, “நான் மறக்க மாட்டேனே. அதுவும் இல்லாம நீங்க வீட்டுக்கு வருவீங்கன்னு அம்மா சொன்னாங்களே. வருவீங்க தானே.” எனக் கேட்டாள் பவித்ரா.

அவ்வபோது தானே வந்து பார்த்து போகிறேன். கவலை கொள்ள வேண்டாம்என பவித்ராவின் அம்மாவிடம் கூறியதை அவர் கூறியிருப்பார் போல என நினைத்தவள்,கண்டிப்பாடா. உன்ன பார்க்காம எனக்கும் கஷ்டமாதான் இருக்கும். அதனால வருவேன். ஆனா நீ கரெக்டா டேப்லெட்லாம் போட்டுக்கனும். அப்பதான் வருவேன்.” என அவளிடம் பேசிக் கொண்டே அவளுக்கு தேவையான மருந்துகளை கொடுத்து விட்டாள்.

அவளது பாவனைகளை ஒரு பக்கமாக நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் அசோக். ஒவ்வொரு நாளும் அவனுக்கு அவள் புதிதாக தெரிந்தாள். குழந்தைகளிடம் பழகும் விதம், நோயாளிகளை சினேகிதர்கள் போல நடத்துவது. தனது அக்காவின் மீது காட்டும் அக்கறை என அவள் மனதில் நிறைந்து கொண்டே இருந்தாள்.

தன்னிடம் நன்றாக தான் பழகுகிறாள் என்றாலும் அது ஒரு நட்பு ரீதியாக மட்டுமே என்பதை அசோக் நன்கு உணர்ந்திருந்தான். சீக்கிரமாகவே தனது மனதில் உள்ளதை அவளிடம் பகிர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியே இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான்.

அப்போது பவித்ரா,ஆன்ட்டி நீங்க வரும்போது இந்த அங்கிளையும் கூட்டிட்டு வரீங்களா? இவங்களும் ஸ்வீட்டா பேசறாங்க.” என்றாள் சஞ்சனாவிடம் அசோக்கை காட்டி.உங்க ஆன்ட்டி வரப்பல்லாம் நானும் வருவேன். நீங்க நல்லா சாப்பிட்டு சீக்கரமா நல்லா வளரனும் சரியா.” என்றான் பவித்ராவிடம் அசோக்.

தேங்க்யூ அங்கிள்.” என்றவள் சஞ்சனாவையும் அருகில் அழைத்து இருவர் கன்னங்களிலும் முத்தம் பதித்தாள். சிறு குழந்தையாயினும், சில காலமே பழகிய போதும் அவளது அன்பில் வியந்து போயினர் இருவரும். அந்த நொடியில், இந்த குழந்தைக்கு. இப்படி ஒரு அநியாயம் செய்தவனை கொன்று போடும் வெறி வந்தது அசோக்கிற்கு.

அதன்பிறகு அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டு, சஞ்சனாவின் அறைக்கு வந்தான் அசோக். “தேங்க்யூ சோ மச் சஞ்சனா. நீங்க மட்டும் இல்லன்னா. பவித்ரா இந்த அளவுக்கு குணமாகி இருப்பாலான்னு சந்தேகம் தான்.” என நன்றி நவின்றான் அசோக்.

அது இருக்கட்டும். ஆனா அவள இந்த நிலைக்கு தள்ளுனவனை நீங்க இருந்தும் இன்னும் ஒன்னும் பண்ணாம இருக்கீங்களே.” என்றாள் அவன் பாணியிலே. “கரெக்ட்தான். சஞ்சனா இந்நேரத்துக்கு அவனை கொன்னு புதைச்ச இடத்துல புல் முளைச்சிருக்கனும். ஆனா என்ன பண்றது.சரியான சாட்சியும், ஆதாரமும் இல்லன்னா ஒரே நாள்ல இந்த மாதிரி கேஸ்ல இருந்து வெளில வந்திடுவானுங்க.

அதனால தான் பொறுமையா இருக்கேன். உனக்கு மட்டும் ஒன்னு சொல்லவா. ஆள் யாருன்னு கண்டுபிடிச்சாச்சு. ஆனா ஆதாரத்தோட அவனை பிடிக்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். ஆனா கண்டிப்பா அவனுக்கு தண்டனை வாங்கி குடுக்காம நான் விடவே மாட்டேன்.” என்றான் அசோக் உறுதியாக.

சாரி அசோக். நீங்க வொர்க் பண்ணலன்னு சொல்ல வரல. கேஸ் எந்த நிலைல இருக்குன்னு தெரிஞ்சுக்கதான் கேட்டேன் என்றாள். “ஒன்னும் பிராப்ளம் இல்ல. ஓகே நான் கிளம்பறேன்.” என அவளிடம் விடைபெற்று வெளியே வந்தான்.

வந்தவன் நேராக ரகுவை அடைத்து வைத்திருந்த குடோனுக்கு வந்து அவனது நண்பர்களுக்கு அழைத்தான். அவர்கள் கூறிய தகவல்களையும் கேட்டுக் கொண்டவன் ரகுவை அவிழ்த்து விட்டு அவனிடம் சில வேலைகளை குடுத்து வெளியே அனுப்பினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்