742 views

         சந்திரிகாவை காணாமல் நால்வரும் தேடி வர ஒரு மரத்தின் மீது மோதி நின்றிருந்த அவளது கார்தான் கண்ணில் பட்டது. வேகமாக சென்று அருகில் பார்த்தால் சந்திரிகா ஸ்டியரிங்கில் தலை வைத்து படுத்திருக்க, சஞ்சனா எழுப்பியும் எழவில்லை. பயந்து போய் அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர் வந்து பார்த்துவிட்டு,பயப்பட ஒன்னுமில்லை. சாதாரண மயக்கம்தான். காலையில இருந்து எதுவும் சாப்பிடாம இருந்திருக்காங்க. அதான் லோ பீபி ஆகி மயக்கம் வந்திருக்கு. ரொம்ப வீக்கா இருக்காங்க. நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க.” எனக் கூறி சென்ற பின் தான் சஞ்சனாவுக்கு உயிரே வந்தது.

தரணியையும், சஞ்சனாவையும் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மற்ற இருவரும் கிளம்ப, “ஒரு நிமிஷம்என்ற சஞ்சனா, அசோக்கை தனியாக அழைத்து சென்றாள். “அக்காக்கு வேற ஏதாவது பிரச்சனையா? ஏன் உங்களை பார்க்க வந்தா?எனக் கேட்டாள் சஞ்சனா.

இப்போதுதான் இங்கிருந்து சந்திரிகா சென்றாள்.’ என கூறியதை தனது அலுவலகத்திற்கு வந்ததாக தவறாக புரிந்து கொண்டாள் சஞ்சனா என புரிந்து கொண்டான் அசோக். “ஹேய். ஹேய் வெயிட் மா. நான் கலெக்டர் சத்யாவை பார்க்க போயிருந்தேன். அங்கதான் சந்திரிகாவை பார்த்தேன்.

அவங்க ஏதோ வேலை விசயமா அவரை பார்க்க போயிருப்பாங்கன்னு நினைக்கறேன்.” என வீணாக எதையாவது சொல்லி சஞ்சனாவை கலவரப்படுத்த வேண்டாம் என பொய் சொன்னான் அசோக். ஒருவேளை உண்மையை கூறி இருந்தால் இன்னும் சில குழப்பங்களுக்கு சீக்கிரமாக விடை கிடைத்திருக்குமோ என்னவோ!

சத்யாவை பார்க்க வேண்டும் போல இருந்திருக்கும் அக்காவிற்கு. அதான் வேலையை காரணமா வைச்சு போய் இருப்பாள்.’ என தன்னையே சமாதானம் செய்து கொண்டவள், “சத்யாவோட வொய்ப் எங்க இருக்காங்க?” என கேட்டாள் சஞ்சனா அசோக்கிடம். “அட நீங்க வேறங்க. அவன்தான் அப்படி புரளியை கிளப்பி வைச்சிருக்கான். அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆகல.” என்ற அசோக் அங்கிருந்து கிளம்பினான்.

அசோக் அப்படி கூறியதை விளங்கி கொள்ளவே சில நிமிடங்கள் ஆனது சஞ்சனாவிற்கு. அதற்குள் சந்திரிகா கண் விழித்து விட அவளை பார்க்க தரணியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். உள்ளே சந்திரிகா அமர்ந்த வண்ணம் இருக்க, “என்னக்கா. இப்படி பண்ணீட்ட. நாங்க பயந்தே போயிட்டோம்.” என்றாள் சஞ்சனா.

அதற்குள் தரணி கையில் கொண்டு வந்திருந்த பழச்சாறை சஞ்சனாவிடம் கொடுத்தான். அவள் வாங்கி சந்திரிகாவிற்கு புகட்ட போக அவளோ வேண்டாம் என தடுத்தாள். “அம்மா. தாயே இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும். ஒரு நாள் பூரா விரதம் இருந்தது போதும். ஒழுங்கா குடி.” என மிரட்டினான் தரணி.. கெஞ்சினான் எனவும் கூறலாம்.

அதன்பிறகு சந்திரிகாவிற்கு மறுக்க வழியில்லாமல் பழச்சாறை அருந்தினாள். “என்னனு தெரியலடி. கார் ஓட்டிட்டே இருந்தேன். திடீர்னு தலை சுத்தறது மாதிரி இருந்தது. ஓரமா பார்க் பண்ணிடலாம்னு நினைச்சு நிறுத்த டிரை பண்ணேன். ஆனா நிறுத்துன உடனே மயக்கம் வந்திடுச்சு. சாரி. ஆனா நீங்க எப்படி அங்க வந்தீங்க?” எனக் கேட்டாள் சந்திரிகா.

நீ வேறக்கா நாங்க மட்டுமா வந்தோம், அஸ்வின், அசோக் எல்லாரும் உன்னை தேடுனோம்.” என ஆரம்பித்தவள் நடந்ததை கூறினாள் சஞ்சனா. ‘அஸ்வின் எதற்காக தன்னை தேட வேண்டும்என நினைத்தவள்,சீக்கிரமாக அவன் விசயத்தில் ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும்என முடிவு செய்து கொண்டாள் சந்திரிகா.

சற்று நேரத்தில் சந்திரிகாவை டிஸ்சார்ஜ் செய்தே அழைத்துக் கொண்டு ஊரை சுற்ற ஆரம்பித்தனர் மூவரும். பதினோரு மணி வாக்கிலே தான் மூவரும் வீட்டிற்கு வந்தனர். வீட்டில் உள்ள அனைவரும் உறங்க சென்றிருந்தனர். அந்த நேரத்திலும் மல்லிகா உறங்காமல் அவர்களுக்காக காத்திருந்தார். அவரை பார்த்ததும் நேராக டைனிங் ஹாலுக்கு சென்று அமர்ந்தாள் சந்திரிகா.

மற்றவர்களும் வந்து அமர மல்லிகா எதுவும் பேசாமல் பரிமாற ஆரம்பித்தார். உணவு பதார்த்தங்கள் சூடாக இருந்ததிலே அப்போதுதான் செய்திருக்கிறார் என தெரிந்தது. எந்த சூழ்நிலையிலும் தன் மீது கொண்ட அன்பு மாறாமல் இருக்கும் தன் அன்னையை பார்த்தவளுக்கு கண்களில் நீர் சுரந்தது.

உணவருந்திய பிறகு அனைவரும் அவரவர் அறைக்கு உறங்க சென்றனர். ஆனால் சஞ்சனா தனது தமக்கையோடே அவளது அறைக்கு வந்தவள், “அக்கா, உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்லவா?” எனக் கேட்டாள். சந்திரிகா, “ம்ம்என்க, “சத்யா மாமாக்கு இன்னும் கல்யாணமே ஆகலயாம்.” எனவும், “ம்ச்ச். அதான் தெரியுமே.” என்றதில் சஞ்சனா அதிர்ந்தாள்.

தெரியுமா? எப்ப தெரியும். நீ அப்பறம் ஏன் சொல்லல.” என சஞ்சனா பொரிய,ஹேய். இரு இரு. எனக்கே இன்னைக்கு தான் தெரியும்.” என்ற சந்திரிகா காலையில் சத்யாவை பார்க்க சென்ற போது அறிந்து கொண்டதாக கூறினாள். “சூப்பர்க்கா.” என சஞ்சனா மகிழ்ச்சியடைய, “ஆனா அவருக்கு நியாபகம் வர வரைக்கும் எதுவும் மாறப் போறதில்லை.” என்றாள் சந்திரிகா சலிப்பாக.

நீ ஏன்க்கா அப்படி நினைக்கற. இவ்ளோ நாள் கழிச்சு நீங்க பாத்துக்கறீங்க. ஆனாலும் இன்னும் அவர் கல்யாணம் பண்ணீக்காம இருக்காருன்னா. ஏதோ ஒன்னு நிச்சயம் இருக்கு. இவ்வளவு நாள் நியாபகம் வரலனாலும் இனிமே வர வாய்ப்பு இருக்குல்ல. எனக்கென்னவோ உனக்கு இன்னொரு சான்ஸ் இருக்குன்னு தான் தோணுது.

ஏற்கனவே காதலிச்சது மறந்தா என்ன நீ புதுசா காதலி. இவ்வளவு நாள் அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தானே நீ தயக்கம் காட்டின. இப்போ அதுவே இல்லன்னா நீ தாராளமா காதலிக்கலாம். மறுபடி கிடைக்கற இந்த சான்ஸ் மிஸ் பண்ணீடாதக்கா.” என கூறிய சஞ்சனா, தனது அறைக்கு சென்று விட அடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்தவாறே உறங்கி போனாள் சந்திரிகா.

ஒரு வாரம் கடந்த நிலையில் அன்று விடியற்காலையில் தரணி தனது அறையில் உறங்கி கொண்டிருக்க மெலிதாக தடங்களை பதித்து அவனது அறைக்கு வந்த பெண் ஒருத்தி அவன் எழும் போது தெரியும் வண்ணம் அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்திலே அவன் கண் விழிக்க அவன் கண்ணில் கண்டது பேய் உருவம் கொண்ட மாஸ்க் அணிந்த ஒரு உருவத்தை தான்.

பயந்து போய் அவன் எழுந்து அலற சிரித்தபடி மாஸ்க்கை கழற்றியது, அவனது அன்பு இல்லையில்லை வம்பு தங்கை சைந்தவியே தான். “ஹேய் சைத்தானே, காலங்காத்தால இப்படியா பயமுறுத்துவ. உன்ன சைத்தானு சொல்றதுல தப்பே இல்ல.” என கத்தினான் தரணி.

சரி சரி கோவிச்சுக்காத. என் செல்ல அண்ணன்ல. சாரிடா. எப்படி இருக்க?” என நலம் விசாரித்தாள். “நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க? என்ன இது சர்ப்ரைஸ். எப்ப வந்த நீ? நேத்து பேசும் போது கூட ஒன்னுமே சொல்லல.” என விசாரித்தான் தரணி.

நானும் சஞ்சனாவும் சேர்ந்து உனக்கு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான் சந்துக்காகிட்ட சொல்லி டிக்கெட் அரென்ஜ் பண்ணோம். காலைல கூட அக்காதான் வந்து பிக்கப் பண்ணாங்க.” என கூறினாள் சைந்தவி. அதன்பிறகு அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு தரணி கிளம்பி சந்திரிகாவுடன் அலுவலகம் சென்றான்.

அலுவலகத்தில் சந்திரிகா அந்த வாரம் முழுதும் இருந்த விடுபட்ட வேலைகளை முடிப்பதில் ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தாள். அதன்பிறகு அஸ்வின் எவ்வளவு முயன்றும் சந்திரிகாவை பார்க்க முடியவில்லை. அன்றுதான் அவனுக்கு அப்பாயிண்மெண்ட் குடுத்திருந்தாள். அவர்களது வேலை பற்றிய மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்து விட்டு.

அஸ்வினும் நேரமாக கிளம்பி தீபக்குடன் இவளது அலுவலகம் வந்து சேர, மீட்டிங் தொடங்கியது. அந்த அறையில் சந்திரிகா, தரணி, அஸ்வின், தீபக், அபிநய் மற்றும் தான்யா ஆகியோரே இருந்தனர். “சொல்லுங்க அஸ்வின் சார். உங்க சைட் வொர்க் ஸ்டார்ட் பண்ணீட்டிங்களா?” எனக் கேட்டாள் சந்திரிகாசார்ல் அழுத்தம் கொடுத்து.

அவள் அலுவலகம் சார்பாக பேசுவதால் இவனும் வேறு வழியின்றி, “எஸ் மேம். கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் ஸ்டார்ட் பண்ணியிருக்கோம். ஃபுல்லா பினிஷ் பண்ணிட்டு டிசைனிங் பண்ணலாமா என்னனு நீங்க தான் ஒரு ஐடியா குடுக்கனும். சோ. இப்ப இருந்தே உங்க அஸிட்டென்ஸ் இருந்தா நல்லா இருக்கும்.” என்றான் அஸ்வின்.

எஸ் சார். நீங்க சொல்றது தான் சரி. கடைசி நேரத்துல எந்த சேன்ஜ்யும் பண்ண முடியாது. உங்களுக்கு மட்டும் இல்ல. எங்க கம்பெனிக்கும் இது ஒரு முக்கியமான புராஜக்ட். சோ, எங்களோட சப்போர்ட் இப்ப இருந்தே உங்களுக்கு கிடைக்கும். நாளைல இருந்து டெய்லியும் ஒரு ஹாஃப் டே நாங்க உங்க கம்பெனிக்கு வருவோம். உங்களுக்கு ஓகே தானே.” எனக் கேட்டாள் சந்திரிகா.

அஸ்வின் மனதுக்குள். ‘நீ அப்படி வரணும்னு தானே இந்த புராஜக்டை இவ்வளவு சீக்கிரமா ஆரம்பிச்சேன். இந்த டைம்ல கண்டிப்பா என்னோட காதலை நான் புரிய வைப்பேன் சந்து.’ என பேசிக் கொண்டிருக்க அவளோ அவனது ஆசையில் மண்ணை போட்டாள்.

அஸ்வினிடம் பேசி விட்டு தரணியிடம் திரும்பியவள்,உங்களுக்கு ஓகே தானே தரணி. உங்களுக்கு எந்த ஹாஃப் ஓகேவோ, அதை அஸ்வின் சார்கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கோங்க.” என்றாள். அவளது பேச்சை கேட்ட அதிர்ந்த அஸ்வின், “சந்திரிகா நீங்கதான் எங்களுக்கு அஸிஸ் பண்றதா சொல்லியிருக்கிங்க. இப்ப தரணியை அனுப்பறேனு சொல்றீங்க.” என்றான் பட்டென.

அனைவரும் அஸ்வினை பார்க்க சுதாரித்த தீபக்,இல்ல மேம். உங்களோட ஐடியா, வொர்க்கிங் ஸ்டைல் பிடிச்சுதான் இந்த புராஜக்ட் நீங்க பண்ணி குடுத்தா நல்லா இருக்கும்னு நினைச்சோம். அததான் அவர் சொல்றாரு.” என்றான்.

கரெக்ட் சார். பட் எங்களோட இந்த சக்ஸஸ்க்கு நான் மட்டும் காரணம் இல்ல. அப்பறம் எல்லா வேலைக்கும் நான் வந்து நிற்கனும்னு எந்த அவசியமும் இல்ல. அப்படி அவசியம் இருந்தா கண்டிப்பா நான் சப்போர்ட் பண்ணுவேன். அப்பறம் நீங்க புராஜக்ட் சைன் பண்ணி இருக்கறது. தூரிகை ஆர்க்கோட தானே தவிர. சந்திரிகாவோட இல்ல.

உங்களோட வொர்க்கை நீங்க நினைச்சதை விட சிறப்பாகவே எங்க கம்பெனி செஞ்சு குடுக்கும். அப்படி உங்களுக்கு சரியா இல்லன்னா நேரடியா என்கிட்டயே நீங்க சொல்லலாம்என முடித்தாள் சந்திரிகா. அதன்பின்பு வேறு எவருக்கும் அதை மறுத்து பேசும் தைரியம் இருக்குமா என்ன. அத்தோடு மீட்டிங் முடிய அஸ்வின் மட்டும் சந்திரிகாவோடு பேச வேண்டும் என்றான்.

மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற,என்ன சந்திரிகா உன் பிளான். என் கூட சேர்ந்து வொர்க் பண்ணா உன் மனசு மாறிடும்னு தானே. இதெல்லாம் பண்ற.” என்றான் அஸ்வின். “ஸ்டாப் இட் அஸ்வின். உங்க கற்பனையை நிப்பாட்டுங்க. அப்ப உங்க கூட சேர்ந்து வொர்க் பண்ணா மனசு மாறிடும்னு தான், இந்த புராஜக்ட் சைன் பண்ணீங்களான்னு நானும் கேட்கலாம்.

தயவு பண்ணி ப்ரபொஷனல் லைஃப்யையும், பர்சனல் லைஃபையும் கன்பியூஸ் பண்ணீக்காதீங்க. இப்பதான் பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணியிருக்கீங்க. கைன்ட் அட்வைஸா எடுத்துக்கோங்க.” என கோபமாக ஆரம்பித்து சாந்தமாகவே முடித்தாள் சந்திரிகா.

சரி ஓகே. அதை விடு பர்சனலாவே கேட்கறேன். என்னை ஏன் நீ அவாய்ட் பண்ற?” எனக் கேட்டான் அஸ்வின். “உங்கள அவாய்ட் பண்ற அளவு எனக்கு காரணம் எதுவும் இல்லை. அதே சமயம் உங்களோட பழகவும் அப்படித்தான். நான்தான் உங்ககிட்ட தெளிவா எக்ஸ்பிளைன் பண்ணீட்டேன் என் சுட்சுவேஷன.

மறுபடி மறுபடி என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க. என் மேல உங்களுக்கு ஒரு அட்ராக்ஷன் இருந்தது. இப்ப அது சாப்ட் கார்னரா மாறி இருக்கு. இதை லவ்னு எடுத்துக்கிட்டு நீங்களே உங்கள கன்பியூஸ் பண்ணிக்காதீங்க. அப்பறம் நான் இப்படி தனியா இருக்கறதால தான் என்ன விட முடியலன்னு நினைச்சீங்கன்னா கூடிய சீக்கரம் உங்களுக்கு நான் குட் நியூஸ் சொல்லுவேன்.” என்றாள் அவன் மனம் அறிந்து.

அப்படீன்னா அவரை பார்த்துட்டீங்களா? யார் அது?” எனக் கேட்டான் அஸ்வின். நானே என்னோட பியான்ஸியை உங்களுக்கு அறிமுகம் செய்வேன்.” என்றாள் தெளிவாக. “சரி ஓகே சந்திரிகா. உங்களை இவ்ளோ நாள் டிஸ்டர்ப் பண்ணியிருந்தா சாரி. நானும் என் மனசை மாத்திக்க டிரை பண்றேன். நீங்க என்ன பேர் வைச்சாலும் நான் உங்கள விரும்புனது உண்மை.

இட்ஸ் ஓகே. உங்க பியூச்சர் நல்லா இருந்தா அதுவும் எனக்கு சந்தோஷம் தான். ஆல் பெஸ்ட்என குரலில் ஒரு வித வலியோடு கூறியவன் அவளிடம் விடைபெற்று கிளம்பினான். சொன்னபடி அஸ்வின் மனம் மாறுவானா? சந்திரிகா அடுத்து செய்ய போவது என்ன?

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்